Showing posts with label அண்ணாமலை. Show all posts
Showing posts with label அண்ணாமலை. Show all posts

Sunday, February 2, 2025

எகிறிய எடப்பாடி அடங்கிய அண்ணாமலை


  அண்ணா திராவிட முன்னேற்றக்  கட்சிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையே  இருந்த பிரச்சனைகள் வெடித்துக் கிளம்பி உள்ளது. தேனும் பாலும் ஓட தேன் நிலவு கொண்டாடிய எடப்பாடிக்கும் , மோடிக்கும் இடையே புகுந்த அண்ணாமலையால் எடப்பாடி தனிக்குடித்தனம் போய்விட்டார்.

 திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாக விமர்சித்த அண்னாமலை சந்தர்ப்பம் கிடைக்கும்  போதெல்லாம் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விட்டு வைக்கவில்லை.  தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்  இருக்கையில் பாரதீய ஜனதாக் கட்சிதான் தமிழகத்தின் எதிர்க் கட்சி என அண்ணாமலை அறித்தார். இதனால் எடப்பாடி கொதிப்படைந்து  பாரதீய ஜனதாக் கட்சியுடனான தொடர்பைத் துண்டித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வரும் என  இலவு காத்த கிளியாகக் காத்திருந்த  பாரதீய ஜனதாக் கட்சி ஏமாற்றமடைந்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர்களை கட்டம் கட்டும் நடவடிக்கையை எடப்பாடி எடுத்துள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் கோவை வேலுச்சாமி, மைத்ரேயன், முல்லைவேந்தன், சின்னச்சாமி ஆகியோரை அதிரடியாக நியமித்தார் எடப்பாடி. இந்த நியமனம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. கோவையில் கோலோச்சும் நிர்வாகி ஒருவர்  முடக்கும் விதமாகவே கோவை வேலுச்சாமியை கட்சியின் மாநில பொறுப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் விஅரம் அறிந்தவர்கள்.  கோவையில் கோலோச்சும் நிர்வாகிக்கு எதிரானவர்கள் இந்த விவாதத்தை பேசு பொருளாக்கி வருகின்றனர்.

கோவையின் நிர்வாகி பாரதீய ஜனதாவின்  மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். பாரதீய ஜனதாவின் நிகழ்ச்சி நிரலை அவர் நிறைவேற்றி   எடப்பாடிக்கு குடைச்சல்  கொடுக்கிறார்.  அவர் இல்லாமல் கோவையி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலை நிமிர முடியாது என அவர் ஒரு மாயையை  உருவாக்கி உள்ளார்.  அவரின் நடவடிக்கைகளால் எடப்பாடி பல  பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்.  அவ்வப்போது சமாதானங்கள் நடந்தாலும், உள்ளுக்குள் எடப்பாடிக்கு எதிராக கட்சிக்குள் அந்த கோவை புள்ளி செயல்படுவதாக எடப்பாடி திடமாக நினைக்கிறார்.   அந்த கோவை புள்ளிக்கு எதிராக இன்னும் சில சீக்ரெட் தகவல்கள் எடப்பாடி யிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அந்த கோவை புள்ளியை மட்டுமே நம்பி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது கோவையில் முழு வெற்றியை பெற முடியாது என நினைக்கிறார். அதனால்தான், அந்த கோவை புள்ளிக்கு இணையாக கோவையில் செல்வாக்கு வைத்திருக்கும் வேலுச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

 வேலுச்சாமியை நியமிக்கும் விவகாரம் இத்தகைய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,   அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்க‌ அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் மூன்று பேர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது, அண்ணா திராவிட் முன்னேற்றக் கழகத்தின் ஏனைய  சமூகத் தலைவர்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருவதாகவும் கருதப் படுகிறது.

 பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான். அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செயப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல்,  நாடாளுமன்றத்  தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட்டன ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பொதுக்குழு கூடியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி இருந்து வெளியேறிய   தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று மூத்த  தலைவர்கள் பலர் நினைக்கிறார்களாம்.

  முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பெரிய தலைகள் எல்லாம் இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனராம்.   இது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அன்று முதல் பல அதிரடி முடிவுகளை எடுத்தார். கண்டதையும் பேசி தன்னுடைய இருப்பை காட்டிக்கொண்ட அண்ணாமலையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  கடுமையாக எதிர்த்தார்கள்.

தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வளர்ந்துவிட்டது. தாமரை மலரப் போகிறது என அண்ணாமலை சொன்னதை டெல்லி மேலிடம் முற்று முழுதாக நம்பியது.தேர்தலின் படு தோல்வி உண்மையை வெளிக்கொண்டு வந்தது. இனிமேலும் விட்டு வைத்தால் கட்சி தமிழகத்தில் வளராது என எண்ணிய அமித்ஷா, அண்ணாமலையை மாற்ற முடிவு செய்துள்ளார்.

இதனால் தமிழக பாரதீயச் ஜனதாவின்  மூத்த தலைவர்கள் குஷியாகி தலைவர் கனவில் மிதந்தனர்.    வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன் என மூத்த தலைவர்கள் அனைவரும் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி போட்டனர்.

இதையெல்லாம் கண்காணித்த அண்ணாமலை  சாட்டையடி சம்பவத்தை அரங்கேற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து விரட்டும் வரை  காலில்  செருப்பை அணியமாட்டேன் எனவும் கூறி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். ஆனால் டெல்லி மேலிடம் மட்டும் அவர் பக்கம் திரும்பவே இல்லை.  சண்டைக்காரன் பக்கம் செல்வோம் என எடப்பாடி காலில் விழுந்தார் அண்ணாமலை.

எடப்பாடியின் மகன் மிதுனை சந்தித்து அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒன்று கூடுவோம் என அவரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு  மிதுன் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 சமீபத்தில் எடப்பாடிக்கு சொந்தமான நெருங்கிய வட்டாரத்தில் வருமானவரி சோதனை நடந்துள்ளது. இதை உடனடியாக நிறுத்தி விடலாம் என்றும் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக மிதுனை அழைத்துக்கொண்டு டெல்லி பறந்த அண்ணாமலை அமித்ஷாவிடமும் பேசியுள்ளார்.ஆனால் ஒரு மூன்று மாதம் மிதுன்  அவகாசம் கேட்டதாக தெரிகிறது. ஏனென்றால் விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் அண்ணா திராவிடக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும்  பாஜக கூட்டணி மலர இப்பதாக மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கத்  தலைவர்களை பற்றி இனி பேசமாட்டேன் என அண்ணாமலை சரணாகதி அடைந்துள்ளதால் எடப்பாடியும் சற்று குளிர்ந்துள்ளார்.

ரமணி

2/2/25

Friday, January 17, 2025

இடைத்தேர்தலைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்ற திமுக‌

ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினரான கே.வி.எஸ்.இளங்கோவன் மரணமானதால்  பெப்ரவரி 05ம்  திகதி  இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது என்பது எழுதப்படாத  சட்டமாக  உள்ளது. ஆளும் கட்சியின் மீது வெறுப்பு இருக்கும் சில சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சி வெற்றி பெற்ற வரலாறும் உள்ளது.

இடைத் தேர்தலில் ஆளும் கட்சியை எடை போட சந்தர்ப்பம் கிடைக்கும். கடந்த தேர்தலில் ஆளும் கட்சி பெற்ற  வாக்கு, சதவீதம் குறைவடைந்தால் எதிர்க் கட்சிகள்  சற்று உசாராகி விடும். தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்,தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சி என்ற நினைப்பில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியும்  ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக சட்ட  மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு  ஒரு வருட காலமே இருப்பதனால்  திராவிட முன்னேற்றக் கழகத்தை எடை பார்க்கும் சந்தர்ப்பம் நழுவிவிட்டது. இடைத்தேர்தலைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினரான கே.வி.எஸ்.இளங்கோவன் மரணமானதால்  பெப்ரவரி 05ம்  திகதி  இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த ஈரோடு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் களம் இறங்க உள்ளது.தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும்  ஒரு வருடமே உள்ளநிலையில் அங்கு போட்டியிடுவதை காங்கிரஸ் தவிர்த்துள்ளது.

 தமிழக மக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கும் செல்வாக்கை ஈரோடு இடைத் தேர்தல் வெளிப்படுத்த உள்ளது. அரசாங்கத்தின் எதிர்ப்பு வாக்குகளை அருவடை செய்யும் வாய்ப்பை எதிர்க் கட்சிகள் இழந்துள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி,  விஜயகாந்தின் கட்சி ஆகியன தேர்தலிப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட விரும்பவில்லை. 2026 என்ற தொலைதூர இலக்குடன் விஜய் அமைதியாக இருக்கிறார். 

வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. நாம் தமிழர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் அறுவடை செய்யும் தகுதி சீமானுக்கு இல்லை. தனது கட்சி வேட்பாளரை பொது வேட்பாளராக்க சீமான் முயற்சி செய்கிறார். எடப்பாடி,ராமதாஸ்,அண்ணாமலை ஆகியோர் சீமானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள்.

அண்ணா பல்கலைகழக விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் ஸ்டாலினையும் திராவிட முன்னேற்றக் கழக அரசையும் கடுமையாக விமர்சனம்ச் எய்யும் அண்ணாமலை தேர்தல் என்றால் பம்முவது வழமையான செய்திதான்.திராவிட முன்னேற்றக் கழக அரசை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் எனச் சபதம் செய்த அண்ணாமலை அதற்குரிய சந்தர்ப்பம் இருக்குமா என ஆராயும் சந்தர்ப்பத்தைத் தவற விட்டுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  முதலில் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் கூட கொங்கு மண்டலத்தில் தங்களுக்குப் பலம் உள்ளதாக   கூறி வரும் நிலையில் அங்கு நடைபெறும் இடைத் தேர்தலை புறக்கணித்தது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இப்படித்தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அதிமுக புறக்கணித்திருந்தது.

அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது.  விக்கிரவாண்டி தேர்தலையும் தேமுதிக புறக்கணித்திருந்தது.

  அதேசமயம், பாஜக இத்தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுகவுடன் போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்து தனது நிலையை ஸ்திரப்படுத்த முயலும் என்றும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் பாஜகவும் தற்போது தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளது. தமிழகத்தின் எதிர்க் கட்சி எனக்கூறிக்கொள்ளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில்  தேர்தல் என்றால் அச்சம் ஏற்ப‌டுவது  வழமையே. 

கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனக்கூறும் அண்ணாமலை அது உண்மை எகக்கூறும் வாய்ப்பைத்தவறவிட்டுள்ளார்.

 ஜனநாயகக் கூட்டணியும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே பிரதான கட்சிகளாக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி நெருக்கடி தருமா என்பது சந்தேகம்தான். அதேசமயம், பெரியாரை கடுமையாக சீமான் விமர்சித்து வரும் சூழலில் அவர் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற நாம் தமிழர் கட்சி முயலக் கூடும்.

பெரிய கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்து விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியிலும், விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் போல மிகப் பெரிய வெற்றியை திமுக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பிரதான கட்சிகள் இப்படி தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தும் எழுந்துள்ளது.

 

 ரமணி

19/1/25

Sunday, October 15, 2023

கூட்டணிக் கதவைத் திறந்து வைத்த எடப்பாடி திரும்பியும்பாராத கட்சிகள்

பாரதீய ஜனதாக் கட்சியுடனான  கூட்டணியை  ஒரு தலைப் பட்சமாக முறித்த எடப்பாடி பழனிச்சாமி, புதிய கட்சிகளின் வரவை ஆவலாக எதிர்  பார்த்துக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் பெயரைச் சொல்லி  பாரதீய ஜனதாவுடனான கூட்டணிக்கு ஆப்பு வைத்தர் எடப்பாடி. ஆனால்,  உண்மையான காரணம் அது அல்ல என்பதை அரசியல் உலகம் அறியும்.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு பாரதீய ஜனதாதான் காரணம் என கழகத்தில் மூத்த தலைவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள்.  அப்போதெல்லாம் அடக்கி வாசித்த எடப்பாடி இப்போது  பொங்கி  எழுந்துள்ளார். பாரதீய ஜனதாவுடனான  கூட்டணியை முறிப்பதற்கு முடிவு செய்த எடப்பாடி, அதற்கான காரணியாக அண்ணாமலையை பலியாக்கி உள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் மிக  மோசமாகத் தாக்கிப் பேசிய  போதெல்லாம் எந்த விதமானஎதிர் வினையும் எழவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  முடிவால் அண்ணாமலை கவலைப்படவில்லை. எடப்பாடியின்   முடிவு  டெல்லியைக் கலங்கடித்தது. அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தை விமர்சிக்க வேண்டாம் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அண்ணாமலை கப்சிப்பாகிவிட்டார். நான்  முகவரல்ல,  முடிவெடுக்கும்தலைவர் என  பிதற்றியவர் டெல்லி முடிவு செய்யும் எனக் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

 இன்றைய நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  இணைவதற்கு எந்தக் கட்சியும்தயாராக  இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய ராமதாஸும், விஜயகாந்தும் எடப்பாடியைத் திரும்பியும் பார்க்கவில்லை.

