Showing posts with label உலகக்கிண்ணம் 2017. Show all posts
Showing posts with label உலகக்கிண்ணம் 2017. Show all posts

Tuesday, October 3, 2017

ஜூனியர் உலகக்கிண்ண கண்ணோட்டம்


 ஃபீபாவின்  17ஆவது ஜூனியர் உலகக் கிண்ண  (17 வயதுக்குட்பட்டோர்) உதைபந்தட்டப்போட்டி  போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28 ஆம் திகதி  வரை டெல்லி, கொல்கத்தா, கொச்சி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபீபா) உலக சாம்பியன்ஷிப் போட்டி ஒன்று இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். அதே போல் ஃபீபாசாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி களம் காண்பது வரலாற்றில் இதுவே முதல் நிகழ்வாகும். 

இதில் இந்தியா, பிரேசில், ஜேர்மனி, கானா, ஸ்பெயின், ஜப்பான், சிலி, இங்கிலாந்து, மெக்சிகோ உள்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன  இந்திய அணி அக்டோபர் 6 ஆம் திகதி  டெல்லியில் நடக்கும் தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி, கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் அக்டோபர் 28 ஆம் திகதி  நடக்கிறது.
நடப்பு சம்பியன் நைஜீரியா
இதுவரை நடந்துள்ள ஜூனியர் உலகக்கிண்ண  போட்டியில் இருந்து சில சுவாரஸ்யமான ஒரு அலசல் வருமாறு:

சிங்கப்பூர் கால்பந்து சங்கம் 1977ம் ஆண்டு லயன் சிட்டி கோப்பைக்கான போட்டியை உருவாக்கியது. அது தான் உலக அளவில் நடத்தப்பட்ட முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கான  உதைபந்தாட்டப்  போட்டியாகும். இந்த போட்டி தான் ஜூனியர்  உலகக்கிண்ண போட்டியின்  முன்னோடியாகும். அதனால் கவர்ந்திழுக்கப்பட்ட சர்வதேசஉதைபந்தாட்ட  சம்மேளனம் ஜூனியர்  உலகக்கிண்ண போட்டியை நடத்த முன்வந்தது.

 முதலாவது ஜூனியர்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப்  போட்டி சீனாவில் 1985 ம் ஆண்டு நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. முதலில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டது. 1991–ம் ஆண்டில் இருந்து வயது வரம்பு 17 ஆக உயர்த்தப்பட்டது.

 2005–ம் ஆண்டு வரை 16 அணிகள் பங்கேற்றன. 2007–ம் ஆண்டு போட்டியில் இருந்து பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிக்கப்பட்டது.

 ஜூனியர்  உலகக்கிண்ணப் போட்டியில்  அதிக முறை பங்கேற்ற அணிகள் பிரேசில், அமெரிக்கா. இரு அணிகளுக்கும் இது 16–வது  உலகக்கிண்ணப் போட்டியாகும்
 அதிக முறை சாம்பியனான   அணி ஆப்பிரிக்க நாடான நைஜீரியா. அந்த அணி 5 முறை (1985, 1993, 2007, 2013, 2015) மகுடம் சூடியிருக்கிறது. 3 முறை இறுதிஆட்டத்தில் தோற்று இருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் நடப்பு சாம்பியனான அந்த அணி இந்த  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடவில் .தகுதி சுற்றோடு வெளியேற்றப்பட்டிருக்கிறது.

 தொடர்ச்சியாக 4 முறை உலகக்  கிண்ண இறுதி ஆட்டத்துக்கு (1991, 1993, 1995, 1997) தகுதி பெற்று சாதனை படைத்த அணி, மற்றொரு ஆப்பிரிக்க தேசமான கானா.
 நைஜீரியாவை தவிர்த்து, பிரேசில் (3 முறை), கானா (2,')இ மெக்சிகோ (2), சோவியத் யூனியன், சவுதி அரேபியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து (தலா ஒரு முறை) ஆகிய அணிகளும் ஜூனியர்  உலகக்கிண்ணக் கிண்ணத்தைக்  கைப்பற்றியுள்ளன.
 சோவியத் யூனியனும் (1987), சுவிட்சர்லாந்தும் (2009) தங்களது முதல்  போட்டியிலேயே  வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தின.

