Friday, July 18, 2008

முஷாரப்பின் இரட்டைவேடம்



இராணுவச் சீருடையுடன் ஜனாதிபதியாக கோலோச்சும் முஷாரப்பின் இராணுவச்சீருடையைக் களையும்படி உலகெங்கிலும் இருந்து கோரிக்கை விடப்படுகிறது. அந்தக் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காது இராணுவச் சீருடையுடன் நாட்டை ஆட்சி செய்து வருகிறார் முஷாரப்.

இரத்தம் சிந்தாத இராணுவப் புரட்சியின் மூலம் 1999 ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீப்பின் அரசை அகற்றிவிட்டு இராணுவ ஆட்சியை ஏற்படுத்தினார் ஜெனரல் முஷாரப். இராணுவ ஆட்சியினால் நாட்டைக் கட்டிöயழுப்ப முடியாது என்பதை எதிர்க்கட்சிகள் கூறிய போதும் அதனை பொருட்படுத்தாது தன்னை எதிர்ப்பவர்களை அடக்கும் நடவடிக்கையில் முனைப்புக் காட்டினார் முஷாரப்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பெனாசீர் பூட்டோ ஆகிய இருவரும் தமது
தாய்நாட்டுக்கு வரமுடியாத நிலையில் உள்ளனர். முஷாரப்பை எதிர்த்து அரசியல் நடத்த முடியாதுள்ளதால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஜனநாயகத்துக்காகப் போராடுகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அரசி
யல் வாதியுமான இம்ரான்கான் முஷாரப்பை எதிர்த்து அரசியல் நடத்த முடியாத நிலை
இருப்பதால் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை என்பதை உலக நாடுகள் அறிவித்து வந்த நிலையில் தேர்தல் ஒன்றை நடத்த முஷாரப் முன்வந்தார். 2002 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலையில் உள்ள வேளையில் தேர்தல் ஒன்றை நடத்தி தன்னைத்தானே
ஜனாதிபதியாக்கினார். முஷாரப் ஜனாதிபதியானதும் பாகிஸ்தானின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்தன. முஷாரப்பை எதிர்த்து அரசியல் நடத்துவதற்காக ஷெரீப்பும், பெனாசீரும் வெளிநாட்டில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப் 30 ஆம் திகதி நாடு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார். முஷாரப் பினால் பதவியிலிருந்து அகற்றப்பட்டு தாய்நாட்டை விட்டு தப்பி ஓடிய நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தானில் கால்பதித்தால் அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் அவரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி முஷாரப்பின் அரசு அனுமதியளிப்பது சந்தேகம். உயர் நீதிமன்ற நீதிபதி இட்திகார் சௌத்திரி யை ஜனாதிபதி முஷாரப் பதவி நீக்கம் செய்ததனால் ஏற்பட்ட வன்செயல்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஜனாதிபதி முஷாரப்புக்கு எதிராகவும் இப்திகார் சௌத்திரி
க்கு ஆதரவாகவும் பல நீதிபதிகள், தமது பதவியை இராஜினாமாச் செய்தனர். வக்கீல்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்செய்தனர்.

இந்தக் கலவரங்களினால் பலர்கொல்லப்பட்டனர். வன்செயல்களினால் பாகிஸ்தானின் மக்கள்
நிம்மதி இழந்துள்ளனர். ஜனாதிபதி, இராணுவத் தளபதி ஆகிய இரு பதவிகளில் ஒன்றை முஷாரப் விட்டு விட வேண்டும் என்ற அழுத்தம் உலகில் இருந்து எழுந்துள்ளது. இராணுவ சீருடை எனது இரண்டாவது தோல் என்று கூறிய ஜனாதிபதி முஷாரப் இரண்டு பதவிகளை
யும் கெட்டியாகப் பிடித்துள்ளார்.

இராணுவத் தளபதியும் ஜனாதிபதியும் வெவ்வேறானவர்களாக இருக்க வேண்டும் என்றே அமெரிக்காவும் விரும்புகிறது. அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்ற முஷாரப் முன்வர
மாட்டார். அவரின் உடலிலே இராணுவ இரத்தம் ஓடுகிறது. ஜனாதிபதி முஷாரப்புக்கு எதிராக
பாகிஸ்தானில் ஆங்காங்கே கலவரங்கள் ஏற்படுகின்றன. கலவரங்களை அடக்குவதற்கு கடுமையான சட்டங்களைப் போட முடியாத நிலையில் முஷாரப் உள்ளார். முதலாவது, இரண்டாவது உலகப் போரின் போது எதிரெதிர் அணியில் இருந்து யுத்தம் புரிந்த நாடுகள்
அனைத்தும் ஒற்றுமையாகி விட்டன.

