Showing posts with label உலகக்கிண்ணம். Show all posts
Showing posts with label உலகக்கிண்ணம். Show all posts

Monday, June 15, 2026

ஏழு கோல்கள் அடித்து ஜேர்மனி உலகசாதனை


  உலகக்கிண்ணப்  போட்டியில் குராசாவோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற ஜேர்மனி அணி புதிய வரலாற்றுச் சாதனையுடன் தனது உலகக்  கிண்ணப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டத்தில் 4 முறை சம்பியனான ஜேர்மனி, முதன்முறையாக உலகக்  கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற தகுதி  குராசாவோ ஆகியன  மோதின. 2014 ஆம் ஆண்டு பிறேஸிலில் நடந்த உலக்க்கிண்ணப் போட்டியில் சம்பியனான ஜேர்மனி,  கடந்த 2018 , 2022 உலகக் கிண்ணப் போட்டிகளில்  முதல் ஆட்டங்களில் முறையே மெக்சிகோ , ஜப்பானிடம் தோற்று ஏமாற்றமளித்த ஜேர்மனி, இம்முறை அந்த மோசமான தொடக்கம் பெறும் அணி என்ற பெயரை உடைத்தெறிந்துள்ளது. அத்துடன் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணிகள் பட்டியலில் பிறேஸிலை பின்னுக்குத் தள்ளி ஜேர்மனி முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்திலேயே ஜேர்மனியின் பெலிக்ஸ் நமேச்சா முதல் கோல் அடித்து அசத்தினார். எனினும், ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் குராசாவோ அணியின் லிவானோ கொமெனென்சியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்து அதிர்ச்சியளித்தார். இந்தகோல் அந்த அணியின்  சாதனையாகும். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜேர்மனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 38வது நிமிடத்தில் நிகோ ஸ்லாட்டர்பெக் ஒரு கோலும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் காய் ஹாபர்ட்ஸ் பெனால்டி மூலம் ஒரு கோலும் அடிக்க, முதல் பாதியில் ஜேர்மனி 3-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி தொடங்கிய 69 விநாடிகளிலேயே ஜமால் முசியாலா 4வது கோலை அடித்தார். தொடர்ந்து நதானியேல் பிரவுன் (68வது நிமிடம்), டெனிஸ் உண்டாவ் (78வது நிமிடம்) ,ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் காய் ஹாபர்ட்ஸ் தனது 2வது கோலை அடித்தார். இதனால் ஜேர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஜேர்மனி அணி மொத்தம் 26 முறை கோல் அடிக்க முயற்சித்தது.

  

ஈக்வடோரின் நம்பிக்கையை தகர்த்தது ஐவரி கோஸ்ட்


 அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில்  ஈக்வடோர், ஐவரிகோஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 90 ஆவது நிமிடத்தில்  அமத் தியல்லோ அடித்த   கோலால் ஈக்வடாரை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஐவரி கோஸ்ட் வெற்றி பெற்றது.

 ஆட்டத்தின் முதல் பாதியில் ஈக்வடார் அணி ஆதிக்கம் செலுத்தியது. 24வது நிமிடத்தில் ஜான் யெபோவாவும், 30வது நிமிடத்தில் ஆலன் மிண்டாவும் அடித்த பந்துகள் துரதிர்ஷ்டவசமாக கோல் போஸ்ட்டின் மேல் கம்பத்தில் பட்டுத் திரும்பின. 

ஐவரி கோஸ்ட் அணியும் பதிலடி கொடுக்கத் தவறவில்லை. 2வது பாதியில் எலி வஹி அடித்த பந்து கம்பத்தில் பட்டுத் திரும்பியது. செகோ போபனா, பிராங்க் கெஸ்ஸி ஆகியோர் நடுகள ஆட்டத்தில் பலம் சேர்த்தனர். குறிப்பாக, இளம் வீரர் இயன் தியோமண்டே தனது அசுர வேக ஆட்டத்தால் ஈக்வடார் தற்காப்பு அரணுக்கு பெரும் சவால் அளித்தார். ஆர்சனல் டிபெண்டர் பியரோவை ஏமாற்றி அவர் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினார்.

ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90வது நிமிடத்தில் வில்பிரைட் சிங்கோ கொடுத்த அருமையான பாஸை பெற்றுக்கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் விங்கர் அமத் தியல்லோ, பந்தை லாவகமாக வளைத்து கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பி அணியை 1-0 என வெற்றி பெறச் செய்தார். இதனால் ஈக்வடார் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

உலகக்கிண்ணம்,அமெரிக்கா,மெக்ஸிகோ,கனடா,ஈக்குவடோர்,ஐவரிகோஸ்ட், ,உதைபந்தாட்டம், விளையாட்டு

 

Saturday, April 18, 2026

உலகக் கிண்ண போக்குவரத்துச் செலவை பீபா ஏற்க வேண்டும்



 


உலகலாவிய ரீதியில்  பயணச்சீட்டு விலைகள் அதிகரித்தமை கவலையாக இருக்கும் நிலையில், 2026  பீபா உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாகப் போக்குவரத்துச் செலவுகள் ஒரு புதிய முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. முக்கிய விளையாட்டு மைதானங்களுக்கான இரயில் கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ளதாகக் கூறப்படுவது, அரசியல் ரீதியான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. இந்தச் செலவை பீபா தான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலகக் கிண்ண  போட்டி நாட்களில், மன்ஹாட்டனிலிருந்து மெட்லைஃப் ஸ்டேடியத்திற்குச் செல்லும் இரயில் கட்டணங்கள் வழக்கமான $12.90-ஐ விட $100-ஐத் தாண்டக்கூடும் என்று ஒரு அறிக்கை தெரிவித்தது. பாஸ்டனிலும் இதேபோன்ற கட்டண உயர்வுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன; அங்கு சிறப்புச் சேவைகளுக்கான கட்டணம் $20-க்கு பதிலாக $80 ஆக இருக்கலாம்.

