Monday, October 31, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 41


 குழந்தை நட்ச்த்திரமாக அறிமுகமாகி  இந்திய சினிமாவின்  உச்சத்தைத்க் தொட்ட நாயகி ஸ்ரீதேவி.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து  மொழிப் படங்களிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர்  ஸ்ரீதேவி. திரைப் படம் பார்ப்பதை விரும்பாத அரசியல்தலைவரான காமரஜரின் சிபார்சிலேயே ஸ்ரீதேவிக்கு சினிமா வய்ப்பு தேடிச் சென்றது. கர்மவீரர் காமராஜரின் ஆசிதான் ஸ்ரீதேவிக்கு பக்கபலமாக இருந்தது

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர். ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன். தாய் ராஜேஸ்வரி. காங்கிரஸ் இயக்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஐயப்பன் பெருந்தலைவர் காமராஜரை சநதிக்க அடிக்கடி அவரது இல்லத்துக்குச்  செல்வார்.ஒரு முறை அவர் காமராஜரைச்  சந்திக்கச் சென்றபோது  தனது நான்கு வயது மகளான ஸ்ரீதேவியையும் தன்னுடன் அவர் அழைத்துக் சென்றிருந்தார். அப்போது கவிஞர் கண்ணதாசனும் காமராஜர் வீட்டுக்கு வந்திருந்தார். சிறுமி ஸ்ரீதேவியின் சுறுசுறுப்பைப்  பார்த்த பெருந்தலைவர் “இந்தச்  சிறுமியை நீ சினிமாவில் அறிமுகப்படுத்தலாமே” என்று கண்ணதாசனிடம் கூறினார்.

கண்ணதாசனின் சிபார்சில்  சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த  ‘துணைவன்’ படத்தில் பாலமுருகனாக அறிமுகமானார் ஸ்ரீதேவி.

அதற்குப் பிறகு எல்லா தென்னிந்திய மொழிப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி ‘ராணி மேரா நாம்’ என்ற படத்தின் மூலம் இந்திப் படவுலகில் குழந்தை நட்சத்திரமாகக்  கால் பதித்தார்.

ஸ்ரீதேவிக்குப் பதின்மூன்று வயதானபோது அவரை தனது ‘மூன்று முடிச்சு’  படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு சிற்றன்னையாக அவரை நடிக்க வைத்தார்.  அந்த மூன்று முடிச்சு படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவிஆகிய மூன்று உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்த முதல் படமாக அமைந்தது.

 இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் அவர் நடித்த ‘16 வயதினிலே’  ,  காமிரா கவிஞர் பாலு மகேந்திராவின்  ‘மூன்றாம் பிறை’ , இயக்குநர் மகேந்திரனின்  ‘ஜானி’  ஆகியன  ஸ்ரீதேவியைத் திரும்புப் பார்க்க வைத்தன.

‘மூன்று முடிச்சு’ படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ட  சம்பளம் முப்பதாயிரம் ரூபாய். ஸ்ரீதேவிக்கு சம்பளம் ஐயாயிரம் ரூபாய். ரஜினிகாந்துக்கு மூவாயிரம் ரூபாய். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்ரீதேவியின் தாயாரிடம் மிகவும் நெருக்கமாக ரஜினி பழகுவார். என்னுடைய தாயாரும் தன்னுடைய மகன் போல அவர் மீது பாசத்தைப் பொழிவார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது  ரஜினியின் ஒரே லட்சியம் நாம் எப்போது கமல்ஹாசன் போல பெரிய நடிகராக வந்து முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவது என்பதாகத்தான் இருந்தது.

“நீ நிச்சயமாக பெரிய நடிகனாக வருவாய். முப்பதாயிரம் என்ன.. அதற்கும் மேலாக சம்பளம் வாங்குவாய்” என்றுஅவர் ரஜினிக்கு  அவருக்கு ஆறுதல் கூறுவார். இப்போ ரஜின்யின்சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்துள்ளது.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி அதற்குப் பின்னால் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் மட்டுமே. அது தவிர வேறு சில ஒற்றுமைகளும் அவர்களுக்கு உண்டு. இருவருமே திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சாதனையாளர்கள்.

