Showing posts with label அவுஸ்திரேலியா. Show all posts
Showing posts with label அவுஸ்திரேலியா. Show all posts

Sunday, June 14, 2026

துருக்கிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்து வென்றது அவுஸ்திரேலியா

கனடாவின் வான்கூவர் மைதானத்தில்  சனிக்கிழமை நடந்த போட்டியில் துருக்கியை எதிர்த்து விளையாடிய அவுஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது.

  24 ஆண்டுகளுக்குப் பின் உலகக்  கிண்ணப் போட்டியில் விளையாடிய துருக்கி முதல் போட்டியில் தோல்வியடைந்தது.  2002 ஆம் ஆண்டு உலகக்  கிண்ணப் போட்டியில் விளையாடியது துருக்கி.

 போட்டியில்  தொடக்கத்தில் துருக்கி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே நெஸ்டோரி இரான்குண்டா பந்தைப் பெற்று அபாரமாக ஒரு கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். பால் ஒகான்-எங்ஸ்ட்லர் கொடுத்த பாஸை அவர் கோலாக மாற்றினார்.

துருக்கி அணி கோல் அடிக்கப் போராடிய போதிலும், அவுஸ்திரேலிய கோல்கீப்பர் பேட்ரிக் பீச் சின் தடுப்பு,  பலமான  பின் வரிசை ஆகியன  அதற்கு முட்டுக்கட்டை போட்டன. அப்துல்கெரிம் பர்டாக்கி அடித்த பந்தை பீச் தடுத்து கம்பத்தில் படச் செய்து அற்புதமாகக் காப்பாற்றினார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் துருக்கி அணி பந்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும், அவுஸ்திரேலியாவின் தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் அவுஸ்திரேலியாவின் கானர் மெட்காஃப் லாங் ரேஞ்ச் ஷாட் மூலம் 2வது கோலை அடித்து துருக்கிக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்று இறுதியில் எளிதாக வெற்றியும் பெற்றது. 

  

Tuesday, June 2, 2026

உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை இந்திய தமிழ் வீரர்கள்


 அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகியன  இணைந்து  நடத்தும்  உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டியில் தமிழைப் பூர்வீகமாகக்கொண்ட இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள்ஒருவர் அவுஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரரான

நிஷான் மத்யூ வேலுப்பிள்ளை,  இன்னொருவர்  காங்கோ  குடியரசு  அணியில் இடம் பெற்ற சாமுவேல் ஆல்பர்ட் அலைன் ஆர்கேட்  முத்துசாமி

நிஷான் மத்யூ வேலுப்பிள்ளை (தமிழ்: நிஷான் வேலுப்பிள்ளை,   அவுஸ்திரேலிய தொழில்முறை உதைப்ந்தாட்ட  வீரர் ஆவார். இவர் மெல்போர்ன் விக்டரி ,அவுஸ்திரேலிய தேசிய அணி ஆகியவற்றுக்காக  விளையாடுகிறார்.

 ஆங்கிலோ-இந்தியரான அவரது தாயார் வழியாக இந்திய வேர்களையும், அவரது தந்தை வழியாக மலேசிய , இலங்கைத் தமிழ் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளார். அவர்  அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிறந்து வளர்ந்தார்.

சாமுவேல் ஆல்பர்ட் அலைன் ஆர்கேட் முத்துசாமி காங்கோ நாட்டு தொழில்முறை  உதைபந்தாட்டவீரர் ஆவார். இவர் கிரீஸில் உள்ள அட்ரோமிட்டோஸ் அணிக்காகவும், டிஆர் காங்கோ தேசிய அணிக்காகவும் தடுப்பு நடுக்கள வீரராக விளையாடுகிறார். இந்தோ-குவாடலூப்பிய தந்தைக்கும் காங்கோ நாட்டுத் தாய்க்க

காங்கோ நாட்டுத் தாய்க்கும் பாரிஸில் பிறந்த இவர், லியோன் ,நான்டெஸ் அணிகளில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். 

 2023 ஆப்பிரிக்க கோப்பை நாடுகள் போட்டி உட்பட சர்வதேசப் போட்டிகளில் டி.ஆர். காங்கோ அணிக்காக இவர் விளையாடியுள்ளார்.

  1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி பிறந்த திமுத்தூசாமி, பிரான்சின் பரிஸ் நகரில், காங்கோ நாட்டைச் சேர்ந்த தாய்க்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தோ-குவாடலூப்பிய தந்தைக்கும் மகனாகப் பிறந்தார்.

  

Saturday, May 30, 2026

வீரர்களின் காயங்களால் சோகத்தில் அவுஸ்திரேலியா


 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியின்  நம்பிக்கை நட்சத்திரங்களான ரிலே மெக்ரீ ,கிரேக் குட்வின் ,ஆன்டே சூட்டோ  ஆகியோர் இல்லாதது  பெரும் பின்னடைவாக உள்ளது.