ஒரு உலகளாவிய நிகழ்விற்காக உள்ளூர்வாசிகள் அதிக விலையைச் செலுத்தக் கூடாது என்று வாதிட்ட சக் ஷுமர், போக்குவரத்துச் செலவுகளை ஏற்குமாறு பீபாவுக்கு  பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் இந்த அதிக விலையைக் கேள்விக்குள்ளாக்கியதோடு, மலிவு விலை , அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் தன்மைக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த வாதம் அதன் அளவு மற்றும் வருவாயை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் போட்டியின் மூலம் பீபா சுமார் 11 பில்லியன்  டொலர் வருவாய் ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 

 அமெரிக்க ந‌கரங்கள் ஏற்கனவே உள்கட்டமைப்பு தளவாடங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளன. ரசிகர்களும் தினசரி பயணிகளும் உயர்த்தப்பட்ட பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை எதிர்கொள்ளக் கூடாது. முதன்மைப் பயனாளியான பீபா, அந்த நிகழ்வு தொடர்பான செயல்பாட்டுச் செலவுகளை ஏற்க வேண்டும் என  பொது மக்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், 100 டொலர் பயணச்சீட்டுகள் குறித்த செய்திகள் யூகத்தின் அடிப்படையிலானவை என்றும் என்.ஜே. டிரான்சிட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மெட்லைஃப் ஸ்டேடியத்தில் போட்டிகளுக்கான சேவைகளை இயக்குவதற்கு சுமார் 48 மில்லியன்  டொலர்கள் செலவாகலாம் என உள்ளக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நியூ ஜெர்சி ஆளுநர் மிக்கி ஷெரில், இந்தச் செலவுகளை வரி செலுத்துவோர் ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதனால், விலைகளுக்கு வரம்பு விதிக்கப்பட்டால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

 பாஸ்டனில், போட்டி நாளன்று ஜில்லெட் ஸ்டேடியத்திற்குச் செல்லும் பயணக் கட்டணங்கள் நான்கு மடங்கு அதிகரிக்கக்கூடும் என மசாசூசெட்ஸ் பே போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

 

  

 

Sunday, April 5, 2026

உதைபந்தாட்டத்தில் வீழ்ச்சியடைந்த இத்தாலி


உலக  உதைபந்தாட்டத்தில்  வல்லமைமிக்க நாடாகப் புகழ்பெற்ற இத்தாலி , தற்போது அதன் உச்ச நிலையிலிருந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு அது எந்தவொரு உலகக்  கிண்ணப் போட்டியிலும்  பங்கேற்கவில்லை. அந்த ஆண்டு, குழுநிலை வெளியேற்றத்திற்காகவும், ஜார்ஜியோ கியேலினியின் தோளில் லூயிஸ் சுவாரெஸ் கடித்ததற்காகவும்  மட்டுமே நினைவுகூரப்படுகிறது. உலகக்  கிண்ண உதைபந்தாட்டத்தில்  இத்தாலி கடைசியாக நாக்-அவுட் சுற்றில் விளையாடி இருபது ஆண்டுகள் ஆகின்றன; அப்போது அது பெனால்டி முறையில் நான்காவது முறையாக சம்பியனானது. இடையில் 2011 ஆம் ஆண்டு யூரோ கிண்ண சம்பியனாகி நம்பிக்கையளித்தது. பின்னர்  இத்தாலி எழுந்திருக்கவே இல்லை.

2018-ல், தகுதிச் சுற்றில் அசைக்க முடியாத ஸ்பெயினுடன் இத்தாலி இடம்பெற்றது; பின்னர் பிளேஆஃப் சுற்றில் சுவீடனிடம் தோல்வியடைந்தது. 2022-ல், முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து, வடக்கு அயர்லாந்து  பல்கேரியாவை வெல்லத் தவறியது. பிளேஆஃப் அரையிறுதியில் வடக்கு மாசிடோனியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இந்த வருடம்  ஓஸ்லோவில் நோர்வேயிடம் அது அவமானப்படுத்தப்பட்டது . லூசியானோ ஸ்பாலெட்டி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து , தனக்குப் பழகிப்போன ஒரு பாதையாக நிரூபிக்கப்பட்டதைச் சரிசெய்வதற்காக, தகுதிச் சுற்றின் நடுவில் கடுமையான இத்தாலிய அடையாளமான  ஜெனாரோ கட்டூசோ களமிறக்கப்பட்டார். ஆனால், சான் சிரோவில் எர்லிங் ஹாலண்ட் , அவரது அணியினரிடம் இத்தாலி   அணி படுதோல்வி அடைந்தது.

சொந்த மண்ணில் நோர்வேயிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்ற பிறகு, தகுதிச் சுற்றின் முதல் சுற்றில் இத்தாலி ஏழு போட்டிகளில் மேலும் ஒன்பது கோல்களை விட்டுக்கொடுத்தது — இஸ்ரேலுக்கு எதிராக சொந்த மண்ணில் நான்கு கோல்களும், நோர்வேக்கு எதிராக சொந்த மண்ணில் நான்கு கோல்களும் விட்டுக்கொடுத்தது. 1955-ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.

போஸ்னியாவுக்கு எதிரான போட்டியின் முதல் பாதியின் நடுவில், இத்தாலி தடுப்பாட்ட வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்டோனி  சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார், இது போட்டியின் போக்கையே மாற்றியது.

தற்போதைய நடுக்கள வீரர்கள், கட்டூசோ எதிர்பார்த்த அளவிலான கட்டுப்பாட்டைப் போட்டிகளில் ஏற்படுத்துவதில்லை. அலெஸாண்ட்ரோ டெல் பியரோ அல்லது ஃபிரான்செஸ்கோ டோட்டியைப் போல, ஒன்றுமில்லாததிலிருந்து மாயாஜாலத் தருணங்களை உருவாக்கக்கூடிய சிறந்த இத்தாலிய முன்கள வீரர்கள் யாரும் இல்லை. தற்போது 36 வயதாகும் இம்மொபிலே, 2022-ல் வென்றதிலிருந்து, எந்த இத்தாலிய வீரரும் சீரி ஏ கோல்டன் பூட் விருதை வென்றதில்லை. .

கிளப் கால்பந்தில் கண்ட அளவிலான போட்டிகளில் இத்தாலியின் நிலை, அதன் வெற்றி வீழ்ச்சிக்கு ஒரு நேரடிப் பிரதிபலிப்பாகும். 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பாவின் உயர்மட்ட கிளப் போட்டியான சாம்பியன்ஸ் லீக்கை எந்த இத்தாலிய கிளப்பும் வென்றதில்லை. யுவென்டஸ் (2015 மற்றும் 2017) மற்றும் இன்டர் மிலன் (2023 மற்றும் 2025) ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. கடந்த சீசனின் இறுதிப் போட்டியில், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணியிடம் இன்டர் அணி 0-5 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

இந்த சமீபத்திய பின்னடைவை 'ஏற்றுக்கொள்ள முடியாத அவமானம்' என்று வர்ணித்ததைத் தொடர்ந்து, 2018 முதல் அப்பதவியில் இருந்துவரும் இத்தாலிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கேப்ரியல் கிரவினா பதவி விலக வேண்டும் என நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இருப்பினும், கிரவினா அவற்றைக் கண்டுகொள்ளாமல், தற்போதைய தேவை ஒரு ஆழமான சுயபரிசோதனைதான் என்று கூறியுள்ளார். “இத்தாலிய கால்பந்து முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார். “லீக்குகள் உள்ளன, கிளப்புகள் உள்ளன.

ரமணி

 

 

 

 

 

Sunday, March 22, 2026

ஈரானின் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்ற பேச்சுவார்த்தை


  உதைபந்தாட்ட  வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக,   ஈரான் விளையாடும் உலகக்    கிண்ணப் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவதற்காக்    ஈரான்  உதைபந்தாட்ட  கூட்டமைப்பு ,பீபாபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான்   உதைபந்தாட்ட  தலைவர் மெஹ்தி தாஜ் கூறினார்.

ஈரான் பங்கேற்பதை வரவேற்பதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறினார், ஆனால் "அவர்களின் சொந்த உயிர் மற்றும் பாதுகாப்பிற்காக" அவர்கள் அமெரிக்காவில் விளையாடுவது பொருத்தமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
"
ஈரான் தேசிய அணியின் பாதுகாப்பை தன்னால் உறுதி செய்ய முடியாது என்று டிரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ள நிலையில், நாங்கள் நிச்சயமாக அமெரிக்காவுக்குப் பயணிக்க மாட்டோம்," என்று மெக்சிகோவில் உள்ள ஈரான் தூதரகத்தின் X கணக்கில் தாஜ் பதிவிட்டுள்ளார். நாங்கள் அமஎரிக்காவைப் பகிஷ்கரிக்கொறோம்  உலகக்கிண்ணத்தைப் பகிஷ்கரிக்கவில்லை என்று  ஈரானின்  உதைபந்தாட்டத் தலைவர் மெஹ்தி தாஜ்  தெரிவித்துள்ளார்
அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து தெஹ்ரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து, அந்நாட்டின் உச்சத் தலைவரைப் படுகொலை செய்ததால், ஈரானிய வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த வாரம் கூறினார்.
"
இறுதியில், அவர்கள் விளையாடுகிறார்களா இல்லையா என்பதை கூட்டமைப்புதான் முடிவு செய்ய வேண்டும். இன்றுவரை, அவர்கள் உலகக் கிண்ணப் போட்டியில்  பங்கேற்கப் போவதாக கூட்டமைப்பு எங்களிடம் தெரிவித்துள்ளது," என்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் ஆப்பிரிக்க  உதைபந்தாட்ட   கூட்டமைப்பின் (AFC) பொதுச் செயலாளர் வின்ட்சர் ஜான் கூறினார்

 

Tuesday, March 17, 2026

உலகக்கிண்ண உதைபந்தாட்ட‌ப் போட்டியில் இருந்து ஈரான் வெளியேறியது


 இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி, அதன் தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றதை அடுத்து, 2026 உலகக்  கிண்ண உதைபந்தாட்டம் போட்டியில்   ஈரான்  விளையாடாது என  அந்த நாட்டு  விளையாட்டு அமைச்சர் அகமது டோன்யமாலி புதன்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும்  ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி, இஸ்லாமியக் குடியரசின் உச்ச தலைவரைக் கொன்றன, இது வளைகுடாவில் பிராந்திய அளவிலான மோதலுக்கு வழிவகுத்தது.

"இந்த ஊழல் ஆட்சி எங்கள் தலைவரை படுகொலை செய்ததைக் கருத்தில் கொண்டு, எந்த சூழ்நிலையிலும் நாங்கள் உலகக்  கிண்ணப் போட்டியில் பங்கேற்க மாட்டோம் " என்று அமைச்சர் அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

48 அணிகள் பங்கேற்கும் உலகக்  கிண்ணப் போட்டி ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

 பெல்ஜியம், எகிப்து,  நியூசிலாந்து அணிகளுடன் குழு  ஜி இல்  இடம்  ஈரான் ப்டம் பிடித்தது.  ஜி குழுவின் மூன்று  போட்டிகள் அமெரிக்காவிலும், இரண்டு போஓட்டீகால்  லொஸ் ஏஞ்சல்ஸிலும், ஒன்று சியாட்டிலிலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் போட்டிக்குத் தகுதி பெற ஆசிய தகுதிச் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஈரான், கடந்த வாரம் அட்லாண்டாவில் நடைபெற்ற உலகக் கிண்ண  பங்கேற்பாளர்களுக்கான  பீபாதிட்டமிடல் உச்சிமாநாட்டில் பங்கேற்காத ஒரே நாடு ஆகும்.

