Sunday, January 31, 2016

கலைகிறது வைகோவின் கனவு புதிய கூட்டணிக்குத் தயாராகும் தலைவர்கள்

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   ஆகியவற்றை  அரசியல் அரங்கிலிருந்து  அகற்றுவதற்காக  வைகோவின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியில்  பிளவு ஏற்பட்டுள்ளது. அட்டகாசமாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி பற்றிய நம்பிக்கை அதன் தலைவர்களுக்கு மிக அதிகமாக இருந்தது. முதலிடத்துக்கு செல்லப்போகும் சக்தி என தலைவர்கள் கனவுகண்டனர். விஜயகாந்த்,வாசன் ஆகியோரையும் தமது கூட்டனிக்குள் கொண்டுவர கடும் முயற்சி செய்தனர். பிடிகொடாமல் நழுவிய விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் பாரதீய ஜனதாக் கட்சியுடனும் பேரம் பேசுகிறார். வாசனின் அதரவாளர்கள் மக்கள் நலக் கூட்டணியை விரும்பவில்லை.
ஆறு  கட்சிகளுடன் ஆரம்பமான மக்கள் நலக் கூட்டணி நான்கு கட்சிகளாகச்சுருங்கியது.. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச்சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி என்பன இணைந்து தேர்தலைச்சந்திக்க தயாராகின.

.  தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தனித் தனிக் கட்சிகளாக நடத்தும்போது அதன் வெளிப்பாடு பலமானதாக இருக்கவில்லை. பல கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தியபோது அது மக்களின் கவனத்தை திசைதிருப்பியது.  இதன் வெற்றியும் இதனை மக்கள் பார்த்த விதமும் கூட்டனித் தலைவர்களுக்கு புதிய உற்சாகத்தைக்  கொடுத்தது.  அந்த உற்சாகம் தந்த போதையில் அரசியல் கூட்டணி உதயமானது.

மக்கள் நலக் கூட்டனியால் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தோற்கடிக்க முடியாது என்பது வெளிப்படையானது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகலனைத்துன் இணைந்தாலும் இரண்டு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியை நெருங்க முடியாது. அக்கட்சிகளின்  விசுவாசம் மிக்க தொண்டர் பலத்துக்கு முன்னால் ஏனைய  கட்சித் தொண்டர்களால் நின்றுபிடிக்க முடியாது. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பின்னால் உள்ள தலைவர்கள் மிகப்பலம் வாய்ந்தவர்கள். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள  தலைவர்களின் செல்வாக்கு அதல  பாதாளத்தில் உள்ளது.  கூட்டணி சேர்ந்தும் தேர்தலில் வெற்றி பெறாத தலைவர் என்ற அவப்பெயர் இவர்களுக்கு உள்ளது.

மக்கள் நலக்  கூட்டணியில் இருந்து கொம்யூனிஸ்ட் கட்சி  வெளியேறத் தயாராகி விட்டது. இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி மிக்க தலைவரான தா.பாண்டியன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை உடையவர் இவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.
  மக்களின் குறைகளை வெளிப்படுத்தவும், தமிழக அரசுக்கு எதிராகவும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நல இயக்கம் தான் மக்கள் நலக் கூட்டணியானது  இதனை அரசியல் கட்சியக்கையத்தில் பாண்டியனுக்கு உடன்பாடில்லை. வெற்றிவாய்ப்புள்ள பலமான கட்சியுடன் சேரவேண்டும் என்பதே பாண்டியனின் விருப்பம். மக்கள் நலக்  கூட்டணியில்  கொம்யூனிஸ்ட் கட்சி   இருந்தாலும் அதன் பார்வை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கியே இருந்தது. கருணாநிதி மீதான உரிமை  மீறல் பிரச்சினையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட சபையல் கொண்டுவந்தபோது    மாக்சிஸ்ட் கட்சி எதிர்த்தது.. கொம்யூனிஸ்ட் கட்சி  வாய்மூடி  மெளனம் காத்தது. 

