Showing posts with label ஒலிம்பிக்2012. Show all posts
Showing posts with label ஒலிம்பிக்2012. Show all posts

Saturday, August 25, 2012

ஒலிம்பிக் ஞாபகச் சின்னம்


  லண்டன் 2012 ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டதை நினைவு கூரும் முகமாக  ஒலிம்பிக்  வளையங்களை அமெரிக்க நீச்சல் வீராங்கனை மிசிம்பிராங்ளின் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.
ஏனைய நீச்சல் வீரர்களான மைக்கேல் பெல்ப்ஸ் மற்றும் றியான் லொச்டே ஆகியோருடன் இணைந்தே அவர் பச்சை குத்தும் கழகத்தில் இணைந் துள்ளதாக தனது டுவிட்டர் இணையப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அனைதும் பச்சை குத்தப்பட்டாயிற்று ஆகா இதனை நம்பவே முடியவில்லை எனது ஒன்றே ஒன்றான பச்சை இது என தனது பச்சை குத்தப்பட்ட  அழகைக் காட்டிடும் அந்தப்படத்துடன் அவர் கிச்சிடுகின்றார். அவர்  ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கங்களையும் வெண்கலப் பதக்கமொன்றையும் பெற்று ஒலிம்பிக் வரலாறு படைத்துள்ளார்

 இந்த மாத முற்பகுதியில் வெளியாகியிருந்தToday show  சஞ்சிகைக்கு அளித்திருந்த செவ்வியின் போது அவர் சக வீரர்களை மைக்கல் பெல்ப்ஸ் , பிரெண்டன் ஹான் சென் மற்றும் மட் கிறெவேர்ஸ் ஆகியோரைப் போன்று தானும் தனது உடம்பில் பச்சை குத்திக் கொள்வது பற்றி யோசித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். நான் இவ்வாறு பச்சை குத்திக் கொள்வேனென இதற்கு முன்னர் நினைத்திருக்கவேயில்லை. ஆயினும் சம்பாதித்துக் கொள்ள  வேண்டிய ஒன்றாகவே நான் இதனைக் கருதுவதுடன் அதிகளவு அர்த்தம் கொண்டுள்ள ஒன்றாகவும் நான் உண்மையில் இதனை மதிக்கின்றேன்  எனவும் கூறிய அவர் இதனை இவ்வாறு வைத்துக் கொள்வது பெருமை சேர்க்கும் ஒன்றெனவும் குறிப்பிட்டார். அவரது தந்தையரான டிக் (Dick)  இந்தப் பச்சை குத்தலுக்கான அங்கீகாரத்தை ஒலிம்பிக் சாதனை படைத்துள்ள தனது மகளுக்கு வழங்கியதுடன் அவர் சம்பாதிக்க வேண்டிய தொன்றே இது இதனை அவர் சம்பாதித்தே விட்டாள் என பெருமிதத்துடன் Today show  சஞ்சிகைக்குத் தெரிவித்தார். கொரோடாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான மிசி ஃபிராங்ளின் 200 மீற்றர் நீச்சல் போட்டியில் தனது மூன்றாவது  தங்கப் பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இன்னுமொரு அமெரிக்க நீச்சல் வீராங்கனையான எலிஸபெத் பெய்செல். அந்தப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றார். அவர் மிசி பற்றி கூறுகையில் ""மிசி எப்போதும் பிரம்மிப்பூட்டும் வகையிலேயே போட்டிகளில் ஜெயித்துக்காட்டுவார்'' அந்தப் போட்டியில் நான் மூன்றாமிடம் பெற்ற நிலையில் உணர்ச்சிவசப்பட்டபோது ஹாஸ்யமாக அவர் பேசி என்னைச் சிரிக்கவைத்தார் என்றார்.

மெட்ரோநியூஸ்24/08/12

Saturday, August 11, 2012

சாதனை வீரன் உசைன் போல்ட்


1986 : மேக்காவில் உள்ள ட்ரெலோனி எனுமிடத்தில் ஓகஸ்ட் 21 ஆம் திகதியன்று பிறந்தார்.
2002 : கிங்ஸ்டனில் நடைபெற்ற உலக கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 4x100 மீற்றர் மற்றும் 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் தனது 15 ஆவது வயதில் தனதாக்கிக் கொண்டார்.
2003: ஷெர் புரூக்கில் நடைபெற்ற உலக இளையோர் சம்பியன் ஷிப் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
2004: இதற்கு முன்னர் 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலான 20 விநாடிகள் சாதனையை 19.93 விநாடிகளில் ஓடிமுடித்த முதல் கனிஷ்ட வீரரென்ற பெருமையைப் பெற்றார்.
2005: மத்திய அமெரிக்கா மற்றும் கரிபியன் சம்பியன்ஷிப் போட்டிகளின் போது 200 மீற்றர் தூரத்தை 20.03 விநாடிகளில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
2007: ஜப்பான் ஒசாக்காவில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டிகளின் போது 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் 4து100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஒரு வீரர் என்ற வகையிலும் வெள் ளிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
உசைன் போல்ட் 2008 ஆம் ஆண்டில் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று இந்த உலகையே அதிசயிக்க வைத்தார்.
2008 மே 3 : ஜ@மக்காவில் நடைபெற்ற போட்டியில் 100 மீற்றர் குறுந் தூரத்தை 9.76 விநாடிகளில் ஓடி முடித்து இரண்டாவது அதி வேக வீரரென்ற சாதனையைப் பதிவு செய்தார்.
மே 31: ரீபொக் கிரான்ட் பிரிக்ஸ் போட்டியின் தனது ஐந்தாவது 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 9.72 விநாடிகளில் ஓடி முடித்து உலக சாதனையை முறியடித்தார்.
ஜூலை 13: எதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் @பாட்டியில் 200 மீற்றர் தூரத்தை 19.67 விநாடிகளில் ஓடி முடித்து தனது முன்னைய சாதனையை முறியடித்தார்.
ஆகஸ்ட் 16: பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது 100 மீற்றர் தூரத்தை 9.69 விநாடிகளில் ஓடி முடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஓகஸ்ட் 20: ஒலிம்பிக் குறுந் தூர ஓட்டப் போட்டிகளில் 200 மீற்றர் தூரத்தை 19.30 விநாடிகளில் ஓடி முடித்து புதியதோர் உலக சாதனை நிலை நாட்டினார்.
ஓகஸ்ட் 22: ஒலிம்பிக்கின் 4து100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 37.10 விநாடிகள் ஓடி முடித்து உலக சாதனை படைத்த ஜ@மக்கா அணியில் மூன்றாவது ஓட்ட வீரராக கலந்து கொண்டார்.
நவம்பர் 23: 2008 ஆம் ஆண்டிற்கான ஐ அ அ ஊ உலக ஆண் மெய்வல்லுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
2009 ஏப்ரல் 29: கிங்ஸ்டனுக்கு வெளியே நிகழ்ந்த தனது B M W M  3 கார் விபத்தில் சிக்கியபோது படுகாயத்திலிருந்து தப்பியதுடன் காலில் சிறிய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
மே 17: மன்செஸ்டர் மா நகர் 150 மீற்றர் குறுந் தூரப் போட்டியில் 14.35 விநாடிகளில் ஓடி முடித்து வெற்றி வாகை சூடினார். முதலாவது 100 மீற்றர் போட்டியை 9.91 விநாடிகளிலும் இரண்டாவது 100 மீற்றர் போட்டியை 8.70 விநாடிகளிலும் ஓடி முடித்ததார். 
ஜூன் 10: 2009 ஆம் ஆண்டிற்கான லோறியஸ் உலக விளையாட்டு வீரர் எனும் பட்டத்தை வென்றார். 
ஓகஸ்ட் 16: பேர்லினில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் குறுந் தூரத்தை 9.58 விநாடிகளில் ஓடி முடித்து தங்கப்பதக்கம் பெற்று புதிய உலக சாதனை.
ஓகஸ்ட் 20: பேர்லினில் நடைபெற்ற உலக சம்பியன் ஷிப் போட்டியில் 200 மீற்றர் தூரத்தை 19.19 விநாடிகளில் ஓடி முடித்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை தனதாக்கியதுடன் புதிய உலக சாதனை நிலை நாட்டினார். 
2010 ஓகஸ்ட் 6: ஸ்டொங் கோமில் நடைபெற்ற 100 மீற்றர் இறுதி ஓட்டப் போட்டியில் டைசன் கேயிடம் இரண்டாவது தோல்வியைச் சந்தித்தார். 
2011 ஓகஸ்ட் 28: தீகுவில் இடம் பெற்ற உலக சம்பியன் ஷிப் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் முறையற்ற ஆரம்பம் காரணமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். இதன்@பாது வீரரான யொஹான் பிளேக் தங்கப் பதக்கம் வென்றார். 
செப்டெம்பர் : 200 மீற்றர் அதி வேக ஓட்ட வீரர் என்ற பெருமையைத் தக்க வைத்ததுடன் அதன் பின்னர் 4து100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஜமை க்கா அணி 37.04 விநாடிகளில் ஓடி முடி த்து புதிய உலக சாதனை படைத்திட உதவி செய்தார். 
2012 ஜூன்: லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜமேக்காவில் நடாத்தப்பட்ட 100 மற்றும் 200 மீற்றர் தகுதி காண் போட்டிகளில் யொஹான் பிளேக்கிடம் தோல்வியடைந்த போதிலும், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான அணியில் இடம் பிடித்தார். 
ஜூலை 26: முதுகு வலியால் தான் அவஸ்தைப் பட்டதனை ஏற்றுக் கொள்ளல். ஆயினும், தனது பட்டங்களைத் தக்க வைப்பதற்குத் தயாராக இருப்பதாக வலியுறுத்திக் கூறினார். 
ஓகஸ்ட் 5: லண்டன் 2012 ஒலிம்பிக் 100 மீற்றர் தூரத்தை வரலாற்றில் இரண்டாவது அதி விரைவான நேரமான 9.63 விநாடிகளில் ஓடி முடித்தார். 


ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டப் 
போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றோர் விபரம்
2012 லண்டன்: உசைன் போல்ட் (ஜமேமக்கா) 9.63
2008 பீஜிங்: உசைன் போல்ட் (ஜமேக்கா) 9.69
2004 ஏதென்ஸ்: ஜஸ்டின் கட்லின் (அமெரிக்கா) 9.85
2000 சிட்னி: மொரிஸ் கிறீன் (அமெரிக்கா) 9.87
1996 அட்லாண்டா: டொனோவன் பெய்லி (கனடா) 9.84
1992 பார்சி லோனா: லின் போர்ட் கிறிஸ்டி (பிரித்தானியா) 9.96
1988 சியோல்: கார்ல் லூயிஸ் (அமெரிக்கா) கனேடிய வீரர் பென் ஜோன்சன் 9.79 விநாடிகளில் ஓடி வென்ற போதிலும் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 
1984 லொஸ் ஏஞ்செல்ஸ்: கார்ல் லூயிஸ் (அமெரிக்கா) 9.99
1980 மொஸ்கோ: அலன் வெல்ஸ் (பிரித்தானியா) 10.25
1976 மொன்றியல்: ஹாஸ்லி குசோ மோர்ட் (ரினிடாட்) 10.06
1972 மியூனிக்: வலேரி போர் ஸோவ் (சோவிட் யூனியன்) 10.14
1968 மெக்ஸிக்கோ: ஜிம் ஹைன்ஸ் (அமெரிக்கா) 9.95
1964 டோக்கியோ: பொப் ஹேயிஸ் (அமெரிக்கா) 10.0
1960 ரோம்: ஆர்மின் ஹரி (ஜேர்மனி) 10.2
1956 மெல்போர்ன்: பொபி மோரோ (அமெரிக்கா) 10.62
1952 ஹெல்சிங்கி: லின்டி ரெமிஜினோ (அமெரிக்கா) 10.79
1948 லண்டன்: ஹரிசன்டி லார்ட் (அமெரிக்கா) 10.3
1936 பேர்லின் ஜெசி ஓவென்ஸ் (அமெரிக்கா) 10.3
மெட்ரோநியூஸ்10/08/12



Friday, August 10, 2012

உசைன் போல்ட்டை நோக்கிபியர் போத்தல் எறிந்தவர் கைது


லண்டன் 2012 ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்ற மைதானத்தில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப் பந்தய இறுதிப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த அதிவேக மனிதன் உசேன் போல்ட்டுக்குப் பின்னால் வெற்று பியர் போத்தலொன்று வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விற்பனை இயந்திர தொழில்நுட்பவியாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
உசேன் போல்ட் 9.63 வினாடிகளில் பந்தய தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொள்ள சற்று நேரத்திற்கு முன்னரே இந்த பரபரப்பான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள லீட்ஸ் எனுமிடத்தைச் சேர்ந்த அஷ்லி கில் (Ashley Gill) ) ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்பிப்பவர் என அவரது அயலவர்கள் பொலிஸாரிடம் தெரி வித்த அதேவேளை அவர் இதற்கு முன்னர் ஒரு ஆசிரி யராகப் பயிற்றப்பட்டிருந்ததாக தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்.
எடுக்கப்பட்டிருந்த காணொளியில் நீல நிற உடையணிந்த பார்வையாளரொருவர் தட களத்தை நோக்கி வெற்றுப் போத்தலொன்றை வீசியெறிவதாகவும் அந்தப் போத்தல் தடகள அருகில் நின்றிருந்த ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரான ஒல்லாந்து வீராங்கனை எடித் போஸ் (Edith Bosch) அருகில் போய் விழுவதையும் பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து போத்தலை வீசிய அந்த மனிதனுக்கு தான் அடித்ததாகவும் அவர் ருவிட்டர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இன்னுமொரு காணொளியில் தனது இறுதிப் போட்டி ஆரம்பமாகும் இடத்தை நோக்கி உசேன் போல்ட் போய்க் கொண்டிருக்கும் போது குறித்த நீல நிற உடை தரித்த அந்த மனிதன் உசேன் போல்ட்டை பார்த்து நீ வெல்லப் போவதில்லை என உரத்துச் சத்தமிடுவதும் பதிவாகியுள்ளது. கிழக்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஆஷ்லி கில் குடி போதையிலேயே அந்த வெற்று பியர் போத்தலை எறிந்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மெட்ரோநியூஸ்08/08/12

Thursday, August 9, 2012

ஓய்வு பெறுகிறார் தங்கமகன்


ஒலிம்பிக்கில் 18 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 22 பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்ட வாழ் நாள் சாதனை வீரர் மைக்கல் பெல்ப்பஸ்  நீச்சல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 4x100 மீற்றர் அஞ்சல் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள அமெரிக்க வீரரான மைக்கல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை  பதினெ ட்டு (18) தங்கப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் இருபத்தியிரண்டு (22) பதக்கங்கங்களை பெற்றுள்ள இவர். நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சிட்னி நகரில் நடைபெற்றிருந்த ஒலிம்பிக் போட்டியில் 200 மீற்றர் பட்டர் பிளை நீச்சல் போட்டியில் 5ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த 27 வயதான பெல்ப்ஸ் எதென்ஸ் நகரில் இடம் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆறு தங்கப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண் கலப் பதக்கங்களையும் சீனத்  தலை நகர் பீஜிங்கில் கடந்த  2008 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த  எட்டு தங்கப் பதக்கங்களையும் தன தாக்கிக் கொண்டார்.


சிட்னியில்  விளையாடியதன்  பின்னர் மிகவும் மோசமான பெறுபேற்றை அவர்  லண்டன் 2012 ஒலிம்பிக்கில் 400 மீற்றர்  தனி நபர் கலப்பு நீச்சல் போட்டியில்  சரியான முறையில் ஆரம்பிக்க தவறியதால் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.  அத்துடன், 200 மீற்றர் பட்டர் ஃபிளை நீச்சல் போட்டியிலும் இலக்குச் சுவருக்குள் சரியான முறையில் ஊர்ந்து செல்லத் தவறியதால் அது தென்னாபிரிக்க வீரர் தங்கப் பதக்கம் வென்றிட வழிசமைத்தது. ஆயினும், போல்டி மோர்  நீச்சல்வீரரான பெல்ப்ஸ், தனது நாட்டவரான ரயன் லொக் டெயை  ஓரங் கட்டி 100 மீற்றர் பட்டர் பிளை மற்றும் 200 மீற்றர் கலப்பு நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெற்றதுடன், 4x200 மீற்றர், 4x100 மீற்றர் நீச்சல் போட்டிகளிலும் பதக்கங்களைவென்றார். இத்தகைய சாதனைகளுக்காக  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவருடன் தொலைபேசி மூலமும்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.  அத்துடன்  தலைவர் ஜூலியோ  மக்லய னால் வீரர் பெல்ப் ஸுக்கு  நேற்று  முன்தினம் வழங்கப்பட்ட "Fina"  வாழ்நாள் சாதனை விருதில், "ஒலிம்பிக்கின் வாழ் நாள் சாதனை வீரர் மைக்கல் பெல் ப்ஸ் அவர்களுக்கு  ""Fina" ஓகஸ்ட் 4, 2012, லண்டன் பிரித்தானியா' என்ற வாசகங்கள்  பொறிக்கப்பட்டிருந்தன.  



தனது இறுதிப் போட்டியின் பின்னர், ஊடகவியலாளர் மாநாடொன்றில்  கருத்து வெளியிட்ட பெல்ப்ஸ் "ஒலிம்பிக்கின் வாழ்நாள் சாதனையாளர் நானே' என்ற வாசகங்களைக் கொண்டுள்ள  தெய்வீகத் தன்மை வாய்ந்த அதிர்ஷ்ட வசமான இந்த வெற்றிக் கிண்ணத்தை பார்க்கையில் நான் பரவச மடைகின்றேன். தனது  நீச்சல் போட்டித் துறையில் சாதனை படைத்துள்ள மைக்கல் ஜோர்டானை நான் பெரிதும் மதிக்கின்றேன்.  அவரது பேருதவியினாலேயே நான் இன்று வாழ் நாள் அதி சிறந்த நீச்சல் வீரராக வந்துள்ளேன். நான் அவருக்கு நன்றி கூறினேன். அப்போது அவர், அப்படிச் சொல்வது நல்லதல்ல. நீங்கள் தானே நீச்சல் தடாகத்தில் இருந்தீர்கள்' என்றார். நான் திருப்பி அவரிடம் எது நல்ல தல்ல எனக் கேட்டேன். எனது அந்த நீச்சல் கண்ணாடிகளூடே ஆனந்தக் கண்ணீரை நான் வடிக்கிறேன். ஆனால் உங்கள் ஆனந்தக் கண்ணீரோ உங்கள் முகத்தில் வழிந் தோடுகிறதே. என்றேன். அவர்  இல்லாமல் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். அவரைப் போன்று ஒருவர் எனக்கு கிடைத்ததற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகின்றேன் என கண்கள் பனித்த நிலையில் தெரிவித்தார்.

நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவது பற்றி அவர் குறிப்பிடுகையில்...  முப்பது வயதுக்குப் பின்னர் நான் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பவில்லை. அடுத்த ஒலிம்பிக் போட்டிகளின்போது. நான் முப்பது வயதைக்கடந்து விடுவேன். நான் எதை சாதிக்க வேண்டுமென விரும்பினேனோ அதை சாதித்துக் காட்டி விட்டேன்.
எனதுபயிற்சியாளர் பொப் போவ் மானுடன் சேர்ந்து ஒவ்வொன்றையும் என்னால் செய்ய முடிந்ததை எண்ணி மகிழ்வடைகின்றேன் என்றார்...

மெட்ரோநியூஸ்07/08/12


தங்கக் கணவுகளுடன் இங்கிலாந்து ஒலிம்பிக்போட்டியாளர்கள்


நீச்சல் வீராங்கனை
ஜென்னா (Jenna) (23)
தனது இரண்டாவது வயதிலேயே நீந்தக் கற்றுக்கொண்ட இந்த வீராங்கனை தனது ஏழாவது வயதில் அதன் நெளிவு சுழிவுகளைக் கற்றுத்தேர்ந்தார். 5 அடி  8 அங்குல உயரமுடைய ஜென்னõவின் நீண்ட உடல் அவயவங்கள் தண்ணீருக்குள் ஓசையின்றி நீந்த உதவுவதுடன் அவரது கைகள் மூன்றரை நிமிடத்திலான 750  நகர்வுகளுக்கு நம்ப முடியாதளவும் பெரிதும் உதவுகின்றன. ஒல்லியான தோற்றமும் காருண்யப் பார்வையும் கொண்ட அவர் தனது  உடல் அமைப்பை  உரியவாறு  பராமரித்து வருவதுடன் நீச்சல் தடாகத்தில் பத்து மணித்தியாலங்களை கழித்து  வருவதுடன் வாரத்தில் ஆறு நாட்கள் தேகப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். ஜென்னாவுக்கு அப்பம் தோசை என்றால் அந்தளவுக்கு பிரியமாம். காலை உணவாக அவர் அப்பத்துடன் சீமைக் கோழி (வான்கோழி) யும் இரவு உணவாக  பெரிய பஸ்டா (Pasta) வும் எடுத்து வருகின்றார்.
ரசெல் கோதோர்ன்
(Rachel cawthorn) (23)
(படகோட்டல் வீராங்கனை)
கில் போர்ட்டில் பிறந்த ரசெல் தனது 15 ஆவது வயதில் முதன் முதலில் எஸ்கிமோக்கள் பாவிக்கும் ஒரு வகைப்படகைச் செலுத்தக் கற்றுக் கொண்டார். ஆயினும் தவறி வீழ்ந்த அனுபவத்தையும் பெற்றார். இருந்த போதிலும் அது அவரைக் கைவிடவேயில்லை. அந்த நாள் தொட்டு படகு செலுத்தும் போட்டிகளில் பதக்கங்களைச் சுவீகரிக்கும் முதலாவது பிரித்தானிய வீராங்கனையாக விளங்கி வரும் ரசெல் ஐரோப்பிய மற்றும் உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் முறையே  தங்கப் பத்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
அவரது  உடற்கட்டு இறுக்கமானதாகவும் நெகிழ்வõனதாகவும் அமைந்துள்ள அதேவேளை, அவரது 5 அடி ஒன்பது அங்குல உயரமானது அவரை நீண்ட நேரம் தண்ணீரில் போராட வைக்கப் பேருதவி புரிகிறதாம். காலை உணவாக அவர் யோகர்ட் மியூஸ்லி மற்றும் பழங்களையும் கொழுப்பை நீக்குவதற்கென தேன் பூசி  சாப்பிட்டு வருகின்றார்.