 பீபாவின் விதிமுறைகளின்படி, "முதல் போட்டிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக" போட்டிகளில் இருந்து விலகும் எந்தவொரு அணிக்கும்  பீப்   ஒழுங்குமுறைக் குழுவால் குறைந்தது 250,000 சுவிஸ் பிராங்குகள் ($320,800) அபராதம் விதிக்கப்படும்.

 ஈரானுக்குப் பதிலாக      ஈராக்? 

 உலகக்கிண்ணப் போட்டியில் இருந்து  ஈரானின் விலகல், அதன் அண்டை நாடான ஈராக் அணிக்கு சாதகமாக அமையும். தற்போதைய நிலவரப்படி, இந்த மாத இறுதியில்  பிளே-ஆஃப் போட்டியில் ஈராக் விளையாட உள்ளது.

பீபாவின் தகுதி விதிமுறைகளின்படி, ஈரான் போட்டியில் இருந்து விலகினால், மேற்கு ஆசியாவிலிருந்து அடுத்த சிறந்த தரவரிசையில் உள்ள அணி உலகக்  கிண்ணத்தில் விளையாடத் தகுதி பெறும்.

ஈராக்  நாடு ஈரானை விட சற்று கீழே தரவரிசையில் இருந்தாலும், உலகக்  கிண்ண இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.

 இதனால் பிளேஆஃப்களில் ஈராக்கின் இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வழங்கப்படும், ஏனெனில் அது AFC ஐந்தாவது சுற்று தகுதிச் சுற்றுகளில் முந்தைய அணியிடம் தோல்வியடைந்தது.

 


 

 

 

மெக்சிக்கோ கோல்கீப்பர் மலகன் உலகக் கிண்ணத்தில் இல்லை


  மெக்சிக்கோ  அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கோல்கீப்பர் லூயிஸ் மலகன், அகில்லெஸ் தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்டதால், இந்த ஆண்டு  பீபா உலகக்  கிண்ணப் போட்டியில்  இருந்து விலகுவார் என்று லிகா MX கிளப் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

 

செவ்வாய்கிழமை பிலடெல்பியாவில் நடந்த CONCACAF சம்பியன்ஸ் கிண்ண  சுற்று 16க்கான முதல் லெக் போட்டியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் முதல் பாதியில் 29 வயதான அவர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் காயம் உறுதி செய்யப்பட்டது.

"லூயிஸ் ஏஞ்சல் மலகனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அகில்லெஸ் தசைநார் சிதைந்திருப்பதைக் காட்டுவதாக கிளப் அமெரிக்கா தெரிவித்துள்ளது" என்று மெக்சிகோ நகரத்தை தளமாகக் கொண்ட கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காயம் குணமடைய பொதுவாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர், இதனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பையில் இருந்து அவர் நீக்கப்படுவார்.

2023 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமானதிலிருந்து மலகான் 19 மெக்சிகோவிக்காக விளையாடினார். அவற்றில்  13 போட்டிகளில் எதிரணிகள் கோல் அடிக்கவில்லை

 

 

Saturday, February 28, 2026

ரி20 உலகக் கிண்ணத் தொடரில் புதிய சாதனைகள்


 இந்தியா,இலங்கை ஆகியன இணைந்து நடத்தும் ரி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் புதிய சாதனைகள் பல நிலை நாட்டப்பட்டுள்ளன. வீரர்களின், சாதனைகளும், அணிகளின் சாதனைகளும்  வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. 

இங்கிலாந்து கப்டன் ஹரி புரூக் நிகழ்த்திய  மாபெரும் சாதனை 

 இலங்கையில் உள்ள பல்லகல்லே மைதானத்தில்   இங்கிலாந்து ,  பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில்   விளையாடிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர் கொண்டு   2 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது. ‍  இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கப்டனான ஹாரி புரூக் 100  ஓட்டங்கள் அடித்து  ரி20 உலகக் கிண்ண வரலாற்றில்  சதம் அடித்த கப்டன்  என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்னதாக ரி20  உலகக் கிண்ணத் தொடரில்  கப்டனாக அதிக ஓட்டங்கள் அடித்த வீரராக கிரிஸ் கைல்ஸ்  98  ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.


 கிரிஸ்  கைல்ஸின்   சாதனையை முறியடித்த சிம்ரன் ஹெட்மயர்

உலகக்கிண்ண ரி20 போட்டியில்  இலங்கையையும், அவுஸ்திரேலியாவையும் தோற்கடித்து அதிர்ச்சியளித்த ஸிம்பாப்வே  மேற்கு இந்தியாவுடனான போட்டியில்தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில்  மேற்கு இந்திய அணி வீரரான     சிம்ரன் ஹெட்மயர் மூன்றாவது வீரராக களமிறங்கி  34 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி  ,  7 சிக்சர்கள் அடங்கலாக  85 ஓட்டங்கள் அடித்தார்.

 ரி20 உலகக் கிண்ணப்  போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரராக கிரிஸ் கைல்ஸ் 20 பந்துகளில் அரைசதம் அடித்து முதல் இடத்தில் இருந்தார்.  சிம்ரன் ஹெட்மயர் 19 பந்துகளில் அரைசதம் கடந்து ரி20 உலகக் கிண்ணத்தில்  மேற்கு  இந்தியா சார்பாக  அதிவேக அரைசதம் அடித்த வீரராக மாறியுள்ளார்.


 மலிங்கவின் சாதனையை காலி செய்த  ஜஸ்ப்ரீத் பும்ரா 

 தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக   இந்திய இந்திய பந்துவீச்சாளர்கள்  ஓட்டங் களை வாரி வழங்கிய வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டும் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில்   15 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அவர் எடுத்த இந்த 3 விக்கெட்டுகளில் ஒரு விக்கெட்டை கிளீன் போல்டாக எடுத்தார். தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரரான குவிண்டன் டி காக்கின் விக்கெட்டை அவர் போல்டு மூலம் வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச ரி20 போட்டிகளில் முன்னாள் இலங்கை வீரரான லசித் மலிங்கவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.

