Showing posts with label ஹட்ரிக். Show all posts
Showing posts with label ஹட்ரிக். Show all posts

Friday, June 19, 2026

ஹட்ரிக் கிளப்பில் இணைந்தார் ஜொனாதன் டேவிட் ரவுண்ட் ஆப் 32' சுற்றுக்கு சென்றது மெக்ஸிகோ


 

பீபா உலகக் கிண்ணத்  தொடரின் குரூப் பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மெக்சிகோ அணி, முதல் அணியாக 'ரவுண்ட் ஆப் 32' சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அக்ரான் மைதானத்தில் உள்நாட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின.

இரண்டாவது வெற்றியைப் பெற்றதன் மூலம் 6 புள்ளிகளுடன் குரூப் பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது

 ஜொனாதன் டேவிட்டின் ஹட்ரிக் கோல்களால் கட்டாருக்கு எதிரான போட்டியில்  6-0 என்ற கோல் கணக்கில் கனடா தனது முதல் உலகக் கோப்பை வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் நொக் -அவுட் சுற்றுக்கான இடத்தையும் ஏறக்குறைய உறுதி செய்தது.

இந்தக் குழப்பமான போட்டியில், சிவப்பு அட்டைகள் காரணமாக கட்டார் அணி ஒன்பது வீரர்களாகக் குறைக்கப்பட்டது. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில், இஸ்மாயில் கோனே மீது ஃபவுல் செய்ததற்காக அசிம் மடிபோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. கோனே தனது இடது கால் கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் ஸ்ட்ரெச்சரில் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். முதல் பாதியில், தாஜோன் புக்கானன் மீது ஃபவுல் செய்ததற்காக ஹோமன் அகமது வெளியேற்றப்பட்டார்.

16-வது நிமிடத்தில், பந்து திரும்பி வந்தபோது சைல் லாரின் கோல் அடித்தார்  இந்தப் போட்டியின்  லாரின் தனது இரண்டாவது கோலை அடித்தார்.

29-வது நிமிடத்தில், டேவிட் தனது வலது காலால் அடித்த வாலி ஷாட் மூலம் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். இது, ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்டத்தின் போக்கில் அவர் அடித்த முதல் கோலாகும்.

33-வது நிமிடத்தில் அகமதுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். நடுவர் முதலில் பெனால்டி ஸ்பாட்டைச் சுட்டிக்காட்டினார், ஆனால் வீடியோ மறுபரிசீலனைக்குப் பிறகு, பெனால்டி பாக்ஸிற்குச் சற்று வெளியே கனடாவிற்கு ஒரு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. அகமதுவுக்கு முதலில் காட்டப்பட்ட மஞ்சள் அட்டை, சிவப்பாக மாற்றப்பட்டது.

முதல் பாதியின் கூடுதல் நேரத்தில், குறுக்குக் கம்பியில் பட்டுத் தெறித்த ஒரு ஷாட்டை, கோல் வலைக்கு முன்னால் ஏற்பட்ட ஒரு தள்ளுமுள்ளுவில் டேவிட் கோலாக மாற்றியபோது, கனடா 3-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் கோனேவுக்குப் பயங்கரமான காயம் ஏற்பட்டபோது, கனடாவின் வீரர்கள் கவலையுடன் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.  

கோனேவுக்குப் பதிலாக மாற்று வீரராகக் களமிறங்கிய நாதன் சலிபா, 64-வது நிமிடத்தில் ஒரு ஃப்ரீ கிக் மூலம் கோல் அடித்து, ஆட்டத்தை 4-0 என மாற்றினார். 75-வது நிமிடத்தில், முகமது மனாய் அடித்த பந்து கோல்கீப்பரைக் கடந்து சென்று சுய கோலாக மாறியது.

கூடுதல் நேரத்தில் டேவிட் ஹட்ரிக் கோல் அடித்து, இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் மூன்று கோல்கள் அடித்த ஒரே வீரரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியுடன் இணைந்தார்.

   

Friday, October 21, 2022

ஹட்ரிக் சாதனை படைத்த கார்த்திக் மெய்யப்பன்

அவுஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு எதிராக   ஹட்ரிக்  சாதனை படைத்தார்   கார்த்திக் மெய்யப்பன். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில்  ஹட்ரிக் எடுத்த முதல் ஐக்கிய அரபு நாட்டு  வீரராக சாதனை படைத்த அவர் ஒட்டுமொத்தமாக வரலாற்றில் ஹட்ரிக்  எடுத்த 5வது பந்து வீச்சாளராக வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த 2000 அக்டோபர் 8ஆம் திகதி பிறந்தார் கார்த்திக் மெய்யப்பன்.  கடந்த 2012ஆம் ஆண்டு அவரது குடும்பம் துபாய்க்கு குடி பெயர்ந்ததால் அங்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2019இல் 19  வயதுக் குட்பட்ட அணியின் கப்டனாக செயல்பட்டார்.

2020 ஐபிஎல் சீசன் கடைசி நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றப்பட்டபோது விராட் கோலி கப்டனாக இருந்த பெங்களூரு அணி நிர்வாகம் இவரையும் அப்போதைய அமீரக அணியின் கப்டனாக இருந்த அஹமத் ராஜாவையும் நெட் பந்து வீச்சாளர்களாக அழைத்தது. அப்போது 20 வயதான கார்த்திக் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பையும் சஹால், ஆடம் ஜாம்பா போன்ற நட்சத்திரங்களுடன் பந்து வீசும் வாய்ப்பையும் பெற்றார். ஐபிஎல் 2021 சீசனின் 2வது பாகம் துபாயில் நடைபெற்றது. அந்த தொடரில் இவரது திறமையை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய நெட் பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்தது. அதனால் டோனி போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராகப் பந்து வீசும் பொன்னான வாய்ப்பை பெற்ற மெய்யப்பன் அனுபவத்தை மேலும் வளர்த்துக் கொண்டார்

ஐபிஎல் தொடரில் நெட் பந்து வீச்சாளராக அனுபவத்தைப் பெற்றதால் கடந்த 2021 அக்டோபர் 8ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ரி20 போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய மெய்யப்பன் வெறும் 25 ஓட்டங்கள்   கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தன்னுடைய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றிய அவர் வரும் காலங்களில் ஏதேனும் ஒரு அணியில் முதன்மை பந்து வீச்சாளராக விளையாட விரும்புவதாக 2020ஆம் ஆண்டு கொடுத்த பேட்டியில் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது வேகத்துக்கு சாதகமாகவும் சுழலுக்கு சவாலும் கொடுக்கக்கூடிய அவுஸ்திரேலியாவில் ஹட்ரிக் சாதனை படைத்துள்ள அவரை நிச்சயமாக வரும் ஐபிஎல் தொடர்களில் ஏதேனும் ஒரு அணி வாங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.