Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Friday, January 17, 2025

இடைத்தேர்தலைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்ற திமுக‌

ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினரான கே.வி.எஸ்.இளங்கோவன் மரணமானதால்  பெப்ரவரி 05ம்  திகதி  இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது என்பது எழுதப்படாத  சட்டமாக  உள்ளது. ஆளும் கட்சியின் மீது வெறுப்பு இருக்கும் சில சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சி வெற்றி பெற்ற வரலாறும் உள்ளது.

இடைத் தேர்தலில் ஆளும் கட்சியை எடை போட சந்தர்ப்பம் கிடைக்கும். கடந்த தேர்தலில் ஆளும் கட்சி பெற்ற  வாக்கு, சதவீதம் குறைவடைந்தால் எதிர்க் கட்சிகள்  சற்று உசாராகி விடும். தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்,தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சி என்ற நினைப்பில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியும்  ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக சட்ட  மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு  ஒரு வருட காலமே இருப்பதனால்  திராவிட முன்னேற்றக் கழகத்தை எடை பார்க்கும் சந்தர்ப்பம் நழுவிவிட்டது. இடைத்தேர்தலைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினரான கே.வி.எஸ்.இளங்கோவன் மரணமானதால்  பெப்ரவரி 05ம்  திகதி  இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த ஈரோடு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் களம் இறங்க உள்ளது.தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும்  ஒரு வருடமே உள்ளநிலையில் அங்கு போட்டியிடுவதை காங்கிரஸ் தவிர்த்துள்ளது.

 தமிழக மக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கும் செல்வாக்கை ஈரோடு இடைத் தேர்தல் வெளிப்படுத்த உள்ளது. அரசாங்கத்தின் எதிர்ப்பு வாக்குகளை அருவடை செய்யும் வாய்ப்பை எதிர்க் கட்சிகள் இழந்துள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி,  விஜயகாந்தின் கட்சி ஆகியன தேர்தலிப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட விரும்பவில்லை. 2026 என்ற தொலைதூர இலக்குடன் விஜய் அமைதியாக இருக்கிறார். 

வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. நாம் தமிழர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் அறுவடை செய்யும் தகுதி சீமானுக்கு இல்லை. தனது கட்சி வேட்பாளரை பொது வேட்பாளராக்க சீமான் முயற்சி செய்கிறார். எடப்பாடி,ராமதாஸ்,அண்ணாமலை ஆகியோர் சீமானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள்.

அண்ணா பல்கலைகழக விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் ஸ்டாலினையும் திராவிட முன்னேற்றக் கழக அரசையும் கடுமையாக விமர்சனம்ச் எய்யும் அண்ணாமலை தேர்தல் என்றால் பம்முவது வழமையான செய்திதான்.திராவிட முன்னேற்றக் கழக அரசை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் எனச் சபதம் செய்த அண்ணாமலை அதற்குரிய சந்தர்ப்பம் இருக்குமா என ஆராயும் சந்தர்ப்பத்தைத் தவற விட்டுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  முதலில் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் கூட கொங்கு மண்டலத்தில் தங்களுக்குப் பலம் உள்ளதாக   கூறி வரும் நிலையில் அங்கு நடைபெறும் இடைத் தேர்தலை புறக்கணித்தது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இப்படித்தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அதிமுக புறக்கணித்திருந்தது.

அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது.  விக்கிரவாண்டி தேர்தலையும் தேமுதிக புறக்கணித்திருந்தது.

  அதேசமயம், பாஜக இத்தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுகவுடன் போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்து தனது நிலையை ஸ்திரப்படுத்த முயலும் என்றும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் பாஜகவும் தற்போது தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளது. தமிழகத்தின் எதிர்க் கட்சி எனக்கூறிக்கொள்ளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில்  தேர்தல் என்றால் அச்சம் ஏற்ப‌டுவது  வழமையே. 

கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனக்கூறும் அண்ணாமலை அது உண்மை எகக்கூறும் வாய்ப்பைத்தவறவிட்டுள்ளார்.

 ஜனநாயகக் கூட்டணியும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே பிரதான கட்சிகளாக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி நெருக்கடி தருமா என்பது சந்தேகம்தான். அதேசமயம், பெரியாரை கடுமையாக சீமான் விமர்சித்து வரும் சூழலில் அவர் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற நாம் தமிழர் கட்சி முயலக் கூடும்.

பெரிய கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்து விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியிலும், விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் போல மிகப் பெரிய வெற்றியை திமுக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பிரதான கட்சிகள் இப்படி தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தும் எழுந்துள்ளது.

 

 ரமணி

19/1/25

Monday, May 29, 2023

காங்கிரஸின் எழுச்சியும் பாரதீயஜனதாவின் வீழ்ச்சியும்

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் காங்கிரஸுக்கு  வாழ்வா சாவா என்ர  போராட்டமாக  இருந்தது. மோடி என்ற துருவ நட்சத்திரத்தின் கவர்ச்சியால்  வென்று  விடலாம் என பாரதீய ஜனதா கனவு கண்டது.தேர்தல்  முடிவு காங்கிரஸுக்கு வாழ்வு கொடுத்தது.  பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்டியது.

கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த மே 10 ஆம் திக‌தி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் 113 இடங்களில் பிடிக்கும் கட்சி பெரும்பான்மை பலத்து ஆட்சியை பிடிக்கும். கடந்த மே 13 ஆம் திக‌தி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா 66  தொகுதிகளில் வெற்றி பெற்றது.  பாரதீய ஜனதாவின் 14 அமைச்சர்களும், சபாநாயகரும் தோல்விடைந்தனர். தென்னிந்தியாவில்  கர்நாடகாவை மட்டுமே பாரதீய ஜனதா நம்பி இருந்தது. அந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. ராகுலின் பாதயாத்திரை, ராகுலின் பதவி பறிப்பு என்பனவற்றுக்கான பதிலாக கர்நாடக தேர்தல் முடிவு  அமைந்துள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா  அரசின்மீதான ஊழல், கமிஷன், வகுப்புவாதப் பிரச்னைகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. கடந்த 2022-ம் ஆண்டு, பெலகாவியைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரரின் தற்கொலை வழக்குக்குப் பிறகு, `அனைத்துத் துறைகளிலும் 40 சதவிகித கமிஷன் பெறுகிறது பா.ஜ.க ஆட்சி’ என்ற கோஷத்தை முன்னெடுத்தது காங்கிரஸ். `Pஅய்CM’ என்று Qற் கோடில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் முகத்தைச் சேர்த்து ஒட்டப்பட்ட போஸ்டர் பிரசாரம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

 கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ்  கட்சியின் தேசியத் தலைவராக்கியது, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது, பணபலமும் செல்வாக்கும் பெற்ற டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்கியது என காங்கிரஸ் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தன. மேலும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கியதும் காங்கிரஸுக்கு சாதகமாக அமைந்தது. அமைந்தது. வியாபாரிகள் சங்கம், ஒப்பந்ததாரர்கள் சங்கம் எனச் சங்கங்களைத் தங்கள் வசம் இழுத்ததும், லிங்காயத் மடாதிபதிகள், இஸ்லாமிய அமைப்புகள் எனச் சமூகரீதியான ஆதரவைப் பெற்றதும் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டன.

`தி கேரளா ஸ்டோரி’, `ஜெய் பஜ்ரங் பலி’ என மதம் சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி மோடி செய்த பிரசாரங்களையும் கர்நாடக மக்கள் காதில் வாங்கவில்லை. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த சக்திவாய்ந்த தலைவரான எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியபோதே கர்நாடகாவில்   சரிவு தொடங்கிவிட்டது. பசவராஜ் பொம்மை பதவியேற்ற பிறகு கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட மதவாதப் பிரச்னைகளால் பதற்றமான சூழலே நிலவியது. அரசுத் துறைகளில் தலைவிரித்தாடிய லஞ்சம், ஊழல் உள்ளிட்டவையும்  பாரதீய ஜனதாவை  ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கியிருக்கின்றன. மோடியும், அமித் ஷாவும்கர்நாடகாவில்  முகாமிட்டு  பிரசாரம் செய்தும்  வெற்றி பெற முடியவில்லை.

கர்நாடகத் தேர்தல்  முடிவு தமிழகத்தில் எதிரொலிக்கிறது. கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கர்நாடகத்தில்  பாரதீய ஜனதாவின் தோல்வியை அண்ணாமலையின் தோல்வியாகவே தமிழ‌கம் கொண்டாடுகிறது. தமிழ்நாடு பாரதீய ஜனதாவின்   மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இதனையும் தமிழகம்  கொண்டாடுகிறது. சி.டிரவி தனது சிஷ்யனிடம்  தோல்வியடைந்தார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பரதீய ஜனதா தோல்வியடைந்துள்ளது.  தமிழர்கள் வசிக்கும் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்று காங்கிரஸ் வெற்றி முகம் கண்டுள்ளது. அதேபோன்று கர்நாடக தமிழர்கள் பாரதீய ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின் எதிர்பார்ப்பை சட்டசபைத் தேர்தல்  கோடிட்டுக் காட்டியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாரதீய ஜனதாவும்  நேரடியாக மோதிய  கர்நாடகத் தேர்தலை அரசியல் கட்சிகள்  அனைத்தும் உன்னிப்பாக அவதானித்தன.

  காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட அவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். அதேநேரம் தேர்தலில்  வெற்றிபெற மோடியின் பிம்பம் மட்டுமே போதும் என்ற பாரதீய ஜனதாவின் விம்பம்  தகர்ந்துள்ளது.


 கர்நாடகத்தில் பாரதீய ஜனதா தோல்வியடைந்ததால் எடப்பாடி  நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்கத்தில் பாரதீய ஜனதா  கேட்கும் தொகுதிகளின் தொகையைக் குறைக்க  எடப்பாடி காரணத்தைக்  கண்டறிந்துள்ளார்.

கர்நாடகத் தேர்தல் வெற்றியை நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் கொண்டாடி வரும் வேளையில் முதலமைச்சர் யார் என்பதில் போட்டி  நிலவியது. முன்னாள்  முதல்வர் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கர்நாடகத்தில் பாரதீய ஜனதாவின் ஆட்சியை அகற்றுவதற்கு  டி.கே. சிவகுமார் முழுமூச்சாகச் செயற்பட்டார்.

 டிகே சிவக்குமார் தனக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தால் ஏற்பதாகவும், இல்லாவிட்டால் துணை முதலமைச்சர், அமைச்சர் என எந்த பதவியும் வேண்டாம் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் முதலமைச்சர் சித்தராமையா என்றும், துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் எனவும் குறிப்பிட்டு கர்நாடகா மாநில உத்தேச அமைச்சரவை பட்டியல் ஒன்றும் வெளியானது. இந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்போது சித்தராமையாவை கர்நாடகா மாநில முதலமைச்சராக மீண்டும் பத‌வி ஏற்க  உள்ளார்.சோனியா காந்தி கேட்டதற்கிணங்க   முத்ல்வர் பதவியை  டி.கே.சிவகுமார் விட்டுக் கொடுத்துள்ளார்.

காங்கிரஸின் எதிர்கால வெற்றிக்கு கர்நாடகம் அடித்தளம்  இட்டுள்ளது.


Thursday, December 1, 2022

தமிழக காங்கிரஸ் தலைமைக்கு கடும் போட்டி


 காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதலுக்குப் பஞ்சம் இருக்காது. தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் நடந்த கோஷ்டி மோதல் டெல்லிவரை சென்றுள்ளது.தமிழகத் தலைவர்களின் முன்னிலையில் கட்சி அலுவலகத்தில் இருந்த உடைமைகள் அடித்து நொருக்கப்பட்டன.  கைகலப்பில் மண்டை உடைக்கப்பட்டது.

பாரதிய ஜனதாவை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்தில்  இருந்து அதிகளவான எம்பிக்களைப் பெற வேண்டும். 2024  பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ்  காய் நகர்த்தும்  வேளையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் கோஷ்டி மோதல் பெரும் தலையிடியாக  உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதற்குத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பி-க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்திவரும் ஒற்றுமை யாத்திரையை முன்னிட்டு ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதியிலும் 100 கொடிகள் ஏற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக தலைவர்கள் வந்திறங்கியதும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் 6-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அங்கு வந்து சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டனர்.

அவர்கள் அனைவரும் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் என்று கூறினர். பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட மூன்று வட்டாரத் தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

அவர்கள் அனைவரும் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் என்று கூறினர். பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட மூன்று வட்டாரத் தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அழகிரிக்கு ஆதரவானவர்களும், ரூபி மனோகரனுக்கு எதிரானவர்களும்  அவர்களுடன் வாக்குவாதப்பட்டனர். வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

அழகிரியின் பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது. அடுத்த தலைவராவதற்கு பலர் வரிசையில் காத்திருக்கின்றனர்.   கடந்த  2019-ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி   நியமனம் செய்யப்பட்டார். கட்சி விதிமுறைகளின்படி அவரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. பதவியை விட்டு வெளியேற அழகிரி விரும்பவில்லை.  கடந்த ஆண்டின் இறுதியிலிருந்தே, அந்தப் பதவிக்கான காய்நகர்த்தல்களை, தலைவர்கள் பலர் தொடங்கிவிட்டார்கள். அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியையும் கட்சியின் தலைமை தீவிரமாக முன்னெடுத்தது.    ஜோதிமணி, செல்லகுமார், கார்த்தி சிதம்பரம், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் ஆகியோர் தலைமைப் பதவியை விரும்புகின்றனர்.. ஜோதிமணி, செல்லகுமார் ஆகியோருக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மற்றவர்களும்   பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

ஆனால் மறுபுறம் தனது பதவியை விட்டுத்தர அழகிரி தரப்பு தயாராக இல்லை. அதன் விளைவாகத்தான் கடந்த நவம்பர் 15-ம் திகதி மோதல் ஏற்பட்டது. பிறகு கே.எஸ்.அழகிரிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக செல்வப்பெருந்தகை தலைமையில் புதிய அணி உருவானது. கடந்த நவம்பர் 19-ம் திகதி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டனர். பதவியைக் காப்பாற்றுவதற்காக அழகிரியும், அவரை வெளியேற்ருவதற்காக ஏனையவர்களும் கச்சை கட்டிக்கொண்டு களம்  இறங்கியுள்ளனர்.செல்வப்பெருந்தகை குழுவினர், அழகிரிக்கு எதிராக பல்வேறு தகவல்களைத் திரட்டினர். பிறகு அதை கட்சியின் தலைமைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதனால் சத்தியமூர்த்தி பவன் கலவர பூமியாக மாறியிருக்கிறது. இந்த பிரச்னை அடங்குவதற்குள் கார்த்தி சிதம்பரம் தலைவர் பதவிக்காக நடக்கும் யுத்தத்தில் முழுமையாகக் களம்  இறங்கியுள்ளார்.   தலைமைப் பதவி  கிடைத்தால் சிறப்பாகச் செயர்படுவேன் என அறிவித்துள்லார். தகப்பன் சிதம்பரத்தின் ஆசீர்வாதம் அவருகு இருக்கலாம். ஏற்கனவே 2010, 2020-ம் ஆண்டில் சொல்லியிருக்கிறார். தற்போதும் சொல்கிறார்.

Sunday, September 25, 2022

மும்முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் காங்கிரஸ் கட்சித் தேர்தல்

இந்தியாவை பலகாலம் ஆட்சி  செய்த காங்கிரஸ் ட்சி  மிகவும் பலவீனமடைந்த நிலையில் உள்ளது.2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த  பின்னர் நடபெற்ற முக்கியமான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.

 தேர்தல்களில்  வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை பாரதீய ஜனதா விலைகொடுத்து வாங்கியதுஊழல் வழக்குகள் மிரட்டல் என்பனவற்றால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அணி மாறினார்கள்கட்சியுடன் முரண்பட்ட முக்கியமான தலைவர்கள்  வெளியேறிவிட்டார்கள்மாநிலங்களில் அவர்களின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளதுஎதிர்க் கட்சிகள்  ஓரணியில் இல்லாமல்  பிரிந்து நிற்பதுதான்  பாரதீய ஜனதாவுக்கு  மிகவும் சாதகமாக உள்ளது.

ராகுலும்பிரியங்காவும் முழுவீச்சில் பிரசாரம் செய்த  பஞ்சாப்,உத்த்ரபிரதேசம் ஆகிய மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி  டுதோல்வியடைந்ததுஇதனால் விரக்தியடைந்த  காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வெளியேறிவிட்டனர்அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்காக தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் நடத்தப்ப வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்ததுராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் எனவும்,  நேரு குடும்பத்தில் இல்லாத  ஒருவர் தலைவராக வேண்டும் எனவும் கருத்துகள்  முன்வைக்கப்பட்டன.

 கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததுஇந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார்இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல்குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர்இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் அறிவித்ததுஅதன்படி கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் குழு   வெளியிட்டது.

  காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப். 30‍ம் திகதி வரை நடைபெறும் எனவும்வேட்புமனுவை அக்டோபர் 8ம் திக‌ திக்குள் திரும்பபெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒருபக்கம் பரத் ஜோடோ யாத்திரை நடத்திக்கொண்டிருக்கிறார்.  தமிழ்கத்தில் ஆரம்பமான பாதயாத்திரை காஷ்மீரில் முடிவடையும்.  இந்தப் பாதயாத்திரை காங்கிரஸுக்கு வலுச்சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. , மறுபக்கம் காங்கிரஸில் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளும் நடந்துகொண்டே வருகின்றனஇந்த வேலைகள் தொடங்கப்பட்ட நாள் முதலே ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டாமலிருந்தாலும்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் `ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பதவியேற்கவேண்டும்என்று வெளிப்படையாகக் கூறிவருகின்றனர்.

  இத்தேர்தலில் சோனியா குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடப் போவது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுஅதேநேரத்தில் சோனியா குடும்பத்தினரது விருப்பமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார்   

2000  ஆண்டு தலைவர் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டபோதுபிரச்சாரத்தின் போதுபோபாலில் காங்கிரஸ் அலுவலகத்திலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்ததுபல இடங்களில் அவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டதுபிசிசி பிரதிநிதிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதுஅதேபோல் 1997ல் சீதாராம் கேசரிக்கு எதிராக சரத்பவாரும்,ராஜேஷ் பைலட்டும் போட்டியிட்டபோது கொஞ்சம் செல்வாக்கு பெற்றனர்பல இடங்களில் பிரசாரம் செய்தார்கள்இருப்பினும் சீதாராம் கேசரி கிட்டத்தட்ட 70 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்."

உட்கட்சித் தேர்தல் என்பது வெறும் கண்துடைப்புத்தான் எனப்து வெளிப்படையானது.ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தலில் மனுத் தாக்கல் செய்தவர்கள் தாக்கப்பட்டார்கள்இரட்டைத் தலைமையான எடப்பாடிக்கும்பன்னீருக்கும் எதிராக மனுத்தாக்கல்செய்யச் சென்றவர்களும் தாக்கப்பட்டனர்.  கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நீதிமன்றத்தின்  விதியால் சிலரின் தலைவிதி மாறியுள்ளது.

காங்கிரஸில் பெரும்பாலானோர் ராகுல் காந்தி தான் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  ராகுல் காந்தி தலைவர் பதவி ஏற்கத் தயாராக இல்லைஇதன் காரணமாகச் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான அசோக் கெலாட்டை களமிறக்க முடிவு செய்துள்ளனர் 

ராகுல்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று ராஜஸ்தான்சத்தீஸ்கர்புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றினதம் பங்குக்கும் அவசர அவசரமாக பொதுக்குழுவைக் கூட்டிஅதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்கூட்டத்தில், `அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்ய வேண்டும்மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்குகிறோம்’ என இரண்டே இரண்டு தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

137 ஆண்டுகால வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடக்கும் ஐந்தாவது தேர்தல்.அசோக் கெலாட்சசிதரூர்ர் ஆகிய இருவருக்கும் இடையேதான்  போட்டி இருக்கும்கெலாட் சோனியாவின் விசுவாசத்துக்குரியவர்ராகுல்காந்திசோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது டெல்லியில் முன்நின்று போராட்டத்தை தொடர்ந்து அசோக் கெலாட் நடத்தினார்பலமுறை கைது செய்யப்பட்டார்மேலும் சோனியா காந்திராகுல்காந்தியை பாதுகாக்கும் வகையில் பல முறை பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி விளக்கம் அளித்தார்மேலும் அவர் ராஜஸ்தான் முதல்வராக இருப்பதோடுவிரைவில் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தின் மேற்பார்வையாளராகவும் உள்ளார்.

காரணம் அசோக் கெலாட் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்இவருக்கும்காங்கிரசுக்கும இடையேயான பந்தம் மிகவும் நீண்டகாலமாக உள்ளதுஇவர் 5 முறை எம்பியாகவும், 5 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளார்ராஜஸ்தான் முதல்வராகவும் உள்ளார்.

