Showing posts with label ஜெமினி. Show all posts
Showing posts with label ஜெமினி. Show all posts

Wednesday, August 3, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 29

தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குநர், கதாசிரியர் எனப் புகழப்பட்டவ்ர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அவருடைய " சித்தி" படம் வெற்றி பெற்று ரசிகர்களால் போற்றப் பட்ட நேரம், ஜி.  பாலசுப்பிரமணியம் எனும் கதாசிரியர்   சென்று அவரைச் சந்தித்தார். தனக்கு அவசரமாக மூவாயிரம் ரூபா தேவைப் படுவதாகவும் அதற்குப் பதிலாக ஒரு கதையைத் தருவதாகவும் தெரிவித்தார்.

சிவாஜியின் "அன்னை இல்லம்","பாலும் பழமும்", எம்.ஜி.ஆர் நடித்த"கலங்கரை விளக்கம்", "ரகசிய பொலீஸ் 115 ஆகியவற்றின் கதாசிரியர்தான் ஜி.பாலசுப்பிரமணியம். அவர் கேட்ட மூவாயிரம் ரூபாவைக் கொடுத்துவிட்டு  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்  சிறிது நேரம்  உரையாடினார்.அப்போது திமிர் பிடித்த பெண்  பற்றிய ஒரு கதையை ஜி.பாலசுப்பிரமணியம் சொன்னார். ஏழைகள் முகத்தில் விழிப்பதே பாவம் என நினைத்து அவர்களை வெறுக்கும் பணக்கார  பெண்ணின் கதை  கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குப் பிடித்து விட்டது.


இந்தக் கதை நன்றாக  இருக்கிறது.இதையே படமாக்குகிறேன் என்றார்.  கதாசிரியர்ஜி.பாலசுப்பிரமணியம் சொன்ன திமிர்  பிடித்த பணகாரியின் பாத்திரத்தைப் பற்ரி பத்து நாட்களாக க் கதைக் கருவைச் சொன்னஜி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து தனது திரைக்கதையை விவரித்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.  ஜி.பாலகிருஷ்ணன் திரைக்கதையைப் பாராட்டினார். இருவரும் ஒரு மாதம் விவாதித்ததில் வசனம்  உருவாகியது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் அலுவலகத்துக்குச் சென்ற கவிஞர் கண்ணதாசனிடம் திமிர் பிடித்த பணக்காரியின் கதையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார். படம்  பிரமாதமாக  இருக்கிறது வெற்றி பெரும் என         கண்ணதாசன்  கூறினார்.

நம்பிக்கையுடன் நடிகர்களைத் தெரிவு செய்ய ஆரம்பித்தார் கே.எஸ்.கோபலகிருஷ்ணன். கதாநாயகன்  ஜெமினி.கதாநாயகி சரோஜாதேவி. திமிர்பிடித்த பணக்காரியாக எஸ்.வரலட்சுமி. எடுப்பான தோற்றம், எடுத்தெறிந்து பேசும்  குணம் அனைத்தும் எஸ்.வரலட்சுமிக்கு கன கச்சிதமாகப் பொருந்திவிட்டது. அப்பா வேடம் என்றால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கண்ணை மூடிக்கொண்டு எஸ்.வி ரங்கராவைத்தான் தெரிவு செய்வார். ஆனால், பிரதான பாதிதிரமான எஸ். வரலட்சுமிக்கு கணவனாக எஸ்.வி.ரங்கராவைத் தேர்வு செய்ய முடியாது. வரலட்சுமியின் கணவனாக ரங்கராவை ரசிகர்கள் ஏற்ருக்கொள்ள மாட்டார்கள் என்பதால் கணவனாக டி.கே.பகவதியைத் தேர்வு செய்தார்.

