Friday, April 11, 2014

முத்தத்தை நம்பும் விஷால்

விசாலின் சிவப்பு மனிதன் படத்துக்கு ஏ,யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. முத்தக்காட்சி இருப்பதனால் ஏ சான்றிதழ்   கொடுக்கப்பட்டுள்ளது. ஏ வேண்டாம் யூ தான் வேண்டும் என விஷால் அடம் பிடிக்கிறார். அண்மையில் வெளியாகும் படங்களில் முத்தக்காட்சி இருப்பதாக  பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். இது விளம்பர யுக்திதான் என்பதில் சந்தேகமில்லை. முத்த்க்காட்சியின் போது இயக்குநரும் கமராமெனும் தான் நின்றார்கள் என பேட்டி கொடுத்து உசுப்பேற்றுவார்கள். முத்தக்காட்சிக்கு 10 டேக் 20 டேக் என்று கதைவிடுவார்கள். முத்தம் கொடுக்க வெட்கப்பட்ட கதா நாயகன் உற்சாகம் கொடுத்த கதாநாயகி என பூச்சுற்றுவார்கள். அந்தக்காட்சிக்கு முத்தம் முக்கியம் என்பார்கள் இதை எல்லாம் பொறுமையாகக்கேட்கும் ரசிகர்கள்இரண்டு வாரங்களுக்குள் தகுந்த பதிலளிப்பார்கள்

Thursday, April 10, 2014

உலகக்கிண்ணம் 2014

 அல்ஜீரியா,  
பெல்ஜியம், ரஷ்யா ஆகியவற்றுடன் அல்ஜீரியா, தென்கொரியா ஆகியனவும் குழு எச் இல் தமது திறமையைக் காட்டக் காத்திருக்கின்றன. பெல்ஜியம், ரஷ்யா ஆகியவற்றில் பலம், பலவீனம்  பற்றி கடந்த வாரம் பார்வையிட்டோம். அல்ஜீரியா, தென்கொரியா ஆகியவற்றின் பலம், பலவீனம் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து அல்ஜீ ரியாவும், ஆசியக் கண்டத்திலிருந்து தென்கொரியாவும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளை யாடத் தகுதிபெற்றன

.                        அல்ஜீரியா, 
ருவண்டா, பென்னி, மாலி ஆகிய நாடுகளுடன் குழு ~ஏ|யில் விளையாடிய அல்ஜீரியா ஐந்து வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றது. 15 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. அல்ஜீரியா 13 கோல்கள் அடித்தது. எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன.

குழு ஏஇல் முதலிடம் பிடித்தாலும் பிரேஸிலுக்குச் செல்வதற்காக பிளேஓவ் வரை காத்திருந்தது அல்ஜீரியா. புர்கினா பாஸோவுடனான முதலாவது பிளேஓவ் போட்டியில் 10 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது பிளேஓவ் போட்டி யில் இரண்டு  நாடுகளும் தலா மூன்று கோல்கள் அடித்ததனால்  சமநிலையில் முடிவடைந்தது. இரண்டு பிளேஓவ் போட்டிகளிலும் நான்கு கோல்கள் அடித்த அல்ஜீரியா, உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.  அல்ஜீரியா வுக்கு எதிராக 13 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. இஸ்லாம் சிலிமன் ஐந்து கோல்கள் அடித்துள்ளார்.
வாஹிட் ஹலிகோட்ஸிட் பயிற்சியாள ராக உள்ளார். 61 வயதான இவர் யுகஸ் லோவேயாவின் முன்னாள் வீரராவார். இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக்  கொண்ட மட்ஜிட் பொகெரா அணித்தலைவராக உள்ளார். 25 வயதான இஸ்லாம் சிலிமனி, இன்ரமிலான் வீரர் ரெய்டர் ஆகியோர் அணியின் சிறந்த வீரர்கள். லக்டர்பெ லோமி, ரிட்சர்ட் மக்ப+ரி, முஸ்தபா சீஸி ரோனி ஆகியோர் முன்னாள் வீரர்களா வர்.
1982ஆம் ஆண்டு முதன்முதலில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி யில் விளையாடிய அல்ஜீரியா 1986, 2010ஆம் ஆண்டுகளிலும் விளையாடத் தகுதிபெற்று இப்போது நான்காவது மு யாக உலகக்கிண்ணப் போட்டியில் விளை யாடத் தகுதிபெற்றுள்ளது.
2010ஆம் ஆண்டு அமெரிக்கா இங்கி லாந்து, ஸ்ரோவேனியா ஆகியவற்றுடன் விளையாடிய அல்ஜீரியா, ஒரு போட்டி யைச் சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடம்பிடித்தது. அல்ஜீரியா கோல் அடிக்கவில்லை. எதிராக இரண்டு கோல்கள் அடிக்கப்பட்டன.

தென்கொரியா 

தென்கொரியா
லெபனான், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் குழு பி யில் தகுதிகாண் போட்டியில் விளையாடிய தென்கொரியா, நான்கு வெற்றி, ஒரு தோல்வியுடன் ஒரு போட்டி யைச் சமப்படுத்தியது.
தென் கொரியா 14 கோல்கள் அடித்தது. எதிராக நான்கு கோல் கள் அடிக்கப்பட்டன. 13 புள்ளி களுடன்  முதலிடம் பிடித்தது. லெப னானுக்கு எதிரான போட்டியில் 60 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கட்டார், லெபனான், உஸபெ கிஸ்தான், ஈரான் ஆகியவற் றுடன் கடைசி தகுதிகாண் போட்டி யில் விளையாடிய தென்கொரியா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி, இரண்டு போட்டி களில் தோல்வியடைந்தது. தென் கொரியா 13 கோல்கள் அடித்தது.  எதிராக ஏழு கோல் கள் அடிக்கப்பட்டன. 14 புள்ளி களுடன் இரண்டாவது இடம் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
சூ  யங் பாக் ஆறு கோல்களும் கெங் ஹோலீ ஐந்து கோல்களும் அடித்தனர். தென் கொரியாவுக்கு எதிராக 19 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.
ஹொங்  மைங்வோ பயிற்சியாளராக உள்ளார். 136 சர்வதேசப் போட்டிகள் உட்பட நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது. உலகின் மிகச்சிறந்த 125 வீரர்களில்  இவரையும் ஒருவராக பீலே தெரிவு செய்தார். ஐரோப்பிய கிளப் ரசிகர் களின்  பேராதரவைப் பெற்ற லீ.கங்யங் அணித்தலைவராக உள்ளார். ஐரோப்பிய கழகங்களில் விளை யாடும் கிசுங்யெங், ஜிடெஎங்வோ, கிம் போட குங், பாக்சோயங் ஆகியோர் பலம் மிக்கவர்களாக உள்ளனர். 
1994ஆம் ஆண்டு முதன் முதலில் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய தென்கொரியா இப் போது  ஒன்பதாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. 2002 ஆம் ஆண்டு அரை இறுதிவரை முன்னேறி நான்காவது இடம்பிடித்தது.

ரமணி 
சுடர் ஒளி 30/03/14

Wednesday, April 9, 2014

திசைமாறும் அரசியல் அரங்கம்

இலங்கையில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் ஐ.ம.சு.மு. வெற்றிபெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதற்கு விதிவிலக்காக வடமாகாணம் உள்ளது என்பதனால் பலத்த இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. மேல் மாகாணம், தென் மாகாணம் ஆகியவற்றில் எதிர்பார்த்ததுபோலவே ஆளும் ஐ.ம.சு.மு. வெற்றிபெற்றது. 
பிரசாரம் இல்லாது வெற்றிபெறும் வல்லமை ஐ.ம.சு.முக்கு உண்டு. என்றாலும், தேர்தல் என்றால் பிரசாரம் தேவை என்பதனால் உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்ட ஐ.ம.சு.முவின் வெற்றி எதிர்பார்த்ததைவிட குறைந்தளவிலேயே உள்ளது. இரண்டு மாகாணங்களிலும் 17 ஆசனங்களை ஆளும் கட்சி இழந்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

வாக்குறுதி, தேர்தல் விஞ்ஞாபனம் எதுவுமில்லாது  புலிகளை அழித்த அரசு என்ன மாயையில் இதுவரை வெற்றிபெற்றுவந்த அரசுக்கு இரண்டு மாகாணசபைத் தேர்தல்களும் சற்றுப் பின்னடைவைக் கொடுத்துள்ளன. அபிவிருத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது நாடு. அதிவேக  விரைவு நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், புதிய வீதிகள் என்பன வெற்றியைத் தேடிதரும் என அரசு நம்பியிருந்தது. 
விமானநிலையம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, சர்வதேச விளையாட்டரங்கு, சர்வதேச விமானநிலையம் என அம்பாந்தோட்டை அபிவிருத்தி கண்டுள்ளது. இந்த அபிவிருத்தியின் பின்னணியில் நடந்த தேர்தலில் கடந்த முறையைவிட இம்முறை குறைந்த வாக்கு விகிதத்தையே ஆளும் கட்சி பெற்றுள்ளது. 


ஐ.ம.சு.மு. மேல் மாகாணத்தில் கடந்த தேர்தலின்போது 64.73 சதவீத வாக்குகளைப் பெற்றது. இம்மு 53.35 சதவீத வாக்குகளைப் பெற்றது. தென் மாகாணத்தில் கடந்த தேர்தலின்போது 67.88 சதவீத  பெற்றது. 58.06 சதவீத வாக்குகளை இம்முறை பெற்றது. யுத்தம் முடிந்து மக்கள் சுதந்திரமாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார்கள் என அரசு பரப்புரை செய்துவருகிறது. ஆனால், மேற்கும் தெற்கும் அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளன. 

ஆட்சியைப் பிடிப்பதற்காக சிங்களம் மட்டும் சட்டத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கையில் எடுத்தார். சந்திரனுக்குப் போய் என்றாலும் இலவச அரிசி தருவேன் என ஆட்சிபீடம் ஏறினார் அவரின் மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. கொடுமையான யுத்தத்துக்கு முடிவுகட்டப்போவதற்காக சமாதானப்புறாவாக அரியணை ஏறினார் அவர்களின் மகள் சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க. சந்திரிகாவின் சமாதானப் பாதையில் பயணத்தைத் தொடர புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அசைக்கமுடியாத தலைவராக விளங்குகிறார். 

அரசை வீட்டுக்கு அனுப்ப ரணிலும் அவரது சகபாடிகளும் பல தடவைகள் நாள் குறிப்பிட்டும் அவர்களது எதிர்பார்ப்பு எதுவும் நிறைவேறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐ.ம.சு.மு.க்கும் தலையிடியைக் கொடுக்கும் மூன்றாவது சக்தியாக உயர்ந்த ஜே.வி.பி. பலமான எதிர்ப்புகளைக் காட்டிவிட்டு ஓய்ந்துவிடுகிறது. புலிகளை இல்லாமல் செய்த யுத்த வீரர்கள் என்று சிங்கள மக்களால் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட சரத் பொன்சேகா ஓரிரவில் தனது பெருமைகள் எல்லாவற்யும் இழந்தார். அரசியல் அரங்கில் தன்னை முழுமையாக நிறுத்துவதற்கு மிகுந்த பிரயாசைப்படுகிறார்.

