Showing posts with label உலகக்கிண்ணம்ரி20. Show all posts
Showing posts with label உலகக்கிண்ணம்ரி20. Show all posts

Wednesday, October 26, 2022

மழையால் இங்கிலாந்தை வென்றது அயர்லாந்து


 மெல்போர்னில் இன்று நடந்த போட்டியில்  குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின மழையால் 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. இங்கிலாந்து கப்டன் ஜாஸ்பட்லர் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

 இங்கிலாந்து வீரர்கள் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. கப்டன் பல்பிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை சேர்த்தார். அயர்லாந்து அணி 19.2 ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து  157    ஓட்டங்கள் எடுத்தது.  பால்பிரீன் அதிகபட்சமாக 47 பந்தில் 62 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), டக்கர் 27 பந்தில் 34 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்ர். இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், லிவ்விங்ஸ்டோன்  ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், , சாம்கரண் 2 விக்கெட்களையும் ,பென்ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும்  கைப்பற்றினர்.

 158 ஓட்டங்கள் என்ற  இலக்குடன்  இங்கிலாந்து ஆடியது. க்ச்ப்டனும், தொடக்க வீரருமான பட்லர் முதல் ஓவரில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஓட்டங்கள் எடுத்தது.   மொய்ன் அலியுடன்    லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். மொய்ன் அலி அதிரடியாக விளையாடி 12 பந்தில் 24 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அப்போது மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 


Sunday, October 23, 2022

தட்டுத் தடுமாறி வென்றது இங்கிலாந்து


 அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்   2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய  இங்கிலாந்து 112 ஓட்டங்களை எடுப்பதற்கு  18.1  ஓவர் வரை சென்றதை ரசிகர்கள் அதிர்ச்சியுடன் நோக்குகின்றனர்.

பேர்த்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்  சுழற்சியில் வென்ற    இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. அந்த அணியில் இப்ரகிம் ஜடார்ன் 32 ஓட்டங்களும், உஸ்மான் ககானி 30 ஓட்டங்களும்  எடுத்ததே அதிகபட்டச ஓட்டங்களாகும்.

 ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 112 ஓட்டங்கள் எடுத்து  ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசியாக ஆல்ரவுண்டர் சாம் கரன் 5 விக்கெட்டை வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் ,மார்க் வுட்  ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

சொற்ப ஓட்டங்களான 113 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் க‌ப்டன் பட்லர் 18 ஓட்டங்களும் , அலக்ஸ் கெல்ஸ் 19 ஓட்டங்களும் எடுத்து   வெளியேறினார். அடுத்து வந்த மலான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துக்களில் 18 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 18.1 ஓவர்களில் 113 ஓட்டன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு சம்பியனை வீழ்த்திய நியூஸிலாந்து


 அவுஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி ரி20 உலகக் கிண்ண‌ முதல் சுற்று முடிந்து முக்கியமான சூப்பர் 12 சுற்றுகள் துவங்கியுள்ளன.  முதல் போட்டியில் நடப்பு ச‌ம்பியன் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த நியூஸிலாந்து 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 சிட்னியில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு உலகக் கிண்ண‌ வரலாற்றில் முதல் முறையாக 200 ஓட்டங்களை பதிவு செய்து சாதனை படைத்தது. அந்த அணிக்கு 59 ஓட்டங்கள் ஆரம்ப துடுப்பெடுத்தாட்ட ஜோடி  மிரட்டலான தொடக்கம் கொடுத்த ஃபின் ஆலன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (16) ஓட்டங்கள் விளாசி அவுட்டானார். அடுத்து களமிறங்கிய  க‌ப்டன் கேன் வில்லியம்சன் 23 (23) கிளன் பிலிப்ஸ் 12 (10) என முக்கிய வரிசை வீரர‌கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே அவுஸ்திரேலிய பந்து வீச்சாள‌ர்களை அற்புதமாக எதிர்கொண்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 92* (58) ஓட்டங்கள் விளாசினார். அவருடன் கடைசி நேரத்தில் 2 சிக்சர்களை பறக்க விட்ட ஜிம்மி நீஷம் 26* (13) ஓட்டங்களை விளாசி அதிரடியான பினிசிங் கொடுத்தார்.