  ஜமுனா, காஞ்சனா, மஞ்சுளா, லதா, சந்திரகலா, ஜெயப்பிரதா, மாதவி, ஜெயசுதா, ஜெயசித்ரா  ப்பொன்ற நடிகைகளுக்கு மத்தியில்  ஸ்ரீதேவி அறிமுகமானார். அடுத்த தலைமுறை நாயகிகளான  அம்பிகா, ராதா, சுகாசினி, ராதிகா, ரதி அக்னிஹோத்ரி, விஜயசாந்தி ஆகியோருடனும் ஸ்ரீதேவி போட்டி போட்டு  நடித்தார். ஏ.நாகேஸ்வரராவோடு இணைந்து நடித்துவிட்டு அவரது மகன் நாகார்ஜுனாவிற்கும்   ஜோடியாக நடித்த பெருமையும் அவருக்கு உண்டு. குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி ‘கவரிமான்’ படத்தில் அவரது மகளாக நடித்தார். பின்னர் ‘சந்திப்பு’ படத்திலே அவருக்கு ஜோடியானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி மலையாளத்தில் மட்டுமே குறைவான படங்களில் நடித்துள்ளார்.


1960-களில் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஜோடியாக எண்ணற்ற படங்களில் நடித்த சரோஜாதேவியைப் போல ரஜினி, கமல் ஆகிய இருவரின் படங்களிலும் மாறி மாறி நடித்த ஸ்ரீதேவி தமிழ்ப் பட உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்துவிட்டு இந்திப்பட உலகில் அடி எடுத்து வைத்தார்.

தென்னகத்திலிருந்து இந்திக்குச் சென்று சாதனை படைத்த வைஜயந்திமாலா, பத்மினி, ரேகா, ஹேமமாலினி ஆகியோரைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டில் பிரபல தெலுங்கு பட இயக்குநரான ராகவேந்திரராவ் இயக்கிய ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்தின் மூலம் இந்தித் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்தவர் ஸ்ரீதேவி.

  ஜமுனா, காஞ்சனா, மஞ்சுளா, லதா, சந்திரகலா, ஜெயப்பிரதா, மாதவி, ஜெயசுதா, ஜெயசித்ரா  ப்பொன்ற நடிகைகளுக்கு மத்தியில்  ஸ்ரீதேவி அறிமுகமானார். அடுத்த தலைமுறை நாயகிகளான  அம்பிகா, ராதா, சுகாசினி, ராதிகா, ரதி அக்னிஹோத்ரி, விஜயசாந்தி ஆகியோருடனும் ஸ்ரீதேவி போட்டி போட்டு  நடித்தார். ஏ.நாகேஸ்வரராவோடு இணைந்து நடித்துவிட்டு அவரது மகன் நாகார்ஜுனாவிற்கும்   ஜோடியாக நடித்த பெருமையும் அவருக்கு உண்டு. குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி ‘கவரிமான்’ படத்தில் அவரது மகளாக நடித்தார். பின்னர் ‘சந்திப்பு’ படத்திலே அவருக்கு ஜோடியானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி மலையாளத்தில் மட்டுமே குறைவான படங்களில் நடித்துள்ளார்.

1960-களில் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஜோடியாக எண்ணற்ற படங்களில் நடித்த சரோஜாதேவியைப் போல ரஜினி, கமல் ஆகிய இருவரின் படங்களிலும் மாறி மாறி நடித்த ஸ்ரீதேவி தமிழ்ப் பட உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்துவிட்டு இந்திப்பட உலகில் அடி எடுத்து வைத்தார்.

ந்தார் அந்த நடிகை. நாங்கள் இருவரும் போனபோது வாசலுக்கு வந்து எங்களை வரவேற்ற அவர் தன்னுடைய அம்மாவை அழைக்க வீட்டுக்கு உள்ளே போனார்.

”நடிகையின் அம்மா வந்தவுடன் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கலாமா?” என்று என்னிடம் ரஜினி  கேட்டார். அப்போது திடீரென்று மின்சாரம் “கட்” ஆனது. நீண்ட நேரம் மின்சாரம் வரவில்லை. 

மீண்டும் வெளிச்சம் வந்த நேரத்தில் ரஜினியின் மனம் மாறி இருந்தது. மின்சாரம் போனதை சகுனத்  தடையாக அவர் நினைத்துவிட்டதால் அந்தத் திருமணம் நடைபெறவில்லை…” என்று குறிப்பிட்டிருக்கிறார் மகேந்திரன்.


 அந்தக் காதல் தோல்வியைத் தொடர்ந்து  நீண்ட இடைவெளிக்குப் பின்னால் இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மீது ஸ்ரீதேவிக்குக்  காதல் பிறந்தது. மூன்று ஆண்டுகள் அவரோடு இணைந்து வாழ்ந்த ஸ்ரீதேவி தனது முதல் மனைவியான யோகிதா பாலியை மிதுன் விவாகரத்து செய்யத் தயாராக இல்லை என்பது தெரிந்ததும் மிகுந்த அதிர்ச்சியோடு அவரை விட்டு விலகினார்.

1996-ல் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் அண்ணனுமான போனி கபூரைத் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, அதன் பிறகு திரையுலகைவிட்டு விலகினார். இவருக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்த தமிழ்ப் படமாக விஜய் கதாநாயகனாக நடித்த ‘புலி’ படம் அமைந்தது.

ஸ்ரீதேவி நடித்த முதல் திரைப்படமான  ‘துணைவன்’ 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்திலே வெளியானது. அவர் நடித்த  கடைசி படமான ‘மாம்’ திரைப்படமும் அதே ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியானதை ஒரு விசேஷ ஒற்றுமை என்றுதான் சொல்ல வேண்டும்.

இயற்கையை வெல்ல முடியாது என்ற நியதி காரணமாக  அவர் இறந்துவிட்டார் என்றாலும் திரைப்பட ரசிகர்கள் மனதில் அவர் என்றும் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

 

ஜேர்மன் தூதர் கட்டார் பயணத்தை ஒத்திவைத்தார்

ஜேர்மனியின் மனித உரிமைகள் தூதர் ஞாயிற்றுக்கிழமை கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஒத்திவைப்பதாகக் கூறினார்.

ஜேர்மனியின் உள்துறை அமைச்சரின் கருத்துக்கள் தொடர்பாக கட்டார் வெள்ளிக்கிழமை ஜேர்மன் தூதரை வரவழைத்தது, அவர் மனித உரிமைகள் சாதனை காரணமாக வளைகுடா அரபு நாட்டிற்கு உலகக் கோப்பையை வழங்குவதற்கான முடிவை விமர்சித்ததாக குற்றம் சாட்டியது.

பல ஆண்டுகளாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடத்துவது மற்றும் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமாக்குவது குறித்து பல ஆண்டுகளாக சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் ஒரு தூதரை அழைத்தது இதுவே முதல் முறை.

ஜேர்மனியின் மனித உரிமைகள் தூதர் லூயிஸ் ஆம்ட்ஸ்பெர்க் கூறுகையில், "இந்த வார இறுதியில் நடந்த முன்னேற்றங்கள், உலகக் கோப்பைக்கு முன்னால் உள்ள தற்போதைய சூழ்நிலையில், கட்டாதார் அரசாங்கத்துடன் வெளிப்படையான மற்றும் விமர்சன உரையாடலை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை எனக்கு தெளிவுபடுத்தியுள்ளது. திங்கட்கிழமை கடாருக்கு விஜயம் செய்ய ஃபைசருடன் வரவிருந்த ஆம்ட்ஸ்பெர்க், பின்னர் வருகையை நடத்துவதாகக் கூறினார்.

"பிராந்திய மற்றும் உலகளாவிய நடிகராக கத்தாரின் வளர்ந்து வரும் பங்கை அங்கீகரிக்கும் அதே வேளையில், சர்வதேச அழுத்தம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் முயற்சிகள் உலகக் கோப்பைக்குப் பிறகும் மையமாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

ஃபேசர், அதன் போர்ட்ஃபோலியோ விளையாட்டுகளை உள்ளடக்கியது, ஜேர்மன் கால்பந்து கூட்டமைப்பிலிருந்து ஒரு பிரதிநிதியுடன் கட்டாருக்குச் செல்ல இன்னும் திட்டமிட்டுள்ளார்.

சவாலை சமாளிப்பாரா புதிய பிரதமர் ரிஷி சுனக்?

