Showing posts with label இஸ்ரேல். Show all posts
Showing posts with label இஸ்ரேல். Show all posts

Friday, April 10, 2026

டோஹா டைமண்ட் லீக் ஒத்திவைப்பு


 மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கட்டாரில் நடைபெற இருந்த டோஹா  டைமண்ட் லீக் தடகள போட்டி ஒத்திவைக்கப்படுவதாக உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உலக தடகள போட்டிகளில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று டைமண்ட் லீக். நடப்பு 2026ம் ஆண்டு சீசனின் முதல் சுற்று போட்டி கத்தார் தலைநகர் டோஹாவில் மே 8ம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.  ஈரான், அமெரிக்கா  , இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் காரணமாக அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம்,குவைத் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, தடகள வீரர்கள் ,ரசிகர்கள் ஆகியோரின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மே 8ம் திகதி நடக்க இருந்த போட்டி ஜூன் 19ம்  திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு சூழல் சீரடைந்தால் மட்டுமே போட்டி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் கட்டாரில் கடுமையான வெப்பம் இருக்கும் என்பதால், போட்டியின் மைதானமும் மாற்றப்பட்டுள்ளது. முதலில் கட்ட்ர் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி, தற்போது அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட கலிபா சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தான் 2019 உலக தடகள சம்பியன்ஷிப் , 2022   உலகக் கிண உதைபந்தாட்டம் ஆகியன   வெற்றிகரமாக நடத்தப்பட்டன .

  

Saturday, December 20, 2025

அவுஸ்திரேலியாவில் குறி வைக்கப்படும் யூதர்கள்

  சிட்னி  போண்டி கடற்கரை அவுஸ்திரேலியாவின் மிகப்பிரபலமானதுகொண்டாட்டமும் கலகலப்பும் நிறைந்த ஒரு இடம்போண்டி கடற்கரை. ஆனால் இது நேற்று சோகக் களமாக மாறிப் போனது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் வழமைபோல போண்டி கடற்கரை மக்களால் நிரம்பியிருந்தது. யூத சமுதாயத்தினர் பாரம்பரிய ஹனுக்கா பண்டிகையின் தொடக்கம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான யூத மக்கள்  போண்டி கடற்கரையில் குழுமி இருந்தனர்.   கடற்கரை மணலிலும் பூங்காவிலும் சிரிப்பொலிகளும் மகிழ்ச்சியான குரல்களும்  ஓங்கி ஒலித்தன.

  திடீரென்று கேட்ட துப்பாக்கிக்குண்டு மழை அந்த அமைதி குலைந்தது. கறுப்பு நிற உடை அணிந்த இரண்டு பேர்,சரமாரியாகச் சுட்டனர். சிரிப்பும்  கொண்டாட்டமுமாக இருந்த போண்டி கடற்கரை அவலக் குரலால் பீதியடைந்தது. எங்கும் மரண ஓலம். உயிரைப் பாதுகாக்க மக்கள் தலை தெறிக்க  ஓடினார்கள். இரக்கமற்ற  அந்த இருவரும் கண்மண் தெரியாமல் சுட்டுத்தள்ளினர்.

இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்ற போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் பொலிஸார் எவரும் இருக்கவில்லை. உயிர்ப் பயத்தில் அனைவரும் ஓடிய போது  ஒரே ஒருவர் மட்ட்டும் கார்களின்  பின்னால் மறைந்து ஓடிப்போய் கொலைகாரனின் துப்பாக்கியைப் பறித்தார்.


  பழக்கடை உரிமையாளரான அகமது அல் அகமது என்பவர், மக்களை காப்பாற்றும் முயற்சியில் துப்பாக்கியால் சுடும் நபரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியைப் பிடுங்கினார். கையில் ஆயுதம் இல்லாத பயங்கரவாதி ஓட்டம் பிடித்தார் சம்பவ இடத்துக்கு உடனடியகக் களம்  இறங்கிய பொலிஸார்ஒருவரைச் சுட்டுக் கொன்றனர்  மற்றையவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருடன்  பிடிக்கப்பட்டார்.  “உண்மையான ஹீரோஎன்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிறிஸ் மின்ஸ்  அகமது அல் அகமதுவைப் பாராட்டியுள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை அவுஸ்திரேலியப் பிரதமர் சென்று பார்வையிட்டார்

 கடற்கரையில் நீச்சலுடையில் இருந்தவர்கள், தங்கள் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் அலறிக் கொண்டு ஓடினர். சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் இந்த கோரத் தாக்குதல் நீடித்தது.10 வயது சிறுமி முதல் 87 வயது முதியவர் வரை குறைந்தது 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 42-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சர்வாதிகாரி ஹிட்லரின் முகாமில் இருந்து  உயிர் தப்பிய ஒருவரும் இந்தச் அம்பவத்தில் பலியானார்.

