Monday, March 29, 2010

ஒரு ஆசனத்திற்காக முட்டிமோதும்தமிழக காங்கிரஸ் தலைவர்கள்

தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன், கே. மலைச்சாமி, எஸ். அன்பழகன், என்.ஆர்.
கோவிந்தராஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இ.எம். சுதர்சன நாச்சியப்பன், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து நான்கு பேரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து இரண்டு பேரும் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பம் உண்டு. திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் இருந்து ராஜ்யசபை எம்.பி. யாக டாக்டர் அன்புமணி தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜூன் மாதத்துடன் அவரது பதவிக் காலம் முடிவடைகிறது. பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லாத படியால் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவரும் நாடாளுமன்ற உறுப்பினராகும் சந்தர்ப்பம் இல்லை
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. அதேபோன்ற ஒரு நிலை பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட உள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக 18 உறுப்பினர்களும் சட்ட மன்றத்தில் உள்ளனர்.
ராஜ்ய சபைக்கு ஒரு உறுப்பினரை தெரிவுசெய்யும் பலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சி மாக்சிஸ்க்ஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன ஒன்றிணைந்தால் ராஜ்ய சபைக்கு இரண்டாவது உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பலம் கிடைக்கும்.
ராஜ்ய சபை உறுப்பினராக தமது கட்சியைச் சேர்ந்த ஒருவரை தேர்தலில் நிறுத்துவதற்கு இடதுசாரிகள் கோரிக்கை விட்டாலும் ஜெயலலிதா அதனை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமானதே. வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற விருப்பம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு உண்டு. ஆனால், ஜெயலலிதாவின் கடைக் கண் பார்வை கிட்டுமா என்பது சந்தேகமே.
காங்கிரஸ் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லாததனால் அன்பு மணிக்கு ஒதுக்கிய இடத்தை திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் சாத்தியம் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்துக்காக காங்கிரஸ் கட்சியில் உள்ள பலர் போட்டியிடத் தயாராக உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த தங்க பாலு, இளங்கோவன், பிரபு ஆகியோர் ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று விரும்புகின்றனர்.
காங்கிரஸுக்குள் உள்ள கோஷ்டி சண்டை மீண்டும் தலை தூக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. ஒரே ஒரு உறுப்பினரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தைத் தமக்காக அல்லது தமது ஆதரவாளர்களைத் தெரிவு செய்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் முயற்சி செய்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையில் முறுகல் நிலை இருப்பதனால் தனக்கு சாதகமான ஒருவர் நாடாளுமன்றம் செல்வதையே திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது.
பெண்ணாகரம் இடைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் ஆகிய தலைவர்கள் நேரடியாகத் தேர்தல் பிரசாரங்களில் இறங்கியுள்ளனர். தேர்தல் விதி முறைகள் மீறப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள போதிலும் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் அதையெல்லாம் கணக்கில் எடுக்காது தமது பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அன்பளிப்புகளும் பணமும் தாராளமாகப் புழங்குவதாக உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்
ளõர்.
இலஞ்சம் கொடுப்பதும் இலஞ்சம் வாங்குவதும் சட்டப்படி குற்றம். உங்கள் வாக்குகளை கவர்வதற்காக வேட்டி, சேலை, பணம் என்பனவற்றைத் தருவார்கள். அவற்றை மறுக்காமல் வாங்குங்கள். வாக்கை மட்டும் எங்கள் வேட்பாளருக்கு அளியுங்கள் என்று சில தலைவர்கள் பகிரங்கமாக பிரசாரம் செய்கின்றனர். இலஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் ஊக்குவிக்கும் இப்படிப்பட்ட பிரசாரங்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.
வேட்டி, சேலை போன்ற அன்பளிப்புப் பொருட்களுடன் பெண்ணாகரத்துக்குச் சென்ற வாகனங்களை சில கட்சித் தொண்டர்கள் வழி மறித்து அவற்றை பொலிஸாரிடம் கையளித்தனர். இதனால் பொலிஸாரின் வேலை இலகுவாகியது. பெண்ணாகரத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அன்பளிப்புப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்
துள்ளது.
பெண்ணாகரம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனவரி மாதத்தில் இருந்து டாக்டர் ராமதாஸ் அன்புமணி, ஜி.கே. மணி போன்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அங்கு முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். பெண்ணாகரத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பாட்டாளி மக்கள் கட்சியிடம் இருந்தது. முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் பெண்ணாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய களம் இறங்கியதால் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் உற்சாகமாகியுள்ளனர். இதனால் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர்.
பெண்ணாகரத்தின் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸின் வாகனம் சோதனை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக ஆளும் கட்சியின் அரசியல் பழிவாங்கல் என்று தொண்டர்கள் கோஷமிட்டனர் பாட்டாளி மக்கள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் இதற்கு கடும் எதிர்ப்புக் காட்டினார்கள். தனது வாகனம் சோதனை செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கூறவில்லை. ஆனால் துணை முதல்வர் ஸ்டாலினும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் இதற்கு எதிர்மாறாகச் செயற்பட்டனர்.முதல்வர் கருணாநிதியின் வாகனத்தையும் சோதனைச் சாவடியில் சோதனை செய்தனர். அவர் மறுப்பேதுமின்றி சோதிக்க அனுமதித்தார்.
துணை முதல்வர் ஸ்டாலினின் வாகனம் சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தபோது எதுவித மறுப்பும் தெரிவிக்காது சோதனை செய்ய அனுமதியளித்தார் துணை முதல்வர் ஸ்டாலின். ஜெயலலிதா சென்ற வாகனம் சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டபோது தாராளமாய் சோதனை செய்யலாம் என்று ஜெயலலிதா அனுமதியளித்தார்.
துணை முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஆகியோரிடம் உள்ள அரசியல் பக்குவம் டாக்டர் ராமதாஸிடம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களையும் பொலிஸாரையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தார் டாக்டர் ராமதாஸ்.
தமிழகத்தில் கடைசியாக நடைபெற்ற 10 இடைத் தேர்தல்களிலும் பெரு வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கையுடன் உள்ளது.
வன்னியர் சமூகத்தை மட்டும் நம்பி உள்ள பாட்டாளி மக்கள் கட்சி இடைத் தேர்தலை கௌரவப் பிரச்சினையாகக் கருதுகிறது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு28/03/10

Sunday, March 28, 2010

உலகக்கிண்ணம்2010


குழு "எஃப்'
உலகக் கிண்ண உதைபந்தாட்ட குழு எஃப் பில் இத்தாலி, பரகுவே, ஸ்லோவாக்கியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
உலகக் கிண்ண சம்பியனான இத்தாலி இம் முறையும் சம்பியனாகி கிண்ணத்தை தக்க வைக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது. இந்தக் குழுவில் இத்தாலி முதலிடத்தையும் பரகுவே இரண்டாவது இடத்தையும் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தக் குழுவில் உள்ள மிகப் பலம் வாய்ந்த நாடான இத்தாலி 1934ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவையும் 1938 ஆம் ஆண்டு ஹங்கேரியையும் 1982ஆம் ஆண்டு ஜேர்மனியையும் 2006ஆம் ஆண்டு பிரான்ஸையும் தோற்கடித்து உலகக் கிண்ண சம்பியனானது. 1970ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரேஸிலிடம் தோல்வியடைந்து இரண்டாமிடம் பெற்றது. 1996ஆம் ஆண்டு இங்கிலாந்தை வீழ்த்தி மூன்றாமிடத்தைப் பிடித்தது. 1978ஆம் ஆண்டு பிரேஸிலிடம் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தது.
1226 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ள இத்தாலி 16 முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியது. 77 போட்டிகளில் விளையாடிய இத்தாலி 44 போட்டிகளில் வெற்றி பெற்று 19 போட்டிகளை சமப்படுத்தி 14 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலி 122 கோல்கள் அடித்துள்ளது. இத்தாலிக்கு எதிராக 69 கோல்கள் அடிக்கப்பட்டன.
815 புள்ளிகளுடன் தர வரிசையில் 29ஆவது இடத்தில் உள்ள பரகுவே ரழமுனா உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றியுள்ளது. 22 போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ஏழு போட்டிகளை சமப்படுத்தி ஒன்பது போட்டிகளில் தோல்வியடைந்தது.
810 புள்ளிகளுடன் 31ஆவது இடத்தில் உள்ள ஸ்லோவேக்கியா எட்டு தடவை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடியது. 30 போட்டிகளில் விளையாடிய ஸ்லோவேக்கியா 11 போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்து போட்டிகளை சமப்படுத்தி 14 போட்டிகளில் தோல்வியடைந்தது.
398 புள்ளிகளுடன் 80ஆவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து ஒரே ஒரு தடவை மாத்திரம் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடியது. மூன்று போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