 இங்கிலாந்து பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட  லிஸ் ட்ரஸ் 45 நாட்களின் இராஜினாமாச்  செய்ததால் புதிய பிரதமராக ரிஷி சுனக்  பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லிஸ் ட்ரஸ்ஸுடன்  போட்டியிட்டுத் தோல்வியடைந்த ரிஷி சுனக் ஆச்சரியப்படும் வகையில்  பிரதாமர் பதவியில் அமர்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் உருவான  பொருளாதார வீழ்ச்சியால் அப்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இராஜினாமாச் செய்தார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க சபதம் செய்துகொண்டு பதவி ஏற்ற லிஸ் ட்ரஸ் 45 நாட்களில் வெளியேறினார். இரண்டு தலைவர்கள்  புறமுதுகிட்டனர். அடுத்து பதவி ஏற்ற  இளம் தலைவர் ரிஷி சுனக் என செய்யப் போகிறார் என்ன அறிவதற்காக  உலகமே காத்துக்கொண்டிருகிறது.

கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்தும் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், ரிஷி சுனக் , பிரதமரானார். வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள செல்வந்த அரசியல்வாதிகளில் ஒருவரான சுனக், [42]நவீன காலத்தில் நாட்டின் இளைய தலைவராக மாறுவார் - மேலும் இரண்டு மாதங்களுக்குள் மூன்றாவது தலைவராவார்.அவர் பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தில் பதவியேற்கிறார். பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்பில் இருந்து தத்தளிக்கும் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் மற்றும் சித்தாந்த அடிப்படையில் பிளவுபட்ட ஒரு கட்சியை வழிநடத்த முற்படுகிறார்.

 முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் இருந்து  ரிஷி சுனக் இராஜினாமா செய்தபோது துரோகம் செய்ததாக சிலர் குற்றம் சாட்டினர்.  பிரிட்டனின் மேலாதிக்க அரசியல் கட்சியை ஒன்றிணைக்க கடுமையாக அவர்  உழைக்க வேண்டியிருக்கும்.   2016 இல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு வாக்களித்ததிலிருந்து பிரிட்டன் நிரந்தர நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது.

ரிஷி சுனக்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  இங்கிலாந்தின் முதல் பிரதம மந்திரி ஆவார்.சுனக் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு அவர் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியைச் சந்தித்தார், அக்ஷதாவின் தந்தை இந்திய கோடீஸ்வரர் என்ஆர் நாராயண மூர்த்தி, அவுட்சோர்சிங் நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனர் ஆவார்.

ரிஷி சுனக் ஒரு திறமையான பொருளாதாரக் கொள்கை வகுப்பாளராகக் காணப்பட்டாலும் அவர் வெள்ளையர் அல்ல. அந்த வகையில் இங்கிலாந்தின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமர் ரிஷி சுனக் ஆவார்.

இது இங்கிலாந்தில் பலரால் ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுனக் வெற்றி பெற்றாலும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவிதி மாறாது.

சமீப காலத்தில், பிரிட்டன் பொருளாதாரம் எதிர்கொள்ளும் முக்கிய சவாலானது, விதிமுறைகள்-வர்த்தக அதிர்ச்சி – ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது இறக்குமதியின் விலை அதிகரிப்பு.

இந்த விளைவுகள் பணவீக்கத்தை அதிகரிக்கின்றன, ஆனால் உள்நாட்டு வருமானத்தை முடக்குகின்றன. இந்த விளைவுகள் வரவிருக்கும் ஆண்டில் வீட்டு மற்றும் கார்ப்பரேட் துறைகள் இரண்டிலும் தேவைக்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த இழப்பு எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்பதுதான் முக்கிய கொள்கை கேள்வி.

குடும்பங்களுக்கு,செலவு அதிகரிப்பு. இதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களைத் தாக்கும்…நடுத்தர காலத்தில், அடமானச் செலவுகளில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2024க்குள் இது மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து பொருளாதாரத்தின் விநியோகப் பக்கத்தில் உள்ள பலவீனம் இப்போது அவசர கவலையாக உள்ளது. உற்பத்தியானது அதன் கோவிட்-க்கு முந்தைய போக்கை விட 2.6% குறைவாக உள்ளது.

தேவை குறைவதால் வேலையில்லா திண்டாட்டம் விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அது உச்சத்தில் இருந்து (12%க்கு அருகில்) குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 2023 முழுவதும் அது அதிகமாக இருக்கும்.

இது பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

எளிமையாகச் சொன்னால், ஒருபுறம், சில்லறை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் குடும்பச் செலவை நெருக்கடியில் ஆழ்த்தும்.

மறுபுறம் பொருளாதார வளர்ச்சியின் பிரச்சனை, இது குறைந்த வருவாய் மற்றும் அதிக கடன்களுக்கு வழிவகுக்கிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதால், அது பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிப்புக்குள்ளாக்கும்.

வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருப்பதன் மூலமும், அரசாங்க செலவினங்களை விரிவுபடுத்துவதன் மூலமும் வளர்ச்சியை உயர்த்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பணவீக்கத்தை மோசமாக்கும், அல்லது மக்களின் வாங்கும் திறனை மேலும் குறைக்கும்.

பலரும் பிரிட்டன் நாட்டின் பிரதமராக முதல் வெளிநாட்டவர் அதாவது பிரிட்டன் வம்சாவளியை அல்லாதவர் எனப் பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஆசிய வம்சாவளியை பிரிவில் தான் ரிஷி சுனக் முதல் பிரிட்டன் பிரதமர். பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் 20 பிப்ரவரி 1874 - 21 ஏப்ரல் 1880 மற்றும் 27 பெப்ரவரி 1868 - 1 டிசம்பர் 1868 ஆகிய காலகட்டத்தில் பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். இவருடை தந்தை ஐசக் டி'இஸ்ரேலி பிரிட்டிஷ் எழுத்தாளர். இவருடைய தாத்தா பெஞ்சமின் டி' இஸ்ரேலி இவர் இத்தாலியில் யூத குடும்பத்தில் பிறந்த ஒரு வணிகர் ஆவார்.

ரிஷி சுனக் 12 மே 1980 அன்று பிரிட்டன் நாட்டின் சவுத்தாம்ப்டன் பகுதியில் இந்திய வம்சாவளியே சேர்ந்த யாஷ்வீர் மற்றும் உஷா சுனக் ஆகியோருக்குப் பிறந்தார். ரிஷி சுனக் பெற்றோர்கள் இருவருமே ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள்.

அவரது தந்தை யாஷ்வீர் கென்யாவின் காலனி மற்றும் பாதுகாப்பகத்தில் (இன்றைய கென்யா) பிறந்து வளர்ந்தார். அவரது தாயார் உஷா, இதே கென்யாவின் Tஅஙன்யிக பகுதியில் பிறந்தவர் (இது தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது).இவர்களின் குடும்பம் பிரிட்டனுக்கு மாறிய பின்பு யஷ்வீர் ஒரு மருத்துவராக இருந்தார், மற்றும் உஷா ஒரு பார்மாசிஸ்ட் ஆகவும் பணியாற்றி வந்தனர். உஷா அவர் உள்ளூரில் மருந்தகத்தை நடத்தி வந்தார்.

ரிஷி சுனக்-ன் தாத்தா-வான ராம்தாஸ் சுனக் குஜ்ரன்வாலா என்னும் பகுதியில் பிரிட்டிஷ் இந்திய காலத்தில் பிறந்தார், தற்போது இது பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. ராம்தாஸ் சுனக் 1935ல் குமாஸ்தா-வாகப் பணியாற்றத் தனது மனைவி சுஹாக் ராணி சுனக் உடன் நைரோபிக்கு சென்றார்.

இதேபோல் ரிஷி சுனக் தாய் வழி தாத்தாவான ரகுபீர் சைன் பெர்ரி MBஏ, Tஅஙன்யிக-வில் வரி அதிகாரியாகப் பணிபுரிந்தார். இதைத் தொடர்ந்து மேலும் 16 வயதான Tஅஙன்யிக-வில் பிறந்த ஸ்ரக்ஷா-வை திருமணம் செய்தார். அவருடன் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன, இவர்களுடைய குடும்பம் 1966 இல் பிரிட்டனுக்கு க்குக் குடிபெயர்ந்தது.

பிரிட்டனுக்கு  குடிபெயர்ந்த பின்பு ரகுபீர் சைன் பெர்ரி ஈன்லன்ட் றெவெனுஎ பிரிவின் கலெக்டர்-ஆகப் பணியில் சேர்ந்தார், இதேவேளையில் ராம்தாஸ் சுனக்-ன் குடும்பமும் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தது. பிரிட்டனில் யாஷ்வீர் மற்றும் உஷா ஆகியோர் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் சந்தை, விநியோக சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இங்கிலாந்தும் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்றே முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் முயற்சி செய்தார். மாற்றத்துக்கான அவருடைய முயற்சிகளை பாராட்டுகிறேன். ஆனால் சிலதவறுகளால் மோசமான விளைவுகள் ஏற்பட்டன. அந்த தவறுகளை நான் சரி செய்வேன்.