 இடதுசாரித்தலைவர்  நல்லகண்ணுவை  முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என இடது சாரித்தலைவர்கள்  விரும்புகின்றனர். தேர்தலின் பின்னர் முதல்வர்  யாரென முடிவு செய்யலாம் என  வைகோ  முட்டுக்கட்டை போட்டுள்ளார். இதனை இடதுசாரித் தலைவர்கள் விரும்பவில்லை. கூட்டனிக்  கட்சிகளுடன் இணைந்து தெர்தளைச்சந்திக்கப் போவதாக ஜெயலலிதா சூழுரைத்துள்ளார். ஜெயலலிதாவின்  மீது விசுவாசம் உள்ள  கொம்யூனிஸ்ட் கட்சி   மெதுவாக நகரத்தொடங்கி விட்டது.
மக்கள் நலக் கூட்டணியின் அழைப்பை ஜி.கே.வாசன் நிராகரித்து விட்டார். வாசனின் அலுவலகத்துக்குச்சென்ர வைகோ தலைமையிலான தலைவர்கள் தம்முடன் சேருமாறு அவரை வருந்தி அழைத்தனர். கூட்டணி குறித்து தனது கட்சியில் உள்ளவர்களுடன் வாசன் கலந்துரையாடியபோது  மக்கள் நலக் கூட்டனிக்குச்சார்பாக்க யாரும் கருத்துக் கூறவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய வேண்டும் என்றே அவருக்குஆலோசனை கூறப்பட்டது.

ஒரே   நேரத்தில் எல்லாக்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய விஜயகாந்த்  ஏமாற்றி விட்டார். நம்பிக்கையுடன் இருந்த கொம்யூனிஸ்ட் கட்சி மதில் மேல்  பூனையாக பதுங்கி இருக்கிறது. கொஞ்சம் நம்பிக்கையளித்த வாசனும் கைவிரித்து விட்டார்.  அமைதியாக இருக்கும் திருமாவளவன் இறுதிவரைஇருப்பாரா  அல்லது  திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கக்ம் சாய்வாரா எனத்தெரியவில்லை.  எஞ்சி இருக்கும் மாக்சிஸ்ட் கட்சியும் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடுமோ  என வைகோ அச்சப்படுகிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ளவர்கள் வெளியேறுவதால் வைகோவின் கூடாரம் காலியாகிறது. கட்சியில் உள்ளவர்களாலும் கூட்டணிக்  கட்சிகளாலும் வைகோ நிம்மதி இன்றித்தவிக்கிறார்.

  தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்குகையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச்சேர்ந்த ஏழு பேர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதீய ஜனதாக் கட்சியில் இணைத்துள்ளனர்.  சமத்துவ மக்கள் கட்சியில்  சரத்த்குமாரையும்  அவரது மனைவி ராதிகாவையும் தான் மக்கள் அறிவார்கள். சமத்துவ மக்கள்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் சரத்குமார் மட்டும் தான் வெற்றி பெறார்.  கடந்த தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டது. அடுத்த தேர்தலும் ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கும் சரத்குமாருக்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

பொதுச்செயலாளர் கரு நாகராஜ், தலைமை நிர்வாகச்செயலாளர் ஜஸ் கவுஸ் தியாகு உள்ளிட்ட ஏழு பேர்  கட்சியைவிட்டு வெளியேறி விட்டனர். கட்சியின் செயற்பாட்டை மீறியதற்காக டாக்டர்  ஜெமீலாவையும் இன்னும் சிலரையும் சரத்குமார் கட்சியை விட்டு வெளியேற்றினார். நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் சரத்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

ரமணி
தமிழ்த்தந்தி

31/01/16

Thursday, January 28, 2016

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது.?

  
தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முயற்சிசெய்தாலும் அதற்கு முட்டுக்கட்டையாக சில சம்பவங்கள்  முன்வந்து கெடுத்துவிடுகின்றன.  கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களில் இருந்து மீளவேண்டும் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். உயர்பாதுகாப்பு வலயம்,தமிழ் அரசியல் கைதிகள்விடுதலை,காணாமல்  போனவர்களைக் கண்டறிவது என்பன அவற்றுள் முக்கியமானவை. உயர்பாதுகாப்பு வலயம் மெதுமெதுவாக விடப்படுகின்றன. அரசியல் கைதிகள் விடுதலை இழுபறியில் நிற்கிறது. காணாமல் போனவர்களைக் கண்டறிவதில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

காணமல் போனவர்களைக் கண்டறிவதற்காக வெளிநாட்டு அழுத்தம் காரணமாக  முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வழிகாட்டலில்  ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.  ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்புத்தான் எனத்தெரிந்து கொண்டபின்னரும் காணாமல்போனவர்களின் உறவினர்கள்  வாக்குமூலம் கொடுத்தனர். ஜனாதிபதி மைத்திரியின் காலத்தில் காணமல் போனவர்களைக் கண்டறியலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு  பிரதமர் ரணிலின் பேச்சு அதிர்ச்சியளித்துள்ளது. யாழ்ப்பணத்தில் பெரும் எடுப்புடன் நடைபெற்ற தேசியப்பொங்கல்   விழாவில் கலந்துகொண்ட ரணில் காணாமல்  போனவர்கள் உயிருடன் இல்லை  மயிலிட்டி மீன்பிடி  துறைமுகம் விடுவிக்கப்பட மாட்டாது என்று போட்டுடைத்தார். காணாமல்  போன தமது உறவுகள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்களுக்கு இச்செய்தி பேரிடியாக விழுந்துள்ளது. காணாமல் போனவர்கள் திரும்பி வரவேண்டும் என்று கோயில்களில் நேர்த்தி  வைத்துள்ளனர். சிலர் சாத்திரம் பார்த்து அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர்.  தமது உறவினர் உயிருடன் இருப்பதாக சாத்திரம் சொல்கிறது என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரிடம்  கூறியபோது முன்னாள் ஜனாதிபதி  சாத்திரத்தால் தான் தோல்வியடைந்தார் என அவர் கூறினார்.

காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை நம்புவதற்கு அவர்களது உறவினர்கள் தயாராக இல்லை. பிதமரிடம் இருந்து இப்படியான வார்த்தையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. காணாமல் போனவர்களில் அதிகமானோர் கண்முன்னாலேயே  கைது செய்யப்பட்டனர்,சிலர் சரணடைந்தனர், சிலரை உறவினர்கள் ஒப்படைத்தனர், சிலர் சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்லவில்லை என அவர்களது உறவினர்கள் காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவில் வாக்கு மூலம்  கொடுத்துள்ளனர்.

மஹிந்த அரசின்மிது நம்பிக்கை இல்லாத தமிழ் மக்கள் மைத்திரியின் அரசின் மீது நம்பிக்கை வைத்தனர். காணாமல் போனவர்களைக் கண்டறிவது,உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற செயற்திட்டங்களுக்காகவே  ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களித்தனர். ஜனாதிபதி மைத்திரியின் அரசாங்கத்தின் பிரதமரான ரணில்  கூறும் சில கருத்துக்களால் தமிழ் மக்கள்   குழப்பமடைகின்றனர்.

காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது?. அவர்கள் எப்படி இறந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்.  காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டால் கொலை செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 
காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக  நியமிக்கப்பட்ட ஆணைக்குழு  அவர்களைக் கண்டுப்பிடிப்பதற்கான ஆக்கபூர்வமான  நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை. காணாமல் போனவர்களுக்கு  மரணச்சான்றிதழ் கொடுப்பதில் அதிக கவனம் காட்டுகிறது.  காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இழபீடு கொடுப்பதில் ஜனாதிபதி ஆணைக்குழு  ஆர்வமாக உள்ளது.

மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் பெறுவதற்கு   காணாமல் போனவர்களின் உறவினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.  காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும். அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிவர வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். அவர்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதியை வழங்க வேண்டிய கடமை இந்த அரசாங்கத்துக்கு உள்ளது. 
வலிகாமம் வடக்கு முழுமையாக விடுவிக்கப்படும் என உறுதியளித்த பிரதமர் ரணில்  இன்று மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் விடுவிக்கப்படமாட்டாது என்கிறார். கடற் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மயிலிட்டி மக்களுக்கு இது பேரதிர்ச்சியாக உள்ளது. பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி  மயிலிட்டி மீன் பிடித்துறைமுகம் விடுவிக்கப்பட மாட்டாது என்கிறார் பிரதமர் ரணில். இடம் பெயர்ந்த நிலையில் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் மயிலிட்டி மக்கள் மீண்டும் தமது ஊரில் தெரிந்த தொழிலைச்செய்யலாம் என்ற உற்சாகத்தில் இருந்தனர். பிரதமரின் அறிவிப்பு அவர்களின் உற்சாகத்தைக் குலைத்துவிட்டது.

அவலவாழ்க்கை வாழும் மக்களை மீட்டெடுப்பது  நல்லெண்ண அரசாங்கத்தில் குறிக்கோள்களில் ஒன்று  என்பதை அவர்கள் சில சமயங்களில் மறந்துவிடுகிறார்கள்.
வானதி
சுடர் ஒளி
ஜனவரி27,பெப்ரவரி02


Wednesday, January 27, 2016

வடமாகாண முதலமைச்சரை சுற்றி பின்னப்படும் அரசியல்

அகிம்சை, சத்தியாக்கிரகம் உண்ணாவிரதம்,ஹர்த்தால் என்பனவற்றுடன் ஆரம்பமான தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம்  மீண்டும் உண்ணாவிரதம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.  வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக  இளைஞர் ஒருவர் தந்தைசெல்வா சதுக்கத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்

முதலமைச்சர் சுதந்திரமாக செயற்பட விடவேண்டும், முதலமைச்சர் மீது அவதூறு செய்ய வேண்டாம், அரசியல் கைதிகள் விடயத்தில்கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்,தமிழ் மனன்ர்களின் வரலாற்றுச்சின்னங்க்களை  பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்,போரால் பதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்து அம்சக்கொரிக்கையை முன்வைத்து அவர் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார்.
தனக்கு ஆதரவாக ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்த முதலமைச்சர்  தனது செயலாளரை அனுப்பி உண்ணாவிரதத்தைக் கைவ்டும்படி கேட்டார். உண்ணாவிரதம் இருந்தவர் மறுத்தார். முதலமைச்சர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டார். அதற்கும் அவர் மசியவில்லை. அவர் தனது ஒருநாள் உன்னவிடதத்தை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார். இந்திய காங்கிரஸ் தொண்டர்கள் போல் உடை அணிந்த அவர்  வரணியைச்சேர்ந்த நா.துஷாந்த் என அடையாளம் காணப்பட்டார்.  அவரைப்ப்றிய மேலதிக விபரங்கள் எவையும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

தமிழ் அரசியல் அரங்கில் வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனைப்பற்றிய பரபரப்பான செய்திகளை வெளியிடுவதில் சில ஊடகங்கள் அதிக ஆர்வம்  காட்டுகின்றன. வடமாகாண முதலமைச்சர்  பேசினாலும் பேசாவிட்டலும் அதனை செய்தியாக்குவதில் ஊடகங்கள் அக்கறைக் காட்டுகின்றன.

   சுன்னாகத்தையும் அதன் அண்டி உள்ள கிராமங்களின் கிணறுகளில் உள்ள நீரை குடிக்கலாமா  குடிக்கக்கூடாதா என்ற கேள்வியை முனவைத்து போராட்டம் நடந்தபோது முதலமைச்சரின் உறுதி மொழியின் பிரகாரம் போராட்டம் கைவிடப்பட்டது. தண்ணீரில் உள்ள மசுப்றிய அவடமக்கான சபையின் அறிக்கையை சிலர் ஏறுக்கொள்ள மறுக்கிறார்கள். இதற்கான சரியான விளக்கத்தை கொடுக்க முடியாமல் வடமாகாண சபை தடுமாறுகிறது.