ஒரே நாடாக இருந்து பிரிந்த இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரிகளாகவே இருக்கின்றன. அண்டைநாடுகளுடனும் பாகிஸ்தான் சுமுகமான உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. இலங்கையுடன் பாகிஸ்தான் நெருங்குவதை இந்தியா விரும்பவில்லை. இலங்கைக்கு
பாகிஸ்தான் உதவ முன்வரும் வேளைகளில் இந்தியா தலையிட்டு தனது பங்களிப்பையும் இலங்கைக்கு வழங்கியது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பூட்டோவின் வரவு பாகிஸ்தானில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இரட்டை வேடத்திலிருந்து முஷாரப் மாறப்
போவதில்லை.

ரமணி மெட்ரோநியூஸ் 28 07 2007

சென்னையைநெருங்கும் ஆப‌த்து



தமிழக அரசியல் கட்சிகளினதும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களினதும் கடும் எதிர்ப்புகளுக்கு
மத்தியில் அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க போர்க்கப்பலான "யு.எஸ்.எஸ்.
நிமிட்ஸ்' சென்னையில் நங்கூரமிட்டது.

"நிமிட்ஸ்' என்னும் இப்போர்க் கப்பல் அணுசக்தி மூலம் இயங்குவதால் அக்கப்பலி
னுள் இரண்டு அணு உலைகள் உள்ளன. இக்கப்பலில் அணுக்கசிவு ஏதாவது ஏற்பட்டால்
அது தமிழ் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை தமிழகக் கட்சிகளும்,
சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். இதுதவிர இக்கப்பலில் அணுஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.



ஈராக் போரில் பெரும் பங்கு வகித்த இக்கப்பலை மிதக்கும் குட்டித்தீவு ஓல்ட்சால்ட்
(பழைய உப்பு) என்று வர்ணிக்கிறார்கள். 4.5ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கப்பல்
1092 அடி நீளமும், 252 அடி அகலமும் கொண்டது. 23 மாடிகளைக் கொண்ட இக்கப்பலில் 65 போர் விமானங்கள் உள்ளன. முப்பது விநாடிக்கு ஒரு போர் விமானம் புறப்
பட்டு எதிரியின் இலக்கைத் தாக்கும் வகையில் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்போர்க் கப்பலில் போர் விமானங்கள் தவிர ஆபத்து வேளையில் உதவி செய்
யக் கூடிய விமானங்களும், ஹெலிகொப்டர்களும் உள்ளன. 53 படுக்கை அறைகளைக்
கொண்ட சிறு வைத்தியசாலை உள்ளது.அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
வைத்தியர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த முகம்மது கமிஸ் என்பவர்.
450 உயர் அதிகாரிகளும் 6000 வீரர்களும் இதில் பெண் அதிகாரிகளும் பெண் வீராங்கனை
களும் உள்ளனர். கடல் நீரை பிரிப்பதற்கு தனிப் பிரிவு உள்ளது. தினமும் சுமார் 4
இலட்சம் நல்ல தண்ணீர் இக்கப்பலில் உள்ள பிரிவின் மூலம் உற்பத்தியாகிறது.
இக்கப்பலில் உள்ள உணவு வகைகளை 70 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் வசதி
உள்ளது.இக்கப்பலில் உள்ள தபால் நிலையத்தில் வருடம் 10 இலட்சம் கடிதங்கள்
கையாளப்படுகின்றன. விமானம், ஹெலிகொப்டர், கப்பல் ஆகியவற்றின் மூலம் இக்க
ப்பலுக்கான தபால் விநியோகம் நடைபெறுகிறது.

தேவைக்கு அதிகமாக 50 சதவீத ஆயுதங்களும், தேவைக்கு அதிகமான இரண்டு
மடங்கு எரிபொருளும் சேமித்து வைக்கக்கூடிய வசதி இக்கப்பலில் உள்ளது. மூன்று
வழிபாட்டுத் தலங்கள், மாநாட்டு அறை,பொழுதுபோக்கு கூடம் என்பன இக்கப்பலில் உள்ளன.

1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதிஇக்கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இரண்டாவது உலகப் போரில் பசுபிக் கடல்பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு வெற்றிø
யப் பெற்றுக் கொடுத்த இராணுவ கொமாண்டர் ஜெஸ்டர் நிமிட்ஸ்ஸின் சேவைø
ய கௌரவிப்பதற்காக இக்கப்பலுக்குநிமிட்ஸ் என்று பெயரிடப்பட்டது. இரண்டாவது
உலக மகா யுத்தத்தின்போது ஃப்ளீட் என்னும் போர்க்கப்பலின் கப்டனாக இருந்தவ
ர் நிமிட்ஸ். இக் கப்பலில் இருந்து புறப்பட்ட விமானங்கள்தான் ஹீரோஷிமாவிலும்
நாகசாகியிலும் அணுகுண்டுகளை வீசின.

32 வருடங்கள் கடலில் மிதக்கும் நிமிட்ஸ் என்ற இக்கப்பலினால் இதுவரை எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. உலகைச் சுற்றும் இந்த போர்க்கப்பல் இந்தியாவுக்கு செல்லும் என முதலில் அறிவிக்கப்படவில்லை. பருவ மழையின் காரணமாகவே இது இந்தியாவில் நங்கூரமிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தமது பணத்தில் 1.6
இலட்சம் இந்திய ரூபாவை செலவிட உள்ளனர்.

ஜூலை 4 ஆம் திகதியாகிய அமெரிக்கசுதந்திர தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினர். சென்னை மரீனா கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் வீரர்கள்
ஈடுபட்டனர்.

நிமிட்ஸ் என்னும் இந்த பிரமாண்டமான போர்க் கப்பல் இயங்குவதற்கு இரண்டு
அணு உலைகள் உள்ளன. இவற்றிலி இருந்து 3035 மெகாவாட்ஸ் சக்தி உற்பத்தியாகிற
து. இந்தக் கப்பல் இரண்டு கடல் மைல் தூரத்தில் நங்கூரமிட்டுள்ளது. (தரையில்
இதன் தூரம் 3.7 கி.மீற்றர்) தமிழகத்தின் கால்பாகம் அணுமின் நிலையத்தில் 220 மெகாவாட்ஸ் சக்தியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து 1000 மெகாவாட்ஸ் சக்தியும் உற்பத்தியாகின்றன.

கூடங்குளத்தின் அணுமின் நிலையத்தில் இருந்து ஒன்றரை மைல் தூரத்தில் மக்கள்
குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிமிட்ஸ் கப்பலினால் தமிழகத்துக்கு அணு
பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நிமிட்ஸ் நங்கூரமிட்டு நிற்கும் இடத்தில் இருந்து 200 மீற்றர் சுற்றளவு தூரத்தில் வேறு கப்பல்களோ படகுகளோ செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. போர்க் கப்பலின் பாதுகாப்புக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிமிட்ஸ் போர்க் கப்பலில் இருந்து அணுக்கசிவு ஏற்படுகிறதா என்பதை இந்திய விஞ்ஞா
னிகள் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். நிமிட்ஸுக்கு
அருகே இந்திய போர்க் கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் 24 மணி நேரமும் இந்திய விஞ்ஞானிகள் அணுக்கசிவை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னை துறைமுகத்திலும் கரையில் நடமாடும் வாகனங்களிலும் அணுக்கசிவு ஏற்படுகிறதா என்பதை இந்திய விஞ்ஞானிகள் அவதானித்தனர்.இதேவேளை அமெரிக்காவின் நிமிட்ஸ் சென்னைக்கு
அருகே வருவதற்கு முன்னரும், அக்கப்பல் கடலில் நங்கூரமிட்டு நின்று கொண்டிருக்கை
யிலும், சென்னையை விட்டு சென்ற பின்னும் மண், காற்று, உணவு ஆகியவற்றில்
அணுகசிவு இருந்ததா என விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள்.

இந்தியாவுக்கு இதுவரை வெளிநாட்டைச் சேர்ந்த 10 அணு ஆயுத போர்க் கப்பல்கள்
வந்து சென்றுள்ளன. அப்போதெல்லாம் இல் லாத எதிர்ப்பு இப்போது எழுந்துள்ளது. நிமிட்ஸி
னுள் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அணு ஆயுதம் இருக்கா
இல்லையா என்பதை வெளிப்படையாகக் கூறுவதற்கு கொமாண்டர் ரியர் அட்மிரல்
ஜான் டெரன்ஸ் பிளேக், கமாண்டர் கப்டன் மைக்கல் சி மனாசிர் ஆகியோர் மறுத்து விட்டனர்.

இராணுவ இரகசியங்களை எந்த இராணுவத்தினரும் இலகுவில் வெளியிட மாட்டார்
கள். ஆகையினால் அது பற்றிய உண்மயை அறிய முடியாது. போர் நடவடிக்கைக்
காக இக்கப்பல் இப்பிராந்தியத்தினுள் வரவில்லை என்றாலும் அமெரிக்கா தனது
இராணுவ வல்லாண்மையை வெளிப்படுத்தவே இக்கப்பலை இந்தியாவுக்கு அனுப்பி
யுள்ளது என்ற எண்ணம் ஒரு சில இந்தியரிடம் உள்ளது.

57 வருட அணு ஆயுத திட்டத்தில் ஒருமுறை கூட விபத்து ஏற்படவில்லை. ஆகை
யினால் அணுக் கசிவு, அணுக்கதிர் வீச்சு பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
இக்கப்பலின் பணியாளர்களின் குழந்தைகள் கூட வந்து போவார்கள். இதுமுழுக்க முழுக்க பாது
காப்பான கப்பல் என்றுகொமாண்டர் ஜான்டெரின் பிளக் கூறியுள்ளார். அணுசக்தியால் இயங்
கும் அமெரிக்க போர்க்கப்பல் "நிமிட்ஸ்' சிறிய அளவில் விபத்துக்குள்ளானால் அது வெளியில் தெரியாது. இராணுவ இரகசியமாக அது மறைக்கப்பட்டு விடும் வாய்ப்பு
உள்ளது.

