Showing posts with label ஐபிஎல்18. Show all posts
Showing posts with label ஐபிஎல்18. Show all posts

Wednesday, March 27, 2019

நிதானமாக விளையாடி இரண்டாவது வெற்றியைப் பெற்றது சென்னை


டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற  ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் ஆறு விக்கெற் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. பெங்களூருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற  சென்னையும், மும்பையுடனான முதல் போட்டியில் வெற்றி பெற்ற டெல்லியும் தமது இரண்டாவது வெற்றிக்காகப் போராடின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.

 பிரித்விஷா, ஷிகர் தவான் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். 4.1 ஓவர் வரை விளையாடிய இவர்கள் இருவரும் 36 ஓட்டங்கள் எடுத்தனர். தீபக் சகாரின் பந்தை வட்சனிடம் பிடிகொடுத்த பிரித்விஷா 24 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி43 ஓட்டங்கள் எடுத்தது.இம்ரான் தாகீரின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ஓட்டங்கள் எடுத்தார்.தவானுடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் தனது அதிரடி மூலம் வெற்றியைத் தேடிக்கொடுத்த ரிஷாப் பண்டின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த ஜோடி 41 ஓட்டங்கள் எடுத்தபோது பிராவோவால் பிரிக்கப்பட்டது.

பிராவோவின் பந்தை ரிஷாப்பண்ட் தூக்கி அடித்தபோது நீண்ட தூரம் ஓடி அற்புதமாக அதனை சர்துல் தாகூர் பிடித்தார். 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த பண்ட்,இரண்டு சிக்ஸர்கள்,ஒரு பவுண்டரி அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்துக் களம் இறங்கிய இங்ரம் இரண்டு ஓட்டங்களும் கீமோ  பவுல் ஓட்டமெதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.  டெல்லியின் விக்கெற்கள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும் தவான் பொறுப்புடன் ஆடி 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்த டெல்லி 147 ஓட்டங்கள் எடுத்தது.
 33 ஓட்டங்களைக் கொடுத்த பிராவோ மூன்று விக்கெற்களை வீழ்த்தினார்.திபக் சாகர் ,ஜடேஜா,இம்ரான் தாகிர் ஆகிடோர் தலா இரு விக்கெற்றை வீழ்த்தினர்.

  வட்சன், ராயுடு ஆகியோர் சென்னை அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். ஐந்து ஓட்டங்களில் ராயுடு ஆட்டமிழந்தார்.  வட்சன் ரெய்னா ஜோடி அச்சுறுத்தியது. இஷாந்த்,ரபாடா,அமித் மிஸ்ரா ஆகியோரின் பந்துகளை இருவரும் விரட்டி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த ஜோடி 52  ஓட்டங்கள் எடுத்தபோது மிஸ்ராவின் பந்தை ரிஷாப் பண்டிடம் பிடி கொடுத்து வட்சன் ஆட்டமிழந்தார். 26 பந்துகளைச் சந்தித்த வட்சன் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்ஸார் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்தார்.
ரெய்னாவுடன் கேதார் ஜாதவ் இணைந்தார். இருவரும் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ரெய்னா, கேதார் ஜோடி 25 ஓட்டங்கள் எடுத்தபோது ரெய்னா ஆட்டமிழந்தார். 16 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரெய்னா, 4 பவுண்டரிகள்  ஒரு சிக்ஸர் அடங்கலாக 30 ஓட்டங்கள் அடித்தார்.

ரெய்னா வெளியேற டோனி உள்ளே சென்றார். விரைவாக வெற்றியைக் கொண்டாடலாம் என எதிர்பார்த்த ரசிகர்களை டோனியும் கேதாரும் சோதித்தனர். ஏழு ஓவர்களில் மெதுவாகத் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் மட்டுமே இருவரும் அடித்தனர். சிக்ஸர், பவுண்டரியை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 14 ஆவது ஓவரில் கேதார் அடித்த பந்தை தவான் பிடிக்கவில்லை. இந்தப்போட்டியில்  தவான் தவறவிட்ட இரண்டாவது கச் இதுவாகும்.

17  ஆவது ஒவரில் ரபாடா வீசிய முதல் ஐந்து பந்துகளிலும்  டோனியால் ஓட்டம் எதுவும் எடுக்கமுடியவில்லை. கடசி பந்தில் ஒரு ஓட்டம் அடித்தா டோனி.

கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றி பெறுவதற்கு 11 ஓட்டங்கள்  தேவை. அமித் மிஸ்ரா வீசிய 19 ஆவது ஒவரில் இரண்டாவ்து,மூன்றாவது, நான்காவ்து பந்துகளில் தலா ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது. கடசிப் பந்தில் டோனி சிக்ஸர் அடித்து பதற்றத்தைக் குறைத்தார்.

ஐந்து ரபாடா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை அடித்த கேதார் ரிஷாப் பண்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். நாலாவது பந்தை பிராவோ பவுண்டரிக்கு அனுப்ப 150 ஓட்டங்கள் எடுத்த சென்னை ஆறு விக்கெற்களால்  வெற்றி பெற்றது. வட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

கடைசி ஓவர் வரை இழுத்தடித்து, பார்வையாளர்களை பதற்றப்படுத்தி  வெற்றி பெறுவது  சென்னையின் எழுதப்படாதவிதி. ஐபிஎல் தொடரில் இதுவரை 44  போட்டிகளை  விரட்டி வெற்றி பெற்றது சென்னை. அவற்றில் 24 போட்டிகளில் 20 ஆவது ஓவரில் வெற்றி பெற்றது. டெல்லியில் அமித் மிஸ்ரா 50 ஆவது விக்கெற்றைக் கைப்பற்றினார். ஐபிஎல் வரலாற்றில் ஒருமைதானத்தில் 50 விக்கெற்களை வீழ்த்திய முதல்வீரர் அமித் மிஸ்ரா.

Wednesday, May 30, 2018

ஐபிஎல்லில் விருதுகளை அள்ளிய ரிஷாப் பந்த்

   அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்பிள் கேப் -
பஞ்சாப் அணி வீரரான ஆந்தரே டை 14 ஆட்டங்களில் 24 விக்கெட்களை வீழ்த்தினார். சிறந்த பந்து வீச்சு 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள். ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இதற்கு முன் வென்றோர்
2008 - சோஹைல் தன்வீர் (ராஜஸ்தான்) - 22 விக்கெட்கள்
2009 - ஆர்பி சிங் (டெக்கான்) - 23
2010 - பிரக்யான் ஓஜா (டெக்கான்) - 23 விக்கெட்கள்
2011 - லசித் மலிங்கா (மும்பை) - 28  விக்கெட்கள்
2012 - மார்னே மார்க்கல் (டெல்லி) - 25 விக்கெட்கள்
 2013 - டாய்னே பிராவோ (சிஎஸ்கே) - 32 விக்கெட்கள்
2014 - மோகித் சர்மா (சிஎஸ்கே) - 23 விக்கெட்கள்
 2015 - டாய்னே பிராவோ (சிஎஸ்கே) - 26 விக்கெட்கள்
2016 - புவனேஸ்வர் குமார் (ஹைதராபாத்) - 23 விக்கெட்கள்
2017 - புவனேஸ்வர் குமார் (ஹைதராபாத்) - 26 விக்கெட்கள்

  அதிக சிக்சர் அடித்த வீரருக்கான -
 ரிஷப் பந்த் (டெல்லி)   14 ஆட்டங்களில் 37 சிக்சர்கள் அடித்துள்ளார். ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
  வோடபோன் அதிவேக அரைசதம் விருது
பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், டெல்லிக்கு எதிராக 14 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 51 ஓட்டங்கள் அடித்தார். அவருக்கு ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. 6
  டாடா நெக்சான் சூப்பர் ஸ்டிரைக்கர் விருது -
சுனில் நரேன் (கொல்கத்தா) இந்த சீசனில் மிகச் சிறந்த ஸ்டிரைக்கிங் ரேட் உள்ள வீரருக்கு கோப்பையும் டாடா நெக்சான் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

  எப்பிபி ஸ்டைலிஷ் வீரர் - ரிஷப் பந்த் ரூ.10 லட்சம், கோப்பை வழங்கப்பட்டது. டிவி வர்ணனையாளர்கள் தேர்வு செய்தனர்.
  பேடிஎம் பேர் பிளே விருது - மும்பை அணி.

