Showing posts with label ஜனாதிபதி. Show all posts
Showing posts with label ஜனாதிபதி. Show all posts

Sunday, June 7, 2020

ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன் களம் இறங்குவது உறுதி


அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதித்  தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு மக்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வரும் நிலையில், இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி  ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.


இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஜனநாயக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவின் 47-வது துணை அதிபராக பதவி வகித்த 77 வயதான ஜோ பிடன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட ஏதுவாக நடைபெற்ற பிரைமரி தேர்தலில் மூவாயிரத்து 979 வாக்குகளில் ஆயிரத்து 991 வாக்குகளை பெற்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகி உள்ளார். இதன் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளரான ற்போதைய ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன் களம் இறங்குவது உறுதியாகி உள்ளது.
இதேவேளை, ட்ரம்புக்கு ஆதரவளிக்க மாட்டேன் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ் தெரிவித்துள்ளார்.

Thursday, May 28, 2020

“ட்ரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை” - ‘டுவிட்டர்’


அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் வெளியிட்ட இரண்டு  டுவிட்கள் மக்களை தவறாக வழி நடத்தக்கூடியவை என்று முதல்முறையாகடுவிட்டர்நிறுவனம் அடையாளப்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தினந்தோறும்டுவிட்டர்சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களை விமர்சிப்பதற்கும் உபயோகப்படுத்துகிறார். அவரை டுவிட்டரில் 8 கோடிபேர் பின்பற்றி வருகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3 ஆம் திகதி நடக்கிறது. அதில், ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிப்பதில் தங்களுக்கு தயக்கம் இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பில் 60 சதவீத வாக்காளர்கள் தெரிவித்தனர்.

எனவே, மெயில்-இன் (தபால்) வாக்கு வசதியை பெரும்பாலானோருக்கு அளிப்பதற்காக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிபோர்னியா, மிச்சிகன் மாகாண கவர்னர்கள், வாக்காளர்களின் வீட்டுக்கு தபால் வாக்குச்சீட்டுகளை அனுப்பி வருகிறார்கள்.

இதை விமர்சித்து ட்ரம்ப் நேற்று முன்தினம் 2 ‘டுவிட்களை பதிவிட்டார். அவற்றில் அவர் கூறியிருந்ததாவது:-

தபால் வாக்குச்சீட்டுகள், மோசடிக்கு வழிவகுக்கும். சட்டவிரோதமாக வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, மோசடியாக கையெழுத்து போடப்படலாம். ஏனென்றால், கலிபோர்னியா கவர்னர் லட்சக்கணக்கானோருக்கு தபால் வாக்குச்சீட்டுகளை அனுப்பி வருகிறார் என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையே, இந்த 2 டுவிட்களும்பொய்யானவைஎன்ற அர்த்தம் அளிக்கும்வகையில், அவற்றுக்கு கீழேதபால் வாக்குச்சீட்டு குறித்த உண்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்என்று ஒரு எச்சரிக்கை குறிப்பைடுவிட்டர்இணைத்துள்ளது.

இந்த டுவிட்கள், மக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை என்றுடுவிட்டர்செய்தித்தொடர்பாளர் ட்ரன்டன் கென்னடி கூறினார்.

ட்ரம்பின்டுவிட்களை இதுபோன்றுடுவிட்டர்அடையாளப்படுத்துவது இதுவே முதல்முறை ஆகும். தவறான தகவல்களை அடையாளப்படுத்தும் முறையை சமீபத்தில் அந்நிறுவனம் கொண்டு வந்தது.

ஆனால், டுவிட்டரின் நடவடிக்கைக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “டுவிட்டர், தற்போது ஜனாதிபதி தேர்தலில் தலையிடுகிறது. சி.என்.என்., அமேசான் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை சரிபார்த்ததன் அடிப்படையில், எனது டுவிட்களை பொய் என்று கூறியுள்ளது.

டுவிட்டர், பேச்சுரிமையை நசுக்குகிறது. ஜனாதிபதி என்ற முறையில், இதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

ட்ரம்பின் பிரசார நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.