தென், மேல் மாகாணசபைத் தேர்தல்கள் ஐ.தே.கவுக்கும், ஜே.வி.பிக்கும் புதிய தெம்பை அளித்துள்ளன. சரத் பொன்சேகாவும் தன்னை ஓர் அரசியல் தலைவராக அடையாளப்படுத்திக்கொண்டார். கணிசமான வாக்குகளையும் அங்கத்தவர்களையும் பெற்றுள்ளார். மூன்று சிங்கள அரசியல் கட்சிகளும் மூன்று திக்கில் நின்று தேர்தலைச் சந்தித்தால் அது ஆட்சி பீடத்திலுள்ள ஐ.ம.சு.முக்கு இலாபமாக இருக்கும். மூன்று கட்சிகளும் ஒன்றிணையாவிட்டால் அவர்கள் நினைப்பது நிவேறாமல் போய்விடும். 
அரசியல் அரங்கில் பல காட்சிகளைக் கண்டு அனுபவப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஓர் அறிவிப்பை ஜே.வி.பி. வெளியிடுவது சாத்தியமில்லை. புதிய அரசை அமைப்பதற்கு பொதுமக்கள் தயாராக இருந்தாலும், அரசியல் கட்சிகள் இப்போதைக்குத் தயாராக இல்லை.




தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் பார்வை மேல் மாகாணத்தையே நோக்கியது. மேல் மாகாணத்தில் சிங்கள மக்கள் சிறுபான்மையாகிவிட்டனர் என்ற வதந்தியை தேர்தல் பொய்யாக்கியுள்ளது. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஆட்சிசெய்யும் ஐ.ம.சு.முவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதை மேல் மாகாணசபைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது. ஐ.ம.சு.முவில் போட்டியிட்ட தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வாக்குகள் சிதறவில்லை. தமிழ் வாக்காளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸும் தனித்தனியாகக் களம் கண்டன. இரண்டு கட்சிகளிலும் மூன்று வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். அவை இரண்டும் அமைச்சர்களின் கட்சிகள் என்பதனால் அரசுக்கு எதிரான அணியில் அதன் உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது.

கூட்டணி சேராது தனித்துத் தேர்தலைச் சந்தித்த மனோ கணேசனின் கட்சி உறுப்பினர்கள் இருவர் வெற்றிபெற்றனர்.  அரசின் பங்காளியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் தனியாக தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. 
மேல் மாகாண மக்களும், தென் மாகாண மக்களும் தமது மனதில் இருப்பதைத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டனர். எதிர்க்கட்சியில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது தனிப்பட்ட செல்வாக்கை அறியும் களமாகவே தேர்தல்களை நோக்குகின்றனர். இவர்களின் பிரிவினையால் அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படப்போவதில்லை.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் 54 பேர் தோல்வியடைந்துள்ளனர். பிரமில் கொஸ்தா, ரி.ராஜேந்திரன், பி.ராம், கலாநிதி குமரகுருபரன், நௌசர் பௌசி ஆகியோர் தோல்வியடைந்தவர்களில்  முக்கியமானவர்கள். 

வானதி
 சுடர் ஒளி 06/04/14  

Tuesday, April 8, 2014

அமெரிக்கா1994

அமெரிக்காவில் நடைபெற்ற 15ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலியை வீழ்த்திய பிரேஸில் சம்பியனானது. நான்காவது தடவையாக உலகக் கிண்ண சம்பியனாகி புதிய சரித்திரம் படைத்தது பிரேஸில். உலகக் கிண்ண தகுதி காண் போட்டியில் 147 நாடுகள் போட்டியிட்டு 24 நாடுகள் விளையாடுவதற்குத் தகுதி பெற்றன.
இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தன. கிரீஸ், நைஜீரியா, சவூதி அரேபியா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமரூன், மொராக்கோ, நைஜீரியா, ஆசியக் கண்டத்தில் இருந்து கொரியக்குடியரசு (தென்கொரியா), சவூதி அரேபியா, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பெல்ஜியம், பல்கேரியா, ஜேர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, அயர்லாந்துக் குடியரசு, ரொமானியா, ரஷ்யா, சுவீடன், சுவிட்சர்லாந்து, வட மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜென்ரீனா, பொலிவியா, பிரேஸில், கொலம்பியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றன.

24 நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 16 நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு "ஏ' யிலிருந்து ரொமானியா, சுவீடன், அமெரிக்கா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு "பீ' யில் இருந்து பிரேஸில், சுவீடன் ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. கமரூனுக்கு எதிரான போட்டியில் 6 1 என்ற கோல் கணக்கில் வென்ற ரஷ்யா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. குழு "சீ' யில் இருந்து ஜேர்மனி, ஸ்பெயின் ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றன.
குழு "டி' யில் விளையாடிய நைஜீரியா, பல்கேரியா, ஆர்ஜென்ரீனா ஆகியன தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தலா ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. குழு "ஈ'யில் விளையாடிய மெக்ஸிகோ, இத்தாலி, அயர்லாந்து குடியரசு, நோர்வே ஆகிய நாடுகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியை சமப்படுத்தி, தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் மெக்ஸிகோ, இத்தாலி, அயர்லாந்து குடியரசு ஆகியன இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.

குழு "எஃப்'பில் விளையாடிய நெதர்லாந்து, சவூதி அரேபியா, பெல்ஜியம் ஆகிய நாடுகள் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தலா ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன், அயலர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நெதர்லாந்து, அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி ஆகியன காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. மெக்ஸிகோ, பல்கேரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்ட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பல்கேரியா காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. காலிறுதிப் போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்திய இத்தாலி, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெல்ஜியம் ஆகியன அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. ரொமானியா, சுவீடன் ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டி 22 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததனால் பெனால்ட்டி மூலம் 54 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றது.

பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, சுவீடனுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சுவீடன், பல்கேரியா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியில் 40 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் மூன்றாம் இடத்தையும் தோல்வி அடைந்த பல்கேரியா நான்காம் இடத்தையும் பிடித்தன.
பிரேஸில், இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு நாடுகளும் கோல் அடிக்கவில்லை. மேலதிக நேரத்திலும் கோல் அடிக்காமையினால் பெனால்டி மூலம் 32 என்ற கோல் கணக்கில் பிரேஸில் சம்பியனானது. இத்தாலியின் நம்பிக்கை நட்சத்திரமான ரொபேட்டோ பக்கியோ பெனால்டியில் கோல் அடிக்காது ரசிகர்களை ஏமாற்றினார்.
சுவீடன் 15 கோல்களும், பிரேஸில் 11 கோல்களும் ஸ்பெயின், ரொமேனியா, பல்கேரியா ஆகியன தலா 10 கோல்களும் அடித்தன. தலா ஆறு கோல்கள் அடித்த எலெக்சõலங்கோ (ரஷ்யா), ஹிரிஸ்கோஸ் ரொசிகோ (பல்கேரியா), கெனத் அன்டர்ஸன் (சுவீடன்), ரொமாரியோ (பிரேஸில்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எலெக் சாலங்கோ, ஹரிஸ்கோஸ் ரொசிகோ ஆகிய இருவருக்கும் கோல்டன் ஷý வழங்கப்பட்டது. பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் ரஷ்ய வீரரான எலெக் சாலங்கோ ஐந்து கோல்கள் அடித்தார்.

கோல்டன் பந்துக்கு ரொமாரியோ (பிரேஸில்), ரொபேடோ பகியோ (இத்தாலி), ஹிஸ்ரோ ஸ்ரொகியோ (பல்கேரியா) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ரொமாரியோவுக்கு கோல்டன் பந்து வழங்கப்பட்டது. சிறந்த கோல் கீப்பருக்கான விருது பெல்ஜிய வீரரான மைக்கல் பிரீடொமெனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக நெதர்லாந்தைச் சேர்ந்த மார்க், தெரிவு செய்யப்பட்டார். முறை தவறாது விளையாடிய விருது பிரேஸில் நாட்டுக்கு வழங்கப்பட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்த அணியாக பிரேஸில் தெரிவானது. 52 போட்டிகளில் 141 கோல்கள் அடிக்கப்பட்டன. 3887538 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். சராசரியாக ஒரு போட்டியை 68,991 ரசிகர்கள் பார்வையிட்டனர். உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் இது சாதனையாகும்.
மத்தியஸ்தர்கள் கலர் உடை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விளையாடும் இரு அணிகளின் நிறத்தை ஒத்த ஆடை அணியக் கூடாது. வீரர்களின் பெயர் உடையில் பொறிக்கப்பட்டது.

அமெரிக்கா சுவிட்சர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் முதன் முதலில் உள்ளரங்கில் நடைபெற்றன.
அமெரிக்கா, கொலம்பியா ஆகியவற்றுக்கிடையிலான போட்டியின் போது பின்கள வீரரான கொலம்பிய வீரரான அன்ரீஸ் எஸ்போர் பந்தைத் தடுக்க முனைந்த போது அது கோலாகியது. இதனால் 21 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்று இண்டாவது சுற்றுக்குத் தெரிவானது. இப்போட்டி சமநிலையில் முடிந்திருந்தால் கொலம்பியா இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும். நாடு திரும்பிய அன்ரீஸ் எஸ்போரை உதைபந்தாட்ட ரசிகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்தார்.
தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் ஜேர்மனிய வீரரான ஸ் ரீபன் எப்பன்பெர்க் ரசிகர்களை எச்சரிக்கும் வகையில் விரல் காட்டியதால் அடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு அனுமதி வழங்காத பயிற்சியாளர் அவரை நாட்டுக்கு அனுப்பி விட்டார். கமரூன் வீரரான ரொஜர் மில்லர் ரஷ்யாவுக்கு எதிரான போட்டியில் 42ஆவது வயதில் கோல் அடித்து தனது சாதனையை முறியடித்தார்.
ஆர்ஜென்ரீன வீரர் மரடோனா போதை வஸ்து பாவித்தமையினால் ஆர்ஜென்ரீன பயிற்சியாளர் அவரை விளையாட அனுமதிக்கவில்லை.