மறுபுறம் சுமாராக பந்து வீசிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன்பின் 201 ரன்களை துரத்திய அந்த அணியை ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய நியூசிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து 17.1 ஓவரில் வெறும் 111 ரன்களுக்கு சுருட்டியது. ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 5, கேப்டன் ஆரோன் பின்ச் 13, மிட்செல் மார்ஷ் 12, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 7, டிம் டேவிட் 11 என் முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 28 (20) ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி மற்றும் மிட்சேல் சாட்னர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றியால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை பைனலில் தோற்கடித்த ஆஸ்திரேலியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து நியூசிலாந்து பதிலடி கொடுத்துள்ளது. மேலும் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்துள்ள அந்த அணி டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

மறுபுறம் சுமாராக பந்து வீசிய அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.   201 ஓட்டங்களை துரத்திய அவுஸ்திரேலியாவை  ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய நியூஸிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து 17.1 ஓவரில் வெறும் 111 ஓட்டங்களுக்கு வீழ்த்தியது.

அவுஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 5, க‌ப்டன் ஆரோன் பின்ச் 13, மிட்செல் மார்ஷ் 12, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 7, டிம் டேவிட் 11 என் முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க‌  அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 28 (20) ஓட்டங்கள் எடுத்தார்.

நியூஸிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுத்தி மற்றும் மிட்சேல் சாட்னர்  ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

  கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண  இறுதிப் போட்டியில்   தோற்கடித்த அவுஸ்திரேலியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில்  முதல் போட்டியில் தோற்கடித்து நியூஸிலாந்து. 

ரி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்துள்ள நியூஸிலாந்து  ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஓட்ட‌ வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

 92* ஓட்டங்கள் குவித்து முக்கிய பங்காற்றிய டேவோன் கான்வே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இவர் நியூஸிலாந்துக்கு குடிபெயர்ந்து கடந்த 2020இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 வகையான கிரிக்கெட்டிலும் நியூஸிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரராக செயல்பட்டு வருகிறார்.

ரி20 கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்படும் அவர் இப்போட்டியில் 92* ஓட்டங்களைக் குவித்து சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவுஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவு செய்த  விராட் கோலியின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

 1. டேவோன் கான்வே : 92*, 2022*

 2. விராட் கோலி : 90*, 2016

3. விராட் கோலி : 85, 2020

டேவிட்  கான்வே அடித்த 92  ஓட்டங்களையும் சேர்த்து சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ஓட்டங்களைக் குவித்த 2வது வீரரான  விராட் கோலியை முந்திய அவர் பாகிஸ்தானின் பாபர் அசாம் சாதனையை சமன் செய்துள்ளார்.

  1. டேவிட் மாலன்/சபாவூன் டேவிசி : தலா 24 இன்னிங்ஸ்

 2. பாபர் அசாம்/டேவோன் கான்வே* : தலா 26 இன்னிங்ஸ்

 3. விராட் கோலி : 27 இன்னிங்ஸ் இப்படி சமீப காலங்களில் அதிரடியாக செயல்படுவதாலேயே ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு வாங்கப்பட்ட அவர் இந்த வருடம் முதல் போட்டியில் தடுமாறினார் என்பதற்காக பெஞ்சில் அமர வைக்கப்பட்டு பிளே ஆப் சுற்றில் வாய்ப்பு பறிபோன பின் மீண்டும் வாய்ப்பு பெற்றார். அதில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் கடைசியில் சென்னை பதிவு செய்த சில வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் சென்னையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் அவரும் இதே போட்டியில் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை எடுத்த மற்றொரு வீரர் மிட்சேல் சாட்னரும் அசத்தியுள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Saturday, November 20, 2021

வியக்கவைத்த நியூஸிலாந்து இளம்வீரரின் பின்னணி


 இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி   ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்   முதலில் துடுப்பெடித்தாடிய நியூஸிலாந்து வீரர் டேரல் மிட்சல் ஓட்டம்  புவனேஷ்வர் குமார் முதல் ஓவரின் 3-வது பந்தில்   ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மூன்றாவது வீரராக இந்த தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்ட க‌ப்டன் கேன் வில்லியம்சன்-க்கு பதிலாக இளம் வீரர் மார்க் சேப்மன் களம் இறங்கினார். முதல் சில பந்துகளில் பொறுமையாக நிதானத்தை கடைபிடித்து அதன் பின்னர் அதிரடியாக விளையாடி இந்திய அணியை அசைத்துப் பார்க்கும் படி ஒரு அற்புதமான இன்னிசை விளையாடினார்.