இதுவரை சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை போல்ட் வகையில் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரரான லசித் மலிங்க முதலிடத்தில் இருந்தார். சர்வதேச  ரி20 போட்டிகளில் அவர் 43 முறை கிளீன் போல்ட் மூலம் விக்கெட் எடுத்துள்ளார் குவிண்டன் டி காக்கின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் 44 முறை சர்வதேச ரி 20 போட்டிகளில் போல்ட் மூலம் விக்கெட் எடுத்து அதிகமுறை போல்ட் மூலம் விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக லசித் மலிங்கவின் சாதனையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்   பும்ரா.

 

ரமணி

1/3/26 

Saturday, February 21, 2026

ரி20 உலகக்கிண்ண சாதனைகள் வேதனைகள்

ரி20 உலகக்கிண்ணப் போட்டிகள்  இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெறுகின்றன. இந்தத் தொடரில் பல சாதனைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன. அதே வேளை மிகவும் எதிர் பார்க்கப்பட்ட வீரர்கள் ஏமாற்றிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

  ஹர்டிக் பாண்டியாவின்  அசத்தல் சாதனை

இந்திய கிறிக்கெற் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா   நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.   ஹர்திக் பாண்டியா 21 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர்களுடன் 30 ஓட்டங்கள் அடித்தார்.    பந்துவீச்சிலும் 3 ஓவர்கள் வீசி 40  ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவர் இந்த போட்டியில் அடித்த 30  ஓட்டங் கள் மூலம் ஆறாவது சர்வதேச வீரராகவும், முதல் இந்திய வீரராகவும் ஒரு மாபெரும் சாதனையை ரி20 கிறிக்கெற் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.  ஒட்டுமொத்தமாக ரி 20 கிறிக்கெற் போட்டிகளில் 6000+  ஓட்டங் , 200+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே சர்வதேச அளவில் கைரன் பொலார்ட், ஆண்ட்ரே ரசல், ஷாகிப் அல் ஹசன், முகமது நபி, டுவைன் பிராவோ ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் ஆறாவது வீரராக  ஹர்திக் பாண்டியா இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.


 அர்ஷ்தீப் சிங்கின்   சாதனையை சமன் செய்த வருண் சக்கரவர்த்தி 

 சர்வதேச ரி20 கிறிக்கெற்  போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். 

நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில்  நான்கு ஓவர்கள் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 14  ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த உலகக் கிண்ணத்  தொடரில் பெரும்பாலும் பந்துவீச்சாளர்கள் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்த போட்டியில் ஓட்டங்களை விட்டுக் கொடுக்கின்றனர். ‍ - ஆனால் வருண் சக்கரவர்த்தியை   கட்டுக்கோப்புடன் பந்துவீசி வருகிறார். இந்நிலையில் நேற்று பெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கின் சாதனை ஒன்றினையும் அவர் சமன் செய்துள்ளார்.

 அர்ஷ்தீப் சிங் கடந்த ஜூன் 2024 முதல் டிசம்பர் 2025 ஆம் திக‌தி வரை இந்திய அணிக்காக விளையாடிய 17 ஆட்டங்களில் தொடர்ந்து அனைத்து போட்டியிலும் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை தற்போது வருண் சக்கரவர்த்தியும் சமன் செய்துள்ளார். -

 கடந்த 2025 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வருண் சக்கரவர்த்தி விளையாடிய 17 ஆட்டங்களில் அனைத்து போட்டியிலுமே குறைந்தது ஒரு விக்கெட்டையாவது கைப்பற்றியுள்ளார். கடைசியாக நடைபெற்ற 17 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்தியுள்ள அவர் அடுத்த போட்டியிலும் விக்கெட் எடுக்கும் பட்சத்தில் அர்ஷ்தீப் சிங்கின் அந்த சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது.

டக் அவுட்டி ஹட்ரிக்  அபிஷேக்  சர்மா வேதனை 

 குரூப் ஏ சுற்றில் இந்திய அணி இன்று   ஸ்கொட்லாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, ஆட்டத்தை அபிஷேக் சர்மா - இஷான்கிஷன் தொடங்கினார். இந்த தொடரில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலுமே டக் அவுட்டாகிய அபிஷேக் சர்மா இந்த போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆர்யன் தத் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4வது பந்திலே போல்டானார்.

இதன்மூலம், இந்த ரி20 உலகக்  கிண்ணத்தில் அபிஷேக் சர்மா தான் ஆடிய 3 போட்டிகளிலுமே டக் அவுட்டாகியுள்ளார். இந்த தொடரில் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா ஹட்ரிக் டக் அவுட்டாகியிருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.அபிஷேக் சர்மா கடைசியாக ஆடிய 9 ஆட்டங்களில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதே நிலையில் இவர் நீடித்தால் அணியில் தொடர்ந்து நீடிப்பது சவாலாக மாறிவிடும்.

ஒரே ஆண்டில் ரி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற பட்டியலில் அபிஷேக் சர்மா 2வது இடத்தில் உள்ளார். அவர் இந்தாண்டு மட்டும் 5 முறை ஆட்டமிழந்துள்ளார். முதலிடத்தில் சையும் அயூப் 6 முறை  அவுட்டாகி முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் சலோம்வாங், குஷல் புர்டல், தர்மகேசுமா, பர்வேஸ் ஹொசைன் ஆகியோருடன் அபிஷேக் சர்மாவும் உள்ளார்

 

 பாகிஸ்தான் வீரர்  ப‌ர்ஹான் சதத்தில் சாதனை 

நமீபியாவுக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர்  புதிய சாதனையை நிலை நாட்டி உள்ளார்.