 தமிழ்அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி  பலசமயங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது ஓடிச்செல்லும் அரசியல்வாதிகள்  பேச்சு   வார்த்தை  நடத்தி அதனை முடிவுக்குக் கொண்டுவருவார்கள்.  கடந்த அவருடம் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர். உணர்வு பூர்வமான உண்ணாவிரதப்போராட்டத்தை  கைவிட மறுத்த கைதிகள் வடமாகாண முதலமைச்சர்மீது நம்பிக்கை வைத்தனர்.  ஜனாதிபதியை அவர் சந்தித்து உறுதிமொழி வழங்கிய பின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

 பாராளுமானார் ஆருப்பிஒனே சுமந்திரனுக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான கருத்துமோதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் முறுகலை ஏற்படுத்தியது. தமிழ் அரசுக்கட்சியின் முதலமைச்சர் கட்சியை விட்டு தூரப்போகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் கட்சியின் மோதலமைச்சரா அல்லது மக்களின் முதலமைச்சரா எனற கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை.
தமிழ் மக்கள் பேரவை அமைக்கப்பட்டபின்னர் முதலமைச்சருக்குக்கும் கட்சிக்கும் இடையேயான பிளவு அதிகரித்தது போன்ற ஏற்பட்டது. கூட்டமைப்பிந்தலைவர் சம்பந்தனுக்கும் உதலமைச்சருக்கும் இடையிலான பேச்சு  வாரத்தின் பின்னர் எல்லாம் சுமுகம் என இவரும் கருத்துத் தெரிவித்தனர். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து முதலமைச்சர் விலக வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதைத் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என முதல்வர் அழுத்தம் திருத்தாமாகத் தெரிவித்தார்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை  இல்லாத்தீர்மானம் வரப்போவதாக செய்தி வெளியானது. அவருன் கிழ் உள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள் கூடி  அவர் மீது நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் சுயமாக இயங்க முடியாமல் இருப்பது  போன்ற கருத்து உள்ளது. ஆனால் முதலமைச்சர் சுயமாகவும் திடமாகவும் இயங்குகிறார்
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்ல என்று அதில் உள்ளவர்கள் உரக்கக் கூறுகின்றனர்.  காலப்போக்கில் அது அரசியல் கட்சியாக செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குரிய பதிலும் தயாராகவே இருக்கும். 



