Wednesday, February 27, 2013

மகிழ்ச்சியில் ஜெயலலிதா அதிர்ச்சியில் கருணாநிதி



காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசு இதழில் வெளிவந்தது.  நடை பயணம் செய்த வைகோவை இடையில் சந்தித்தது புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக இயங்குவதற்கு பசுமைத் தீர்பாயமையம் அனுமதி வழங்கியது. ஆகியவற்றினால் ஜெயலலிதா மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுள்ளார். ஜெயலலிதாவுக்குச் சாதகமான இந்த மூன்று சம்பவங்களினால் கருணாநிதி அதிர்ச்சியடைந்துள்ளார்..

தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கிடையில் தீர்க்க முடியாத பிரச்சினையான காவிரி நதி  நீர்ப் பிரச்சினையைச்  சுமுகமாகத் தீர்ப்பதற்கு மத்திய அரசின் ஆதரவுடன் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மத்தியில் ஆட்சி செய்த அரசுகளும், தமிழக, கர்நாடக அரசுகளும் இப்பிரச்சினையை ப் பலமுறை கூடிப் பேசின. தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரை  கர்நாடக அரசு கொடுக்க மறுத்தது.  நீதிமன்றத் தீர்ப்பு , காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு ஆகியவற்றை கர்நாடக அரசு உதாசீனம் செய்தது. கர்நாடக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் காவிரி நதி நீர்ப் பிரச்சினயைத் தமக்குச் சாதக‌மாகப் பாவித்தன.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் காவிரி நதி நீர்ப்பிரச்சினயைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தின. காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் மத்தியில் ஆட்சியமைத்தபோது கூட தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கொடுப்பதற்கு  தமது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டால் கர்நாடக அரசு அதனை மீற முடியாது என்பதனால் ஜெயலலிதா அதில் அதிக அக்கறை காட்டினார்.  இந்திய மத்திய அரசு கர்நாடக அரசுக்கு பல வழிகளிலும் எடுத்துக் கூறியது. கர்நாடக அரசு மசிவதாக இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி தமிழக அரசுக்கு நீரைக் கொடுத்தால் தேர்தல் சமயத்தில் எதிரிக் கட்சிகள் அதனைப் பிரபல்யப்படுத்தும் என்றதால் கர்நாடகத்தை ஆட்சி செய்த அரசுகள் தமிழகத்தை வஞ்சிப்பதில் போட்டி போட்டன.

காவிரி நதி நீரை நம்பி விவசாயம் செய்த தமிழக விவசாயிகள் தற்கொலை செய்தனர். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழி இன்றி கஸ்டப்படுகின்றனர். முல்லைபெரியாறு அணையைத் திறந்து தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கொடுக்காது தமது அடுத்த ஆட்சி பற்றியே யோசித்தன. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பில்லை, அதற்கும் பதிலாகப் புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்து முல்லைப்பெரியாறு அணை உறுதியானது  என்பதை  நிரூபித்தது.  இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசு இதழில் பிரசுரமானதால் ஜெயலலிதா மகிழ்ச்சியடைந்துள்ளார். தனது அரசுக்கு கிடைத்த  சாதனை என்று கருதுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இந்த விவகாரம் தனக்கு எதிராகத் திரும்பி விடுமே என்ற அச்சத்தில் அதிர்த்து போயுள்ளார் கருணாநிதி.

தமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது வைகோவை, ஜெயலலிதா அலட்சியப்படுத்தியதனால்தமிழக சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. கடைசி நேரம்வரை காத்திருக்க வைத்து கழுத்தறுத்த ஜெயலலிதாவின் மீது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த  நிலையில் கடந்த வாரம் வைகோவை நடு வீதியில் சந்தித்து நலம் விசாரித்தார் ஜெயலலிதா.

தமிழகத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மது ஒழிப்பு விழிப்புணர்வை பொது மக்களிடம்  ஏற்படுத்துவதற்காக வைகோ நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிறுதாவூர் செல்லும்சாலையில் வைகோவின் பாத யாத்திரையைக் கண்ட ஜெயலலிதா காரிலிருந்து இறங்கி வைகோவை நலம் விசாரித்தார். சுமார் ஏழு நிமிடம் நடைபெற்ற இச்சந்திப்பு கண், கை, கால், மூக்கு வைத்து வைகோ ஜெயலலிதா கூட்டணி என்று பரபரப்பான செய்தியானது.

ஜெயலலிதா என்னைச் சந்தித்தது எதேச்சையானது. இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று வைகோ அறிக்கைவிட வேண்டி நிலை ஏற்பட்டது இச் சம்பவம் வைகோவுக்கு எதேச்சையானதாக இருக்கலாம்.  ஆனால்ஜெயலலிதா பயணம் செய்யும் பாதையில் பலத்த பாதுகாப்பு இருக்கும் மக்கள் நடமாட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். எதிரும் புதிருமான  அரசியல் தலைவர்கள் வீதியில் சந்திக்கும் வகையிலானபயணப் பாதையை ஜெயலலிதாவின் போக்குவரத்துக்குப் பொறுப்பானவர்கள் மேற்கொண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் அனுமதி இல்லாமல்  இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க முடியாது.

தமிழகம் ,துவை உட்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று உணர்ச்சிவசப்பட்டு ஜெயலலிதா அறிவித்துவிட்டார். தனித்துப் போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தவர்கள் வைகோ, ஜெயலலிதா சந்திப்பைச்  சாதகமாக நோக்குகின்றனர்.

ஜெயலலிதாவின்  நடவடிக்கையில் தற்போது  பலமாற்றங்கள் தெரிகின்றன.  விஸ்வரூபம் படப் பிரச்சினையின்போது தமிழகமும் மத்திய அரசும்தனக்கு எதிரõக  கிளர்ந்தொழுந்ததைக் கண்டதும் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டிதனது  நிலைப்பாட்டை  விளக்கினார். வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த வைகோவை  வலியச் சென்று நலம் விசõரித்தார். தான் விரும்பாத அரசியல் தலைவர்களைச் சந்திப்பதை  ஜெயலலிதா தவிர்த்தே வந்துள்ளõர். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த போது சோனியாவுடன் மேடை ஏறவில்லை.  விஜயகாந்துடன்  கூட்டணி அமைத்த போதும்  இருவரும் ஒரே மேடையில் ஏறவில்லை. வைகோவை நடுவீதியில் ஜெயலலிதா கண்டு கதைத்ததை அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.

கருணாநிதியும் காங்கிரஸும் விஜயகாந்தை நெருங்குவதனால் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவின் மனதில் தோன்றியதனாலேதான் வைகோவை அவர் சந்தித்தார். எனக் கருதவும் இடமுண்டு.

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் நீண்ட நாள் கனவு. அதற்காக அவர்  தேர்ந்தெடுத்த இடங்களுக்கு பலத்த எதிர்ப்புக்கள் தோன்றின. சென்னை ராணி மேரி கல்லூரியிலும் புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ஜெயலலிதா கனவுளகில் சஞ்சரிக்க கருணாநிதி புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டி முடித்து விட்டார். 

கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சபதம் செய்த ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற முயற்சி செய்தார். அதற்கும் பல தடைகள் வந்தன. நீதிமன்றம், பசுமைத்தீர்ப்பாயமையம் என்பன கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இறுதியில்  நீதிமன்றமும் பசுமைத் தீர்ப்பாயமையமும் அனுமதி வழங்கியதால் ஜெயலலிதா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
மெட்ரோநியூஸ்  01/04/13

Friday, February 22, 2013

குஷ்புவைச் சீண்டியசஞ்சிகைகள் கொந்தளித்த தி.மு.க. தொண்டர்கள்



சர்ச்சைகள் என்பது குஷ்புக்கு சர்க்கரைப் பொங்கல் போன்றது சர்ச்சைகள் எதிலும் சிக்காது சிவனே  என்றிருந்த குஷ்புவை  தமிழகத்தின் இரண்டு பிரதான  சஞ்சிகைகள் சீண்டியதனா ல் தொண்டர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

தலைவர் மட்டுமே முடிவு செய்தால் அடுத்த தலைவர் தளபதியாக இருக்கவேண்டும் என அவசியமில்லை என்று ஆனந்த விகடனுக்கு குஷ்பு வழங்கிய பேட்டியால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் குஷ்புவின் மீது பாய்ந்தனர். கொந்தளித்த தொண்டர்களை எப்படித்  தணிய வைப்பது எனத் தெரியாது தடுமாறிய கருணாநிதிக்கு ஆபத்பாண்டவன் போல் உதவி செய்தது குமுதம் ரிப்போட்டர்.

கருணாநிதியை பெரியாராகவும்  குஷ்புவை மணியம்மையாகவும் சித்தரித்து "கொந்தளிக்கும்  குடும்ப உறவுகள் இன்னொரு மணியம்மை "என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. ஆனந்த விகடனின் பேட்டியில் குஷ்பு மீது தாக்குதல் நடத்திய தொண்டர்களின்  பார்வை குமுதம் அலுவலகம் மீது திரும்பியது.

ஆனந்த விகடனுக்கு குஷ்பு வழங்கிய பேட்டியின் பின்னணியில் பலமிக்க திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர் ஒருவர் இருக்கிறார் போல்  தெரிகிறது. அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சைக்கு கருணாநிதி முடிவு கட்டி ஸ்டாலின் தான் தலைவர் என்ற கூறிய பின்னர் தலைவர் சொல்லிவிட்டால் தளபதி தலைவராக முடியுமா என்று குஷ்பு கேட்பதற்குரிய பலத்தைக் கொடுத்தது யார்?

குஷ்புவின் பேட்டி வெளியானதும் வாகை சந்திரசேகரன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திருச்சியில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொள்ள சென்ற குஷ்புவை த்தாக்க தொண்டர்கள் முயற்சி செய்தனர். திருமண வைபவத்தில் கலந்து கொண்டு இடையில் சென்னை திரும்பினார். குஷ்பு. குஷ்பு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுகார்க் கண்ணாடி உடைக்கப்பட்டது.

அழகிரியின் மகன் துரை தயாநிதி  குஷ்புவுக்கு ஆதரவாக கருத்துக் கூறியபோது ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மேலும் கொந்தளித்தனர்.

குஷ்புவைத் தாக்கியவர்கள் அடையாளம் காணப்படவேண்டும்  இப்பிரச்சினை பற்றி  யாரும் தனிப்பட்ட அறிக்கை வெளியிடக் கூடாது என்று கருணாநிதி  அதிரடி உத்தவு பிறப்பித்து  குஷ்புவைக் காப்பாற்றமுயற்சிசெய்தார்.
திராவிட  முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது.  சிறு பதவியானாலும்  உட்கட்சித் தேர்தல் மூலமே தெரிவு நடைபெறும் என்ற குஷ்புவின்  கருத்தைத் திராவிட  முன்னேறறக் கழக ஜனநாயகவாதிகள் கருத்தில் எடுக்கவில்லை. ஸ்டாலினை எதிர்த்து யாரும் எதுவும் பேசக்கூடாது என்பதே அவர்களது குறிக்கோள். தொண்டர்களிடமிருந்து குஷ்புவைக் காப்பாற்றுவதற்கு கருணாநிதி வழிதேடிக் கொண்டிருக்கையில் குமுதம் ரிப்போர்ட்டர் கை கொடுத்தது.

கருணாநிதியையும் குஷ்புவையும் கேவலப்படுத்துவதற்காக  இன்னொரு மணியம்மை என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்ட குமுதம் ரிப்போட்டர் பெரியாரையும் மணியம்மையும் அவமானப்படுத்தியுள்ளது.

கணவன், மனைவியான பெரியாரையும் மணியம்மையும் பற்றிய தவறான கண்ணோட்டத்தை விதைத்துள்ளது குமுதம் ரிப்போர்ட்டர். குமுதம் ரிப்போட்டருக்குப் பதிலளிக்கும் வகையில்  கருணாநிதி  வெளியிட்ட அறிக்கையில் கழகத்திலிருந்து குஷ்புவை  வெளியேற்றச் சதி நடைபெறுகிறது எனக் குறிப்பிட்டார்.

திராவிட  முன்னேற்றக் கழகத்தில் பிரசாரப் பீரங்கிகளாக ஆண்கள் பலர் உள்ளனர். பெயர்கூறும்படியான பெண் பேச்சாளர்கள் இல்லை. அந்த இடத்தை குஷ்பு நிரப்புகிறார் என கருணாநிதி கருதுகிறார். குஷ்புவின்  மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதும் அவை எல்லாம் புஸ்வாணமாகின. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான பெண் பேச்சாளராக கனிமொழி இருந்தபோதும் அவரின் பேச்சு  சகல தரப்பினரையும் கவருவதில்லை. குஷ்புவின் பேச்சு மேல் தட்டு மக்களையும் கீழ்த் தட்டு மக்களையும்  கவர்கிறது. இதனால் குஷ்புவின் மீது கருணாநிதி  தனிக் கவனம் செலுத்துகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் திராவிட கழகத் தொண்டர்களும் குமுதம் அலுவலகத்தின் முன்னால் இரண்டு நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் ஊழல் செய்தால் தவறு செய்தால்      அவற்றைப் பகிரங்கப்படுத்துவதில்  எந்தத் தவறும் இல்லை. குடும்பத்தையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகள், புகைப்படங்கள், கட்டுரைகள் வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் சினிமாவில் மிக உயரத்தில் குஷ்பு இருந்தவேளையில்  அவர் மீது அளவு கடந்த அன்புள்ள  ரசிகர்கள் கோயில் கட்டினார்கள். அப்போது இச் சம்பவம் பலத்த சர்ச்சையை  ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த வேளையில்  ஜெயா ரி.வி.யில் குஷ்பு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தமிழகத்தின் பெண்களின் மனதில் பதிந்தது. அப்போது  கற்பு பற்றி குஷ்பு பேசியது பலத்த  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை அகற்ற ஜெயா ரி.வி. யில் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டார்.