உலகக்கிண்ணம்2010


குழு "ஈ'
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் குழு ஈ யில் நெதர்லாந்து, டென்மார்க், ஜப்பான், கமரூன் ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றில் நெதர்லாந்து பலம் வாய்ந்த நாடாகும். இந்தக் குழுவில் இருந்து எதுவித பிரச்சினையும் இன்றி நெதர்லாந்து இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகிவிடும். டென்மார்க்கும் ஜப்பானும் அதிர்ச்சியளிக்காது விட்டால் கமரூன் இரண்டாவது சுற்றுக்கு விளையாடும் தகுதியைப் பெற்றுவிடும்.
1974ஆம் ஆண்டு ஜேர்மனுடன் இறுதிப் போட்டியில் மோதிய நெதர்லாந்து தோல்வி அடைந்து இரண்டாவது இடத்தைப் பெற்றது. 1998ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறிய நெதர்லாந்து இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது. ஐவொரிக்காவும் நெதர்லாந்தும் 3ஆம், 4ஆம் இடங்களைப் பெறுவதற்காக மோதின. இப்போட்டியில் தோல்வி அடைந்த நெதர்லாந்து நான்காவது இடத்தைப் பிடித்தது.
1324 புள்ளிகளுடன் தர வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து எட்டு முறை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடியது. 36 போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து 16 போட்டிகளில் வெற்றி பெற்று 10 போட்டிகளை சமப்படுத்தி 10 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இந்தக் குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கமரூன் 888 புள்ளிகளுடன் 20ஆவது இடத்தில் உள்ளது.
ஐந்து தடவை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய கமரூன் 17 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஏழு போட்டிகளை சமப்படுத்தி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
798 புள்ளிகளுடன் 33ஆவது இடத்தில் உள்ள டென்மார்க் மூன்று தடவை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடியது.
13 போட்டிகளில் விளையாடிய டென்மார்க் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்தி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
672 புள்ளிகளுடன் தர வரிசையில் 46ஆவது இடத்தில் உள்ள ஜப்பான் மூன்று தடவை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றியது.
10 போட்டிகளில் விளையாடிய ஜப்பான் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமப்
படுத்தி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
ஜூன் 14ஆம் திகதி ஜொகன்னஸ்பர்க்கில் நெதர்லாந்தும் டென்மார்க்கும் மோதுகின்றன. அதே நாள் புளும் போரீனில் ஜப்பானும் கமரூனும் விளையாடுகின்றன. ஜூன் 19ஆம் திகதி நெதர்லாந்துக்கும் ஜப்பானுக்கும் இடையேயான போட்டியும் பெரடோரியாவில் கமரூனுக்கும் டென்மார்க்குக்கும் இடையேயான போட்டியும் நடைபெறும். ஜூன் 24ஆம் திகதி ரெஸ்ரன்பேர்க்கில் டென்மார்க்கும் ஜப்பானும் மோதும் அதேவேளை கேப்ரவுனில் கமரூனும் நெதர்லாந்தும் மோதுகின்றன.

Tuesday, March 23, 2010

தேர்தல் களத்தில் ராமதாஸ்உற்சாகத்தில் தொண்டர்கள்




தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா? பாட்டாளி மக்கள் கட்சியா? என்ற சந்தேகம் தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
பெண்ணாகரம் இடைத் தேர்தல் காரணமாக தமிழகமே பரபரப்பாக இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா கொடாநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி, ஜி.தேவமணி, காடு வெட்டி குரு போன்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பம்பரமாகச் சுழன்று பெண்ணாகரத்தில் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஏட்டிக்குப் போட்டியாக பெண்ணாகரத்தில் தமது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து சுமார் இரண்டு மாதமாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பெண்ணாகரத்தில் முகாமிட்டு வாக்காளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இணையாக பாட்டாளி மக்கள் கட்சி பெண்ணாகரத்தில் பிரசாரம் செய்து வருகிறது.
தமிழகத்தின் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்கிஸ்ட் கட்சி ஆகியன முழுமூச்சாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
பெண்ணாகரத்தில் ஊழல், முறைகேடு என்பன நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. இந்த விசயத்தில் பொலிஸாரையும் தேர்தல் அதிகாரிகளையும்விட உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகிறது பட்டாளி மக்கள் கட்சி.
தமிழக அரசியலில் இழந்த பெருமையை மீண்டும் பெறுவதற்கு முழுமூச்சாகச் செயற்படுகிறது பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியரின் கோட்டையான பெண்ணாகரத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தலை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பெற வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது.
தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அதனை வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தலை எதிர்நோக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைகுனிந்து நிற்கிறது.
1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளரான சுப்பிரமணியம் 32 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 1996 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட்ட ஜி. கே. மணி வெற்றி பெற்று திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமை வெளிப்பட்டதால் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர திராவிடக் கட்சிகள் முன்வந்தன. 2001ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஜி.கே. மணி வெற்றி பெற்றார். 2006 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தது பாட்டாளி மக்கள் கட்சி. அப்போது பெண்ணாகரம் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் தன்வசம் வைத்துக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன் வெற்றி பெற்றார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பெண்ணாகரம் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதனால் நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சகல இடைத் தேர்தல்களிலும் பணமும் தாராளமாக புழங்கியதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. பணம், வேட்டி, சேலை போன்ற அன்பளிப்புகள் ஆங்காங்கே ஏதோ ஒரு வைபவத்தில் வழங்கப்பட்டதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த அன்பளிப்புகளை வெளிப்படுத்துவதில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னணியில் இருந்தது. சந்தேகப்படும் இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் தீவிரமாகக் கண்காணிப்புச் செய்தனர். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் நடவடிக்கைகளை திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கண்காணித்தனர். தேர்தல் அதிகாரிகளும் பொலிஸாரும் செய்ய வேண்டிய கடமைகளை கட்சித் தொண்டர்கள் கச்சிதமாகச் செய்தனர்.
தமிழக முதலமைச்சராக ஐந்தாவது முறை கருணாநிதி பதவி ஏற்ற பின்னர் மதுரை மேற்கு, மதுரை மத்தி, திருமங்கலம், கம்பம், இளையான்குடி, தொண்டாமுத்தூர், பாகூர், ஸ்ரீ வைகுண்டம், வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய பத்துத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த பத்துத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களின் பிரசாரத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலினும் மத்திய அமைச்சர் மு. க. அழகிரியும் தலைமை வகித்தனர். உடல் நிலை காரணமாக முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்யவில்லை.
ஆனால் பெண்ணாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் கருணாநிதி பெண்ணாகரம் செல்லப் போகிறார். பாட்டாளி மக்கள்கட்சியின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக முதல்வர் கருணாநிதி நேரடியாக பிரசாரக் களத்தில் இறங்குகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் பெண்ணாகரத்தில் முழு மூச்சுடன் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியும் பிரசாரத்தில் சற்று பின்தங்கி உள்ளன. ஜெயலலிதா கொடா நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் பெண்ணாகரத்தில் பிரசாரம் செய்கின்றனர். அவர்களினது பிரசாரம் சுறுசுறுப்பாக இல்லாததனால் தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர்.
விஜயகாந்தின் மனைவி பெண்ணாகரத்தில் சூறாவளி பிரசாரம் செய்கிறார். பெண்ணாகரத்தில் வெற்றி பெற முடியாது எனத் தெரிந்தும் போட்டியிடும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சியை விட அதிகளவான வாக்குகளைப் பெற வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறது. விஜயகாந்தின் மீது தமிழக அரசியலில் ஏற்பட்ட நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்துள்ளது. அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான முன்னோடியாகவே பெண்ணாகரம் இடைத் தேர்தல் முடிவை எதிர்பார்க்கிறார் விஜயகாந்த்.
இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கும் இடையிலான பனிப் போர் உச்சக் கட்டத்தை அடைந்து விட்டது. வெகு விரைவில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறி விடும் என்று அடித்துக் கூறியவர்களின் வாயை அடைக்கும் வகையில் தமிழக சட்டப் பேரவை வளாகத் திறப்பு விழா நடந்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் சட்டப் பேரவைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதியின் மீது தமக்கு இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களில் சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகச் செயற்பட்டாலும் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைப் பீடம் தமிழக முதல்வர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
தமிழக சட்டசபையை இடம் மாற்றுவதற்கு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நடவடிக்கை எடுத்தார். பெரும் போராட் டங்களின் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. புதிய சட்டசபை அமைத்து தனது பெயரைப் பொறிக்க ஜெயலலிதா ஆசைப்பட்டார். அவரின் ஆசை மக்களின் எதிர்ப்பினால் நிராசையானது. தமிழக முதல்வர் கருணாநிதி புதிய சட்டசபையை அமைத்து தனது பெயரை பொறித்து விட்டார்.
தமிழக சட்ட சபையில் கருணாநிதியின் படத்தை மாட்டுவதற்கு தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துள்ளார். ராஜாஜி, அண்ணா, காமராஜர், எம். ஜி. ஆர்., நேரு ஆகியோரின் படங்கள் தமிழக சட்டசபையில் உள்ளன. அவற்றுடன் கருணாநிதியின் படத்தை வைப்பதற்கு ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துள்ளõர். தான் முதல்வரானதும் கருணாநிதியின் படத்தை அகற்றப் போவதாகவும் ஜெயலலிதா சபதமிட்டுள்ளார்.
சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் முதல்வர் கருணாநிதியுடன் மிகநெருக்கமாக இருந்தாலும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு வேறுவிதமாகவே உள்ளது.
அண்மையில் திருச்சிக்கு விஜயம் செய்த ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸை பாரிய முறையில் கட்டியெழுப்பும் தனது நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார். பலமான தமிழக காங்கிரஸை உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை தமிழக இளைஞர்கள் விரும்புகின்றனர்.
விஜயகாந்தின் மீது தமிழக இளைஞர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர் கட்சி ஆரம்பித்ததும் பெருமளவிலான இளைஞர்கள் இணைந்தனர். அரசியலில் அவருக்கு ஏற்பட்ட தோல்வியும் குடும்ப அரசியலை அவர் ஊக்குவிப்பதும் பிடிக்காததனால் விஜயகாந்தின் மீது வைத்த நம்பிக்கை தகர்ந்தது. தமிழக இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் ராகுல் காந்தி இறங்கி உள்ளõர்.
துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரின் செல்வாக்கை உடைத்து இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் ராகுல்காந்தியின் முயற்சி வெற்றியளிக்குமா என்பதை தமிழக சட்டசபைத் தேர்தலின் முடிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/03/10