திராவிட முன்னேற்றக்  கூட்டணிக்  கட்சிகள் வரலாம் என்ற நம்பிக்கையில் எடப்பாடி காத்திருக்கிறார். பாரதீய ஜனதாக் கட்சிக்கு சவால் விடும்  கூட்டணியாக   I-N-D-I-A உருவாகிக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் உள்ள கட்சிகள்  அதிலிருந்து வெளியேறுவதற்குத் தயாராக  இல்லை. அதிக   தொகுதிகளில் போட்டியின் திராவிட முன்னேற்ரக் கழகம் விரும்புகிரது. அதன் கூட்டணிக் கட்சிகளும் அதே மன நிலையில் இருக்கின்றன. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டால் ஏதாவது ஒரு கட்சி வெளியேறும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது.

பாரதீய ஜனதாக் கட்சியுடன்  இணக்கமாக  இருந்தபோது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளை ஏறெடுத்தும் பார்க்காத எடப்பாடி இன்று அவைகளை வலிந்து அழைக்கிறார்.திராவிட முன்னேற்றக் கூட்டணியில்  தற்போது 12 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இன்னும் சில கட்சிகளைச் சேர்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். காத்திருப்போர் பட்டியலில் கமல்  இருக்கிறார்.   கூட்டணித் தொகுதிப் பங்கீடு பற்றிய அறிவித்தல் எவையும் வெளியாக வில்லை. ஆனால், இத்தனை தொகுதிகளைக் கேட்கப் போகிறோம்  என சில கட்சிகள்  அறிவித்துள்ளன.

திராவிட முன்னேற்றக் கழகத்தை   மிரட்டி அதிக தொகுதிகளில்  போட்டியிட  கூட்டணிக் கட்சிகள் முயற்சிக்கின்றன. 25 தொகுதிகளில் போட்டியிட  திராவிட முன்னேறக் கழகம் விரும்புகிறது. ஆகையால், கடந்த முறை  கொடுத்ததைவிட அதிக தொகுதியைக் கொடுப்பது சாத்தியமில்லை. ஒரு தொகுதி காணாது என  கோபித்துக்கொண்டு   கூட்டணிக் கட்சி  வெளியேறினால், திராவிட முன்னேற்றக் கழகம் அதற்காக வருத்தப்படாது.

ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கூடுதலாக  ஒரு தொகுதியைப் பெற விரும்புகிறது. கடந்த தேர்தலில்  மூன்ரு தொகுதிகளுக்காக  முட்டி மோதிய சி.பி.எம்   கொடுக்கப்பட்ட இரண்டு  தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இம்முறை மூன்று தொகுதிகளிப் பெறும் முனைப்பில் இருக்கிறது.  

புரட்சி பாரதம் கட்சி மட்டுமே   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இருப்பதாக அறிவித்துள்ளது.   தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்   ஆகியோர் தமது நிலைப்பாட்டை  இன்னமும் அறிவிக்கவில்லை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  இணக்கமாக  இருந்த  போது 25 தொகுதிகளில் வெற்றி பெறப்போவதாக  முழக்கமிட்ட அண்ணாமலை  இப்போது ஒன்பது தொகுதிகளை  இனம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்  தேர்தலுக்கு முன்பாக ஐந்து  மாநிலங்களுக்கான  மினித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவுறுகிறது. அந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17 ஆகிய திக்திகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் திக‌தி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணயம் அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் திக‌தியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம்திக‌தியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 25ஆம் திக‌தியும் என ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் திக‌தி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

மத்தியப் பிரதேசம்

மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசம் இப்போது சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதாவின் ஆட்சியில்  .   கடந்த 15 ஆண்டுகளாக  பாரதீய ஜனதாக் கட்சிஆட்சி செய்து வருகிறது. இங்கு போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா

தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. இங்கு சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

 

தெலுங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகள் உள்ளன. அங்கு புபேஷ் பகேஸ் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாஜக, சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளே காங்கிரசுக்குப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளே உள்ளன. அங்கு மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட உள்ளன.