சினிமா ,தொலைக்காட்சி என்பனவற்றிலிருந்து விலகி குஷ்பு அரசியலில் சேரப் போகிறார் என்ற செய்தி பரவியது. ராகுல் காந்தியைச் சந்தித்தது தனது அரசியல் பிரவேசத்தை குஷ்பு அறிவிப்பார் என்ற கிசு கிசு வேகமாகப் பரவியது. குஷ்புவை வரவேற்க காங்கிரஸ் கட்சி தயாராகியது.  வழி தவறிச் சென்றுகொண்டிருக்கும் தமிழக காங்கிரஸை குஷ்பு என்ற துருவ நட்சத்தித்தின் மூலம்  கரை சேர்க்கலாம் என்று  காங்கிரஸ் கட்சி நம்பி இருந்தது.
காங்கிரஸ் கட்சியில் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கிய  குஷ்பு  யாரும்  எதிர்பார்க்காத  நிலையில் திராவிடமுன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
கற்பு பற்றி குஷ்பு வெளியிட்ட கருத்தினால் அவருக்கு  எதிராக தமிழகமெங்கும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. திரைப்பட  வைபவம் ஒன்றில் சுவாமி படத்துக்கு  அருகே கால் மேல்  கால் போட்டு அமர்ந்திருந்தனால் குஷ்புவுக்கு எதிராக சிலர் கருத்து வெளியிட்டனர்.

 அனுமன் படம் பொறித்த சேலை அணிந்ததனால் அதை எதிர்த்து சிலர் கருத்து வெளியிட்டனர்.
சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக வைபவத்தில் கலந்து கொண்ட குஷ்புவின்  இடுப்பை சிலர்   கிள்ளியதால் சலசலப்பு ஏற்பட்டது.
 திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் குஷ்புவைத் தாக்கியபோதும்  கருணாநிதி  குஷ்புக்கு ஆதரவாக இருப்பதனால் குஷ்பு நிம்மதியடைந்துள்ளார்.
மெட்ரோநியூஸ் 22/02/13   

Wednesday, February 20, 2013

தடம் மாறியதமிழ்ப்படங்கள் 49



விவகரத்துச்செய்த தனது மனைவி முன்னாள் காதலனைத்திருமணம் செய்வதைத்தடுக்கும் கொடுமைக்காரக்கணவனின் கதைதான் 1977ஆம் ஆண்டு வெளியான அவர்கள் படத்தின் கதை. ரசிகர்களின் பாராட்டையும் பெண் ரசிகைகளின் அனுதாபத்தையும் பெற்று வெற்றிக்கொடி நாட்டியது.

  டில்லியில் பெரிய நிறுவனத்தில் பெரிய அதிகாரியாகப்பணீபுரிகிறார் ரஜினிகாந்த். அவரின் மனைவி சுஜாதா. சுஜாதாவைப்பாராட்டுவதுபோன்று சிலேடையாக அவரது கடந்தகால் வாழ்க்கையைச்சுட்டிக்காட்டுவார்ரஜினிசுஜாதாஇன்னொருவனைக்காதலிப்பதைத்தெரிந்துகொண்டே அவரை ரஜினி திருமணம் செய்தார்.
     நோயாளியான சுஜாதாவின் தகப்பன் தனது மகளின் எதிர்காலம் பற்றித்துன்பப்படுகிறார். சுஜாதாவைத்தான் திருமணம்செய்வதாக உறுதியளிக்கிறார் ரஜினி.தனது முடிவைக்கூற பதினைந்து நாள் அவகாசம் கேட்கிறார் சுஜாதா. சென்னையில் உள்ள தனது காதலனுக்குக் கடிதம் அனுப்புகிறார் சுஜாதா. வழமை போன்று பதில் வராததனால் ரஜினியைத்திருமணம் செய்வதற்குச்சம்மதம் தெரிவிக்கிறார் சுஜாதா.

 ரஜினியை சுஜாதா திருமணம் செய்தபின்னர் சுஜாதாவின் தகப்பன் இறந்துவிடுகிறார். சுஜாதாவின் கடந்தகால காதலைச்சுட்டிக்காட்டி சித்திரவதை செய்கிறார் ரஜினி.கைக்குழந்தையுடன் அல்லல்படும் சுஜாதா சிரித்தபடியே எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்.கொடுமையின் உச்சக்கட்டமாக விவாகரத்துச்செய்யப்போவதாக ரஜினி கூறியபோதும் சிரித்தபடியே ஒப்புதலளிக்கிறார் சுஜாதா.

   ரஜினியிடமிருந்து விவாகரத்துப்பெற்ற சுஜாதா கைக்குழந்தையுடன் சென்னைக்கு மாற்றம் பெற்றுச்செல்கிறார்.முதல்நாள் கைக்குழந்தையுடன் அலுவலகத்துக்குச்செல்லும் சுஜாதாவுக்கு அங்கு பணிபுரியும் கமல் உதவி செய்கிறார்.தான்தங்கி  இருக்கும் வீட்டில் சுஜாதாவைக்குடியேற்றுகிறார் கமல்.

    ரஜினியின் திருவிளையாடலைப்பற்றித்தெரியாத தாய் அவருக்கு மணப்பெண் தேடுகிறார்.ரஜினியைத்திருமணம் செய்யப்போகும் பெண் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு ஹிந்தி தெரியும் என்பதை அறிந்து டில்லியிலிருந்து வந்த ஹிந்தியில் எழுதப்பட்ட கடிதத்தைக்கொடுத்தார்.ஹிந்தியில் எழுதப்பட்ட அக்கடிதத்தின் மூலம் ரஜினிக்குத்திருமனம் நடந்தது,விவாகரத்துப்பெற்றது,கைக்குழந்தையுடன் ரஜினியின் மனைவி வீட்டைவிட்டு வெளியேறியது வேலைக்காரன் விபரமாக எழுதியிருந்தான்.மனின் சுயரூபம் தெரிந்ததாய் அதிர்ச்சியடைகிறார்.
    கமலின் வீட்டில் குடியேறிய சுஜாதா காலையில் சுப்ரபாதம்  பாடலை ஒலிக்கவிட்டு சாம்பிராணிப்புகை காட்டுகிறார். எதிர் வீட்டிலிருக்கும் ரவிக்குமார் எட்டிப்பார்க்கிறார். சுஜாதாவின் வீட்டுச்சுவரிலே தூங்கும் மோனாலிசாவின்படம் தான் காதலிக்குக்கொடுத்த மோனாலிசாவை நினைவூட்டையது. எதிர் வீட்டுக்குச்சென்ற ரவிக்குமார் தன்து பழைய காதலி சுஜாதாவைக்கண்டு அதிர்ச்சியடைகிறார்.இருவரும் மனம் விட்டுப்பேசுகின்றனர். தான் அனுப்பிய கடிதங்களுக்கு ஏன் பதில் அனுப்பவில்லை எனக்கேட்கிறார் சுஜாதா.மன நோயளியான தனதுசகோதரி   அக்கடிதங்களை ஒளித்துவைத்ததையும் சகோதரி இறந்தபின்பேஅக்கடிதங்களைத்தான் கண்டதாகவும் கூறுகிறார் ரவிக்குமார்.
  நிம்மதி இன்றி சலனப்படும் சுஜாதாவுக்கு  அலுவலகத்தில் பணி புரியும் நண்பி சாமியார் ஒருவரை அறிமுகப்படுத்துகிறார் .சாமியாரிடம் சென்ற சுஜாதா தனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத் தையும் கூறுகிறார்.நிம்மதி தேடி சாமியாரிடம் சென்ற ரஜினியின் தாய் அதனைக்கேட்டு சுஜாதாதான் தனது மருமகள் என்பதை அறிகிறார்.

