Showing posts with label ஐபிஎல்12. Show all posts
Showing posts with label ஐபிஎல்12. Show all posts

Monday, April 12, 2021

100 ஆவது போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா


    சென்னை சேப்பாக்கம் எம்..சிதம்பரம் ஸ்டேடியத்தில்  நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஹைஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதின. 

நானயச் சுழற்சியில்  வென்ற ஹைதராபாத் அணியின் ப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 56 பந்துகளில் 85 ஓட்டங்கள் எடுத்தார்  ரஷித் கான், முகம்மது நபிஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

  188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி அணியின் சார்பில் விருதிமான் சகா, ப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் வார்னர் 3 ஓட்டங்களிலும், சகா 7 ஓட்டங்களிம் வெளியேற, அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டே , ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர்   சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம்கடந்தனர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 55 ஓட்டங்ளும், அவரைத்தொடர்ந்து நபி 14 ஓட்டங்களும், விஜய் சங்கர் 11 ஓட்டங்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மணிஷ் பாண்டே 61 (44) ஓட்டங்களும், அப்துல் சமது 19 (8) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் ஹைதராபாத் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் நடந்த சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

100-வது வெற்றி

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பெற்ற வெற்றி, ஐபிஎல் ரி20 தொடரில் பெற்ற 100-வது வெற்றியாகும். இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் 120 வெற்றிகளையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 106 வெற்றிகளையும் பெற்றுள்ளன‌. அந்த வரிசையில் 3-வது இடத்தை கொல்கத்தா அணி பிடித்தது.

சாதனை வெற்றி

ஐபிஎல் ரிடி20 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக  கொல்கத்தா அணி பெற்ற வெற்றி அந்த அணிக்கு 12-வது வெற்றியாகும். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைக் குவித்த அணி எனும் பெருமையையும் கொல்கத்தா அணி பெற்றது.

2-வது வீரர் ராணா

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அதிகமானஓட்டங்கள் குவித்த 2-வது வீரர் எனும் பெருமையை கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா (80) பெற்றார். இதற்கு முன் 2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கவுதம் கம்பீர் 90 ஓட்டங்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நிதிஷ் ராணா   அரை சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 1,500 ரன்களை நிறைவு செய்தார்.

ராகுல் திரிபாதி மைல்கல்

கொல்கத்தா அணி வீரர் ராகுல் திரிபாதி நேற்று 28 பந்துகளில் 52 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் ரிடி20 தொடரில் ஆயிரம் ரன்களை திரிபாதி எட்டினார்.


அதிகபட்ச ஓட்டங்கள்

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக   கொல்கத்தா அணி சேர்த்த 6 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் அந்த அணிக்கு எதிராக எடுத்த அதிகபட்ச எணிக்கையாகும். இதற்கு முன் 2019-ல் 4 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை கொல்கத்தா அணி சேர்த்திருந்தது.

3 டக், மூன்று 80 ஓட்டங்கள்

கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர் நிதிஷ் ராணா கடந்த 6 இன்னிங்ஸ்களில் ஒரு டக் மற்றும் 80 ஓட்டங்களுக்கு மேல் எனத் தொடர்ந்து 3 முறை அடித்துள்ளார். இதில் 3 டக் அவுட்கள், 3 முறை 80 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளார்