Showing posts with label சோ. Show all posts
Showing posts with label சோ. Show all posts

Wednesday, October 12, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 37

தமிழ் சினிமா வரலாற்றில் 1980 களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. கதாநாயகனையும், கதாநாயகியையும் விட அதிகமான ரசிகர்கள் சில்க்ஸ்மிதாவை ஆராதித்தனர். அவரின்  பெயரைச்  சொன்னாலே  இனம் புரியாத கிளர்ச்சி ஏற்படும்.

1980-களின் துவக்கத்தில் தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக உருவெடுத்தார் ஸ்மிதா.1983-ல் சில்க் ஸ்மிதாவின் பெயரால் நாடெங்கும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. மதுரையில் அவர் பெயராலே மன்றத்தைத் துவங்கிய ஒரு ரசிகர் கூட்டம் சில்க் ஸ்மிதாவின்  மன்றத்துக்கென தனிக் கொடியை பற்றக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழ்ப் படங்களைப் போலவே தமிழ்ப் பத்திரிகைகளும் ஸ்மிதாவின் படத்தைப் போடாமல் பத்திரிகையை நடத்த முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.“வாசகர்களுக்கு நான்கு வாரங்களில் சில்க் ஸ்மிதா தெலுங்கு கற்றுத் தரப் போவதாக” ஒரு  விளம்பரத்தை  பத்திரிகை ஒன்று வெளியிட்டது என்றால் சில்க் ஸ்மிதாவின் தாக்கம் எத்தகையது என அறியலாம்.

  பாக்யராஜ் கதாநாயகனாக அறிமுகமானபுதிய வார்ப்புகள்படத்தில் பூக்காரி ஒருவரின் பாத்திரத்தில்  நடிப்பதற்காக பாரதிராஜாவைப்  பார்க்கச் சென்றார்  அவர். ஆனால், அந்தப் படத்தில் அவர் தேர்வாகவில்லை. பின்னர் அவர் நடிக்கவிருந்த அந்தப் பாத்திரத்தில் சதிஸ்ரீ என்னும் நடிகை நடித்தார்.

இந்தியாவின் ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். இவர் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இவரது வசீகர தோற்றத்தின் காரணமாக பலரது தொல்லைகளுக்கு ஆளானார். இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை இரண்டாம் நிலை நடிக நடிகைகளுக்கான ஒப்பனை கலைஞராக தொடங்கினார். பின் தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் இவரை ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில் அறிமுகப்படுத்தினார். வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். வண்டிச்சக்கரத்தில் நடித்தபின்பு இவரது கதாபாத்திரமான சில்க் என்கிற பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும் இணைந்து இவரது அடையாளம் ஆயின.

வண்டிச் சக்கரம்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவிடமிருந்து சில்க் ஸ்மிதாவிற்கு அழைப்பு வந்தது. “இந்த முறையாவது அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அவரைப் பார்க்கக் கிளம்பினார் ஸ்மிதா.இந்த முறை சில்க் ஸ்மிதாவின் வேண்டுதல் வீணாகவில்லை. ‘அலைகள் ஓய்வதில்லைபடத்தில் நடிக்க ஸ்மிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.சினிமாவில் எந்த மாதிரியான பாத்திரத்தில் நடித்து  பெயர் வாங்க வேண்டும் என்று ஸ்மிதா ஆசைப்பட்டாரோ அப்படிப்பட்ட  ஒரு பாத்திரத்தை அந்தப் படத்தில் ஸ்மிதாவிற்கு வழங்கினார் பாரதிராஜா.