  சுஜாதா அலுவலகம் செல்லத்தயாராகும்போது அங்கு சென்ற ரஜினியின் தாய் வீட்டு வேலைகளைச்செய்கிறார்.எதிர் வீட்டிலிருந்து எட்டிப்பார்த்த ரவிக்குமாரை முறைக்கிறார். தனியாகக் குழந்தையுடன் கஷ்ரப்பட வேண்டாம் வீட்டு வேலைக்குத்தன்னை வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். வேலைக்காரியாக வந்திருப்பது  தனது மாமி எனத்தெரியாத சுஜாதா அவரை வேலைக்குச்சேர்க்கிறார்.சுஜாதாவின் மனதை நோட்டமிட்ட ரஜினியின் தாய், பழைய காதலன் ரவிக்குமாரைத்திருமணம் செய்யும்படி சுஜதாவுக்கு அறிவுரை கூறுகிறார்.  விவாகரத்தின் பின்னரும் ரஜினி கட்டிய தலி கழுத்தில் இருப்பதனால் இரண்டாவது திருமணம் செய்யமுடியாதென சுஜாதா மறுப்புத்தெரிவிக்கிறார்.காலப்போக்கில் இரண்டாவது திருமணம் செய்வது தப்பில்லை என சுஜாதா உணர்கிறார்.

  சுஜாதா வேலை செய்யும் அலுவலகத்துக்கு மேலதிகாரியாக ரஜினி வருகிறார்.தான் திருந்திவிட்டதாகவும் மீண்டும் இணைந்து வாழவிரும்புவதாகவும் சுஜாதாவிடம் கூறுகிறார்.முதலில் நம்பமறுத்த சுஜாதா ரஜினியின் நடவடிக்கைகளினால் அவர் திருந்திவிட்டதாக நினைக்கிறார்.

     விவாகரத்துச்செய்த கணவனா,பழைய காதலனா என முடிவெடுக்க இயலாது தடுமாறிய சுஜாதா தனது நிலையை கமலிடம் கூறினார். ஜூனியர் என்ற பொம்மைமூலம்  அனைவரையும் சிரிக்க கைக்கும் கமல் ஜூனியர் பொம்மை பாடுவதுபோன்று தனது காதலை வெளிப்படுத்தினார்.

   சுஜாதாவுக்கும் ரவிக்குமாருக்கும் பதிவுத்திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.பதிவுத்திருமணம் செய்தால் தாலியை என்ன செய்வது எனத்தெரியாது கிலேசமடிந்தார் சுஜாதா. பதிவுத்திருமணத்துக்காக  சுகமில்லை என்று அலுவலகத்தில் விடுமுறை எடுக்கிறார் சுஜாதா.
     பதிவுத்திருமணத்துக்காகக்காத்திருந்து ஏமற்றமடைந்த‌ ரவிக்குமார் சுஜாதாவின் வீட்டுக்குச்செல்கிறார்.அங்கே சுகயீனம் காரணமாக சுஜாதா படுத்திருப்பதைக்காண்கிறார்.டாக்டரிடம் போகவாம் என்று ரவிக்குமார் கூற டாக்டர் வந்து மருந்து கொடுத்துள்ளார் என்று கூறுகிறார் ரஜினி. ரஜினி ,ரவிக்குமார், கமல் மூவரும் இரவிரவாகக்கண் விழித்து சுஜாதாவைப்பராமரிக்கின்றனர்.

  ஆயாவாகத்தந்து வீட்டில் வேலை செய்பவர் ரஜினியின் தாய் என்ற உணமை சுஜாதாவுக்குத்தெரியவருகிறது. ரஜினி உண்மையிலேயே திருந்திவிட்டார் என நம்பிய சுஜாதா ரஜினியுடன் வாழ முடிவுசெய்கிறார். தன‌து முடிவை ரவிக்குமாரிடம் கூறுகிறார்.புல்லாங்குழல் விற்பன்னரான ரவிக்குமாரை அவரது தீவிர ரசிகை காதலிப்பதை அறிந்த ரஜினி இருவருடனும் கதைத்து திருமண நிச்சயதார்த்தம் செய்கிறார்.


   ர‌ஜினியுட‌ன் வாழ்வ‌த‌ற்காக‌ கைக்குழ‌ந்தையுட‌ன் அவ‌ரின் வீட்டுக்குச்செல்கிறார் சுஜாதா.த‌ன்ம‌க‌ன் இன்ன‌மும் திருந்த‌வில்லை என‌க்கூறுகிறார் ர‌ஜினியின் தாய்.ர‌ஜினி திருந்திவிட்ட‌தாக‌ உறுதிப‌ட‌க்கூறுகிறார் சுஜாதா.அப்போது டில்லியிலிருந்துவ‌ந்த‌ ஹிந்தியில் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌டித‌த்தை சுஜாதாவிட‌ம் கொடுக்கிறார் ர‌ஜினியின் தாய்.அந்த‌க்க‌டித‌த்தைப்ப‌டித்து சுஜாதா க‌ண்க‌ல‌ந்கி நிற்கையில்  கைக்குழ‌ந்தியுட‌ன் வீட்டுக்கு வந்த‌ ஹிந்திப்பெண் இது ர‌ஜினியின் வீடா என‌க்கேட்கிறார்.

   வேலையை இராஜினாமாச்செய்துவிட்டு ஊருக்குப்போகிறார் சுஜாதா. ர‌ஜினியின்தாயும் அவ‌ருட‌ன் செல்கிறார்.

       ஒரு பெண்ணை மூன்று ஆண்க‌ள் விரும்புவ‌து, விவாக‌ர‌த்துப்பெற்ற‌ பெண் ப‌ழைய‌காத‌ல‌னை திருதும‌ண‌ம் செய்ய‌முய‌ற்சிப்ப‌து,ம‌ன‌ம் மாறி விவாக‌ர‌த்துப்பெற்ற‌ க‌ண‌வ‌னுட‌ன் வாழ‌விரும்புவ‌து என‌ இடிய‌ப்ப‌ச்சிக்க‌ல் போன்ற‌ வித்தியாச‌மான‌ முக்கோண‌க்காத‌லைத்த‌ன‌க்கே உரிய‌ பாணியில் இலாவ‌க‌மாக‌க்கையாண்டு  வெற்றிபெற்றார் கே.பால‌ச‌ந்த‌ர்.