 50 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி 2 சிக்சர்கள் என 63 ஓட்டங்கள் அடித்து அசத்தினார். அவரது இந்த ஆட்டத்தை பார்த்த பிறகு நியூசிலாந்து அணியில் இப்படி ஒரு வீரர் இருக்கிறாரா என்றே எண்ண தோன்றுகிறது.  நியூசிலாந்தை சேர்ந்த தந்தைக்கும், ஹொங்ஹொங்கைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் தான் இந்த சேப்மன். ஹொங்ஹொங்-கில் பிறந்து அங்கேயே வளர்ந்த அவர் தனது இருபதாவது வயதில் ஹொங்ஹொங் அணிக்காக 2014-ஆம் ஆண்டு சர்வதேச ரி20 உலகக் கிண்ணப் போட்டியில்  விளையாடியுள்ளார். ‍  அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் தனது முதல் போட்டியிலேயே யூ.ஏ.இ அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியுள்ளார்.

 ஹொங்ஹொங்கில் தனது திறமைக்கான களம்  கிடையாது என்பதன் காரணமாக தனது தந்தையின் நாடான நியூசிலாந்திற்கு குடியேறி ஆக்லாந்து அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். அவரது திறமையும் அனுபவமும் கண்ட நியூசிலாந்து அணி அவருக்கு நியூசிலாந்து அணிக்காக வாய்ப்பு அளித்தது.

2018 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தகுதி பெற்ற அவர் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்துள்ளார். மேலும் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக இடம் பிடித்த அவர் பயிற்சி ஆட்டங்களில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக பிரதான ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வில்லியம்சன் ஓய்வில் இருப்பதால் இந்த டி20 தொடரில் விளையாட வாய்ப்பினை பெற்றுள்ளார். -   இந்த தொடரில் கிடைத்த முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு எதிராக 63 ஓட்டங்கள் அடித்து அசத்தியுள்ளார். 27 வயதான இந்த இளம் வீரர் 2014ஆம் ஆண்டு ரி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி 31 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார். அதேபோன்று 2015-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியுள்ள இவர் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட்டில் இவர் முதலில் ஹாங்காங் அணிக்காக அறிமுகமாகி தற்போது நியூசிலாந்து அணியில் விளையாடி வருகிறார்.

 

எனக்கும் ஷாகித் அப்ரீடிக்கும் உள்ள பிரச்சனை இதுதான் ‍ ஷோஹிப் அக்தர்


 

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஷோஹிப் அக்தர் தனக்கும் ஷாகித் அஃப்ரீடிக்கும் இடையிலான உறவு பற்றி ஜாலியாக மனம் திறந்து பேசியுள்ளார். தான் ஆடிய காலத்தில் மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார்.

இவர் எத்தனைக்கு எத்தனை சீரியசானவரோ அத்தனைக்கு அத்தனை நகைச்சுவை உணர்வு ததும்பியவர். இந்நிலையில் 35 விநாடிகளே ஓடும் வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டுள்ள ஷோஹிப் அக்தர், ஷாகித் அப்ரீடியுடன் காணப்படுகிறார். அதில் தனக்கும் ஷாகித் அப்ரீடிக்கும் இடையேயான நட்பை ‘எனக்கு அப்ரீடியிடம் பிடிக்காத விஷயம் என்ற நகைச்சுவை தொனியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

எனக்கும் ஷாகித் அஃப்ரீடிக்கும் உள்ள பிரச்சனை இதுதான். அவர் என்னை விட பார்க்க அழகாக இருக்கிறார். இன்னொரு பிரச்சனை நான் அடிப்பதை விட பந்துகளை நீண்ட தொலைவு அடிக்கிறார். மிகவும் அடிப்படையாக அவரிடம் எனக்குப் பிடிக்காதது என்னை விட அவர் பிரபலமாக உள்ளதே.