டோனியா கௌச்
(சுழியோடி) (Tonia Couch)
பிளவுமவுத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட  23 வயதான டோனியா கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சுழியோடியாக விளங்கி வருகின்றõர். தனது முழங்கை விலகிப் போனதன் பின்னர் அவர் தேகப்பயிற்சி செய்வதை நிறுத்தியிருந்தார். பிரித்தõனிய அதி கூடிய வெற்றி வாய்ப்புகளைப் பெற்ற பிரித்தானிய மகளிர் இரட்டையர் ஆட்டக்காரர்களாக டோனியாவும் சாரா பரோவுமே விளங்குகின்றனர்.
கடந்த 74 வருடங்களின் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டியில் டோனியா தங்கப் பதக்கம் வென்றதுடன் நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சியை அவர் எடுத்து வருகின்றார். தான் உண்பவற்றை அவதானித்து வரும் அவருக்கு சீனத்தயாரிப்புகள் மற்றும் மக்டொனால்ட்ஸ் நிறுவனத் தயாரிப்புகள் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

ஆன் கியோதாவொங்
(Anne keothavong)
(டென்னிஸ் வீராங்கனை)
தனது ஏழாவது வயதில் டென்னிஸ் விளையாட  ஆரம்பித்த  பின்னரும் முழங்காலில் இரு தடவைகள் அச்சுறுத்தும் சத்திர சிகிச்சைகள் செய்வித்த பின்னரும் கூட லண்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆன் தற்போது பிரித்தானியாவின் இரண்டாம் தர வீராங்கனையாக வலம் வருகின்றார். 5 அடி ஒன்பது அங்குல உயரங் கொண்ட 28 வயதான அவர் கால்களுக்குச் சக்தியூட்டும் பயிற்சியை எடுத்து வருகின்றார்.
மோ ஃபாரா  (Mo Farah)
நெடுந்தூர ஓட்ட வீரர்
சோமாலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 29 வயதான வீரர் மோ தனது எட்டு வயதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் குடியேறினார். லண்டனில் உள்ள பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் ஓடத் தொடங்கிய அவர் இளையோருக்கான  ஐந்து பட்டங்களை வென்றார். குறுந்தூர அதிவேக ஓட்டத்தில் பிரபல்யம் பெற்றுள்ள  அவர் ஒரு மைல் தூரத்தை 5.4  என்ற சராசரி  நிமிடக் கணக்கில்  ஓடி முடித்ததுடன் வாரமொன்றில் 120 மைல் தூரத்தை ஓடி முடிக்கின்றார். 5 அடி ஒன்பது அங்குல உயரமுடைய வீரர் மோவுக்கு கண்டிப்பான சாப்பாடென்று எதுவுமில்லை. ஆயினும் ஓட்டப் பந்தயமொன்றுக்கு முன்னர் அவர் மாச்சத்துள்ள உணவுகளை எப்படியும் எடுத்து
விடுவாராம்
.ரொம் ஜேம்ஸ் (Tom James)
படகோட்டல் வீரர்
"கார்டிவ்' எனும் இடத்தைச் சேர்ந்த 28 வயதான ரொம் கடந்த 2008 இல் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற படகோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். கேம்பிரிட்ஜ் உடனான படகோட்டப் போட்டியிலும் வெற்றியடைந்துள்ளார். ஆறடி இரண்டு அங்குலம் உயரமுள்ள அவர் பின்பக்க தசைகளை முறுக்கேற்றி படகு வலிக்கும் யுக்தியைக் கொண்டவர். கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் இருதய நோயால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய சிகிச்சையும் கவனிப்பும் அவரைத் தொடர்ந்தும் போட்டிகளில் விளையாட அனுமதித்துள்ளன.
ரொம்மைப் போன்ற படகோட்ட வீரர்கள் பொதுவாக ஓட் (Oat)) எனும் தானியத்தை போட்டி தொடங்குவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு  முன்னர் எடுப்பது  வழக்கம்.
பிரையொனி  ஷோ
(Bryony Shaw)
லண்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரையொனி தனது 29 ஆவது வயதில் கடந்த 2008 இல் நடைபெற்ற  ஒலிம்பிக் அலையாடல் போட்டியில் Windsurfingவெண்கலப்பதக்கம் வென்ற ஒரேயொரு பிரித்தானிய வீராங்கனையாவார். தனது ஒன்பதாவது வயதிலேயே அலைச்சறுக்கல் கற்றுக்கொள்ள ஆரம்பித்த அவர் கடந்த 2004 இல் கட்டிடக் கலை பற்றிய தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை அலைச்சறுக்கலில் முழு நேரமாக ஈடுபடும் பொருட்டு  ஒத்திப் போட்டார். 5 அடி 4 அங்குல உயரமுடைய அவர்  அலையாடலில் ஈடுபட சிறிய தோற்றத்தைக் கொண்டவராயினும் இல்லையென்ற அளவுக்கு சமநிலை வாய்க்கப் பெற்றவர். காலையுணவாக அவர் கஞ்சியை அல்லது தானிக் கூழையே பாவிப்பதுடன்  மதிய போசனத்திற்கென பழ வகைகளையும்  இராச் சாப்பாட்டிற்கென உயர் புரதச் சத்துள்ள உணவுகளையும் எடுத்து வருகின்றார். போட்டிகள் முடிவுற்றதும் கோழி டிக்கா கூடிடுடுச் மசாலாவையே பெரிதும் விரும்பிச் சுவைக்கின்றார்

மெட்ரோநியூஸ்31/08/12

Thursday, August 2, 2012

மைக்கல் பெல்ப்ஸ் புதிய சாதனை


லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் தொடரிலான  4து200 மீற்றர்  நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர்  மைக்கேல்  பெல்ப்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை  19 பதக்கங்களுக்குச் சொந்தக்காரர்  என்ற புதிய சாதனையையும்  படைத்துள்ளார்.
 முன்னாள் சோவியத் வீரர்  லரிசா லட்டினியா   கடந்த 48 வருடங்களாக   தக்கவைத்திருந்த  ஒலிம்பிக்கின் 18 பதக்கங்களைச் சுவீகரித்தவர் என்ற சாதனையை  இதன்மூலம்  பெல்ப்ஸ் முறியடித்துள்ளார்.
  ஒலிம்பிக் போட்டிகளின்  அதிசிறந்த   வீரரென்ற   பெருமையை  அவருக்கு ஈட்டிக் கொடுத்த 19 பதக்கங்களை  அவர் அடைவதற்கு  சரித்திர முக்கியத்துவம்  வாய்ந்த கடந்த செவ்வா#க் கிழமையன்று அவருக்கு கிடைத்திருந்த அந்த இரண்டு பதக்கங்களுமே வழி வகுத்திருந்தன.
அவர் 200 மீற்றர்  பட்டர்ஃபிளை  போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் மைக்கேல் பெல்ப்ஸ் இதுவரை  15 தங்கப் பதக்கங்களையும், இரண்டு  வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளன.
மெட்ரோநியூஸ்01/08/12

Tuesday, July 17, 2012

ச‌ஞ்சிகையில் அழகு காட்டும் நீச்ச‌ல் வீராங்கனை



லண்டனில்  தொடங்கவுள்ள  ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத் திறன்   கொண்டோருக்கான படகோட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள வீராங்கனை ஒக்சனா மாஸ்டேர்ஸ் உகுகN தொலைக்காட்சி நிறுவனத்தின்  2012  ESPN  எனும் சஞ்சிகைக்கு முழு நிர்வாணக் கோலத்தில் அழகு காட்டியுள்ளார்.
பிரபலமான விளையாட்டு வீர வீராங்கனைகள் தங்கள் உடல் வசீகரங்களைப் பற்றி பேசும் சந்தர்ப்பத்தை வருடாந்தம் வழங்கி வரும் Body  சஞ்சிகையில் உக்ரைன் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த 23 வயதான வீராங்கனை தனது சிறுவயதில் தனது கால்கள் இரண்டையும் துண்டிக்கப்பட்ட நிலையில் வளர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. பளபளப்பான இந்தச் சஞ்சிகையின் பக்கங்களில் அவர் இறங்கு துறை ஒன்றில் தனது பட கோட்டும் துடுப்புகள் அருகே நிர்வாணமாக தோன்றுகின்றார். அத்துடன் உலகத்தரம் வாய்ந்த மெய்வல்லுநர்களான நியூயோர்க் கூடைப்பந்தாட்ட வீரர் டைசன் சாண்ட்லர் மற்றும் ஸ்லோவேக்கியா டெனிஸ் நட்சத்திரம் டானியெலா ஹன்டுசோவா ஆகியோரின் புகைப்படங்களும் இந்தச் சஞ்சிகையில் அலங்கரிக்கின்றன.