கரைப்பகுதியில் உள்ள மக்களுக்கு அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்தும் அளவுக்கு பெரிய விபத்து ஏற்பட்டால் அதை மறைக்கமுடியாது. ஆனால் சிறிய அளவில் விபத்து ஏற்பட்டால்
அது வெளியுலகத்துக்கு தெரியாது. இவ்வகை கப்பல்களில் சிறிய விபத்துக்கூட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதால்தான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது
சென்னை வந்த போர்க் கப்பல் நிமிட்ஸ் 1975 ஆம் ஆண்டு முதல் இயங்குகிறது.
இதுவரை இக்கப்பலில் ஒரு விபத்து கூட ஏற்பட்டது இல்லை. இவ்வகைக் கப்பல்களில்
கப்பலை இயக்குவதற்கு தேவையான சக்திøய வழங்க அணு உலைகள் இருக்கும்.
இதேபோன்ற அணு உலைகள் மூலம்தான் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றன. என்றாலும் மின் அணு உலைகளை விட, கற்பனை செய்துவிட முடியாத அளவுக்கு மிக ஆபத்தான
அணு உலை கப்பலுக்குள் உள்ளது.

அதற்கு காரணம், போர்ச் சூழ்நிலையில் திடீöரன ஒரு நிமிடத்துக்குள் குறிப்பிட்ட இடத்திலிருந்து வேகமாக கிளம்ப வேண்டியிருக்கும். அதற்கு தேவையான சக்தியை வழங்குவ
தற்காகத்தான் இந்த போர்க் கப்பல்களில் சக்திவாய்ந்த அணு உலைகள் அமைக்கப்
பட்டுள்ளன. ஆயிரம் அடி நீளத்தில் 4.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தக் கப்பல், ஏறத்தாழ ஆறாயிரம் பேருடனும், 80 விமானங்களுடனும் ஒரு இலட்சம் தொன் சுமையை சுமந்து கொண்டு மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இது செல்ல அணு உலை வெளியிடும்
சக்தி மிக அவசியம். அணு உலைகளுக்கு எரிபொருளாக யுரேனியம் என்ற கனிமம்
பயன்படுகிறது. சாதாரண மின் அணு உலைகளில் இந்த யுரேனியம் செறிவூட்டப்பட்டு
பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும். இதில், பெரிய அளவிலான விபத்துகளுக்கு
வாய்ப்பு குறைவு. ஆனால் அணு குண்டுக்குள் இருக்கும் யுரேனியம் மிக அதி
கமாக செறிவூட்டப்பட்டிருக்கும். சேதம் அதிகமாக விளைவிக்க வேண்டும் என்பதற்காக
அந்த ஏற்பாடு. இதேபோல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தான் நிமிட்ஸ் கப்ப
லின் என்ஜின் பகுதியில் உள்ளது.

இந்தக் கப்பலே ஒரு பெரிய அணு உலைக்கு சமமானதுதான். அத்துடன் அக்கப்பலுக்குள் அணு குண்டுகள் இருக்கும் பட்சத்தில் சாதாரண விபத்து கூட பெரிய விபத்தாக
மாறிவிடும் அபாயம் இருக்கிறது. பொது மக்களுக்கு கப்பல் தொடர்பான பயம் ஏற்
பட்டு விடக் கூடாது, அது கொண்டிருக்கும் அபாய அளவை சுற்றுச் சூழல் பாதுகாப்பு
ஆர்வலர்கள் மதிப்பிட்டு விடக் கூடாது. மற்றும் இராணுவ இரகசியம் உள்ளிட்ட காரணங்களினால் அதில் அணு குண்டுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை கப்பல்
இராணுவ அதிகாரிகள் உறுதி செய்யமறுக்கின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் இந்
தக் கப்பலில் பொதுவாக அணு ஆயுதங்கள் கொண்டு செல்வது இல்லை என்றும் நம்பப்படுகிறது. அணு சக்தியால் இயங்கும் கப்பலில் ஏற்படும் எல்லா விபத்துகளையும் "விபத்து' பட்டியலில் சேர்க்க மாட்டார்கள். பெரிய அளவில் விபத்து நடந்தால்தான் "விபத்து' என்று குறிப்பிடுவார்கள். நிமிட்ஸ் கப்பலில் விபத்துகள் ஏற்படாவிட்டாலும் இதுபோன்ற அணுசக்தி கப்பல்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதுபோன்ற சிறு விபத்துகளால் கப்பலில் உள்ளவர்களுக்கும், அந்தப் பகுதியின் காற்று மண்டலத்திலும் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டிருக்கிறது என்று இதற்கு முந்தைய ஆய்வுகள்
குறிப்பிடுகின்றன. கடந்த 1978 ஆம் ஆண்டில் யு.எஸ்.எஸ். பபர் எனும் அணுசக்தி கப்ப
லில், அணுக்கதிர் வீச்சுடன் கூடிய நீர் கப்பலிலிருந்து வெளியேறியது. ஆனால் இது தொடர்பாக பத்திரிகைகளுக்குக்கூட தகவல் தரப்படவில்லை. கடந்த 50 ஆண்டு காலத்தில் 150 முறை பயணங்களில் 13 கோடியே 50 இலட்சம் மைல்களில் 50 நாடுகளை அணுசக்தி கப்பல்கள் உலகை சுற்றி வந்திருக்கின்றன. இக்கப்பல்களில் எந்த அணு உலையும் வெடித்து விபத்து ஏற்படவில்லை. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 83 போர்க் கப்பல்கள், 72 நீர்
மூழ்கி கப்பல்கள், 10 விமானத்தாங்கி கப்பல்கள் மற்றும் ஓர் ஆராய்ச்சி கப்பல் அணு சக்தி
மூலம் இன்றும் கடலில் இயங்கி வருகின்றன. ஒருவேளை 10 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படுத்தும் அழிவை இந்தக் கப்பல் சந்தித்தால் கூட அணு உலைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிவு அகற்றும், அவசர கால நடவடிக்கை ஆகிய அனைத்தும் சர்வதேச விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றித்தான்நடக்கின்றன. அணு உலையை குளிர்விக்கும் நீரில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்கம் கலக்காதவாறும் வடிவøமக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசின்
செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நிமிட்ஸ் கப்பலில் இதுவரை விபத்து ஏற்படாததாலும்
விபத்து தடுப்பு பாதுகாப்பு தொழில்நுட்பம் முன்பை விட தற்போது முன்னேறியிருப்பதாலும்தான் இந்தக் கப்பலால் பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்று அமெரிக்கா அடித்துச் சொல்கிறது. இந்திய துறைமுகத்தில் அணுசக்தி கப்பலை அனுமதிப்பது இதுதான் முதன்முறை அல்ல. ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சாகரா எனும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டு இந்தியத் துறைமுகங்களில் வலம் வந்தது. பிரான்ஸ் நாட்டின் அணுசக்தி கப்பல்கள் நான்கு முறை இந்தியத்துறை முகங்களில் நங்கூரமிட்டிருந்தன. இங்கிலாந்தின் அணுசக்திக் கப்பல் ஒருமுறை இந்தியா வந்துள்ளது. அமெரிக்காவின் அணுசக்தி கப்பல்கள் ஏற்கனவே ஐந்து முறை இந்தியாவுக்கு வந்து போயுள்ளன.