 சில்க் ஸ்மிதாவின் நடிபுப் பசிக்கு  தீனிபோட்ட அதே போன்று  இன்னொரு பாத்திரம் அவருக்குக் கிடைக்காதது துரதிர்ஷ்டமே.மிதா அந்தப் படத்தில் ஏற்றிருந்த பாத்திரத்தில் அவரிடமிருந்து முழுமையான நடிப்பை வரவழைக்க வேண்டும் என்பதற்காக பல முறை ஸ்மிதாவை அறைந்திருக்கிறார் பாரதிராஜா. ஆனால், அந்த அடிகளில் ஒரு அடிகூட ஸ்மிதாவுக்கு வலிக்கவில்லை. அதற்குக் காரணம்வண்டிச் சக்கரம்படத்தில் கவர்ச்சிக் குளத்தில் நீந்திய அவருக்குஅலைகள் ஓய்வதில்லைபடத்தில் அவர் வழங்கியிருந்த குணச்சித்திர பாத்திரம்.‘அலைகள் ஓய்வதில்லைபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே அந்தப் படத்தைத் தெலுங்கிலே தயாரிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. ‘சீதா கோக சிலகாஎன்ற பெயரில் அந்தப் படத்தைத் தெலுங்கிலே தயாரித்தவர்சங்கராபரணம்படைத்தைத் தயாரித்த ஏடித,நாகேஸ்வரராவ் என்னும் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்.

அலைகள் ஓய்வதில்லைபடத்தின் தெலுங்குப் பதிப்பில் ராதா நடித்த பாத்திரத்தில்கல்லுக்குள் ஈரம்படத்தில் நாயகியாக நடித்த அருணா நடித்தார். தியாகராஜனின் பாத்திரத்தில் சரத்பாபு நடித்தார். ஆனால், தமிழில் சில்க் ஸ்மிதா ஏற்றிருந்த பாத்திரத்தில் மட்டும் தெலுங்கிலும் அவரையே நடிக்க வைத்தார் பாரதிராஜா.“தியாகராஜனின் மனைவியாக வந்து காதலர்களை சேர்த்து வைக்க முயற்சித்து அதற்காக தியாகராஜனிடம் அடி வாங்குவதற்கு முன் அவரை ஒரு பார்வை பார்ப்பாரே அது தியாகராஜனுக்கு மட்டுமா..? அல்லது ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்திற்கும் சேர்த்தா.. என்பது அவர் மனதுக்கே வெளிச்சம். எவ்வளவு அருமையான நடிகையை இழந்துவிட்டோம்?” என்று அந்தப் படத்தில் ஸ்மிதா நடித்திருந்த நடிப்பைப் போற்றி வலைத்தளத்தில் தனது விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஒரு ரசிகர். 

சில்க் ஸ்மிதாவின் மீது கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை அழுத்தமாகப் பதித்ததில்மூன்றாம் பிறைபடத்திற்குப்  பெரும் பங்கு உண்டு.‘பொன்மேனி உருகுதேஎன்ற பாடலுக்கு அவர் ஆடியிருந்ததைப் பார்ப்பதற்காகவே திரும்பத் திரும்ப பல ரசிகர்கள் அந்தப் படத்தைப் பார்க்க வந்தனர். இளைஞர்கள் பலரது இரவுத் தூக்கத்தை கெடுக்கத் தொடங்கினார் ஸ்மிதா.“உடம்பு இருக்கட்டும். வெறும் கண்களாலேயே போதை ஏற்றுவதில் சிலுக்கிற்கு நிகர் சிலுக்குத்தான்..” என்று ஸ்மிதாவை ஆராதித்ததுகுமுதம்த்திரிகை.

மூன்றாம் பிறைபடத்தைப் பார்க்க தியேட்டர்களுக்குப் போன ஸ்மிதா கமல்ஹாசனுடன் சேர்ந்து தான் ஆடியிருந்தபொன்மேனி உருகுதே’  பாடலுக்குக்  கிடைத்த வரவேற்பைப் பார்த்து அதிர்ந்து போனார்.இனி எந்தப் பாதையில் அவர் பயணிக்க வேண்டும் என்பதைமூன்றாம் பிறைஅவருக்கு எடுத்துச் சொன்னது என்றால் அவர் எடுத்த முடிவு சரியானதுதான் ஆமோதித்ததுசகலகலாவல்லவன்பட வெற்றி.