அநாதை இல்லமொன்றில் வளர்ந்த ஒக்சனாவுக்கு அங்கு உணவென்பது அருமையாகவே கிடைக்குமொன்றாக இருந்த படியால் தனது சிறுபராயத்தில் அவர் பெரும்பாலான நாட்களை உணவின்றியே கழித்தார். உணவின்றி தனது வாழ்நாளைக் கழிக்க முடியுமென கூறும் அவர் உக்ரைனில் உள்ள மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த அந்த அநாதை இல்லத்தில் உணவின்றி வளர்ந்த தனது துன்ப அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் அவர் உணவைப் பற்றி நான் கிஞ்சித்தும் நினைப்பதேயில்லை என்கிறார். இதனாலேயே தனக்கு கடினமான விடயங்களில் உணவை உட்கொள்வதும் ஒன்றென அவர் தெரிவித்துள்ளார். தனது ஏழாவது வயதில் தத்தெடுக்கப்பட்ட அவர் அதன் பின்னர் கெண்டுசியில் உள்ள லூயில்வில்லேக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தனது கிராமத்திற்கு அருகேயுள்ள அணுவாயுத உலையொன்றின் கதிர் வீச்சால் தனது இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டிருந்ததாகவும் ஓஃ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்க்காணலின் போது கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நான் கால்களுடன் பிறந்த போதிலும்  அவை அவலட்சணமான நிலையிலேயே இருந்தன. எமது கிராமத்தில் அடிக்கடி நிகழ்ந்த அணு உலைக் கதிர் வீச்சுக் கசிவினால் எனது கால்கள் இரண்டும் சுட்டுப் பொசுக்கப்பட்ட நிலையில் அவை துண்டிக்கப்பட்டன. தான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது படகு வலிக்கும் பயிற்சியில் ஈடுபட அவரது தாயாரால் ஊக்குவிக்கப்பட்ட ஒக்சானா காலப்போக்கில் அதில் தீவிர பற்றுக் கொண்டவராக விளங்கி இன்று ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுமளவுக்கு தன்னை ஆளாக்கிக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 29 தொடக்கம் செப்டெம்பர் 9 வரையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகள் முழு நேர
வேலை போன்றது. வாரத்தின் எழு நாட்களில் செல்வி மாஸ்டர் ஆறு நாட்களைக் தண்ணீரிலேயே கழித்து வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த 2010 ஆம் ஆண்டில் அவரது சகாவான ரொப் ஜோன்ஸ் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த விபத்தொன்றில் தனது கால்களை இழந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான சேர்பியாவில் நடைபெற்ற கலப்பு இரட்டையர்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசிலை இவர்களிருவரும் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2012 கோடை கால படகோட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ள இங்கிலாந்தின் ஒஹியோ தொடக்கம் டோர்ணி வரையான ஏரியில் தனது படகை எடுத்துக் கொள்ள காத்திருக்கவென தன்னால் முடியவில்லை எனவும் தான் ஆறு வருட காலமாகப் பெற்ற பயிற்சிகளில் மிகப் பெரிய பயிற்சி இந்தக் கோடை காலப் போட்டிகளே  எனவும் குறிப்பிட்ட ஒக்சானா நான் பரபரப்படைந்துள்ள நிலையில் பாலாடைக்கட்டி போன்ற பெரியதொரு குழந்தை போன்று புன்னகை செய்கிறேன் எனவும் கூறினார்.

மெட்ரோநியூஸ்16/07/12

ஜெசி ஒவென்ஸ் முதல்உசைன் போல்ட் வரை!


ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொன்றிலும்  ஆண்களுக்கான 100 மீற்றர் குறுந்தூர இறுதிப் போட்டியெனில் அங்கு ஒரே ஆரவாரமும் பரபரப்பும்தான். பத்து விநாடிகள் அல்லது அதற்குச் சற்றே குறைவான காலத்திற்குள் தூசு தட்டப்பட்டு நிறைவேற்றப்படும் ஒரு நிகழ்வே இது. ஆயினும் இந்த அரிய நிகழ்வானது  மாபெரும் வரலாறொன்றையும் டசின் கணக்கான கதைகளையும் சுமந்து வரும் அற்புத விளையாட்டாகவே கருதப்படுகிறது.
 கடந்த 1968 ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்த ஒலிம்பிக் இறுதிப் போட்டியொன்றின் போது பத்து விநாடிகளுக்குக் குறைவான நேரக் கணக்கில் ஓடி முடித்த முதலாவது மெய்வல்லுனரான ஜிம் வைரன்ஸ்  சாதனை படைத்து தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலங்கள் உருண்டோடி விட்டன. தற்போது உயர் தொழில் நுட்பம் வாய்ந்த ஓடுவதற்கு உதவும் கருவிகளின் வருகையால் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட வீரர்கள்  எவ்வளவுதான் முயற்சித்தாலும் குறைந்தளவான  சாதனைகளையே புரிந்து வருகின்றனர்.
தற்போதைய உலக சம்பியனான  உசேன் போல்டின் 9.58  விநாடிகள் சாதனை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டிகளின் போது முறியடிக்கப்படுமா என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கப்பட வேண்டும். ஆயினும் அதேவேளையில்  கடந்த 1936 இல் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் தொடங்கி சீனத் தலைநகர் பீஜிங்கில் கடந்த 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் வரையில்  இடம்பெற்ற 100 மீற்றர் இறுதிப் போட்டிகள் பற்றிய விபரங் கள்
2008 பீஜிங் உசைன் போல்ட்
(ஜமேக்கா)
எவராலும் பிடிக்க முடியாத சாதனை வீரர் போல்ட், உலக மற்றும் ஒலிம்பிக்  சாதனைகளை தகர்த்தெறிவதுடன்  இரண்டாவதாக வந்த வீரரை விட 30 மீற்றர் தூரம் முந்தி முடியும் கோட்டைக் கடந்து விடுகின்றார்.
2004 எதென்ஸ், ஜஸ்டின்
கட்லின் (அமெரிக்கா) 9.85
அமெரிக்க குறுந்தூர ஓட்ட வீரரான கட்லின் வேகமாக ஓடுகின்றார். ஆயினும் இறுதிக் கோட்டை நெருங்கும் போது அவர் போர்த்துக்கல் வீரர் பிரான்சிஸ் ஒபிக்வெலு மற்றும் தனது நாட்டவரான மோரிஸ் கிறீன் ஆகியோரை மயிரிழையில் முந்தி விடுகின்றார். ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டப் போட்டி  வரலாற்றில் அவரது சாதனையும் குறிப்பிடத்தக்கது



(அமெரிக்கா) 9.87
போட்டி  ஆரம்பத்தில் சறுக்கிய நிலையிலும் ஏனைய வீரர்களுக்கு நடுவே ஓடிய நிலையிலும் பாரிய இடைவெளியில்  ஓடி முடித்து சாதனை படைத்திருக்கின்றார்.
1996 அட்லண்டா டொனவன் பெய்லி கனடா 9.84
இந்தப் போட்டியில் பங்கு பற்றிய  பிரி த்தானிய வீரர் லின்போர்ட் கிறிஸ்டி இரு தடவைகள் பிழையாக ஓட ஆரம்பித்ததால் @பாட்டி நீக்கம் öŒ# யப்பட்டார். பத்து நிமிடங்கள் கழித்தே, போட்டி மீண்டும் ஆரம்பித்ததுடன்  பின் நிலையிலிரு ந்த பெய்லி அசுர வேகத்தில் ஓடி சாதனை படைக்
கின்றார்.
1992 பார்சிலோனா  லின்போர்ட் கிறிஸ்டி
(பிரித்தானியா 9.96)
முப்பத்திரண்டு வயதான கிறிஸ்டி நம்பிய வீரர்  ஃபிராங்கி ஃபிரெடெறிக்கை மயிரிழையில் முந்திய நிலையில்  சாதனை படைத்தார்.
1988 சியோல் பென் ஜோன்சன் (கனடா) 9.79
ஒரு சில மீற்றர்தூர இடைவெளியில் வெல்லும் ஜோன்சன் இரண்டு  தினங்கள் கழித்து போட்டிக்குப் பிந்திய ஊக்க மருந்துப் பரிசோதனையின் பின்னர் இரண்டாவதாக வந்த கார்ல் லெவிஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
1984  லொஸ் ஏஞ்செல்ஸ் கார்ல் லெவிஸ் (அமெரிக்கா) 9.99
லொஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற  லெவிஸ் தனது நீண்ட  அவயவங்களின் துணையுடன் வேகமாக  ஓடி ஏனைய  வீரர்களைப் பின் தள்ளி முதலாவது தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
1980 மொஸ்கோ அலன்வெல்ஸ் (பிரித்தõனியா 10.25
கியூபா வீரரான சில்வியோ லியனார்ட்டை மயிரிழையில் வெல்ஸ் வென்றார்.
1976 மொன்ரியல் ஹோஸ்லி குரோஃபோர்ட்  ட்ரினிடாட் 10.06
ஜமைக்காவின் வீரர் டொன் குவாரியை சவால் விடும் வகையில் குபோஃபோர்ட் வென்றார்.
1972 மியூனிச் வலெறி போர்ஸோவ்
(சோவியத் யூனியன் 10.14)
அமெரிக்க வீரர் ரொபேர்ட் டெய்லரை முந்தியபடி போர்ஸோவ் வென்றார்
1968 மெக்ஸிக்கோ நகரம்
ஜிம் ஹைன்ஸ் (அமெரிக்கா 9.95)
செயற்கைத் தன்மை வாய்ந்த டார்டõன் தட களத்தில் நடைபெற்ற இந்த முதலாவது ஒலிம்பிக் போட்டியில் ஹைன்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
1964 டோக்கியோ பொப் ஹேயெஸ் (அமெரிக்கா 10.0)
பத்து விநாடிகளில் ஓடி ஹேயெல் சாதனை.
1960  ரோம் ஆர்மின் ஹரி (ஜேர்மனி) 10.2
ஆறு வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் அமெரிக்க வீரர் டேவ் சிம்மை வென்று  ஹரி சாதனை
1956 மெல்போர்ன் பொபி
மொரோ (அமெரிக்கா)  10.62
மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் அடுத்தடுத்து மூன்று  தங்கப் பதக்கங்களை வென்ற மொரோ, முதலாவது தங்கப் பதக்கத்தை இப்போட்டியிலேயே வென்றார்.
1952 ஹெல்சிங்கி  லின்டி
ரெமிஜினோ (அமெரிக்கா) 10.79
விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் தான்வெற்றி பெற்று விட்ட
தாக நினைத்தபடி  இறுதிக் கோட்டைத் தாண்டும்போது ஜ@மக்காவின் வீரர் அவருக்கு பின்னால் மயிரிழையில் ஓடி முடித்தார்.
1948 லண்டன்  ஹரிசன்
டிலார்ட் (அமெரிக்கா) 10.3
தடை தாண்டி ஓட்ட நிபுணரான டிலார்ட்டுக்கும் இன்னுமொரு அமெரிக்க வீரரான பார்ணி ஈவெல்லுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. மயிரியிழையிலேயே டிரால்ட் தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
1936  பேர்லின்  ஜெசி ஓவென்ஸ் அமெரிக்கா 10.3
ஜேர்மனிய சர்வாதிகாரியான  அடொ ல்ப் ஹிட்லர் பார்த்து  ரசித்துக் கொண்டிருக்கையில் பேர்லின்  ஒலிம்பிக் போட்டிகளில் ஜெசி ஒவென்ஸ் தனது நான்கு தங்கப் பதக்கங்களையும் பெற்றார்.

