Showing posts with label இங்கிலாந்து. Show all posts
Showing posts with label இங்கிலாந்து. Show all posts

Friday, July 17, 2026

ரூனியின் சாதனையை முறியடித்தார் கேன்


  ஆர்ஜென்ரீனாவுக்கு  எதிராக தனது 121வது சர்வதேசப் போட்டியில் விளையாடியதன் மூலம், இங்கிலாந்தின்  முன்னாள் கப்டன் வெய்ன் ரூனியை முந்தினார் ஹரி கேன். ஒட்டுமொத்த சாதனையை கோல்கீப்பர் பீட்டர் ஷில்டன் (125) தக்கவைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 85 கோல்களுடன் சர்வதேச அளவில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை கேன் பெற்றுள்ளார். தனது பதவிக்காலத்தில் 53 கோல்கள் அடித்த ரூனியிடமிருந்து அவர் கைப்பற்றிய மற்றொரு சாதனை இதுவாகும்.

பேயர்ன் முனிச் அணியின் முன்கள வீரர், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடரில் 14 கோல்களை அடித்து, கெர்ட் முல்லருடன் இணைந்து எல்லாக் காலத்திற்குமான பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டியில்  ஆங்கிலேயர் ஒருவர்  அடித்த அதிகபட்ச கோல்கள் இதுவே ஆகும்.

அரையிறுதிக்கு இங்கிலாந்து முன்னேறிய பயணத்தில் கேன் ஆறு கோல்களை அடித்துள்ளார்.   நாட்டின் தொடர் சாதனையை (1986-ல் கேரி லினெக்கர் , 2018-ல் கேன் அடித்த 6 கோல்கள்) முறியடிக்க அவர் ஒரு கோல்குறைவாக  உள்ளார்.

  


Sunday, June 28, 2026

வெள்ளை பவுடர் ஊதி இங்கிலாந்தை அலறவிட்ட ஆப்ரிக்க மந்திரவாதி


உலகமே   உலகக் கிண்ண உதைப்ந்தாட்டத்தை  உற்றுநோக்கி வரும் நிலையில், உலகக்கிண்ணப் போட்டியை  ஜுஜு' மந்திரவாதி  உலுக்கிக்கொண்டு இருக்கிறா உலகக் கிண்ண உதைப்ந்தாட்டத்  திருவிழா என்றாலே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தை விட, பார்வையாளர்கள் மத்தியில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் பல நேரங்களில் உலக அளவில் ட்ரெண்டாகிவிடும்.

 "Don't Argue With the Juju" (ஜுஜுவிடம் வம்பு வச்சுக்காதீங்க!) என்ற வாசகத்தோடு, வெள்ளை பவுடரை காற்றில் ஊதி ரசிகர்களை மிரள வைத்த கானா நாட்டின் 'மந்திரவாதி' ஒருவரின் வீடியோவும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.  போஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து ,கானா  ஆகிய அணிகளுக்கு இடையிலான குரூப் ஸ்டேஜ் போட்டியின் போதுதான் இந்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியது. போட்டி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில்,பார்வையாளர் மாடத்தில்  இருந்த கானா நாட்டின் தீவிர ரசிகர் ஒருவர், திடீரென விசித்திரமான ஆடை அணிந்து, கைகளில் ஏதோ ஒரு வெள்ளை பவுடரை கொட்டி, அதை மைதானத்தை நோக்கி காற்றில் பலமாக ஊதினார். இதைப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, "யார்டா இவன்? மைதானத்துக்குள்ளேயே நமக்கு 'ஜுஜு' (ஆப்பிரிக்க மாந்திரீகம்) வைக்கிறான்! இவன்கிட்ட யாரும் வம்பு வச்சுக்காதீங்க" என சமூக வலைதளங்களில் பதிவிட, அதுவே உலகளாவிய ட்ரெண்டாக மாறியது.