அந்தப் படத்தில் இடம் பெற்றநேத்து ராத்திரி அம்மாபாடலை எஸ்.ஜானகி பாடியிருந்த விதம், அதற்கு புலியூர் சரோஜா அமைத்திருந்த நடனம்அந்த நடனத்தின்போது ஸ்மிதா காட்டிய அங்க அசைவுகள் எல்லாமாகச் சேர்ந்து அந்தப் பாடல் காட்சி பலரது தூக்கத்தை காவு வாங்கியது.நான்கு நாட்கள் படமாக்கப்பட்ட அந்த பாடல் காட்சியின்போது  ஸ்மிதா சரியாக நடனமாடாததால் நடன இயக்குநரான புலியூர் சரோஜா  ஸ்மிதாவைத் திட்டிய திட்டுகளுக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதனாலெல்லாம் புலியூர் சரோஜா மீது ஒரு இம்மியள விற்குக்கூட அவர் மீது ஸ்மிதா கோபம் கொள்ளவில்லை. தியேட்டரில் ரசிகர்கள் தன்னுடைய நடனத்தைப் பார்த்து கை தட்ட அந்தத்  திட்டுக்கள்தான் உரமாக அமையப் போகிறது என்பதை ஸ்மிதா மிகச் சரியாக உணர்ந்திருந்தார்.‘சகலகலாவல்லவன்வெளியான முதல் நாளன்றே திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.வசூலில் புதிய சரித்திரம் படைத்த அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியில் சில்க் ஸ்மிதா பங்கேற்றநேத்து ராத்திரி அம்மாஎன்ற பாடலுக்கும் அந்தப் பாடலுக்கு ஸ்மிதா ஆடிய ஆட்டத்திற்கும் முக்கிய பங்கு இருந்தது.

சில்க்கின்  வெற்றி ஒரு புறம்  இருக்க அவரைப்பாற்றிய எதிர்  மறையான  செய்திகளும் வெளிவந்தன. தலைக்கனம் பிடித்தவர்,   பெரிய நடிகர்களுக்கு மரியாதை கொடுக்காதவர்  போன்ற செய்திகள்  ரெக்கை கட்டிப் பறந்தன.

அப்படிப்பட்ட செய்திகள் உங்களைப் பாதிக்கவில்லையா..?” என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்டபோது ஆத்திரப்படாமல் அவருக்கு அமைதியாக பதில் சொன்னார் சில்க்.

நான் நடிக்க வந்து இன்னும் நான்கு வருடங்கள்கூட முழுதாக முடியவில்லை. அதற்குள் தமிழில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி, சோபன்பாபு, கிருஷ்ணா, மலையாளத்தில் மது என்று தென்னிந்தியாவில் உள்ள எல்லா முன்னணிக் கதாநாயகர்களின் படங்களிலும் நான் நடித்துவிட்டேன்.நான்கு வருடங்களில் இருநூறு படங்களில் நான் நடித்து விட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாத சிலர் பரப்பி வரும் வதந்திகள்தான் அந்தச் செய்திகள். அந்தச்  செய்திகளைப் படிக்கவோ.. அல்லது அதை நினைத்து வருந்தவோ நேரமில்லாமல் இப்போது நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்என்று ஸ்மிதா பதில் கூறியபோது மனதளவில் அவருக்குள் ஒரு முதிர்ச்சி  வந்துவிட்டிருந்ததை அந்த  நிருபரால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.

