Showing posts with label அதிமுக. Show all posts
Showing posts with label அதிமுக. Show all posts

Wednesday, April 9, 2025

எடப்பாடியை நெருங்கும் அமித்ஷா உறுதியானது கூட்டணி


  தமிழகத்தில் நடைபெற்ற 11 தேர்தல்க்ளில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி  படு தோல்வியைச் சந்தித்தது. தனது  தலமையிலான ண்அணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தோல்விகளுக்கு பாரதீய ஜனதா தான் காரணம் எனக் கண்டு பிடித்த எடப்பாடி  பாரதீய ஜனதாவுடனான கூட்டணியைத் துறந்தார்.

 மோடி, அமித் ஷா ஆகியோர் அழைப்பு விடுத்தும் எடப்பாடி இறங்கிவரவில்லை.கடந்தவாரம் ஒரு நாள் திடுதிப்பென டெல்லிக்குப் பறந்த எடப்பாடி அமித்ஷாவை இரகசியமாக‌ச் சந்தித்தார்.

அதிமுக  தலைவர்களுக்குக் கூடத் தெரியாமல் எடப்பாடி டெல்லி சென்றது  கழகத்துக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பொழுதே கூட்டணி உறுதி எனத்  தகவல்கள் வெளியாகின. டெல்லியில் அதிமுக அலுவலகத்தைப் பார்க்கச் சென்றதாககூறிய எடப்பாடி  அமித்ஷாவைச் சந்தித்ததை  மழுப்பினார்.எடப்பாடியின் மகனுடைய தில்லு முல்ல்லு  ஆவணங்கள் அமித்ஷாவின் கையில் இருப்பதால் எடப்பாடி  இறங்கி வந்த்தாகவும் செய்திகள் பரவின.

தமிழகத்தில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது.  அண்ணாமலைஒயும்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்கிறார். நாளை இரவு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் அமித்ஷாவை சென்னையில்  சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2021 சட்டசபை தேர்தலின்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிட்டன. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டில் இந்த கூட்டணி முறிந்தது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றில் பாஜகவும், அதிமுகவும் வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் தான் அமோக வெற்றி பெற்றன.

 சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கும் அமித்ஷாவை நள்ளிரவில் மூத்த அதிமுக தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது அதிமுக - பாஜக கூட்டணி பற்றி இருதரப்பும் விவாதிக்க உள்ளதாகவும், அதன்பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றிய பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமித்ஷா தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் போது  சீமானை சந்திக்கப்போவதாகவும் தகவல் பரவி உள்ளது.  அண்மையில் ஒரு கல்லூரி விழாவில்  சீமானும், அண்ணாமலையும் ஒரே மேடையில் தோன்றினார்கள். சீமான் மோடியைப் புகழ்ந்து பேசிஒனார்,அண்ணாமலை,  சீமானை வானளாவக் பாராட்டினார். அப்போதே விமர்சகர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாட்டு  விஜயத்தை முன்னிட்டு முக்கியமான உத்தரவு ஒன்றை நிர்வாகிகளுக்குஎடப்பாடி  பிறப்பித்து உள்ளார்.   5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும்.. அதனால் யாரும் வீட்டிற்கு போக வேண்டாம்.. சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்.. எல்லோரும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே இருக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். ஆனால் செங்கோட்டையனுக்கு இந்த அறிவிப்பு செல்லவில்லை. அவர் சென்னையில்தான் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு அறிவிப்பு செல்லவில்லை. அதேபோல் தங்கமணி சென்னையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம்.. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை. எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர்தான்.

 விஜய் - சீமான் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்று... தேமுதிக 2011ல் திமுகவை எதிர்க்கட்சி சீட்டில் இருந்து அகற்றியது போல.. அதிமுகவை எதிர்க்கட்சி கூட ஆக விடாமல் செய்ய முடியும். சீமான் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே களம் மாறுபடும். பெரியார் விவகாரம், பெண் பலாத்கார வழக்கு காரணமாக தற்போது முடங்கி உள்ள சீமான் மீண்டும் களமாடும் போது  அது பெரிய வாக்கு வங்கி மாற்றங்களை ஏற்படுத்தலாம். 