கடும் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட அவுஸ்திரேலியாவில், கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த மிக மோசமான துயரச் சம்பவம் இதுவாகும். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயல் என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் அவுஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுதுப்பாக்கிதாரிகளில் ஒருவரான, 50 வயதான சஜித் அக்ரம் என்பவரை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.

கடும் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஆஸ்திரேலியாவில், கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த மிக மோசமான துயரச் சம்பவம் இதுவாகும். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயல் என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவுஸ்திரேலிய யூத நிர்வாகக் குழுவின் புதிய புள்ளிவிவரங்களின்படி ,   2023 ஆம் ஆண்டு இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர்  அவுஸ்திரேலியா யூத எதிர்ப்புத் தாக்குதல்கள்  அதிகரித்துள்ளது  எனத் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு  முகமூடி அணிந்த நபர்கள் மெல்போர்னில் உள்ள அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயத்துக்குத் தீ வைத்தனர். ஏழு மாதங்களுக்குப் பிறகு,   மற்றொரு மெல்போர்ன் ஜெப ஆலயமான கிழக்கு மெல்போர்ன் ஹீப்ரு சபையின் கதவுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டும் சிட்னியில் உள்ள கோஷர்  லூயிஸ் கான்டினென்டல் கிச்சனில் மற்றொரு தீ விபத்து நடத்தப்பட்டது.

அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயம் ,உணவு நிறுவனம் ஆகிய இரண்டின் மீதான தாக்குதல்களும் ஈரானிய புரட்சிகர காவல்படை  இருக்கலாம் என  என்று அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு   தெரிவித்தது.   ஈரானின் தூதர் அஹ்மத் சடேகி  உட்பட மூன்று ஈரானிய தூதர்களை  ஓகஸ்ட் மாதம், பிரதமர் அல்பானீஸ் வெளியேற்றினார், அவுஸ்திரேலிய மண்ணில் ஈரான் யூத எதிர்ப்பு தீவைப்பு தாக்குதல்களை இயக்கியதாக உளவுத்துறை மதிப்பீடு முடிவு செய்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் வரலாற்று ரீதியாக உயர்ந்த மட்டங்களில் இருப்பதாக ECAJ கண்டறிந்துள்ளது ‍  2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முந்தைய சராசரி ஆண்டு எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம், இது 2021 மற்றும் 2024 க்கு இடையில் எந்த J7 நாட்டிலும் இல்லாத மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும். J7 என்பது இஸ்ரேலுக்கு வெளியே மிகப்பெரிய யூத சமூகங்களைக் கொண்ட ஏழு நாடுகளைக் குறிக்கிறது, அவை யூத எதிர்ப்புக்கு எதிரான J7 பணிக்குழுவை உருவாக்குகின்றன : அமெரிக்கா, கனடா, யு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா  அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க, ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பு J7 பணிக்குழு சிட்னியில் கூடியது.

"இந்தத் தாக்குதல் அவுஸ்திரேலியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள யூத எதிர்ப்பு சம்பவங்களின் ஒரு தொந்தரவான தொடரில் சமீபத்தியது" என்று அவதூறு எதிர்ப்பு லீக்கின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் உளவுத்துறையின் மூத்த துணைத் தலைவர் ஓரன் செகல் கூறினார்இந்த சம்பவங்கள் பெருகிய முறையில் வன்முறையாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்திய தந்தையும் மகனும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தகவல்  வெளியானதுஆனால்   மகன் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் என்று  அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தார்கள்.தந்தை நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை அவர்கள்  முதலில் உறுதிப்படுத்தவில்லை.

தகப்பன் அவுஸ்திரேலிய குடிமகன் அல்ல என்பதை உள்துறை அமைச்சர் டோனி பர்க், உறுதிப்படுத்தினார், 1998 இல் மாணவர் விஸாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்து 2001 இல் கூட்டாளர் விசாவிற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு அவர் குடியுரிமை திரும்பும் விஸாவில் மூன்று முறை வெளிநாடு சென்றுள்ளார்.

தகப்பன் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் படிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும் பின்னர் வதிவிட விஸா பெற்றதகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் என்பதை இந்தியா  உறுதிப் படுத்தியுள்ளது.

