Sunday, May 30, 2010

உலகக்கிண்ணம்2010


பிரான்ஸ்1998
பிரான்ஸில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பிரேஸிலை வீழ்த்திய பிரான்ஸ் சம்பியனானது. 1994 ஆம் ஆண்டு சம்பியனான பிரேஸில், பிரான்ஸிடம் கிண்ணத்தைப் பறிகொடுத்தது. 60 வருடங்களின் பின்னர் பிரான்ஸில் மீண்டும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 174 நாடுகள் போட்டியிட்டன. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 32 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இதுவரை 24 நாடுகள் விளையாடின. இம்முறை மேலும் எட்டு நாடுகள் கூடுதலாக இணைக்கப்பட்டு 32 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடின.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமரூன், மொராக்கோ, நைஜீரியா, தென்னாபிரிக்கா, துனுஷியா ஆசியக் கண்டத்தில் இருந்து ஈரான், ஜப்பான், கொரியக் குடியரசு (தென்கொரியா), சவூதி அரேபியா, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கொஸ்ரிகா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, ரொமானியா, ஸ்கொட்லாந்து, ஸ்பெயின், யூகோஸ்லாவியா, வட, மத்திய அமெரிக்காவில் இருந்து ஜமேக்கா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, கொலம்பியா, பரகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
32 நாடுகளும் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பெற்றன. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் 61 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜமேக்காவுக்கு எதிரான போட்டியில் ஆர்ஜென்ரீனா 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
குழு "ஏ' யிலிருந்து பிரேஸில், நோர்வே குழு "பீ' யிலிருந்து இத்தாலி, சிலி குழு "சி'யிலிருந்து பிரான்ஸ், டென்மார்க் குழு "டி' யிலிருந்து நைஜீரியா பரகுவே, குழு "ஈ' யிலிருந்து நெதர்லாந்து, மெக்ஸிகோ, குழு "எஃப்' பிலிருந்து ஜேர்மனி, யூகோஸ்லாவியா, குழு "ஜி' யிலிருந்து ரொமானியா, இங்கிலாந்து குழு "எச்' சில் இருந்து ஆர்ஜென்ரீனா, கொஸ்ரிகா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
இரண்டாவது சுற்றில் விளையாடிய பிரேஸில், இத்தாலி, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, குரோஷியா ஆகியன வெற்றி பெற்று காலிறுதிக்கு தெரிவாகின. இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கிடையிலான போட்டி 22 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததனால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேரத்தில் கோல் அடிக்கப்படாமையினால் பெனால்டி மூலம் 43 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா காலிறுதிக்கு முன்னேறியது.
பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கோல் அடிக்கப்படாது சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் 43 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஆர்ஜென்ரீனாவுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நெதர்லாந்து ஆகியன அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஜேர்மனி, குரோஷியா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டியின் முடிவு உதைபந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 30 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
பிரேஸில், நெதர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததனால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேரத்தில் கோல் அடிக்கப்படாமையினால் பெனால்டி மூலம் 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
பிரான்ஸ், குரோஷியா, ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த குரோஷியா நெதர்லாந்து ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா மூன்றாவது இடத்தையும் தோல்வி அடைந்த நெதர்லாந்து நான்காவது இடத்தையும் பெற்றன.
உலகக் கிண்ண சம்பியனான பிரேஸில், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலகக் கிண்ண சம்பியனானது. ஐந்தாவது முறை உலகக் கிண்ணத்தைப் பெறும் நோக்கில் விளையாடிய பிரேஸில் இறுதிப் போட்டியில் கோல் அடிக்காது வீழ்ந்தது.
உலகக் கிண்ண ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குட்டி நாடான குரோஷியா ஏழு போட்டிகளில் விளையாடி 19 கோல்கள் அடித்தது. குரோஷியாவுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. மூன்று போட்டிகளில் குரேõஷியாவுக்கு எதிராக விளையாடிய நாடுகள் கோல் அடிக்கவில்லை டென்மார்க், ஜேர்மனி ஆகியன தலா 12 கோல்களும், பிரான்ஸ் 11 கோல்களும் அடித்தன.
கோல்டன் ஷýவுக்காக ஆறு கோல்கள் அடித்த குரோஷிய வீரர் டவோர் சுகெர், ஐந்து கோல்கள் அடித்த ஆர்ஜென்ரீன வீரர் கப்ரியல் பற்றிஸ்டா, ஐந்து கோல்கள் அடித்த இத்தாலி வீரர் கிறிஸ்ரினா வெய்ரி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். குரோஷிய வீரரான டவோர் சுகெர் கோல்டன் ஷý பெற்றார்.
கோல்டன் பந்து விருதுக்காக பிரேஸில் வீரர் ரொனால்டோ, குரோஷிய வீரர் டவோர் தாகர், பிரான்ஸ் வீரர் லிலியன் துராம் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். ரொனால்டோவுக்கு கோல்டன் பந்து வழங்கப்பட்டது. சிறந்த கோல் கீப்பராக பிரான்ஸ் வீரர் பபியன் பர்தீஸ் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த இளம் வீரராக இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் எவன் தெரிவு செய்யப்பட்டார். முறை தவறாது விளையாடிய நாடுகளாக பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன அறிவிக்கப்பட்டன. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்த அணியாக பிரான்ஸ் தெரிவு செய்யப்பட்டது.
64 போட்டிகளில் 171 கோல்கள் அடிக்கப்பட்டன. 2785100 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். 37 மில்லியன் ரசிகர்கள் தொலைக்காட்சி மூலம் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியைப் பார்வையிட்டனர். உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் தென் அமெரிக்க நாடுகள் முதன் முதலாக வெவ்வேறு குழுக்களில் இடம் பிடித்ததால் முதல் சுற்றில் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போட்டியிடவில்லை எலக்ரொனிக் மூலம் விளையாடும் நேரம் காட்சிப்படுத்தப்பட்டது.
போட்டி சமநிலையில் முடிந்தால் மேலதிக நேரத்தில் முதல் கோல் அடிக்கும் நாடு வெற்றி பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் கோல் கோல்டன் கோல் என அழைக்கப்பட்டது. பிரான்ஸ் வீரர் பலக் முதலாவது கோல்டன் கோல் அடித்த வீரராவார். இரண்டாவது சுற்றில் பரகுவேக்கு எதிரான போட்டியில் 113 ஆவது நிமிடத்தில் கோல்டன் கோல் அடிக்கப்பட்டது,
ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்திய அவுஸ்திரேலியா ஈரானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததனால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.

ரமணி

மெட்ரோநியூஸ்

நம்பிக்கை வைத்த வைகோவைபுறந்தள்ளினார் ஜெயலலிதா



இந்திய நாடாளுமன்ற மேல் சபையில் உள்ள தமிழகத்தின் ஆறு உறுப்பினர்களின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. காலி இடமாகும் ஆறு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜுன் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான மனுத் தாக்கல் ஜுன் 1 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்திய நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தலினால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.டி.பி. தினகரன், கே.மலைச்சாமி, எஸ். அன்பழகன், என்.ஆர். கோவிந்தராஜா, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாச்சியப்பன் ஆகிய நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர்கள் இம்மாதத்துடன் பதவி இழக்கின்றனர்.
தமிழக சட்ட சபை உறுப்பினர்களின் வாக்கு மூலமே நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது உறுதி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மூலம் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் துணையுடன் இரண்டாவது மேல் சபை உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.
வைகோ நாடாளுமன்றம் செல்வாரா என்ற விவாதம் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி தேர்தல்களில் படுதோல்வி அடைந்த போதும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள வைகோவுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இதேவேளை தமது உறுப்பினர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் இடதுசாரிகள் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாடாளுமன்ற, தமிழக சட்டமன்றத் தேர்தல்களின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்ததால் வெறுப்புற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் தோல்வி ஏற்பட்டாலும் ஜெயலலிதாவைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதியுடன் உள்ளார் வைகோ. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்களே ஜெயலலிதாவைக் கைவிட்டு தி.மு.க.வை பலப்படுத்தும் இவ்வேளையில் ஜெயலலிதாவைக் கைவிடாத வைகோவுக்கு ஜெயலலிதா கைம்மாறு செய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.
நாடாளுமன்ற மேல் சபை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு ஆதரவு தரும்படி ஜெயலலிதா விடுத்த வேண்டுகோள் காரணமாக வைகோ, தா. பாண்டியன் ஆகியோரின் நாடாளுமன்றப் பிரவேசம் தடுக்கப்பட்டது. தமிழக அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதுவித மலர்ச்சியுமின்றி வாடிப் போய் நிற்கிறது.
திராவிட முன்னேற்றக் கூட்டணியில் வைகோ இருந்த போது, தான் விரும்பிய தொகுதி தனது கட்சிக்கு ஒதுக்கப்படாமையினால் ரோஷத்துடன் வெளியேறியவர் வைகோ. தேர்தல்களில் தோல்வி அடைந்ததனால் ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு ஒத்துப் போக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வைகோ நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் விருப்பம். வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பது அரசியல் தலைவர்களின் எதிர்பார்ப்பு. ஜெயலலிதாவின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெயலலிதாவைக் கைவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாக வேண்டும். ஆகையினால் வேறு மார்க்கம் இல்லாமையினாலேயே வைகோவும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கும் ஜெயலலிதாவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பது உறுதி. அதில் ஒன்றை வைகோவுக்கு விட்டுக் கொடுக்கும் தனது பெருந்தன்மையைக் காட்டி இருக்கலாம். வைகோ நாடாளுமன்றம் செல்வதை இடதுசாரிகளும் மனமொத்து விரும்பி இருப்பார்கள். ஜெயலலிதாவின் முடிவு எல்லா எதிர்பார்ப்புகளையும் புரட்டிப் போட்டு விட்டது.
ஜெயலலிதாவின் இந்த முடிவினால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலர் வெறுப்படைந்துள்ளனர். இத்தனை காலமும் நேர்மையான அரசியல் நடத்திய வைகோவை ஜெயலலிதா புறந்தள்ளியதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வைகோ அமைதியாக இருப்பதால் வைகோவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இரண்டு உறுப்பினர்கள் கூடுதலாகக் கிடைப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகம் உற்சாகத்தில் உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்று வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரை நிறுத்துவது என இன்னமும் முடிவு செய்யவில்லை. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகிய இருவரில் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமூச்சாக எதிர்க்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினராவதை திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை. ஆனால் இளங்கோவனுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி சார்பில் அன்புமணி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைவதற்கு காத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல்வர் கருணாநிதியின் கருணைக்காகக் காத்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் துடிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆகையினால் அன்புமணியை நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டிய நிலை உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கியான காடுவெட்டி குரு கருணாநிதியை மீண்டும் முதல்வராக்குவேன் என்று சபதமிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறுவதற்குப் பிரதான காரணியாக இருந்தார் காடுவெட்டி குரு. காடுவெட்டி குரு முதல்வர் கருணாநிதியைப் புகழ்ந்து பேசி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களிப்பவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதைத் தெரிந்து கொண்டுள்ள முதல்வர் கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியைத் தன்னருகில் வைத்திருக்க விரும்புகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் மீண்டும் இணைக்க விரும்பும் முதல்வர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல கட்சிகள் இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் மட்டுமே பலமான கட்சிகள். தமிழக சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கேட்கக் கூடாது என்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார் முதல்வர் கருணாநிதி.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். இவை இரண்டும் நடைபெறாது என்பது வெளிப்படை. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து தமிழகத்தில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலரிடம் உள்ளது.
மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சி போல் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியில் அமைச்சரவைப் பொறுப்பை தமிழக காங்கிரஸுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமைக்கு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை காங்கிரஸ் கட்சி விடுத்தால் அதனை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொள்ள மாட்டார். ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் பட்சத்தில் ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு கொடுத்து ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்த முதல்வர் கருணாநிதி விரும்ப மாட்டார்.
நாடாளுமன்றத்துக்கு தமிழகத்தில் இருந்து மேல் சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இருக்கையில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான விஜயகாந்த் அமைதியாக உள்ளார். அவருடைய ஒரே ஒரு வாக்கு எந்தக் கூட்டணிக்கும் தேவையற்ற ஒன்றாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்த் இன்று தேடுவாரின்றி இருக்கிறார்.
இதே நிலை நீடித்தால் விஜயகாந்த் மட்டும் அரசியலில் இருப்பார். அவருடைய கட்சி அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கப்பட்டு விடும்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 30/05.10