ரமணி
மெட்ரோநியூஸ்
07 07 2007

முடிவிலும் ஒன்று தொடரலாம்

அவன் கையில் அழகான குழந்தையின் படம் இருந்தது. அதனை எங்கே தொங்க விடுவது என்று அவனும் அவளும் சிறிது நேரம் சர்ச்சைக்குட்பட்டõர்கள் இருவரும் இணைந்து அந்தப் படத்தைத் தொங்க விடும் இடத்தைத் தீர்மானித்தார்கள்.

அவன் ஒரு மேசையில் ஏறி நின்று ஆணியை அடித்தான். அவள் மேசையைக் கவனமாகப் பிடித்தாள். அவன் அடித்த ஆணிகளில் ஒன்றுகூட சுவரில் ஏறவில்லை. முனை மழுங்கி, உடைந்து நெளிந்து போன ஆணிகள் பல மேசைக்குக் கீழே கிடந்தன. அப்போது அங்கே வந்த ஒரு பெண் ஒரு ஆணியைக் கொடுத்தாள். இரண்டு முறை அடித்ததும் சுவரில் சிக்கென இறுகியது ஆணி. அவன் அதிசயமாக அவளைப் பார்த்தான்.

அவள் சிரித்துக் கொண்டு இரண்டு விரல்களை வடிவில் உயர்த்திக் காட்டினாள். அவளின் விரல்களுக்கிடையில்டயமண்ட்என்ற ஆங்கில எழுத்து மின்னியது.

தொலைக்காட்சி வானொலி, பத்திரிகை ஆகியவற்றில் வெளியான டயமண்ட் ஆணிபற்றிய விளம்பரங்கள் அøனத்தும் அமைதியாகிவிட்டன. மூன்று வருடங்களில் கிடுகிடு வென முன்னேறிய டயமண்ட் ஆணி முதலிடத்தைப் பிடித்தது. தரத்தில் சிறந்த ஆணி என்ற உள்நாட்டு விருதுகளும் சர்வதேச விருதுகளும் டயமண்ட் ஆணிக்கு கிடைத்தன.

வெளி உலகில் டயமண்ட் ஆணிக்கு மதிப்பு இருந்தாலும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் இருந்த மனக் கசப்பு வெளி உலகத்துக்குத் தெரியவில்லை. ஊழியர் சேமலாபநிதி என்பனவற்றினைக் கழித்துக் கொண்டுதான் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால், மூன்று வருடங்களாக அவை கட்டப்படவில்லை.தொழிலாளர்கள் அங்கு வேலை செய்வதற்கான அத்தாட்சி எவையும் இல்லை. மூன்று வருடங்களாக யாரும் நிரந்தரமாக்கப்படவில்லை. இதற்கு முடிவு காண வேண்டும் என்று நினைத்த தொழிலாளர்கள் ஒருநாள் திடீரென வேலை நிறுத்தம் செய்தனர்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கின. நிர்வாகம் இவற்றைக் கண்டு கொள்ளாது நிறுவனத்தை இழுத்து மூடியது. பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று அடித்துக் கூறிவிட்டது.