அவர்களிடம் ஆறு துப்பாக்கிகள் இருந்தன - அவை சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டன - மேலும் யூதக் கூட்டத்தை குறிவைக்க ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை ஒன்று சேர்த்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 2019 ஆம் ஆண்டில் மகனை விசாரித்து, அவரது தந்தையை நேர்காணல் செய்த அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ஆசியோ) வெளிப்படுத்திய பின்னர், அவர் அதற்கு ஆதரவாக இருந்தார், ஆனால் அவர் ஒரு அச்சுறுத்தல் இல்லை என்று கருதியது.

"இந்த நபர் யூத சமூகத்தை குறிவைத்து, வன்முறைச் செயலையோ அல்லது யூத-விரோதச் செயலாகக் கருதக்கூடிய எந்தவொரு செயலையோ திட்டமிட்டு, பரிசீலித்து அல்லது ஊக்குவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்கள் தீர்மானித்தனர்.

இந்தத் தாக்குதலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் பலியாகி உள்ளனர். இவர் 2ம் உலகப்போர் சமயத்தில் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர் பயங்கரவாத தாக்குதலில் மனைவியை காக்க நினைத்து பலியாகி உள்ளார்

  87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் என்பவரைப் பற்றிய   தகவல் வெளியாகி உள்ளது. ஹோலோகாஸ்ட் படுகொலை என்பது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்தது. 1941ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை  ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாசி படைகள் ஐரோப்பியாவில் வாழும் யூதர்களை குறிவைத்து கொன்றது.மொத்தம் 60 லட்சம் பேரை படுகொலை செய்தது. இதனை ஹோலோகாஸ்ட் படுகொலை என அழைக்கின்றனர்.   இந்த படுகொலையில் இருந்து தான் அலெக்ஸ் கிளெயிட்மேன் தப்பினார். சைபீரியாவில் இருந்த அவர் ஹிட்லரின் நாசி படையால் பிரச்சனையை எதிர்கொண்டார். ஹிட்லரிடம் இருந்து தப்பிய யூதர்கள் பல நாடுகளில் தஞ்சமடைந்தனர். அலெக்ஸ் கிளெயிட்மேன் உக்ரைனில் தஞ்சமடைந்தார். உக்ரைனில் இருந்து அவர் தனது மனைவி லாரிசாவுடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார். லாரிசாவும் ஹிட்லரின் ஹோலேகால்த் படுகொலையில் இருந்து தப்பியவர் தான். இந்நிலையில் தான் சம்பவத்தன்று அலெக்ஸ் தனது மனைவி லாரிசா, பேரக்குழந்தைகள் உள்பட பிற குடும்ப உறுப்பினர்களுடன் பாண்டி கடற்கரைக்கு சென்றுஹனுக்கா'திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தான் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் பலியானார். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அவரது குடும்பத்தினர் அனைவரும் தரையில் படுத்தனர். அலெக்ஸ் கிளெயிட்மேனும் தரையில் படுத்தார். ஆனால் அவரை விட்டு மனைவி லாரிசா சிறிது தூரத்தில் படுத்து கிடந்தார். இதனால் மனைவிக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அவர் அருகே அலெக்ஸ் கிளெயிட்மேன் சென்றபோது குண்டு பாய்ந்து அவர் பலியானார்.   இதுபற்றி மனைவி லாரிசா கூறுகையில், ‛‛என் கணவர் அலெக்ஸ் கிரெயிட்மேன் என்னை பாதுகாக்க நினைத்தபோது துப்பாபக்கி குண்டு பாய்ந்து இறந்துவிட்டார்'' என அழுதார்.

இப் இந்தக் கொரூரத்தின் பின்னணி என்ன.. ஏதேனும் அமைப்புக்காக இதைச் செய்தார்களா, தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா என்பது தெரியவில்லை. விசாரணைக்குப் பின்னரே இது தெரிய வரும்.

 

வர்மா

21/12/25

  

 

Tuesday, July 1, 2025

குற்றவாளிக்கூண்டில் நெதன்யாகு

அரபுநாடுகளின் விரோதியாகச் சித்தரிக்கப்படுபவர் நெதன்யாகு, காஸா யுத்தம், ஈரானின் மீதான தாக்குதல் என்பனவற்றால் சர்வதேச ஊடகங்களில்  இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.

நெதன்யாகு நல்லவரா கெட்டவரா என்ற விவாதமும் இன்னொரு புறத்தில் நடைபெறுகிறது.

இஸ்ரேலின் வீத தீரனாக விளங்குபவர் நெதன்யாகு. அவர்தான்  இஸ்ரேலின் ஹீரோ என்றே பலரும் நினைக்கின்றனர்.