ராஜஸ்தான்

மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளே முக்கிய கட்சிகளாகப் பார்க்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்படும் 5 மாநில தேர்தல்களின் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஐந்து மாநிலங்களிலும்  முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல்  பாரதீய ஜனதாக் கட்சி  தேர்தலைச் சந்திக்கப்போகிறது. எதிர்க் கட்சிகள்  ஓரணியில் இருப்பதால் ஐந்து மாநிலத் தேர்தல் மிக முக்கியமானதாக நோக்கப்படுகிறது.

Saturday, October 7, 2023

எகிறிய எடப்பாடி அடங்கிய அண்ணாமலை

தமிழக  அரசியலில் யாருக்கும் அடங்காத காளையாகப் பவனி வந்த அண்ணாமலையை எடப்பாடியின்  முடிவு அடக்கி ஒடுக்கி  விட்டது. தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள்  தலையாட்டி பொம்மையாக இருப்பதே நடைமுறையில் உள்ளது. அதனை மாற்ரி அமைக்கப் போவதாக சபதம் எடுத்த அண்ணாமலை அடங்கி ஒடுங்கிவிட்டார்.

தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை  மட்டும் எதிர்க்காது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிர்த்து அரசியல் செய்யத்  தொடங்கினார் அண்ணாமலை. டெல்லித் தலைவர்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த் தலைவர்கள் செய்த முறைப்பாடுகள் அனைத்தும் நீர்த்துப்போயின.

ஆட்சியைத் தக்க வைப்பதற்காக  பாரதீய ஜனதாவைத் தூகிச் சுமந்த எடப்பாடி ஆட்சியைப் பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவை தொப்பெனப் போட்டு விட்டார்.

பாரதீய ஜனதாவுடனான  கூட்டணி முறிவுக்கு  வந்து விட்டதென அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்ததை  ஏனைய கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் நாடகம் என வர்ணித்தனர். பாரதீய ஜனதாவுடன்  கூட்டணி சேர்ந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை எடப்பாடி நன்கு  உணர்ந்துள்ளார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாமல் தேர்தலில்  வெற்றி பெற முடியாது என்பதை காலம் தாழ்த்தி பாரதீய ஜனதாத் தலைவர்கள் தெரிந்து கொண்டனர்.

 பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறியதால்   உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலையின் பேச்சுகள் சரியில்லை. அண்ணாமலை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். முக்கியமாக   மறைந்த தலைவர்களை தாக்கி பேசி வருகிறார். அவரின் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால்,  பாரதீய ஜனதாக்  கூட்டணியில் இருந்து விலகிக்கொள்கிறோம் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவால் டெல்லித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  கூட்டணியைத் தொடருவதற்கான முயற்சிகளை டெல்லித் தலைமை மேற்கொண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம்  இருந்து சாதகமான  முடிவு கிடைக்கவில்லை. டெல்லிக்கு வருமாறு அண்ணாமலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.  டெல்லியில்   அவர் யாரையும் சந்திக்கவில்லை. அங்கே வெறுமனே காக்க வைக்கப்பட்டார்.

பின்னர்   தேசியத் தலைவர் நட்டாவைச் சந்தித்த அண்ணாமலை தனது  தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தினார்.    பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரின் இல்லத்தில் சந்தித்திருதார் அண்ணாமலை.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி  முறிந்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கேட்ட கேள்விகளுக்கு அண்ணாமலை சொன்ன   பதில்களில் தேசியத் தலைமைக்கு திருப்தியில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.