ஜெமினி,சரோஜாதேவி,எஸ்.வரலட்சுமி,டி.கே.பகவதி,நாகேஷ் ஆகியோரின் படங்களுடன் "பணமா பாசமா" எனும் புதிய திரைப்பட விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானது. விளம்பரத்தைப் பார்த பலரும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் அலுவலக தொலைபேசியில் எதிர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்தனர்.

"கலியாணமானதும் சரோஜாதேவியின் மாக்கற் குறைந்து விட்டது. உனக்கென்ன மூளைக் கோளாறா?"

"சித்தி படம்  வெற்றி பெற்றதால், நீ எடுக்கும் படம் எல்லாம் வெற்றிப்படமாகுமா?"

"வரலட்சுமியையும், பகவதியையும் யாருக்குத் தெரியும்?"

"உடனடியாக நடிகர்களை மாத்து. இல்லையேல் தோல்விப்படம்தான்."

எதிர் மறை விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல்  படப்பிடிப்பைத் தொடர்ந்தார் கோபாலகிருஷ்ணன். இயக்குநர் எதிர்பார்த்தது போன்று வரலட்சுமி நடிக்கவில்லை. படத்தின் அச்சாணியே வரலட்சுமிதான்.இயக்குனர் சொல்வதைக் காதில் வாங்காமல் ஏனோ தானோ என்று வரலட்சுமி நடித்தார்.கோபாலகிருஷ்ணனின் எதிர்பார்ப்பு வீணானது. வரலட்சுமி இப்படி நடித்தால் படம் தோல்வியடைந்து விடும் என சக நடிகர்களும்  கோபாலகிருஷ்ணனுக்கு நாசூக்காக எடுத்துச் சொனார்கள்.

  இனியும் வரலட்சுமியை நம்பமுடியாது என்பதால் வேறு ஒரு நடிகைஅயித் தேடினர் கோபாலகிருஷ்ணன் . சாவித்திரி இதற்குப் பொருத்தமாக இருப்பார் என நினைத்த கோபாலகிருஷ்ணன், நேராக அவரிடம் சென்று தனது  சிக்கலான பிரச்சினையைக் கூறினார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட சாவித்திரி, திமிர் பிடித்த  பணக்காரியின் பாத்திரத்தில் தான்  நடிப்பதாக  இருந்தா கதாநாயகனான ஜெமினியை மாற்ற வேண்டும் என்றார். கணவனான ஜெமினியை மருமகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். சாவித்திரி சொன்னதன் பின்னரே அந்த உண்மை கோபாலகிருஷ்ணனின் மனதில் உதைத்தது.

சாவித்திரி பிரச்சினையைத் தீர்ப்பார் என கோபாலகிருஷ்ணன் எதிர்பார்த்தபோது அவர் புதுப் பிரச்சினை ஒன்றைக் கிளப்பிவிட்டார்.அதில் இருந்து எப்படி மீளுவதெனத் தெரியாது கோபலகிருஷ்ணன்  குழம்பியபோது சாவித்திரி சில  ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.

" எஸ். வரலட்சுமி சிறந்த நடிகை. பல படங்கலில் அதை நிரூபித்துள்ளார். நல்லதொரு பாடகி என்பது மேலதிக திறமை. அவர் என்ன பிரச்சினையில் இருக்கிறார் எனத் தெரியாது. நீங்கள் போய் நிம்மதியாக நித்திரை கொள்ளுங்கள் நாளை காலையில்  நீங்கள் எதிர்பார்த்ததுபோல அவர் நடிக்க வில்லை என்றால் நான்  நடிக்கிறேன். ஜெமினியை மாற்ரி விடுங்கள். ஜெமினிக்காக யர் நடிப்பதென்பதை ஜெமினி தீர்மானிக்கட்டும்" என சாவித்திரி கூறினார்.

