
தெள்ளுத் தமிழ்த் தீஞ்சுவையிற் துள்ளுதமி ழேயுதிர்
தீரனே திறமையென்னே
வள்ளுவர்தம் வேதமதை வாழ்வதனிலேதந்த
வள்ளலே வண்மையென்னே
கள்ளமில்லமனது கொண்டவொரு கொளகையே
கண்டவுயர் பண்புமென்னே
உள்ளுதொறு முந்னுரு செந்தமிழர் சிந்தைமிசை
எங்கணமி வங்குமன்றோ.
இருள்கொண்ட சமுதாய இன்னல்கள் தீரவே
இரவியே எனவுதித்தாய்
பொருள் கொண்டு வாழுயர் பேதமில்லாரிடைப்
பொன்னான காலமெல்லாம்
தெருள் கண்ட கல்வியால் தீனர்தம் பந்துவாய்த்
தென்னனாங் கோகார்த்தாய்
அருள் கொன்ட பார்வையால் அகிலமும் மேயாண்ட
அறிவான அண்ணலண்னா.
வால்காட்டி யேயிங்கு வகை காணும் மோர்தவம்
வளமார் தளைகாட்டிடும்
மால்காட்டு மாந்தருள் மாணிக்கமேயென்ன
மகிதலங் கண்டவுன்
பால்காட்டு வேதமாம் பண்போடு வரும்ரைப்
போதமே யணியுமானாய்
சூல் காட்டு குழவியுஞ் சொல்லுமே யெங்ஙணும்
சொன்தமே எங்களண்ணா.
போதவிழ் பொயை போதெல்லாம் வாழ்ந்திடும்
பொலந்த ஈண்டுகமெல்லாம்
தாதவிழ் தேன்கொளத் தகமையில் லாததால்
தொலைதவுன் மேவு காணின்
நாதமர் வண்டினம் நாடியே வந்துயர்
நறியதேனுண்டு மீளும்
போதமர் க்தையினைப் புரியவே வைத்திடும்
புகழ்மேவும் அண்ணலாற்றல்.
தென்னாட்டிலே யுயர் சிவமெனப்போற்றிடும்
தெய்வமே மூன்றெழுத்தாம்
தென்னாட்டிலே நல்ல சங்கம் வளர்த்ததமிழ்
தூயமொழி மூன்றெழுத்தாம்
தென்னாட்டிலே பழம் பதியெனப் போற்றுயர்
தலமதுரை மூன்றெழுத்தாம்
தென்னாட்டி லேதனித் தீர்த்தமாங் காவிரித்
தாயுமே மூன்றெழுத்தாம்
தென்னாட்டி லேபுகழ் உற்றவைகள் யாவுமே
தெளிவான மூன்றெழுத்தாம்
தென்னாட்டி லேபெருஞ் சோதியாய்த் தோன்ருமெம்
அண்ணாவும் மூன்றெழுத்தே.
கா.சூ.ஏகாம்பரம்
கரவெட்டி
03.02.1971
மித்திரன்
இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி இந்தக் கவிதையை பிரசுரித்துள்ளேன். சிலவரிகள் விடுபட்டுள்ளன. காரணம் தெளிவற்ற பிரதி. உங்களின் பார்வைக்காக பத்திரிகையின் ஸ்கேன் வடிவம்.