Sunday, February 16, 2025

எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி


 

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி. ஓ.பன்னீர்ச்செல்வம்,சசிகலா,தினகரன் ஆகியோரை மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி சேர்க்க வேண்டும் என்ற குரலை எடப்பாடி அடக்கி ஒடுக்கிவிட்டார். எடப்பாடி சொல்வது தான்  பொதுச் சபையில் நிறவேறும் என்ற எழுதப்படாத விதியை அமுல் படுத்தியுள்ளார். எடப்பாடிக்கு  எதிரானவர்களும், பாரதீய ஜனதாவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  இணைக்கப்பட வேண்டும் என நினைக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  பேசாமடைந்தைகளாக  இருக்கிறார்கள்.

  எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்துள. எடப்பாடி பழனிசாமியையே அரசியலுக்கு கொண்டு வந்த குருநாதர்தான் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளர். எம்.எல்.ஏ. என பதவி வகித்தவர்; ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்; அவரது வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார்; ஆனால் சசிகலா குடும்பம், அதிதீவிர உண்மையான விசுவாசி செங்கோட்டையனை இன்று வரை கைவிடவில்லை. இத்தனை ஆண்டுகள் கனத்த அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது திடீரென கலகக் குரல் எழுப்பி இருப்பது மிக சாதாரணமாக கடந்து போய்விடக் கூடியது அல்ல என்பதுதான் அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கருத்து.   அண்ணா திராவிட முன்னேற்ற்க் கழகதில் போர்க்கொடி எழுப்பியவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.  செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பியதுமே 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் பலரும் அவரை தொடர்பு கொண்டு  ஆதரவு தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்பாரதீய ஜனதா,பாட்டாளி  மக்கள் கட்சி, தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சி,தமிழ்  மாநிலக் கட்சி ஆகியவைஒன்றிணைந்து  மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே டெல்லியின் கணக்காகும். 

டெல்லியின் கனவுக்கு எடப்பாடி முட்டிக்கட்டை போடுகிறார்.செங்கோட்டையனின் போர்க்கொடிகுப் பின்னால் சசிகலா  இருப்பதாகக் கருதப்படுகிறது. எடப்பாடிக்கு ஆதர்வானவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும்  வருமான வரித்துறை திடீர் தேடுதல் நடத்தியும் அவர் அசரவில்லை.அதனால்தான் செங்கோட்டையன் உசுப்பிவிடப்பட்டுள்ளார்.

  செங்கோட்டையன் விவகாரத்தை முன்வைத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சித்து வருகிறார் டிடிவி தினகரன்.  ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டு ஏறத்தாழ அரசியல் அத்தியாயத்தின் இறுதி கட்டத்தில் இருந்தவர்தான் செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் உயிர் பெற்றது செங்கோட்டையன் அத்தியாயம். சசிகலா குடும்பத்தின் மீதான 'மாறாத' விசுவாசம்  இன்றும் தொடர்கிறது.

 சசிகலா சிறைக்குப் போகும் நிலையில் கூவத்தூரில் செங்கோட்டையனை முதல்வராக்க அவரது குடும்பம் தீவிரமாக முயன்றது.காலமும் நேரமும் எடப்பாடிக்கு ஆதர்வாக நின்றதால் அவர் முதலமைச்சரானார்.

 சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் தனது குருநாதரான செங்கோட்டையனை வேண்டா வெறுப்பாக அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி   எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு எதிரியாகிவிட்டார்; ஆனால் செங்கோட்டையனோ சசிகலா குடும்பத்திடம் இருந்து இம்மியளவும் விலகாமல் இன்று வரை தொடர்பில்தான் இருந்து வருகிறார்.

கோவை அன்னூர் அருகே அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக   பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். இந்த விழாவை மேற்கு மண்டல சீனியரான முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் புறக்கணித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், எங்களை வளர்த்து அடையாளம் காட்டியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. இந்த இருவரது படமுமே எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா நிகழ்வுகளில் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. இதனை எப்படி எங்களால் ஏற்க முடியும்? என்றார். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமாரோ, எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது அதிமுக அல்ல; விவசாயிகள் அமைப்புதான் என மழுப்பலாக மட்டுமே பதிலளித்துள்ளார். செங்கோட்டையனின் போர்க்கொடுக்கு இதுதான் முக்கிய காரணம்.

   கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்தியபொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது  கழகத்தினுள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தினால்  கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார்.

டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அலுவலகத்தை, சென்னை ராயப்பேட்டையிலுள்ள   தலைமை நிலைய அலுவலகத்தில் இருந்தபடி, காணொளி வாயிலாக பழனிசாமி திங்கள்கிழமை காலையில் திறந்து வைத்தார்.  மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர் யில், செங்கோட்டையன் அதிலும் பங்கேற்கவில்லை.  கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையன் பரிந்துரைத்த சிலரை, எடப்பாடி பழனிசாமி போடாததும், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் அவரிடம் கலந்து பேசாததுமே அதிருப்திக்கு காரணமென்று தெரிகிறது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்கும் வேலையில் ஆறு  தலைவர்கள் ஈடுபட்டதாக செய்தி ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியை ஒன்றுபடுத்தாவிட்டால் வருங்காலத்தில் பெரிய தோல்விகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.இப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். எனவே இந்த ஆறுபேர் மட்டுமின்றி, கட்சியின் பல்வேறு தலைவர்களும் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.  செங்கோட்டையன் தற்போது அளித்துள்ள விளக்கம் என்பது அதிருப்தியின் நீட்சி தான்.

எடப்பாடியின் தலைமையில் 10 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைததால் அடுத்த கட்டத்த் த‌லைவர்கள்  நொந்து போயுள்ளனர்.  செங்கோட்டியன் பூனைக்கு மணி கட்டியுள்ளார்.

 

ரமணி

16/2/25    

Friday, August 19, 2022

எடப்பாடியின் கனவை தகர்த்தெறிந்த நீதிமன்ற‌ம்

இரட்டைத்தலைமையின் இயங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாகக் கைப்பற்றி தன்னிகரில்லாத் தலைவராக மிளிர்வதற்கு முயற்சி செய்த எடப்பாடிக்கு நீதிமன்றம் தடை போட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவு, சசிகலாவின்  பதவி ஆசை ஆகியவற்றால்  தடுமாறிய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை  .பன்னீர்ச்செல்வமும், எடப்பாடி பன்னீர்ச்செல்வமும் வழிநடத்தினர். இவர்கள்  இருவரையும் பாரதீய ஜனதா கட்டாயமாக இணைத்து வைத்தது. சகிகலா  சிறைக்குச் செல்லும்போது பன்னீரிடம்  இருந்த முதல்வர் பதவியைப் பறித்து எடப்பாடியின் கையில் கொடுத்தார். தர்மயுத்தத்துடன் பிரிந்து சென்றார் பன்னீர். இவர்கள்  இருவரும் பிரிந்து நின்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் சவாரி செய்ய முடியாது என்பதால் மோடி இருவரையும் இணைத்தார் மோடி.

பன்னீர் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும்  தெரிவாகினர்.  இந்தத் தெரிவு ஐந்து வருடங்கள்  இருக்க வேண்டும் என  முடிவு  செய்யப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது இரட்டைத் தலைமைக்குள் பூசல் இருந்தது.  பிரிவினை ஏற்படவில்லை. ஆட்சி பறிபோனதும் ஒற்றைத் தலைமை  என்ற  துருப்பை எடப்பாடி  கையில் எடுத்தார்.  பன்னீர்  அதனை விரும்பவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக  பன்னீரை ஓரம் கட்டிய எடப்பாடி ஒற்றைத் தலைமை என்ற அஸ்திரத்தின் மூலம் விழுத்த வியூகம் வகுத்தார்.

ஒற்றை தலைமை பிரச்னை வெடித்ததில் இருந்தே .பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு இடையே பனிப்போர் அதிகமானது. ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை காலி செய்து, ஒற்றை தலைமைக்கு ஏற்றாற்போல் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர பழனிசாமி முயற்சித்தார்.  அந்தக் கூட்டத்தில் பன்னீர் அவமானப்படுத்தப்பட்டார்.அதனை  எதிர்த்து  அவர்  நீதிமன்றம் சென்றார்..

 ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஜூன் 23 பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், ஒற்றை தலைமை குறித்து ஜூலை 11ல் நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவைத் தலைவர் அறிவித்தார்.

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் பன்னீர்  பங்கேற்காமல் புறக்கணித்த நிலையில், பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலராக தேர்ந்தெடுத்து அறிவித்தனர். மேலும்  மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி  நீக்கினார். பொதுக்குழுவுக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை பன்னீர்    நாடினார். இதில் ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என நீதிபதி தீர்ப்பளித்ததால், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லாமல், மீண்டும் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்   , இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி தொடர்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி  மேல்முறையீடு செய்துள்ளார்.  

  நிரந்தர பொதுச் செயலாளராக  ஜெ ய லலிதா  இருக்க  வேண்டும் என முழங்கிய எடப்பாடி பதவி ஆசையால் அதற்கு முடிவு ட்ட முயற்சித்தார். அதிமுகவில் ஜூலை 11‍ஆம் திகதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது; ஜூன் 23 ஆம் திகதிக்கு முன்பு என்ன நிலைப்பாடு இருந்ததோ அதே நிலை நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.  கடந்த ஜூலை 11 ஆம் திகதி அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரியும் ஓபிஎஸ் அணி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சியின் சட்ட திட்டங்களுக்குள்பட்டு பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தார்.

  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பை வாசித்தார். அதில் அதிமுகவில் ஜூன் 23 ஆம் திகதிக்கு முன்னர் என்ன நிலை இருந்ததோ அதே நிலை நீடிக்கும். அதிமுகவில் பொதுக் குழு, செயற்குழுவை தனித்தனியே கூட்டக் கூடாது. பொதுக் குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பொதுக் குழுவை கூட்ட வேண்டும். இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்பதே இந்த தீர்ப்பாகும்

அதிமுகவில் பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் கூட்ட முடியும். இந்த யாப்பு தற்போது பன்னீர்செல்வத்திற்கு சாதகமாகவும்,  எடப்பாடிக்கு எதிராகவும் திரும்பி உள்ளது.  எடப்பாடி இனியும் பொதுக்குழுவை தனியாக கூட்ட முடியாது. அந்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றாலும் கூட அதற்கு இருவரும் கையெழுத்து போட வேண்டும். இதனால் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள், பதவிகள் எதுவும் செல்லாது.

 ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என எடப்பாடி தரப்புக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, அவரைக் குறிப்பிடும்போது ஓரிருமுறை 'அன்பு சகோதரர்' எனக் குறிப்பிட்டு பேசினார். அதேபோல், மீண்டும் இணையப் போவது இல்லை எனக் கூறி விளக்கமளித்த எடப்பாடி  தான் பேசுகையில் 'அண்ணன் ஓபிஎஸ்' எனக் குறிப்பிட்டார். இருவரும் மாறிமாறி சகோதரத்துவத்துடன் குறிப்பிட்டு பேச்சில் மட்டுமே சகோதர பாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

தலைவர்களின் பதவி ஆசையால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் பிரிந்துள்ளனர். பன்னீருக்கு ஆதரவான தொண்டர்கள்  உற்சாகமாக வெற்றிக் கொண்டாட்டத்தை  வெளிப்படுத்தினர். எடப்பாடியின் ஆதரவாளர்கள் சோகத்துட  முடங்கினர்.  இருவருமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்பதை பதவி ஆசை  மறக்கடித்துவிட்டது.