உலகக்கிண்ணம்2010


அமெரிக்கா1994
அமெரிக்காவில் நடைபெற்ற 15ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலியை வீழ்த்திய பிரேஸில் சம்பியனானது. நான்காவது தடவையாக உலகக் கிண்ண சம்பியனாகி புதிய சரித்திரம் படைத்தது பிரேஸில். உலகக் கிண்ண தகுதி காண் போட்டியில் 147 நாடுகள் போட்டியிட்டு 24 நாடுகள் விளையாடுவதற்குத் தகுதி பெற்றன.
இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தன. கிரீஸ், நைஜீரியா, சவூதி அரேபியா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமரூன், மொராக்கோ, நைஜீரியா, ஆசியக் கண்டத்தில் இருந்து கொரியக்குடியரசு (தென்கொரியா), சவூதி அரேபியா, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பெல்ஜியம், பல்கேரியா, ஜேர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, அயர்லாந்துக் குடியரசு, ரொமானியா, ரஷ்யா, சுவீடன், சுவிட்சர்லாந்து, வட மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜென்ரீனா, பொலிவியா, பிரேஸில், கொலம்பியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றன.
24 நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 16 நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு "ஏ' யிலிருந்து ரொமானியா, சுவீடன், அமெரிக்கா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு "பீ' யில் இருந்து பிரேஸில், சுவீடன் ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. கமரூனுக்கு எதிரான போட்டியில் 6 1 என்ற கோல் கணக்கில் வென்ற ரஷ்யா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. குழு "சீ' யில் இருந்து ஜேர்மனி, ஸ்பெயின் ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றன.
குழு "டி' யில் விளையாடிய நைஜீரியா, பல்கேரியா, ஆர்ஜென்ரீனா ஆகியன தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தலா ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. குழு "ஈ'யில் விளையாடிய மெக்ஸிகோ, இத்தாலி, அயர்லாந்து குடியரசு, நோர்வே ஆகிய நாடுகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியை சமப்படுத்தி, தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் மெக்ஸிகோ, இத்தாலி, அயர்லாந்து குடியரசு ஆகியன இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.
குழு "எஃப்'பில் விளையாடிய நெதர்லாந்து, சவூதி அரேபியா, பெல்ஜியம் ஆகிய நாடுகள் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தலா ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன், அயலர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நெதர்லாந்து, அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி ஆகியன காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. மெக்ஸிகோ, பல்கேரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்ட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பல்கேரியா காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. காலிறுதிப் போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்திய இத்தாலி, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெல்ஜியம் ஆகியன அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. ரொமானியா, சுவீடன் ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டி 22 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததனால் பெனால்ட்டி மூலம் 54 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றது.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, சுவீடனுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சுவீடன், பல்கேரியா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியில் 40 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் மூன்றாம் இடத்தையும் தோல்வி அடைந்த பல்கேரியா நான்காம் இடத்தையும் பிடித்தன.
பிரேஸில், இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு நாடுகளும் கோல் அடிக்கவில்லை. மேலதிக நேரத்திலும் கோல் அடிக்காமையினால் பெனால்டி மூலம் 32 என்ற கோல் கணக்கில் பிரேஸில் சம்பியனானது. இத்தாலியின் நம்பிக்கை நட்சத்திரமான ரொபேட்டோ பக்கியோ பெனால்டியில் கோல் அடிக்காது ரசிகர்களை ஏமாற்றினார்.
சுவீடன் 15 கோல்களும், பிரேஸில் 11 கோல்களும் ஸ்பெயின், ரொமேனியா, பல்கேரியா ஆகியன தலா 10 கோல்களும் அடித்தன. தலா ஆறு கோல்கள் அடித்த எலெக்சõலங்கோ (ரஷ்யா), ஹிரிஸ்கோஸ் ரொசிகோ (பல்கேரியா), கெனத் அன்டர்ஸன் (சுவீடன்), ரொமாரியோ (பிரேஸில்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எலெக் சாலங்கோ, ஹரிஸ்கோஸ் ரொசிகோ ஆகிய இருவருக்கும் கோல்டன் ஷý வழங்கப்பட்டது. பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் ரஷ்ய வீரரான எலெக் சாலங்கோ ஐந்து கோல்கள் அடித்தார்.
கோல்டன் பந்துக்கு ரொமாரியோ (பிரேஸில்), ரொபேடோ பகியோ (இத்தாலி), ஹிஸ்ரோ ஸ்ரொகியோ (பல்கேரியா) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ரொமாரியோவுக்கு கோல்டன் பந்து வழங்கப்பட்டன. சிறந்த கோல் கீப்பருக்கான விருது பெல்ஜிய வீரரான மைக்கல் பிரீடொமெனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக நெதர்லாந்தைச் சேர்ந்த மார்க், தெரிவு செய்யப்பட்டார். முறை தவறாது விளையாடிய விருது பிரேஸில் நாட்டுக்கு வழங்கப்பட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்த அணியாக பிரேஸில் தெரிவானது. 52 போட்டிகளில் 141 கோல்கள் அடிக்கப்பட்டன. 3887538 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். சராசரியாக ஒரு போட்டியை 68,991 ரசிகர்கள் பார்வையிட்டனர். உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் இது சாதனையாகும்.
மத்தியஸ்தர்கள் கலர் உடை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விளையாடும் இரு அணிகளின் நிறத்தை ஒத்த ஆடை அணியக் கூடாது. வீரர்களின் பெயர் உடையில் பொறிக்கப்பட்டது.
அமெரிக்கா சுவிட்சர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் முதன் முதலில் உள்ளரங்கில் நடைபெற்றன.
அமெரிக்கா, கொலம்பியா ஆகியவற்றுக்கிடையிலான போட்டியின் போது பின்கள வீரரான கொலம்பிய வீரரான அன்ரீஸ் எஸ்போர் பந்தைத் தடுக்க முனைந்த போது அது கோலாகியது. இதனால் 21 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்று இண்டாவது சுற்றுக்குத் தெரிவானது. இப்போட்டி சமநிலையில் முடிந்திருந்தால் கொலம்பியா இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும். நாடு திரும்பிய அன்ரீஸ் எஸ்போரை உதைபந்தாட்ட ரசிகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்தார்.
தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் ஜேர்மனிய வீரரான ஸ்ரீபன் எப்பன்பெர்க் ரசிகர்களை எச்சரிக்கும் வகையில் விரல் காட்டியதால் அடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு அனுமதி வழங்காத பயிற்சியாளர் அவரை நாட்டுக்கு அனுப்பி விட்டார். கமரூன் வீரரான ரொஜர் மில்லர் ரஷ்யாவுக்கு எதிரான போட்டியில் 42ஆவது வயதில் கோல் அடித்து தனது சாதனையை முறியடித்தார்.
ஆர்ஜென்ரீன வீரர் மரடோனா போதை வஸ்து பாவித்தமையினால் ஆர்ஜென்ரீன பயிற்சியாளர் அவரை விளையாட அனுமதிக்கவில்லை.

ரமணி
மெட்ரோநியூஸ்

Tuesday, May 25, 2010

திரைக்குவராதசங்கதி 21


நாடகங்களில் நடித்துக் கொண்டேதிரைப்படத்தில் நடிப்பதற்கான முயற்சியை தொடர்ந்தார் விஜயகுமார். ஏ.பி.நாகராஜன் கந்தன் கருணை என்ற படத்தைத்தயாரிக்கப் போவதாக அறிவித்தா
ர். நடிகர் திலகம் வீரபாகு என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிக்க அழகான இளைஞனை ஏ.பி. நாகராஜன்தேடிக் கொண்டிருந்தார். இதனை அறிந்தவிஜயகுமார், ஈ.வி. சகாதேவனின்மூலம் ஏ.பி. நாகராஜனிடம் அறிமுகமானா
ர்.விஜயகுமாரை ஏற இறங்க பார்த்துவிட்டு மறுநாள் சாரதா ஸ்ரூடியோவில்மேக்அப் டெஸ்ட்டுக்கு வரும்படி கூறிஅனுப்பினார் ஏ.பி. நாகராஜன்.விஜயகுமாரின் உண்மையான பெயர் பஞ்சாட்சரம். சினிமாவுக்காக தனது பெயரை சிவகுமார் என்று மாற்றினார். சாரதா ஸ்ரூடி
யோவுக்கு விஜயகுமார் போனபோது அங்கே நடிகர் திலகத்தின் ஆஸ்தானமேக்அப் கலைஞ
ரான ரெங்கசாமிமேக்அப் போட்டுக் கொண்டிருந்தார்.அருகில் நடிகர் அசோகன் நின்று ஆலோ
சனை வழங்கினார். நடிகர் திலகத்தின்சிபார்சில் முருகனாக மேக்அப் போட்டுக்கொண்டிருக்கும் இளைஞனின்பெயர் சிவகுமார்.சிவகுமாருக்கு மேக்அப் முடிந்ததும்விஜயகுமாரை அழைத்தார்கள். விஜயகுமாரின் நெஞ்சில் அடர்த்தியான மயிர்இருந்தது. பிளேட் ஒன்றைக் கொடுத்துநெஞ்சில் உள்ள மயிரை வழிக்கும்படிகூறினார்கள். சரியாக மழிக்கத் தெரியாததால்ஆங்காங்கே பிளேட் தன் கூர்மையைக் காட்டியதால் நெஞ்சில் இருந்துஇரத்தம் வடிந்தது. அவசர அவசரமாகவிஜயகுமாருக்கு மேக்அப் போட்டார்கள். மேக்அப் முடிந்ததும் விஜயகுமாரை
ரப் பார்த்த ஈ.வி. சகாதேவன் அதிர்ச்சியடைந்தார். ஏன் இப்படி அரையும் குறையுமாக மேக்அப்
போட்டீர்கள் என்று ரெங்கசாமியிடம்கேட்டார். தனக்கு நேரம் போய்விட்டதுஎன்று ரெங்கசாமி கூறினார்ஸ்ரூடியோவில் இருந்து கொம்பனி காரில் ஏ.பி. நாகராஜனிடம் அழைத்துச்சென்றார்கள். அங்கு புகைப் படங்கள்எடுத்து விட்டு அவர்களை அனுப்பிவிட்டார்கள். விஜயகுமாரின் உறவினர்
ஒருவர் இரா. நெடுஞ்செழியனைச் சந்திப்பதற்காகச் சென்ற போது விஜயகுமாரையும் அழைத்துச் சென்றார். அங்கிருந்து கலைஞரைச் சந்திக்கச் சென்றார்கள். விஜயகுமாரை கலைஞரிடம் அறி
முகப்படுத்தி விட்டு பையன் படத்தில்நடிக்க முயற்சி செய்கிறான். ஏ.பி. நாகராஜனின் படத்தில் நடிப்பதற்கு மேக்அப்டெஸ்ட் முடிந்து விட்டது என்று விஜயகுமாரின் உறவினர் கூறினார்.
விஜயகுமாரின் நிஜப் பெயர்பஞ்சாட்சரம் சிவகுமார் என்ற பெயரில்சினிமா வாய்ப்புத் தேடினார். ஆகையால் தன்னுடைய பெயர் சிவகுமார் எனகலைஞரிடம் கூறினார். உடனே கலை
ஞர் தொலைபேசி மூலம் ஏ. பி. நாகராஜனுடன் தொடர்பு கொண்டு சிவகுமார்நம்ம பையன் என்று சிபார்சு செய்தார்.கந்தன் கருணை படத்தில் முருகனாகசிவகுமார் தெரிவு செய்யப்பட்டார்.
தனக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்காததையிட்டு விஜயகுமார் மனம் வருந்தவில்லை.சினிமா வாய்ப்பு கிடைக்காதுஎன்ற எண்ணத்தில் ஊருக்குத் திரும்பினார். விஜயகுமார் மகன் திருந்தி
விட்டான். சினிமா ஆசையத்துறந்து விட்டான் என்றுநினைத்த தகப்பன் விஜயகுமாருக்கு திருமணம் செய்துவைத்தார். திருமண பந்தத்தில்இணைந்த விஜயகுமாரின்சினிமா ஆசையை பிள்ளையோ பிள்ளை என்ற படம்மீண்டும் தூண்டியது.கலைஞரின் மகனான மு.க.முத்து, விஜயகுமாரின் நண்பர். தனது நண்பனின்படம் பரபரப்பாக ஓடியதால் படத்தில்நடிக்க
வேண்டும் என்ற ஆசை விஜயகுமாரின்மனதில் மீண்டும் துளிர்விட்டது.தகப்பனிடம் அனுமதி கேட்டார் விஜயகுமார். தகப்பன் முதலில் மறுத்தார். ஒருவருடம் முயற்சி செய்கிறேன். சான்ஸ்
கிடைக்கவில்லை என்றால் திரும்ப வந்துவிடுவேன். சினிமா ஆசையை மறந்துவிடுவேன் என்று கூறினார் விஜயகுமார்.செலவுக்கு 20 ஆயிரம் ரூபா பணமும்கொடுத்து மகனை வழி அனுப்பினார்
விஜயகுமாரின் தகப்பன். சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல் மீண்டு
ம் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்தார்விஜயகுமார்.நாடகம் நடிக்க சந்தர்ப்பம்கிடைத்ததே தவிர சினிமா வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியவில்லை.11 மாதங்கள் கடந்து விட்டன. இன்னும்ஒரு மாதத்தில் சினிமா கனவுக்குமுழுக்கு போட்டுவிட்டு ஊருக்குச்செல்ல வேண்டும் என்றுவிஜயகுமார் முடிவெடுத்தார்.
ரமணி