 இந்த வெள்ளை பவுடர் ஆட்டம் வெறும் தற்செயலானது அல்ல, இதன் பின்னணியில் ஒரு பெரிய கதையே இருக்கிறது. கானாவின் புகழ்பெற்ற பாரம்பரிய பூசாரியான 'நானா குவாகு போன்சாம்' (Nana Kwaku Bonsam), இங்கிலாந்து அணியுடன் மோதும் முன்பு பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு ஒரு பகீர் பேட்டி அளித்திருந்தார். அதில், "இங்கிலாந்து அணியின் கப்டனும், நட்சத்திர ஸ்ட்ரைக்கருமான ஹாரி கேன்  இந்த போட்டியில் கோல் அடிக்க முடியாதபடி நான் ஆன்மீகக் கட்டு (Juju) போட்டுள்ளேன்" என வெளிப்படையாக சவால் விட்டிருந்தார்.

ஆச்சரியம் என்னவென்றால், போட்டியில் இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. கானா கோல் போஸ்ட்டை நோக்கிப் பாய்ந்த பந்துகள் அனைத்தும் ஏனோ கோலாக மாறவில்லை. குறிப்பாக, உலகத்தரம் வாய்ந்த ஹாரி கேனுக்கு மிக எளிதாக கோல் அடிக்கக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பை, அவரே எதிர்பாராத விதமாக கோல் போஸ்ட்டிற்கு மிக உயரமாக அடித்து பாழாக்கினார். முடிவில், அசுர பலம் கொண்ட இங்கிலாந்து அணியை 0-0 என்ற கணக்கில் சமன் செய்து, கானா அணி மிரட்டலான ஒரு புள்ளியைப் பெற்றது. இதனால், அந்த கானா ரசிகர் காற்றில் ஊதிய வெள்ளை பவுடர் நிஜமாகவே வேலை செய்துவிட்டது என ரசிகர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.  பனாமாவுக்கு எதிரான போட்டியிலும் இதேபோல் பவுடர் ஊதி கானா வென்ற நிலையில், தற்போது இங்கிலாந்தையும் முடக்கியுள்ள இந்த 'ஜுஜு' மந்திரவாதிதான்  தற்போதைய ஹாட் டாபிக்!

 

Wednesday, June 24, 2026

கலக்கியது கானா தடுமாறியது இங்கிலாந்து


  உலகக்  கிண்ண  குரூப் L போட்டியில்  கானாவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து  0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. 

  நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ஆனால், கானாவுக்கு எதிரான லீக் ஆட்டம் அவர்களுக்கு எளிதாக அமையவில்லை. உலகக் கிண்ணத்தின்   கடினமான யதார்த்தத்தை இங்கிலாந்து அணிக்கு உணர்த்திய ஒரு கடுமையான சோதனையாகவே இந்தப் போட்டி அமைந்தது. முந்தைய ஆட்டத்தில் குரோஷியா அணி இங்கிலாந்தின் மீது அழுத்தத்தை செலுத்த தீவிரமாக முயன்றது. இது இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக அமைந்து எளிதாக கோல் அடிக்க வழிவகுத்தது. ஆனால் கானா அணியோ முற்றிலும் மாறுபட்ட வியூகத்தைக் கையாண்டது. அவர்கள் பின்வாங்கி தற்காப்பதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தினர். பயிற்சியாளர் தாமஸ் துஷெலின் இங்கிலாந்து அணி நீண்ட நேரம் பந்தை தன் வசம் வைத்திருக்க கானா அனுமதித்தாலும், கோல் பகுதிக்குள் அவர்களை ஊடுருவ விடாமல் மிகச் சிறப்பாக தடுத்தது  இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றி கோனாவின் கோல் அரணை உடைக்கும் ஆட்டம் இங்கிலாந்து வீரர்களிடம் தென்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்களால் கோல் அடிக்க முடியல்லை. 

  உலகத் தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள கானா அணி, முன்னணி அணியான குரோஷியாவை விட இங்கிலாந்திற்கு மிரள வைக்கும் சவாலை அளித்தது. இந்த வலுவான தற்காப்பு வியூகத்தை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் இங்கிலாந்திடம் இல்லாததே இந்த ஏமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என   விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இரண்டு போட்டிகளில் இருந்து இங்கிலாந்தும் கானாவும் தற்போது தலா நான்கு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இங்கிலாந்து 'L' பிரிவில் முன்னிலை வகிக்கிறது.