Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Thursday, January 1, 2026

சிறந்த சாரதியாக மக்ஸ் வெர்ஸ்டாப்பன் தெரிவு


   ரெட் புல் அணியின் சாரதியான மக்ஸ் வெர்ஸ்டாப்பன்  தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆண்டின் சிறந்த சாரதியாகத்ட் ஹேர்ந்தெடுக்கப்பட்டார். 

சீசன் சாம்பியனான மெக்லாரனின் லாண்டோ நோரிஸ்,  இரண்டாவது இடத்தைப் பிடித்தார், மெர்சிடிஸ் ஜார்ஜ் ரஸ்ஸல், மெக்லாரனின் ஆஸ்கார் பியாஸ்ட்ரி  ,ஃபெராரியின் சார்லஸ் லெக்லெர்க் ஆகியோர் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தனர்.

வில்லியம்ஸின் கார்லோஸ் சைன்ஸ் ஆறாவது இடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து ஆஸ்டனின் மார்டினின் பெர்னாண்டோ அலோன்சோ, வில்லியம்ஸின் அலெக்ஸ் ஆல்பன், ஹாஸின் ஆலிவர் பியர்மேன் , ரேசிங் புல்ஸின் இசாக் ஹட்ஜர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

இந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் அல்பன், பியர்மேன் , ஹட்ஜர் ஆகியோர் புதிதாக இடம் பிடித்தனர். 2024 ஆம் ஆண்டை விட அலோன்சோ இரண்டு இடங்கள் முன்னேறினார், லெக்லெர்க் இரண்டு இடங்கள் சரிந்தார்.

ஏழு முறை உலக சம்பியனான லூயிஸ் ஹமில்டன் (ஃபெராரி) இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அவர் 2018 ஆம் ஆண்டு வாக்கெடுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக முதல் 10 இடங்களைப் பிடிக்கத் தவறிவிட்டார்.

28 வயதான வெர்ஸ்டாப்பன், சீசனின் பிற்பகுதியில் நடந்த ஒரு சீற்றமான மறுபிரவேசத்திற்குப் பிறகு ஆறு வெவ்வேறு வாக்குச்சீட்டுகளில் 25 புள்ளிகளைப் பெற்றார், இறுதி ஒன்பது கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்களில் ஆறில் வெற்றி பெற்று நோரிஸை விட இரண்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கினார். 

  இந்த வாக்கெடுப்பில்   ஹமில்டன், நிக்கோ ஹல்கன்பெர்க், லான்ஸ் ஸ்ட்ரோல்,  யூகி சுனோடா  சாரதிகள் பங்குபற்றவில்லை.

     

Saturday, December 20, 2025

பீபாவின் சிறந்த வீரர் டெம்பேலே வீராங்கனை பொன்மதி


 

பிரான்ஸ்  உதைபந்தாட்ட வீரரான  உஸ்மேன் டெம்பேலே 2025 ஆம் ஆண்டின்  பீபா சிறந்த ஆண்களுக்கான வீ விருதை வென்றார், பார்சிலோனா மிட்ஃபீல்டர் ஐதானா பொன்மதி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிறந்த மகளிர் வீராங்கனை விருதை வென்றார்.

டெம்பேலே எட்டு முறை கோல் அடித்து ஆறு உதவிகளை வழங்கினார், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனை அதன் முதல் ஊஏஃப் பீபா ம்பியன்ஸ் லீக் பட்டத்திற்கு இட்டுச் சென்றார்.

28 வயதான அவர் 2024-25 சீசனில் கண்டப் போட்டி மற்றும் லீக் 1 இரண்டிலும் MVP ஆகவும் பெயரிடப்பட்டார், மேலும் அவரது அணி தொடக்க  பீபா கிளப் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை அடைய உதவினார்.

டிசம்பர் தொடக்கத்தில் எலும்பு முறிந்த ஃபைபுலாவுக்கு அறுவை சிகிச்சை செய்த 27 வயதான  பொன்மதி, UEFA மகளிர் சம்பியன்ஸ் லீக் , மகளிர் யூரோ 2025 இரண்டிலும் MVP விருதுகளை வென்றார், இருப்பினும் அவர் தனது கிளப்பையோ அல்லது அவரது தேசிய அணியையோ பட்டத்திற்கு இட்டுச் செல்லத் தவறிவிட்டார்.


 ஸ்பெயினின் லூயிஸ் என்ரிக் சிறந்த ஆண்கள் பயிற்சியாளர் விருதை வென்றார், இங்கிலாந்து பயிற்சியாளர் சரினா வீக்மேன் ஐந்தாவது முறையாக சிறந்த பெண்கள் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

என்ரிக் தலைமையில் PSG சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் இன்டர் மிலனை வீழ்த்தியதுடன், உள்நாட்டு ட்ரெபிள் லீக் 1, கூபே டி பிரான்ஸ் மற்றும் ட்ரோஃபி டெஸ் சாம்பியன்ஸ் பட்டங்களையும் வென்றது.

வீக்மேன் தலைமையில் இங்கிலாந்தை பெண்கள் யூரோ 2025 பட்டத்திற்கு அழைத்துச் சென்று, உலக சம்பியனான ஸ்பெயினை பெனால்டியில் வீழ்த்தியது

PSG இன் ஜியான்லூகி டோனாரும்மா சிறந்த ஆண்கள் கோல்கீப்பராகவும், செல்சியாவின் ஹன்னா ஹாம்ப்டன் சிறந்த பெண்கள் கோல்கீப்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆர்ஜென்ரீனாவின் Torneo Apertura இல் Independiente Rivadavia க்கு எதிராக Independiente க்காக Santiago Montiel அடித்த கோல், இந்த ஆண்டின் சிறந்த கோலுக்கான 2025 புஸ்காஸ் விருதை வென்றது.

Sunday, December 14, 2025

இரண்டாவது MLS MVP விருதை வென்றார் மெஸ்ஸி

  லியோனல் மெஸ்ஸி தொடர்ச்சியாக இரண்டாவது MLS MVP விருதை வென்றார், இந்த ஆண்டில் இன்டர் மியாமி அணிக்கு முதல் MLS கோப்பை பட்டத்தை வெல்ல அவர் உதவினார்.

மெஸ்ஸி மொத்த வாக்குகளில் 70.43 சதவீதத்தைப் பெற்றார் - இதில் ஊடகங்கள், வீரர்கள் , கிளப் தொழில்நுட்ப ஊழியர்கள் அடங்குவர் - இறுதிப் போட்டியாளர்களான ஆண்டர்ஸ் டிரேயர், டெனிஸ் பௌங்கா, எவாண்டர் ,சாம் சுரிட்ஜ் ஆகியோரை முந்தினார்.

38 வயதான ஃபார்வர்ட் 29 கோல்களை அடித்தார் ,28 வழக்கமான சீசன் போட்டிகளில் 19 உதவிகளை வழங்கினார். ஆறு பிந்தைய சீசன் பயணங்களில் அவர் மேலும் ஆறு கோல்களையும் ஒன்பது உதவிகளையும் சேர்த்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் அளித்த இரண்டு அசிஸ்ட்கள், இன்டர் மியாமி அணி வான்கூவர் வைட்கேப்ஸ் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தன.

எட்டு முறை பாலன் டி'ஓர் சாம்பியன் பட்டத்தையும் 2022 உலகக் கோப்பை சம்பியனையும் வென்ற இவர், தொடர்ச்சியாக MLS MVP விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

1997 ,2003 ஆம் ஆண்டுகளில் இந்த விருதைப் பெற்ற முன்னாள் அமெரிக்க சர்வதேச மிட்ஃபீல்டர் பிரிட்ராக் ராடோசவ்ல்ஜெவிச்சுடன் இணைந்து, இரண்டு முறை வென்ற இரண்டாவது வீரர் இவர்

Wednesday, January 17, 2024

பீபா விருதுகள் 2023:

உதைபந்தாட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்டவர்களுக்கு  இலண்டனில் பீபா விருது  வழங்கி கெளரவித்தது.  தேசிய அணிகளின் பயிற்சியாளர்கள், கப்டன்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் ,ஆன்லைனில் ரசிகர்களின் வக்களித்து வெற்ரியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

சிறந்த பீபா  ஆண்கள் வீரர்    


    வெற்றியாளர்: லியோனல் மெஸ்ஸி (48 புள்ளிகள்)

இரண்டாவது: எர்லிங் ஹாலண்ட் (48 புள்ளிகள்)

மூன்றாவது: கைலியன் எம்பாப்பே (35 புள்ளிகள்)

 

சிறந்த பீபா மகளிர் வீராங்கனை

வெற்றியாளர்: ஐதானா பொன்மதி (52 புள்ளிகள்)

இரண்டாவது: லிண்டா கைசெடோ (40 புள்ளிகள்)

மூன்றாவது: ஜென்னி ஹெர்மோசோ (36 புள்ளிகள்)

 

சிறந்த பீபா  ஆண்கள் கோல்கீப்பர்

வெற்றியாளர்: எடர்சன் (23 புள்ளிகள்)

இரண்டாவது: திபாட் கோர்டோயிஸ் (20 புள்ளிகள்)

மூன்றாவது: யாசின் பவுனோ (16 புள்ளிகள்)\

 

சிறந்த பீபா மகளிர் கோல்கீப்பர்

வெற்றியாளர்: மேரி ஏர்ப்ஸ் (28 புள்ளிகள்)

இரண்டாவது: கேடலினா கோல் (14 புள்ளிகள்)

மூன்றாவது: மெக்கன்சி அர்னால்ட் (12 புள்ளிகள்)

 

சிறந்த பீபா ஆண்கள் பயிற்சியாளர்

 

வெற்றியாளர்: பெப் கார்டியோலா (28 புள்ளிகள்)

இரண்டாவது: லூசியானோ ஸ்பாலெட்டி (18 புள்ளிகள்)

மூன்றாவது: சிமோன் இன்சாகி (11 புள்ளிகள்)

 

சிறந்த  பீபா  பெண்கள் பயிற்சியாளர்

வெற்றியாளர்: சரினா வீக்மேன் (28 புள்ளிகள்)

இரண்டாவது: எம்மா ஹேய்ஸ் (18 புள்ளிகள்)

மூன்றாவது: ஜொனாடன் ஜிரால்டெஸ் (14 புள்ளிகள்)

ஃபிஃபா புஸ்காஸ் விருது: கில்ஹெர்ம் மத்ருகா

ஃபிஃபா ஃபேர் பிளே விருது: பிறேஸில் தேசிய அணி.

பீபா ரசிகர் விருது: Hஉகொ Dஅனிஎல் "Tஒடொ" ஈனிகுஎழ்

பீபா சிறப்பு விருது: மார்டா

  ஆண்கள் உலக 11: திபாட் கோர்டோயிஸ், கைல் வாக்கர், ரூபன் டயஸ், ஜான் ஸ்டோன்ஸ், ஜூட் பெல்லிங்ஹாம், கெவின் டி ப்ரூய்ன், பெர்னார்டோ சில்வா, வினிசியஸ் ஜூனியர், லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட்

  மகளிர் உலக 11: மேரி ஏர்ப்ஸ், லூசி வெண்கலம், ஓல்கா கார்மோனா, அலெக்ஸ் கிரீன்வுட், ஐடானா பொன்மதி, எல்லா டூன், கெய்ரா வால்ஷ், லாரன் ஜேம்ஸ், சாம் கெர், அலெக்ஸ் மோர்கன் & அலெஸ்சியா ரூசோ

 

Saturday, January 6, 2024

ஐசிசி விருதுகள் 2023


 சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய அணிக்காக சிறப்பாக விளையாடும் வீரர்கள்  , வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்குவது வழக்கமாகும்.   2023ஆம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதுக்காக நான்கு தகுதியான வீரர்களை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.   டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகிய மூன்று வகையான கிறிக்கெற்றிலும்  கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். ஐசிசி வழங்கும் விருதுகளிலேயே மிகவும் உயரிய இந்த விருதுமேற்கு  ஜாம்பவான் சர் ஃகேர்பீல்ட் சோபர்ஸ்  பெயரில் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இம்முறை அவருடைய பெயரில்  கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள  நான்கு வீரர்கல் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

  விராட் கோலி:

 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த சோகத்துக்கு  கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தார்  கோலி.  இந்த வருடம்  மூன்று  வகையான கிரிக்கெட்டிலும் 35 போட்டிகளில் 2048 ஓட்டங்கள் குவித்து தன்னுடைய தரத்தை நிரூபித்தார்.   765 ஓட்டங்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு போராடிய கோலி  ஒரு உலகக்கிண்ணத்தில் (2023) அதிக ஓட்டங்கள்  அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முந்தி மாபெரும் உலக சாதனை படைத்தார்.   ஒருநாள் கிறிக்கெற்றில் சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்த  கோலி இம்முறையும் இவ்விருதை வெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இம்முறையும் வென்றால் சோபர்ஸ் கோப்பையை அதிக முறை (3) வென்ற வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைப்பார்.

டிராவிஸ் ஹெட்:

 2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் ,உலகக் கிண்ணம்  ஆகிய இரண்டு தொடர்களையும் அவுஸ்திரேலியா வெல்வதற்கு டிராவிஸ் ஹெட்முக்கிய பங்காற்றியதை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த வருடம் 31 போட்டிகளில் வெறும் 1698 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தாலும் அந்த இரண்டு தொடர்களின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்தடிராவிஸ் ஹெட் அவுஸ்திரேலியா இரண்டு சம்பியன் பட்டங்களை வெல்ல முக்கிய பங்காற்றியதால் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

  பட் கம்மின்ஸ்:

 2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் , உலகக்கிண்ணம்  ஆகிய  இர்டண்டு தொடர்களிலும் கப்டனாக செயல்பட்டு ஒரே வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு இஒர்டண்டு சம்பியன்  கிண்ணங்களை வென்று கொடுத்தபட் கம்மின்ஸ் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கேப்டனாக மட்டுமின்றி இந்த வருடம் 24 போட்டிகளில் 422 ரன்கள் மற்றும் 59 விக்கெட்டுகளை எடுத்து பட் கமின்ஸ் அவுஸ்திரேலியாவுக்காக அசத்தியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

துடுப்பாட்டம்,பந்து வீச்சு, ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்தக்கூடிய ஜடேஜா இந்த வருடம் 35 போட்டிகளில் 613 ஓட்டங்கள் அடித்து,  66 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.   2023 கலண்டர் வருடத்தில் அதிக விக்கெட்டுகள் (66) எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்து அசத்திய காரணத்தால் ஜடேஜாவும் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.


 கிறிக்கெற்றின்  உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் 2023 காலண்டர் வருடத்தில் அசத்திய சிறந்த வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற பெயரில் ஐசிசி வழங்கப் போகும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரம்,

ரவிச்சந்திரன் அஸ்வின்:

  அனுபவம் ,திறமை ஆகியவற்றால் அசத்தி வரும் அஸ்வின் கடந்த வருடம் வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார். குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 பார்டர்கவாஸ்கர் கோப்பையை வெல்வதற்கு 25 விக்கெட்கள் எடுத்து அவர் முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. ஆனால்,  இந்திய அனியில் அவருக்கு நிரந்தச்ர  இடம்  இல்லை.  தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கபப்ட்டிருந்தால்  500 விக்கெற்களை எடுத்து   புதிய  சாதனைகளைப் படைத்திருப்பார்.   2023 டெஸ்ட் சம்பியன்ஷிப் ஃபைனலில் இடம் கிடைக்காததால் ஏமாற்றத்தை சந்தித்த அஸ்வின் ஏற்கனவே 2016ஆம் ஆண்டு இந்த விருது வென்ற பெருமைக்குரியவர். மேலும் 2021இல் பரிந்துரைக்கப்பட்ட அவர் 2வது முறையாக இந்த விருதை இம்முறையும் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்களிடம் இருக்கிறது.

டிராவிஸ் ஹெட்:  

ஈலண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 143 ஓட்டங்கள் விளாசிய டிராவிஸ் ஹெ   இந்தியாவை தோற்கடித்து அவுஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.   கடந்த வருடம் மொத்தம் 12 போட்டிகளில் 919 ஓட்டங்கள் குவித்ததால் இந்த விருதுக்கு டிராவிஸ் ஹெட் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

 ஜோ ரூட்

 2021ஆம் ஆண்டு ஏற்கனவே இந்த விருதை வென்றுள்ள இவர் 2023 காலண்டர் வருடத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் 787 ஓட்டங்கள் ,8 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிகளில் பங்காற்றினார். அதன் காரணமாக இந்த விருதை வெல்வதற்கு ஜோ ரூட்  2வது முறையாக பரிந்துரைக்கப்படுவதாக ஐசிசி கூறியுள்ளது.

உஸ்மான் கவாஜா

 2023 நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் விளையாடிய இவர் 1210  ஓட்டக்கள் குவித்து டெஸ்ட் சம்பியன்ஷிப் ஃபைனல் அவுஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். பரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரில் 496 ஓட்டன்கள் குவித்த அவர் அதிக ஓட்டங்கள் அடித்த வீரராக சாதனை படைத்து அவுஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்க உதவினார். அதன் காரணமாக இந்த விருந்துக்கு கவாஜாவும் பரிந்துரைக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.


வளர்ந்து வரும்    வீரர் ஆண்கள்

ரச்சின் ரவீந்திர   நியூஸிலாந்து

யஷஸ்வி ஜெய்ஸ்வால்  இந்தியா

ஜெரால்ட் கோட்ஸி  தென்.ஆபிரிக்கா

தில்ஷான் மதுஷங்க  இலங்கை

 வளர்ந்து வரும்    வீரர்மகளிர்

ஃபோப் லிட்ச்ஃபீல்ட்   அவுஸ்திரேலியா

மருஃபா அக்டர்  பங்களாதேஷ்

லாரன் பெல்      இங்கிலாந்து

டார்சி கார்ட்டர் நியூஸிலாந்து

 

 சிறந்த ரி20 கிரிக்கெட் வீரர்  ஆண்கள்

சூர்யகுமார் யாதவ்  இந்தியா

சிக்கந்தர் ராசா    ஸிம்பாப்வே

அல்பேஷ் ராம்ஜானி  உகண்டா

மார்க் சாப்மேன்


 சிறந்த ரி20 கிரிக்கெட் வீரர்  பெண்கள்

ஹேலி மேத்யூஸ்  மேற்கு இந்தியா

எல்லிஸ் பெர்ரி   அவுஸ்திரேலியா

சோஃபி எக்லெஸ்டோன் இங்கிலாந்து

சாமரி அதபத்து  இலங்கை

ஒரு நாள்  கிறிக்கெற் ஆண்கள்

சுப்மன் கில்  இந்தியா

முகமது ஷமி   இந்தியா

விராட் கோலி  இந்தியா

டேரில் மிட்செல்  நியூஸிலாந்து

 

 ஒருநாள்  கிறிக்கெற் பெண்கள்

ஆஷ்லே கார்ட்னர் அவுஸ்திரேலியா

சாமரி அதபத்து   இலங்கை

நாட் ஸ்கிவர்-ப்ரண்ட்   இங்கிலாந்து

அமெலியா கெர்  நியூஸிலாந்து

 

சேர் ஃகேர்பீல்ட் சோபர்ஸ்  விருது  பெண்கள்

சாமரி அதபத்து இலங்கை

ஆஷ்லே கார்ட்னர்  அவுஸ்திரேலியா

பெத் மூனி   இங்கிலாந்து

நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் அவுஸ்திரேலியா