மித்திரன்வாரமலர்

07/10/07

உலகக்கிண்ணம்2010


இத்தாலி 1990
இத்தாலியில் நடைபெற்ற 14 ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்று மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. மேற்கு ஜேர்மனி மூன்றாவது தடவையாக தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடியது. 1982 ஆம் ஆண்டு இத்தாலியிடமும் 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடமும் தோல்வியடைந்தது. 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்த மேற்கு ஜேர்மனி 1990 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக 116 நாடுகள் தகுதிகாண் போட்டிகளில் விளையாடின. அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. டென்மார்க், பிரான்ஸ், போர்த்துக்கல் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை. கொஸ்ரரிகா, அயர்லாந்து குடியரசு, அமெரிக்கா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற 24 நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற நாடுகள் இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமருன், எகிப்து, ஆசியக் கண்டத்தில் இருந்து கொரியக் குடியரசு (தென் கொரியா), ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், செக்கஸ்லோவியா, இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, அயர்லாந்து குடியரசு, ரொமானியா, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன் (ரஷ்யா), ஸ்பெய்ன், சுவீடன், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிகா, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
குழு "ஏ' யிலிருந்து இத்தாலி, செக்கஸ்லோவாகிய ஆகிய நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செக்கஸ்லோவாகியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. குழு "பீ' யிலிருந்து கமரூன், ரொமானியா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. ரொமானியா, ஆர்ஜென்ரீனா ஆகியவற்றை வீழ்த்திய கமரூனை 4 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சோவியத் யூனியன் அதிர்ச்சியளித்தது. ரொமானியா ஆர்ஜென்ரீனா ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு "சீ' யில் இருந்து பிரேஸில், கொஸ்ரரிகா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு "டி' யில் இருந்து மேற்கு ஜேர்மனி, யூகோஸ்லாவியா, கொலம்பியா ஆகியனவும் குழு "ஈ' யிலிருந்து ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே ஆகியனவும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு "எஃ' பில் இங்கிலாந்து, அயர்லாந்து குடியரசு, நெதர்லாந்து, எகிப்து ஆகியன போட்டியிட்டன. எகிப்துடனான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஏனைய இரண்டு போட்டிகளையும் சமநிலையில் முடித்ததில் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது. அயர்லாந்து குடியரசு, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தலா மூன்று போட்டிகளில் விளையாடின. மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நிலையில் இரு நாடுகளும் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகின.
இரண்டாவது சுற்றில் விளையாடிய யூகோஸ்லாவியா பெனால்டி மூலம் 2 3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வி அடைந்தது. அயர்லாந்துக் குடியரசுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. செக்கஸ்லோவியாவுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது. கமரூன், இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 2 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மேலதிக நேரத்தில் இங்கிலாந்து ஒரு கோல் அடித்ததனால் 3 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இத்தாலி, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெனால்டி மூலம் 4 3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதியில் 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்டி மூலம் 4 3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இத்தாலி, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி மூன்றாம் இடத்தையும் தோல்வி அடைந்த இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன.
மேற்கு ஜேர்மன், ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கோல் அடிக்காது தோல்வி அடைந்த முதலாவது நாடு ஆர்ஜென்ரீனா.
ஜேர்மனி 15 கோல்களையும், இத்தாலி, செக்கஸ்லோவாகிய ஆகியன தலா 10 கோல்களையும் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த ஸ்கிலாஸ்கி (இத்தாலி), ஐந்து கோல்கள் அடித்த ஸ்குரி (செக்கஸ்லோவாகியா), நான்கு கோல்கள் அடித்த மில்லா கமரூன் ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஸ்கிலாஸ்கிக்கு கோல்ட்ஷீ வழங்கப்பட்டது.
ஸ்கிலாஸ்கி (இத்தாலி), மத்தியூஸ் (ஜேர்மனி), மரடோனா (ஆர்ஜென்ரீனா) ஆகியோர் கோல்டன் பந்துக்காக பரிந்துரைக்கப்பட்டனர். ஸ்கிலாஸ்கிக்கு கோல்டன் பந்து வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக ரொபேட் புரொஸ்ங்கி தெரிவானார். முறை தவறாத அணியாக இங்கிலாந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. 52 போட்டிகளில் 116 கோல்கள் அடிக்கப்பட்டன. 2516348 பேர் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்.
இத்தாலி, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆட்டம் இடை நிறுத்தப்பட்ட எட்டு நிமிடத்தைக் கணக்கில் சேர்க்காது மத்தியஸ்தர் ஆட்டத்தை நிறுத்தி விட்டார்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதன் முதலில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரர் ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த பெற்றோமன்ஸின், நைஜீரியா, அங்கோலா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற தகுதிகாண் போட்டியின் போது 23 வயதான நைஜீரிய வீரர் சாமுவேல் எக்காவாஜி மாரடைப்பால் மரணமானார்.
20 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் வயது கூடிய வீரர்கள் விளையாட அனுமதித்தபடியால் மெக்ஸிக்கோவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டாவது முறையாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய நாடு என்ற பெருமையைப் பெற்றது. அயர்லாந்துக் குடியரசு கடைசியாக விளையாடிய எட்டுப் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இதேவேளை இரண்டு கோல்கள் அடித்தது. அக்கோல்களும் பெனால்டி மூலம் அடிக்கப்பட்டன.
1974 ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனி உலகக் கிண்ணத்தை வென்ற போது அணித் தலைவராக இருந்த பிரான்ஸ் பெக்கன் பௌச்சர் 1990 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் பயிற்சியாளராவார்.
கமரூனைச் சேர்ந்த ரொஜர்மில்லா (38 வயது 20 நாட்கள்) கூடிய வயதில் கோல் அடித்த வீரராவார். இரண்டாவது சுற்றில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் இச்சாதனையைச் செய்தார். நான்கு வருடங்களின் பின்னர் இச்சாதனையை இவரே முறியடித்தார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

Monday, May 24, 2010

ஜெயலலிதாவுக்கு எதிராககளமிறங்கும் குஷ்பு


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அடிக்கடி சென்று ஓய்வு எடுக்கும் சிறுதாவூர் பங்களாவை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் கே. பி. சிவசுப்பிரமணியம் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சிறுதாவூர் சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதனால் இந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்த முடியவில்லை.
தமிழக அரசியலைப் பற்றி அறிந்தவர்களுக்கு பரிச்சயமான பெயர் சிறுதாவூர். ஜெயலலிதா சென்னையில் இருப்பதை விட சிறுதாவூரில் ஓய்வு எடுப்பது அதிக நாட்கள். தமிழக அரசியலின் பல முக்கிய முடிவுகளை சிறுதாவூரில் இருந்து கொண்டே ஜெயலலிதா எடுத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிறுதாவூர் என்ற கிராமம் உள்ளது. சிறுதாவூரில் உள்ள பிரமாண்ட பங்களாவில் ஜெயலலிதாவும், அவரது உடன் பிறவா சகோதரி சசிகலாவும் அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பார்கள். இந்த பங்களா அமைந்துள்ள இடம் அங்குள்ள ஆதி திராவிடர்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டது. அரசாங்கத்தால் ஆதி திராவிடருக்கு வழங்கப்பட்ட நிலம் திட்டமிடப்பட்டு அபகரிக்கப்பட்டதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது.
ஜெயலலிதாவுக்கு எதிராக மார்க்ஸிஸ்ட் கட்சி மிக மும்முரமாக இருந்த காலகட்டம். சிறுதாவூர் நிலம் அபகரிக்கப்பட்டதா என்ற உண்மையை அறிவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது. சிறுதாவூர் நிலம் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் வேறு பல காரணங்களினாலும் நீதிபதி கே. பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான அறிக்கை வெளிவருவது காலதாமதமானது.
சிறுதாவூர் கிராமத்தில் உள்ள நிலமற்ற 20 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 2.50 ஏக்கர் வீதம் 1967 ஆம் ஆண்டு வருவாய்துறை வழங்கியது.
"இந்த நிலத்தை 25 வருடங்களுக்கு விற்பனை செய்ய முடியாது. ஆனால் 1983 ஆம் ஆண்டு இந்த நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது. நிலத்தை விற்பனை செய்ததும் வாங்கியதும் சட்டப்படி விரோதமானது, எனவே அந்த நிலத்தை சட்டப்படி அரசு கையகப்படுத்த வேண்டும். அதனை ஏழை ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். பணத்துக்காக சட்டத்தை மீறியவர்கள் மீது எதுவித கருணையும் காட்டக் கூடாது' என்றும் கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிசன் பரிந்துரை செய்துள்ளது.
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட சிறுதாவூரில் பிரமாண்டமான பங்களா கட்டியதற்காக ஜெயலலிதா மீதும், சசிகலா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. சிறுதாவூரிலும் சட்டவிரோதமாக வாங்கப்பட்ட நிலம் ஜெயலலிதா சசிகலா பெயரில் இல்லை. பரணி ரிசோர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரிலேயே சிறுதாவூர் பங்களா கட்டப்பட்ட நிலம் உள்ளது. பரணி ரிசேர்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.
சிறுதாவூர் நிலம் சட்ட விரோதமாக வாங்கப்பட்டது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு உண்மை என்பது கே. பி. சிவசுப்பிரமணியம் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. தமது குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டாடும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை முழு மூச்சாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி, இப்போது ஜெயலலிதாவின் பக்கம் சாய்ந்துள்ளது. தமிழகத்தில் எந்தக் கூட்டணியிலும் இல்லாத மார்க்சிஸ்ட் கட்சி அடுத்து வரும் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கும் மனநிலையில் உள்ளது. ஆகையினால் இதனைப் பெரிதுபடுத்துவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை.
நீதிபதி கே. பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிசன் வெளியிட்ட அறிக்கை பற்றி ஜெயலலிதா எதுவும் தெரிவிக்கவில்லை. இதேவேளை, சிறுதாவூர் பங்களாவை அரசாங்கம் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்கு சகல முயற்சிகளையும் ஜெயலலிதா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பிரபல நடிகையான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார் என்ற செய்தி கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார தொலைக்காட்சியான ஜெயா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார தொலைக்காட்சியான கலைஞர் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் என்ற செய்தி அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரிடமும் மதிப்பைப் பெற்ற குஷ்புவின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இருப்பவர் யார் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் திடுதிப்பென திரõவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார் குஷ்பு. குஷ்புவின் அரசியல் பிரவேசம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தால் ஜெயலலிதõ அமைதியாக இருந்திருப்பார். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் குஷ்பு சேர்ந்தது ஜெயலலிதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜாக்பாட் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஜாக்பாட் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
குஷ்பு நடிகையே தவிர, அரசியல்வாதி அல்ல. சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற அனைவரும் வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற பெண்களில் ஜெயலலிதா மட்டும்தான் செல்வாக்காக உள்ளார். ஏனையோர் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டனர். இன்னும் சிலர் கட்சியின் பிரசாரக் கூட்டங்களில் மட்டும் கலந்து கொள்கின்றனர்.
அரசியல் பின்னணி எதுவும் இல்லாத குஷ்புவினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அபரிமிதமாக உயரப் போவதில்லை. நடிகையாக உள்ள குஷ்புவின் பின்னால் ஏராளமான ரசிகர் பட்டாளமும் இல்லை. நடிகை குஷ்புவுக்கான ரசிகர் மன்றம் எதுவும் கிடையாது. ஆனால், தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடம் செல்வாக்குள்ளவராகத் திகழ்கிறார் குஷ்பு.
தமிழகத்தின் பெண் வாக்காளர்களில் ஜெயலலிதாவுக்கென்று தனி இடம் உள்ளது. ஜெயலலிதாவின் பின்னால் உள்ள பெண் வாக்காளர்களைக் கவர்வதற்காக குஷ்பு அரசியலில் இறக்கப்பட்டுள்ளார். அரசியலில் இணைந்த கையுடன் அதிரடியாக ஜெயலலிதாவை எதிர்த்து போர்க் கொடி தூக்கியுள்ளார் குஷ்பு.
ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார். ஜெயலலிதாவை எதிர்க்கக் கூடிய துணிச்சலுள்ள பெண் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் குஷ்புவை தன் பக்கம் ஈர்த்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் செல்வாக்கும் ஜெயலலிதாவைத் தோற்கடிக்கலாம் என்று குஷ்பு கருதுகிறார்.
குஷ்புவின் அரசியல் பிரவேசம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கற்பு, திருமணத்துக்கு முன்னைய உறவு போன்றவற்றினால் ஏற்பட்ட சர்ச்சை நீதிமன்றம் வரை குஷ்புவைக் கொண்டு போய் நிறுத்தியது. சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சில விடயங்களை குஷ்பு பேசும் போது அது கட்சியைப் பாதிக்கும் என்று ஒரு சிலர் கருதுகிறார்கள்.
ஜெயலலிதாவை எதிர்க்கத் துணிவுள்ள ஒரு பெண்ணை திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலில் இறக்கியுள்ளது. தமிழக சட்ட சபையில் ஏற்படுத்தப்பட இருக்கும் மேல் சபையில் குஷ்புவுக்கு இடம் கிடைக்கும் என்ற தகவல் பரவலாக உலாவியது. அப்போது அதுபற்றி குஷ்பு எதுவும் தெரிவிக்கவில்லை. குஷ்பு அதற்கு மறுப்புத் தெரிவிக்காமையினால் குஷ்புவின் அரசியல் பிரவேசம் உண்மை என்பது உறுதியாகியது.
குஷ்புவின் அரசியல் பிரவேசம் துரித கதியில் அவசர அவசரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்து ரசிகர்களிடம் அபிமானத்தைப் பெற்ற குஷ்பு அரசியலிலிலும் அபிமானத்தைப் பெறும் எண்ணத்தில் களமிறங்கி உள்ளார்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 23/05/10