 இந்த போட்டியில்  பாகிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய சாஹிப்சாதா ஃபார்ஹான் 58 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி, 4 சிக்ஸர் என 100  ஓட்டங்  அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் இரண்டாவது பாகிஸ்தான் வீரராக மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

ரி20 உலக  கிண்ண வரலாற்றில் சதமடித்த ஒரே ஒரு பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அகமது செஷாத் தன்வசம் வைத்திருந்தார். அவருக்கு அடுத்து தற்போது ஃபர்ஹான் இந்த போட்டியில் அடித்த சதம் மூலம் உலகக்   கிண்ண  ரி20 ஆட்டத்தில் சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 சர்வதேச ரி20 உலகக் கிண்ணத்தில்  சதமடித்த ஆறாவது ஆசிய வீரராகவும் இவர் தனது பெயரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  2026 ஆம் ஆண்டு  ரி20 உலகக் கிண்ணத் தொடரில்  இலங்கை அணியை சேர்ந்த பதும் நிசங்க, கனடா அணியை சேர்ந்த யுவ்ராஜ் சாம்ரா ஆகியோரும் சதமடித்துள்ளனர். 

ரமணி

22/2/26  

Tuesday, February 17, 2026

அவுஸ்திரேலியாவை வெளியேற்றியது மழை


  

ரி20 உலகக் கிண்ணத் தொடரில்  ஒரு போட்டி மீதம் இருக்கையில் லீக் சுற்றில் இருந்ட்து அவுஸ்திரேலியா வெளியேறியது.

 இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் அவுஸ்திரேலியா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.ஸிம்பாப்வே தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா இரண்டு புள்ளிகளையு, , ஸிம்பாப்வே 4  புள்ளிகளையும் பெற்றன. ஸிம்பாப்வே, அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான இன்றைய போட்டி மழைகாரணமகக் கைவிடப்பட்டதால்  இரண்டு அணிகளுக்கும் தலா  ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. ஸிம்பாப்வே 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 க்குள் நுழைந்துள்ளது.ஓமானுடனான போட்டியில்  அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால் 4 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.

ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் ஸிம்பாப்வே சூப்பர் 8 கட்டத்தை எட்டுவது இதுவே முதல் முறை. 2024 ஆம் ஆண்டு உலகக் கிண்ண வடிவம் மாற்றப்பட்டதிலிருந்து, ஸிம்பாப்வே குரூப் ஸ்டேஜை கடந்து செல்வது இதுவே முதல் முறை. இருப்பினும், டி20 உலகக் கோப்பையில் ஸிம்பாப்வே குழு கட்டத்தைத் தாண்டி முன்னேறுவது இது இரண்டாவது முறை மட்டுமே. 2022 ஆம் ஆண்டில்  டைசி 12 இடங்களை எட்டியது. ஆனால் வடிவமைப்பு மாற்றத்திற்குப் பிறகு இது ஸிம்பாப்வேயின்  முதல் சூப்பர் 8 ஆகும்.

2026 ரி20 உலகக்  கிண்ணத்தில் குரூப் நிலையிலேயே அவுஸ்திரேலியா வெளியேற்றப்பட்டது. முன்னதாக, 2009 உலகக் கிண்ணத்தில்  அவுஸ்திரேலியா குரூப் சுற்றிலேயேவெளியேறியது. .     இந்தியா, இலங்கை, ஸிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா,  நியூசிலாந்து ஆகிய ஏழு  அணிகள் சூப்பர் 8க்குத் தகுதி பெற்றூள்ளன.

  

Monday, February 16, 2026

உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேறுகிறது அவுஸ்திரேலியா?


 


கிறிக்கெற் உலகின் அசுரமாகிய அவுஸ்திரேலியாவுக்கு ரி20 உலகக்கிண்ணம் கைக்கு எட்டாத நிலையில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா அயர்லாந்துடனான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.இலங்கையிடமும் ஸிம்பாப்வேயிடமும் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா  2 புள்ளிகளுடன் மூன்றாஅவ்து இடத்தில் உள்ளது.

கணித ரீதியாக அடுத்த கட்டத்திற்கான வேட்டையில் அவுஸ்திரேலியா இருந்தாலும் அது  அதன் விதி இந்தக் குழுவில் உள்ள பிற முடிவுகளைப் பொறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளது. ஓமானுக்கு எதிரான போட்டியில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும்.

ஸிம்பாப்வே  4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் மூன்றாவ‌து இடத்திலும் உள்ளன.

இலங்கை,அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளுடன் ஸிம்பாப்வே மோத உள்ளது.இஅவ்ற்றில் ஏதாவது ஒரு போட்டியில் ஸிம்பாப்வே   வெற்றி  பெற்றால் அவுஸ்திரேலியாவின் கதை கந்தலாகிவிடும். ஸிம்பாப்வேயுடனான போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றால் 4 புள்ளிகள்  பெற்று விடும்.

  சூப்பர் எட்டுக்கு முன்னேற அவுஸ்திரேலியா இப்போது மற்ற முடிவுகளை நம்பியிருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை ஸிம்பாப்வே அயர்லாந்தை வீழ்த்தினால், அவுஸ்திரேலிய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

அவுஸ்திரேலியா ஓமானுக்கு எதிரான  போட்டியில் வெற்றி பெற்று,  இலங்கை,அயர்லாந்து ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் ஸிம்பாப்வே   தோல்வியடைந்தால் மட்டுமே அவுஸ்திரேலியா உயிர்ப்புடன்  இருக்கும்.

   அயர்லாந்தை விட சிறந்த ஓட்ட விகிதம் அவுஸ்திரேலியாவுக்குத்  தேவைப்படும்.

2009  ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில்   குழு C இல் இலங்கை ,மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுக்கு எதிரான  எதிரான போட்டிகளில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

  

Friday, February 13, 2026

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது ஸிம்பாப்வே


  கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற  உலகக்கிண  குரூப் பி பிரிவு லீக் போட்டியில்  பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 23 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி ஸிம்பாப்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்தைல் அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஸிம்பாப்வே, மீண்டும் ஒருமுறை அதே சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது. 

 முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய டாடிவானாஷே மருமானி 21 பந்துகளில் 35 , பர்ல்,30 பந்துகளில் 35 ரன்கள் ஓட்டங்கள் எடுத்தனர்.

இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய கப்டன் சிக்கந்தர் ராசா, 13 பந்துகளில்  25  ஓட்டங்கள் அடித்தார். பிரையன் பென்னட் 56 பந்துகளில் 64 ஓட்டங்கள்  குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஸிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 169  ஓட்டங்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.

170 ரனோட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் , டிம் டேவிட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். க‌ப்டன் டிராவிஸ் ஹெட்டும் 17 ஓட்டங்களில் ஆஸ்திரேலியா   3.2  ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 29 ஓட்டங்கள் எடுத்தது. 4,3 ஓவர்களில் 5 ஆவது விக்கெற்றைஇழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது.


  மேட் ரென்ஷா,  கிளென் மேக்ஸ்வெல் ஜோடி போராடியது. இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்கு 77  ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழ்ந்தா ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தனி ஆளாகப் போராடிய மேட் ரென்ஷா 44 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். மக்ஸ்வெல் 31 ஓட்டங்கள் எடுத்தார் ஏனையோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில்  சகல விக்க்கெற்களையும் இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது.

ஸிம்பாப்வேயின்ல் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்சிங் முசரபானி  4 ஓவர்கள் வீசி   17  ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்குத் துணையாக பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஸிம்பாப்வேயின் வெற்றி குரூப் பி பிரிவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸிம்பாப்வே அணியின் இந்த வரலாற்று வெற்றி, தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையும், ஸிம்பாப்வேயும் தலா 4 புள்ளிகளுடன்  முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

 


Thursday, February 12, 2026

நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெற்களால் வெற்றி பெற்றது இத்தாலி

 

 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இத்தாலி வரலாற்று வெற்றியை எட்டியது. மோஸ்கா சகோதரர்களின் அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப் , சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இந்த வெற்றிக்கு அடித்தளம் அமைத்தன.

முதலில் துடுப்ப்பெடுத்தாடிய ` செய்த நேபாள அணி, இத்தாலியின் கட்டுக்கோப்பான சுழற்பந்து வீச்சால் 123 ஓட்டங்கள் எடுத்தது. பென் மனேண்டி 9 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், கிரிஷன் கழுகாமகே 18 ஓட்டங் ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெற்களையும் வீழ்த்தினார்.

124 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இத்தாலி, ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்டது. மோஸ்கா சகோதரர்களான அந்தோனி , ஜஸ்டின், இருவரும் ஆட்டமிழக்காமல் 124 ஓட்டங்கள் அடித்து 12.4 ஒவர்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

இளைய சகோதரரான ஜஸ்டின் மோஸ்கா 44 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களும், மூத்த சகோதரர் அந்தோனி மோஸ்கா, 32 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும் எடுத்தனர்.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் இத்தாலியும் இணைந்துள்ளது. ரி20 உலகக் கிண்ணத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் விவரம் பின்வருமாறு:

அவுஸ்திரேலியா , தென்னாப்பிரிக்கா, ஓமான், பாகிஸ்தான், இங்கிலாந்து [2 முறை] ,நியூஸிலாந்து, இத்தாலி

Sunday, February 8, 2026

அயர்லாந்தின் வெற்றியை தட்டிப் பறித்த இலங்கை

பிரேமதாச மைதானத்தில் ந‌டந்த குரூப் பி லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 20  ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில்  6 விக்கெற்களை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தது. 164 என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து 19.5 ஓவர்கலில் 143 ஓட்டங்கள் எடுத்தது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த  9 சர்வதேச ரி20 போட்டிகளில், முதலில் துடுப்பெடுத்தாடிய  அணி தோல்வியையே சந்தித்து வந்தது. ஆனால், அந்த மோசமான வரலாற்றை மாற்றி எழுதிய இலங்கை அணி, முதலில்   வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நாணயச் சுழற்சியில்  வென்ற  அயர்லாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ்  ஆட்டமிழக்காது 56,  ஓட்டங்கள் எடுத்தார்.  கடைசி நேரத்தில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ்,  19 பந்துகளில் 44  ஓட்டங்கள்  விளாசினார்.

164 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய அயர்லாந்து அணிக்கு ஆரம்பம் சிறப்பாகவே இருந்தது. ராஸ் அடைர் 34 ,ஹாரி டெக்டர்  40 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையளித்தனர். 14 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 105  ஓட்டங்கள் எடுத்திருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததால் அயர்லாந்து எளிதாக வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

 15வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் அயர்லாந்து  வீரர்களைத் திணறடித்தனர்.வனிந்து ஹசரங்கா காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவதிப்பட்ட போதிலும், முக்கிய 3 விக்கெட்டுகளை (டெக்டர், டக்கர், கேம்பர்) வீழ்த்தினார். மகேஷ் தீக்ஷனா தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்து அயர்லாந்துக்கு நெருக்கடி கொடுத்தார்.

105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையிலிருந்து, அடுத்த 38  ஓட்டங்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் அயர்லாந்து அணி பறிகொடுத்தது. இறுதியில் 19.5 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

 

  

சாம் கரனால் தப்பிய இங்கிலாந்து நேபாளத்தை வீழ்த்தியது

  ரி20 உலகக் கிண்ணத்  தொடரின் 5வது லீக் போட்டியில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி, நேபாள அணியிடம் தோல்வியின் விளிம்பு வரை சென்று, கடைசி ஓவரில் நூலிழையில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த த்ரில்லர் போட்டியில், கடைசி ஓவரில் சாம் கரனின் துல்லியமான யார்க்கர்கள் இங்கிலாந்து அணியைக் காப்பாற்றின.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெற்களை  இழந்து 184 ஒட்டங்கள் எடுத்தது. 185 என்ற வெற்றி இலக்கைத்துரத்திய நேபாளம் 20 ஓவர்களில் 6 விக்கெற்களை  இழந்து 180 ஓட்டங்கள் எடுத்து  4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஜேக்கப் பெத்தல் 55 ,ஹாரி புரூக்  53   ஓட்டங்கள் எடுத்தனர்.