இதற்காக கடுமையான கட்டுப்பாடுகள், நடைமுறைகள் அமல் செய்யப்படும் என்று அஞ்ச வேண்டாம். கரோனா காலத்தில் நாட்டின் நிதியமைச்சராக நான் எவ்வாறு பணியாற்றினேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

மக்களின் நலன், வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டே அரசின் செயல்பாடுகள் இருக்கும். நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பேன். எனது தலைமையிலான அரசு உங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளின் வளர்ச்சியையும் உறுதி செய்யும்.

நாட்டை ஒன்றிணைப்பேன். வெறும் வார்த்தைகளால் அல்ல. செயல்பாடுகளால் நாட்டை ஒன்றிணைப்பேன். இரவு, பகலாக உங்களுக்காக உழைப்பேன். அரசு துறைகளின் ஒவ்வொரு நிலையிலும் நிபுணத்துவம், திறமை வெளிப்படும். கன்சர்வேட்டிவ் கட்சியினரின் நம்பிக்கையை பெற்றுள்ளேன். அடுத்து மக்களின் நம்பிக்கையையும் பெறுவேன்.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் சாதனைகளை இப்போது நினைவுகூர்கிறேன். அவரது சாதனைகள், பெருந்தன்மைக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த 2019-ம் ஆண்டில் கன்சர்வேட்டிவ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். சுகாதார கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். சிறப்புபள்ளிகள், பாதுகாப்பான சாலைகள் உறுதி செய்யப்படும். சுற்றுச்சூழல் பேணிக் காக்கப்படும். நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்படும்.

பாதுகாப்பு படைகளுக்கு முழுஆதரவு அளிக்கப்படும். முதலீடு, புதுமையான திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும். பிரெக்ஸிட்டால்கிடைத்த வாய்ப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

வளமான எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவேன். அரசியலை தாண்டி மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பேன். நான் ஒன்றிணைந்து செயல்பட்டு புதிய சாதனைகளைப் படைப்போம். புதிய நம்பிக்கையோடு பயணத்தை தொடங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

2011 இல் நடந்தது 2022 இல் நடக்குது அதிசய ஒற்றுமை

2011ம் ஆண்டு ஓரியோ பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றது. இதே போல இந்தாண்டு ஓரியோவின் புதிய வடிவ பிஸ்கட்டை டோனி வெளியிட்டார். அப்போது அவர், இந்தாண்டு சில சுவாரஸ்யங்கள் நடக்கலாம் என சூசகமாக கூறியிருந்தார். அதே போலவே இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை  வென்றது. 

 2011ம் ஆண்டு இங்கிலாந்து அணியை முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அயர்லாந்து வீழ்த்தியிருந்தது. அப்போது இந்தியா சம்பியனானது. அதே போல இந்தாண்டு இங்கிலாந்து அணியை முதல் முறையாக ரி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து வீழ்த்தியுள்ளது. இதனால் இந்திய அணியின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது. 

 2011ம் ஆண்டு லீக் சுற்றில் இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியது  அந்த தொடரில் இந்தியா பெற்ற ஒரே ஒரு தோல்வி அதுதான். இதே போல தற்போதும், லீக் சுற்றில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுள்ளது. அதுவும் முதல் தோல்வியாகும். இதனால் 2011ம் ஆண்டு நடந்த அதே சம்பவங்கள் மீண்டும் ரிப்பீட் ஆவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Sunday, October 30, 2022

பெனால்டி கில்லர் யான் சோமர்

உதைபந்தாட்டப் போட்டியில் பெனால்டி என்பது ஒரு கோலுக்குச் சமமானது. சுவிட்ஸர்லாந்து கோல் கீப்பர் யான் சோமர்  அதிகளவு பெனால்டியைத் தடுத்து சாதனை செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில்  சுவிட்ஸர்லாந்து கோல்கீப்பர் யான் சோமர் உலகின்  பிரபல வீரர்களின்  பெனால்டியைத் தடுத்து சாதனை புரிந்துள்ளார்.     செர்ஜியோ ராமோஸ்ஜோர்ஜின்ஹோ; ரோட்ரி ஹெர்னாண்டஸ்; தாமஸ் சூசெக் என பட்டியல் மிக நீளமானது.

  ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் 16வது சுற்றில் கடந்த ஆண்டு உலகக் கிண்ண ம்பியனான பிரான்ஸுக்கு எதிராக பெனால்டி ஷூட்அவுட்டில் வெற்றி பெற்றது எம்பாப்பேவுக்கு எதிரான  சோமரின் மிகச்சிறந்த தருணம்.

சுவிட்ஸர்லாந்து கட்டாருக்குச் செல்வதற்கும் இத்தாலி தகுதி பெறாததற்கும்  ஜோர்ஜின்ஹோவுக்கு எதிரான சேவ் ஒரு காரணம்.

0-0 என முடிவடைந்த தகுதிச் சுற்று ஆட்டத்தில் மிட்ஃபீல்டரின் வர்த்தக முத்திரையான ஸ்லோ ஜம்ப்-அன்ட்-கிக் நுட்பத்தை சோமர் முறியடித்தார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரோமில்,  90வது நிமிட பெனால்டியை சோமர் தடுத்தார். போட்டி 1-1 என முடிவடைந்தது. இத்தாலியை பிளேஆஃப்களுக்குள் தள்ளியது - அங்கு நான்கு முறை சாம்பியன்கள் தோற்றனர்.

செப்டம்பரில் நேஷன்ஸ் லீக் விளையாட்டில் சூசெக்கின் ஷாட்டை காப்பாற்றியபோது, சுவிஸ் தொலைக்காட்சி சோமரின் தேசிய பெருமையை பிரதிபலித்தது."ஐரோப்பிய கால்பந்தில் யான் நம்பர் 1 பெனால்டி கில்லர்" என்று வர்ணனையாளர் ஜேர்மன் மொழியில் கூறினார்.

2018 உலகக் கிண்ணப் போட்டியில் அதிகமான  29 பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன, வீடியோ மதிப்பாய்வு அதிகாரிகள் குறைவான சம்பவங்களைத் தவறவிட்டனர். இதற்கு முன் 32 அணிகள் பங்கேற்ற உலகக் கிண்ணப் போட்டியில் 18 பெனால்டிகளே அதிகபட்சமாக இருந்தது.

இது  சோமரின் மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியாகவும், முதல் தேர்வு கோல்கீப்பராக இரண்டாவது முறையாகவும் இருக்கும். சுவிட்ஸர்லாந்தின் தேசிய அணிக்காக 76 போட்டிகளில் விளையாடியுள்ளார்.உலகக் கிண்ணப் போட்டியில்  முந்தைய நாள்  யான் சோமருக்கு 34 வயது.   சோமர், பாசலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் அவர் தற்போது தனது ஒன்பதாவது சீசனில் ஜெர்மன் கிளப்பான பொருசியா மோன்செங்லாட்பாக்கில் உள்ளார்.

 

Saturday, October 29, 2022

போராட்டங்களைக் கண்டு கொள்ளாத அரசாங்கம்


 அரசாங்கத்துக்கு எதிராக  உலக நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுவது வழமையான ஒன்று. அந்தப் போராட்டங்களுக்கான காரணங்களைக் கண்டு அவற்றைத் தடுப்பதற்கு பல அரசாங்கங்கள்  முன் வருவதில்லை. போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதில் அதிக அக்கறை காட்டப்படுவதால்  போராட்டங்கள் நீட்சி பெறுகின்றன.   காலிமுகத் திடலில்  நடைபெற்ற தொடர் போராட்டத்தினால் இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது.அரசியல் லைமையில் மாற்றம் ஏஎற்பட்டதே தவிர அரசியலில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. மறை முகமாக  ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பல்கலைக் கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள்  கொழும்பில் போராட்டங்களை நடத்துகின்றன. அரசாங்கம் அவற்றை அடக்கி ஒடுக்குவதில் ஆர்வமாக  இருக்கிறது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் , சிவில் செயற்பாட்டாளர்கள் இன்று கூட்டாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில்  கலந்துகொண்டனர்.

 

 

போராட்டங்களில்  இருந்து சிறுவர்களையும், குழந்தைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று  அரசாங்கம் அறிவித்துள்ளது. குழந்தைகளுடனும், சிறுவர்களுடனும் பொராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பொலிஸார் வன்முரி பிரயோகித்ததால் அதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC), சிவில் அமைப்புகள், ஆசிரியர்கள், அதிபர்கள்  , தனியார், தோட்ட மற்றும் பிற துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கவாதிகளின் பங்கேற்புடன் வியாழக்கிழமை (27)    "அடக்குமுறையை நிறுத்து" மற்றும் "மக்களின் குரலுக்கு இடம் கொடு" என்ற தொனிப்பொருளில், அதிவேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பில் போராட்டம் நடைபெற்றது.