டயமண்ட் ஆணித்தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டதனால் கந்தையாவின் குடும்பமும் தத்தளித்தது. நானூறு தொழிலாளர்கள் ஒரே நாளில் நடுத்தெருவில் விடப்பட்டனர். கந்தையாவின் மூத்த மகன் குமரன் உயர்வகுப்பு படிக்கிறான். வரவு செலவு தெரியாது செலவு செய்யும் இரண்டாவது பையன் வரதன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். செல்லமும் சிணுங்கலுமாக தாயின் சேலையைப் பிடித்தபடி இருக்கும் கடைக்குட்டி மாலதி ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.

மூன்று மாதமாக கடன்பட்டு குடும்பத்தைப் பார்த்த கந்தையா அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தவித்தார்.

"அப்பா ஆதித்தன் அங்கிள் வாறார்'' இளையவள் மாலதி கட்டியம் கூறினாள்.
வேலை இல்லாமல் இருக்கும் மூன்று மாதமும் கந்தையாவுக்கு ஆறுதல் சொல்பவன் ஆதித்தன். முற்றத்தில் நிற்கும் மாமரத்தில் சைக்கிளைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த ஆதித்தன் கந்தையாவின் முன்னால் உள்ள கதிரையில் அமர்ந்தான்.

""மீனாச்சி தம்பிக்கு தேத்தண்ணி கொண்டுவா'' என குசினிப்பக்கம் பார்த்து சத்தமாகக் கூறிவிட்டு தம்பி நிலைமை என்ன மாதிரிக் கிடக்கு'' என்று ஆதித்தனிடம் கேட்டார்.
""சரிவாற மாதிரித் தெரியவில்லை. நிர்வாகம் இப்போதைக்கு விட்டுக் கொடுக்க மாட்டாது. வேலைக்கு வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்துமாம் இல்லை என்றால் புதுசா ஆட்களை எடுத்து கம்பனியை நடத்துமாம் என்றான் ஆதித்தன்.

ஆதித்தனும் கந்தையாவும் கதைத்துக்கொண்டிருக்கும் போது தேநீருடன் வந்த மீனாட்சி தேநீரை ஆதித்தனிடம் கொடுத்துவிட்டு ""என்ன முடிவு வரும் தம்பி'' என ஆவலுடன் கேட்டாள்.வாற பதினைந்தாம் திகதிக்கு முதல் எல்லோரையும் வேலைக்கு வரட்டாம். இல்லையென்றால் வேலை நிறுத்தம் செய்கிறவர்கள் தாங்களாகவே வேலையிலிருந்து நின்றதாக கருதி புதிய ஆட்களை எடுப்பினமாம்' என்றான் ஆதித்தன்.

""தம்பி மூன்னூறு பேர் ஆணி பக்ரறியில் வேலை செய்தனாங்கள் அதில நாங்கள் ஐம்பது பேர் இனி அங்கு வேலை செய்ய மாட்டம். மிச்சப் பேர் கட்டாயம் போவினம் என்றார் கந்தையா.

""உங்கட கோரிக்கைகள் நியாயமானது தான் ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் தானே'' தனது சந்தேகத்தைக் கேட்டான் ஆதவன்.

""எங்கட முதலாளியைப்பற்றி எனக்கு நல்லா தெரியும் தம்பி அவயின்ர கௌரவம் முக்கியமானது. தொழிலாளர் நலன் இரண்டாம் பட்சம்தான் காமன்ஸ், பெயின்ற் எண்டு இன்னும் ஏழு பக்ரறி அவைக்கு கிடக்கு. இந்த பக்ரறி மூடினதால அவைக்கு இழப்பு இல்லை. விரல் போனவைக்கும் கைபோனவைக்கும் நட்ட ஈடு கொடுக்கல அவங்கள வேலையால நிப்பாட்டிப் போட்டினம். உயிர் போனாக் கூட ஒண்டும் தர மாட்டினம்'' என்றார் கந்தையா.
கந்தையா கூறிய அனைத்தும் ஆதித்தனுக்கும் தெரிந்த விடயம்தான். மன ஆறுதலுக்காக கந்தையா கூறியதைக் கேட்டான் ஆதித்தன்.

""மீனாச்சி தான் யோசிக்கிறாள். இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு தம்பி. இந்த முறை வெள்ளாமை என்ன மாதிரி? ""எனக்கேட்டார் கந்தையா.
""வயல் நல்லா இருக்கு எட்டுக்கு பத்து தேறும் எண்டு நினைக்கிறேன்"" எனக்கூறிய ஆதித்தன் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு கந்தையாவின் வீட்டை விட்டு வெளியேறினான்.
டயமண்ட் ஆணித் தொழிற்சாலைக்கு புதிதாக தொழிலாளர்களை சேர்ப்பதற்கான விளம்பரம் பத்திரிகைகளில் பிரசுரமாகியது. நான்கு மாதங்களின் பின்னர் நல்லதொரு நாளில் டயமண்ட் ஆணித்தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கப்போவதாகவும் பத்திரிகைகளில் விளம்பரம் வெளிவந்தது.