Saturday, March 20, 2010

திரைக்குவராதசங்கதி 17




குடும்பப் படங்களை இயக்கி தனக்கெனஒரு முத்திரை பதித்தவர் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.அவர் முதன் முதலில் இயக்கிய படம்சார‌தா! கவியர‌சு கண்ணதாசனின்அண்ணன் ஏ.எல். சீனிவாசன் அப்படத்தைத்தயாரித்தார். விஜயகுமாரியும்எஸ்.எஸ். ஆரும் அப்படத்தில் ஜோடியாக நடித்தனர்.வித்தியாசமான கதை அம்சம் உள்ளசார‌தா என்ற அப்படம் அந்தக் காலத்தில்வெற்றி பெற்றது பெரிய அதிசயம்தான். விபத்து ஒன்றில் ஆண்மையைஇழந்த எஸ்.எஸ்.ஆர். தன் மனைவியான விஜயகுமாரிக்கு மறுமணம்செய்து வைக்க முடிவு செய்கிறார். விஜயகுமாரி முதலில் மறுக்கிறார். கணவனின்விருப்பத்துக்காக மணப் பெண்ணாகிறாள்.மணக்கோலத்துடன் நாயகி
கணவனின் காலடியில் மர‌ணமாகிறாள்.ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்,தட்டுத் தடுமாறி நெஞ்சம், மெல்லமெல்ல அருகில் வந்து மென்மையானகையை தொட்டது போன்ற காலத்தால்அழியாத பாடல்கள் இன்றும்பழைய ர‌சிகர்களின் மனதில் நீங்காதுஉள்ளன.
சார‌தா படத்தின் வெற்றியினால் சந்தோசப்பட்ட பட அதிபர் ஏ.எல். சீனிவாசன், மெஜஸ்ரிக் ஸ்ரூடியோவை வாங்கிஅதற்கு சார‌தாஸ்ரூடியோ எனப் பெயரிட்டார். சாரதாவின் வெற்றியைத் தொடர்ந்துஏ.எல். சீனிவாசன் தயாரித்த படங்களுக்கு சாந்தி, வசந்தி,
ஆனந்தி என்று கதாநாயகியின் பெயர்வைத்தார். பாதகாணிக்கை என்ற படத்துக்காகவிஜய குமாரிக்கு மேக்கப் பொருத்தமானதாக இருக்கவில்லை. அதனால் அந்தக் காலத்தில் பிμபலமான ஹரிபாபுவிடம் மேக்கப் போடுவதற்கு விஜயகுமாரியை அனுப்பினார்கள். அதி
காலை நான்கு அல்லது ஐந்து மணிக்குஹரிபாபுவின் வீட்டிற்குச் சென்று விடுவார் விஜயகுமாரி. ஹரிபாலாவிடம்மேக்கப் போட வேண்டுமென்றால் அவரது வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும்.ஹரி பாபுவின் வீட்டிற்கு விஜயகுமாரி சென்றபோது என்.டி.ராமரவும்
மேக்கப் போட அங்கு சென்றார். இருவருக்கும் அப்போது பரீட்சயம் ஏற்பட்டது.தெலுங்குப் படத்தில் நடிக்கும்படிவிஜயகுமாரியிடம் என்.டி.
ராமராவ்அழைப்பு விடுத்தார். தெலுங்கு தெரியாதபடியால் நடிக்க முடியாது என விஜயகுமாரி மறுத்துவிட்டார்.தெலுங்கு படிப்பது சுலபம். நான்சொல்லித் தருகிறேன் என என்.டி.ராமராவ் கூறினார். விஜயகுமாரி மறுத்துவிட்டார்.தெலுங்குப் படங்களில் நடித்திருந்தால் அங்கும் விஜயகுமாரி வெற்றிக்கொடி நாட்டி இருப்பார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். இலட்சிய நடிகை விஜயகுமாரி ஆகியோர்நடித்த மிகவும் சிறந்த படம் சாந்தி. கண்தெரியாதபெண்ணாக அப்படத்தில் விஜயகுமாரி நடித்தார். எஸ்.
எஸ்.ஆரும் விஜயகுமாரியும் காதலர்கள். சந்தர்ப்பசூழ்நிலையால் விஜயகுமாரியின் கழுத்தில் எஸ்.எஸ்.ஆரின் நண்பனான சிவாஜி
தாலி கட்டுகிறார். முதலிரவன்று விஜயகுமாரியின்புடைவையில் தீப்பிடிக்கிறது.முதலிரவு ஒத்திவைக்கப்படுகிறது.புடைவை தீப்பிடித்ததும்
கையில் கசக்கி தீயைஅணைக்கிறார் விஜயகுமாரி. உண்மையிலேயே கை தீயில் வெந்துவிட்டது.அதனைக் கண்ட சிவாஜிபதறியபடி விஜயகுமாரியின் கைக்குமருந்து போட்டார்.பச்சை விளக்கு படத்தில்சிவாஜி கணேசனின் தங்கையாகநடித்தார் விஜயகுமாரி. அப்படத்தில் ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில்தெரிகிறது என்ற பாடல் உள்ளது. அப்பாடலில் குங்குமச்சிலையே குடும்பத்துவிளக்கே குல மகளே வருக எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக'' என்ற வரி உள்ளது.அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது
ம் ""விஜி நிச்சயமாக கண்ணகியாகநடிப்பாய்'' என்று சிவாஜி கூறினார். பூம்புகார் படத்தில் விஜயகுமாரி கண்ணகியாக நடித்து அசத்தினார்.
நானும் ஒரு பெண் என்ற படம் விஜயகுமாரியின் நடிப்பினால் வெற்றி பெற்றபடங்களில் ஒன்று. ஏ.வி.எம். தயாரித்தஅப்டத்தில் கறுப்புப் பெண்ணாக விஜயகுமாரி நடித்தார். அழகில்லாதவர்கள்கூட மேக்கப்பினால் தம்மை அழகுபடுத்திக்காட்டுவதில் அதிக அக்கறை காட்டு
கின்றனர். ஆனால் விஜயகுமாரியோகறுப்புப் பெண்ணாக நடிக்க ஒப்புக்கொண்டார்.விஜயகுமாரியின் பாத்திரத்தைப்பற்றிகேள்விப்பட்டவர்கள் அவருடைய ஆட்டம் முடிந்து விட்டது என்று நேரடியாகக் கூறினார்கள்.
ரமணி
மித்திரன்வாரமலர்
2/09/2007

உலகக்கிண்ணம்2010


குழு "டி'
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் குழு "டி' யில் ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சேர்பியா, கானா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நான்கு நாடுகளிலும் ஜேர்மனி மிகப் பலம் வாய்ந்த உதைபந்தாட்ட அணியை உள்ள நாடு. ஜேர்மனியுடன் ஒப்பிடுகையில் ஏனைய மூன்று நாடுகளும் மிகவும் பலவீனமடைந்த நிலையிலேயே உள்ளன. இரண்டாவது இடத்தைப் பெறுவதற்கு சேர்பியா, அவுஸ்திரேலியா, கானா ஆகியன கடுமையாகப் போராட வேண்டிய நிலை உள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ஏழு முறை விளையாடிய ஜேர்மனி மூன்று முறை சம்பியனானது. நான்கு முறை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 1982, 1986, 1990 ஆகிய மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளில் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியில் விளையாடிய நாடு ஜேர்மனி. 1954ஆம் ஆண்டு ஹங்கேரியை வீழ்த்தி சம்பியனானது. 1974 ஆம் ஆண்டு நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியனானது. 1990ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவை வீழ்த்தி சம்பியனானது. 1996ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடம்பிடித்தது. 1982ஆம் ஆண்டு இத்தாலியிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பெற்றது. 1966ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பெற்றது. 2002ஆம் ஆண்டு பிரேஸிலிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
1934ஆம் ஆண்டு ஆஸ்திரியாவையும் 1970ஆம் ஆண்டு உருகுவேயையும் 2006ஆம் ஆண்டு போர்த்துக்கலையும் வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. 1958ஆம் ஆண்டு பிரான்ஸிடம் தோல்வி அடைந்து நான்காம் இடத்தைப் பிடித்தது.
அவுஸ்திரேலியா, சேர்பியா, கானா ஆகிய நாடுகள் உலகக் கிண்ண போட்டிகளில் அதிர்ச்சியான முடிவுகளை ஏற்படுத்தி உள்ளன.
உலகக் கிண்ணப் போட்டிகளில் 16 முறை விளையாடிய ஜேர்மனி 1173 புள்ளிகளுடன் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது.
92 போட்டிகளில் விளையாடிய ஜேர்மனி 55 போட்டிகளில் வெற்றி பெற்றது. 19 போட்டிகளை சமப்படுத்தியது. 18 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
916 புள்ளிகளுடன் தரவரிசையில் 19 ஆவது இடத்தில் உள்ள சேர்பியா 10 முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியது. 40 போட்டிகளில் விளையாடிய சேர்பியா 16 போட்டிகளில் வெற்றி பெற்று எட்டு போட்டிகளை சமப்படுத்தி 16 போட்டிகளில் தோல்வியடைந்தது.
857 புள்ளிகளுடன் தரவரிசையில் 23 ஆவது இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா இரண்டு தடவைகள் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியது. ஏழு போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்தி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
823 புள்ளிகளுடன் தரவரிசையில் 27 ஆவது இடத்தில் இருக்கும் கானா ஒரே ஒரு தடவை உலகக் கிண்ணப் போட்டியில் பங்கு பற்றியது. நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.
ஜூன் மாதம் 13ஆம் திகதி டேர்பனில் ஜேர்மனியும் அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன. அதே நாள் பிரெஸ்ரோரியாவில் சேர்பியாவும் கானாவும் மோதுகின்றன. ஜூன் மாதம் 18ஆம் திகதி போட் எலிஸபெத்தில் உள்ள நெல்சன் மண்டேலா மைதானத்தில் ஜேர்மனிக்கும் சேர்பியாவுக்கும் இடையிலான போட்டி நடைபெறும். ஜூன் மாதம் 18ஆம் திகதி ரெஸ்ரெம்பேச்சில் கானாவும் அவுஸ்திரேலியாவும் சந்திக்கின்றன. ஜூன் மாதம் 23ஆம் திகதி ஜோஹனஸ்பர்க்கில் கானாவும் ஜேர்மனியும் விளையாடுகின்றன. அதே நாள் நெஸ்பியூரிட்டில் அவுஸ்திரேலியாவும் சேர்பியாவும் சந்திக்கின்றன.
அவுஸ்திரேலிய அணியில் கோல் காப்பாளராக மாக்ஸ்வெக்ஸர் சிட்னியில் பிறந்தவர். அவரது பெற்றோர் ஜேர்மனியை சேர்ந்தவர்கள் உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தும் நைஜிரியாவும் இதுவரை சந்திக்கவில்லை.