 ஊர்மிளா
சுடர் ஒளி
ஜனவரி 27 பெப்ரவரி02  16

Tuesday, January 26, 2016

மறைக்கப்பட்ட பாடலாசிரியரும் மறைந்தார்



இலங்கையிலும்  தமிழ்நாட்டிலும்  நகரம்கிராமம்  உட்பட பட்டிதொட்டியெங்கும்   பிரசித்தமான  பாடல்தான்  "  சின்ன  மாமியே  உன்  சின்னமகளெங்கே பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச்சென்றாளோ ?   "
தமிழ்த்திரைப்படங்கள்  சிலவற்றிலும்  இடம்பெற்றுள்ளது.  இலங்கை வடமராட்சியைச்சேர்ந்த  கலைஞர்  கமலநாதன்  இயற்றிய அந்தப்பாடல்தற்பொழுது  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும் பிரபல  பாடகர்  நித்தி கனகரத்தினத்தால்  பிரசித்தி பெற்றது.
ஒரு  கால கட்டத்தில்  இளைஞர்களை   பெரிதும்  வசீகரித்த இந்தப்பாடலை  இயற்றிய  கமலநாதன்  நேற்று (26-01-2016)  வடமராட்சி  -  வதிரியில்  அக்கினியுடன்    சங்கமமானார்.
சில   மாதங்களாக  சுகவீனமுற்றிருந்த  கமலநாதன்வடமராட்சியில் சிறந்த  கல்விப்பாரம்பரியத்தின்  பின்னணியிலும்  கலை, இலக்கிய ஊடகத்துறை  செயற்பாட்டாளர்களின்   பின்னணியிலும்  வாழ்ந்தவர்.
சிறந்த   உதைபந்தாட்ட  வீரர்.   பின்னர்  உதைபந்தாட்டப்போட்டிகளுக்கு    மத்தியஸ்தராகவும்  விளங்கியவர்.
பாடல்   புனையும்  ஆற்றலும்  இவருக்கிருந்தமையால்  சுமார் அரைநூற்றாண்டுக்கு  முன்னர்  எழுதிய  பாடல்தான்  சின்ன  மாமியே.   எனினும்  அதனை  மேடைகள்தோறும்  நித்தி கனகரத்தினம் பாடிக்கொண்டிருந்தமையால்கமலநாதனின்  பெயர்  வெளியில் தெரியவில்லை.   எனினும்  இப்பாடலின்  ரிஷிமூலத்தை  காலம் கடந்து  எழுத்தாளர்  வதிரி சி. ரவீந்திரன்  வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
இலங்கை   பத்திரிகைகளில்  இச்செய்தி  பகிரங்கமானபொழுது தன்னடக்கம்    பேணியவர்  கமலநாதன்.
ஒரு  காலகட்டத்தில்ஏ.ஈ. மனோகரன்நித்தி  கனகரத்தினம், இராமச்சந்திரன்முத்தழகு, அமுதன் அண்ணாமலை  முதலான  பலரால்  பொப்பிசைப்பாடல்கள்    இலங்கையிலும்  தமிழ்  நாட்டிலும்  பிரபல்யம்   பெற்றன. அவ்வாறே  சிங்கள  மக்கள்  மத்தியில்  எச்.ஆர். ஜோதிபாலபிரடீ சில்வா,   ஷெல்டன்  பெரேராஎம்.எஸ். பெர்னாண்டோமில்டன் மல்லவராச்சி  முதலானோரும்  பிரபல்யம்  பெற்றிருந்தனர்.
 சமூக சீர்திருத்தம்  தொடர்பாகவும்   மனிதர்கள்மற்றும்   மாறிவரும் உலகத்தின்   நவநாகரீகம்   பற்றிய  அங்கதச் செய்திகளும்  இந்தப்பொப்பிசைப்பாடல்களில்   தொனிக்கும்.    இன்றைய   நவீன கணினி   தொழில்நுட்ப  சாதனங்கள்  இல்லாமலேயே   குறைந்தளவு வசதிகளுடன்   பொப்  பாடல்களின்  ஊடாக அவற்றை    இயற்றியவர்களின்  கருத்துக்களை  நகைச்சுவையுடனும் சோகரசத்துடனும்  நளினமான  ஆடல்கள்  மூலமும்  இந்தப் பாடகர்கள்   மக்கள்  மத்தியில்    எடுத்துச்சென்றனர்.