 

Thursday, October 6, 2022

தெரிந்தசினிமா தெரியாத சங்கதி - 36


 தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவ்ர்களில் ஒருவர் சோ என  அழைக்கப்படும் ராமசாமியும் ஒருவர். நாடகத்தில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த சோ சகலதுறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தார். அரசியல் நக்கல் எனப்து சோவுக்கு கைவந்த  கலை. ஆளும் கட்சியின் தகிடுதத்தங்களை அவர் வெளிப்படுத்தும்  பாங்கு அலாதியானது. அதற்காகவெ அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

சோவின் தம்பியான அம்பி என்ற ராஜகோபாலும் மற்ற நண்பர்களும்  ஈணைந்து நடத்திக் கொண்டிருந்த ஒரு அமைப்பிற்கு கூத்தபிரான் என்பவர் நாடகம்  எழுதிக் கொடுத்தார். அந்த நாடகங்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.  தன்னுடைய தனி நாடகக் குழுவை வைத்து ஒரு நாடகம் நடத்திய கூத்தபிரானுக்கு   பணம்  சரிவரக்கொடுக்கப்படவில்லை. பணம் கேட்டு கூத்தபிரான் வீட்டுகுச் செல்லும்போது சோ மட்டும்தான் இருப்பார். பணம் கேட்டுச் செல்லும் கூத்தபிரான் கண்டபடி பேசிவிட்டுச் செல்வார். பணம் தராத படியால் நாடகம் தரமாட்டேன் என கூத்தபிரான் சொல்லிவிட்டார்.

கூத்தபிரான் கோபித்துக்க்கொண்டு சென்றதால் நாடகம் இல்லாமல் என்ன செய்வதெனத் தெரியாது அவர்கள் தடுமாறினார்கள்.பணம்  இல்லாததால் அவர்கலுக்கு நாடகம் எழுதிக் கொடுக்க யாரும் முன்வரவில்லை. அப்போதுதான் சோ நாடகாசிரியராக மாற்றம் பெற்றார்.

“வை. ஜி.பார்த்தசாரதியின் நாடகக் குழுவில் சேர்ந்த அன்று அவர்களது நாடகத்தைப் பார்த்துவிட்டு நான் ஒரு நாடகம் எழுதி வை.ஜி.பார்த்தசாரதியிடம் நீட்டினேன். ஒரு ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருந்த அந்த நாடகத்தை அவர் சரியாகப் படித்துக் கூட  பார்க்கவில்லை. எங்கேயோ தூக்கிப் போட்டுவிட்டார். அந்த நாடகத்தின் கதை இன்னும் என் நினைவில் இருக்கிறது. நீங்கள் எல்லாம் சரி என்று சொன்னால் நான் வேண்டுமானால் அந்தக் கதையை நாடகமாக எழுதித் தருகிறேன்” என்றார் சோ.அப்போது வேறு வழி இல்லாத காரணத்தால் எல்லோரும் சரி என்று ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து “ஈப் ஐ கெட்  இட் “ என்ற ஆங்கிலப் பெயரில் அந்த நாடகத்தை அவர்களுக்காக எழுதினார் சோ. அதுதான் அவர் எழுதிய முதல் மேடை நாடகம்.

தென்னகத்து ஜேம்ஸ் பொண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர் அந்த நாடகத்தில் நடித்தார். திரைப்பட வாய்ப்புத்தேடி அலைந்த ஜெய்சங்கள்  இபடிப்பட்ட நாடகங்களில் அப்போது நடித்தார்.அவர்களுடன் சோவின் தம்பி அம்பி, நீலு,  ராமமூர்த்தி ஆகியோரும் அந்த நாடகத்தில் நடித்தனர். அந்த நாடகத்தில் நடித்ததற்குப் பிறகுதான் ‘காத்தாடி’ என்ற பெயர் ராமமூர்த்தியுடன் இணைந்து கொண்டது.

அவர்களது நாடகக் குழுவிற்கு கதை எழுதிக் கொண்டிருந்த அவர் கோபித்துக் கொண்டு போய்விட்டதால் அடுத்து நாடகம் போட கதை இல்லாமல் சோவும் மற்றவர்களும்  தவித்தனர். பெரிய நாடக ஆசிரியர்கள் யாரிடமும் போய் நாடகம் எழுதித் தர கேட்கின்ற அளவிற்கு அவர்கள் நிதி நிலைமை அப்போது இல்லை.