 ஆனால், நெதன்யாகுவுக்கு எதிரானவர்கள்  இஸ்ரேலிலும்  உள்ளனர். நெதன்யாகுவின்   அமைச்சரவையிலேயே அவரை எதிர்ப்பவர்கள்  இருக்கிறார்கள். 

"பீபீ' என   அழைக்கப்படுபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலில் மிக நீண்டகாலம் பிரத்மரானவர் என்ற பெருமையைப் பெற்றவர். முதலில் 1996 ஆம் ஆண்டுமுதல் 1999 ஆம் ஆண்டுவரை,  பின்னார் 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை இஸ்ரேலின்  பிரதமராகப் பதவி வகித்தவர். 2022 ஆம் ஆண்டு முதல்  இன்ஸுவரை இஸ்ரேலின்  பிரதமராக இருக்கிறார் நெதன்யாகு

 இஸ்ரேலியப் பிரதமராக நெதன்யாகு இருக்கும் போதே அவருக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. பிரதமர் மீது குற்றச் சாட்டு என்பதால் பொலிஸார் விட்டு விடவில்லை. விசாரணை தொடர்ந்தது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய்ப்பட்டது.

2023 ஆம் ஆண்டு காஸாவில்  ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் நெதன்யாகுவுக்கு எதிரான  ஊழல் குற்றச் சாட்டு வழக்கு தாமதமாகிறது. அவர் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத் தண்டனை கிடைக்கும். நெதன்யாகு  குற்றம் செய்யவில்லை என அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.

நெதன்யாகுவின் மீதான ஊழல் குற்றச்சாட்டு விபரங்கள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம்திகதி பத்திரிகைகளில் வெளியானபின்னர் மக்கள் மத்தியில் பேசு பொருளானது.

அன்றைய இஸ்ரேலிய  அரச வழக்கறினர் ஷாய் நிட்சன், அன்றைய அட்டரி ஜெனரல் அவிச்சாய் மண்டேல் பிட் ஆகியோர் நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இலஞ்சம், மோசடி, நம்பிக்கை மீற  ஆகிய மூன்று வழக்குகள் நெதன்யாகுவுக்கு எதிராகப்  பதியப்பட்டன.

இஸ்ரேலிய வரலாற்றின்  முதன் முதலாக குற்றவியல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட பிரதமர் என்ற கறை நெதன் யாகுவின் மீது படிந்தது.

இலஞ்சக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத்தண்டனையும்,   மோசடி, நம்பிக்கை மீறல் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் மூன்று  வருடச் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

 குற்றச் சாட்டுகளின் எதிரொலியால் சுகாதார, விவசாயம், புலம் பெயர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை நெதன்யாகு துறந்தார். 

நெதன்யாகு பிரதமராக நீடிக்கலாமா இல்லையா என்ற என்ற விவாதம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

நெதன்யாகுவுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நடை பெறுகின்றன.  ஹமாஸின் தாக்குதல், ஈரானுடனான போர் ஆகியவற்றால்  விசாரணை தாமதமாகிறது.

நெதன்யாகுவுக்கு எதிராக   போர்க்குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச விசாரணை நடைபெற  வேண்டும் என்ற கருத்தும்  தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபது மூக்ககை நுழைத்து சொல்லிய கருத்து எதிர் வினைகளைத் தோற்றுவித்துள்ளது.

நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும்ம், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ட்ரம்ப்  அறிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் கருத்துக்கு எதிரான கண்டனங்கள் பருமளவில்  எழுந்துள்ளன.

இஸ்ரேல் சிறையில் நெதன்யாகு அடைக்கப்படுவாரா இல்லையா எனப்தை நீதிமன்றம் முடிவு செய்யும்.   

Friday, June 20, 2025

இஸ்ரேலின் வான் பாதுகாப்பை சிதைத்த ஈரானின் அரக்கன்

 இஸ்ரேல், ஈரான் போரினால் உலக நடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலடி கொடுத்தது.

  ஈரானின்  கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களிக் குறை வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

  இஸ்ரேலின் ஹைஃபா, டெல் அவிவ் , ஜெருசலேம்  ஆகிய நகரங்கள்   ஈரானின் தாக்குதலால்  சிதைந்தன.இஸ்ரேலின் தாக்குதலை ஈரானால் சமாலிக்க் முடியாது என்றே பலரும் நினைத்தார்கள்.

ஆனால் ஈரானின் பதில்தாக்குதல் இஸ்ரேலை அதிரச் செய்தது.