 ஜூனியர்  உலகக்கிண்ணம் இளம்புயல்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு, அடுத்த கட்டத்துக்கு அவர்களை கொண்டுசெல்வதற்கு ஒரு வடிகால் என்றால் அது மிகையாகாது. இப்போது பிரபலங்களாக உள்ள நெய்மார் (பிரேசில், இனியஸ்டா (ஸ்பெயின்), டோனி குரூஸ் (ஜெர்மனி), ஜேம்ஸ் ரோட்ரிகஸ் (கொலம்பியா), 2014–ம் ஆண்டு சீனியர் உலகக் கிண்ண  இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி அணிக்காக வெற்றிக்குரிய கோலை அடித்த மரியா கோட்சே உள்ளிட்டோர் ஜூனியர்  உலகக்கிண்ணக் கிண்ணப்  விளையாடியவர்கள் தான். இகேர் கேசில்லாஸ், சேவி ஹெர்னாண்டஸ், பெர்னாண்டோ டோரஸ், டேவிட் சில்வா (4 பேரும் ஸ்பெயின்) லான்டன் டோனவன் (அமெரிக்கா), ரொனால்டினோ (பிரேசில்,
 ஜியான்லுகி பப்போன் (இத்தாலி, உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் அடங்குவர்.


  அதே சமயம் ஜூனியர் பிரிவில் கால்பதித்தால் தான் சீனியர் மட்டத்திலும் ஜொலிக்க முடியும் என்பது அல்ல. இப்போது கிளப் அளவிலும், சர்வதேச அளவிலும் கொடி கட்டி பறக்கும் கிறிஸ்டியானா ரொனால்டோ (போர்ச்சுகல்), லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), தாமஸ் முல்லர் (ஜெர்மனி) ஆகியோர் ஒரு போதும் 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பந்தை உதைத்து கிடையாது. ஜூனியரில் 5 முறை பட்டத்தை உச்சிமுகர்ந்திருக்கும் நைஜீரியா, சீனியர் அளவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றை தாண்டியதில்லை என்பது ஆச்சரியமான உண்மை.

 ஜூனியர் மற்றும் சீனியர் இரண்டிலும் உலகக் கிண்ணத்தை வென்ற ஒரே வீரர் பிரேஸிலின்  ரொனால்டினோ தான். 1997–ம் ஆண்டு ஜூனியர், 2002–ம் ஆண்டு சீனியர் ஆகிய  உலகக்கிண்ணக்  கிண்ணத்தை  வென்ற பிரேஸிலின் இரு அணியிலும் ரொனால்டினோ இடம் பெற்றிருந்தார்.

 மெக்சிகோ உருகுவே இடையே 2011–ம் ஆண்டு நடந்த இறுதி ஆட்டத்தை 98,943 பேர் கண்டுகளித்தனர். ஜூனியர்  உலகக்கிண்ணக் கிண்ணப் போட்டியை   அதிகமானவர்கள் நேரில் ரசித்த ஆட்டம் இது தான்.

 2013–ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த  உலகக்கிண்ணப் போட்டியில்  52 ஆட்டத்தில் 172 கோல்கள் பதிவாகின. அதிக கோல்கள் அடிக்கப்பட்ட போட்டி  இது தான்.
அதிக கோல்கள் அடித்த அணிகளின் வரிசையில் பிரேஸில்  (166 கோல்) முதலிடத்திலும், நைஜீரியா (149) 2–வது இடத்திலும் உள்ளன.

 1997–ம் ஆண்டு  உலகக்கிண்ணப் போட்டியில்  நியூஸிலாந்து 0–13 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது, ஒரு அணியின் மோசமான தோல்வியாகும்.

 இந்தியா, நைஜர், நியூகலிடோனியா ஆகிய மூன்று நாடுகள் இந்த முறை அறிமுக அணிகளாக களம் காணுகின்றன. இதில் ஜூனியர்  உலகக்கிண்ண கிண்ணப் போட்டியில் அடியெடுத்து வைக்கும் 18–வது ஆசிய நாடு என்ற சிறப்பை இந்தியா பெறுகிறது.

 இந்தியாவில் நடக்கும் இந்த கால்பந்து திருவிழாவை சோனி டென்2, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. அத்துடன் 185 நாடுகளுடன் ஒளிபரப்பை பகிர்ந்து கொள்கிறது. இதனால் தொலைக்காட்சி  மூலம் ஏறக்குறைய 20 கோடி பேர் இந்த போட்டியை கண்டுகளிப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