  மிகச் சிறந்த வளர்ந்து வரும் வீரர் - ரூ. 10 லட்சம் ரொக்கம் மற்றும் கோப்பையை டெல்லி அணியின் ரிஷப் பந்த் வென்றார்.
11. மோஸ்ட் வேல்யுபவல் பிளேயர் - சுனில் நரேன் (கொல்கத்தா) ரூ. 10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இதற்கு முன் வென்றோர்
2008 - ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்)
 2009 - ஆடம் கில்கிறிஸ்ட் (டெக்கான்)
2010 - ஜாக்ஸ் காலிஸ் (பெங்களூர்)
2011 - கிறிஸ் கெயில் (பெங்களூர்)
 2012 - கிறிஸ் கெயில் (பெங்களூர்)
2013 - ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்)
2014 - கிளென் மேக்ஸ்வெல் (பஞ்சாப்)
2015 - ஆந்தரே ரசல் (கொல்கத்தா)
2016 - விராட் கோஹ்லி (பெங்களூர்) 2017 - பென் ஸ்டோக்ஸ் (புனே)

ஐபிஎல் 2018 சாம்பியன்


சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கிண்ணத்தை வென்றது. கப்டன் கூல் டோனி தலைமையிலான அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் ரூ.20 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சம்பியனானது.   வீரர்கள், பயற்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது  
இதற்கு முன் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்
2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்
 2009 - டெக்கான் சார்ஜர்ஸ்
 2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்
 2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013 - மும்பை இந்தியன்ஸ்
2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 2015 - மும்பை இந்தியன்ஸ்
2016 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
2017 - மும்பை இந்தியன்ஸ் 1. ஐபிஎல்
 2018 சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்
 

 இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி -
 சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   அணிக்கு ரூ.12.5 கோடி பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது.  
 இதற்கு முன் இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி
 2008 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2009 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2010 - மும்பை இந்தியன்ஸ்
2011 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2012 - சென்னை சூப்பர் கிங்ஸ்
 2013 - சென்னை சூப்பர் கிங்ஸ்
 2014 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 2015 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2016 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
 2017 - ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ்

அதிக ஓட்டங்கள் குவிப்புக்கான ஒரேஞ்ச் கேப்
 கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்) ஹைதராபாத் அணியின் கப்டன் ஷேன் வில்லியம்சன் 17 ஆட்டங்களில் 735 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 8 அரை சதம் அடித்துள்ளார். அதிகபட்சம் 84 ஓட்டங்கள். ரூ.10 லட்சமும்  கிண்ணமும்  வழங்கப்பட்டது.

இதற்கு முன் வென்றோர்
2008 - ஷான் மார்ஷ் (பஞ்சாப்) - 616 ஓட்டங்கள்
2009 - மேத்யூ ஹேடன் (சிஎஸ்கே) - 572 ஓட்டங்கள்
2010 - சச்சின் டெண்டுல்கர் (மும்பை) - 618 ஓட்டங்கள்
2011 - கிறிஸ் கெயில் (பெங்களூர்) - 608 ஓட்டங்கள்
2012 - கிறிஸ் கெயில் (பெங்களூர்) - 733 ஓட்டங்கள்
 2013- மைக்கேல் ஹசி (சிஎஸ்கே) - 733 ஓட்டங்கள்
 2014 - ராபின் உத்தப்பா (கொல்கத்தா) - 660 ஓட்டங்கள்
2015 - டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 562 ஓட்டங்கள்
2016 - விராட் கோஹ்லி (பெங்களூர்) - 973 ஓட்டங்கள்
 2017 - டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 641 ஓட்டங்கள் 

Friday, May 25, 2018

ஐபிஎல்லில் சின்ன தல ரெய்னா


   
 ஐபிஎல் சீசன் 11 முடிய இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இறுதிப்போட்டியில் மற்றொரு சாதனைக்கும் தயாராக உள்ளார். ஐபிஎல் 11வது சீசன் பிளே ஆப் சுற்றுகள் நடந்து வருகின்றன. அடுத்தது 2-வது தகுதிச் சுற்று ஆட்டமும்  இறுதிப்போட்டி மட்டுமே உள்ளன.
 ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓடங்கள் குவித்தோர் பட்டியில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். பெங்களூர் கப்டன் விராட் கோஹ்லி அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்திருந்தார். இந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது 22 ஓட்டங்களை எடுத்ததன் மூலம், மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ரெய்னா. ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்துடன் இந்த சீசனை அவர் முடிப்பார்.
இதுவரை 175 ஆட்டங்களில் 4,953 ஓட்டங்களை எடுத்துள்ளார் ரெய்னா. கோஹ்லி, 4,948 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 413 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அடுத்து நடைபெறும் இறுதிப் போட்டியில் மேலும் 47 ஓட்டங்கள் எடுத்தால், ஐபிஎல் வரலாற்றில் 5,000 ஓட்டங்கள் கடந்த முதல் வீரராவார் ரெய்னா.