இதையெல்லாம் விட மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் அவரது தலை முடி, என்னை விட அவருக்கு அதிகமிருக்கிறது. டார்லிங் ஆஃப் த கிரவுட் என்பார்களே அது போல் ஷாகித் அப்ரீடி ரசிக ரசிகைகளுக்கு அதிகம் பிடித்தவர்.” என்றார் ஷோயப் அக்தர். 2021 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அப்ரீடியைக் கண்டவுடன் அவரிடம் ஓடிப்போய் போட்டோ எடுத்துக் கொண்டு அதை ட்விட்டரில் பகிர்ந்தார்.

Tuesday, November 16, 2021

ரி20 உலகக்கிண்ண சாதனைகள்


                                  அதிக  ஓட்டங்கள் அடித்த வீரர்கள்

303  /  பாபர் அஸாம்/  பாகிஸ்தான்/   அதிக ஓட்டங்கள் 70/

279  /டேவிட் வானர்/அவுஸ்திரேலியா/ அதிக ஓட்டங்கள் 89*/

281  /மொஹமட் ரிஸ்வான்/ பாகிஸ்தான்/அதிக ஓட்டங்கள் 79*/

269/   பட்லர்/ இங்கிலாந்து/ அதிக ஓட்டங்கள் 101*/

231/ அஸலங்க /இலங்கை/ அதிக  ஓட்டங்கள் 80*

227/வில்ஸ்/நமீபியா/ அதிக ஓட்டங்கள் 66*

221/ நிஸங்க/  இலங்கை/ அதிக ஓட்டங்கள் 72

216 /வில்லியம்ஸன்/ நியூஸிலாந்து/85

208/ குப்தில்/நியூஸிலாந்து/அதிக ஓட்டங்கள் 93

208/ மிட்சல்/நியூஸிலாந்து/ அதிக ஓட்டங்கள்  72* 

                  அதிக விக்கெற்களை  வீழ்த்தியவர்கள்


16/ ஹசரங்க டி சில்வா/  இலங்கை 3/19

13/ சம்பா/அவுஸ்திரேலியா   5/19

13/ போல்ட்/நியூஸிலாந்து    3/17

11 / சஹீப்  அலி ஹஸன்/ பங்களாதேஷ்  4/9

11 /ஹசல்வூட்/ அவுஸ்திரேலியா 4/39

 இந்தத் தொடரில் 5 விக்கெட்களை வீழ்த்திய இன்னொரு வீரர்  மஜீப் உர் ரஹ்மான் [ ஆப்கானிஸ்தான்] 5/20 

                      அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள்


13 /பட்லர்/ இங்கிலாந்து/ 22 பவுண்டரிகள்

12 /மொஹமட் ரிஸ்வான்/பாகிஸ்தான்/ 23 பவுண்டரிகள்

11/ வில்ஸ்/ நமீபியா/ 13 பவுண்டரிகள்

10/  மிச்சல்/நியூஸிலாந்து/ 15 பவுண்டரிகள்

10/ டேவிட் வானர்/ அவுஸ்திரேலியா/ 32 பவுண்டரிகள்

                         அதிக  பவுண்டரிகள் அடித்த வீரர்கள்


32/டேவிட் வானர்/அவுஸ்திரேலியா/ 10 சிக்ஸர்கள்

28 பாபர் அஸாம்/பாகிஸ்தான்/5 சிக்ஸர்கள்

23/ அஸலங்கா/ இலங்கை/ 9சிக்ஸர்கள்

23/ மொஹமட் அஸாம்/பாகிஸ்தான்/ 12 சிக்ஸர்கள்

22  /பட்லர்/இங்கிலாந்து/ 13சிக்ஸர்கள்

21 ரோஹித் சர்மா/இந்தியா/ 7 சிக்ஸர்கள்

21  /குப்தில்/நியூஸிலாந்து/8 சிக்ஸர்கள்

20 /வில்லியம்ஸன்/ நியூஸிலாந்து/ 5 சிக்ஸர்கள்

Friday, November 12, 2021

தோற்றது பாகிஸ்தான் ;இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா


 பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோய்னிஸ், வேட் ஜோடி81 ஓட்டங்கள் ஜோடி சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தது.