    சுஜாதா,க‌ம‌ல்,ர‌ஜினி,ர‌விக்குமார்,லீலாவ‌தி,குமாரிப‌த்மினி,குட்டி ப‌த்மினி கோகுல்நாத்,வீர‌ராக‌வ‌ன்,குழந்தை ஹ‌ரி ஆகியோர் ந‌டித்த‌ன‌ர்.சுஜ‌ஹ்டாவுக்கு முக்கிய‌த்துவ‌ம் மிக்க‌ இப்ப‌ட‌த்தின் டைட்டிலில் சுஜாதாவின் பெய‌ர் முத‌லில் காட்ட‌ப்ப‌டடுகிற‌து.வில்ல‌னான‌ ர‌ஜினிக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் உள்ள‌து. ர‌விக்குமார் அறிமுக‌மான‌ ப‌ட‌ம்.

   சுஜாதா,க‌ம‌ல்,ர‌ஜினி ஆகியோரின் ந‌டிப்பு ப‌ட‌த்துக்கு மெருகூட்டிய‌து.வ‌ச‌ன‌ம் க‌தைக்கு உயிரூட்டிய‌து.க‌ம‌ல்,ர‌குமான் இனைந்து ந‌ட‌த்திய‌ வ‌ச‌ன‌ம் இல்லாத‌ கிரிக்கெற் காட்சி ர‌சிக்கும்ப‌டி இருந்த‌து.க‌ம‌லின்  ஜூனிய‌ர் பொம்மை க‌ல‌க‌ல‌ப்பூட்டிய‌து.பாட‌ல்க‌ள் க‌ண்ண‌தாச‌ன்,இசை எம்.எஸ்.விஸ்வ‌நாத‌ன்.எஸ்.ஜான‌கி,எஸ்.பி.பால‌சுப்ர‌ம‌ணிய‌ம் ஆகியோரின் குரலில்.இப்ப‌டி ஓர் தாலாட்டுப்பாட‌வா,காற்றுக்கென்ன‌வேலி,ஜூனிய‌ர்ஜூனிய‌ர் ஜூனிய‌ர் இரும‌ன‌ கொண்ட‌ திரும‌ண‌ மேடையில்,அங்கும் இங்கும் பாதை உண்டு  ஆகிய‌ பாட‌ல்க‌ள் ர‌சிக‌ர்க‌ளைக்க‌வ‌ர்ந்த‌ன‌.
ஒளிப்ப‌திவு பால‌ச‌ந்த‌ரின் ஆஸ்தான‌ வித்த‌க‌ர் என்.லோக‌நாத‌ன்.க‌தை ,வ‌ச‌ன‌ம் உத‌வி அன‌ந்து. க‌தி வ‌ச‌ன‌ம் இய‌க்‌க‌ம் கே.பால‌ச‌ந்த‌ர்.
ர‌ம‌ணி
மித்திர‌ன்  24/02 13

Friday, February 15, 2013

இரகசியமாக நிறைவேறியபகிரங்க தண்டனை


இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு உதவி செய்த அப்சல் குரு கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை  தூக்கிலிடப்பட்டார்.
நீதிமன்றத்தினால் அப்சல் குருவுக்கு பகிரங்கமாக விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்திய அரசு இரகசியமாக நடத்தி முடித்துள்ளது. மும்பாய் தாக்குதலின் குற்றவாளியான கசாப்புக்கு இரகசியமாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றி நோட்டம் பார்த்த இந்திய அரசு அப்சல் குருவையும் இரகசியமாகத் தூக்கிலிட்டது.
காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதும் காஷ்மீரில் மூன்று நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பத்திரிகைகள் வெளிவரவில்லை.  இணையத்தளங்கள் முடக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உடந்தையாக இருந்த அப்சல் குருவின் மரண தண்டனையை அரசாங்கம் ஏன் நிறைவேற்றவில்லை எனக் குடைந்தெடுத்த பாரதீய  ஜனதாக் கட்சி அமைதியாக இருக்கிறது.
அப்சல் குருவின் மரண தண்டனை இந்திய  அரசியலில் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. ராஜீவ் காந்தியை கொலை  செய்தவர்களை  ஏன் இன்னமும் தூக்கிலிடவில்லை என்ற கேள்வி புயலாகப் புறப்பட்டுள்ளது. மரண தண்டனையை உலகில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று மனித உரிமை  அமைப்புகள் போராடி வரும் நிலையில் மரண தண்டனையை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்ற குரல்களும் ஒங்கி ஒலிக்கின்றன. 134  நாடுகள் மரண தண்டனையை ஒழித்து விட்டன. ஆனால் பழிக்குப் பழி வாங்க வேண்டும் எனத் துடிப்பவர்கள் மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