ரமணி 
சுடர் ஒளி 06/04/14




Monday, April 7, 2014

பா.ஜ.க கூட்டணிக்குள் சலசலப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழகத்தின் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் தலைவர்களும் நட்சத்திரப் பேச்சாளர்களும் தமது கட்சி வேட்பாளர்களுக்கான பிரசாரத்தை முழுமூச்சுடன் ஆரம்பித்துள்ளனர். மத்திய அரசில் இடம்பிடிக்கவேண்டும் என்ற நோக்கமே பிரசாரத்தில் முதலிடம் பிடித்துள்ளது. தமது கட்சி வெற்றிபெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக புதிய உத்திகளுடனான சூறாவளிப் பிரசாரம் களைகட்டியுள்ளது. 
ஜெயலலிதாவின் பிரசாரம் அதிஉச்சத்தில் உள்ளது. ஹெலியில் பறந்து பறந்து பிரசாரம் செய்கிறார். ஜெயலலிதாவின் காருக்கு கும்பிடு போட்ட அமைச்சர்கள் ஹெலியைக் கும்பிடுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தையும், காங்கிரஸையும் மிக மோசமாகத் தாக்கிப் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா. மோடியை விமர்சனம் செய்வதைத் தவிர்த்துள்ளார். தனது அரசியல் எதிரியான அழகிரியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஸ்டாலினையும்  கருணாநிதியையும் எதிர்த்து அழகிரி அறிக்கை விடுவதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற விதிப்படி அழகிரியை நண்பனாக்கிக்கொண்டார் ஜெயலலிதா. 
இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதாவின் ~நாப்பதும் நமக்கே| என்ற கோஷம் சற்று அடங்கியுள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ ஆகிய தமிழகத் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்யும் ஜெயலலிதா, மோடியை எதிர்ப்பதற்குப் பின்னடிக்கிறார். நாப்பதும் நமக்கே என்ற ஜெயலலிதாவின் பேராசையில் இடிவிழுந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடையும் தொகுதிகள் பற்றிய விவரத்தை உளவுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளது. 15 முதல் 20 தொகுதிகளில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும் என்று அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனித்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வெற்றிபெறுவது மிகவும் சிரமமானது. 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குவங்கியின் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்று ஜெயலலிதா நம்புகிறார். மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிக்குத்தான் தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பது வழமை. ஆகையால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வாக்கு விகிதத்தில் சரிவு ஏற்படும் நிலை உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடுகின்றன. கட்சிகளின் வாக்கு வங்கியைவிட வேட்பாளர்களின் செல்வாக்குத்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப்போகிறது. 
அறுதிப் பெரும்பான்மை இல்லாது ஆட்சி அமைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால், மத்திய அரசுக்கு ஆதரவு வழங்க ஜெயலலிதாவும் கருணாநிதியும் தயாராக உள்ளார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கருணாநிதிக்குத்தான் அதிக சந்தர்ப்பம் கிடைக்கும். 10 வருடங்களுக்கு முன்னர் தேநீர் விருந்தின் மூலம் பாரதீய ஜனதா அரசை குப்புற வீழ்த்திய பெருமைக்குரியவர் ஜெயலலிதா. அப்போது பாரதிய ஜனதாக் கட்சிக்கு முட்டு கொடுத்தவர் கருணாநிதி. அந்தப் பாசம் இப்போது இல்லை. அன்ய பாரதீய ஜனதாக்கட்சி வேறு. இன்ய பாரதீய ஜனதாக்கட்சி வேறு என்று தனது காங்கிரஸ் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். 

உடல்நிலை காரணமாக வெளியூர்ப் பயணங்களை கருணாநிதி தவிர்த்துள்ளார். எனினும், சவாலாக தொகுதிகளில் பிரசாரம் செய்ய் உள்ளார் . திராவிட முன்னேற்றக் கழகப் பிரசாரம் ஸ்டாலினின் தலையில் வீழ்ந்துள்ளது. கருணாநிதியின் கையில் இருந்த கடிவாளம் ஸ்டாலினின் கைகளுக்குச் சென்றுள்ளது. வேட்பாளர் தெரிவு, கூட்டணிப் பேச்சு அனைத்திலும் ஸ்டாலினின் விருப்பமே முடிவானது. 
தமிழகம் எதிர்நோக்கியுள்ள சட்டமன்றத் தேர்தலாகவே நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்குகிறார் ஸ்டாலின். கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றிபெறவேண்டும் என்ற துடிப்புடன் பிரசாரத்தை மேற்கொள்கிறார். தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையும், ஜெயலலிதாவின் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பேசிவருகிறார். ஸ்டாலின், மத்திய அரசில் தாம் இருக்கும்போது தமிழகம் கண்ட வளர்ச்சியை பட்டியலிட்டு விளங்கப்படுத்தி வாக்குக் கேட்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன்தான் அடுத்த மத்திய ஆட்சி அமையும் என்று தெளிவுபடுத்துகிறார்.

அரசியல் ரீதியாக ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவைத் தவிர வேறு எதிரிகள் இல்லை. சந்தர்ப்பவசத்தால் அவரது குடும்பத்திலிருந்து ஓர் அரசியல் எதிரி உருவாகிவிட்டார். ஜெயலலிதாவைப் போலவே ஸ்டாலினையும் தனது எதிரியாக நினைக்கிறார் அழகிரி. அதிரடி அரசியலின் மூலம் எதிரிகளைக் கதிகலங்கவைத்த அழகிரியை கதிகலங்க வைத்துள்ளார் ஸ்டாலின். கருணாநிதியைப் பின்னுக்குத் தள்ளிய ஸ்டாலின் தோல்வியடையவேண்டும் என்று அழகிரி விரும்புகிறார். 
ஸ்டாலினின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தால் அடுத்த தலைவராகத் தான் பரிணமிக்கலாம் என்று அழகிரி கனவு காண்கிறார். கழகத்தினுள் ஸ்டாலினின் கை ஓங்கியுள்ளதால், அழகிரியின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக ஸ்டாலினிடம் சரணடைகிறார்கள். ஸ்டாலினின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தால் அடுத்த நிமிடம் அவர்கள் தனது பக்கம் வந்துவிடுவார்கள் என நம்புகிறார் அழகிரி. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது நட்சத்திரப் பட்டாளங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தன. நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின்தான் தனி நட்சத்திரமாக ஜொலிக்கிறார். காங்கிரஸ் அரசின் தவறுகளுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லாது சுதந்திரமாக தேர்தல் பிரசாரத்தை நடத்துகிறார் ஸ்டாலின். 

பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாகப் பிரசாரம் செய்கின்றன. தனி  ஆளாக விஜயகாந்த் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார். வைகோ வீட்டிற்குச் சென்ற விஜயகாந்த் தமது பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். தலைவர்கள் இருவரும் ஒன்றானதால் தொண்டர்களும் வெற்றிக்குப் பாடுபடுவார்கள். வைகோவின் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் விஜயகாந்தின் தொண்டர்களும் வைகோவின் தொண்டர்களும் இணைந்து செயற்படும் நிலை தோன்றியுள்ளது. 
மிகுந்த பிரயாசையின் மத்தியில் பாரதீய ஜனதாக் கூட்டணியில் இடம்பிடிக்க பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை. விஜயகாந்த் இருக்கும் கூட்டணியில் சேர்வதில்லை என்ற முடிவில் இருந்த தாஸின் மனதை மாற்றியவர் மகன் அன்புமணி. குந்தளவு வாக்கு வங்கி உள்ள பாட்டாளி மக்கள் கட்சியால் தனித்துத் தேர்தலில் போட்டியிட்டு வெல்லமுடியாது என்பதை உணர்ந்த அன்புமணி, தகப்பனின் மனதைக் கரைத்து கூட்டணிக்குச் சம்மதிக்க வைத்தார்.
எதிர்பார்த்த தொகுதிகள் கை விட்டுப்போனதால் பிரசாரத்துக்குப் போகாமல் ஒதுங்கியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ராமதாஸ் பிரசாரத்துக்குச் சென்றால்தான் வெற்றிபெற முடியும்  என்பதை பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். கூட்டணிக்குள் பலவீனமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி ராமதாஸின் பிரசாரத்திலேதான் உள்ளது. 

பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எச். ராஜா ஆகியோர் தமது தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்கின்றனர். மோடி ராஜ் தாத் சிங், வெங்கையா நாயுடு போன்ற பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் தமது தொகுதியில் பிரசாரம் செய்யவேண்டும் என இவர்கள் விரும்புகிறார்கள். கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி பிரசாரம் செய்யவேண்டும் என தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். 
பாரதீய ஜனதாக் கட்சியின்  தலைவர்கள் தமது தொகுதிகளில் பிரசாரம் செய்யவேண்டும் என வைகோ, விஜயகாந்த், அன்புமணி ஆகியோரும் விரும்புகின்றனர். தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காத தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்யாது ஒதுங்கி இருக்கின்றனர். இடதுசாரிகள் தாம் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் கடுமையான பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
கட்சித் தலைவர்களின் சூறாவளிப் பிரசாரங்களை பொறுமையாகக் கேட்டும் மக்கள் தமது நாள் வரும்வரை அமைதியாக இருக்கிறார்கள். 

வர்மா 
சுடர் ஒளி 06/04/14

Saturday, April 5, 2014

'எச்' பிரிவின் சிறந்த வீரர்கள்.

பெல்ஜியம், ரஷ்யா, தென் கொரியா, அல்ஜீரியா ஆகியன குழு 'எச்' இல் உள்ளன. ஐரோப்பாக் கண்டத்திலிருந்து பெல்ஜியம், ரஷ்யா  ஆகியன தகுதிபெற்றன. தென்கொரியா, ஆசியாவிலிருந்தும், அல்ஜிரியா, ஆபிரிக்கா கண்டத்திலிருந்தும் உலகக்கிண்ணப் போட்டி யில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இந்த நான்கு நாடுகளின் வீரர்களை ஒன்றிணைத்த அணியில் பெல்ஜியம் வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
கோல் கீப்பர், மூன்று பின்கள வீரர்கள் நான்கு  மத்தியகள வீரர்கள், ஒரு முன்கள வீரர் என  ஒன்பது வீரர்கள் பெல்ஜியத்தைச் சேர்ந்த வர்கள். தென் கொரியா, அல்ஜிரியா ஆகிய நாடு களிலிருந்து தலா ஒரு வீரர் இடம் பிடித்துள்ளனர். 
திலக் கொடேரிஸ் கோல் கீப்பர் (பெல்ஜியம்), பின்கள வீரர்கள் அலெக்சாண்டர் அன்புகோவ் (ரஷ்யா), வின்சன் கொம்பனி (பெல்ஜியம்), ஜோன் வெட்டோங்கம் (ரஷ்யா), தோமஸ் வெமலின் (பெல்ஜியம்), ஹெல்மின் (தென்கொரியா), அக்ஸெல் விரெல் (பெல்ஜியம்), மவுசாடெம்பலி (பெல்ஜியம்), மரூனாபெலனி (பெல்ஜியம்), எடின்ஹசாட் (பெல்ஜியம்), முன்கள வீரர் கிறிஸ்ரியன் பென்ரச் (பெல்ஜியம்).
மேலதிக வீரர்கள் இஸ்கார் அகின் பீவ் (ரஷ்யா), ரொபி அல்டாவெரிடல் (பெல்ஜியம்), கெவின்டி பயான் (பெல்ஜியம்), ரோமூல் லுகலு (பெல்ஜியம்).  பெல்ஜியத்துக்கு எதிராக கோல் அடிப்பது மிகவும் சிரமமானதாக இருக்கும்.
ரஷ்யாவும், தென்கொரியாவும் பெல்ஜியத்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கலாம். தென்கொரியாவை ஒரு    உலகக் கிண்ணப்போட்டியில் சந்தித்த பெல்ஜியம் வெற்றிபெற்றது. ரஷ்யாவும், பெல்ஜியமும் நான்கு போட்டிகளில் மோதின.  இரண்டு போட்டிகளில் பெல்ஜியம் வெற்றிபெற்றது. இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிந்தது. அல்ஜீரியா எந்த நாட்டையும் சந்திக்கவில்லை.
ரமணி 
சுடர் ஒளி 30/03/14