உலகக்கிண்ணம்2010


குழு "சி'
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் குழு "சி' யில் இங்கிலாந்து அமெரிக்கா, அல்ஜீரியா, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றில் இங்கிலாந்து பலம் வாய்ந்த உதைபந்தாட்ட அணியைக் கொண்ட நாடாகும். இரண்டாவது இடத்தை அமெரிக்கா பிடிக்கலாம்.
1966ஆம் ஆண்டு ஜேர்மனியை வீழ்த்தி சம்பியனானது இங்கிலாந்து. 1990ஆம் ஆண்டு இத்தாலியிடம் தோல்வியுற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்த குழுவில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடிப்பது உறுதி. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் அல்ஜீரியாவும் ஸ்லோவேனியாவும் பலம் குறைந்த நாடுகளாகவே உள்ளன.
உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளில் 12 தடவைகள் பங்குபற்றிய இங்கிலாந்து 1076 புள்ளிகளுடன் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 55 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து 25 போட்டிகளில் வெற்றி பெற்று 17 போட்டிகளை சமப்படுத்தி 13 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
963 புள்ளிகளுடன் தர வரிசையில் 14 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்கா எட்டுத் தடவைகள் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியது. 25 போட்டிகளில் விளையாடிய அமெரிக்கா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தி 16 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
784 புள்ளிகளுடன் தரவரிசையில் 31 ஆவது இடத்தில் உள்ள அல்ஜீரிய இரண்டு தடவைகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியது. ஆறு போட்டிகளில் விளையாடிய அல்ஜீரிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது.
767 புள்ளிகளுடன் 33ஆவது இடத்தில் உள்ள ஸ்லோவேனியா ஒரு முறை மட்டும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியது. மூன்று போட்டிகளில் பங்குபற்றிய ஸ்லோவேனியா மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் புதிய சாதனை படைக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளது.
முதலாவது போட்டி ஜுன் மாதம் 12 ஆம் திகதி ரெஸ்ரம் பேச்சில் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பரபரப்பான முதலாவது போட்டியிலேயே முதலிடத்தைப் பெறும் நாடு எது என்பது தெரிந்து விடும். இரண்டாவது போட்டி ஜூன் மாதம் 13ஆம் திகதி பொலோவேக்னில் நடைபெறும். இதில் அல்ஜீரியாவை எதிர்த்து ஸ்லோவேனியா விளையாடுகிறது. ஜூன் மாதம் 18ஆம் திகதி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும்போட்டியில் ஸ்லோவேனியாவை எதிர்த்து அமெரிக்கா விளையாடும் அதே நாள் கேப்டவுனில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து அல்ஜீரியா விளையாடும். ஜூன் 23ஆம் திகதி நெல்சன் மண்டேலாவின் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஸ்லோவேனியாவை எதிர்த்து இங்கிலாந்து விளையாடும் அதே நாள் பொஸ்ரோரியாவ் நடைபெறும் போட்டியில் அமெரிக்காவும் அல்ஜீரியாவும் மோதுகின்றன.

Tuesday, March 16, 2010

வைகோ நாடாளுமன்றம் செல்லவழிவிடுவாரா ஜெயலலிதா?


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறப்பினர்களில் பலர் அக்கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் விசுவாசம் இன்றி இருக்கும் நிலையில் வைகோ, ஜெயலலிதா மீதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் அளவு கடந்த விசுவாசம் வைத்துள்ளார். அந்த விசுவாசத்தின் நன்றிக் கடனை ஜெயலலிதா நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து டெல்லி ராஜ்ய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேரின் பதவிக் காலம் ஜுன் மாதம் 29 ஆம் திகதி முடிவடைகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன், கே. மலைச்சாமி, எஸ். அன்பழகன், என்.ஆர். கோவிந்தராஜ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம். சுதர்ஸனா நாச்சியப்பன், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜுன் மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியின் சார்பில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகக்கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கழகக் கட்சிகளான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்காது நான்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்தது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவோர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் என்றும், மாநிலங்களில் உள்ள சட்ட சபை உறுப்பினர்களினால் தேர்ந்தேடுக்கப்படுவோர், ராஜ்யசபா அல்லது மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் அழைக்கப்படுவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றப் பரிந்துரை செய்யும் சட்டங்கள் மேல்சபை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டால் தான் அந்தச் சட்டம் முழுமையானதாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.
மாநில சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ராஜ்ய சபை உறுப்பினர்கள் தேர்ந்öதடுக்கப்படுவர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ராஜ்ய சபை உறுப்பினர்களின் பலம் கூடிக் குறைகிறது. ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு வருடங்களாகும். இந்தப் பதவி சுமார் இருமுறை நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் இருந்து டெல்லி மேல் சபைக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க குறைந்த பட்சம் 34 சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 மேல் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 232 தமிழ்நாட்டில் இருந்து 18 பேர் மேல் சபை உறுப்பினர்களாக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஏழு பேரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நான்கு பேரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு பேரும் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றில் இருந்து தலா ஒவ்öவாருவரும் மேல் சபை உறுப்பினர்களாக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து நான்கு உறுப்பினர்களும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து இரண்டு உறுப்பினர்களும் பதவி இழக்க உள்ளனர். இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து நான்கு உறுப்பினர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து இரண்டு உறுப்பினர்களும் ராஜ்ய சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றிலிருந்து தலா இரண்டு பேர் ராஜ்ய சபா உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் நிலை சற்றுக் குழப்பமாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 57 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்று விட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களினால் ஒரே ஒரு ராஜ்ய சபை உறுப்பினரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். இரண்டாவது உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கு கூட்டணிக் கட்சி உறுப்பினர்களின் தயவு தேவைப்படுகிறது.
தமிழக சட்ட சபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுபேரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மூன்று பேரும் உள்ளனர். இவர்களின் ஆதரவு இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினால் இரண்டாவது உறுப்பினரைத் தேர்வு செய்ய முடியாது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது மேல் சபை உறுப்பினர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவவர் அல்லது இரண்டாவது உறுப்பினரை கூட்டணிக் கட்சிக்கு ஜெயலலிதா விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக எவரும் இல்லை. வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டும் என்று வைகோவை நேசிப்பவர்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா மனது வைத்தால் அது கண்டிப்பாக நடைபெறும். ஜெயலலிதா மனது வைப்பாரா வைகோ நாடாளுமன்றம் செல்வாரா என்ற கேள்விக்கு விடை தெரிய இன்னமும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
வைகோ நாடாளுமன்றத்துக்குச் சென்றால் திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். இதேவேளை வைகோ போட்டியிட்டால் அவரை வீழ்த்துவதற்குரிய வியூகங்களை வகுக்க திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்யும். வைகோவும் வைகோவின் கட்சியும் தலை எடுக்கக்கூடாது என்பதில் குறியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் வைகோவை வீழ்த்துவதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்த ஜெயலலிதா துவண்டு போய் அடிக்கடி ஓய்வெடுக்கிறார். ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து தோல்வி அடைந்த வைகோ துவண்டு விடாமல் போராட்டம், உண்ணாவிரதம், கால்நடைப் பயணம் என சுறுசுறுப்பாக உள்ளார்.
வைகோ ராஜ்ய சபை நாடாளுமன்ற உறுப்பினரானால் ஜெயலலிதாவுக்கும் அது நன்மையாகவே அமையும்.
வைகோ நாடாளுமன்றம் செல்ல இடது சாரிகள் வழி விடுவார்களா என்ற சந்தேகமும் உள்ளது.
நாடாளுமன்றத்தின் தமது அங்கத்தவர்களுள் ஒருவர் இருக்க வேண்டும் என்பதில் இடதுசாரிகள் குறியாக உள்ளனர். ஆகையினால் இரண்டாவது உறுப்பினராக தமது கட்சியை சேர்ந்த ஒருவரை அனுப்புவதற்கே இடதுசாரிகள் விரும்புவார்கள்.
மேல் சபை உறுப்பினர்களுக்காக பேரம் பேசும் சக்தியுடைய பாட்டாளி மக்கள் கட்சி எதுவும் செய்ய முடியாது குழம்பிய நிலையில் உள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லாது தனித்து நிற்கிறது. முன்னர் கருணாநிதியுடனும் ஜெயலலிதாவுடனும் பேரம் பேசுகையில், தனது மகனான அன்பு மணிக்காக மேல் சபை உறுப்பினர் பதவியை கேட்டு ஒப்பந்தம் செய்த டாக்டர் ராமதாஸ் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளõர்.
நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததனால் கூட்டணியில் இருந்தாலும் ராமதாஸின் கட்சிக்கு ஜெயலலிதா உதவி செய்ய மாட்டார் என்பது வெளிப்படையானது. ஜெயலலிதாவின் மனதில் உள்ளதை யாராலும் இலகுவாக ஊகிக்க முடியாது.
வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 14/03/10