மெட்ரோநியூஸ்16/07/12


Saturday, July 14, 2012

போலியான ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய நிர்வாண இளைஞன் கைது


போலியான ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய நிர்வாண இளைஞன் ஒருவன் கைது செய்ய‌ப்பட்டான். லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னமும் 14 நாட்களே உள்ள நிலையில் பிரித்தானியாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் 70 நாள் அஞ்சலோட்ட நிகழ்வின் 53 ஆவது நாளைய ஒலிம்பிக் தீபம் ஏந்தல் நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இளைஞரொருவர் நிர்வாணக் கோலத்தில் போலியான ஒலிம்பிக் தீபமொன்றைத் தனது கையிலேந்திய வண்ணம் ஓடியதால் பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது.
ஆமாம் 53 ஆவது நாளின் ஒலிம்பிக் தீபத்தை சேர் ரொஜர் பனிஸ்டர் ஏந்திச் செல்வதற்கென ஆயத்தமானார். இதன்@பாது ஒக்ஸ்போர்டில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் தனது மார்க்கத்தை பூர்த்தி செய்திருந்த லண்டன்  2012 ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான செபஸ்டியன் கோ பிரபு மெய் வல்லுநர்கள் அணியுடன் இணைந்தார். இதன் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து தடவைகள் தங்கப் பதக்கத்தை வென்றிருந்த சேர் ஸ்டீவ் ரெட்கி@ராவும் ஒலிம்பிக் தீபத்தை தேம்ஸ் நதிக் கரையோர நகரான ஹென்லியில் ஏந்திச்சென்றார். அந்த நேரத்தில் எவருமே எதிர்பாராத விதத்தில் அந்த நிர்வாணக் கோல இளைஞன் பார்வையாளர்களைக் கடந்து ஓடி ஒலிம்பிக் தீப அஞ்சலோட்ட நிகழ்வைக் குழப்பியடித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டான். மாறுபட்ட வர்ணக் கோடுகளை கொண்டிருந்த அவனது நிர்வாண மேனியின் பின்பக்கத்தில் (முதுகுப் புறம்) சுதந்திர திபெத் எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. நிர்வாணக் கோலத்தில் காட்சியளித்து பொது மக்கள் கண்ணியத்திற்கு களங்கம் கற்பித்த 27 வயதான ஹென்லியைச் சேர்ந்த அந்த இளைஞனைப் பொலிஸார் கைது செய்ததுடன் அவனைப் போர்வையொன்றால் போர்த்தியபடி அழைத்துச் சென்றனர்.


ஒக்ஸ்போட் ஷயர் நகரத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த அந்த ஒலிம்பிக் தீப அஞ்சலோட்ட நிகழ்வைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அந்தப் பரட்டைத் தலை நிர்வாண மனிதன் அங்கு குழப்பம் விளைவித்ததை நேரில் அவதானித்துக் கொண்டிருந்தனர். ஹென்லி நகர் வாசியொருவர் இதுபற்றி கூறுகையில்,
சனக் கூட்டத்திலிருந்து வெளியே வந்த நிர்வாண இளைஞன் போலியான தீபத்தை ஏந்தியபடி ஓடிக்கொண்டிருந்தான் என்றார்.
சுற்றுச் சூழல் விஞ்ஞானியான அன்ட்ரூ ரின்ஸ் லீ தெரிவிக்கையில், அந்த இளைஞன் எங்கிருந்தும் வரவில்லை. தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்த அவன் தான் நினைத்ததைச் சாதித்து விட்டானென்றே கூற வேண்டும் என்றார்.

மெட்ரோநியூஸ்13/07/12

Friday, July 13, 2012

லண்டன் ஒலிம்பிக் உதைப்பந்தாட்டம் 2

Mata_Reuters

ஸ்பெய்ன்
லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் ஓர் அங்கமாக விளங்கும் உதைபந்தாட்டப் போட்டிகளுக்கென யூரோ 2012 வெற்றிக் கிண்ணப் போட்டிகளில் அபாரமாக ஆடிய மூன்று ஆங்கில பிரிமியர் லீக் வீரர்களை ஸ்பெய்ன் தனது 22 பேரடங்கிய உதைபந்தாட்ட அணிக்கென தெரிவு செய்துள்ளது.

இத்தாலிக்கு எதிரான யூரோ 2012 இறுதிப் போட்டி வெற்றியின் போது நான்காவது கோலைப்போட்டிருந்த செல்ஸி அணி வீரர் ஜுவான் மாட்டா ஸ்பெய்ன் அணியின் வயது கூடிய மூன்று வீரர்களுள் ஒருவராக பெயர் குறிக்கப்பட்டுள்ளார். அவரது கழக ரக வீரரான ஓரியல் ரொமியூ (20) மற்றும் மன்செஸ்டர் யுனைடெட் கோல் காப்பாளர் டேவிட் டீ கீ (21) ஆகியோரும் 18 வீரர்களாகக் குறைக்கப்பட வேண்டிய ஒலிம்பிக் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

யூரோ 2012 சம்பியனான ஸ்பெய்ன் அணியின் இடது பின்கள வீரராக அபாரமாக விளையாடிய பார்ஸிலோனா அணியின் புதியவரான ஜோர்டி அல்பா ஒலிம்பிக் வீரர்கள் பட்டியலில் அணியின் தனிச்சிறப்புப் பெற்றவராக காணப்படுகின்றார்.  வீரர் மட்டாவும் அவரது கழக சக வீரர்கள் தியாகோ அத்லெடிக் பில்பாவோ வீரர் அன்டர் ஹெராரோ ஆகியோருடன் இணைந்து நடுகள ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்பெய்ன் அணியின் பயிற்சியாளரான லூயிஸ் மில்லா இது பற்றி தெரிவிக் கையில்,  தேசிய அணியென்ற வகையில் இந்த அணி அதே அடைவு மட்டத்தைக் கொண்டிருக்க வேண்டுமெனக் கோருவது நியாயமற்றதென நான் நம்புகிறேன். அணிக்கென குணநலன் இருப்பதுடன் அதையொத்த விளையாட்டு தத்துவமும் இருக்கவே இருக்கின்றது. ஆயினும் வேறுபாடான அழுத்தங்களைக்குள்ளான. வேறுபட்டதொரு அணியே இதுவாகும் எனக் குறிப்பிட்டார்.

சுவிற்ஸர்லாந்தும் பிரிமியர் லீக் போட்டிகளில் அபாரமாக விளையாடிய சில வீரர்களைத் தெரிவு செய்துள்ளது.
அவர்களுள் புல்காம் அணி வீரர் பச்டிம் கசாமி மற்றும் வில்லா கோல் காப்பாளர் பெஞ்சமின் கிரிஸ்ட் ஆகியோரும் அடங்குகின்றனர்.

மெட்ரோநியூஸ்09/07/12

Thursday, July 12, 2012

லண்டன் ஒலிம்பிக் உதைப்பந்தாட்டம்

ரயன் கிக்ஸ்

லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தானிய உதைபந்தாட்ட அணிக்கு ரயன் கிக்ஸ் (Ryan Giggs) தலைமை தாங்கவுள்ளதை பிரித்தானிய உதைபந்தாட்டச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரித்தானிய அணியில் உள்ள வயது கூடிய வீரர்களான கிரெய்க் பெலாமி மற்றும் மிக்கா ரிச்சார்ட்ஸ் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளிய நிலையில் தனது முதலாவது சர்வதேச சுற்றுப் போட்டியில் அணித் தலைவராகப் பங்கேற்கவுள்ள கிக்ஸை அணியின் பயிற்றுவிப்பாளரான ஸ்டுவர்ட் பியர்ஸ் பெயர் குறித்துள்ளார்.

இது குறித்து கிக்ஸ் கருத்து வெளியிடுகையில், தெளிவாக கூற வேண்டுமானால் நிறைய அனுபவம் பெற்றிருக்கும் நான் எமது அணியில் இடம்பெற்றுள்ள ஏராளமான இளைய வீரர்களை வழிப்படுத்துவதுடன் தலைவர் என்ற வகையில் எனது அனுபவத்தை அவர்களுக்கும் கற்றுக் கொடுக்க முடியுமென நம்புகின்றேன்.

இதுவரை பிரிமியர் லீக் பட்டங்கள் பன்னிரண்டையும், சம்பியன் லீக் பட்டங்கள் இரண்டையும் தனதாக்கிக் கொண்டுள்ள கிக்ஸ், எதிர்வரும் 20ஆம் திகதியன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பிரேஸிலுக்கு எதிரான முதலாவது பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ள பிரித்தானிய அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார். மிடில்ஸ்புரோவில் உள்ள ஆற்றங்கரையோரத்து விளையாட்டரங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னரான இந்த பயிற்சி இரட்டைப் போட்டிகளில் பிரேஸிலை எதிர்த்து பிரித்தானிய ஆண்கள் அணியும், சுவீடனை எதிர்த்து பிரித்தானிய மகளிர் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஒகஸ்டில் மிலேனியம் விளையாட்டரங்கில் உருகுவேக்கு எதிரான தங்கள் குழுவின் இறுதிப் போட்டிக்கு முன்னர், பிரித்தானிய அணியினர் எதிர்வரும் 26ஆம் திகதி செனகல் அணிக்கெதிராக ஓல்ட் ட்ராபோர்ட் விளையாட்டரங்கிலும் எதிர்வரும் 29ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்த்து வெம்பிளி மைதானத்திலும் விளையாடவுள்ளனர்.
பயிற்றுவிப்பாளர் பியர்ஸ் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஒலிம்பிக் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகளின் போது பிரித்தானிய அணியை ரயன் கிக்ஸ் தலைமையேற்று வழிப்படுத்துவார். தெரிவு செய்யப்பட்டுள்ள அணியின் அனைத்து வீரர்களும் (பதினெட்டுப் பேரும்) அபாரமான முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களாவர். அணித் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியானவர்களும் இருக்கின்றனர்.
வேல்ஸ் அணிக்கு ஏரன் ராம்சி தலைமையேற்கும் அதேவேளையில், மன்செஸ்டர் அணிக்கு மிகான் ரிச்சர்ட்ஸ் பல தடவைகள் தலைமை தாங்கியுள்ளார்.