20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்   நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.நானயச் சுழற்சியில்  வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடித்தாடிய  பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176  ஓட்டங்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 52 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கவீரர் பாபர் அசாம் 39 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.  அடுத்து இறங்கிய பகர் சமன் 32 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 55 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவுஸ்திரேலிய சார்பில் மிட்செல், ஸ்டார்க் ஆகியோர் தலா இரண்டு  விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையடுத்து, 177 ஓட்டங்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்  என்ற இலக்குடன்  அவுதிரேலிய அணி களமிறங்கியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்  ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டேவிட் வார்னருடன் அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 28 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 5 ஓட்டங்கலுடனும், மேக்ஸ்வெல் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய வார்னர் 49  ஓட்டங்களில் வெளியேறினார்.

ஆஸ்திரேலியா 96 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து இறங்கிய ஸ்டோய்னிஸ் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினார். வேட் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 50  ஓட்டங்களை விரைவாக கடந்தது.

இறுதியில், ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 40 ஓட்டங்களுடனும், வேட் 17பந்தில் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இங்கிலாந்துடனான போட்டியில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து


 போட்டிக் ஜிம்மி நீஷம், டேரல் மிட்ஷெல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், அபு தாபியில்  நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்ெகட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி.

முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி 20 ஓவர்களில்4 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் சேர்த்தது. 167 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 5 வி்க்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டித்தொடரில் இங்கிலாந்து அணி தான் சந்தித்த அனைத்துப் போட்டிகளிலும் ஆட்டத்தின் முதல்பந்திலிருந்தே அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்து  வேண்டும், எதிரணி பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை, திட்டத்தை குலைக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் விளையாடியிருந்தன.

ஆனால், இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக தங்களுடைய திட்டத்தை மாற்றி ஒவ்வொருபந்தையும் நிதானமாக ஆடத் தொடங்கியதுதான் இங்கிலாந்து தோல்விக்கு மிகப்பெரியகாரணங்களில் ஒன்று. தங்களுடைய இயல்பான ஆட்டத்திலிருந்து இங்கிலாந்து அணி நழுவியிருக்ககூடாது. 15 ஓவர்கள் வரை இங்கிலாந்து அணி வீர்ர்கள் யாரும் சிக்ஸர் அடிக்கவில்லை, அதன்பின்புதான் சிக்ஸர் அடித்தனர்.

தொடக்கத்திலேயே பட்லர்(29), பேர்ஸ்டோ(11) இருவரும் ஆட்டமிழந்ததால், ஒட்டுமொத்த சுமையும் நடுவரிைச பேட்ஸ்மேன்கள் மீது விழுந்ததால், அவர்களால் அதிரடியாக ஆடி ஸ்கோரை விரைவாக நகர்த்த முடியவில்லை. விக்கெட்டை நிலைப்படுத்த வேண்டிய நோக்கில்தான் டேவிட் மலான், மொயின் அலி இருவரும் விளையாடினர். இருவரும் சேர்ந்து 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

டேவிட் மலான்[ 41]   சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டோன் [17] விக்கெட்டை இழந்தார். நிதானமாக ஆடிய மொயின் அலி அரைசதம் அடித்து 51 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரி20 உலகக்  கிண்ணப் போட்டியில் மொயின் அலி அடித்த முதல் அரைசதம் இதுவாகும்

நியூஸிலாந்து தரப்பில் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். சிறந்த சுழற்பந்துவீச்சாளரான சான்ட்டனருக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கப்ட்டது. போல்ட் 4 ஓவர்கள் வீசி 40 ரன்களைவாரி வழங்கினார். சோதி, சவுதி மட்டுமே ஓரளவுக்கு கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். சவுதி, மில்னே, சோதி,நீஷம் தலாஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி தங்களுடைய 4 முயற்சிகளில் 3-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கிண்ணம், 2019ம் ஆண்டு உலகக் கிண்ணம், 2021ம் ஆண்டு டி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில்  நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.   

உலகக் கிண்ண சம்பியனாவதற்கு சாத்தியம் உள்ள அணி என இங்கிலாந்து அணி கூறப்பட்ட நிலையில் கடைசி 3 ஓவர்கள்தான் இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த கனவையும் கலைத்தது. 15 ஓவர்கள்வரை ஆட்டம் இங்கிலாந்தின் கைகளில்தான் இருந்தது. நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் களமிறங்கி இங்கிலாந்து வீரர்களின்கனவை நாசமாக்கிச் சென்றார்.