எதிரணிகளின் வாயை அடைப்பதற்காக மரண தண்டனையை   கருவியாகப் பாவிக்கும் உத்தியை இந்திய அரசு ஆரம்பித்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அப்சல் குருவின் மரண தண்டனைக்கு எதிராக காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம்  தெரிவித்துள்ளõர். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியே காஷ்மீரில்  ஆட்சி செய்கிறது. அப்சல் குருவின் மரண தண்டனை அக்கட்சிக்கு அரசியல் ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தும் இணைந்திருக்கும் சூழ்நிலை அக்கட்சிக்கு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காஷ்மீர் விடுதலைக்காக போராடுபவர்கள் அப்சல் குருவின் மரண தண்டனையால் பயனடையக் கூடும் என்று உமர் அப்துல்லா அச்சமடைகிறார்.
இந்திய ஜனாதிபதியாக  பிரணாப் முகர்ஜி மூன்று மாதங்களில் இரண்டு மரண தண்டனையை கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். கசாப் அப்சல் குரு ஆகியோரின் மரண தண்டனை அவசரமாகவும் இரகசியமாகவும் நடைபெற்றதனால் அடுத்து தூக்கில் தூங்கப் போவது  யார்  என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த் சிங் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்சிங் ரஜோனாவின் தலைவிதி அடுத்து நிர்ணயிக்கப்படலாம். கடந்த  ஆண்டு  மார்ச் 31 ஆம் திகதி ரஜோனா தூக்கிலிடப்பட நாள் குறிக்கப்பட்டது. அன்றைய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் யாதவ், ரஜோனாவின் மகன் சுக்பீர் சிங் பாதவ் ஆகி÷யார் ஜனாதிபதியிடம் விடுத்த மனுவையடுத்து தூக்குத்தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.
 சுக்பீர் சிங்க பதால் இவர் தான் அகாலிதல்  கட்சியின் தலைவர். பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளில் அகாலிதளும் ஒன்று.  அப்சல் குருவைத்  தூக்கிலிட வேண்டும் எனக் குரல் கொடுத்த பாரதீய ஜனதாக் கட்சி ரஜோனாவின் விவகாரத்தில் அடக்கியே வாசிக்கிறது.
பாகிஸ்தானுடன்  தொடர்புடையவர்களின் மரண தண்டனையை உடனடியாக  நிறைவேற்ற வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கும் பாரதீய ஜனதாக் கட்சி, பஞ்சாப் முதல்வரின் கொலையுடன் தொடர்புடையவரின் மரண தண்டனை பற்றி வாயைத் திறக்க மறுக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 91 குற்றவாளிகள் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பித்தனர். இவர்களில்  31 கருணை மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டு  ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டன.  பிரதீபா  பட்டீல் ஜனாதிபதியாக இருந்த ஐந்து வருடங்களில் 35  கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டு   ஆயுள் தண்டனையாக குறைத்தார்.  மூன்று கருணை மனுக்களை  நிராகரித்து மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்தார். இவரால் நிராகரிக்கப்பட்ட மூவரும் ராஜீவ் கொலையில்  மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் மக்பூல் பட்டின் நினைவு  நாள் கொண்டாடப்படும் வேளையில் அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1966 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதல் காரணமாக  மக்பூல் பட் கைது செய்யப்பட்டார். ஸ்ரீ நகர் சிறையிலிருந்து சுரங்கம் மூலம்தப்பிய மக்பூல்பட்  பாகிஸ்தனுக்குத் சென்றார்.
1971 ஆம் ஆண்டு இந்திய  பயணிகள் விமானத்தை மக்பூல்பட் தலைமையிலான காஷ்மீர் விடுதலை முன்னணி கடத்திச் சென்றது.  இக்குற்றச்சாட்டில் மக்பூல் பட்டைக் கைது செய்த பாகிஸ்தான்  பின்னர் விடுதலை  செய்தது. இந்தியாவுக்குள் நுழைய  முயன்ற மக்பூல்பட் கைது செய்யப்பட்டார். .
1984 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் துணைத் தூதரக  அதிகாரி கடத்தப்டார்.  அவரை விடுதலை செய்வதற்கு மக்பூல் பட் விடுதலை செய்யப்பட வேண்டும். ஒரு மில்லியன் பவுண்ட் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்படுகிறது.  பேச்சுவார்த்தை நடைபெறும் போது துணைத் தூதரக அதிகாரி கொல்லப்படார்.. இதன் காரணமாக மக்பூல் பட்டின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அப்சல் குருவின் மரண தண்டனை  நிறைவேற்றப்பட்டதனால்  காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது.
மெட்ரோநியூஸ்  15/02/13


Wednesday, February 13, 2013

தடம் மாறியதமிழ்ப்படங்கள் 48


பெண் குழந்தைக்குத்தந்தையான தனக்கு இன்னொரு குழந்தைக்குத்தந்தையாகும் பாக்கியம் இல்லை என்பதை உலகுக்குத்தெரியாமல் மறைத்துவைத்த இராணுவ ஜெனரல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதுமனைவி ஒரு குழந்தைக்குத்தாயானதைக்கண்டு அதிர்ச்சியடையும் கதையுடன் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஜெனரல் சக்கரவர்த்தி"

   இராணுவ ஜெனரல் சிவாஜிகணேசன் அவரது மனைவி கே.ஆர்.விஜயா.அவர்களின் மகள் கவிதா, ஜெய்கணேசஷை உயிருக்குயிராகக்காதலிக்கிறார். பருவ வயதில் இருவரும் தம்மை மறந்ததனால் கவிதா கர்ப்பமாகிறார்.காதலன் ஜெய்கணேஷ் திடீரென இறந்துவிட செய்வதறியாது தடுமாறிய கவிதா தாயிடம் உண்மையைக்கூறுகிறார்.

    திரும‌ண‌மாகாத‌ த‌ன‌து ம‌க‌ள் க‌ர்ப்ப‌மான‌தையும் அத‌ற்குக்கார‌ண‌மான‌ ஜெய்க‌ணேஷ் இற‌ந்த‌தையும் அறிந்த‌ தாய் துடிதுடிக்கிறார்.ம‌க‌ளையும் குடும்ப‌ மான‌த்தையும் காப்பாற்றுவ‌த‌ற்காக‌ ம‌களுக்குப்பிற‌ந்த‌குழ‌ந்தையைத்தன் குழந்தை என‌ ‌ ஊருக்குக்கூறுகிறார்.

  விடுமுறையில் ஊருக்கு வ‌ந்த‌ சிவாஜி தான் த‌ந்தையான‌தை அறிந்து அதிர்ச்சிய‌டைகிறார்.யுத்த‌முனையில் காய‌ம‌டைந்த‌ சிவாஜிக்கு த‌ந்தையாகும் பாக்கிய‌ம் இல்லை.இந்த‌ உண்மையை ம‌ற்ற‌வ‌ர்க‌ளூக்கு ம‌றைத்த‌ சிவாஜி ம‌னைவியின் மீது ச‌ந்தேக‌ம‌டைகிறார்.குழ‌ந்தைக்கு அம்மா நீதான். அப்பா யாரென‌த் துழைத்தெடுக்கிறார்.

    ம‌க‌ளைக்காப்பாற்றுவ‌த‌ற்காக‌ ந‌ட‌த்திய‌ நாட‌க‌த்தினால் க‌ண‌வ‌ன் த‌ன் மீது ச‌ந்தேக‌ம் கொள்வ‌தை அறிந்த‌ கே.ஆர்.விஜ‌யா, துடிதுடிக்கிறார்.உண‌மையைச்சொல்ல‌முடியாது த‌டுமாறுகிறார்.திரும‌ண‌ம் செய்யாத‌ ம‌க‌ளின் குழ‌ந்தை என‌ எப்ப‌டிச்சொல்வ‌தென‌த‌ தெரியாது த‌டுமாறினார்.
   
   அழுத‌ குழ‌ந்தைக்கு ம‌க‌ள் தாய்ப்பால் கொடுப்ப‌தை பார்ஹ்த‌ சிவாஜிக்கு உண்மையைக்கூறுகிறார் ம‌னைவி கே.ஆர்.விஜ‌யா.ம‌க‌ளின் நிலை அறிந்த‌ சிவாஜி நிலை குலைந்து போகிறார்.இற‌ந்துபோன‌தாக்க்கூற‌ப்ப‌ட்ட‌ ஜெய்க‌ணேஷ் உயிருட‌ன் வ‌ருகிறார். அத‌ன்பின் அவ‌ர்க‌ளின் வ‌ழ்க்கையில் ம‌கிழ்ச்சி ஏற்ப‌டுகிற‌து.