Monday, March 15, 2010

திரைக்குவராதசங்கதி 16




மிகவும் அமைதியான அந்த மாணவியாரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். படிப்பில் மட்டுமே கவனம்செலுத்துவார். விளையாட்டு, பாட்டு, நடனம் இவை
எதிலுமே அந்த மாணவி பங்கு பற்றியதில்லை. சினிமா என்றால் வெறுப்பு. பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகையாக இருப்பேன் என இந்த மாணவி
கனவிலும் சிந்திக்கவில்லை.கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தைச்சேர்ந்த ராமசாமி கவுண்டர், தங்கலட்சுமி ஆகியோரின் அன்பு மகள் விஜயகு
மாரிதான் அந்த மாணவி. சினிமாவைவெறுத்த விஜயகுமாரிதான் பின்னாளில்புகழ்பெற்ற நடிகையானார்.படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம்செலுத்தாத விஜயகுமாரி ஆண்டு விழாவில்நடனமாட வேண்டும் என்று ஆசிரியை கூறினார். ஆசிரியையின் உத்தரவைத் தட்டிக்கழிக்க முடியாததனால்வேதாள உலகம் என்னும் படத்தில் உள்ளவாசமுள்ள பூப் பறிப்பேனே என்ற பாட்டுக்குநடனம் ஆடப் பழகினார் விஜயகுமாரி.
ஆசிரியையைத் திருப்திப் படுத்தவே ஆண்டு விழாவில்விஜயகுமாரி நடனமாடினார். அவரின் நடனம்மிகச் சிறப்பானதெனக் கூறி அதற்குப் பரிசுவ ழங்கினார்கள். நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய். சினிமாவில்நடிக்க முயற்சி செய் என்று ஆசிரியை விஜயகுமாரியிடம் கூறினார். சினிமா என்றாலே எட்டடி தூரம் தள்ளிநிற்கும் விஜயகுமாரிக்கு அந்த ஆசிரியை மீதுவெறுப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த ஆசிரியையோதினமும் விஜயகுமாரியின் மனதில் சினிமா ஆசையைஊட்டினார்.ஆசிரியையின் போதனையால்மனம் மாறிய விஜயகுமாரி சினிமாக் கனவில் மிதக்கத் தொடங்கினார். சினிமாவில் நடிக்கும் தனது ஆசையைதகப்பனிடம் விஜயகுமாரி கூறி யபோது அதற்குக் கிடைத்த பதில் பளார்என ஒரு அடி.தன் கனவுசிதைந்ததால் அழுதுசாப்பிடாமல் இருந்தார்
விஜயகுமாரி. மகளின் வேதனையை உணர்ந்த தாயார்தகப்பனிடம் மகளின் ஆசைக்கு தடை போட வேண்டாம் எனக் கேட்டார். குடும்பத்தில் ஏதாவது பிரச்சினைஎன்றால் சாதகம் பார்ப்பது அக்குடும்பத்தின் வழமைகளில்ஒன்று.விஜயகுமாரியின் சாதகத்தை பார்ப்பதற்குஒரு சாத்திரியாரை அழைத்தார். அவர் விஜயகுமாரியின் சாதகத்தைப் பார்த்து ""சினிமாவில் இவ நல்லபேரும் புகழும் பெறுவார்'' என்றார். சாதகமே சொல்லிவிட்டது இனி தடைபோடுவது தப்பு என உணர்ந்ததகப்பன் மகள் விஜயகுமாரி சினிமாவில் நடிப்பதற்குபச்சைக்கொடி காட்டினார்
.விஜயகுமாரியின் சினிமாக்கனவை நிறைவு செய்வதற்கு உரிய சந்தர்ப்பமாகபுதுமுக நடிகை தேவை என ஏ.வி.எம்.நிறுவனம்விளம்பரம் செய்தது.ஸ்ரூடியோவில் புகைப்படம்எடுத்து ஏ.வி.எம். நிறுவனத்துக்கு விண்ணப்பம்அனுப்பினார். இரண்டு வாரங்களில் நேர்முகத் தேர்வுக்கு வரும்படி கடிதம் வந்தது. மகிழ்ச்சியுடன் சென்னைக்குச் சென்றார் விஜயகுமாரி.ஆடத் தெரியுமா? பாடத்தெரியுமா? நடிக்கத் தெரியுமா? எனக் கேட்ட கேள்வி
களுக்கு இல்லை என்று பதிலளித்தார். பாடசாலைஆண்டு விழாவில்ஆடிய நடனத்தைஆடிக் காண்பித்தார். ஊருக்குப்போங் கள் கடிதம்அனுப்புகி
றோம் என்று கூறினார்கள். மகளின்சினிமா வாழ்க்கைஇத்துடன் முடிந்துவிட்டது. தொடர்ந்து படிக்கட்டும்என்று விஜயகுமாரியின் தகப்பன்நினைத்தார். ஆனால் ஏ.வி.எம்மில் இருந்து கடிதம்வரும் என்ற நம்பிக்கை விஜயகுமாரியின் மனதில்இருந்தது. விஜயகுமாரி எதிர்பார்த்த அந்தக் கடிதம் வந்
தது. குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றனர்
.ஏ.வி.எம். மின் படங்களில் நடிப்பதற்கு விஜயகுமாரி ஒப்பந்தம் செய்யப்பட்டார். "குலதெய்வம்' என்ற படத்தில்எஸ். எஸ். ஆரின் ஜோடி யாக அவர் அறிமுகமானார்.திரையில் இணைந்த விஜயகுமாரியை இரண்டாந்தாரமாக மணமுடித்தார் எஸ்.எஸ். ஆர். குலதெய்வம் படத்தின்கதை வசனம் எழுதியவர் முரசொலி மாறன். அவருக்கும் அதுதான் முதல்படம்.குலதெய்வம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் விஜயகுமாரியின் தாயார் மரணமானார். சென்னையில் அவர்களுக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை.எஸ்.எஸ். ஆர்தான் முன்னின்று எல்லா உதவியும் செய்தார்.குலதெய்வம் வெளியாகி விஜயகுமாரியின்நடிப்பு மிக நன்றாக இருப்பதாக எல்லாப் பத்திரிகைகளும் விமர்சனம் எழுதின. நல்ல ஒரு நடிகையைஏ.வி.எம். அறிமுகப்படுத்தியதாக ரசிகர்கள் கூறினார்கள். ஏ.வி.எம். மின் இன்னொரு வெற்றிப் படமாக குலதெய்வம் விளங்கியது.விஜயகுமாரியின் நடிப்பைப்பார்த்து வியந்த ஜெமினி மார்டடன் தியேட்டர்ஸ் புத்தாபிலிம்ஸ் ஆகியன தமது படத்தில் நடிக்கும் படிகேட்டன. ஏ.வி.எம்.முடன் விஜயகுமாரி செய்துகொண்ட ஒப்பந்தம் அதற்கு தடையாக இருந்தது. இதனைக்கேள்விப்பட்ட ஏ.வி. மெய்யப்பச் செட்டியார்ஒப்பந்தத்தை ரத்துச் செய்து ஏனைய நிறுவனங்களின்படங்களில் விஜயகுமாரி நடிக்க அனுமதி வழங்கினார்


.ரமணி
மித்திரன்வாரமலர்27/08/2007

Wednesday, March 10, 2010

காங்கிரஸை கைவிடதயாராகிறது தி.மு.க.



பென்னாகரம் இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த இடைத் தேர்தல் தைப்பொங்கல் காரணமாகப் பிற்போடப்பட்டது. பின்னர் முறையற்ற வகையில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியதால் இடைத் தேர்தல் திகதி அறிவிப்பது ஒத்தி வைக்கப்பட்டது.
பென்னாகரம் தொகுதி தனது வேட்பாளரை அறிவித்து தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியர் என்ற பலத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. ஆளும் கட்சியின் ஆதரவும் எதிர்க் கட்சியின் சகவாசமும் இன்றி பாட்டாளி மக்கள் கட்சித் தேர்தலில் கலந்து கொள்கிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிடக் கழகம், கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் பரிதாபகரமாகத் தோல்வி அடைந்தது. தனியே நின்று வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் தனி வழி சென்றுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய புள்ளிகளில் பலர் கட்சி தாவி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்த்த நிலையில் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். பென்னாகரம் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பலத்த அடியாக இருக்கும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பலர் எமது கட்சிக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகம் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ள நிலையில் தனது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளார் ஜெயலலிதா.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவி உள்ளனர். கட்சிக்குள் உள்ள அவர்களது பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களை கட்சியில் இருந்து இன்னமும் நீக்கவில்லை. அவர்களை கட்சியில் இருந்து நீக்கினால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர்கள் இழந்து விடுவார்கள். அப்போது காலியாகும் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும். இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற உண்மையைத் தெளிவாகத் தெரிந்துள்ள ஜெயலலிதா அவர்களை கட்சியில் இருந்து நீக்கவில்லை.
வெற்றி பெற முடியாது என்று தெரிந்து கொண்டும் இடைத் தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளார் விஜயகாந்த். பலமான கட்சிகளின் துணையுடன் விஜயகாந்தை எதிர்த்த டாக்டர் ராமதாஸ் தனி ஆளாக விஜயகாந்துடன் மோதவுள்ளார். வன்னியர் சமூகத்தவர்கள் அதிகமாக வாழும் பென்னாகரத்தில் டாக்டர் ராமதாஸின் கட்சியை விட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கி உள்ளார் விஜயகாந்த்.
பென்னாகரத்தில் நான்கு முனைப் போட்டி என்றாலும் எதிர்க் கட்சிகள் பலவீனமாக இருப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கையுடன் உள்ளது. இடதுசாரிகள் வழமை போல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிகளின் ஆதரவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்குப் போதுமானதல்ல. இடதுசாரிகளுக்கு வட மாநிலங்களில் இருக்கும் செல்வாக்கு தமிழகத்தில் இல்லை.
பென்னாகரம் இடைத் தேர்தலில் காங்கிரஸின் துணையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் களமிறங்குகிறது. காங்கிரஸின் துணை இல்லாமலே வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்காளியான காங்கிரஸ் கட்சி பார்வையாளராகவே உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான பனிப் போர் இப்போது சற்றுத் தீவிரமாகி உள்ளது. இதுவரை காலமும் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளை விமர்சிக்காத திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகிரங்க அறிக்கைகளை விடத் தொடங்கி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் கட்சி ஒதுக்கத் தொடங்கியது. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாததே பூசலின் ஆரம்பமாக அமைந்தது.
காங்கிரஸ் கட்சியை கைவிடுவதற்காக சேது சமுத்திரத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை அழிக்கக் கூடாது என்று போர்க் கொடி தூக்கி உள்ளது பாரதீய ஜனதாக் கட்சி. ராமர் பாலத்தில் கை வைத்தால் வட மாநிலங்களில் உள்ள வாக்கு வங்கி சரிந்து விடும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்கு தெரியும்.
மாற்று வழி மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்று நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. இதனால் மாற்று வழி மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.
வட மாநில வாக்காளர்களைப் பகைக்க விரும்பாத காரணத்தினால் மாற்று வழி மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மத்திய அரசு. தமிழக மக்களின் வாக்குகளை தக்கவைப்பதற்காக சேது சமுத்திரத் திட்டத்தில் உறுதியாக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மத்திய அரசின் நடவடிக்கைகளை இதுவரை விமர்சிக்காமல் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் விமர்சிக்கும் அதேவேளை "கையை' கைவிட மாட்டேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார். நாங்கள் கைவிட மாட்டோம். எங்களை மதிக்காவிட்டால் வெளியேறி விடுவோம் என்று மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
காங்கிரஸ் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்தால் வை.கோவின் நிலை என்னாகும் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் படுமோசமாக விமர்சித்த வை.கோ, காங்கிரஸுடன் இணைந்து செயற்பட்டார். பல தோல்விகளுக்கு மத்தியிலும் ஜெயலலிதாவை விட்டுப் பிரியாத வை.கோ, காங்கிரஸும் ஜெயலலிதாவும் இணைந்ததும் ஜெயலலிதாவை விட்டுப் பிரிந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்தால் ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள் வெளியேறி முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து விடுவார்கள். இது முதல்வர் கருணாநிதிக்கு சாதக மாக அமைந்து விடும்.

வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 08/03/10

உலகக்கிண்ணம்2010


குழு பி
குழு "பி' யில் ஆர்ஜென்டீனா, நைஜீரியா, கொரியக் குடியரசு (தென் கொரியா) கிரீஸ் ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. இந்தக் குழுவில் ஆர்ஜென்ரீனா பலம் வாய்ந்த நாடாக உள்ளது. இரண்டாமிடத்தைப் பிடிப்பதற்கு தென் கொரியா, கிரீஸ், நைஜீரியா ஆகியவற்றுக்கிடையே பலத்த போட்டி நிலவ உள்ளது.
1930ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டியில் உருகுவேயிடம் தோல்வி அடைந்து இரண்டாமிடம் பிடித்தது ஆர்ஜென்டீனா. 1978ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்தையும் 1986ஆம் ஆண்டு ஜேர்மனியையும் வென்று சம்பியனானது. ஆர்ஜென்ரீனா 1990ஆம் ஆண்டு ஜேர்மனியிடம் தோல்வி அடைந்து இரண்டாமிடத்தைப் பிடித்தது.
2002ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் அரை இறுதிவரை முன்னேறிய தென் கொரியா துருக்கியிடம் தோல்வி அடைந்து நான்காம் இடத்தைப் பிடித்தது.
ஜூன் மாதம் 12ஆம் திகதி ஜோஹன்னஸ் பர்க்கில் ஆர்ஜென்ரீனாவும் நைஜீரியாவும் மோதுகின்றன. அதே நாள் போட்எலிஸபெத்தில் உள்ள நெல்சன் மண்டேலா மைதானத்தில் தென் கொரியாவும் கிரீஸும் மோதுகின்றன. ஜூன் 17ஆம் திகதி புளும்பொன்ரெயினில் கிரிஸும் நைஜீரியாவும் மோதுகின்றன. அதேநாள் ஆர்ஜென்ரீனாவும் கிரீஸும் ஜோஹன்னஸ்பர்க்கில் சந்திக்கின்றன. 22ஆம் திகதி டேர்பனில் நைஜீரியாவும் கிரீஸும் மோதுகின்றன. அதேநாள் பொலோக்வேனில் கிரீஸும் ஆர்ஜென்ரீனாவும் சந்திக்கின்றன.
இந்தக் குழுவில் பலம் வாய்ந்த நாடான ஆர்ஜென்ரீனா 1082 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. 14 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய ஆர்ஜென்ரீனா 656 போட்டிகளில் விளையாடியது. 33 போட்டிகளில் வெற்றி பெற்று 13 போட்டிகளை சமநிலைப்படுத்தி 19 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
1978ஆம் ஆண்டு 1986ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனானது. 1930ஆம் ஆண்டும் 1990ஆம் ஆண்டும் இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்ரீனா தோல்வி அடைந்து இரண்டாமிடம் பெற்றது. ஒரே ஒரு முறை மட்டும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்ற கிறீஸ் 1030 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடிய கிரீஸ் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
956 புள்ளிகளுடன் 15ஆவது இடத்தில் உள்ள நைஜீரியா மூன்று முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 11 போட்டிகளில் விளையாடிய நைஜீரியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமநிலைப்படுத்தி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்தது. 634 புள்ளிகளுடன் 49 ஆவது இடத்தில் உள்ள தென் கொரியா ஏழு முறை உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 24 போட்டிகளில் விளையாடிய தென் கொரியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஏழு போட்டிகளை சமநிலைப்படுத்தி 13 போட்டிகளில் தோல்வியடைந்தது.

உலகக்கிண்ணம்2010


குழு "ஏ'
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் குழு "ஏ' யில் தென் ஆபிரிக்கா, மெக்ஸிக்கோ, உருகுவே, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நான்கு நாடுகளில் பலம் வாய்ந்தது பிரான்ஸ். இரண்டாவது இடம் பிடிப்பதற்கு உருகுவே, மெக்ஸிக்கோ ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
1998 ஆம் ஆண்டு பிரேஸிளலை வீழ்த்தி சம்பியனானது பிரான்ஸ். 2006ஆம் ஆண்டு இத்தாலியிடம் தோல்வியடைந்து இரண்டாமிடம் பிடித்தது. 1986ஆம் ஆண்டு பெல்ஜியத்தையும் 1985ஆம் ஆண்டு ஜேர்மனியையும் வீழ்த்தி மூன்றாமிடம் பிடித்தது. 1982 ஆம் ஆண்டு போலந்திடம் தோல்வியடைந்து நான்காம் இடம் பிடித்தது.
1930ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ணப் போட்டி உருகுவேயில் நடைபெற்றபோது இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவை வென்று உலகக் கிண்ணச் சம்பியனானது உருகுவே. 1950 ஆம் ஆண்டு பிரேஸிலுடன் மோதி வெற்றி பெற்று இரண்டாவது தடவை சம்பியனானது உருகுவே. 1954 ஆம் ஆண்டு ஒஸ்ரியாவுடனும் 1970ஆம் ஆண்டு ஜேர்மனியிடமும் தோல்வி அடைந்து நான்காம் இடத்தைப் பிடித்தது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு செல்லும் தகுதியுள்ள மெக்ஸிக்கோவுக்கு பிரான்ஸும் உருகுவேயும் கடும் சவாலைக் கொடுக்க உள்ளன.
குழு "ஏ' யிலிருந்து முதலில் வெளியேறும் நாடாக தென் ஆபிரிக்கா கருதப்படுகிறது. நான்கு நாடுகளிலும் பலவீனமாக தென் ஆபிரிக்கா உள்ளது. உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் முதலாவது ஆட்டம் ஜூன் மாதம் 11ஆம் திகதி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும். முதலாவது போட்டியில் தென் ஆபிரிக்காவும் மெக்ஸிக்கோவும் மோதவுள்ளன. ஜூன் மாதம் 11ஆம் திகதி கேப்டவுனில் உருகுவேக்கும் பிரான்சுக்கும் இடையேயான போட்டி நடைபெறவுள்ளது. ஜூன் 16ஆம் திகதி பெரேரோசியாவில் தென் ஆபிரிக்காவுக்கும் உருகுவேக்கும் இடையேயான போட்டி நடைபெறுகிறது. 17ஆம் திகதி பொலிலாக்வேயில் பிரான்ஸும் மெக்ஸிக்கோவும் மோதுகின்றன. 22ஆம் திகதி ரெஸ்ரபேதில் மெக்ஸிக்கோவும் உருகுவேயும் சந்திக்கின்றன. இந்தப் போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாள் புளூம் பொன்ரீனால் பிரான்ஸுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையேயான போட்டி நடைபெறும்.
இந்தக் குழுவில் பலம் வாய்ந்த நாடாக பிரான்ஸ் உள்ளது.
1117 புள்ளிகளுடன் தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் 12 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி உள்ளது. 51 போட்டிகளில் விளையாடி 25 போட்டிகளில் வெற்றி பெற்றது. 10 போட்டிகளை சமநிலைப்படுத்தியது. 16 போட்டிகளில் தோல்வியடைந்தது. 10 போட்டிகளில் தோல்வியடைந்தது. 1998 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான பிரான்ஸ் 2006 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது.
947 புள்ளிகளுடன் 17ஆவது இடத்தில் உள்ள மெக்ஸிக்கோ 13 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளது. 11 போட்டிகளில் வெற்றி பெற்று மெக்ஸிக்கோ 12 போட்டிகளை சமநிலைப்படுத்தியது. 22 போட்டிகளில் தோல்வியடைந்தது.
909 புள்ளிகளுடன் 21ஆவது இடத்தில் உள்ள ஹங்கேரி 10 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியது. 40 போட்டிகளில் விளையாடிய உருகுவே 156 போட்டிகளில் வெற்றி பெற்று 10 போட்டிகளைச் சமப்படுத்தி 15 போட்டிகளில் தோல்வி அடைந்தது. 1930, 1950 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ண சம்பியனானது.
பலம் குறைந்த நாடாக உள்ள தென் ஆபிரிக்கா 391 புள்ளிகளுடன் 81ஆவது இடத்தில் உள்ளது. இரண்டு தடவை உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்ற தென் ஆபிரிக்கா ஆறு போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளை சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.