விளையாட்டு அனுபவத்தின் அடிப்படையில் கிரெய்க் பெலாமி அல்லது ஏனைய இருவர் தலைமை தாங்க வல்லவர்களாக உள்ளனர். ஆயினும், இந்தக் குழுவினரிடையே தனிச் சிறப்புப் பெற்றவராக விளங்குகின்றார். நான் தெரிவு செய்துள்ள மூன்று வயது கூடிய வீரர்கள் தேர்வு குறித்தும் நான் மிக்க மகிழ்வடைகின்றேன்.
பிரிமியர் லீக் போட்டிகளில் வீரர்கள் காண்பித்த திறமை அடிப்படையிலேயே அவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார். அமெரிக்காவில் லா கெலக்ஸி அணிக்காக விளையாடி வரும் டேவிட் பெக்கம் ஒலிம்பிக் அணியில் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்09/07/12

Wednesday, July 11, 2012

பிரேஸில் உதைப்பந்தாட்ட அணி தெரிவு

நெய்மர்,

லண்டனில்எதிர்வரும் 27 ஆம் திகதி  கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள  லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான உதைபந்தாட்ட அணியை அறிவித்துள்ளது. பலமாக  மோதும் நட்சத்திர வீரர்களெனக் கருதப்படும் நெய்மர், ஹல்க், அலெக்சான்ரே படோ ஆகியோர் உள்ளிட்ட பலம் வாய்ந்த தனது கால்பந்தாட்ட அணி வீரர்களை பிரேஸில் பெயர் குறிப்பிட்டுள் ளது.
பிரேஸில் அணியின் பயிற்சியாளரான மனோ மெனிஸெஸ் போர்டோ அணி வீரர் ஹல்க் ஏ.சி. மிலான் அணியின் தியாகோ சில்வா மற்றும் ரியல்மட்ரிட் அணி இடது பின்கள வீரர் மார்செலோ ஆகிய மூன்று வயது கூடிய வீரர்களை மேற்படி  போட்டிகளுக்காக தெரிவு செய்துள்ளார். சான்டோஸ் அணியின் நட்சத்திர வீரர் நெய்மமர் மூத்த பிரேஸில் அணிக்கான 18 போட்டிகளில்  ஒன்பது கோல்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவரைப் போன்றே  ஹல்க் மற்றும் படோ ஆகியோரும் தங்கள் அபாரத் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த  அணியில்  யங் பிரிமியர் லீக் வீரர்களான மன்செஸ்டர் யுனைட்டெட்  அணி வீரர் ரபேல் டொட்டன் ஹாம் அணியின் நடுகள வீரர் சன்ட்ரோ ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 29 இல் பெலராஸ் அணிக்கும் ஓகஸ்ட் முதலாம் திகதி நியூசிலாந்திற்கும் எதிராக விளையாடுவதற்கு முன்னர் பிரேஸில் அணி சீ குழுவில் எதிர்வரும் 26 ஆம் திகதி எகிப்துடன் பயிற்சிப் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி மிடில்ஸ்புரோவின் ஆற்றங்கரை விளையாட்டரங்கில்  பிரித்தானியாவுக்கெதிரான பயிற்சிப் போட்டியில் பிரேஸில் அணி விளையாடவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
பிரேஸில் அணியின் வீரர்கள் ரபேல் கப்ரால், நெடோ அலெக் சான்ட்ரோ மார்சலோ, ரபேல் டானியோ, தியாகோ சில்வா, புரூனோ வவுனி, ஜுவான், சான்டரோ, ரொமுயூலோ, போலோ ஹென்றி கான்சோ, ஒஸ்கார், லுகாஸ் மோரோ நெய்மர், லியான்ட்ரோ டாமியாவோ, அலெக்சான்ட்ரே படோ , ஹல்க்.

மெட்ரோநியூஸ்09/07/12

அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி அறிவிக்கப்பட்டது


கடந்த 2008 ஆம் ஆண்டில் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்கப் பதக்கங்களைத்  தட்டிச் சென்ற ஐந்து வீரர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள லண்டன் 2012  ஒலிம்பிக் ஆண்களுக்கான  பன்னிரெண்டு பேரடங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
@வபு@ரான் ஜேம்ஸ், கோபே பிரியன்ட் கார்மெலோ அந்தனி,  கிறிஸ்போல் மற்றும் டெரோன் வில்லியம்ஸ் ஆகிய ஐந்து வீரர்களுமே  அவர்களாவர்.
அமெரிக்க ஒலிம்பிக் குழுவின் இறுதி அங்கீகாரம்  இன்னமும் பெறப்பட வேண்டிய போதிலும் லாஸ் வெகாஸில் நடத்தப்பட்ட அமெரிக்க அணிக்கான இரண்டு பயிற்சித் தொடர்களையடுத்தே அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கத் தலைவர் ஜெரி கௌவான் ஜெவோ மேற்கண்டவாறு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
""பன்னிரெண்டு வீரர்களும்
விளையாட வேண்டிய கிரமத்தைக் குறிக்கும் முறைப் பட்டியலைத் தயாரிக்கும் போது காயப்பட்டோரின்  எண்ணிக்கையைக் கணக்கிலெடுக்காமல் அவர்கள் விளையாட்டில் காட்டிய அபõரத் தன்மையை கருத்திலெடுத்தே இந்தத் தெரிவை நாம் மேற்கொண்டோம்'' எனக் கூறியுள்ள அவர் இதன் இறுதி தேர்வுகள் நிச்சயமாக மெய்வன்மையை வெளிப்படுத்தவல்ல போட்டியொன்றை விரும்பும் எங்களுக்குத் திருப்தியளிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அணி வீரர்களுக்கான அண்மைய பயிற்சித் தொடர்களின்  போது சிக்காக்கோ புல்ஸ் அணியைச் சேர்ந்த டெரிக் ரோஸ்,  ஓர்லாண்டோ மாஜிக் அணியைச் சேர்ந்த ட்வைட் ஹோவாட் மற்றும் மியாமி ஹுட் அணி வீரர்களான ட்வையானி  வேட் மற்றும் கிறிஸ்போஷ் ஆகியோர்  உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் காயமடைந்திருந்தமை அமெரிக்க ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட அணிக்கோர் பலத்த அடியாகவே இருந்தது  குறிப்பிடத்தக்கது.

தேசிய கூடைப்பந்தாட்ட  அணிக்கான வீரர்கள் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களும் உயிரைக் கொடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இறுதித் தீர்வை  தீர்மானிப்பதில் நாம் பெரும் சங்கடப்பட வேண்டியிருந்ததென அமெரிக்க பயிற்றுவிப்பா ளர் மைக் கிறிஸ்ஸேப்ஸ்கி தெரிவித்தார்.

மெட்ரோநியூஸ்09/07/12

Tuesday, July 10, 2012

முறியடிக்கப்படாத சாதனைக‌ள்


 உலகில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும்  ஒலிம்பிக்  போட்டி  முதன் முதலில் 1886ஆம் ஆண்டு கிரேக்கத்தின்  எதென்ஸ்  நகரில் நடைபெற்றது.  சில நாடுகள் தனியாகவும்  சில நாடுகள் இணைந்தும் முதலாவது ஒலிம்பிக்கில்  போட்டியிட்டன.  அமெரிக்கா, கிறீஸ், ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, டென்மார்க், சுவிட்ஸர்லாந்து,  ஆகிய நாடுகளின் வீரர்கள் முதலாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். 11 தங்கம், ஏழு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களுடன்  அமெரிக்கா முதலிடம் பெற்றது. 10 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன்  கிரீன் இரண்டாமிடம் பெற்றது. ஆறு தங்கம்,  ஐந்து வெள்ளி, மூன்று வெள்ளிப் பதக்கங்களுடன் ஜேர்மனி மூன்றாமிடம் பெற்றது.
ஒலிம்பிக்கில்  அமெரிக்காவின் ஆதிக்கமே அதிகம். சோவியத் ரஷ்யா அமெரிக்காவுடன் போட்டி  போட்டு சில ஒலிம்பிக்கில்  முதலிடம் பெற்றது. சோவியத் ரஷ்யா உடைந்த பின்  அமெரிக்காவின்  கையே மேலோங்கியது. 2008ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற  ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது சீனா.  சீன  வீரர்கள்  அதிக தங்கப் பதக்கத்தைப்  பெற்று முதலிடம் பிடித்தனர்.

அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பெற்றது. 36 தங்கம் 37 வெள்ளி, 34 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாமிடம் பெற்றது. ரஷ்யா மூன்றாமிடத்தையும்,  இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன. அதிக தங்கப் பதக்கங்களுடன்  முதலிடம் பிடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முயற்சிக்கிறது. சீனாவுக்கும் பதிலடி கொடுத்து இழந்த முதலிடத்தை மீண்டும் பிடிக்க  வேண்டும் என்ற முனைப்புடன் அமெரிக்கா ஒலிம்பிக்கை எதிர்நோக்குகின்றது.

ஒலிம்பிக்கில் நூற்றுக்கும் அதிகமான  போட்டிகள் இருந்தாலும் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப் போட்டிகளும் அஞ்சலோட்டமுமே  பரபரப்பும் விறுவிறுப்பும் உடையன. நீச்சல், ஜிம்னாஸ்ட்டிக் என்பனவும்  ரசிகர்களைக் கட்டிப் போடவல்லன. 100 மீ, 200 மீ ஆகிய இரண்டு போட்டிகளிலும் மின்னல் போல் ஓடும் உசைன் போல்ட் மீது  அதிக  எதிர்பார்ப்பு உள்ளது.  100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும்  உலக சாதனை ஒலிம்பிக் சாதனை செய்த தங்க மகன்.
உசைன்போல்ட்டுக்கு சவாலாகப் புறப்பட்டுள்ளனர் யொஹான் பிளேக். ஒலிம்பிக்  தகுதி காண் போட்டியில் 100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.
400 மீ @ஜான்ஸன் (அமெரிக்கா) 500 மீ, 10000 மீ பெக@ல (எதியோப்பியா) 400 மீ நேடில்ஸ் யொப் (அமெரிக்கா) ஆகியோரின் உலக சாதனையும்,  ஒலிம்பிக் சாதனையும் இன்னமும்  முறியடிக்கப்படவில்லை.
4 x 100 மீ அஞ்சலோட்டத்தில் ஜமெய்க்காவும் 4 x 400 மீ அஞ்சலோட்டத்தில் அமெரிக்காவும் ஒலிம்பிக் சாதனையையும் உலகசாதனையும் தம் வசம் வைத்திருக்கின்றன.


ரமணி
மெட்ரோநியூஸ்09/07/12



Saturday, July 7, 2012

ஒலிம்பிக் தீபத்தை பறிக்க முயன்ற சிறுவர்கள்


ஒலிம்பிக் தீப அஞ்லோட்டத்தினுள் இடையே புகுந்த பாடசாலை சிறுவர்கள் இருவர் தீவிர பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை வெடுக்கெனப் பறித்தெடுக்க முனைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒலிம்பிக் தீபத்தை மிகவும் பாதுகாப்புடன் அஞ்சலோட்டம் மூலம் பிரித்தானியா முழுவதும் எடுத்துச் செல்லும் 45ஆம் நாள் நிகழ்வு கௌன்றி ஊடாக நடைபெற்ற போதே இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புனிதமான ஒலிம்பிக் தீபத்தைப் பாதுகாக்கவென அதி உச்ச பயிற்சி பெற்ற பாதுகாப்பு அணி அங்கிருந்த போதிலும் அசட்டுச் சிரிப்புடன் காணப்பட்ட இந்த இரண்டு சிறுவர்களும் அந்த இரண்டு அடி நீளமுடைய ஒலிம்பிக் தீபத்தை வெடுக்கெனப் பறிப்பதற்கு முன்னர் அங்கு போடப்பட்டிருந்த பொலிஸ் தடையையும் மீறி உள்ளே நுழைந்துள்ளனர்.  