Sunday, October 1, 2017

உலக்கிண்ண உதைபந்தாட்ட ரிக்கெற் விலை குறைப்பு



 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண உதைபந்தட்டப்போட்டி     அக்டோபர் 6 ஆம்   முதல் இந்தியாவில்   அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், கொல்கத்தா, புதுடெல்லி, கொச்சி, கோவா, கவுஹாத்தி, நவி மும்பை ஆகிய ஆறு இடங்களில் நடைபெறுகிறது. அதற்கான டிக்கெட்டுகள்,  ஃபீபா வின் இணையதளத்தில் விற்கப்படுகின்றன. உதைபந்தாட்டத்தை இந்தியாவில்      பிரபலப்படுத்தும் நோக்கில், டிக்கெட்டுகள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
 ரிக்கெற்கள் நான்கு கட்டங்களாக விற்பனையாகிறது.  முதல்கட்டமாக மே முதல் ஜூலை வரை  venue  ரிக்கெற்கள்  விற்கப்பட்டன. இரண்டாம்கட்டமாக, 50 சதவிகிதத் தள்ளுபடியில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஜூலை 21-ஆம் திகதி  தொடங்கிய மூன்றாம்கட்ட விற்பனையில், 25 சதவிகிதத் தள்ளுபடியில்  ரிக்கெற்கள் விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அக்டோபர் 5ஆம் திகதி  வரை இந்த விற்பனை தொடரும். நான்காம்கட்ட விற்பனை, தொடர் தொடங்கும் 6 ஆம்  திகதி  முதல் போட்டி முடியும் 28 ஆம் திகதி வரை நடைபெறும்.
  

Tuesday, September 26, 2017

மும்பையில் பிரேஸில் அணி





17வது ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான) உலகக்கிண்ண   உதைபந்தட்டப்போட்டி  அடுத்த மாதம் (அக்டோபர்) 6 ஆம்  திகதி  முதல் 28 ஆம் திகதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் நடைபெறும்.   இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடத்தை பெறும் அணிகளில் சிறப்பான 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும். தொடக்க நாளான 6 ஆம் திகதி டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா-கானா (மாலை 5 மணி), இந்தியா-அமெரிக்கா (இரவு 8 மணி) அணியும், மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பிபிரிவில் இடம் பிடித்துள்ள நியூஸிலாந்து-துருக்கி (மாலை 5 மணி), பராகுவே-மாலி (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 3 முறை சம்பியனான பிரேஸில் அணி நேற்று காலை மும்பையைச்சென்றடைந்தது. அந்தேரியில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பிரேஸில்  அணி, நியூஸிலாந்துடன் மோதுகிறது. முதல் நாளில் மும்பையில் நடைபெறும் 2 லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 20 ஆயிரம் விற்பனையாகிவிட்டான.   போட்டி தொடங்க இன்னும் 10 நாட்கள் இருப்பதால் எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் மொத்தம் 45,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும்.

Friday, September 22, 2017

உலக்கக்கிண்ண உதைபந்தாட்ட இந்திய அணி அறிவிப்பு



17 வயதிற்குட்பட்டோருக்கான  பிஃபா உலகக் உலகக்கிண்ண உதைபந்தாட்டப்  போட்டிகள் அடுத்த மாதம் 6 ஆம் திகதி முதல் 28 திகதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் கொல்கத்தா, கொச்சி, புதுடெல்லி, நவி ,கவுகாத்திஇ மர்கோவா ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.  
இந்த போட்டிகளில் விளையாட இந்தியா, ஈரான், அமெரிக்கா உட்பட 24 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா,  கொலம்பியா , கானா அணிகள் பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. தொடரின் முதல் நாளான அக்டோபர் 6 திகதி இரண்டாவது போட்டியாக இது நடைபெறுகிறது. இதுதவிர, கொலம்பியா அணியுடன் 9- ஆம்  திகதியும், கானா அணியுடன் 12 ஆம்  திகதியும் இந்திய அணி விளையாட உள்ளது.
நாக்-அவுட் சுற்று போட்டிகள் அக்டோபர் 21 ஆம் திகதியும்  22ஆம் திகதியும்  அரையிறுதி போட்டிகள் 25 ஆம் திகதியும்  நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி அக்டோபர் 28ம் திகதி  கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இந்நிலையில் 21 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கோல்கீப்பர்கள்: தீரஜ் சிங்இ பிரப்சுகன் கில்இ சன்னி தாலிவால்
தடுப்பாட்டம்: போரிஸ் சிங்இ ஜிதேந்திர சிங்இ அன்வர் அலிஇ சஞ்சீவ் ஸ்டாலின்இ ஹென்றி அண்டனேஇ நமித் தேஷ்பாண்டே
நடுக்களம்: சுரேஷ் சிங்இ நிந்தோன்கன்பா மீதேய்இ அமர்ஜித் சிங் கியாம்இ அபிஜித் சர்கார்இ கோமல் தாடல்இ லலேங்மாவியாஇ ஜேக்சன் சிங்இ நோங்டம்பா நயோரம்இ ராகுல் கன்னோலி பிரவீன்இ ஷாஜகான்
முன்களம்: ரஹிம் அலிஇ அங்கித் ஜாதவ்
ஜூனியர் உலகக்கிண்ணப்  போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மாடோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.