நியூஸிலாந்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தொடக்க ஆட்டக்காரர் டேரல் மிட்ஷெல், நடுவரிசை   ஜிம்மி நீஷம் இருவர் மட்டும்தான். ஜிம்மி நீஷம் களத்தில் இருந்ததையும், அவர் அடித்த சிக்ஸரையும் பார்த்தபோது, 2019-ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கிண்ணப் போட்டியில் சூப்பர் ஓவர்தான் நினைவுக்கு வந்தது. சூப்பர் ஓவரில் 15 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய நிலையில் நீஷம் 14 ரன்கள் அடித்தநிலையில் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது.

அதேபோன்று இந்த முறை நிகழாமல் பார்த்துக்கொண்ட நீஷம் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் போட்டியை திருப்பிவிட்டுச் சென்றார். 11 பந்துகளைச் சந்தித்த நீஷம் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 27 ஓட்டங்கள் சேர்த்து நியூஸிலாந்து அணியின் பக்கம் ஆட்டம் செல்ல காரணமாக அமைந்தார்.

தொடக்க ஆட்டக்காரர் டேரல் மிட்ஷெல் 47 பந்துகளில் 72 ஓட்டங்கள் அடித்து(4சி்க்ஸர்,4பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். மிகுந்த பொறுப்புடன் ஆடிய டேரல் மிட்ஷெல், வோக்ஸ்வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர், பவுண்டரி என 20 அடித்து பதற்றப்படவைக்காமல் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

  கடந்த 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்வி்யை நிவர்த்தி செய்தது நியூஸிலாந்து. அந்தப் போட்டியில் செய்த எந்தத் தவறையும் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து ஆட்டத்தை ஒருஓவர் இருக்கும் போதே டேரல் மிட்ஷெல் முடித்துவிட்டார்.

15 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 60 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கைவசம் இருக்கும் பந்துகளைவிட ஒருமடங்கு ஓஆட்ம் தேவைப்பட்டது. ஆட்டமும் இங்கிலாந்து பக்கம்தான் இருத்து. களத்தில் மிட்ஷெல், பிலிப்ஸ் இருந்தனர்.

லிவிங்ஸ்டோன் வீசிய 16-வது ஓவரில் பிலிப்ஸ் 2 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார். அடுத்து நீஷம் களமிறங்கினார், அந்த ஓவரில் 3 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டதால், நியூஸிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்தது.

ஜோர்டன் வீசிய 17-வது ஓவரில் நீஷம் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி என 23 ஓட்டங்களை விளாசியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி 3 ஓவர்களில் நியூஸிலாந்து வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ரஷித் வீசிய 18-வது ஓவரைச் சந்தித்த நீஷம் ஒரு சிக்ஸரும், மிட்ஷெல் ஒரு சி்க்ஸரும் விளாசினர். நீஷம் 27 ஓட்டங்களில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 14 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மிட்ஷெல், சான்ட்னர் களத்தில் இருந்ததனர். 19-வது ஓவரை வோக்ஸ் வீச, மிட்ஷெல் எதிர்கொண்டார். முதல் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த மிட்ஷெல், 2-வது பந்தில், லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரும், 3-வது பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸரும் விளாசினார்.

4-வது பந்தில் மிட்ஷெல் ஒரு ஓட்டமும், 5-வது பந்தில் சான்ட்னர் ஒரு  ஓட்டமும் எடுத்தனர். கடைசிப்பந்தில் மிட்ஷெல் பேக்வேர்ட் ஸ்குயர் திசையில் பவுண்டரி அடிக்க நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒரே ஓவரில் 20 ஓட்டங்கள் அடித்து அணியை எளிதாக மிட்ஷெல் வெற்றி பெற வைத்தார்.