கறுத்த பீனி தொப்பிகளையும் பாடசாலைச் சீருடைகளையும் அணிந்த நிலையில் காலை 7.20 மணியளவில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லவென ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அந்த ஐந்து  பணியாளர்களிடையே ஒலிம்பிக் தீபம் கைமாற்றப்பட்ட வேளை, அவர்களையும் முந்தியபடி இரு சிறுவர்களும் பாய்ந்து ஒலிம்பிக் தீபத்தை தாவிப் பிடித்தனர்.
இதனைக் கண்ட பொலிஸாரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சனக்கூட்டத்திற்குள் புகுந்து அந்தக் குறும்புக்காரச் சிறுவர்கள் இருவரையும் விரட்டியடித்தனர். இரண்டு மெய் வல்லுநர்களிடையே ஒலிம்பிக் தீபம் கைமாற்றப்பட்டுக் கொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத சம்பவம் இடம்பெற்றது.
ஒலிம்பிக் தீபத்தை கையிலேந்தியவாறு ஓடி வந்திருந்த ஆண் போட்டியாளர் ஒருவர் இதனைக் கெட்டியாக இறுகப் பிடித்தவாறு இருந்தபோது, பாதுகாப்பு அணியினர் விரைந்து செயற்பட்டு சிறுவர்களை அப்புறப்படுத்தினர். ஒலிம்பிக் தீப அஞ்சல் நிகழ்வின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள 70 பேரடங்கிய மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரே இவ்வாறு விரைந்து செயற்பட்டு விபரீதம் ஏற்படாதவாறு தடு த்து நிறுத்தியவர்களாவர். சாம்பல் நிற ரீஷேர்ட்டுகளையும், காற்சட்டைகளையும் அணிந்த நிலையில் நாளொன்றுக்கு முப்பது மைல்கள் வரை அடிக்கடி ஓடும் இந்தப் பாதுகாப்பு அணியினர், கடந்த 2010இல் இதற்கென விண்ணப்பித்திருந்த 664 பேரில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

.இந்தக் குறும்புக்கார இளையோர் இருவரினதும் திடீர் தாக்குதலால் ஒலிம்பிக் தீப அஞ்சல் நிகழ்வு எதுவிதத்திலும் பாதிப்படையவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார்,  ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லும் வழியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதும் குறுக்கே ஓடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் எச்சரித்துள்ளனர்இந்த  சம்பவத்தை நேரில் பார்த்த அலுவலகப் பணியாளரான பிரையன் வோர்ட் (34) இது பற்றி தெரிவிக்கையில், அந்தக் காட்சி நம்ப முடியாதளவுக்கு ஆபத்தானதாகவே இருந்தது. ஏனெனில், அந்தச் சிறுவர்கள் இருவரும் உண்மையில் ஒலிம்பிக் தீபத்தை தொட்டே விட்டனர். தீபத்தை ஏந்தி வந்தவர் அதனைக் கீழே போட்டிருந்தால் அந்தச் சிறுவர்கள் தீப்பற்றி எரிந்திருப்பார்கள் அல்லது வேறு எவரேனும் எரிகாயங்களுக்குள்ளாகியிருப்பர் எனவும் கூறினார். 
பிரித்தானியாவில் ”சுற்றிக் கொண்டிருக்கும் இந்த 70 நாள் ஒலிம்பிக் தீப அஞ்சல் ஓட்டம் நிகழ்வு, ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்ப வைபவத்தில் முடிவடையும்.

 மெட்ரோநியூஸ்06/07/12

Friday, July 6, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 8

சுவீடன் 

லண்டனில் ஒலிம்பிக்கில் மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஐரோப்பா கண்டத்தில் இருந்து பிரான்ஸ், சுவீடன் ஆகியன தேர்வு பெற்றுள்ளன. ஒலிம்பிக்கை நடத்தும் நாடான இங்கிலாந்து மகளிர் நேரடியாகத் தெரிவாகியுள்ளது.
பிரான்ஸ் மகளிர் உதைபந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இது 2004 இல் நடைபெற்ற தகுதிகாண் போட்டியல் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய பிரான்ஸ், ஒலிம்பிக் விளையாடும் தகுதியை இழந்தது.
பிரான்ஸ் அணியில் பயிற்சியாளராக 2007 ஆம் ஆண்டு பினி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மார்ச் வரை நடைபெற்ற 12 போட்டிகளில் பிரான்ஸ் தோல்வியடையவில்லை. கனடாவுடனான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, வடகொரியா ஆகியவற்றுடன் குழு ஜீ யில் உள்ளது பிரான்ஸ்.

மகளிர் உதைபந்தாட்ட அணிகளில் பலவாய்ந்தவற்றில் சுவீடனும் ஒன்று என்று ஒலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாகப் பங்குபற்றிய அணி. 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில்ஜேர்மனியிடம் தோல்வி கண்டு நான்காவது இடத்தைப் பெற்றது.
2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிவரை முன்னேறியது. பிரான்ஸுடனான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் எதிரணிகளுக்கு சவால் விடும் வகையில் உள் ளது.  ஜப்பான், கனடா, தென் ஆபிரிக்கா ஆகியவற்றுடன் குழு எஃப் இல் உள்ளது சுவீடன்.

இங்கிலாந்து மகளிர் உதைபந்தாட்ட அணி முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற் றுகிறது. 2007, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மகளிர் உதைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் காலிறுதிவரை முன்னேறி தோல்வியடைந்தது.
யூ.ஈ.எஃப். ஏ 2009 மகளிர் சம்பியன் கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாமிடம் பெற்றது.நியூஸிலாந்து, கமரூன், பிரேஸில் ஆகியவற்றுடன் குழு ஈ யில் உள் ளது இங்கிலாந்து.
ரமணி
மெட்ரோநியூஸ்06/07/12

Friday, June 29, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 7

ஜப்பான்  

ல‌ண்டன் ஒலிம்பிக் மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு 12 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. ஆண்கள் உதைபந்தாட்டப் போட்டியைப் போன்றே பெண்கள் உதைபந்தாட்டமும் விறுவிறுப்பு மிக்கதாக உள்ளது. ஒலிம்பிக் பெண்கள் உதைபந்தாட்டத்தில் அமெரிக்காவின் கையே மேலோங்கியுள்ளது. 1996, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டிகளில் அமெரிக்க மகளிர் அணி தங்கம் வென்றது. 2004, 2008 ஆம் ஆண்டுகளின் இறுதிப் போட்டிகளில் பிரேஸிலை வென்று அமெரிக்கா தங்கம் வென்றது.  இறுதிப் போட்டியில் 2000 ஆம் ஆண்டுநோர்வேயிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.
2008, 2004 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்ற பிரேஸில் 2009, 1996 ஆகிய ஆண்டுகளில் நான்காம் இடம்பெற்றது.
ஜேர்மனிய மகளிர் உதைபந்தாட்ட அணியும் ஒலிம்பிக்கில் சாதனை செய்துள்ளது. 2000, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் மூன்றாமிடம் பெற்று வெண்கலம் வென்றது.
2000 ஆம் ஆண்டு தங்கம் வென்ற நோர்வே 1996 ஆம் ஆண்டு 3ஆம் இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றது. லண்டன் ஒலிம்பிக் மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் ஆசியாக் கண்டத்தில் இருந்து ஜப்பானும், வட கொரியாவும் தகுதி பெற்றுள்ளன.

ஒலிம்பிக் விளையாடும் தகுதியைப் பெறும் இறுதி சுற்று சீனா, வடகொரியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் அவுஸ்திரேலியாவும் போட்டியிட்டது.
ஆபிரிக்க கண்டத்தில் இருந்து கமரூ னும் தென் ஆபிரிக்காவும் தகுதி பெற்றன. நைஜீரியா எதியோப்பியா ஆகியன இறுதிச் சுற்று வரை முன்னேறின. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, சுவீடன் ஆகியன ஒலிம்பிக் தகுதி காண் இறுதிப் போட்டியில் விளையாடின. பிரான்ஸ், சுவீடன் ஆகியன வெற்றி பெற்று ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றன. ஒலிம்பிக்கை நடத்தும் நாடான இங்கிலாந்து நேரடியாகத் தகுதி பெற்றது.

வட அமெரிக்காவிலிருந்து கனடாவும் அமெரிக்காவும் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றன. தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸிலும் கமரூனும் தகுதி பெற்றுள்ளன. ஓசியானிக் தீவுகளிலிருந்து பபுவா நியூகினியை 150 என்ற கோல் கணக்கில் வென்ற நியூஸிலாந்தும் ஒலிம் பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற் றது. பப்புவா நியூகினித் தீவுகளின் பல மான நாடான நியூஸிலாந்து மகளிர் அணி ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டு பீஜீங் ஒலிம்பிக்கில் முதன் முதல் பங்கு பற்றிய நியூஸிலாந்து இப்போது 2ஆவது தடவை விளையாடத் தகுதி பெற்றுள்ளது. இங்கி லாந்து, பிரேஸில், கமரூன் ஆகியவற்று டன் குழு ஈ யில் உள்ளது நியூஸிலாந்து.

2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் முதன் முத லில் வடகொரிய மகளிர் அணி விளையா டத் தகுதி பெற்றது. பிரேஸில், நைஜீரியா, ஜேர்மனி ஆகிய பலம் வாய்ந்த அணிகளுடன் விளையாடி முதல் சுற்றிலேயே வெளியேறிய நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் வட கொரியா ஒரு கோல் அடித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், கொலம்பியா ஆகியவற்றுடன் ஜீயில் வடகொரியா உள் ளது.
1996 ஆம் ஆண்டு முதன் முதலாக ஒலிம்பிக்கில் தடம் பதித்த ஜப்பான் பெண்கள் உதைபந்தாட்ட அணி மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் சுற்றுடன் வெளியேறிய ஜப்பான் 2004 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அரை இறுதி வரை முன்னேறியது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜேர்மனியிடம் 4  2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று நான்காவது இடத்தைப் பிடித்தது.
கனடா, சுவீடன், தென்னாபிரிக்கா ஆகியவற்றுடன் குழு எஃப்பில் உள்ளது ஜப்பான்.
ரமணி
மெட்ரோநியூஸ்29/06//12