185 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய நேபாள அணி, ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்குச் சவால் அளித்தது. திபேந்திர சிங் ஐரி44,க‌ப்டன் ரோகித் பவுடல் ஓட்டங்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

கடைசி 3 ஓவர்களில் நேபாள வெற்றிக்கு 46  ஓட்டங்கள் தேவைப்பட்டன. 18வது ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 22  ஓட்டங்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் லோகேஷ் பாம் இரண்டு இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இங்கிலாந்தை மிரள வைத்தார். 19வது ஓவரை வீசிய லூக் வுட், 14 ஓட்டங்கள் கொடுத்தாலும் குல்சன் ஜாவை அவுட்டாக்கி சற்று நெருக்கடி கொடுத்தார்.

கடைசி ஓவரில் நேபாள வெற்றிக்கு 10  ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன. இங்கிலாந்து கப்டன் பட்லர் பந்தை சாம் கரனிடம் கொடுத்தார்.

முதல் பந்து: சாம் கரன் யார்க்கரை வீச, லோகேஷ் பாம் திணறினார். ஓட்டம் இல்லை.

இரண்டாவது பந்து: மீண்டும் ஒரு யார்க்கர். லோகேஷ் பாம் பந்தைத் தொடக்கூட முடியவில்லை.

மூன்றாவது பந்து: ஒரு ஓட்டம் மட்டுமே கிடைத்தது.

நான்காவது பந்து: லோகேஷ் பாம் 2  ஓட்டங்கள் எடுத்தார்.

ஐந்தாவது பந்து: 7  ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சாம் கரன் மீண்டும் ஒரு துல்லியமான யார்க்கரை வீசினார்.  ஓட்டம் இல்லை.

கடைசி பந்து: ஒரு ஓட்டம்மட்டுமே கிடைத்தது.

இறுதியில் இங்கிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

 இங்கிலாந்தைடைசி வரை பயமுறுத்திய நேபாள வீரர்களின் போராட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 4 ஓவர்கள் வீசி 27  ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய சாம் கரன் இங்கிலாந்தின் ஹீரோவாக மாறினார்.

 

 

Saturday, February 7, 2026

ரி20 உலகக்கிண்ணத்தில் இத்தாலியின் பயணப்பாதை



 


  ஐரோப்பிய தகுதிச் சுற்றுகளில் கடந்த வருடம் ஜூலை முன்னேறிய பிறகு, இத்தாலிய கிறிக்கெற் அணி தங்கள் முதல்ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான பயணத்தை உறுதி செய்தது, மேலும் அடுத்த தலைமுறையை தாயகத்தில் ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளது.

இத்தாலியில் புல் மைதானங்கள் - அல்லது மைதானங்கள் - இல்லாததால், இத்தாலியின் சொந்த மைதான வீரர்கள் ஆஸ்ட்ரோடர்ஃபில் பயிற்சி பெறுகிறார்கள்.

இத்தாலியில் புல் மைதானங்கள் - அல்லது மைதானங்கள் - இல்லாததால், இத்தாலியின் சொந்த மைதான வீரர்கள் ஆஸ்ட்ரோடர்ஃபில் பயிற்சி பெறுகிறார்கள், மேலும் அணியின் முதல் டி20 உலகக் கோப்பை தோற்றத்தில் ஏதேனும் வெற்றி பெற்றால், வசதிகளை மேம்படுத்தவும், சொந்த நாட்டில் விளையாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவும் என்று உதவி பயிற்சியாளர் கெவின் ஓ'பிரையன் திங்களன்று தெரிவித்தார்.

இத்தாலிய அணி என்று பிரபலமாக அறியப்படும் அஸ்ஸுரி, ஐரோப்பிய தகுதிச் சுற்றுகளில் ஸ்காட்லாந்தை முந்தி முன்னேறிய பிறகு ஜூலை மாதம் போட்டியில் தனது இடத்தைப் பிடித்தது. 

ஓ'பிரையன் விவரித்தபடி, நம்பிக்கையான அணி, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தனது முதல் பயிற்சிப் போட்டியில் கனடாவை 10  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஜனவரி மாதம் துபாயில் அணி நல்ல தயாரிப்பைக் கொண்டிருந்ததாகவும், அங்கு நான்கு போட்டிகளில் விளையாடியதாகவும் ஐரிஷ் வீரர் கூறினார் ‍  உலகக்கிண்ணப் போட்டியில்  ஏதாவது ஒரு  போட்டியிலும்.  வெற்றி பெற்றால், வசதிகளை மேம்படுத்தவும், சொந்த நாட்டில் விளையாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவும் என்று உதவி பயிற்சியாளர் கெவின் ஓ'பிரையன்   தெரிவித்தார்.

இத்தாலிய வீரர்களுக்கு, இந்த ஆட்டங்கள் வெற்றி வேகத்தை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், இயற்கையான மண் ஆடுகளங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கும் முக்கியமானவை, அவர்கள் சொந்த நாட்டில் இது போன்ற மைதானங்கள் இல்லை.

"இத்தாலியில் வசதிகள் குறைவாகவே உள்ளன, ஆனால் இந்தப் போட்டியின் விளைவாகவும், நாங்கள் பெற்ற எந்தவொரு வெற்றியின் விளைவாகவும், உள்நாட்டில் விளையாட்டின் புகழ் வளரும், மேலும் வசதிகள் மேம்படும், இதனால் உள்நாட்டு வீரர்கள் முன்னேறவும் வளரவும் முடியும்" என்று ஓ'பிரையன் கூறினார்.

உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் சம்பியனான இத்தாலி கிறிக்கெற்றிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளது.