Showing posts with label கோல்ஃப். Show all posts
Showing posts with label கோல்ஃப். Show all posts

Wednesday, September 29, 2021

கோல்ஃப் விளையாடிய ஹரி பொட்டர்' புகழ் டாம் ஃபெல்டன் காயமடைந்தார்


   "ஹரி பொட்டர்" திரைப்படங்களில் டிராகோ மால்ஃபோயின் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகர் டாம் ஃபெல்டன் பிரபல கோல்ஃப்  ரைடர் கிண்ணப் போட்டியின்  போது  வியாழக்கிழமை  நடைபெற்ற ஒரு  ண்காட்சி போட்டியில் விளையாடும்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 ஃபெல்டன் 18 வது ஓட்டையில் விளையாடியபோது கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகரைடர் கிண்ண  அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்கா, ஐரோப்பா  ஆகியவற்றுக்கிடையேயான ரைடர் கிண்ணப் போட்டியில்  தொடாம் ஃபெல்டன்   ஐரோப்பாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.