கந்தையாவின் ஊரைச்சேர்ந்த மூன்று பேர் டயமண் ஆணித்தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்துள்ளதாக கந்தையா அறிந்தார். அவர்களில் ஆதித்தனும் ஒருவர் என்பதை அறிந்த கந்தையா ஆச்சரியப்பட்டார்.

ஆதித்தனைப்பற்றி கந்தையா வைத்திருந்த எண்ணம் எல்லாம் தவிடு பொடியானது. ஆதித்தன் இப்படிப்பட்ட ஒருவேலையைச் செய்வான் என கந்தையா கனவிலும் நினைக்கவில்லை. டயமண்ட் ஆணித்தொழிற்சாலை மீண்டும் இயங்கத் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. கந்தையாவுக்கு இன்னமும் வேலை கிடைக்கவில்லை.
""அப்பா ஆதித்தன் மாமா இந்தக் கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னவர் என்று ஒரு கடிதத்தை தகப்பனிடம் கொடுத்தான் வரதன்.

வேண்டா வெறுப்பாக கடிதத்தை வாங்கி படித்தார் கந்தையா.
அன்பின் கந்தையா அண்ணா அறிவது.

எனது முதல் மாத சம்பளம் அனுப்பியுள்ளேன். உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை இந்த என்பலப் உங்களைத் தேடிவரும்.
அன்புடன்
ஆதித்தன்

""ஏ வரதா ஆதித்தன் எங்கேடா ஓடடா ஓடு ஓடிப்போய் அவனைக் கூட்டிவா"" என சத்தமாகச் கூறினார் கந்தையா.

சூரன் ஏ. ரவிவர்மா
மித்திரன் வாரமலர் 20 07 2008

சர்வாதிகாரியா?தியாகியா?

ஈராக்கின் சர்வாதிகாரி, ஈராக்கில் உள்ள ஷியா, குர்து இன மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்றொழித்த கொடுங்கோலன்'' இவைதான் மேற்குலக நாடுகள் சதாமை வர்ணித்த வார்த்தைகள். சதாம் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்திருந்தது. அதற்கு வசதியாக பேரழிவு ஆயுதங்கள் பலவற்றை ஈராக் வைத்திருக்கிறது என்ற குற்றம் சுமத்தப்பட்டது.ஆனால் சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு கூறப்பட்ட குற்றச் சாட்டு சற்றும் எதிர்பாராதது. 1982ஆம் ஆண்டு 148 ஷியா முஸ்லிம் மக்களைக் கொலை செய்ததாலேயே சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.



1988ஆம் ஆண்டு விஷவாயு மூலம் 5 ஆயிரம் பேரைக் கொலைசெய்தது, குவைத்தை ஆக்கிரமித்தது, மதச்சார் பற்ற மதரீதியான கட்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டது, வடக்கு ஈரானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களைத் துரத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம், அவை பற்றிய விசாரணைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தக்குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்பட முன்னரே சதாம் ஹுசைனுக்கு அவசர அவசரமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்கப் படையினால் கைதுசெய்யப்பட்ட சதாம் ஹுசைனை ஈராக்கிய நீதிமன்ற
ம் விசாரிக்கும் என்ற அறிவிப்பு வெளிவந்த உடனேயே சதாமின் மரணதண்டனை
ஊர்ஜிதமானது. சர்வதேச நீதிமன்றத்தின் முன் சதாம் ஹுசைனை நிறுத்தியிருந்தால் அவருக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கும். அப்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்திருப்பார். அந்தப் பதில் சில வேளையில் அமெரிக்காவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கும்.

இரண்டாவது உலகப் போரின் பின்னர் ஹிட்லரின் நாஜி படைத்தலைவர்களின் போர்க் குற்றங்களை விசாரித்த நூசெம்பர்க் நீதிமன்றம் குற்றவாளிகள் தமது தரப்பு நியாயத்தைக்கூற சந்தர்ப்பமளித்தது. ஈராக்கில் அதற்கெல்லாம் சந்தர்ப்பம் வழங்கப்படவில்ல. சதாமின் வாதத்தையைச் கேட்பதற்கு ஈரான் நீதிமன்றம் தயாராக இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதிலேயே ஈராக் நீதிமன்றம் உறுதியாக இருந்தது.

ஈராக் மீதான படையெடுப்பு அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. பிரதமர் பிளேயர் பதவி விலகும் நிலையை ஈராக் படையெடுப்பு உருவாக்கியது. அதேபோல் புஷ்ஷின் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியடையவும் ஈராக் படையெடுப்பு காரணமானது. சதாமின் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட மிகமோசமான நிலையில் ஈராக்
உள்ளது.