Friday, April 4, 2014

இத்தாலி 1990

இத்தாலியில் நடைபெற்ற 14 ஆவது உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி யில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்று மூன்றா வது மு உலகக் கிண்ணத்தைக் கைப் பற்றியது. மேற்கு ஜேர்மனி மூன்றாவது தடவையாக தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடியது. 1982 ஆம் ஆண்டு இத்தாலி யிடமும் 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனா விடமும் தோல்வியடைந்தது. 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடம் தோல்விய டைந்த மேற்கு ஜேர்மனி 1990 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக 116 நாடுகள் தகுதிகாண் போட்டிகளில் விளையாடின. அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. டென்மார்க், பிரான்ஸ், போர்த்துக் கல் ஆகியன உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை. கொஸ்ரரிகா, அயர்லாந்து குடியரசு, அமெரிக்கா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற 24 நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப் பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற நாடுகள் இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமருன், எகிப்து, ஆசியக் கண்டத்தில் இருந்து கொரியக் குடியரசு (தென் கொரியா), ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், செக்கஸ்லோவியா, இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, அயர்லாந்து குடியரசு, ரொமானியா, ஸ்கொட் லாந்து, சோவியத் யூனியன் (ரஷ்யா), ஸ்பெய்ன், சுவீடன், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிகா, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
குழு ஏ| யிலிருந்து இத்தாலி, செக்கஸ்லோ வாகிய ஆகிய நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செக்கஸ்லோவாகியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. குழு ~பீ| யிலிருந்து கமரூன், ரொமானியா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. ரொமானியா, ஆர்ஜென்ரீனா ஆகியவற் வீழ்த்திய கமரூனை 4 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சோவியத் ய+னியன் அதிர்ச்சியளித்தது. ரொமானியா ஆர்ஜென்ரீனா ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு சீ| யில் இருந்து பிரேஸில், கொஸ்ரரிகா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு டி| யில் இருந்து மேற்கு ஜேர்மனி, யூகோஸ்லாவியா, கொலம்பியா ஆகியனவும் குழு ஈ|யிலிருந்து ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே ஆகியனவும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு எஃப் பில் இங்கிலாந்து, அயர்லாந்து குடியரசு, நெதர்லாந்து, எகிப்து ஆகியன போட்டியிட்டன. எகிப்துடனான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஏனைய இரண்டு போட்டிகளையும் சமநிலையில் முடித்ததில் இரண்டாவது சுற்றுக்குத் தெரி வானது. அயர்லாந்து குடியரசு, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தலா மூன்று போட்டிகளில் விளையாடின. மூன்று போட்டிகளும் சமநிலை யில் முடிவடைந்தன. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நிலையில் இரு நாடுகளும் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகின.
இரண்டாவது சுற்றில் விளையாடிய ய+கோஸ்லாவியா பெனால்டி மூலம் 2 3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வி அடைந்தது. அயர்லாந்துக் குடியரசுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. செக்கஸ்லோவி யாவுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது. கமரூன், இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடை யேயான போட்டி 2 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மேலதிக நேரத்தில் இங்கிலாந்து ஒரு கோல் அடித்தத னால் 3 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இத்தாலி, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக் கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெனால்டி மூலம் 43 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதியில் 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்டி மூலம் 4 3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இத்தாலி, இங்கிலாந்து ஆகியவற்றுக் கிடையே நடைபெற்ற போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி மூன்றாம் இடத்தையும் தோல்வி அடைந்த இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன.
மேற்கு ஜேர்மன், ஆர்ஜென்ரீனா ஆகிய வற்றுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டி யில் 10 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கோல் அடிக்காது தோல்வி அடைந்த முதலாவது நாடு ஆர்ஜென் ரீனா.
ஜேர்மனி 15 கோல்களையும், இத்தாலி, செக்கஸ்லோவாகிய ஆகியன தலா 10 கோல் களையும் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த ஸ்கிலாஸ்கி (இத்தாலி), ஐந்து கோல்கள் அடித்த ஸ்குரி (செக்கஸ்லோவாகியா), நான்கு கோல் கள் அடித்த மில்லா கமரூன் ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூ வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஸ்கிலாஸ்கிக்கு கோல்ட்ஷீ வழங்கப்பட்டது.
ஸ்கிலாஸ்கி (இத்தாலி), மத்தியூஸ் (ஜேர்மனி), மரடோனா (ஆர்ஜென்ரீனா) ஆகியோர் கோல்டன் பந்துக்காக பரிந்துரைக் கப்பட்டனர். ஸ்கிலாஸ்கிக்கு கோல்டன் பந்து வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக ரொபேட் புரொஸ்ங்கி தெரிவானார். மு தவறாத அணியாக இங்கிலாந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. 52 போட்டிகளில் 116 கோல்கள் அடிக்கப்பட்டன. 2516348 பேர் மைதானங்களில் போட்டி களைப் பார்வையிட்டனர்.
இத்தாலி, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடு களுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆட்டம் இடை நிறுத்தப்பட்ட எட்டு நிமிடத்தைக் கணக்கில் சேர்க்காது மத்தியஸ்தர் ஆட்டத்தை நிறுத்தி விட்டார்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதன் முதலில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரர் ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த பெற்மன்ஸின், நைஜீரியா, அங்கோலா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற தகுதிகாண் போட்டியின் போது 23 வயதான நைஜீரிய வீரர் சாமுவேல் எக்காவாஜி மாரடைப்பால் மரணமானார்.
20 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் வயது கூடிய வீரர்கள் விளையாட அனுமதித்தபடியால் மெக்ஸிக்கோவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டாவது முயாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளை யாடிய நாடு என்ற பெருமையைப் பெற்றது. அயர்லாந்துக் குடியரசு கடைசியாக விளை யாடிய எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற வில்லை. இதேவேளை இரண்டு கோல்கள் அடித்தது. அக்கோல்களும் பெனால்டி மூலம் அடிக்கப்பட்டன.
1974 ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனி உலகக் கிண்ணத்தை வென்ற போது அணித் தலைவராக இருந்த பிரான்ஸ் பெக்கன் பௌச்சர் 1990 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் பயிற்சியாளராவார்.
கமரூனைச் சேர்ந்த ரொஜர்மில்லா (38 வயது 20 நாட்கள்) கூடிய வயதில் கோல் அடித்த வீரராவார். இரண்டாவது சுற்றில் கொலம் பியாவுக்கு எதிரான போட்டியில் இச்சாதனை யைச் செய்தார். நான்கு வருடங்களின் பின்னர் இச்சாதனையை இவரே முறியடித்தார்.

ரமணி 
சுடர் ஒளி 30/03/14

Thursday, April 3, 2014

சூரன் ரவிவர்மாவின் சினிமாக் கட்டுரைகள்

நண்பர் சூரன் ரவிவர்மா அவர்கள் ஒரு பத்திரிகையாளார் என்பதை அறிவேன்.ஆயினும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திச் செயற்படாததனால் அவர் பற்றிய முலு விவரங்களையும் நான் அறியேன்.
கடந்த நூற்றாண்டிலே வீரகேசரி நாளிதழ் ஞாயிறு பதிப்புகளின் இணை ஆசிரியராகச் சிறிது காலம் சக ஆசிரியர் .சிவநேசச்செல்வனுடன் இணைந்து பணி புரிந்த போது ரவிவர்மா அவர்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தாரோ நான் அறிந்திருக்கவில்லை. 
அன்றைய காலகட்டத்தில் நான் 'வீரகேசரி' அலுவலகத்திற்கு ஒரு கட்டுரையாளராக அன்றைய ஞயிறு பதிப்பின் ஆசிரியர் தேவராஜ் அவர்களை சந்திக்கச் சென்ற பொழுது, ரவிவர்மா அவர்களை தற்செயலாக சந்தித்துப் பேச நேர்ந்தது.அப்பொழுது அவர் மெட்ரோ என்ற நாளிதழின் ஆசிரியராக இருந்தார் என்று நினைக்கிறேன்.
பின்னர் ஃபேஷ் புக் ஊடாக அதாவது முகநூல் என்ற இணயதளம் மூலம் நட்புக் கொண்டேன். பின்னர் தெரிந்தது அவர் மறைந்த எழுத்தாளரும், தினகரன் நாள்தழின் ஆசிரியராகவிருந்த அமரர் ராஜ ஸ்ரீ காந்தனின் உறவினர் என்பதை.
திரு.ரவிவர்மா அவர்கள் அரசியல் திறனாய்வாளராகவும் வெளிநாட்டுச் செய்திப் பகுப்பாளராகவும் மெட்ரோ இதழில் எழுதுவதை சில வேளைகளில் நான் பார்த்தும் வாசித்துமிருக்கிறேன். 
இப்படியிருக்கையில் ஒருநாள் கொழும்புத் தமிழ்ச் சங்கக் கூட்டமொன்றில் திரு.ரவிவர்மாவை சந்தித்த பொழுது தனது நூல் ஒன்று அண்மையில் வெளியிடப்பட இருக்கிறது என்றும், அந்த வெளியீட்டு விழாவிலே கலந்து கொள்ள வேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் உடன்பட்டேன். 
திரு.ரவிவர்மா அவர்கள் ஒரு கற்றை பத்திரிகைகளைக் கொண்டு வந்து தந்து அவற்றைப் படித்து அபிப்பிராயம் சொல்லும் படி கேட்டுக்கொண்டார். இக்கட்டுரைகளை அவர் தனது வழக்கமான ரவிவர்மா என்ற பெயரில் எழுதாமல் புனை பெயரில் எழுதியிருப்பதை அவதானித்தேன். அந்தப் புனை பெயர் "ரமணி" என்றிருக்கக் கண்டேன்.
பல்துறை சார்ந்த கலை இலக்கியங்களில் நாட்டமுடையவன் என்ற முறையில் நான் திரைப்படக் கலை பற்றியும் ஈடுபாடுடையவனாக இருந்து வருகிறேன். திரைப்படங்களைப் பற்றி நான் 1960 முதல் வானொலியிலும், ஏடுகளிலும் நான் ஒலிபரப்பியும் எழுதியும் வருகிறேன். 
உயர்தரக் கலைப்படங்கள் தொடர்பான அக்கறையுள்ளவனுக்கு "ரமணி" என்கின்ற ரவிவர்மா அவர்கள் என்னைப் பலவந்தமாக இத்தகைய கட்டுரைகளைப் பற்றியும் படிக்கும் படி பணித்திருக்கின்றார்.
இங்கு நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் ரமணி அதாவது ரவிவர்மா அவர்கள் எனக்குப் புதியதோர் எழுத்தாளராவார். 
சூரன் ரவிவர்மா, ரமணி தமது சினிமாக் கட்டுரைகளைத் தொகுத்து சீர் செய்து தனிப் புத்தகமாக வெளியிட வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் நிறைய நாம் தெரிந்து வைத்திருக்காத பல செய்திகளையும், அபிப்பிராயங்களையும், பகுப்பாய்வுகளையும் அவர் நிறையச் செய்துள்ளார்.
ரமணிபோல, பாலசங்குப்பிப் பிள்ளை, ஷண், மானா மக்கீன், யசீந்திரா போன்றவர்களும் தமிழ் சினிமா பற்றி நிறையத் தகவல்களைப் பத்திரிக்கை வாயிலாகத் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த இடத்தில் இலங்கைத் தமிழ் சினிமா தொடர்பாக ஆதாரபூர்வமான முறையில் நூல்களையும்,கட்டுரைகளையும் எழுதிவரும் தம்பி ஐயா தேவதாஸ் வரிசையில் ரவிவர்மாவின் முயற்சியும் பாராட்டுக்குரியது.

கே.எஸ்.சிவகுமாரன். 
தினகரன் வாரமஞ்சரி 29/09/2013