காரணம் அசோக் கெலாட் கெலாட் அரசியல் அனுபம் அதிகம் கொண்டவர்இவர் 3 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார்இந்திரா காந்திராஜீவ் காந்தி மற்றும் பிவி நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். 3 முதல்வராக உள்ளார்

ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட்டுக்கு நல்ல அரசியல் அனுபவம் உள்ளதுஇதனை இந்தியா முழுவதும் பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்புகிறதுமேலும் இவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுப்பதன் மூலம் ராஜஸ்தானின் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்கலாம்இதன்மூலம் ராஜஸ்தானில் அடுத்தக்கட்ட தலைவரை உருவாக்கி அங்கு ஆட்சியை தக்க வைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது அசோக் கெலாட் சர்ச்சகைளில் சிக்காத அனுபவம் நிறைந்த அரசியல்வாதிஇந்தியாவின் அரசியல் நிலைப்பாடுமக்களின் எண்ணம் என்பது பற்றி அவர் நன்கு அறிந்தவர்.

அசோக் கெலாட் போல் நேருசோனியாகாந்தியின் குடும்பத்துக்கு அவ்வளவு நெருக்கமானவராக சசிதரூர் இல்லைஅதோடு ஜி23 தலைவர்களிடம் ஒருவராக அறியப்பட்டு வரகிறார். 2020ல் உள்கட்சி சீர்திருத்தங்கள்உயர்மட்ட கூட்டத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என சோனியா காந்திக்க கடிதம் எழுதி இருந்தார்.   இதனால் சசிதரூரை காட்டிலும் அசோக் கெலாட் தான் சோனியா காந்தியின் குடும்பத்துடன் விசுவாசமாக உள்ளது தெரிகிறது.

சசிதரூர் 2009ல் இருந்து தான் காங்கிரஸ் கட்சியின் செயல்பட்டு வருகிறார்கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று முறை எம்பியாக தேர்வாகி உள்ளார்காங்கிரஸ் கட்சியின் தொழில் வல்லுநர் பிரிவின் தலைவராக தற்போது நீடித்து வருகிறார்

அதேவேளையில் சசிதரூர் 2 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார்இரண்டு முறையும் அவர் குறுகிய காலம் மட்டுமே அமைச்சராக இருந்தார். 2009 மே 23ம் தேதி முதல் 2010 ஏப்ரல் 18 வரை முதல் வெளியுறவுத்துறை அமைச்சராகவும்அதன்பிறகு 2012 அக்டோபர் 28 முதல் 2014 மே மாதம் வரை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருந்தார்இவர் ஐக்கிய நாடுகள் சபையில் 1978-2007 வரை 29 ஆண்டுகள் துணை பொதுச் செயலாளர் உட்பட பல பதவிகளிலும் இருந்துள்ளார். 23 புத்தகங்களை எழுதியுள்ளார். 2006ல் கோபி அன்னானுக்கு பிறகு ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார்அதன்பிறகு விலகினார்இவருக்கு காங்கிரஸ்அரசியல் சார்ந்த பதவிகளை விட பிற விஷயங்களில் தான் அனுபவம் உள்ளதுஇதுவும் சசிதரூருக்கு பிரச்சனையாக உள்ளது.

சசிதரூர்   சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர்ஐபிஎல் கிரிக்கெட் விஷயத்தில் பங்கு வாங்க பதவியை தவறான பயன்டுத்தியதாக கூறி சர்ச்சையில் சிக்கி மத்திய அமைச்சர் பதவியை இழந்தார்அதன்பிறகு மனைவி சுனந்தா இறப்பு தொடர்பான விஷயத்தில் சர்ச்சையில் சிக்கினார்அதோடு ட்விட்டரை அதிகமான பயன்படுத்தும் அவர் அதிலும் கருத்துகள் தெரிவித்து சர்ச்சைகளை தன்னுடனே வைத்து கொள்வதே வாடிக்கையாக வைத்துள்ளார். 2021ல் ஆறு  பெண் எம்பிக்களுடன் அவர் சேர்ந்து இருக்கும் படத்தை பதிவிட்டு கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியதுஇதனால் தான் சசிதரூரை விட அசோக் கெலாட்டை தலைவராக்க சோனியா காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

இந்தியா,காங்கிரஸ்,சோனியா,ராகுல்,அரசியல்