Saturday, July 30, 2022

முட்டிமோதும் அதிமுக தலைமகள் வேடிக்கைபார்க்கும் பாஜக


 ஒற்றைத் தலைமை எனும் கோஷம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இரண்டாகப் பிரித்துவிட்டது. பெயரளவில் இரட்டைத் தலைமையாக இருந்தபோது கனன்றுகொண்டிருந்த தலைமைத்துவப் போட்டி இப்போது வெடித்துச் சிதறியுள்ளது.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடங்க முன்னரே அண்ணா திராவிட முன்ன்ற்றக் கழகத்தினுள் சதுரங்கப் போட்டி ஆரம்பமாகிவிட்டது.  ஜனாதிபதித் தேர்தலுக்கான  மனுத் தாக்கல் செய்யும் விழாவில கலந்துகொள்ளச் சென்ற பன்னீர்ச்செல்வம், தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய  மேற்கொண்ட முயற்சிகள்  வெற்றியளிக்கவில்லை. பன்னீரைச் சந்திப்பதர்கு மோடியும், அமித் ஷாவும் நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை.

 தனது   ஆதரவாளர்களுக்கு வருமான வரித்துறை கொடுக்கும் நெருக்கடிகளால் திணறிப்போயிருக்கிறார் எடப்பாடி. மதிய அரசு கொடுக்கும்  குடைச்சலைச் சமாளிக்க டெல்லிக்குப் பயணமானார் எடப்பாடி.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விழாவைக் காரணமாகவைத்து, பாரதீய ஜனதாத் தலைவர்களைச்   சமாதானப்படுத்த டெல்லிக்குப் பறந்தவர், போன வேகத்தில் திரும்பியிருக்கிறார். டெல்லித் தலைமை எடப்பாடியக் கன்டுகொள்ளவில்லை என்பதால் பன்னீர் தரப்பு உற்சாகமாகியுள்ளது.

ஜூலை 11 பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பதவியேற்றபோதே, அவருக்குச் சிக்கல்கள் தொடங்கிவிட்டன. பட்டாபிஷேகம் ஒருபக்கம் நடந்த வேளையில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர், எடப்பாடிக்கு நெருக்கமான தொழிலதிபர் செய்யாதுரை ஆகியோரின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

 மதுரையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமான அன்னை பாரத், எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள்மீது நடத்தப்பட்ட சோதனையும் எடப்பாடிக்கு அதிர்ச்சியாளித்தது.. மதுரைச் சோதனையில், கணக்கில் வராத 165 கோடி ரூபாய் பணம், 14 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இவை தவிர, குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோரை சி.பி. விசாரிக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இப்படி சோதனைகளும்  விசாரணைகளும் தன் தரப்பின்மீது இறுகுவதால், டெல்லியைச் சமாதானப்படுத்த முடிவெடுத்தார் எடப்பாடி. ஆனால் டெல்லித் தலமி எடப்பாடியைக் கணக்கில் எடுக்கவில்லை.

பழைய வழக்குகளை மத்திய அரசு தூசு தட்டி கையில் எடுத்துள்ளது. இது அரசியல் ரீதியாக எடப்பாடிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். பாரதீய ஜனதாவின் டெல்லித் தலைமையுடன்  பன்னீர் மிகவும் நெருக்கமாக உள்ளார்.  அந்தத் தலைமையை எடப்பாடி சற்று தூரத்தில் தள்ளியே வைத்துள்ளார்.சந்தர்ப்பம் பார்த்து மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 டெல்லி பயணத்தை அரை மனதோடுதான் ஒப்புக்கொண்டார் எடப்பாடி. ‘எதற்கெடுத்தாலும் அவர்களிடம் போய் நின்றால், தொண்டர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்என்றார். ஆனால், முன்னாள் அமைச்சர்கள்மீது அடுத்தடுத்து வருமான வரிச் சோதனைகள்  நடைபெறுவதால், ஆதரவாளர்களிடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்க அவர் பயணப்பட வேண்டியதாகிவிட்டது. தொடக்கத்தில், முர்மு பதவியேற்பு விழாவையெல்லாம் முடித்துவிட்டு சென்னை திரும்பத்தான் திட்டமிடப்பட்டது. ஐந்து நாள்கள் டெல்லி பயணம் திட்டமிடப்பட்டது.  சென்னையில் நடைபெறவிருந்த விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தைக்கூட ஜூலை 27ம் திகதிக்குத் தள்ளிவைத்தார். ஜூலை 23ம் திகதி, ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் மோடியைச் சந்திக்க ஐந்து நிமிடங்கள் எடப்பாடிக்கு ஒதுக்கப்பட்டன. பன்னீரின் மகன் .பி.ரவீந்திரநாத்துக்குக்கூட அழைப்பிதழ் அனுப்பப்படாததால், எடப்பாடி தரப்பு நம்பிக்கையுடன்  இருந்தது. ஆனால், எல்லாம் தலைகீழாக நடந்து முடிந்தது.

இடைக்கால பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டதற்கு மோடி வாழ்த்துத் தெரிவிப்பார் என எடப்பாடி நம்பி இருந்தார். உள்கட்சி அரசியல் குழப்பங்களில்  வெளிப்படையாகத் தலையிட  மோடியும், அமித்ஷாவும் விரும்பவில்லை.மோடி கைவிரித்ததால் அமித்ஷாவைச் சந்திக்க எடப்பாடி முயற்சி செய்தார். அதுவும் கைகூடவில்லை. பன்னீருக்குக் கிடைத்த அதே மரியாதைதான் எடப்பாடிக்கும் வழங்கப்பட்டது. கடுப்புடன் சென்னைக்குத் திரும்பினார் எடப்பாடி.

2019 பாராளுமன்றத் தேர்தலின்போது, எடப்பாடியின் நேரமறிந்து அவரைச் சந்திக்கக் காத்திருந்தது பா.. தரப்பு. தொகுதி குறைவாகக் கொடுத்தாலும், எந்த இடத்திலும் அவர்களை எடப்பாடி உதாசீனப்படுத்தியதில்லை. ஆனால், ‘ஒரு கூட்டணிக் கட்சித் தலைவர் சந்திக்க நேரம் கேட்டும், 20 நிமிடங்கள்கூட கொடுக்க மனம் வரவில்லையென்றால், அந்தக் கூட்டணி எதற்கு?’ என்கிற கோபம் .தி.மு.-வின் இரண்டாம்கட்டத் தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

  டெல்லியில் நடைபெற்ற விஷயங்களை ஒன்றுவிடாமல் அந்தச் சமயத்தில் மருத்துவமனையிலிருந்த பன்னீருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.  எடப்பாடி புறக்கணிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், பன்னீர் ரொம்பவே குஷியாகிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

நெடுஞ்சாலைத்துறையில் 4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எடப்பாடிமீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவருக்குச் சிக்கல் வரப்போவது உறுதிஎன்கிற தகவலை பரவுகிறது.

 

வைத்திய சாலையில் இருந்து வெளியேரிய சூட்டோடு சூடாக   14 மாவட்டச் செயலாளர்களை பன்னீர்   புதிதாக நியமித்தார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கமும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு..கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர்  நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரைக் கட்சியிலிருந்தே நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பன்னீர்

 .தி.மு.-வில் இரட்டைத் தலைமை இருந்தபோது, கட்சியிலிருந்து சுமார் 800 பேருக்கு மேல் நீக்கப்பட்டனர். இவர்களில் பாதிப் பேர் பன்னீரின் ஆதரவாளர்கள்தான். அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பன்னீர். டெல்லியிலிருந்து எங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. அதனால்தான், புதிய நிர்வாகிகள் நியமனத்தை வேகப்படுத்தியிருக்கிறோம் என சொல்லப்படுகிறது..

மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி, மாநில அளவில் பிரமாண்டப் பொதுக்கூட்டத்தை நடத்த பன்னீர் திட்டமிட்டுள்ளார்.

 சசிகலாவில் தொடங்கி, அன்வர் ராஜா, பெங்களூர் புகழேந்தி எனக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் அவருக்கு  ஆதரவாக நிற்கப்போகிறார்கள். ஊராட்சிச் செயலாளர், தொகுதிச் செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை, கட்சியிலிருந்து எடுத்ததால் பலர் அதிருப்தியில் இருந்தனர். அந்தப் பொறுப்புகளை மீண்டும் கொண்டுவரப்போவதாக பன்னீர் அறிவித்திருக்கிறார்.

முட்டிமோதாமல் அரசியலில் அமைதியாக  இருந்த பன்னீர் அதிரடி காட்டத் தொடங்கிவிட்டார்.