 தமிழ்நாடுட்டு  நிலைமை  குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அகில இந்தியத் தலைமையிடம் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  கூட்டணி சேர்வதையே பாரதீய ஜனதாத் தலைவர்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. ஆகவே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  முடிவு பற்றி பாரதீய ஜனதா நிர்வகிகள் எவரும்  வெளிப்படையாகப் பேச வேண்டாம் என்று தேசியத் தலைமை அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.  டெல்லித் தலைவர்கள்  முடிவு எதையும் எடுக்காத நிலையில், அண்ணாமலையிடம் வாயைத் திறக்கக் கூடாது என்று கட்சி மேலிடம் உத்தரவு போட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 இன்னொரு பக்கம் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாரதீய ஜனதாத் தலைவர்களிடம் ஆலோசனைகளை மேற்கொண்டார். அந்த ஆலோசனையின் முடிவில் நிர்மலா சீதாராமனும் ஒரு ரிப்போர்டை தயார் செய்தார். தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா  எவ்வளவு வலுவாக இருக்கிறது. கட்சியின்  உண்மையான பலம் என்ன? அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தனியாக நிற்கும் பட்சத்தில் வாக்கு வங்கி எப்படி இருக்கும்? பாஜக தலைமையில் தனியாக கூட்டணி அமைத்தால் யாரெல்லாம் கூட்டணியில் இணைவார்கள் என்று ரிப்போர்ட் ஒன்றை தயார் செய்து உள்ளாராம். இதை டெல்லியிடமும் நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ளாராம். இந்த நிலையில்தான் அண்ணாமலையின் நடைபயணம் இன்னொரு பக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6ஆம்திக தி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலைக்கு  சுவாச குழாய் தொற்று ஏற்பட்டு உள்ளது. அவருக்கு தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிக்கல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அவருக்கு சளி தொல்லை, அழற்சி இருப்பது சிடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அண்ணாமலை  ஒய்வெடுக்க வேண்டும் என வைத்தியர்கள்  அறிவுறுத்தியுள்ளனர்.  இந்த நிலையில்,பாரதீய ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை இல்லாமலையே தொடங்கியது, மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு அண்ணாமலை இன்னும் வராததால், கேசவ விநாயகம், எச்.ராஜா ஆகியோர் நீண்ட நேரமாக மேடையில் அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை இல்லாமல் பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற கருத்துக் கணிப்பில் பாரதீய ஜனதாவுகு பயங்கா அடி விழுந்துள்ளது.தமிழ்நாட்டில்   திமுக கூட்டணி மொத்தம் 28 இடங்களைக் கைப்பற்றும்; அதிமுக 6 இடங்களில் வெல்லும் என   கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் தற்போது அதிமுக- பாஜக கூட்டணி உடைந்துள்ளது. இதனால் அதிமுக, பாஜகவுடன் கரம் கோர்த்த கட்சிகள் இரு அணிகளும் மாறி மாறி இடம் பிடிக்கும். திமுக கூட்டணியில் எந்த ஒரு பிளவுக்கும் சாத்தியமில்லாத நிலைமைதான் உள்ளது. அதேநேரத்தில் பாஜக கூட்டணியை முறித்ததால் அதிமுக, முஸ்லிம்கள் வாக்குகளை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக India TV-CNX கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளன.

 தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் திமுக கூட்டணி 28 இடங்கள் திமுக 21 இடங்கள் காங்கிரஸ் 7 இடங்கள் அதிமுக 6 இடங்கள் பாமக -1 இதர கட்சிகள் 4 மத்தியில் ஆளும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இந்த கருத்து கணிப்பு. 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் பெறக் கூடிய வாக்கு சதவீதம்: திமுக 31% அதிமுக 25% காங்கிரஸ்- 11 % பாஜக- 7% பாமக -6% இதர கட்சிகள்- 20% சில நாட்களுக்கு முன்னர் டைம்ஸ் நவ் டிவி சேனல் நடத்திய கருத்து கணிப்பில், திமுக 20 முதல் 24 இடங்கள்; காங்கிரஸ் 9 முதல் 11 இடங்கள்; அதிமுக 4 முதல் 8 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜகவுக்கு 0 முதல் 1 எனவும் டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் தெரிவித்திருந்தன. அதாவது திமுக தலைமையிலான "இந்தியா" கூட்டணிக்கு மொத்தம் 30 முதல் 34 இடங்கள் கிடைக்கும் என்பது டைம்ஸ் நவ் கருத்து கணிப்பாக இருந்தது. அத்துடன் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி - 57.20%; (அதிமுக பிளஸ்) பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி: 27.80% இதர கட்சிகள் 15.00%. வாக்குகளைப் பெறும் என்று Times Now- ETG Research கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பாரதீய ஜனதாவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி தொடர் வாய்ப்புகள்  மிகவும்  குறைவாகவே உள்ளன.