Sunday, May 23, 2010

உலகக்கிண்ணம்2010


மெக்ஸிகோவில் 1986
மெக்ஸிகோவில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற 13ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய ஆர்ஜென்ரீனா மூன்றாவது தடவை சம்பியனானது. 1970ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. 1970ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பிரேஸிலிடம் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பெற்ற இத்தாலி 1982ஆம் ஆண்டு சம்பியனானது.
1985ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் 25 ஆயிரம் பேர் மரணமானார்கள்.
பூகம்பம் காரணமாக போட்டி வேறிடத்துக்கு மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மெக்ஸிகோ உறுதியுடன் இருந்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்தது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 121 நாடுகள் மோதின. அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
நெதர்லாந்து தகுதி பெறவில்லை. கனடா, ஈராக் ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து அல்ஜீரியா, மொராக்கோ, ஆசியக் கண்டத்தில் இருந்து ஈராக், கொரியக் குடியரசு (தென் கொரியா), ஐரோப்பாக் கண்டத்திலிருந்து பெல்ஜியம், பல்கேரியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, வடஅயர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, சோவியத் ரஷ்யா, ஸ்பெயின், வட மத்திய அமெரிக்காவிலிருந்து கனடா, மெக்ஸிகோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், பரகுவே, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
24 நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. மூன்று நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன.
இரண்டாவது சுற்றில் கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற எட்டு நாடுகள் காலிறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
குழு "சி'யில் விளையாடிய சோவியத் ரஷ்யா 60 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியைத் தோற்கடித்து அதிகூடிய கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது. குழு "ஈ'யில் விளையாடிய டென்மார்க் 61 என்ற கோல் கணக்கில் உருகுவேயைத் தோற்கடித்தது.
குழு எஃப்இல் விளையாடிய மொராக்கோ, இங்கிலாந்து, போலந்து, போர்த்துக்கல் ஆகிய நான்கு நாடுகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. இங்கிலாந்து, போலந்து ஆகியன தலா ஒரு போட்டியைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தன. புள்ளிகளின் அடிப்படையில் தோல்வி அடையாத நாடாகிய மொராக்கோ இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.
இங்கிலாந்து, போலந்து ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்றதால் கோல்களின் அடிப்படையில் இங்கிலாந்து இரண்டாவது இடத்துடனும் போலந்து மூன்றாவது இடத்துடனும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
மெக்ஸிகோ, பெல்ஜியம் சோவியத் ரஷ்யா, பல்கேரியா பிரேஸில், போலந்து ஆர்ஜென்ரீனா, உருகுவே இத்தாலி, பிரான்ஸ் மொரோக்கோ, ஜேர்மன் இங்கிலாந்து, பரகுவே டென்மார்க், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெற்ற பிரேஸில், ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா, ஸ்பெயின், பிரான்ஸ், மெக்ஸிகோ, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகியன காலிறுதிக்குத் தெரிவாகின.
பிரான்ஸ், பிரேஸில் ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்டி மூலம் 34 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. ஜேர்மன்,மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையேயான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் 41 என்ற கோல் கணக்கில் ஜேர்மன் வெற்றி பெற்றது. ஸ்பெயின், பெல்ஜியம் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் 54 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. ஆர்ஜென்ரீனாவுக்கு அருகே உள்ள இங்கிலாந்துக்குச் சொந்தமான போக்லான்ட் தீவுகளை ஆர்ஜென்ரீனா ஆக்கிரமித்ததனால் இங்கிலாந்து ஆர்ஜென்ரீனாவிடமிருந்து போக்லண்ட் தீவை மீட்டது. யுத்தத்தில் வென்ற இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் ஆர்ஜென்ரீனா விளையாடியது.
முதல் பாதியில் இரு நாடும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 11 என்ற கோலுடன் பரபரப்பாக விளையாடிய போது மரடோனா தலையால் ஒரு கோல் அடித்து ஆர்ஜென்ரீனாவை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மறு நாள் பத்திரிகைகளில் பிரசுரமான புகைப்படத்தின் மூலம் மரடோனா கையால் கோல் அடித்தது தெரிய வந்தது. அது கடவுளின் கை என்று மரடோனா தெரிவித்தார்.
பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் மூன்றாவது இடத்தையும் தோல்வி அடைந்த பெல்ஜியம் நான்காவது இடத்தையும் பிடித்தன. இறுதிப் போட்டியில் ஜேர்மனியை எதிர்த்து விளையாடிய ஆர்ஜென்ரீனா 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்று 1978ஆம் ஆண்டு சம்பியனான ஆர்ஜென்ரீனா 1986ஆம் ஆண்டும் சம்பியனானது.
1982ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் தோல்வி அடைந்த ஜேர்மன் 1986ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வி அடைந்தது.
ஆர்ஜென்ரீனா 14 கோல்களையும், சோவியத் ரஷ்யா, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகியன தலா 12 கோல்களையும் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த கிறேலினெக்கர் (இங்கிலாந்து), தலா ஐந்து கோல்கள் அடித்த எமிலோ புராதியோனோ (ஸ்பெய்ன்), கரேகா (பிரேஸில்), மரடோனா (ஆர்ஜென்ரீனா) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. மரடோனாவுக்கு அடிடாஸ் கோல்டன் ஷூ விருதும் கிறேலினெக்கருக்கு கோல்டன் பந்து விருதும் வழங்கப்பட்டன. சிறந்த இளம் வீரராக ஸ்கிபோ (பெல்ஜியம்) தெரிவு செய்யப்பட்டார். முறை தவறாது ஒழுங்காக விளையாடிய நாடாக பிரேஸில் தெரிவு செய்யப்பட்டது.
52 போட்டிகளில் 132 கோல்கள் அடிக்கப்பட்டன. 2,393,331 ரசிகர் மைதானங்களில் போட்டிகளை நேரடியாகப் பார்வையிட்டனர்.
ஈரான், ஈராக் ஆகிய நாடுகளுக்கிடையே யுத்தம் நடைபெற்றதனால் ஈராக்கில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடுவதற்கு ஒரு நாடும் செல்லவில்லை. விளையாடாமல் வெற்றி பெற்ற ஈராக் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் நாடுகளைத் தெரிவு செய்வதற்காக 308 போட்டிகள் நடைபெற்றன. 801 கோல்கள் அடிக்கப்பட்டன. முதல் சுற்றில் விளையாடிய பல்கேரியாவும் உருகுவேயும் தலா மூன்று போட்டிகளில் விளையாடின.
ஒரு போட்டியிலும் வெற்றி பெறாத போதும் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாவது சுற்றுக்கு விளையாடத் தெரிவாகின.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியின் போது ஈராக் வீரரான சமீர் சஹீர் மொஹமட் நடுவர் மீது எச்சில் துப்பியதால் அவருக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டது.


ரமணி

மெட்ரோநியூஸ்

Saturday, May 22, 2010

உலகக்கிண்ணம்2010


ஸ்பெய்ன்1982
ஸ்பெயினில் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய இத்தாலி மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தைப் பெற்றது. ஆசியக் கண்டத்தில் இருந்தும் ஆபிரிக்க கண்டத்தில் இருந்தும் அதிகளவான நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதுவரை காலமும் 16 நாடுகளே உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றின. இந்த ஆண்டு முதல் 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றின.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் தகுதிகாண் போட்டிகளில் 109 நாடுகள் விளையாடின. அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை பெற்றன. 1978ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்தும் மெக்ஸிக்கோவும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட தகுதி பெறவில்லை.
அல்ஜீரியா, கெமரூன்,ஹொண்டூராஸ், குவைத், நியூஸிலாந்து ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து அல்ஜீரியா, கெமரூன், ஆசிய கண்டத்தில் இருந்து குவைத், ஓசியானிக் தீவுகளிலிருந்து நியூஸிலாந்து, ஐரோப்பா கண்டத்திலிருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, வட அயர்லாந்து, போலந்து, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், ஸ்பெயின், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து எல்சல்வடோர், ஹொண்டூராஸ், தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, பெரு ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் முதல் சுற்றில் விளையாடின. முதல் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இரண்டாவது சுற்றுக்குத் தெரிவான 12 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா மூன்று நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெறும் ஒரு நாடு அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெறும் வகையில் போட்டி அமைக்கப்பட்டது.
முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்றன. இரண்டாவது சுற்றுக்கு எந்த நாடு தெரிவாகும் என்பதை முன் கூட்டியே எதிர்வு கூற முடியாத நிலை ஏற்பட்டது. குழு 1இல் போலந்து, இத்தாலி, பெரு, கெமரூன் ஆகியன போட்டியிட்டன. பெருவுக்கு எதிரான போட்டியில் 51 என்ற கோல் கணக்கில் போலந்து வென்றது. ஏøனய ஐந்து போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தன. இத்தாலி, பெரு இத்தாலி, கெமரூன் ஆகியவற்றிற்கிடையேயான போட்டிகள் 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன. இத்தாலி, போலந்துபெரு, கமரூன் போலந்து, கமரூன் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 00 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன.
ஒரு வெற்றியைப் பெற்று இரண்டு போட்டிகளை சமநிலையில் முடித்த போலந்து நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. இத்தாலி, கமரூன் ஆகிய நாடுகள் விளையாடிய மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிந்ததால் தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. கூடிய கோல்கள் அடித்த இத்தாலி இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. ஜேர்மனி, ஒஸ்ரியா, அல்ஜீரியா, சிலி ஆகியன குழு 2இல் மோதின. மூன்று போட்டிகளிலும் சிலி தோல்வி அடைந்தது. ஜேர்மனி, ஒஸ்ரியா, அல்ஜீரியா ஆகியன தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியில் தோல்வி அடைந்தன. மூன்று நாடுகளும் தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் ஜேர்மனியும் ஒஸ்ரியாவும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா, ஹங்கேரி, எல்சல்வடோர் ஆகியன குழு 3இல் விளையாடின. தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. எல்சல்வடோருக்கெதிரான போட்டியில் 101 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி அதி கூடிய கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
குழு நான்கில் இருந்து மூன்று வெற்றிகளைப் பெற்ற இங்கிலாந்தும், ஒரு வெற்றியைப் பெற்ற பிரான்ஸும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு நான்கில் விளையாடிய வட அயர்லாந்து, ஸ்பெயின், யூகோஸ்லாவியா ஆகியன தலா ஒரு வெற்றியைப் பெற்றன. நான்கு புள்ளிகளைப் பெற்ற வட அயர்லாந்து இரண்டாவது சுற்றுக்கு எளிதாகத் தெரிவாகியது. ஸ்பெயின், யூகோஸ்லாவியா ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் ஸ்பெயின் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. குழு ஆறில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளைப் பெற்ற பிரேஸில் இரண்டாவது சுற்றை உறுதி செய்தது. சோவியத் யூனியன், ஸ்கொட்லாந்து ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் சோவியத் யூனியன் இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றது.
முதற் சுற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 12 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒரு குழுவில் தலா மூன்று நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெறும் நாடு அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. போலந்துக்கும் இத்தாலிக்கும் இடையே நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான போட்டி 33 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஆட்ட நேரம் முடிந்து மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்திலும் வெற்றி தோல்வி இன்றி போட்டி முடிவடைந்ததினால் பெனால்டி முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் முதலாவது பெனால்ட்டி முறையில் 54 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலன் திரைஸ் பெனால்டியை கோலாக்கிய முதலாவது வீரராவார்.
அரையிறுதியில் தோல்வியடைந்த போலந்திற்கும் பிரான்ஸுக்கும் இடையிலான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போலந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தோல்வியடைந்த பிரான்ஸ் நான்காவது இடத்தைப் பிடித்தது. ஜேர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.
பிரான்ஸ் 16 கோல்களும், பிரேசில் 15 கோல்களும், ஹங்கேரி, இத்தாலி, ஜேர்மனி ஆகியன தலா 12 கோல்களும் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த பேலோரோசி (இத்தாலி) 5 கோல்கள் அடித்த ரம்மரிஞ்சி (ஜேர்மனி), நான்கு கோல்களை அடித்த சிகோ(பிரேஸில்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரோசிக்கு கோல்டன் ஷூ வழங்கப்பட்டது. அடிடாஸ் கோல்டன் பந்துக்கான விருதுக்கு ரோசி (இத்தாலி), பல்கயோ (பிரேஸில்), ரம்பரிஞ்சி (பிரான்ஸ்) ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. கோல்டன் பந்தை ரோசி தட்டிச் சென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை ரொமோரோஸ் (பிரான்ஸ்) பெற்றார். முறைகேடின்றி நேர்மையாக விளையாடிய விருது பிரேஸிலுக்கு வழங்கப்பட்டது. 52 போட்டிகளில் 146 கோல்கள் அடிக்கப்பட்டன. 2,109,723 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்.
பிரான்ஸிற்கும் குவைத்திற்கும் இடையேயான போட்டியின் போது நடுவர் தவறான கோல் வழங்கியதால் குவைத் இளவரசர் மைதானத்துள் சென்று நடுவருடன் வாதிட்டார். தவறு செய்த நடுவர் இடைநிறுத்தப்பட்டார். குவைத் இளவரசருக்கு 14,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இத்தாலி அணித் தலைவர் டினோஸீஃப் சம்பியன் அணியை வழிநடத்திய வயது கூடியவர் என்ற பெருமையைப் பெற்றார். 40 வயதில் உலகக் கிண்ணத்தை தனது நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தார். வட அயர்லாந்து வீரரான நோர்மன் 17 வருடம் 42 நாட்களில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய வயது குறைந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரரான பிரைன் ரொட்ஸன் 27 வினாடிகளில் கோல் அடித்து ஆகக் குறைந்த நேரத்தில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