ஆனால்கேட்டு  ரசித்து  தாமும்  பாடும்  மக்களுக்கோ  இந்தப்பாடல்களை    இயற்றியவர்  யார்  ?  என்பது  தெரியாது.   அவ்வாறே    கமலநாதனும்  கிணற்றுள்  விளக்காக  வாழ்ந்தார்.
கமலநாதன்  இயற்றிய  சின்னமாமியே   இளம்வட்டத்தினரை அக்காலகட்டத்தில்  பெரிதும்  கவர்ந்தது.   வீடுகளிலும்  மக்களால் முணுமுணுக்கப்பட்டது.   இதனை  பல  சிங்களப்பாடகர்களும் பாடியதனாலும்   சிங்களப்படங்களில்  இடம்பெற்றதாலும்  சிங்கள ரசிகர்களிடமும்  சின்னமாமியும்  சின்ன   மகளும்  சென்றனர். தலைமுறைவேறுபாடுகள்   இன்றி  பொப்பாடல்கள்  மக்களிடம் வாழ்ந்த  அக்காலம்  பாடலாசிரியர்களினதும்  பாடகர்களினதும் ரசிகப்பெருமக்களினதும்   வசந்தகாலம்.   ஆனால்அந்தக்காலம் படிப்படியாக   மங்கி  மறைந்ததற்கு,   தொலைக்காட்சியின்  வருகை முக்கிய  காரணம்.
இன்றும்  இலங்கையில்  பொது   அரங்குகளில்கட்சி  அரசியல் மேடைகளில்   இசைநிகழ்ச்சிகள்  நடக்கின்றன.  அவற்றுக்கு  கணினி சாதனங்கள்   பெரும்    துணையாகியுள்ளன.
ஆனால் -   தற்காலப்பாடல்கள்   நினைவில்   தங்குவதில்லை   என்பது அனைத்து   தரப்பு  மூத்ததலைமுறையினரின்  கருத்து.
ஆனால் , அவர்கள்  பாடிய பொப்    பாடல்களை  இயற்றியவர்கள்  பற்றிய  செய்தியை  பாடியவர்களும்  சொல்லவில்லை.   ஊடகங்களும்  கண்டுகொள்ளவில்லை.   அதனால்  ரிஷிமூலம்,   நதிமூலம்  தெரியாதிருப்பதுபோன்று  -  கட்டிடங்களின்  அத்திவாரம் வெளித்தெரியாதிருப்பது  போன்று  -  நெடும்  வீதிகளுக்கு  அடியில் மறைந்திருக்கும்  கற்கள்  போன்று   -  இந்தப்பாடலாசிரியர்களும் அறியப்படாமல்  மறைந்துவிடுகின்றனர்.   எழுதியவர்களும் உரிமைகோருவதற்கு  முன்வராமல்  அடக்கம்  பேணிவிடுவார்கள்.
தமிழகத்தின்  மூத்த கவிஞர்  ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையா இயற்றிய  அலைபாயுதே  கண்ணா  என்ற  பிரசித்திபெற்ற  பாடலை சிறந்த  இயக்குநர்  எனப்பெயரெடுத்த  மணிரத்தினமும்  தனது அலைபாயுதே  படத்தில்  ஒரு   காட்சியில்   பயன்படுத்தினார்.  ஆனால், தமிழ்மக்களிடம்   சாகாவரம்  பெற்ற  அந்தப்பாடலை   இயற்றியவரின்  பெயரை  அந்தப்படத்தின்  Title  இல்  காணமாட்டீர்கள்.
இலங்கையின் மூவின மக்களிடமும் பிரசித்திபெற்ற சின்னமாமியே பாடலின் ஆசிரியர் கமலநாதன் வதிரியில் நேற்று முன்தினம் 25 ஆம் திகதி மறைந்தார். இவர், தினகரன்  பத்திரிகையின்  முன்னாள்  பிரதம  ஆசிரியரும்  மூத்த இலக்கியவாதியும்    இலக்கிய  மொழிபெயர்ப்பாளரும்  அழகு சுப்பிரமணியத்தின்    ஆங்கிலப்படைப்புகளை    தமிழுக்கு கொண்டு வந்தவருமான    (அமரர்)  ராஜஸ்ரீகாந்தனின்  அண்ணா  உறவு முறையானவர்.   கமலநாதன்,    மற்றும்  ஒரு  ஊடகவியலாளரும்,   வதிரி  தேவரையாளி   இந்துக்கல்லூரியின்  ஸ்தாபகருமான   அமரர் (சூரன்) அவர்களின்   பேரன்    ரவிவர்மாவின்   நெருங்கிய    உறவினருமாவார்.