   
    சிவாஜியும் கே.ஆர்.விஜ‌யாவும் போட்டிபோட்டு ந‌டித்த‌ன‌ர்.உண‌ர்ச்சிக‌ர‌மான‌ இவ‌ர்க‌ளின் ந‌டிப்பு ர‌சிக‌ர்க‌ளைக்க‌ல‌ங்க‌ வைத்த‌து.ம‌னோர‌மா,க‌விதா,ஜெய்க‌ணேஷ்,டி.பி.முத்துல‌க்ஷ்மி ஆகியோர் ந‌டித்த‌ன‌ர்.க‌தை செல்வ‌பார‌தி,விய‌ட்நாம் வீடு சுந்த‌ர‌த்தின் வ‌ச‌ன‌ம் ப‌ட‌த்துக்கு உயிரைக்கொடுத்த‌து.பாட‌ல்க‌ள் க‌ண்ண‌தாச‌ன், இசை எம்.எஸ். விஸ்வ‌நாத‌ன்.இய‌க்க‌ம் டி.யோகான‌ந்.100 நாட்க‌ளுக்கு மேல் ஓடிய‌ வெற்றிப்ப‌ட‌ம்.

கே.எஸ்.ராஜ‌வின் ம‌துர‌க்குர‌லில் இல‌ங்கை  வானொலியில் ஒலிப‌ர‌ப்பான‌ இப்ப‌ட‌த்தின் விள‌ம்ப‌ர‌ங்க‌ள்  இன்றும் நெஞ்சில் நிழ‌லாடுகின்ற‌ன‌.
ர‌ம‌ணி
மித்திர‌ன் 10/01/13

Thursday, February 7, 2013

பதறவைக்கும் அரசியல் கொலைகள்


அரசியல் சதுராட்டத்தில் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அழகிரியின் விசுவாசியான பொட்டு சுரேஷ்  கொல்லப்பட்டுள்ளார். சாதாரண கூலித் தொழிலாளராக இருப்பவர்கள் அரசியல் தலைவர்களின்  அருட் பார்வையினால் கட்சியில் மிக முக்கிய பதவிகளில் அமரும் இவர்களின் அட்டகாசம் அனைவரையும் அதிரவைக்கும்.

மதுரையில் அஞ்சா நெஞ்சனான அழகிரியைச் சற்றி பலர் மையம் கொண்டுள்ளனர். அவர்களில் முக்கிய மாணவர் பொட்டு சுரேஷ். அழகிரியின் முகாமின் இன்னொரு பிரபலமானவர் அட்டாக் பாண்டி. அழகிரியின் பக்கத்து தூணாக நின்ற இவர் அண்மையில் ஸ்டாலினிடம் சரணடைந்தார். பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட பின்னர்  அட்டாக் பாண்டி தலைமறைவாகி விட்டார். பொட்டு சுரேஷ் கொலையுடன்  தொடர்புடைய ஏழு பேர் பொலிஸில் சரணடைந்துள்ளனர். விசாரணையின் பின்னர் அதிர்ச்சி தரும் பல உண்மைகள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அழகிரியின் கோட்டையிலே விசுவாசமிக்க பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆகிய இருவருக்கிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. பொட்டு சுரேஷை  மீறி அழகிரியை நெருங்குவது இலகுவானதல்ல. தமிழக ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவர்களது நடவடிக்கையில் தேக்கம் ஏற்பட்டது. தமிழக அரசின் கழுகுப் பார்வையில் சிக்கி பொட்டு சுரேஷும்,  அட்டாச் பாண்டியும் சிறைக்குச் சென்றார்கள். பொட்டு சுரேஷ் அட்டாக் பாண்டி உட்பட  அழகிரியைக் சுற்றி நின்ற  பட்டாளம் அனைத்தும் அரச விருந்தாளியாக சிறைக்கு  அனுப்பப்பட்டனர். ஒரு வருடத்துக்குப் பிணையில் வெளியே வர முடியாத வகையில் குண்டர் சட்டத்தின் பிரகாரம்  பொட்டு சுரேஷ் உள்ளே தள்ளப்பட்டார். தமிழக அரசின் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கி நீதிமன்றத்தின்  துணையுடன் வெளியே வந்தார் பொட்டு சுரேஷ்.

   அழகிரிக்கு நெருக்கமானவர் யார் என்பதில் இருவருக்குமிடையே பலத்த போட்டி நிலவியது. பொட்டு  சுரேஷை  முந்த முடியாத அட்டாக் பாண்டி அழகிரியின் முகாமிலிருந்து வெளியேறி ஸ்டாலினிடம்  தஞ்சமடைந்தார். தனது மனக் குமுறல்களை இந்திய புலனாய்வு  சஞ்சிகைக்கு  வழங்கிய பேட்டியில் வெளியிட்டிருந்தார்.

மதுரையைச் சேர்ந்த சுரேஷ் பாபு ஆரம்பத்தில் நைட்டி வியாபாரம் செய்தார். அப்போது  நைட்டி சுரேஷ் என அழைக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழக  நாடாளுன்ற உறுப்பினர்களாக  ராஜன் செல்லப்பா, முத்துமணி ஆகியோருடன்  தொடர்பு ஏற்பட்டதனால அரசியல் பாதையில் இறங்கினார். 1996 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியதும் பரிதி இளம்வழுதியை பிடித்தார். அங்கிருந்து வெளியேறி பி.டி. ஆருடன் இணைந்தார். நெற்றியில் பெரிய பொட்டுடன் வ லம் வரும் சுரேஷ் பொட்டு சுரேஷ் எனப் பெயர் பெற்றார்.

அரசியலில் பல படிகள் ஏறி பலருடனும் இணைந்து பணியாற்றியதால் அரசியல் நெளிவு சுழிவுகளை நன்கு கற்றறிந்த பொட்டு சுரேஷ், அழகிரியின் முகாமுக்குச் சென்றதும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டார்.

கபடி விளையாட்டில் மிகத் திறமையான பாண்டி அட்டாக் எனக் கூறியபடி எதிராளியை வீழ்த்துவார். அதனால் அவருடன்  அட்டாக் என்ற சொல் இணைந்து அட்டாக் பாண்டி யாகியது.

திராவிட முன்னேற்றக் கழக நிழல் உலக தாதாக்கள் இருவரினால் மதுரை திராவிட முன்னேற்றக் கழகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

அழகிரியின் விசுவாசியான பொட்டு சுரேஷின் கொலையின் பின்னணியில்  அழகிரியின் முன்னாள் விசுவாசியாக அட்டாக் பாண்டி  இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அழகிரி நிலை  குலைந்து போயுள்ளார்.

பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதே அவரது குடும்பத்தினர் சந்தேகம் கொண்டனர்.  கூட இருந்த   ஐவரே கொலையாளிகள்என  சுரேஷின் மனைவி கூறியுள்ளார். கொலை செய்தவனும் கூட அழுகிறான் என மூதாட்டி  ஒருவர் புலம்பியுள்ளார். அழகிரியின் முன்னாலேயே இப்படியான வார்த்தைகள் வெளியாகியதால் அழகிரியும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளன.