உலகக்கிண்ணம்2010


ஆர்ஜென்ரீனா 1978

ஆர்ஜென்ரீனாவில் 1978ஆம் ஆண்டு நடைபெற்ற 11ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய ஆர்ஜென்ரீனா சம்பியனானது. 16 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தென் அமெரிக்காவில் நடைபெற்றது. 1976ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவில் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால் அங்கு செல்வதற்கு சில நாடுகள் முதலில் மறுப்புத் தெரிவித்தன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தகுதி காண் போட்டியில் 107 நாடுகள் பங்குபற்றின. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இங்கிலாந்து, செக்÷காஸ்லோவாக்கியா,சோவியத் யூனியன் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தன. ஈரான், டுனீஷியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆபிரிக்காவிலிருந்து டுனீஷியா, ஆசியாவிலிருந்து ஈரான், ஐரோப்பாவிலிருந்து ஒஸ்ரியா, பிரான்ஸ், கிழக்கு ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து,போலந்து, ஸ்கொட்லாந்து, ஸ்பெய்ன்,சுவீடன், வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், பெரு ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் கூடுதல் புள்ளிகள் உடன் வெற்றி பெறும் தலா இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
குழு 2இல் விளையாடிய ஜேர்மனி மெக்ஸிக்கோவுக்கு எதிராக 60 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அதிக கோல்கள் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
முதல் சுற்றில் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற நெதர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி, ஒஸ்ரியா ஆகியன குழு "ஏ'யிலும், ஆர்ஜென்ரீனா, பிரேஸில், போலந்து, பெரு ஆகியன குழு "பீ'யிலும் மோதின. குழு "ஏ'யிலிருந்து நெதர்லாந்து, இத்தாலி ஆகியன அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஒஸ்ரியாவுக்கு எதிரான போட்டியில் 51 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. குழு "பீ'யிலிருந்து ஆர்ஜென்ரீனாவும், பிரேஸிலும் அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. பெருவுக்கு எதிரான போட்டியில் 60 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது.
பெரு நாட்டு கோல் கீப்பர் ஆர்ஜென்ரீனாவில் பிறந்தவர் என்பதனால் ஆர்ஜென்ரீனாவின் வெற்றியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. முதல் சுற்றில் குழு நான்கில் விளையாடிய பெருவுக்கு எதிராக இரண்டு கோல்கள் மட்டும் அடிக்கப்பட்டன. இரண்டாவது சுற்றில் பெருவுக்கு எதிராக 10 கோல்கள் அடிக்கப்பட்டன.
ஆர்ஜென்ரீனாவும், பிரேஸிலும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஐந்து புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தெரிவாகின. கோல்களின் அடிப்படையில் ஆர்ஜென்ரீனா முதலிடம் பெற்றது.
இரண்டாவது சுற்றில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிரான போட்டியில் எதிரணி கோல் அடிக்கவில்லை. பிரேஸிலுக்கு எதிரான போட்டிகளில் போலந்து ஒரே ஒரு கோல் அடித்தது. ஆர்ஜென்ரீனா, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டி கோல் அடிக்கப்படாமையால் சமநிலையில் முடிந்தது.
இரண்டாவது சுற்றில் இரண்டாம் இடம்பிடித்த பிரேஸில், இத்தாலி ஆகியவற்றிற்கிடையே நடைபெற்ற போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் மூன்றாம் இடத்தையும், இத்தாலி நான்காவது இடத்தையும் பிடித்தன. இப் போட்டியின் முன்பாதியில் 10 என்ற கோல் கணக்கில் இத்தாலி முன்னிலை பெற்றிருந்தது. ஆட்ட நேர பின்பாதியில் இரண்டு கோல்களை அடித்த பிரேஸில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
ஆர்ஜென்ரீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. ஆர்ஜென்ரீனா, நெதர்லாந்து ஆகியன தலா 15 கோல்கள் அடித்தன. பிரேஸில், ஜேர்மனி ஆகியன தலா 10 கோல்கள் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த மரியோ கெம்ப்ஸ் (ஆர்ஜென்ரீனா), தலா ஐந்து கோல்கள் அடித்த ரிபியோ கப்லாஸ் (நெதர்லாந்து) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆர்ஜென்ரீனா வீரர் கெம்ப்ஸ் கோல்டன் ஷூவைப் பெற்றõர்.
முறைதவறாது ஒழுங்காக விளையாடிய விருது ஆர்ஜென்ரீனாவுக்கு வழங்கப்பட்டது. கப்ரினோ சிறந்த இளம் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
ஆர்ஜென்ரீனா, பிரேஸில் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் பிரேஸில் அணி வீரர் கோனர் கிக் அடிக்கும் போது பந்து அந்தரத்தில் நிற்கையில் விசில் ஊதிய நடுவர் போட்டியை முடித்தார். 11 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது. ஹங்கேரி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சீருடை வெவ்வேறு நிறங்களில் ஒரே மாதிரியாக இருந்தன. ஆர்ஜென்ரீனா தொலைக்கõட்சி ஒளிபரப்பு கறுப்பு வெள்ளையாகையால் தொலைக்காட்சி ரசிகர்களால் இரண்டு நாட்டு வீரர்களையும் பிரித்தறிவது கஷ்டமாக இருந்தது.
இத்தாலிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வீரர் எமிபிராடில் ஒரு கோல் அடித்தார். இப்போட்டியில் இவர் சேம் சைட் கோல் ஒன்று அடித்தார். நெதர்லாந்து 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 38 போட்டிகளில் 102 கோல்கள் அடிக்கப்பட்டன. 15,50,424 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்.

ரமணி
மெட்ரோநியூஸ்

Friday, May 21, 2010

திரைக்குவராதசங்கதி 20


சினிமா நடிகனாக வேண்டும் என்றஆசையில் கிராமத்தில் இருந்து சென்னைக்குரயிலேறிய இளைஞர்களில்விஜயகுமாரும் ஒருவர். சினிமாவில்நடிக்க வேண்டும் என்று தகப்பனிடம்கூறி தகப்பனின் அனுமதியுடன் சென்னைக்குரயில் ஏறினார் விஜயகுமார்.விஜயகுமாரின் அண்ணன் ஒருவர்சென்னையில் பெட்டிக்கடை வைத்திருந்தார். திடீரென தன் முன் நின்ற தம்பியைக் கண்டதும் அதிர்ச்சியுடன் ஏன்வந்தாய் என்று கேட்டார்.சினிமாவில் நடிக்கும் ஆசையால்ஊரில் இருந்து ரயிலேறி வந்தேன்எனக் கூறினால்.தன்னை ஊருக்கு ரயிலேற்றி விடுவார்எனத்தெரிந்து கொண்ட விஜயகுமார்சென்னையைப் பார்க்க வந்தேன்என்று பொய் கூறினார்.அண்ணனின் கடையில் நின்ற சுப்பராவ் என்பவரிடம் பீடா தயாரிக்க கற்றுக்கொண்டார். விஜயகுமாரின் எண்ணத்
தைப் புரிந்துகொண்ட அண்ணன்புது உடுப்பு, சப்பாத்து எல்லாம் வாங்கிக் கொடுத்து அவரை ஊருக்குஅனுப்பி வைத்தார்.ஒரு வாரத்தில் ஊருக்குத் திரும்பி
வந்த விஜயகுமாரை ஆச்சரியத்துடன்பார்த்தார் தகப்பன். பையன் சென்னையைப் பற்றி அறிந்து கொண்டு சினிமாஆசையை துறந்துவிட்டான் என்று
தகப்பன் நினைத்தார். விஜயகுமார்மனம் தளராது சென்னைக்குச் சென்றுசினிமாவில் நடிக்கப் போகிறேன்என்று தகப்பனிடம் உறுதியாகக் கூறினா
ர். தன்னால் முடிந்தவரை தகப்பன்மறுத்துப் பார்த்தார். விஜயகுமார் நடிப்பதில் உறுதியாக இருந்தார். இறுதியில்மகனின் விருப்பத்துக்கு ஒப்புக்கொண்டு சென்னைக்குச் செல்லஅனுமதி கொடுத்தார்.சினிமா வாய்ப்பு கிடைக்கும் வரைசுப்பாராவுடன் தங்குவதாக விஜயகுமார் கூறினார். அவரின் செலவுக்கு
தகப்பன் மாதா மாதம் 300 ரூபாஅனுப்புவதாகக் கூறினார்.மைலாப்பூரில் சுப்பாராவின் அறையில் விஜயகுமார் தங்கினார். விஜயகுமாரின் விருப்பத்தை தகப்பன் தபால்மூலம் அறிவித்ததனால் விஜயகுமாரின் அண்ணன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
நாடகவேந்தன் ஆர்.எஸ். மனோகரின்நாடகத்தில் நடித்து வந்த சரோஜாஎன்னும் நடிகை அவரை விட்டுப்பிரிந்து தனியாக நாடகக் கம்பனிஒன்றை உருவாக்கினார். சுப்பாராவின்சிபாரிசில் "ராம பக்தி' எனும் நாடகத்தில்நடிப்பதற்கு விஜயகுமாருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.நாடகம் ஆரம்பமாகும்போது பிள்ளையாராகவும் நாடகம் முடியும்போதுமகா விஷ்ணுவாகவும் விஜயகுமார்நடித்தார். பிள்ளையாராக வந்தது நான்தான்என்று நண்பர்களிடம் சத்தியம்
செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.மகா விஷ்ணு வேடம் ஓரளவுக்கு அவரை அடையாளம் காட்டியது.கே.எஸ். கோபாலகிருஷ்ணன், மல்லியம் ராஜகோபால் போன்ற இயக்குநர்களின்ஆஸ்தான ஜோதிடரான கும்பகோணம் வையாபுரி என்பவரின் அறிமுகம் விஜயகுமாருக்குக் கிடைத்தது.அவர்தான் செல்லும் சினிமா கொம்பனிகளுக்கு விஜயகுமாரைக் கூட்டிச்செல்வார். அப்போதுதான் இயக்குநர்ராமண்ணாவை விஜயகுமார் சந்தித்தார்.விஜயகுமாரின் நடிப்புஆர்வம் பற்றி ஜோதிடர் ராமண்ணாவிடம் கூறினார்.நடிகர் திலகம் சிவாஜி பத்மினி நடித்த "ஸ்ரீ வள்ளி'என்ற படத்தை ராமண்ணாஇயக்கினார். அப்படத்தில்பாலமுருகனாக நடிக்க ஒருவர் தேவைப்பட்டதால் அப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தர்ப்பத்தை அவர் விஜயகுமாருக்குக் கொடுத்தார்.
விஜயகுமõரின் சினிமா ஆசை பாலமுருகன் வடிவில் நிறைவேறியது. அப்படத்தில் நடித்து விட்டு அடுத்த படத்துக்காக விஜயகுமார் காத்திருந்தார்.
விஜயகுமாருக்கு கதாநாயகனாகநடிக்க சந்தர்ப்பம் தருவதõக ராமண்ணாஉறுதிமொழி கொடுத்தார். அடுத்தபடத்துக்காக விஜயகுமார் ஐந்துவருடங்கள் காத்திருந்தார். அதற்குக்காரணம் அவருடைய இளம் பருவம்.18 வயதான விஜயகுமார் சிறுவனாகவும் இளைஞராகவும் இல்லாமல்இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தார்,
"சொர்க்கத்தில் திருமணம்' என்ற படத்தைராமண்ணா இயக்கினார். அப்படத்தில்லதா கதாநாயகியாக நடித்தார்.விஜயகுமாரை கதாநாயகனாக நடிக்க
வைக்க ராமண்ணா விரும்பினார்.ஆனால் சந்தர்ப்பம் அதற்கு இடம்கொடுக்கவில்லை. ரவிச்சந்திரன் கதாநாயகனாகநடித்தார்.விஜயகுமாரின் மீது நம்பிக்கை வைத்திருந்த ராமண்ணா லதாவை ஒரு தலையாக விரும்பும் பாத்திரத்தை உருவாக்கி விஜயகுமார் நடிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