கமலநாதனும்   குடும்பத்தினரும்  1990    இற்குப்பின்னர்   எங்கள் நீர்கொழும்பில்  - நான்   வசித்த  சூரியா  வீதியில்  வசித்தனர்.   அதனால்   இவரின்  பிள்ளைகள்  எங்கள்  ஊர்  பாடசாலையில்  எனது மனைவியின்   மாணவர்களாகவும்  இருந்தனர்.அங்கு  நடக்கும்  பொது  நிகழ்ச்சிகளிலும்  கலந்துகொள்வதனால் எனக்கும்  ஊரில்  எனது  குடும்பத்தினருக்கும்  நெருங்கியவராகவும் கமலநாதன்    திகழ்ந்தார்.
1997  ஆம்  ஆண்டு  நீர்கொழும்பில்  மல்லிகை  ஜீவாவை   நாம் பாராட்டி   கௌரவித்த  நிகழ்ச்சியிலும்  கலந்து  சிறப்பித்தார்.   அன்று இவருடன்   ராஜஸ்ரீகாந்தன்,   வதிரி சி. ரவீந்திரன்,   மேமன் கவி,  (அமரர்) துரை  விஸ்வநாதன்,   தெளிவத்தை  ஜோசப்,   (அமரர்)  பிரேம்ஜி ஞானசுந்தரன்,   மு. பஷீர்,   திக்குவல்லை கமால்,  (அமரர்)  தங்கவடிவேல்  மாஸ்டர்,   நவமணி  ஆசிரியர்  சிவலிங்கம்,   தினக்குரல் ஆசிரிய   பீடத்திலிருந்து  சிவநேசச்செல்வன்,   தனபாலசிங்கம், வனொலி  ஊடகவியலாளர்  இளையதம்பி  தயானந்தா, ரூபவாஹினியிலிருந்து  சி. வன்னியகுலம்,   வீரகேசரியிலிருந்து சூரியகுமாரி   உட்பட பலர்  கலந்துகொண்டனர்.   இவர்கள் அனைவரதும்    நேசத்துக்குரியவராகவும்  திகழ்ந்தவர்  கமலநாதன்.
அங்கு   எமது  இல்லத்தில்  1998  ஆம்  ஆண்டு   தைப்பொங்கலன்று நடைபெற்ற  இலக்கியச்சந்திப்பிலும்  பங்கேற்றார். இறுதியாக  2013   இல்   வடமராட்சியில்  என்னை   நெல்லியடியில் கண்டுவிட்டு  தமது  வீட்டுக்கு  அழைத்துச்சென்று  உபசரித்தார்.வடமராட்சியில்  முன்னர்   மும்மூர்த்திகள்  எனச்சொல்லப்படும் மூவர்    இலங்கையில்  எந்தப்பாகத்தில்  கலை,   இலக்கியமுற்போக்கு   அரசியல்  கூட்டங்கள்  நடந்தாலும்  அதில் காட்சி தருவார்கள்.
அவர்கள்   எழுத்தாளர்  தெணியான்,   தேவரையாளி  இந்துவின் எழுதுவினைஞர்   கிளாக்கர்  இராஜேந்திரம்சதானந்தன்  மாஸ்டர். இவர்களில்    சதானந்தனின்  தங்கையைத்தான்  கமலநாதன்  மணந்தார். பெரிய   குடும்பத்தின்  தலைவனாக  விளங்கிய  கமலநாதன்  மறைந்துவிட்ட  செய்தி  எனக்கு  நேற்று  தாமதமாகத்தான் தெரியவந்தது.
தொலைபேசி   ஊடாக  அவரின்  குடும்பத்தினருக்கு  அனுதாபம் தெரிவிக்கின்ற   சமயத்தில்  கமலநாதனின்  பூதவுடலுக்கு இறுதிக்கிரியைகள்  நடந்துகொண்டிருந்தன.
நேற்று  அக்கினியில்  சங்கமமான  இக்கலைஞரின்  பாடல்  வரிகள் இன்றும்  மங்காமல்  ஒலித்துக்கொண்டிருக்கிறது.   பல தலைமுறைகளாக   சின்னமாமியே   ஈழத்தமிழர்   புலம்பெயர்ந்த நாடுகளில்  நடக்கும்  இசை  - களியாட்ட  நிகழ்ச்சிகளில்  மட்டுமன்றி, வீடுகளில்   நடக்கும்   பிறந்தநாள்     விருந்துகளிலும்    இந்தப்பாடல் ஒலிக்கிறது.
முருகபூபதி அவுஸ்திரேலியா