சோவின் முதலாவது நாடகம்  பெரு வெற்றி பெற்றது. ஒரு வருடத்தில் 25 க்கும் மேற்பட்ட முறை மேடையேறியது. அந்தக் காலத்தில் அது பெரும் சாதனை.“தமிழ் நாடக உலகில் நகைச்சுவையில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்திய நாடகம்” என்று அந்த நாடகத்தைப் புகழ்ந்தார் நாடக உலக ஜாம்பவானான எஸ்.வி.சஹஸ்ரநாமம்.

“யார் வேஷதாரி?” என்ற பெயரில் சோ எழுதியிருந்த மற்றொரு நாடகத்தை கொஞ்சம் மாற்றி  எழுதி தனது ஏ.ஜி.எஸ். அலுவலகத்தின் விழா ஒன்றில் நடத்தினார் கே.பாலசந்தர். அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு நாம் எழுதிய நாடகத்தை இப்படி எல்லாம்கூட மாற்ற முடியுமா என்று அசந்து போன சோ அடுத்துத் தான் எழுதிய “ஒய் நாட்?” என்ற நாடகத்தை இயக்கித் தரும்படி கே.பாலசந்தரை அழைத்தார்.  அன்று பாலசந்தருக்கு அவர் அளித்த அழைப்புதான் பின்னர் சோவையே இயக்குநராக்கியது.

சோ  எழுதிய ‘ஒய் நாட்’ என்ற நாடகம் உட்பட மூன்று நாடகங்களை அவர்களது குழுவிற்காக இயக்கிய பாலசந்தர் அந்த நாடகங்களை இயக்கியபோது பெற்ற அனுபவங்கள் அவரால் மறக்க முடியாதவைகளாக அமைந்தன.அபிராமபுரம் மேல்நிலைப் பள்ளியில்தான் அந்த நாடகங்களின் ஒத்திகைகள் எப்போதும் நடைபெறும். ஐந்து மணிக்கு ஒத்திகை என்றால் நாலரை மணிக்கே அங்கே  போய்விடுவார் பாலசந்தர். ஆனால், அந்த நாடகத்தில் நடித்த சோவின் நண்பர்கள் எல்லோருமே ஆறு மணிக்கு மேல்தான் ஒருவர் பின்  ஒருவராக வருவார்கள். அவர்களில் பாதி பேர் வந்த பிறகு ஆறரை மணிக்கு மெல்ல வருவார் சோ.

நாடக ஒத்திகையில் இப்படி என்றால் நாடக மேடையிலும் பாலசந்தர் சொல்கின்ற இடங்களில் அவர்கள் யாருமே நிற்க மாட்டார்கள். பாலச்சந்தருக்கு மரியாதை கொடுக்கக் கூடாது என்பதோ அவர் சொல்வதைக் கேட்கக் கூடாது என்பதோ அவர்கள் எண்ணமல்ல. இயல்பாக அந்தக் குழு அப்படியே இயங்கிக் கொண்டிருந்ததால் தங்கள் போக்கை உடனடியாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை  என்பதுதான் உண்மை.நாடகத்தில் நடிக்கின்ற நடிகர்கள் யாரும் தான் எழுதிய வசனங்களைத் தாண்டி  ஒரு வார்த்தைகூட  பேசக் கூடாது என்று பாலசந்தர் நினைப்பார். ஆனால் சோவைப் பொறுத்தவரையில்  குறிப்பிட்ட  ஒரு காட்சியில் ஒரு ஜோக் அடிக்க வேண்டும் என்று அவருக்குத்  தோன்றிவிட்டால் அந்த ஜோக்கை சொல்லாமல் இருக்கவே மாட்டார் அவர்.

நாடக ஒத்திகையின்போது அது போன்ற ஜோக்குகள் எதுவும் வேண்டாம் என்று பாலசந்தர் கண்டிப்போடு சொல்லும்போது அவரிடம் சரியென்று ஒப்புக் கொண்டு விட்டு  பின்னர் நாடகம் நடக்கும்போது அந்த ஜோக்கை சொல்லி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சோ.அப்படி அவர் அடிக்கின்ற ஜோக்குகளுக்கு  பலத்த கை தட்டல்கள் கிடைக்கும் என்றாலும் அந்தக் காட்சி எப்படிப்பட்ட  தாக்கத்தை ரசிகர்களிடம் உண்டு பண்ண வேண்டும் என்று பாலசந்தர் திட்டமிட்டிருந்தாரோ அதை அந்த ஜோக்குகள் பெரிதாக பாதித்துவிடும். ஆனால், சோவோ அவர்களது நண்பர்களோ அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்பட மாட்டார்கள்.

நாடகம் நடக்கும்போது இப்படி எல்லாம் பொறுப்பில்லாமல் நடக்கக் கூடாது என்று அவர்களுக்கு பல முறை சொல்லிப் பார்த்த பாலசந்தர் ஒரு கட்டத்தில் கடும் கோபத்தோடு அவர்களை எச்சரித்தார். ஆனால் அதற்குப் பிறகும்  சோவிடமும்  அவரது  குழுவினரிடமும் எந்தவிதமான மாறுதலும்  இல்லை.இனி அவர்களைத் திருத்தவே  முடியாது என்று  ஒரு கால கட்டத்தில் முடிவுக்கு வந்த பாலசந்தர் “இதற்கு மேலும் உங்கள் நாடகத்தை என்னால் இயக்க முடியாது” என்று அவர்களிடம் சொல்வதற்கு பதிலாக “என்னுடைய நாடக வேலைகள் எனக்கு நிறைய இருக்கின்றன. அதனால் நீங்கள் வேறு இயக்குநரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம்  சொல்லிவிட்டு அவர்களைக்  காயப்படுத்தாமல்  அவர்களது நாடகங்களை இயக்கும் பணியிலிருந்து ஒதுங்கிவிட்டார் விவேகா பைன் ஆர்ட்சை பொறுத்தவரையில் யார் விலகினாலும் அவர்களது பொறுப்பையும் சேர்த்து கவனிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்த சோ, பாலசந்தர் விலகியவுடன் நாடகங்களை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

பாலசந்தரைப் பொருத்தவரைக்கும் அவர் ஒரு பர்பெக்க்ஷனிஸ்ட். காட்சிக்கான அரங்க அமைப்பு, ஒலி, ஒளி, பின்னணி இசை தவிர  நடிகர்கள் எங்கு நின்று வசனம் பேச வேண்டும். எந்த வசனத்தில் திரும்ப வேண்டும் என்பதில்கூட கவனம் செலுத்துவார் அவர். ஆனால் சோவைப் பொறுத்தவரையில் இவைகள் எதிலுமே அவர் கவனம் செலுத்த மாட்டார். அவரைப் பொறுத்தவரையில் ஏற்று நடிக்கின்ற  பாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிகர்கள் வசனம் பேசி விட்டால் போதும்.பாலசந்தர் விவேகா பைன் ஆர்ட்சை விட்டு விலகிய பிறகு அவர்களது நாடகங்கள் அப்படித்தான் நடந்தன. ஆனாலும் அந்த நாடகங்களுக்கு அசாத்திய வரவேற்பு கிடைத்தன.

50 க்கும் மேற்பட்ட நாடகங்களில் சோ நடித்துள்ளார்.  25 நாடகங்களை எழுதியுள்ளார். 18 நடகங்களை இயக்கி உள்ளார். சொல நாடகங்கள் திரைபப்டமாகின.