ரமணி
மித்திரன்வாரமலர் 30/09/07


Thursday, May 20, 2010

உலகக்கிண்ணம்2010


ஜேர்மனி1974
ஜேர்மனியில் நடைபெற்ற 10ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய கிழக்கு ஜேர்மனி சம்பியனானது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 99 நாடுகள் தகுதி காண் போட்டியில் விளையாடின. கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதியைப் பெற்றன.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, ஸ்பெயின், சோவியத் ரஷ்யா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை. அவுஸ்திரேலியா ஹெயிட்டி ஸார் (கொங்கோ) ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதி பெற்றன. ஆபிரிக்கக் கண்டத்திலிருந்த ஸாத் (கொங்கோ) ஆசியாக் கண்டத்தில் இருந்த அவுஸ்திரேலியா, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பல்கேரியா, கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்த, போலந்து, ஸ்கொட்லான்ட், சுவீடன், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து ஹெயிட்டி, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, உரு
குவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் கூடிய புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தலா இரண்டு நாடுகள் காலிறுதியில் விளையாடின.
முதல் சுற்றில் குழு 2 இல் விளையாடிய யூகஸ்லாவியா, ஸாருக்கு எதிரான போட்டியில் 90 என்ற கோல் கணக்கி“ல வெற்றி பெற்று ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது. குழு 4 இல் விளையாடிய ஹெயிட்டிக்கு எதிராக 70 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போலந்து அதிக கோல் அடித்த இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
முதல் சுற்றில் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற நெதர்லாந்த, பிரேஸில், கிழக்கு ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா ஆகியன குழு ஏயிலும் கிழக்கு ஜேர்மனி, போலந்து, சுவீடன், யூகஸ்லாவியா ஆகியன குழு பீயிலும் போட்டியிட்டன. நெதர்லாந்து, பிரேஸில் கிழக்கு ஜேர்மனி, போலந்து ஆகியன அரையிறுதிக்குத் தெரிவாகின.
போலந்துக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போலந்து மூன்றாவது இடத்தையும் பிரேஸில் நான்காவது இடத்தையும் பிடித்தன. ஜேர்மனுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே நடைபெற்ற இறதிப் போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஜேர்மன் சம்பியனானது.
போலந்து 16 கோல்களும் நெதர்லாந்து 15 கோல்களும் கிழக்கு ஜேர்மனி 13 கோல்களும் யூகஸ்லாவியா 12 கோல்களும் அடித்தன. ஏழு கோல்கள் அடித்த லகோ (போலந்து) தலா ஐந்து கோல்கள் அடித்த நீஸ்கென்ஸ், (நெதர்லாந்து) லம்சார்மச் (போலந்து) ஆகியோரின் பெயர்கள் கோல்டன் ஷூக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
ஏழு கோல்கள் அடித்த போலந்து வீரர் லதோ சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக ஷýமுடோ (போலந்து) தேர்வு செய்யப்பட்டார். 38 போட்டிகளில் 97 கோல்கள் அடிக்கப்பட்டன. 1768152 பேர் போட்டிகளை மைதானங்களில் கண்டு ரசித்தனர்.
முதல் சுற்றில் விளையாடி அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற எட்டு நாடுகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் தலா நான்கு நாடுகள் விளையாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
சிலியில் இராணுவம் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியதால் சிலியில் தகுதி காண் போட்டியில் விளையாடுவதற்கு சோவியத் ரஷ்யா மறுத்தது. எதிரணி இல்லாமையினால் வீரர்கள் இல்லாத நிலையில் சிலி வெறும் நெற்றுக்கு கோல் அடித்து வெற்றி பெற்றது. திரினிடாட்டுக்கு எதிராக ஹெய்ட்டியில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் ஹெயிட்டிக்கு எதிராக அடிக்கப்பட்ட நான்கு கோல்களை தவறான கோல்கள் என அறிவித்த நடுவர் இடை நிறுத்தப்பட்டார்.
ஹெயிட்டி வீரரான ஏனஸ் ஜோன் ஜோசப் ஊக்கமருந்து பாவித்ததாக இனங்காணப்பட்டார். உதைபந்தாட்டப் போட்டியின் முதன் முதலில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர் இவர். இவரை சக வீரர்களும் அதிகாரிகளும் ஹோட்டலில் தாக்கினார்கள். சிலி நாட்டைச்சேர்ந்த கார்லோஸ் கஸ்லே முதன் முதலில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரராவார்

ரமணி

மெட்ரோநியூஸ்

உலகக்கிண்ணம்2010


மெக்சிக்கோ1970
மெக்ஸிக்கோவில் 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலியை வீழ்த்தி பிரேஸில் சம்பியனானது. ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலாக வட அமெரிக்க நாட்டில் நடைபெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 75 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து மொராக்கோ தகுதி பெற்றது. ஆர்ஜென்ரீனா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை.
ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து மொராக்கோ, ஐரோப்பாவிலிருந்து பெல்ஜியம், பல்கேரியா, செக்கஸ்லோவாகியா, இங்கிலாந்து, ஜேர்மன், இஸ்ரேல், இத்தாலி, ரொமானியா, சோவியத் யூனியன், சுவீடன், வட மத்திய அமெரிக்காவிலிருந்து எல்சல்வடோர் மெக்ஸிக்கோ தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில், பெரு, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் அதிக புள்ளிகளைப் பெற தலா இரண்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின.
பிரேஸில் பெரு மேற்கு ஜேர்மன், இங்கிலாந்து இத்தாலி, மெக்ஸிக்கோ உருகுவே, சோவியத் ரஷ்யா ஆகியன காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் வெற்றி பெற்ற பிரேஸில் இத்தாலி, உருகுவே, மேற்கு ஜேர்மனி ஆகியன அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. உருகுவேக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிரேஸில் ஜேர்மனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மேற்கு ஜேர்மன், உருகுவே ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் மூன்றாவது இடத்தையும் உருகுவே நான்காவது இடத்தையும் பிடித்தன.
இங்கிலாந்தில் நடைபெற்ற எட்டாவது உலகக் கிண்ணஉதைபந்தாட்ட போட்டியில் இறுதிவரை முன்னேறி தோல்வி அடைந்த மேற்கு ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 1958, 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனான பிரேஸில் சம்பியனான கனவுடன் இறுதிப் போட்டியில் இத்தாலியை எதிர்த்த விளையாடியது பரபரப்பான இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சம்பியனானது பிரேஸில். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இத்தாலி இரண்டாமிடத்தைப் பிடித்தது.
பிரேஸில் 19 கோள்களும் மேற்கு ஜேர்மனி 17 கோல்களும் இத்தாலி 10 கோல்களும் அடித்தன. மேற்கு ஜேர்மனியை சேர்ந்த கிரேட் முல்லர் 10 கோல்கள் அடித்தார். ஜய்சின்ஹோ (பிரேஸில்) ஏழு கோல்கள் அடித்தார்.
உருகுவேக்கு எதிராக ஆறு தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஜேர்மனி வீரர் கிரேட் முல்லருக்கு கேடன் ஷý வழங்கப்பட்டது. கிரேட் முல்லர் (மேற்கு ஜேர்மனி) ஜய்சின்ஹோ (பிரேஸில்) கியுபிலஸ் பெரு அணி வீரர்கள் கோல்டன் ஷýவுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
பெருநாட்டு வீரர் கியுபிலஸ் சிறந்த இளம் வீரராகத் தெரிவானார். 1958ஆம் ஆண்டு சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு பீலே ( பிரேஸில், முதன் முதலில் சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்றார். 1962ஆம் ஆண்டு அல்பேட் (ஹங்கேரி, 1966 ஆம் õண்டு பெக்கன் பலூர் ( மே. ஜேர்மனி) ஆகியோர் இளம் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் முதன் முதலாக கலரில் ஒளிபரப்பப்பட்டன. ஒரு வீரர் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரர் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு அணியிலிருந்து இரண்டு மாற்று வீரர்கள் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு அணியும் சம புள்ளி பெற்றால் கோல்களின் அடிப்படையில் சராசரி புள்ளி கணக்கிட்டு அணிகள் தரப்படுத்தப்பட்ன.
பிரேஸில் வீரர் பீலே கடைசியாக விளையாடிய உலகக் கிண்ணப போட்டி இங்கிலாந்து அணித் தலைவர் பொபி மோரே திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியின் முதல் நாள் இரவு இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் முன்னால் ஆடிப் பாடிய பிரேஸில் ரசிகர்கள் இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தைக் குழப்பினர். 32 போட்டிகளில் 95 கோல்கள் அடிக்கப்பட்டன. 1603975 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். சிவப்பு அட்டையும் மஞ்சள் அட்டையும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

ரமணி

மெட்ரோநியூஸ்

Wednesday, May 19, 2010

உலகக்கிண்ணம்2010


இங்கிலாந்து1966
இங்கிலாந்தில் 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மேற்கு ஜேர்மனியை தோற்கடித்து இங்கிலாந்து சம்பியனானது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கு 30 நாடுகள் போட்டியிட்டன. புள்ளிகளின் அடிப்படையில் 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
ஆசியாவில் இருந்து தென் கொரியா தகுதி பெற்றது. ஐரோப்பாவிலிருந்து பல்கேரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, போர்த்துக்கல், சோவியத் யூனியன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் போட்டியிட்டன. சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் முதல் சுற்றில் அதிக கோல் அடித்த நாடாகத் திகழ்ந்தது. இங்கிலாந்து ஆர்ஜென்ரீனா, உருகுவே, மெக்ஸிக்கோ மேற்கு ஜேர்மன், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டிகள் கோல் எதுவும் அடிக்கப்படாது சமநிலையில் முடிந்தன. தென் கொரியா, சிலி ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
முதல் சுற்றில் விளையாடிய நான்கு குழுக்களில் இருந்தும் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா மேற்கு ஜேர்மன், உருகுவே சோவியத் யூனியன், ஹங்கேரிபோர்த்துக்கல், தென் கொரியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜேர்மனி, இங்கிலாந்து, சோவியத் யூனியன், போர்த்துக்கல் ஆகியன அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 53 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் காலிறுதியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமை பெற்றது. ஆட்ட நேர முதல் பாதியில் 3 2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின்னர் மூன்று கோல்கள் அடித்த போர்த்துக்கல் வெற்றி பெற்றது.
மேற்கு ஜேர்மன், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. போர்த்துக்கலுக்கு எதிரான அரையிறுதியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதியில் தோல்வி அடைந்த போர்த்துக்கல், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் மூன்றாம் இடத்தையும் சோவியத் யூனியன் நான்காம் இடத்தையும் பிடித்தன.
இங்கிலாந்து, மேற்கு ஜேர்மன் ஆகியவற்றுக்கிடையேயான இறுதிப் போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து சம்பியனானது.
போர்த்துக்கல் 17 கோல்களும் ஜேர்மன் 15 கோல்களும் இங்கிலாந்து 11 கோல்களும் சோவியத் யூனியன் 10 கோல்களும் அடித்தன. ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு எதிராக தலா இரண்டு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. சோவியத் யூனியன் வீரருக்கு எதிராக ஒரு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இயுசெபியோ (போர்த்துக்கல்) ஒன்பது கோல்களும், ஹெல்மட்ஹல்லர் (மேற்கு ஜேர்மன்) ஆறு கோல்களும், போர்குயன் (சோவியத் யூனியன்) ஹர்ட்ஸ் (இங்கிலாந்து), பெனி (ஹங்கேரி) ஆகியோர் தலா நான்கு கோல்களும் அடித்தனர். சில்வா (ஹங்கேரி), ரட்டின் (பல்கேரியா), ரொச்சி (ஹங்கேரி), அல்பொசி (ஆர்ஜென்ரீனா) ஆகியோருக்கு எதிராக சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இயுசெபியோ (போர்த்துக்கல்), ஹெல்மட்ஹலர் (மே. ஜேர்மனி), பெக்கன் பகுர் (மே. ஜேர்மன்), பெனி (ஹங்கேரி), ஹரிட்ஸ் (இங்கிலாந்து), போர்குஜன் (சோவியத் யூனியன்) ஆகியோரின் பெயர்கள் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஒன்பது கோல்கள் அடித்த இயுசெபியோ சிறந்த வீரராகத் தெரிவ செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது.32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. 16,35,000 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்