கடைசி ஓவர்வரை ஆட்டத்தை இழத்துக்கொண்டிருந்தால், பதற்றம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த மிட்ஷெல் 19-வது ஓவரிலேயே போட்டியை முடித்து 72  ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டியில் கடந்த 5 ஆண்டுகளில் சிக்ஸர் அடிப்பதில் சிறந்த வீரராகக் கருதப்பட்டவர் டேரல் மிட்ஷெல் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஓவர்கள்வரை டேரல் மிட்ஷெல் கணக்கில் ஒரு பவுண்டரி மட்டும்தான் இருந்தது. ஆனால்,15 ஓவர்களுக்கு மேல் மிட்ஷெல் தனது பேட்டிங்கில் கியரை மாற்றி டாப் கியரில் பயணித்தார்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றி 80 சதவீதம் இருந்தது. ஆனால், அனைத்தையும் மாற்றிவிட்டது, பின்ச் ஹிட்டர் ஜிம்மி நீஷத்தின் அதிரடியும், மிட்ஷெலின் பொறுப்பானதுடுப்பாட்டமும்.

நியூஸிலாந்து அணியில் கான்வே(46) ஓட்டங்கள் சேர்த்ததுதான் ஓரளவுக்கு 2வதுநல்ல ஸ்கோராகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கப்தில்(4) வில்லியம்ஸன்(5) இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். பிலிப்ஸ்2 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.

 15வது ஓவர்கள் வரை ஆட்டத்தில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கே 80 சதவீதம் வாய்ப்பு இருந்ததாகக் கணிக்கப்பட்டது. ஏனென்றால், நியூஸிலாந்துக்கு தேவைப்படும் ரன் ரேட் 12 ஆக இருந்தது.

ஜோர்டன் வீசிய 17-வது ஓவரும், ரஷித் வீசிய 18-வது ஓவரும்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கடைசி ஓவரை வோக்ஸிடமும், 19-வது ஓவரை ஜோர்டானிடமும் கொடுத்திருக்கலாம். ஆனால், 19-வது ஓவரை வோக்ஸ் லைன் லென்த்தில் வீசாமல் ஸ்லாட்டில் வீசியதால் இரு பந்துகளுமே சிக்ஸருக்கு மிட்ஷெல் பறக்கவிட்டார். இங்கிலாந்து அணி தனது வெற்றியை கடைசி 3 ஓவர்களில்தான் தவறவிட்டது.

வேகப்பந்துவீச்சாளர் மில்ஸ், தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய் காயத்தால் விலகியது இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்டத்திலும்,  பந்துவீச்சிலும் பலவீனத்தை ஏற்படுத்தியது.

Wednesday, November 10, 2021

பங்களாதேஷும் ஆப்கானும் உள்ளே: இலங்கையும் மேற்கு இந்தியாவும் வெளியே

அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண ரி20 போட்டியில் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தானும், பங்களாதேஷும் நேரடியாகத்தகுதி பெற்றன. இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகளும் குட்டி நாடுகளுடன் தகுதிச் சுற்றி விளையாட வேன்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் இந்த அறிவிப்புக்கு விமர்சகர்களும், ரசிகர்களும் கடும் கண்டனங்களுடன் தமது எதிர்ப்பைத் தெரிவிகின்றனர்.

 2021   ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ண சம்பியனும், ரசன்னரும்  நேரடியாகத் தகுதி பெறுகின்றன.  ஐசிசி  தரவரிசையில் அடுத்து 6 இடங்களில் இருக்கும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை நேரடியாக சூப்பர்-12 சுற்றுக்குத் தகுதி பெறும்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்ட மேற்கு இந்தியா  ஐசிசி ரி20 தரவரிசையில் 10ம் இடத்துக்கு சரிந்தது. இலங்கை அணி 9ம் இடத்தில் உள்ளது. இலங்கை அணி ஏற்கெனவே இந்த தொடரிலேயே தகுதிச் சுற்றில் ஆடித்தான் தகுதி பெற்றது. ரி20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய ஐந்து போட்டிகளிலும்  தோல்வியடைந்த   பங்களாதேஷ்  தர வரிசையில் 8ம் இடத்தில் இருப்பதால் நேரடியாக சூப்பர் 12-க்குத் தகுதி பெற்றது.   சொந்த நாட்டு குழிப்பிட்சில் அவுஸ்திரேலியாவையும், நியூசிலாந்தையும் வீழ்த்தியதால் தரவரிசையில் முந்தியது.