Sunday, March 7, 2010

உலகக்கிண்ணம்2010


போர்த்துக்கல்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை முதல் சுற்றில் இழந்து இரண்டாவது சுற்று வரை காத்திருந்தது போர்த்துக்கல். இலட்சக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்களின் கனவு நாயகனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியடைந்தனர். குழு ஒன்றில் விளையாடிய போர்த்துக்கல் 19 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றது. 10 போட்டிகளில் விளையாடிய போர்த்துக்கல் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றது. நான்கு போட்டிகளை சமப்படுத்தியது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. 17 கோல்கள் அடித்த போர்த்துக்கலுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன.
மஸ்டாவுக்கு எதிராக 4 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் அடுத்து விளையாடிய நான்கு போட்டிகளிலும் பின்னடைவைச் சந்தித்தது. டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் 3 2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சுவீடனுக்கு எதிராக இரண்டு போட்டிகளும் இரண்டு அணியும் கோல் எதுவும் அடிக்காது சமநிலையில் முடிந்தது. அல்பேனியாவுக்கு எதிரான போட்டியில் கோல் அடிக்காது சமநிலையில் முடிந்தது. அல்பேனியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது. டென்மார்க்குக்கு எதிரான இரண்டாவது போட்டி 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
போர்த்துக்கல் விளையாடிய ஏழு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. நான்கு போட்டிகள் சமநிலையில் முடிந்தது. அதன் பின் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்தது போர்த்துக்கல்.
டென்மார்க்குடனும், சுவீடனுடனும் நடைபெற்ற போட்டிகளில் போர்த்துக்கல் வெற்றி பெறவில்லை. ஏழு போட்டிகளில் போர்த்துக்கல்லுக்கு எதிராக கோல் அடிக்கப்படவில்லை. மூன்று போட்டிகளில் போர்த்துக்கல் கோல் அடிக்கவில்லை. மால்டாவுடனான இரண்டு போட்டிகளிலும் தலா 4 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது போர்த்துக்கல்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக போர்த்துக்கல்லுடன் மோதியது பொஸ்னியா. குழு ஐந்தில் 19 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது பொஸ்னியா. 10 போட்டிகளில் விளையாடிய பொஸ்னியா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமநிலைப்படுத்தி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது. 25 கோல்கள் அடித்த பொஸ்னியாவுக்கு எதிராக 13 கோல்கள் அடிக்கப்பட்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக போர்த்துக்கல்லும், பொஸ்னியாவும் மோதின. இரண்டு போட்டிகளிலும் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது போர்த்துக்கல்.
12 போட்டிகளில் விளையாடிய போர்த்துக்கல் 19 கோல்கள் அடித்தது. போர்த்துக்கல்லுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. 13 தடவை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரரும் ரியல் மட்ரிட் அணியின் வெற்றியின் பிரதான காரணகர்த்தாவுமான கிறிஸ்ரியனோ ரொனால்டோ, பெபே, புரூனோ அல்விஸ், பொனிச்வா, ரிக்காடோ சாவர்கோ, சிமாவோ டெக்கோ ஆகிய வீரர்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. குழு ஜி யில் பிரேஸில், வடகொரியா, ஐவரிகோஸ்ட் ஆகியவற்றுடன் போர்த்துக்கல் உள்ளது.

உலகக்கிண்ணம்2010


பிரான்ஸ்
உதைபந்தாட்ட உலகில் பலம் வாய்ந்த நாடான பிரான்ஸ் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக இரண்டாவது சுற்றுவரை காத்திருக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் குழு 7 இல் விளையாடிய பிரான்ஸ் 21 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது.
10 போட்டிகளில் விளையாடிய பிரான்ஸ் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தியது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. 18 கோல்கள் அடித்த பிரான்ஸுக்கு எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப்பட்டன. குழு 7 இல் முதல் 22 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சேர்பியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஒஸ்ரியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த பிரான்ஸ் இரண்டாவது போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஆறுதலடைந்தது. ரோமானியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் முறையே 2 2, 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன. பிரான்ஸுக்கு எதிராக நான்கு போட்டிகளில் எதிர்த்து விளையாடிய நாடுகள் கோல் அடிக்கவில்லை. பெரோஸ் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 5 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக இரண்டாவது சுற்றில் அயர்லாந்துக் குடியரசுடன் மோதியது பிரான்ஸ். குழு 8 இல் விளையாடிய அயர்லாந்து 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது. 10 போட்டிகளில் விளையாடிய அயர்லாந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளை சமப்படுத்தியது. 12 கோல்கள் அடித்த அயர்லாந்துக்கு எதிராக எட்டு கோல்கள் அடிக்கப்பட்டன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக பிரான்ஸும் அயர்லாந்தும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆட்ட நேர முடிவு வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. மேலதிக நேரத்தில் பிரான்ஸ் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. வெற்றி பெற வேண்டும் அல்லது போட்டியை சமநிலைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் பிரான்ஸ் விளையாடியது. அயர்லாந்து ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. பிரான்ஸின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அணித் தலைவர் தியோரி ஹென்றி பந்தைக் கையால் தட்டி கோல் அடிக்க உதவி புரிந்தார். இரண்டாவது போட்டி 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததனால் புள்ளி அடிப்படையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. அயர்லாந்தின் ஆட்சேபனைகள் எவையும் கணக்கில் எடுக்கப்படவில்லை. பிரான்ஸுக்கு எதிராக 13 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன. ஒருமுறை சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
அணித் தலைவர் தியோரி ஹென்றி வில்லியம் கல்பாஸ், ஜெரிம் துலவன், வல்கசனதினே, பிராங் ரிபெரி, நிக்கோலாஸ் ஆகியோர் எதிரணியை வீழ்த்த காத்துக் கொண்டிருக்கின்றனர். ரெகாட்ரை மொண்ட் பயிற்சியாளராக உள்ளார்.
தென்னாபிரிக்கா, மெக்ஸிகோ, உருகுவே ஆகிய நாடுகளுடன் குழு 4யில் உள்ளது பிரான்ஸ்.
தியோரி ஹென்றி, அண்ட பெரி ஜிகன்ஸ் ஆகியோர் தலா நான்கு கோல்கள் அடித்துள்ளனர்.

Thursday, March 4, 2010

அ.தி.மு.க. பக்கம் சாய்கிறது காங்கிரஸ்தனித்து ஆட்சி அமைக்க முயல்கிறது தி.மு.க


தமிழக அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்டுவதற்கு பெண்ணாகரம் இடைத் தேர்தல் ஒரு களமாக அமைய உள்ளது. பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தன்னால் முடியுமான அனைத்து வேலைகளையும் செய்து களைத்துப் போனது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.வழக்கமாக, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முந்திக் கொண்டு வேட்பாளரை அறிவிக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெண்ணாகரம் இடைத் தேர்தலை தடுப்பதிலேயே குறியாக இருந்தது. பெண்ணாகரம் இடைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடிப்பதற்காக பொது வேட்பாளராக தனது கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்தார். ஆனால், ராமதாஸின் அறிக்கையை எதிர்க் கட்சித் தலைவர்கள் எவருமே கவனத்தில் எடுக்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகமும் தனது வேட்பாளரை அறிவித்தது. இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டும் தயாரான போதிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியும் பின்னடித்தன.
பெண்ணாகரம் இடைத் தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத் தேர்தல் தலைமை அதிகாரியும் கூட்டாகச் சதி செய்வதாக திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியது. பெண்ணாகரம் இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளரை அறிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற அறிவிப்புடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்த், பெண்ணாகரம் இடைத் தேர்தல் பற்றி எதுவுமே கூறவில்லை. தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றுக் கட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் கட்சி சகல தேர்தல்களிலும் பலத்த அடிவாங்கியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்பை மாற்றி அமைத்த விஜயகாந்தின் கட்சி இடைத் தேர்தலில் கட்டுப்பணம் இழந்ததனால் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
பெண்ணாகரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுப்பது மிகவும் சிரமமானது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும்பான்மை வாக்கை குறைப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முயலுமே தவிர வெற்றி பெறுவது இயலாதது. அரச பலம், பண பலம், ஊடக பலம் என்பனவற்றுடன் திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது. எதிர்க் கட்சிகளிடம் ஊடகம் இருக்கிறது. ஆனால் அவை பலமானதாக இல்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்ததை திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை. தமிழக அரசியல் நிலைவரம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் விலை போனது பற்றி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்திருப்பார்கள் என்ற சந்தேகம் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பனிப் போர் நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கப் போவதாக பரவலாக செய்தி அடிபடும் இவ்வேளையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பதிலளிக்கும்முகமாகவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட மன்ற உறுப்பினர்களை வலை வீசிப் பிடிக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். காங்கிரஸும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணையப் போகிறது என்ற செய்தி பரவி வரும் வேளையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது.
பலவீனமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்தை காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்ற செய்தி பரவலாக வெளிவரும் வேளையில் அரசியல் ரீதியான எச்சரிக்கையை முதல்வர் கருணாநிதி வெளியிட்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியங்களில் ஒன்றான சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ராமர் பாலத்தை சிதைக்க வேண்டும். ராமர் பாலம் சிதைக்கப்பட்டால் பாரதீய ஜனதாக் கட்சி தனது பிரசாரத்துக்கு அதனைப் பயன்படுத்தும்.
ராமர் பாலத்தை சிதைக்காமல் மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆலோசனையை இந்திய உயர் நீதிமன்றம் வழங்கும்படி கூறியுள்ளது. சேது சமுத்திரத் திட்டம் உத்தியோக பூர்வமாக அறிவிக்காமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
""சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் சும்மா இருக்காது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று திராவிட முன்னேற்றக் கழக செயற் குழுக் கூட்டத்தில் சீறி உள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்தச் சீறல் காங்கிரஸ் கட்சிக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே உள்ளது. கூட்டணியை விட்டு வெளியேறினால் மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதனையும் இந்தச் சீற்றத்தின் மூலம் முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தி உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற் குழுக் கூட்டத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பு இல்லாமல் அவர்கள் கலந்து கொண்டிருக்க முடியாது. ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
கோவில்பட்டி இராதாகிருஷ்ணன், ஜெயங் கொண்டான் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இத்தகைய கோரிக்கைகள் விடுக்கப்பட முன்னரே தவறு செய்பவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றும் ஜெயலலிதா முடிவு எடுக்க தாமதப்படுத்துகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து மேலும் பலர் தமது பக்கம் வரப் போவதாக திராவிட முன்னேற்றக் கழகம் கொடி காட்டி உள்ளது. இந்நிலையில் எஞ்சி இருக்கும் தனது சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 28/02/10

உலகக்கிண்ணம்2010


கிரீஸ்
உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதிகாண் முதலாவது சுற்றில் தகுதி பெற தவறிய கிரீஸ் இரண்டாவது சுற்றில் உக்ரேனை வீழ்த்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
குழு 2இல் விளையாடிய கிரீஸ் 20 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது. 10 போட்டிகளில் விளையாடிய கிரீஸ் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. 20 கோல்கள் அடித்த கிரீஸுக்கு எதிராக 10 கோல்கள் அடிக்கப்பட்டன. 12 முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒரு முறை எச்சரிக்கை விடப்பட்டது.
குழு 2 இல் முதலிடம் பெற்ற சுவிட்சர்லாந்துக்கு எதிரான முதலாவது போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த கிரீஸ் இரண்டாவது போட்டியில் 2 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. லத்வியாவுக்கு எதிரான போட்டியில் 5 2 என்ற கோல் கணக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக கிரீஸும் உக்ரேனும் மோதின.
குழு 6 இல் 21 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்ற உக்ரேன் 10 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளைப் பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. 21 கோல்கள் அடித்த உக்ரேனுக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன.
கிரீஸுக்கும் உக்ரேனுக்கும் இடையேயான போட்டி கோல் எதுவும் அடிக்கப்படாமையினால் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.
இரண்டாவது போட்டியின் முதல் பாதியில் இரு நாடும் கோல் அடிக்காமையினால் போட்டி பரபரப்பானது. கிரீஸ் நாட்டு வீரர் டிமிரியோஸ் சல்பிங்திடிஸ் அடித்த கோலினால் வெற்றி பெற்ற கிரீஸ் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை பெற்றது.
மிலான் அணியின் முன்னாள் வீரரான கெரிரியோஸ் கைரிகோஸ், பென்பிகாவின் வீரரான கரகோனிஸ், நான்கு கோல்கள் அடித்த அங்கோலஸ் சரிஸ்ரெஸ் 10 கோல்கள் அடித்த தரோபானிஸ் கெகாஸ் ஆகியோர் மிரட்டத் தயாராக உள்ளனர். ரெகாங்கில் கிரீஸ் உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
குழு பீயில் ஆர்ஜென்டீனா, மெக்ஸிக்கோ, உருகுவே ஆகியவற்றுடன் கிரீஸ் உள்ளது.