ரமணி

மெட்ரோநியூஸ்

உலகக்கிண்ணம்2010


சிலி1962
சிலியில் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியாவை வீழ்த்திய பிரேஸில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
1960ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மரணமானார்கள். உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடைபெறும் மைதானம் பாதிக்கப்பட்டது. சிலி நாட்டு ஜனாதிபதியின் முயற்சியினால் விரைவாக புதிய மைதானம் கட்டப்பட்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 56 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. கடந்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய சுவீடன் தகுதி பெறவில்லை. கொலம்பியா உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
ஐரோப்பாவிலிருந்து பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, சோவியத் ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யூகோஸ்லாவியா வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, கொலம்பியா, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. 16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. நான்கு குழுக்களிலும் இருந்து அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின. 21 வயதான பீலே மெக்ஸிக்கோவுக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து பிரேஸிலின் வெற்றிக் கணக்கை தொடக்கி வைத்தõர்.
முதல் சுற்றில் பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி, ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமை பெற்றது. கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற யூகோஸ்லாவியா அதிக கோல் அடித்த இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
சோவியத் யூனியன், கொலம்பியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 44 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மேற்கு ஜேர்மன் இத்தாலி, பிரேஸில் செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்துபல்கேரியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் கோல் எதுவும் அடிக்காமையினால் சமநிலையில் முடிவடைந்தன.
முதல் சுற்றில் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற பிரேசில், இங்கிலாந்து சிலி, சோவியத் யூனியன் யூகோஸ்லாவியா, ஜேர்மன் செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகியன காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் வெற்றி பெற்ற செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா, பிரேஸில், சிலி ஆகியன வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
செக்கோஸ்லோவாக்கியாவுடனான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற யூகோஸ்லாவியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. சிலியுடனான போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் இறுதிப் போட்டிக்கு விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதியில் தோல்வியடைந்த சிலி, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சிலி மூன்றாவது இடத்தையும் யூகோஸ்லாவியா நான்காவது இடத்தையும் பிடித்தன.
பிரேஸில், செக்கோஸ்லோவாக்கியா ஆகியவற்றுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தது.
பிரேஸில் 14 கோல்களும் யூகோஸ்லாவியா, சிலி ஆகியன தலா 10 கோல்களும் சோவியத்யூனியன் ஒன்பது கோல்களும் ஹங்கேரி எட்டு கோல்களும் அடித்தன.
வாவா (பிரேஸில்), லியோனல் சன் செஸ் (சிலி), ஜாகோவிச் (யூகோஸ்லாவியா), அல்பேட் (ஹங்கேரி), இவானோவ் (சோவியத் யூனியன்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தலா நான்கு கோல்கள் அடித்தனர். ஹங்கேரியைச் சேர்ந்த அல்பேட் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது.
பெரினி (இத்தாலி), டேவிட் (இத்தாலி), கப்ரெரா (உருகுவே), லண்டா (சிலி), சரிஞ்சா (பிரேசில்) ஆகியோருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. 89,074 பேர் போட்டிகளை மைதானங்களில் பார்வையிட்டனர்

ரமணி

மெட்ரோநியூஸ்

Tuesday, May 18, 2010

சட்டசபைத் தேர்தலுக்குதயாராகிறது தமிழகம்


செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்கத் துரித கதியில் செயற்படும் தமிழக முதல்வர் கருணாநிதி உரிய காலத்துக்கு முன்னரே தமிழக சட்டமன்றத் தேர்தலை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் உள்ளது. அறுதிப் பெரும்பான்மை இல்லாது காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்யும் முதல்வர் கருணாநிதி கூட்டணிக் கட்சியின் தயவு இன்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமைச்சர் மு. க. அழகிரியின் தயவு கண்டிப்பாகத் தேவை என்பதை முதல்வர் கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளார். ஆகையினால் மு. க. அழகிரியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் அழகிரியின் கை ஓங்கும் வகையில் அவருக்கு பொறுப்பான பதவி ஒன்று கொடுக்கப்படலாம்.
அமைச்சர் அந்தஸ்துடன் அரசியல் படிக்க டில்லி சென்ற அழகிரிக்கு டில்லி அரசியல் கசந்துவிட்டது. மீண்டும் தமிழகத்தில் கால் பதிக்க விரும்புகிறார். அழகிரியின் தமிழகப் பார்வை துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் ஸ்டாலினும் அழகிரியும் மோதினால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்பதனால் இருவரும் இணைந்து செயற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலையில் உள்ள இவ் வேளையில் தமிழக சட்ட சபைத் தேர்தலை நடத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து துணை முதல்வர் ஸ்டாலினை முதல்வராக்கி விட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் இன்றைய அரசியல் நிலைமை அவர் ஓய்வெடுப்பதைத் தள்ளிப் போட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான சூழ்நிலை இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தான் இணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொண்ட வைகோ, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருப்பதையே விரும்புகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கட்சியும் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெகு தூரம் தள்ளி நின்றனர். தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல்களின் போது ஜெயலலிதா வேண்டுகோள் விடுக்காமலே தமது ஆதரவைத் தெரிவித்தன இடதுசாரிகள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் இருக்கும் இடதுசாரிகள் தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவை ஆதரிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் இடதுசாரிகள், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் சூழ்நிலை ஏதுமில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி மிகவும் இறுக்கமாக இருப்பதனால் இடதுசாரிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கத்துக்கு சாய்ந்துள்ளன.
எந்தப் பக்கமும் சாராமல் அந்தரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை மிகப் பரிதாபகமாக உள்ளது. தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் திகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் தேடுவாரின்றி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தம்மால் சாதிக்க முடியும் என்பதை பென்னாகரம் இடைத் தேர்தலில் நிரூபித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
வன்னியர் சமூகம் அதிகளவில் வாழும் தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதை பென்னாகரம் இடைத் தேர்தல் வெளிக்காட்டி உள்ளது. ஆகையினால் பாட்டாளி மக்கள் கட்சியை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவதை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை. என்றாலும் முதல்வர் கருணாநிதி கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருந்த போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார் டாக்டர் ராமதாஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமானதும் தமிழக அரசு மீதான டாக்டர் ராமதாஸின் விமர்சனம் மிக மோசமாக இருந்தது. காடு வெட்டி குரு போன்றவர்களின் பேச்சு எல்லை மீறியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியதும் டாக்டர் ராமதாஸும் அவரது பரிவாரங்களும் அமைதியாகி விட்டனர். சட்டமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் எண்ணத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி சாதகமான சமிக்ஞை வரும் வரை அமைதியாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிக்க முடியாத வகையில் நெருக்கமாக உள் ளது. காங்கிரஸ் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிடிக்கா ஒரு சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப் போது திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அறிக்கை விடுவார்கள். அல்லது வீராவேசமாகப் பேசுவார்கள். இதையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் எப்படித்தான் எம்பிக் குதித்தாலும் இறுதியில் சோனியா காந்தியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று கூறி விட்டு அமைதியாகி விடுவார்கள்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. அதற்கு ஏதுவாகவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்க உள்ளார். தமக்கு அதிக தொகுதிகளைத் தருபவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம் என்று அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி கூறியுள்ளார். சிதம்பரம், ஜி. கே. வாசன், தங்கபாலு, இளங்கோவன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி பற்றி எதுவும் பேசாத நிலையில் கூட்டணி அமைப்பது பற்றி கார்த்தி பேசியது திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தியுடன் கார்த்தி மிக நெருக்கமானவர் என்பதனால் ராகுல் காந்தியின் ஆசீர்வாதத்துடன் தான் கார்த்தி பேசி இருப்பார் என்று கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் செயற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரிக்கையுடன் அவதானித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பும் ராகுல் காந்தி திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை முறிக்க வேண்டும் என்று விரும்புகிறார். தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் அதரவு தேவை என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நன்கு புரிந்துள்ளனர். ஆகையினால் ராகுல் காந்தியின் எண்ணம் நிறைவேறுவதற்கான சூழ்நிலை இல்லை என்பது வெளிப்படை.
தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்ய சபா உறுப்பினர்கள் பதவிக் காலம் ஜூன் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அன்பு மணியின் பதவிக் காலம் ஜூன் 11 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அன்பு மணியின் எதிர்காலம் முதல்வர் கருணாநிதியின் கையில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் அன்புமணியை ராஜ்யசபா உறுப்பினராக்கினால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு விடும்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 16/05/10

Sunday, May 16, 2010

தூது விடுகிறது பா.ம.க.மௌனம் காக்கிறது தி.மு.க.


செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தமிழக முதல்வர் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த வாரம் டில்லிக்கு விஜயம் செய்த தமிழக முதல்வர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்திக்கும் அவர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.
செம்மொழி மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை அழைப்பதற்காகவே கருணாநிதி டில்லிக்கு சென்றதாக அறிவிக்கப்பட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான சில பிரச்சினைகளைத் தீர்ப்பதே தமிழக முதல்வரின் டில்லிப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
அமைச்சர் ஆர். ராசாவுக்கு எதிரான ஊழல் புகார் பற்றிய பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியான செய்திகளால் அமைச்சர் ராசா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது. அமைச்சர் ராசாவுக்கு எதிராக தமிழகத்திலும் எதிர்ப்புக் குரல் வலுவடைந்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சில அமைச்சர் ராசாவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. அமைச்சர் ராசாவுக்கு எதிரான ஊழல் புகார் பற்றிய ஆவணங்களை அவரை எதிர்க்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை, சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அமைச்சர் ராசாவுக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளன. அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றினால் அல்லது ராசா இராஜினாமாச் செய்தால் ஊழலுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து விடும் என்ற பயமும் அரசிடம் உள்ளது.
அமைச்சர் ராசா ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இந்திய மத்திய அரசு உள்ளது. ராசாவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் எதிர்க் கட்சிகளும் சில ஊடகங்களும் குறியாக உள்ளன. அமைச்சர் ராசாவைக் கைவிட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை.
அமைச்சர் அழகிரிக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன. அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய்கள் என்று அடித்துக் கூறுகிறார் அமைச்சர் அழகிரி. தமிழக முதல்வர் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்படாது அடம் பிடிக்கும் அழகிரி மத்திய அரசின் சட்ட திட்டங்களையும் துச்சமாக மதிக்கிறார். அமைச்சர் அழகிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நேரில் ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காண்பதும் முதல்வர் கருணாநிதியின் டில்லி விஜயத்தின் ஒரு அங்கமாகும்.
தமிழக அரசியலில் தான் அழகிரிக்கு கண் வைத்துள்ளார், மத்திய அமைச்சராக இருப்பதில் அவருக்கு அதிக விருப்பம் இல்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார் அமைச்சர் அழகிரி.
ஆனால், அமைச்சர் அழகிரியின் மறுப்பு அனைத்தும் அறிக்கையாக வெளியாகிறதே தவிர, அவரின் நடவடிக்கைகள் எதுவும் சாதகமானதாக இல்லை. விருப்பம் இல்லாத இடத்தில் அழகிரியை விட்டு வைக்க முடியாத இக் கட்டான நிலையில் உள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழக முதல்வர் கருணாநிதியின் டில்லி விஜயத்தின் போது அமைச்சர் ஆர். ராசா, அமைச்சர் மு. க. அழகிரி ஆகியோரின் பிரச்சினைகள் பற்றி முதல்வர் கருணாநிதி விரிவாக ஆராய்ந்துள்ளார். அமைச்சர் ராசாவுக்கு எந்தப் பிரச்சினையும் இப்போதைக்கு ஏற்படும் சாத்தியம் இல்லை. மத்திய அரசில் தொடர்ந்தும் இருப்பதற்கு அழகிரி கஷ்டப்படவில்லை என்றால் அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றி விடுவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. அமைச்சர் அழகிரியை தமிழகத்தில் அரசியல் செய்யவே விரும்புகிறார். தமிழக அரசியலில் அழகிரி காலடி எடுத்து வைத்தால் துணை முதல்வர் ஸ்டாலினில் செல்வாக்கில் பங்கம் ஏற்படலாம். கட்சியையும் தமிழக அரசையும் தன் கைக்குள் வைத்திருக்கவே அழகிரி விரும்புவார்.
தமிழக அரசியலில் துணை முதல்வர் ஸ்டாலினின் பங்கு அளப்பரியது. ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டதல்ல. இந்திய அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வாரிசுகளை திட்டமிட்டு அரசியலில் நுழைத்தார்கள். தமது செல்வாக்கும் பலத்தினால் அரசியல் வாரிசுகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினார்கள்.
ஆனால், ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் எதிர்க்கட்சிகளினால் உருவாக்கப்பட்டது. மாணவப் பருவத்தில் அரசியலில் ஆர்வமுடன் செயற்பட்ட ஸ்டாலின் போராட்டங்களில் பங்குபற்றி சிறை சென்றால் வாரிசு அரசியல் என்ற சொல்லினுள் துணை முதல்வர் ஸ்டாலினின் அரசியல் வாழ்வை புகுத்தி விட முடியாது.
திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவையில் ஸ்டாலினுக்குப் பின்னர் அரசியல் வாழ்வை ஆரம்பித்த பலர் அமைச்சர்களானார்கள். தனது மகன் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு ஸ்டாலினுக்கு அமைச்சுப் பதவி எதனையும் முதல்வர் கருணாநிதி கொடுக்கவில்லை. அரசியலில் சகலவற்றையும் கற்று உணர்ந்த பின்பே தமிழக அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு இடம் கொடுத்தார் முதல்வர் கருணாநிதி. அழகிரியின் விஜயத்தில் எதிர்மாறாகச் செயற்பட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அழகிரி போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியானபோதே அவர் அமைச்சராகி விடுவார் என்று அரசியல் வல்லுனர்கள் ஆரூடம் கூறினார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற அழகிரி அமைச்சரானார். மூத்த உறுப்பினர்கள் இருக்கையில் அழகிரியை அமைச்சராக்கி அழகிரியின் ஆசையை நிறைவேற்றினார் தமிழக முதல்வர் கருணாநிதி.
முதல்வரின் ஆசையை முழுமையாக நிறைவேற்றாத அமைச்சர் அழகிரி, தனது ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார். மத்திய அமைச்சரவை எதிர்பார்த்தது போன்று இலகுவானதல்ல என்பதை காலம் கடந்த பின்னர் அமைச்சர் அழகிரி உணர்ந்து கொண்டார். தமிழக அரசியலில் அழகிரி தீவிரம் காட்டத் தொடங்கினார். அவருக்கு என்ன பதவி வழங்குவதென்று தடுமாறுகிறார் முதல்வர் கருணாநிதி. துறை முதல்வரான ஸ்டாலின் முதல்வராவது உறுதி. ஆகையினால் முதல்வர் பதவி அழகிரிக்கு கிடைக்க சந்தர்ப்பம் இல்லை. முதல்வர் கட்சித் தலைவராக இருப்பார் ஸ்டாலினை முதல்வராக்கி அழகிரியை கட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது.
கட்சித் தலைவர் பதவியை அழகிரிக்கு விட்டுக் கொடுக்க ஸ்டõலின் தயாராக இல்லை. நெருக்கடி எதுவும் இல்லாத கட்சித் தலைவராக இருக்கவே ஸ்டாலின் விரும்புகிறார். ஸ்டாலினையும் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவே அழகிரி விரும்புகிறார். கருணாநிதிக்குப் பின்னால் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று கூறியதன் மூலம் ஸ்டாலினுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார் அழகிரி. அழகிரியின் குணத்தைப் பற்றி நன்கு அறிந்துள்ள முதல்வர் கருணாநிதி; அழகிரியினால் ஸ்டாலினுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாக்கவே முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். ஆகையால் அழகிரியின் விருப்பம் இப்போதைக்கு நிறைவேறும் சாத்தியம் இல்லை.
இதேவேளை தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய பாட்டாளி மக்கள் கட்சி சீண்டு வாரின்றி தவிக்கிறது. பென்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தையும் விட அதிகளவு வாக்குகளைப் பெற்றதால் உற்சாகத்தில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் சாதகமான சமிக்ஞை எதுவும் காட்டாது மௌனம் காத்து வருகிறது.
ஜூன் மாதத்துடன் அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைகிறது. தனது மகன் அன்புமணி தொடர்ந்து எம்.பியாக இருப்பதையே டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால்தான் அன்பு மணி நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்பதை டாக்டர் ராமதாஸ் மிக நன்றாக உணர்ந்து கொண்டுள்ளார். மகனின் எதிர்காலத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியமைக்க தயாராக உள்ளார் டாக்டர் ராமதாஸ்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகச் செயற்படுகிறது. டாக்டர் அன்புமணி மீது முதல்வர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் மதிப்பு வைத்துள்ளார். மத்திய அரசும் டாக்டர் அன்புமணி மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசியுடன் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு டாக்டர் அன்புமணி விரும்புகிறார். திராவிட முன்÷னற்றக் கழகத்தவர்களில் சிலர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ப்பதற்கு விரும்பவில்லை.
பென்னாகரம் இடைத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் மோதியதால், இரண்டு கட்சித் தொண்டர்களும் எதிரும் புதிருமாக உள்ளனர். அன்புமணியின் பதவி தொடர்வதற்காக தனது கட்சித் தொண்டர்களும் அடங்கிப் போக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராவது முதல்வர் கருணாநிதியின் கையிலேயே உள்ளது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 09/05/10

Saturday, May 15, 2010

அழகிரியினால் நெருக்கடியைஎதிர்நோக்கும் கருணாநிதி


தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய ரயில், பஸ் மறியல் போராட்டம் பிசுபிசுத்து விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகம் முழுவதும் பஸ், ரயில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. விலைவாசி உயர்வினால் தமிழக மக்கள் பலத்த இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் விடுத்த போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களில் மனதைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. விலைவாசி உயர்வு தமிழக மக்கள் மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விலைவாசி உயர்வினால் மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. விலைவாசி மக்களை பாடாய்ப்படுத்தும் அதேவேளை மின் தடை தமிழகத்தில் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின் தடை எதிர்காலத்தில் இருக்காது என்று அமைச்சர் பலமுறை உறுதி கூறியும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. விலை ஏற்றம், மின் வெட்டு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. பஸ், ரயில் மறியல் போராட்டம் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தது போன்று பெரிய அளவில் நடைபெறவில்லை.
தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் பெயரளவில் அறிவித்தமை தவிர முழு அளவில் போராட்டம் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை. தமிழக அரசுக்கு எதிராக நடைபெற அறிவிக்கப்பட்ட பஸ், ரயில் மறியல் போராட்டத்தின் மூலம் மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டு அதன் காரணமாக மக்கள் தம் மீது குற்றம் சுமத்தி விடுவார்களோ என்ற பயமும் எதிர்க்கட்சிகளிடம் இருந்தது.
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதை சரிவர ஆராயாமல் திட்டமிடப்பட்ட மறியல் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. முறையாகத் திட்டமிடாமலும் மக்களின் ஆதரவு இல்லாமலும் நடத்தப்பட்ட மறியல் போராட்டம் பிசுபிசுத்ததினால் தமிழக அரசு மகிழ்ச்சியில் உள்ளது. இதேவேளை அம்பேத்கர் சிலை திறப்பு விவகாரத்தினால் தமிழக அரசு கடும் சீற்றத்துடன் உள்ளது.
சென்னை நீதிமன்றத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ளக் கூடாது. அதையும் மீறி கலந்து கொண்டால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று சட்டத்தரணிகள் எச்சரிக்கை விடுத்தனர். நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் மறியல் செய்த போது அதனைக் கலைப்பதற்கு பொலிஸார் முயற்சி செய்தனர். பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி நடத்தப்பட்ட போராட்டத்தை பொலிஸார் கலைத்த போது பொலிஸாருக்கும், சட்டத்தரணிகளுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. சட்டத்தரணிகள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப் போவதாக சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.
சட்டத்தரணிகளின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டார்கள். கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்ட போதும் முதல்வர் கருணாநிதி தனது பேச்சை நிறுத்தாது தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்கு முதல்வர் தடையாக இருந்தால் நீதிமன்றத்தின் உதவியுடனேயே அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று நடுநிலையான சட்டத்தரணிகள் கருத்துக் கூறி உள்ளனர். அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ததை நடு நிலையாளர்கள் விரும்பவில்லை.
இதேவேளை, மத்திய அமைச்சர் அழகிரியின் விவகாரம் முதல்வருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் கேள்வி நேரங்களில் அதற்குரிய பதிலை அமைச்சர் கொடுக்க வேண்டியது அமைச்சரின் முக்கிய பொறுப்பு. அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அமைச்சர் அழகிரி பற்றி பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அழகிரியின் நடவடிக்கையினால் மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சரளமாக உரையாட முடியாமையினால் வாய்மூல வினாக்களுக்கு அமைச்சர் அழகிரி நாடாளுமன்றத்தில் பதிலளிப்பதைத் தவிர்த்து வருகிறார். அமைச்சர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதிலளிக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியாத அழகிரி தமிழில் பதிலளிக்க அனுமதி கோரினார். அழகிரிக்காக நாடாளுமன்ற வழமையை மாற்ற முடியாது அஎன்று பதிலளிக்கப்பட்டதனால் துணை அமைச்சர் வாய்மூலக் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். ஆனால் தாம் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சரிடம் இருந்தே பதில் வரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அமைச்சர் அழகிரியின் பலவீனத்தைத் தெரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றன.
நாடாளுமன்றத்தில் அழகிரியை பற்றி சூடான விவாதம் நடந்து கொண்டிருக்கையில் அவர் வெளிநாட்டில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் அழகிரியின் பிரச்சினையைப் பற்றி பேசி முடிவு காண்பதற்காக சபாநாயகர் பலமுறை அழைப்பு விடுத்தும் சபாநாயகரை அமைச்சர் அழகிரி சந்திக்கவில்லை.
மத்திய அரசில் அழகிரிக்கு விருப்பம் இல்லை. தமிழகத்தில் தனது பிடியை பலமாக்க அழகிரி விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது அடிக்கடி சுமத்தப்படுகிறது. அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்று அழகிரி கூறி வருகிறார். ஆனால் அவரது நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்கும் போது தமிழகத்தில் தனது கை ஓங்க வேண்டும் என்று விரும்புவது புலனாகின்றது.
கருணாநிதியைத் தவிர வேறு எவரையும் தலைவராக ஏற்க மாட்டேன். தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவேன் என்பன போன்ற அதிரடிப் பேட்டிகளினால் தமிழகத்தில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்கு அழகிரி விரும்புகின்றார் என்பது புலனாகின்றது. தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவேன். அவர் விரும்பினால் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவேன் என்றெல்லாம் பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர் அழகிரி, துணை முதலமைச்சர் ஸ்டாலினைத் தலைவராக ஏற்கமாட்டார் என்பது வெளிப்படையானது.
கட்சியையும் தமிழகத்தையும் தனது அரசியல்வாரிசான ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி. கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் முதல்வர் கருணாநிதியின் விருப்பத்துக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர். ஸ்டாலின் தலைவராவதையும் முதல்வராவதையும் விரும்பாதவர்களும் முதல்வரின் விருப்பத்துக்கு தலையாட்டினர். ஸ்டாலினை விரும்பாதவர்களுக்கு அழகிரியின் அதிரடி அறிக்கைகள் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.
அழகிரி அமைச்சரான போது அவருக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் சரளமாகத் தெரியாது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது பல சவால்களை முறியடித்த அழகிரி ஆங்கிலமும் ஹிந்தியும் கற்று சவாலை முறியடிப்பார் என்று கூறப்பட்டது. ஆங்கிலமும் ஹிந்தியும் கற்பது பெரிய விடயமல்ல. அவற்றைக் கற்றுத் தேர்ந்து விட்டால் தமிழக அரசியலில் செல்வாக்குக் காட்ட முடியாது, அதனால்தான் அழகிரி ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் படிப்பதில் அக்கறை காட்டவில்லை என்ற கருத்தும் தமிழகத்தில் உள்ளது.
எத்தனையோ அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வெற்றி பெற்ற முதல்வர் கருணாநிதி, அழகிரியின் விவகாரத்தையும் சரியான முறையில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை கட்சித் தொண்டர்களிடம் உண்டு.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 02/05/10