இரவு முழுவதும் கோபாலகிருஷ்ணனுக்குத் தூக்கம் வரவில்லை. இரவு 11 மணிக்கு  வரலட்சுமியின் வீட்டுக்கு கோபாலகிருஷ்ணனின் கார் சென்றது. படப்பிடிப்புத் தளத்தில் கதைப்பதைவிட  வீட்டில் கதைத்தால் சுமுகமாகத் தீர்க்கலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வரலட்சுமியின் வீட்டில் இருந்து சாவித்திரி  வெளியே வந்தார்.

"நீங்கள் எதிர் பாத்த மாதிரி நாளைக்கு வரலட்சுமி நடிப்பார். எதைப் பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாகத் தூங்குங்கள் " எனச் சொல்லி சாவித்திரி அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்.

மறுநாள் வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.  நேற்று வரை சொதப்பிய வரலட்சுமியா இது என அதிசயத்துடன்  பார்த்தனர்.

பணமா  பாசமா படத்தில் வரலட்சுமியின் பாத்திரம் பேசப்பட்டது. அவரது நடிப்பின்  பின்னால் சாவித்திரி இருந்தது எவருக்கும் தெரியாது. தான்  ந்டிக்காத ஒரு படத்தில் இன்னொரு நடிகை சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக  இரவு  சுமார் நான்கு மணித்தியாலங்கள் அவரைத் தயார்ப் படுத்திய அந்தப் பெருந்தன்மை  உள்ள ஒருவரைக் காண்பது அரிது.

“இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் பற்றி இன்றைய தலைமுறையினருக்குப் பெரிய அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘பேசும் தெய்வம்’, ‘பணமா பாசமா’, ‘ஆதிபராசக்தி’, ‘நத்தையில் முத்து’, ‘கை கொடுத்த தெய்வம்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை எடுத்தவர். அந்தக் காலத்தில் குடும்பக்கதைகள் என்றால் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான். இன்றைக்கு வரைக்கும்கூட அவருக்கு இணையாக குடும்பக்கதைகள் எடுக்க ஆளில்லை.   மதுரை தங்கம் தியேட்டரில்தான் படம் ரிலீஸானது. அந்தக் காலத்தில் மிகப்பெரிய தியேட்டர் என்றால் தங்கம் தியேட்டர்தான். ‘பராசக்தி’ திரைப்படம்தான் முதன்முதலில் அங்கு வெளியாகியது. மூன்று தியேட்டர்களை ஒரே தியேட்டர் ஆக்கியிருந்தார்கள். முதலில் திரையிடப்பட்ட ‘பராசக்தி’ திரைப்படம் அந்தத் திரையரங்கில் மட்டுமே நூறு நாட்களுக்கும் மேல் ஓடியது. ‘பணமா பாசமா’ திரைப்படம் வெளியானபோதும் நூறு நாட்களுக்கும்மேல் ஓடி சாதனை படைத்தது. கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு இயக்குநர் திலகம் என்று ஒரு பட்டமும் இருந்தது. அந்தப் பட்டத்திற்கு முழுக்கத் தகுதியான அவர், உணர்வுப்பூர்வமான காட்சிகள் வடிவமைப்பதில் மிகவும் திறமையானவர். ‘

 

Wednesday, February 9, 2022

தெரிந்த சினிமா தெரியாத சஙக்தி 4


 

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

  சுமைதாங்கி படத்துக்காக  கவியரசர் கண்ணதாசன் எழுதிய   பாடலுக்கு இரட்டையர்கள் எம்.எஸ்.விஸ்நாதன் ராமமூர்த்தி இசையமைக்க பிபி.ச்ரினிவாஸ் பாடிய பாடலின் ஆரம்ப வரிகள் அவை. மூன்று வரிகளில் நான்கு கேள்விகள்   கேட்கப்பட்டன. துன்ப்ழத்திலும் துயரத்திலும் இருக்கும் ஒருவரிடம் இக் கேள்வியை நாம் கேட்டால் அவர் சொலும் பதிலால் நாம்  கலங்கிவிடுவோம்.  நாம் நமது துயரத்தை  பட்டியலிட அவர் உடைந்து விடுவார்.

ஆனால், கண்ணதாசன் அந்த நான்கு கேள்விகளுக்கும் நான்கு பதில்களிக் கூறி ஆறுதல் சொல்கிறார்.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

அந்தப் பாடல் முழுவதும் கேள்விக்கான அற்புதமான பதில்களளை கண்ணதாசன் வடித்திருப்பார். 

எதற்க்கெடுத்தாலும் விதியை நொந்து இறைவனை வசைபாடுவதை விட்டேவிடுங்கள் என கண்ணதாசன் அறிவுறுத்தியுள்ளார். "மயக்கமா கலக்கமா" எனும் பாடல் பலருக்கு உந்து சக்தியாக  இருந்தது. சினிமா வாய்ப்புத் தேடிச் சலித்துப்போன வாலி ஊருக்குப் புறப்பட முடிவெடுத்தபோது அவரின் வாழ்க்கையை மாரியது அந்தப் பாடல். திரைப் படத்தில் ஒலிக்கும் பாடல்கள் அதில் நடிக்கும் ஏதோ ஒரு பாத்திரத்தின் மனதை மாற்றுவதாக அமையும். அது கற்பனை.  உண்மையிலேயே அப்படிப்பட்ட பாடல்கள் பலருன் வாழ்க்கையை மற்றி அமைத்துள்ளன.

ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி சென்னைக்குச் சென்ற  வந்த சமயம் அது. அகில இந்திய ரேடியோ,

நாடக சபாக்கள் என தனக்கு கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புக்களை வைத்து சென்னையில் காலத்தை தள்ளுகிறார் வாலி. ஆனால் அவர் எதிர்பார்த்த திரையுலக வாய்ப்பு கிடைக்கவேயில்லை. போதிய வருமானம் இன்றி சென்னையில் அவரால் காலம் தள்ள முடியவில்லை. அவ்வப்போது ஏதாவது வாய்ப்புக்கள் வந்தாலும் எதுவும் சரியாக  அமையவில்லை.நாகேஷ், வாலி இவர்கள் எல்லாம் ஒரே அறையில் தங்கியிருந்த காலகட்டம் அது.இவர்களை பார்க்க பாடகர் பி. பி.ஸ்ரீனிவாஸ் அங்கே அடிக்கடி வருவார்.மூன்று பேரும் எங்கவாது ஒன்றாக செல்வார்கள். ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வறுமைஒவ்வொரு நாளும் கொடுமையாக இருந்தது வாலிக்கு. “சரி.. இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராதுநம்ம ஊருக்கே போய்விடவேண்டியதுதான்என்று முடிவு செய்துவிட்டு தான் கொண்டு வந்த பெட்டியுடன்ஸ்ரீரங்கம் திரும்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கேவந்த பி.பி.ஸ்ரீனிவாஸ்.. ‘சுமைதாங்கிங்கிற படத்துக்காக இன்னைக்கு ஒருபிரமாதமான பாட்டு பாடினேன்ய்யா.. கேக்குறியா?” என்று வாலியை கேட்க, ஆர்வமுடன் கேட்கும் நண்பரிடம் மறுப்பு சொல்லமுடியாமல் வாலி அரைமனதுடன்சரிபாடுங்கஎன்று சொல்லஸ்ரீனிவாஸ்மயக்கமா கலக்கமாபாடலை பாடத்துவங்குகிறார். பாடப் பாட நிமிர்ந்து உட்கார்ந்த வாலி, என்ன தோன்றியதோ

இனிமே ஜெயிக்காம ஊர் திரும்புற பேச்சுக்கே இடமில்லே. மெட்ராஸைவிட்டுஜெயிக்காம நான் போகமாட்டேன். முயற்சி பண்ணா நிச்சயம் ஜெயிக்கலாம்ன்னு இந்த பாட்டு எனக்கு புரிய வெச்சிடுச்சுஎன்று சொல்லி பெட்டியை எடுத்து உள்ளே வைத்தார்.  இந்தச் சம்பவத்தை வாலி பல பேட்டிகளில் சொல்லியுள்ளார்.