பலம் வாய்ந்த  இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறை ஈரானால் தாக்குதல் நடத்த முடியாது என்றே போர் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஹமாஸின் தாக்குதலால்  இஸ்ரேலின் வான் பாதுகாப்பு  இரண்டு மாதங்களுக்கு முன்னர்  சிதைத்தது. அதிலிருந்து பாடம் கற்ற இஸ்ரேல் எச்சரிக்கையானது. ஈரானின் ஏவுகளைகளைத்தடுக்க இஸ்ரேலால் முடியவில்லை.

இரானின் அரக்கன் என வர்ணிக்கப்படும் ஹைபர் சுப்பர் சொனிக் ஏவுகளைகள்  இஸ்ரேலின் முக்கிய நகரங்களைச் சிதைத்தன.

     ஹைபர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலிம் மீது  ஏவியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்தது.

  இஸ்ரேலுக்கு எதிரான மோதலில்  ஹைபர் சுப்பர்சொனிக்  முதன் முதலில்  பயன்படுத்தப்பட்டது.

 2023 ஆண்டு உலகத்துக்கு  வெளிப்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைக்கு    ஈரானின்  தலைவர் அயதுல்லா அலி கொமேனி தான்  பெயரிட்டார்.

IRGC-யால் உருவாக்கப்பட்டு ஜூன் 2023 இல் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட ஃபட்டா-1, ஒரு நடுத்தர தூர ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.

ஈரான்-இஸ்ரேல் போரில் பயன்படுத்தப்பட்ட ஃபட்டா-1 ஹைபர்சோனிக் ஏவுகணைகள் என்றால் என்ன? 

 ஃபட்டா-1 ஏவுகணை என்றால் என்ன?

IRGC படி, இந்த தாக்குதல் ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3-இன் 11வது அலையின் ஒரு பகுதியாகும். ஃபட்டா-1 ஏவுகணை இஸ்ரேலின் இரும்பு டோம் மற்றும் அம்பு போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்ப்பதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகள் இதை "இஸ்ரேல்-ஸ்ட்ரைக்கர்" என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ஏவுகணை  மணிக்கு சுமார் 15,000 கிலோ மீற்றர் செல்லும் திறன் கொண்டது.

இது 350-450 கிலோ எடையுள்ள  வெடிமருந்திஅச் சுமந்து செல்லும்.

 இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் தற்போது பெரிதாக வெடித்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான ஐயன் டாம் ஈரான் ஏவிய ரொக்கெற்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

ஆனால், ஈரான் அனுப்பிய  ஹைபர்சோனிக்  ஏவுகளைகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தாக்கியபோது, இஸ்ரேலின் ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால் கூட அதனைத் தடுக்க முடியாமல்  இஸ்ரேலைச் சீரளித்தன.  ஈரானின் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் எந்த நாட்டிடமாவது இருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஆயுதங்களின் நவீன அரக்கனான சுப்பர்சோனிக் ஏவுகணைகள்   மூலம் உகரைனின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

சண்ண்டையை நிறுத்தும்படியும்சரணடையும் படியும்   ஈரானிடம் ட்ரம்ப் கூறினார். ட்ரம்பின் சொல்லைக் கேட்ட முடியாது என கொமேனி  பதிலளித்தார்.

கொமேனி பதுங்கி இருக்கும் இடம் தெரியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப்  போர்  செய்வார் என அமெரிக்க ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

  வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் ட்ரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிட சந்தித்து உரையாடினார்.

  ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலின் இராணுவ தாக்குதலில்   இணைவதற்கு  ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக   மூத்த உளவுத்துறை அதிகாரி ,பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட சிலர் ஊடகங்களுக்குத் தெரிவித்துளனர்.சமூக ஊடகங்கள் இதனை விவாதிக்கின்றன.

  ஈரானுக்கு எதிரான  போரில் அமெரிக்கா ஜனாதிபதி   ட்ரம்ப்   இணையும்  வாய்ப்புள்ளது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமும் நம்புவதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக  செய்தி வெளியாகி உள்ளது. .

கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் திடீரென வெளியேறியதும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வந்த  ட்ரம்பின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளும், அமெரிக்காவின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.

ரஷ்யாவும்,  வட கொரியாவும்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  போர் செய்தால் நிலமை மேலும் விபரீதமாகும்.

ஈரானின் ஆயுதப் பலம் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக  உள்ளது.

ஈரானுக்கு அருகில் அமெரிக்க இராணுவத் தளங்கள்  உள்ளன.  இந்தப் போர்  இப்போதைக்கு முடியும் போல் தெரியவில்லை