அரசியல்பிரமுகர் ஒருவரின் பினாமியாக  பொட்டு சுரேஷ் செயற்பட்டதால் சொத்துப் பிரச்சினையில்  இக்கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மார்க்ஸிஸ்ட் கட்சியைச்  சேர்ந்த பெண் கவுன்சிலர் லீலாவதி 1997 ஆம் ஆண்டு மதுரையில் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் விடுதலையாகிவிட்டனர்.

திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவரான தா.கிருஷ்ணன்  2003 ஆம் ஆண்டு அதிகாலை கொலை செய்யப்பட்டார்.  கொலையின் சூத்திரதாரிகள் இன்னமும் கைது  செய்யப்படவில்லை.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட அழகிரி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவும் அவரது  நண்பரும் 2004 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர்.
திராவிடி முன்னேற்ற கழகம் பிரமுகர் பூண்டி கலைச்செல்வன் 2007  ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளரின் கொலைக்கும் பழிவாங்கும் முகமாகவே இவர் கொல்லப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி இராம ஜெயம் கடந்த ஆண்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கை, கால்கள் கட்டுக் கம்பியில்  கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டு கொல்லப்பட்டது  அதிர்ச்சியளித்தது.  இக்கொலையின் சூத்திரதாரிகள் இதுவரை  கைது செய்யப்படவில்லை.

தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் படுகொலை, பழிவாங்கல் என்பனவற்றுக்கான சூத்திரதாரிகளை  சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசின் கைகளிலேயே உள்ளது.
 ரமணி
மெட்ரோநியூஸ் 08/02/13


Friday, February 1, 2013

மோடிக்கு அதிகரிக்கும் ஆதரவு


இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிவிட்டன. காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் கீழ் போட்டியிட  காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் தயாராகிவிட்டனர். ராகுல்தான்? பிரதமர் வே
ட்பாளர்  என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்காத நிலையிலும் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் உள்ளனர்.

இந்தியாவில் ஆட்சி அமைக்கக் கூடிய செல்வாக்குமிக்க தலைவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியில் இல்லை. வாஜய்பாய்க்குப் பின்னர் இந்தியாவில் செல்வாக்குமிக்க தலைவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியில்  இல்லை. இதன் காரணமாக  பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியாத நிலையில்  உள்ளது. அத்வானி, சுஷ்மா சிவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி போன்ற தலைவர்கள் பாரதீய ஜனதாக் கட்சியில் இருந்தாலும் மோடியைப் போன்ற பிரபல்யமானவர்கள் எவரும் இல்லை.  பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படலாம் என்ற ஊகம் உலாவியது. பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சிங்காவின் மோடிக்கு ஆதரவான குரல் அந்த ஊகத்தை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் மத்திய நிதி அமைச்சராகப்  பதவி வகித்தவர் யஸ்வந்சிங்கா. இவரின் கருத்துகளுக்கு பாரதீய ஜனதாக்  கட்சியில் பலத்த ஆதரவு உள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் சக்திமிக்க தலைவர்களில் ஒருவரான யஷ்வந் சிங்காவின் மோடிக்கு ஆதரவான நிலைப்பாடு மோடிக்கு பலத்தைக் கூட்டியுள்ளது.

பிரதமர் வேட்பாளராகும் தகுதி மோடிக்கு உண்டு என்று  யஷ்வந்சிங்கா கூறியதற்கு எதவிதமான பதில் கருத்தும் பாரதீய ஜனதாக் கட்சியிலிருந்து வெளிவரவில்லை. பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராஜ்நாத்சிங் கையேற்ற பின்னர் மோடியைச் சந்தித்தார். ராஜ்நாத் சிங் மோடி சந்திப்புப் பற்றிய விபரம் எதுவும் வெளிவராத நிலையில் மோடிக்கு ஆதரவாக யஷ்வந்சிங்கா குரல் கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் கட்சிக்கே உரியது. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, தேர்தலுக்கு பொறுப்பான குழு என்பன அலரி ஆராய்ந்த பின்பே பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
இந்தக் குழுக்கள் பிரதமர் வேட்பாளர்  என்பன சிந்திப்பதற்கு முன்பே யஷ்வந்சிங்கா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது யஷ்வந்சிங்காவின்  தனிப்பட்ட கருத்து என்று பாரதீய  ஜனதாக் கட்சித் தலைவர்  ராஜ்நாத் சிங் அதனை பூசி மெழுகி முனைகிறார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் மோடிக்கு ஆதரவுக்கரம் நீட்டுமா என்பது சந்தேகமே.  பாரதீய  ஜனதாக் கட்சியில் உள்ளவர்களை ச்சமாளித்தாலும்   கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக  மோசடிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கக் களமிறங்கும் இவ்வேளையில்  இந்திய நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு திராவிடமுன்னேற்றக்கழகம் காய்நகர்த்தத் தொடங்கி உள்ளது. டெசோ தீர்மானங்களை தூசு தட்டிக் கையில் எடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். இலங்கைத் தமிழர்கள்  நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக டெசோ அமைப்பு 14 நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானங்களை ஜனாதிபதி பிரணாப்  முகர்ஜியிடம்  ஸ்டாலின் தலைமையிலான  குழு ஒப்படைத்தது.

ஸ்டாலின், ரி.ஆர். பாலு, சுப்புலக்ஷ்மி சுப  . வீரபாண்டியன்  அடங்கிய இக்குழு ஜனாதிபதியைச் சந்தித்து மனு ஒன்றை கையளித்தது. டெசோவின் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உள்ள 47 நாடுகளின் தூதுவர்களிடம் கையளிப்பதற்கு இந்தக் குழு முயற்சி செய்கிறது.
இந்திய நாடாளுமன்றக் குழுத் தேர்தலின்போது தமிழ்ஆர்வலர்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து திராவிட முன்னேற்றக்கழகம் நகரத் தொடங்கியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது.  இந்தக் கூட்டணியில் அவ்வப்போது விரிசல்கள் ஏற்பட்டு  பின்னர் இரு கட்சித் தலைவர்களும் விட்டுக் கொடுத்து  சமாதானமாகினர். இந்த விரிசலும் விட்டுக் கொடுப்பும் நிரந்தரமானதில்லை என்பது  அரசியலில் எழுதப்படாத விதி.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குள் விஜயகாந்தையும்  கொண்டு  வர வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். விஜயகாந்தின் செல்வாக்கு வளர்ச்சி பற்றி தமிழக காங்கிரஸ் இளைஞர்களிடம் ராகுல் காந்தி அக்கறையாக விசாரித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக் கூட்டணியில் விஜயகாந்தை இணைக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் விஜயகாந்த் கூட்டணி என்று ஸ்டாலின் நினைக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தை வெட்டிவிட்டு காங்கிரஸ் விஜயகாந்த் கூட்டணி என்று என்று ராகுல் விரும்புகிறார்.

காங்கிரஸுடன் விஜயகாந்த் ஐக்கியமாகி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேற்றப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய முன்னேற்பாட்டை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துள்ளது.

ரமணி
மெட்ரோநியூஸ்  01/02/13