   பொதுமக்களின் போராட்டம் நடத்தும் உரிமையை நசுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக  பேரணி நடத்தப்படும் என தெரிவித்தார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக அனைத்து அரச, அரை அரச, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு வாழ்வாதார கொடுப்பனவை வழங்குமாறு TUCC அழைப்பாளர் வசந்த சமரசிங்க,  கருத்துத் தெரிவித்தார்.

எமது அடிப்படையான கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது. இந்த அரசு பல விதிகளை அமல்படுத்துவதன் மூலம் மக்களின் கருத்தை தடுக்க திட்டமிட்டுள்ளது . கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது பணவீக்கம் 82% ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர்களின் வாழ்க்கைச் செலவுகள் வேகமாக அதிகரித்து வருவதால், அனைத்து மாநில மற்றும் அரச சார்பற்ற துறை ஊழியர்களுக்கும் வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்என சமரசிங்க கூறினார்.

  துறைமுக அதிகாரசபை ஊழியர்கள், தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் , வங்கி ஊழியர்கள், இலங்கை மின்சாரசபை ஊழியர்கள்  இணைந்து அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்

அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால்,அரசாங்கம் அவற்றைக் கணக்கில் எடுக்காது. அரசியல் செய்கிறது. அரசியல்வாதிகள் மக்களிடன் செல்ல வேண்டிய காலம் வரும் அப்போது மக்கள் பதிலடிகொடுப்பார்கள்.

 


போதையாலும்,மோகத்தாலும் தடுமாறும் இளைய சமுதாயம்

போதைவஸ்து பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி  வருகிறது. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரியநடவடிக்கைகளை  அரசாங்கம்  செய்து வருகிறது. இந்த நிலையில் பாடசாலை மாணவர்களும் ,பல்கலைக் கழக மாண்வர்களும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  புள்ளி விபரங்கள் வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்த நோய்  பரவுகிறது, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இதுபோன்ற 50 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தேசிய STD மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.இதனை  வெறும் செய்தியாகக் கடந்து போய்விட முடியாது.  

பதினாறு பல்கலைக்கழக மாணவர்களும் மூன்று பள்ளி மாணவர்களும் பதிவான வழக்குகளில் அடங்குவதாக  அவர் கூறினார். இலங்கையில் சுமார் 2,350 பேர் எச்ஐவிக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சமூகத்தில் சுமார் 3,750 எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.  இளைஞர்கள் போதைப்பொருள் பாவனையினாலும், குழுவாக கலந்துகொள்ளும் விருந்துகள் போன்ற சமூக நிகழ்வுகளினாலும் இந்நோய் தொற்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இணயவழி கல்வியும் இதற்கு முக்கிய காரணம் என சமூக ர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  பெற்றோர் இளையோர் தொடர்பில் கூடுதலாக தேடுவதில்லை. கல்வி நடவடிக்கைகளுக்கு அப்பாற் சென்று, தேவையற்ற காணொளிகளை பார்வையிட்டு, அதற்கு அடிமையாகின்றனர்.  இணைய வழியாக கல்வி கற்கும் போது, அதற்கு அப்பாற் சென்றும் தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அவதானத்துடன் இருக்க வேண்டும். சில பெற்றோருக்கு அது குறித்து ஆராய்வதற்கான புரிந்துணர்வு கிடையாது. இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில், தொடர்ச்சியாக மருந்து அருந்த வேண்டும். அதையும் தவிர்ந்த பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

போதையாலும், பால்வினை நோயாலும் இளைஞர்கள் பாதிக்கப்படும் போது அடுத்த லைமுறையில் பாரிய தாக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.  பாடசாலையில் ஆசிரியர்களும் ,வீட்டில் பெற்றோரும் பிள்ளைகளின் மேல் மிகுந்த அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

எது சரி. எது பிழை என்பதை மானவர்களின் மனதில் புகுத்த வேண்டும். அந்தப் பொறுப்பில் இருந்து பெற்றோரும், ஆசிரியர்களும்  ஒதுங்கக்கூடாது.