Sunday, June 17, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 6



உருகுவே 
பிரேஸில்

பிரேஸில்
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவில் இருந்த பிரேஸில்,உருகுவே ஆகியன தகுதி பெற்றுள்ளன.
உதைபந்தாட்ட சாம்ராஜ்யத்தின் பலம் வாய்ந்த பிரேஸில் இதுவரை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை. பிரேஸிலின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கோல்டன் போய் என அழைக்கப்படும் நைமாரின் பங்களிப்புடன் பிரேஸில் இம் முறையும் தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1984 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது பிரேஸில். 1988 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் சோவியத் யூனியனிடம்தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.  2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெல்ஜியத்தை வென்று வெண்கலம் பெற்றது. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போர்த்துக்கலை வென்று வெண்கலப்பதக்கம் பெற்றது. 1976 ஆம் ஆண்டு மொன்டேரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியனிடம் தோல்வியடைந்து நான்காம் இடம் பெற்றது.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட தென் அமெரிக்க சம்பியன் கிண்ணத்தை வென்ற பிரேஸில் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது. தொடர்ந்து 11 ஆவது தடவையாக தென் அமெரிக்க சம்பியனான பிரேஸில் கோல்டன் போய் நைமர் ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒன்பது கோல் அடித்தார். இத்தொடரில் எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பிரேஸில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.
நைமர், மாலோ, ஹென்றி கியூகன்சோ, லூகாஸ், லென்ட்@ரா டமியோ ஆகி@யாரின் துடிப்பான விளையாட்டு பிரேஸிலுக்கு தங்கத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வதேசப் போட்டிகளில் தடம் பதித்த லென்ட்ரோமியோ கோல்டன் போய் நைமார் ஆகிய இருவரும் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
ஒலிம்பிக் உதைபந்தாட்ட போட்டிகளில் சாதனை படைத்த டுங்கா (1984), டப்பரல், நிக்கோடா கோமஸ், ஜோர் கின் கூ, மகின் கூ, ரொமாரியே (1980), டிடா, ரொபோட்டோ காலோஸ், பெபெஹோ, ரிவால்டோ (1996), ரொனால்டி னோ ( 2000  2006) ஆகியோரைப் போன்று பிரேஸிலின் இன்றைய வீரர்களும் தடம் பதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எகிப்து, பெலாரஸ், நியூஸிலாந்து ஆகியவற்றுடன் குழு பி இல் உள்ளது பிரேஸில். உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை 2014 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கையும் நடத்துவதற்கு தயாராய் உள்ளது பிரேஸில்.

உருகுவே
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவிலிருந்து தகுதி பெற்ற இரண்டாவது நாடு உருகுவே. 20 வயதுக்குட்பட்ட தென் அமெரிக்கா சம்பியன் இறுதிப் போட்டியில் விளையாடியமையால் உருகுவே லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் பிரேஸிலிடம் தோல்வியடைந்தது உருகுவே.
1924 ஆம் ஆண்டு பாரிஸிலும் 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்ரர்டரமிலும் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் உதைபந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்றது உருகுவே. பாரிஸில் சுவிட்ஸர்லாந்தையும் ஆம்ஸரர்டாமில் ஆர்ஜென்ரீனாவையும் வீழ்த்தி தங்கம் வென்றது உருகுவே. 1928 ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்பிய உருகுவே 84 வருடங்களின் பின் இப்போது தான் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.
கோல் கீப்பரான சல்வடோர் இசாஸோவை மீறி கோல் அடிப்பது சற்று சிரமமானது டியுகோ பொலன்ஸா, லென்ரோகபரேரா ஆகியோர் பின்கள வீரர்களாக விளையாடும்போது அவர்களை மீறிப் பந்து கோல்செல்லாவண்ணம் செயற்படுவார்கள்.
மரிசா வெசினோ, டேவிட் ரெக்செரியா ஆகியோரின் துடிப்பான விளையாட்டு எதிரணி வீரர்களை திக்கு முக்காடச் செய்யும்.
பெட்ரோ பெற்ரோனி, ஹெக்ரர் ஸ்கொரன், ஜோஜாசி நசாஸி, அன்ரஸ் மஸ்ஸெல்லா, ச‌ன்ரோஸ் உர்டிநரன் (1924 28 ஏஞ்சல் ரொமானோ (1924) ஹெக்டிர் கஸ்ரோ, அந்தோனியோ கம்போலோ (1928) ஆகியோரின் சிறப்பான விளையாட்டினால் உருகுவே ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றது.
ரமணி
மெட்ரோநியூஸ்15//06//12

Friday, June 8, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 5

மெக்ஸிக்கோ 

மெக்ஸிக்கோ
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு வட அமெரிக்கா மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிக்கோ, ஹொண்டூரால் ஆகியன தகுதி பெற்றுள்ளன.
ஆம்ஸ்ரடாமில் 1928 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மெக்ஸிக்கோ உதைபந்தாட்ட அணி முதன் முதலில் கலந்து கொண்டது. 1968 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானிடம் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பெற்றது மெக்ஸிக்கோ. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறியது.
23 வயதுக்குட்பட்ட இணிணஞிச்ஞிச்ஞூ சம்பியனான மெக்ஸிகோ விளையாடிய சகல போட்டிகளிலும் வெற்றி பெற்றது. கனடாவுடனான அரையிறுதிப் போட்டியில் 3  1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மெக்ஸிக்கோ லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 2  1 என்ற கோல் கணக்கில் ஹொன்டூராவை வென்று சம்பியனாகி சாதனை படைத்தது. ஹொண்டூராஸ் ஐந்து போட்டிகளிலும் 26 கோல்கள் அடித்தது. எதிரணிகள் மூன்று கோல்களை மாத்திரம் அடித்தன.
மெக்ஸிக்கோவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட (பீஃபா) சம்பியன் 2011 ஆம் ஆண்டு கொலம்பியாவில் பீஃபா நடத்திய வெற்றி 20 வயதுக்குட்பட்ட (பீஃபா) சம்பியன் ஆகியன மெக்ஸிக்கோவுக்கு கூடுதல் பலமாக உள்ளன.
டியோகோ ரியாஸ், ஹெக்டர் ஹெரேரா, மார்கோபபியன், அலன்புலிடோ, எரிக் ரொரிஸ் ஆகியோரின் வேகத்துக்கு எதிரணி வீரர்கள் தடை போடுவது சிரமமானது. மார்கோபடியன், அலன் புலிடோ ஆகியோர் தலா ஐந்து கோல்கள் அடித்துள்ளனர். வடகொரியா, ஹோகென், சுவிட்ஸர்லாந்து ஆகியவற்றுடன் குழு "பீ'யில் உள்ளது மெக்ஸிக்கோ.
ஹொண்டூராஸ்  

ஹொண்டூராஸ்
சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹொண்டூராஸ் உதைபந்தாட்ட அணி முதன் முதலில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கிலும் ஹொண்டூராஸ் அணி விளையாடியது. இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஹொண்டூராஸ் முதல் சுற்றுடன் வெளியேறியது.
சிட்னி ஒலிம்பிக்கில் டேவிட் சுஹாசோ அதிகபட்சமாக நான்கு கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
23 வயதுக்குட்பட்ட இணிணஞிச்ஞிச்ஞூ சம்பியன் போட்டியில் பனாமாவுடனான போட்டியில் 3  1 என்ற கோல் கணக்கிலும், டிரினிலாண்ட் அன்ட்டுபாக்கோ உடனான போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கிலும் ஹொண்டூராஸ் வெற்றி பெற்றது.
மெக்ஸிக்கோவுடனான போட்டியில் 3  0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. எல்சல்வடோருடனான அரையிறுதிப் போட்டியில் 3  2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றது ஹொண்டூராஸ். மெக்ஸிக்கோவுடனான இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 2  1 என்ற கோல் கணக்கில் ஹொண்டூராஸ் தோல்வியடைந்தது.
ஜொனி லெவெரொன், கெர்சன் ரொடாஸ், ரொஜத்ரோஜாஸ், எடி ஹெனன்ட்ஸ் ஆகியோர் ஹொண்டூராஸின் பலம் மிக்க வீரர்களாவர். ரொஜர் ரோஜாஸ் எடி ஹெனன்ட்ஸ் ஆகியோர் தலா மூன்று கோல் அடித்துள்ளனர்.
 ரமணி
மெட்ரோநியூஸ்29/05/12  

Friday, June 1, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 4

ஸ்பெய்ன்  

ஸ்பெய்ன்
லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. உலகக் கிண்ண சம்பியனான ஸ்பெய்ன் சாதிக்கும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் உதை பந்தாட்ட அணி தகுதி பெற்றது. அதன் பின்னர் 2முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றும் தகுதியை இழந்தது. 12 வருடங்களின் பின் மீண்டும் ஸ்பெயின் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுகிறது.
21 வயதுக்குட்பட்ட யூ. ஈ. எஃப். ஏ. ஐரோப்பிய கிண்ண சம்பியன் போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதால் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. முன்னதாக நடை பெற்ற அரை இறுதிப் போட்டியில் பெலாரஸுடன் விளையாடி 3  1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. செக் குடியரசு, உக்ரைனுடனான போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஸ்பெயின் இங்கிலாந்துடனான போட்டியைச் சமப்படுத்தியது.
அட்ரின், டேவிட் டி கி, செசர் அஸபிலியூட், அன்டர் ஹெராரே, ஒரி ஒல் ரொமியு ஆகியோர் ஸ்பெயின் உதை பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர்கள். தென் ஆபிரிக்காவில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் சம்பியனான ஸ்பெயின் அணியில் விளையாடிய ஜுவன் மாதா, ஜவி மாட்டின் ஆகியோர் இருப்பது கூடுதல் பலமாக உள்ளது. அட்ரின் ஐந்து கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளார்.
1920 ஆம் ஆண்டு அன்ட் வேட்பில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பெல்ஜியத்துடன் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 1992 பார்ஸிலோனா ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் போலந்துடனான போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றது.
ஹொண்டூராஸ், ஜப்பான், மொராக்கோ ஆகியவற்றுடன் குழு "டி' யில் ஸ்பெய்ன் உள்ளது.
சுவிட்ஸர்லாந்து 
சுவிட்ஸர்லாந்து
ஒலிம்பிக் உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை 84 வருடங்களின் பின்னர் பெற்றுள்ளது சுவிட்ஸர்லாந்து. 1924 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் உதை பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவேயிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் தாய் நாடு திரும்பினர் சுவிட்ஸர்லாந்து வீரர்கள். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ் டர் டமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விøயாடிய சுவிட் ஸர்லாந்து முதல் சுற்றுடன் வெளியேறியது. டென்மார்க்கில் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்ட யூ. ஈ. எஃப். ஏ. கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் 0  2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது. 
முன்னதாக அரை இறுதியில் 2  0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை வென்றது. ஐரோப்பாவின் பல கழகங்களில் விளையாடும் இளம் வீரர்கள் சுவிட் ஸர்லாந்து உதை பந்தாட்ட அணியில் உள்ளனர். 
மிக்கார்டோ லாட்றிக், ஒலிவர் பவ், சிகியூரி, வலன் ரின்ஸ் ரொக்கர் ஆகிய இளம் வீரர்கள் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பர். அட்மிர் மெஹதி மூன்று கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரைக் கட்டுப்படுத்துவது எதிரணி வீரர்களுக்கு சிரமமாக இருக்கும். 
மெக்ஸிகோ, வடகொரியா, கோபன் ஆகியவற்றுடன் குழு "பி'யில் உள்ளது சுவிட்ஸர்லாந்து
.ரமணி
மெட்ரோநியூஸ்29/05/12