இரண்டு  முறை ரி20  சம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். ஆனால் சொத்தை அணியான ப‌ங்களாதேஷ் நேரடியாகத் தகுதி பெறுகிறது. இதுதான் ஐசிசி தரவரிசையின் லட்சணம். இலங்கை,மேற்கு இந்தியா ஆகியவற்றிடம் தோற்ற பங்கலாதேஷ் நேரடியாகத தகுதி பெறுகிறது.  நன்றாக ஆடிய இலங்கை மீண்டும் தகுதிச் சுற்று ஆட வேண்டுமாம்.

கிறிக்கெற்  ஐசிசி தரவரிசை நிச்சயம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்றே. ஏனெனில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்ற பங்களாதேஷ் நேரடித் தகுதி பெற , பங்கலாதேஷைப் பந்தாடிய  மேற்கு இந்திய , இலங்கை அணிகள்  தகுதிச் சுற்று ஆடி தகுதி பெற வேண்டுமாம். யாராவது சொல்லி  தீர்ப்பை மாத்துங்கப்பா என் மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.

3 மணி நேரத்துக்கு நட்பெல்லாம் கிடையாது: நாங்கள் எதிரிகள் - ஜஸ்டின் லாங்கர்


   உலகக் கிண்ண ரி20 போட்டியில்  பாகிஸ்தான், அவுஸ்திரேலியா  ஆகியன  அரையிறுதியில் நாளை  வியாழனன்று மோதுகின்றன. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் த்யூ ஹெய்டன், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். இருவரும் சிறந்த நண்பர்கள்.   முன்னாள் அவுஸ்திரேலிய  அனியின் தொடக்க வீரர்கள். இப்போது எதிரெதிர் முகாம்களில் உள்ளனர்.

எனவே வியாழக்கிழமையன்று தனக்கும் மத்யூ ஹெய்டனுக்குமான நட்பு என்பது 3 மணி நேரத்திற்கு அதாவது அரையிறுதி போட்டி நடைபெறும் வரை ஆஃபில் இருக்கும் என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தோல்வியடையாத அணியாக அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் ஒரு கால ஆதிக்க அணியில் மத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர் இணை வேகப்பந்து வீச்சாளர்களைப் பின்னி எடுத்தது.  ஒரு காலத்தில் மேற்கு இந்திய வீரர்களான  ராய் பிரெட்ரிக்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், விவ் ரிச்சர்ட்ஸ்  ஆகிய முதல் மூன்று வீரர்கள் இறங்கி உலகபந்து வீச்சாளர்களை நடுங்கச் செய்தனரோ அதே போல்  அவுஸ்திரேலிய அனியின் லாங்கர், ஹெய்டன், பொண்டிங் ஆகியோர்  பெரிய அச்சுறுத்தலாக  திகழ்ந்தனர்.

  முன்னாள்  ஜாம்பவான்களான ஹெய்டன், லாங்கர்  ஆகியோர் எதிரெதிர் முகாம்களில் பயிற்சித் திறனில் இருப்பது பாகிஸ்தான், அவுஸ்திரேலியபோட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

இது தொடர்பாக ஜஸ்டின் லாங்கர் கூறும்போது,

 நானும் ஹெய்டனும் சிறந்த நண்பர்கள், இப்போது எதிரெதிர் முகாம்களில் போட்டியை அந்தந்த அணிக்காக பார்த்துக் கொண்டிருக்கி்றோம். ஹெய்டன் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

நாங்கள் இருவரும் மாறி மாறி இந்த   தொடரில் மேசேஜ்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். பெரிய ஆலோசனைகளெல்லாம் இல்லை, இருவருமே பணியில் தீவிரமாக இருக்கிறோம். நான் ஹெய்டனை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், நான் நீண்ட காலம் அவரை சந்திக்கவே இல்லை. கிரிக்கெட்டில் நிறைய எனக்கும் அவருக்கும் உறவின் பாலமாக இருக்கிறது.


வியாழக்கிழமை பாகிஸ்தானுடனான அரையிறுதிப் போட்டியில் அந்த 3 மணி நேரம் எங்கள் நட்புறவை கொஞ்சம் ஆஃப் செய்து விடுவேன். கிரிக்கெட் தான் முக்கியம்என்றார் ஜஸ்டின் லாங்கர்.