திரை உலக வாய்ப்புத்தேடி சென்னைக்குச் சென்ற கண்ணதாசனுக்கும் பல துன்பங்கள் துயரங்கள் நேர்ந்தன. அவற்றை எல்லாம் முறியடித்து எவரும் தொட முடியாத உச்சத்துக்குச் சென்றார் கண்ணதாசன்.  "மயக்கமா கலக்கமா எனும் பாடல்  மூலம் தன்  வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானத்துக்கு பதிலளித்தவர் கண்ணதாசன்.

சென்னைக்கு சென்று இறங்கியபோது தன்னை விரட்டிய அந்த இடத்தில் தனது செல்வாக்கை கண்ணதாசன் படம் பிடித்து வெளிப்படுத்தினார்.

கண்ணதாசன் அன்றைய  மெட்ராஸ்க்கு  சென்ற போது அவருக்கு வயசு 16 இருக்கும். காரைக்குடியில் இருந்து சென்னைக்கு  சென்றபோது கையில் பணம் இல்லை.  1942 அல்லது 1943 இருக்கும். எக்மோர்ல ட்ரெயினில் இருந்து மாலையில் இறங்கினார். எங்கே போவதெனத் தெரியவில்லை. கண்ணதாசனின் ஊரவர்கள் இருக்கும் நகரத்தார் விடுதிக்குச் செல்ல வேண்டும். அது எங்கே இருக்கிறது.அந்த இடத்துக்கு எப்படிப் போவது எனத் தெரியாமல்  கடற்கரை வீதியால் நடந்தார்.  எங்கும் ஒரே இருட்டு விடிந்ததும் போகலாம் என நினைத்து ஒரு ஓரமாகப் படுத்தார்.

திடீரென யாரோ அவரைத் தட்டி எழுப்பினார். க்சண்ணைத் திறந்து பார்த்தபோது ஒரு பொலிஸ்காரர்   யார் நீ? இங்கே எதுக்குபடுத்திருக்கே?” என கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை மிரட்டினார்.

தனது நிலைமையைச் செல்லி கெஞ்சினார் கண்ணதாசன்.  அதெல்லாம் ச்ரிப்பட்டு வரது என அந்தப் பொலிஸ்காரர் கண்ணதாசனை  விரட்டினார்.

  நாலணா காசு கொடுத்திட்டு அப்புறம் படு…”  என்று பொலிஸ்காரர் சொன்னார்.  காசு கிடைக்காததால் பொலிஸ்காரர் கண்ணதாசனை விரட்டி விட்டார். “இந்த ஏழையிடம் நாலணா இல்லாததால் பீச்சில் கூட படுக்க இடம் கிடைக்கவில்லைஎன கண்ணதாசன்  பின்னாளில் எழுதினார்.

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த கண்னதாசன் படிபடியாக உயர்ந்தார். ‘விசாலாக்ஷி ஃபிலிம்ஸ்என்கிற சொந்த நிறுவனத்தில்  ஜெமினி கணேசனை கதாநாயகனாக நடிக்க  ஸ்ரீதரின் இயக்கத்தில்  சுமைதாங்கிஎனும் படத்தைத் தயாரித்தார்.அந்த படத்தில் தான்  "மயக்கமா கலக்கமா" எனும் பாடல் இடம் பெற்றது.

 சென்னைக்கு சென்று இறங்கிய போது பொலிஸ்காரரால் விரட்டபட்ட இடத்தில்தான் அந்தப் பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றது. பாடலின் போது ஜெமினியைக் கடந்து செல்லும் கார்கள் அனைத்தும் கண்ணதாசனுக்குச் சொந்தமானவை.