உலகக்கிண்ணம்2010


ஸ்லோவேனியா
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் விளையாடுவதற்கு ஸ்லோவேனியா தகுதி பெற்றுள்ளது. முதல் சுற்றில் தகுதி பெறத் தவறிய ஸ்லோவேனியா இரண்டாவது சுற்றில் சிறப்பாகச் செயற்பட்டதன் மூலம் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
குழு மூன்றில் இடம்பிடித்த ஸ்லோவேனியா 20 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது. 10 போட்டிகளில் விளையாடிய ஸ்லோவேனியா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. 18 கோல்கள் அடித்த ஸ்லோவேனியாவுக்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. 24 தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
குழு மூன்றில் முதலிடம் பெற்று முதல் சுற்றிலேயே உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியாவுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கிலும் இரண்டாவது போட்டியில் 2 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றது.
இப்போட்டிகளில் ஸ்லோவேனியாவுக்கு எதிராக எந்த ஒரு நாடும் கோல் அடிக்கவில்லை. செக் குடியரசுக்கு எதிரான முதலாவது போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டி 0 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. செக்குடியரசுக்கு எதிராக ஸ்லோவேனியா கோல் அடிக்கவில்லை.
சன் மரியோவுக்கு எதிரான போட்டியில் 5 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் மோதியது ஸ்லோவேனியா.
முதல் சுற்றில் குழு 4 இல் விளையாடிய ரஷ்யா 22 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 10 போட்டிகளில் விளையாடிய ரஷ்யா ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சம
நிலைப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. 19 கோல்கள் அடித்த ரஷ்யாவுக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன.
ஸ்லோவேனியா ரஷ்யா ஆகியவற்றிற்கிடையிலான முதலாவது போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேனியா வெற்றி பெற்றது.
ரஷ்யாவும் ஸ்லோவேனியாவும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிகளின் அடிப்படையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை ஸ்லோவேனியா பெற்றது.
ஐந்து கோல்கள் அடித்த மிலிவோயிஜி நவ்கோவிக், கோல் கீப்பர் சாமீர்ஹன்
டனோவிக், தலைவர் ரொபேட் கொரேன் ஆகியோர் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மாஜெக்கைக் ஸ்லோவேனியாவின் பயிற்சியாளராக உள்ளார்.
குழு "சி' யில் இங்கிலாந்து, அமெரிக்கா, அல்ஜீரியா ஆகியவற்றுடன் ஸ்லோவேனியா உள்ளது.

Monday, March 1, 2010

அ.தி.மு.க.வைப் பிரிக்கும்தி.மு.க.வின் முயற்சி


திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறியது.
எனினும் ஜெயலலிதாவின் தலைமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலமுள்ள கட்சியாக்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பலர் வெளியேறியபோதும் வெளியேற்றப்பட்டபோதும் கட்சியை நல்லபடி வழி நடத்தினார் ஜெயலலிதா.
கருணாநிதிக்கே சவால் விட்டு அரசியலில் முன்னேறிய ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றுக்கூடாக மாறி விட்டதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்÷னற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி இருக்காது என்று மு.க. அழகிரி முழங்கியபோது அழகிரியின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு என எள்ளி நகையாடியவர்கள் இன்று அதிர்ச்சியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்குகின்றனர்.
பலமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனமாக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தீட்டிய திட்டம் மெதுமெதுவாக அரங்கேறி வருகிறது. ஆளும் கட்சியை எதிர்த்து போராட வேண்டிய ஜெயலலிதா தனது கட்சியில் உள்ளவர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தனது கட்சிக்காரர்களை உளவு பார்க்க வேண்டிய நிலையில் ஜெயலலிதா உள்ளார். எஞ்சி இருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி தாவாமல் தடுக்கும் காரியத்தில் கண்ணாக உள்ளார்.
எஸ்.வி. சேகர், வக்கீல் ஜோதி, செல்வகணபதி போன்றவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியதும் உஷாரடைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிலரின் மீது சந்தேகப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாறப் போகிறார்கள் என்ற சந்தேகிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் இரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன.
நீலகிரியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு வளையத்திற்குட்பட்ட 16 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அங்கு நடைபெறும் விவாதங்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் செல்வதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சந்தேகப் பட்டியலில் சில சட்ட சபை உறுப்பினர்களும் அடக்கம். கழகத் தலைவர் தங்களை இனங் கண்டு கொண்டதால்தான் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சந்தேகப் பட்டியலில் இருந்தவர்களில் அனிதா ராதா கிருஷ்ணனும் ஒருவர். தான் இனம் காணப்பட்டதை அறிந்த அனிதா ராதாகிருஷ்ணன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்த அனிதா ராதாகிருஷ்ணனின் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சந்தேகப் பட்டியலால் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பை தாமதமாக உணர்ந்து கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களை அரவணைத்துச் செல்ல முடிவு செய்தது. அதிருப்தியாளர்களை கொடநாட்டுக்கு அழைத்த கட்சித் தலைமை, அவர்களுக்கு விருந்தளித்து தனது நிலைமையை விளக்கியது. அதிருப்தியாளர்களை ஒதுக்கினால் அவர்கள் ஆளும் தரப்பில் ஐக்கியமாகி விடுவார்கள் என்ற கவலையில் இருந்த ஜெயலலிதா சற்று ஆறுதலடைந்தார்.
சந்தேகப்பட்டியலில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக உட் கட்சித் தேர்தலில் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு யாரும் மாறமாட்டார்கள் என்று ஜெயலலிதா திருப்தியடைந்த நிலையில் கோவில் பட்டி ராதாகிருஷ்ணனும் ஜெயங் கொண்டான் ராஜேந்திரனும் ஜெயலலிதாவின் கணிப்பைப் பொய்யாக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது சோனியாகாந்தி மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைவரான ராகுல் காந்திக்கு கருணாநிதி மீது நம்பிக்கை இல்லை. தமிழகத்துக்கு அவர் விஜயம் செய்தபோது முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. இதனை எல்லாம் புரிந்து கொண்ட கருணாநிதி காங்கிரஸ் கட்சிக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நெருக்கடி கொடுக்கும் திட்டத்தை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டார் என்ற தகவல் அண்மையில் கசிந்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்தால் அல்லது காங்கிரஸ் கட்சி நெருக்கடி கொடுக்கும் வகையில் பேரம் பேசினால் அதனை முறியடிப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 25 சட்டமன்ற உறுப்பினர்களை தன்வசம் இழுக்கும் ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகம் பூர்த்தியாக்கி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பவர்களை தடுத்துநிறுத்த வேண்டும். அல்லது அவர்களை விட செல்வாக்கு மிகுந்தவர்களை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வேண்டும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்பட்ட நெருக்கடியை ஜெயலலிதா எப்படித் தீர்க்கப் போகிறார் என்பதை அறிவதற்கு இந்திய அரசியல்வாதிகள் ஆவலாக உள்ளனர்.
இதேவேளை, கொடுமைகளைக் கண்டு பொங்கி எழுந்து வில்லன் கூட்டத்தை கூண்டோடு அழிக்கும் தமிழக கதாநாயகர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது என்று அஜித் கொளுத்திப் போட்ட வெடி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் விழாக்களில் கதாநாயகர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மிரட்டும் பாணியில் அழைப்பு விடுக்கப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வரின் முன்னிலையிலேயே அஜித் கூறியமை முதல்வருக்கு வக்காலத்து வாங்கும் சினிமாப் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழக முதல்வராக யார் இருந்தாலும் அவர்களைப் பாராட்டும் வைபவத்தில் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்பாக மிரட்டும் பாணியில் அழைப்பு விடுவது வழமையானது. தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் ஒன்றாகக் கலந்துள்ளது. அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். போன்றவர் சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்தவர்கள்.
சரத்குமார், நெப்போலியன், ராதாரவி, விஜயகாந்த், ராதிகா, எஸ்.எஸ். சந்திரன் போன்றவர்கள் அரசியலில் தீவிரமாக ஈடுபாடு காட்டுகிறார்கள். ரஜினி, விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வரப் போவதாக பரபரப்புக் காட்டுகிறார்கள். கமல், அஜித் போன்றவர்கள் அரசியல் வேண்டாம் என்று சினிமாவுக்கு தம்மை அர்ப்பணித்துள்ளனர்.
அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சினிமா கலைஞர்களை அரசியல் மேடை களில் வலுக்கட்டாயமாக ஏற்றுவது தவறு என்பதை துணிவுடன் அஜித் தெரிவித் துள்ளார். அஜித்தின் கருத்துடன் ஒத்துப் போகும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அஜித் தின் துணிச்சலான முடிவால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முதல்வர் கருணாநிதி மீதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு நெருக்கடி கொடுக் கக்கூடாது என்பதை முதல்வர் கருணாநிதியை திருப்திப்படுத்த நினைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/02/10