ஈராக்கில் தினமும் சராசரியாக 100 பேர் மரணமடைகின்றனர். எப்போது குண்டு வெடிக்கும், எப்போது கைது செய்யப்படுவோம் என்ற மரண அச்சத்துடனேயே ஈராக் மக்கள் வாழ்கின்றனர்.
சர்வாதிகாரி சதாமிடமிருந்து ஈராக்கை மீட்கப் புறப்பட்ட அமெரிக்காவின் தலைமையிலான படை ஈராக்கைச் சுடுகாடாக மாற்றியுள்ளது. சதாம் மரணமானால் வன்செயல் அதிகரிக்கும் என்பது வெளிப்படை.

ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படைகளை வாபஸ் பெறவேண்டும் என்று
அமெரிக்காவில் கோசம் எழுந்துள்ளது. ஈராக்கில் அமெரிக்கப் படை நிலைத்து
நிற்கவேண்டுமானால் அங்கு வன்செயல்கள் அதிகளவில் நடைபெறவேண்டும். சதா
மின் மரணம் ஈராக்கில் வன்செயலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்ல. சதாமின் எதிரி
யான ஷியா முஸ்லிம்களின் முன்னிலயிலேயே அவர் தூக்கிலிடப்பட்டார். தனது ஆட்சிக்காலத்தில் தனது எதிரிகளை தூக்கில் போட்ட அதே சிறைக்கூடத்திலேயே நானும் ஒருநாள் தூக்கில் தொங்குவேன் என சதாம் ஹுசைன் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

அமெரிக்காவின் துணையுடன் ஈரானில் அட்டூழியம் புரிந்த சதாமுக்கு அதே அமெரிக்காவின் துணையுடன் அவரது பரம எதிரி கள் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். அமெரிக்காவிடம் அடிமைப்பட்டிருக்கும் ஈராக்கில் தனது உடல் புதைக்கப்படக்கூடாது என்று சதாம் விரும்பினார்.
ஆனால் அவரது விருப்பம் நிறைவேற்றப்படவில்லை.
சதாமின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட ஷியா குர்துஇன மக்களின் உறவினர்கள் சதாம் தூக்கில் தொங்கி உயிரிழப்பதைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.ஷியா முஸ்லிம்களின் வலி
மைமிக்க தலைவரான "முக்டதா'என்பவரின் பெயர் சதாமுக்கு முன்னால் உச்சரிக்கப்பட்டது. ஈராக்கின் மூலைமுடுக்கெல்லாம் தனக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டு அழித்தொழித்த சதாம் தன் முன்னால் தனது அரசியல் எதிரியான முக்டதாவின் ஆட்கள் இருப்பதை அப்போது தான் அறிந்து கொண்டார். ஈராக்கை கட்டியாண்ட சதாமின் கரங்களில் இறுதிவரை இருந்த குரானும் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதியின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டன. தன்னைஎதிர்த்தவர்களை அடக்கி
ஒடுக்க உத்தரவு போட்ட கரங்கள் செயலிழந்தன.மரணப் பாதையை துணிந்து தேர்ந்தெடுத்த
சதாம் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகி "யா அல்லா' என்றார். ஷகாதாவை உச்சரித்தபடி அவரது உயிர் பிரிந்தது.

மரணதண்டனை கைதியின் முகத்தை மூடுவதுதான் வழமை. தனது மரணத்தின்போதும் முகத்தை மூடக்கூடாது என்று சதாம் ஹுசைன் கூறியதால் அவரது முகம் மூடப்படவில்லை. மரணதண்டனையை நிறைவேற்றியவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.
விசைப் பலகை இழுக்கப்பட்டதும் அவரது கால்களைத் தாங்கி இருந்த பலகை வில
கியது. கை, கால்களில் சிறு அசைவுகூட இல்லாமல் உயிர் பிரிந்தது.அரபு உலகில் வெள்ளிக்கிழமைதான் மரணதண்டனை வழங்கப்படும். சட்டப் பிரச்சினைகள் காரணமாக வெள்ளிக்கிழமை தண்டனை வழங்க முடியவில்லை. சதாமின் சொந்த ஊரான அவ்ஜாவில்
அவரது உடலை அடக்கம் செய்ய ஈராக் அரசு முடிவு செய்தது. சனிக்கிழமை இரவு
11.45 மணியளவில் சதாமின் உடல் ஹெலிகொப்டர் மூலம் திக்ரிக் நகருக்கு எடுத்துச்
செல்லப்பட்டது. அந்த நகரின் அருகில்தான் அவ்ஜா நகர் உள்ளது. சதாமின் ஆட்சிக் காலத்தில் மதப்பண்டிகைகளுக்காக கட்டப்பட்ட எண்கோண மண்டபத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஞாயிறு காலையில் பொழுது விடியத்தொடங்கியதும் அணி அணியாகத் திரண்ட மக்கள் கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்தனர். சதாமின் கல்லறை புண்ணிய ஸ்தலமாக மாறியது.
ஈராக்கில் நுழைந்த அமெரிக்காதான் நினைத்ததை தனது பொம்மை அரசைக் கொண்டு செய்து முடித்துள்ளது.


ரமணி மெட்ரோநியூஸ்14 01 2007