கடந்த வார இறுதியில் இங்கிலாந்து கிளப்பான மிடில்ஸ்பரோவுக்காக விளையாடியபோது தொடைத்தசைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் முக்கிய ஆட்டக்காரரான   நடுக்கள வீரர்களில் ஒருவரானரிலே மெக்ரீ உலகக்  கிண்ணதொ தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இது அவுஸ்திரேலிய அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாகும் .

புளோரிடாவின் சரசோட்டாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்துக்கு முன்னதான  பயிற்சி முகாமுக்கு அனுபவம் வாய்ந்த கிரேக் குட்வின் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

பயிற்சி முகாமிலிருந்து நீக்கப்பட்ட, பெரும்பாலும் அணியில் முக்கியத்துவம் குறைந்த எட்டு வீரர்கள் அடங்கிய குழுவில் மூத்த முன்கள வீரரான மிட்ச் டியூக்கும் இடம்பெற்றுள்ளதால், உலகக்  கிண்ணத்துக்குத் திரும்புவதற்கான கிரேக் குட்வின் உடைய நம்பிக்கைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

கட்டாரில் நடைபெற்ற  உலககிண்ண குழுநிலைப் போட்டியில் துனிசியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆட்டத்தில் டியூக் கோல் அடித்து, அவுஸ்திரேலியா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற உதவினார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்கள வீரர் ஆன்டே சூட்டோவும் விடுவிக்கப்பட்ட நிலையில், உலகக்  கிண்ண தகுதிச் சுற்றில் அவுஸ்திரேலியாவுக்காகப் பங்களித்து, தொடை காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட குசினியின் தம்பியுமான, சர்வதேசப் போட்டிகளில் இன்னும் அறிமுகமாகாத மற்றொரு முன்கள வீரரான டெட்டே யெங்கிக்கு   முதல் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குசினியைப் போலவே, யெங்கியும் ஜப்பான் அணியைத் தளமாகக் கொண்ட ஒரு முன்கள வீரர் ஆவார்.

தற்காப்பு ஆட்டக்காரர்களான அலெஸாண்ட்ரோ சிர்காட்டி, லூகாஸ் ஹெரிங்டன், கை ட்ரூவின்,கை ரோல்ஸ், அனுபவமிக்க விங்கர் அவர் மாபில், கோல்கீப்பர் மாட் ரியான் , தடுப்பு நடுக்கள வீரர் பால் ஓகோன்-எங்ஸ்ட்லர் ஆகியோர் உட்பட அழைக்கப்பட்ட எட்டு பேர் கொண்ட குழுவில் அவரும் இருக்கிறார்.

29 பேர் கொண்ட பயிற்சி அணியிலிருந்து மூன்று பெயர்கள் நீக்கப்படவுள்ளன. கப்டன் ரியான் , பால் இசோவிற்குப் பின்னால் மூன்றாவது கோல்கீப்பராக இருந்த பேட்ரிக் பீச் ,ஜோ கௌசி ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

உலகக்கிண்ணம் 26,உதைபந்தாட்டம், அமெரிக்கா,மெக்ஸிகோ,கனடா, அவுஸ்திரேலியா,விளையாட்டு

 

 

 

 

Tuesday, February 17, 2026

அவுஸ்திரேலியாவை வெளியேற்றியது மழை


  

ரி20 உலகக் கிண்ணத் தொடரில்  ஒரு போட்டி மீதம் இருக்கையில் லீக் சுற்றில் இருந்ட்து அவுஸ்திரேலியா வெளியேறியது.

 இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் அவுஸ்திரேலியா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.ஸிம்பாப்வே தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா இரண்டு புள்ளிகளையு, , ஸிம்பாப்வே 4  புள்ளிகளையும் பெற்றன. ஸிம்பாப்வே, அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான இன்றைய போட்டி மழைகாரணமகக் கைவிடப்பட்டதால்  இரண்டு அணிகளுக்கும் தலா  ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. ஸிம்பாப்வே 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 க்குள் நுழைந்துள்ளது.ஓமானுடனான போட்டியில்  அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால் 4 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.

ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் ஸிம்பாப்வே சூப்பர் 8 கட்டத்தை எட்டுவது இதுவே முதல் முறை. 2024 ஆம் ஆண்டு உலகக் கிண்ண வடிவம் மாற்றப்பட்டதிலிருந்து, ஸிம்பாப்வே குரூப் ஸ்டேஜை கடந்து செல்வது இதுவே முதல் முறை. இருப்பினும், டி20 உலகக் கோப்பையில் ஸிம்பாப்வே குழு கட்டத்தைத் தாண்டி முன்னேறுவது இது இரண்டாவது முறை மட்டுமே. 2022 ஆம் ஆண்டில்  டைசி 12 இடங்களை எட்டியது. ஆனால் வடிவமைப்பு மாற்றத்திற்குப் பிறகு இது ஸிம்பாப்வேயின்  முதல் சூப்பர் 8 ஆகும்.

2026 ரி20 உலகக்  கிண்ணத்தில் குரூப் நிலையிலேயே அவுஸ்திரேலியா வெளியேற்றப்பட்டது. முன்னதாக, 2009 உலகக் கிண்ணத்தில்  அவுஸ்திரேலியா குரூப் சுற்றிலேயேவெளியேறியது. .     இந்தியா, இலங்கை, ஸிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா,  நியூசிலாந்து ஆகிய ஏழு  அணிகள் சூப்பர் 8க்குத் தகுதி பெற்றூள்ளன.

  

Monday, February 16, 2026

உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேறுகிறது அவுஸ்திரேலியா?


 


கிறிக்கெற் உலகின் அசுரமாகிய அவுஸ்திரேலியாவுக்கு ரி20 உலகக்கிண்ணம் கைக்கு எட்டாத நிலையில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா அயர்லாந்துடனான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.இலங்கையிடமும் ஸிம்பாப்வேயிடமும் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா  2 புள்ளிகளுடன் மூன்றாஅவ்து இடத்தில் உள்ளது.

கணித ரீதியாக அடுத்த கட்டத்திற்கான வேட்டையில் அவுஸ்திரேலியா இருந்தாலும் அது  அதன் விதி இந்தக் குழுவில் உள்ள பிற முடிவுகளைப் பொறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளது. ஓமானுக்கு எதிரான போட்டியில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும்.

ஸிம்பாப்வே  4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் மூன்றாவ‌து இடத்திலும் உள்ளன.

இலங்கை,அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளுடன் ஸிம்பாப்வே மோத உள்ளது.இஅவ்ற்றில் ஏதாவது ஒரு போட்டியில் ஸிம்பாப்வே   வெற்றி  பெற்றால் அவுஸ்திரேலியாவின் கதை கந்தலாகிவிடும். ஸிம்பாப்வேயுடனான போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றால் 4 புள்ளிகள்  பெற்று விடும்.

  சூப்பர் எட்டுக்கு முன்னேற அவுஸ்திரேலியா இப்போது மற்ற முடிவுகளை நம்பியிருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை ஸிம்பாப்வே அயர்லாந்தை வீழ்த்தினால், அவுஸ்திரேலிய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

அவுஸ்திரேலியா ஓமானுக்கு எதிரான  போட்டியில் வெற்றி பெற்று,  இலங்கை,அயர்லாந்து ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் ஸிம்பாப்வே   தோல்வியடைந்தால் மட்டுமே அவுஸ்திரேலியா உயிர்ப்புடன்  இருக்கும்.

   அயர்லாந்தை விட சிறந்த ஓட்ட விகிதம் அவுஸ்திரேலியாவுக்குத்  தேவைப்படும்.

2009  ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில்   குழு C இல் இலங்கை ,மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுக்கு எதிரான  எதிரான போட்டிகளில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

  

Friday, February 13, 2026

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது ஸிம்பாப்வே


  கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற  உலகக்கிண  குரூப் பி பிரிவு லீக் போட்டியில்  பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 23 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி ஸிம்பாப்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்தைல் அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஸிம்பாப்வே, மீண்டும் ஒருமுறை அதே சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது. 

 முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய டாடிவானாஷே மருமானி 21 பந்துகளில் 35 , பர்ல்,30 பந்துகளில் 35 ரன்கள் ஓட்டங்கள் எடுத்தனர்.

இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய கப்டன் சிக்கந்தர் ராசா, 13 பந்துகளில்  25  ஓட்டங்கள் அடித்தார். பிரையன் பென்னட் 56 பந்துகளில் 64 ஓட்டங்கள்  குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஸிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 169  ஓட்டங்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.

170 ரனோட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் , டிம் டேவிட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். க‌ப்டன் டிராவிஸ் ஹெட்டும் 17 ஓட்டங்களில் ஆஸ்திரேலியா   3.2  ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 29 ஓட்டங்கள் எடுத்தது. 4,3 ஓவர்களில் 5 ஆவது விக்கெற்றைஇழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது.


  மேட் ரென்ஷா,  கிளென் மேக்ஸ்வெல் ஜோடி போராடியது. இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்கு 77  ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழ்ந்தா ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தனி ஆளாகப் போராடிய மேட் ரென்ஷா 44 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். மக்ஸ்வெல் 31 ஓட்டங்கள் எடுத்தார் ஏனையோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில்  சகல விக்க்கெற்களையும் இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது.

ஸிம்பாப்வேயின்ல் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்சிங் முசரபானி  4 ஓவர்கள் வீசி   17  ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்குத் துணையாக பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஸிம்பாப்வேயின் வெற்றி குரூப் பி பிரிவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸிம்பாப்வே அணியின் இந்த வரலாற்று வெற்றி, தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையும், ஸிம்பாப்வேயும் தலா 4 புள்ளிகளுடன்  முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

 


Monday, January 5, 2026

உலகை உலுக்கிய ஐந்து மிகப்பெரிய‌ கிறிக்கெற் சர்ச்சைகள்


 

 

 

உலக கிறிக்கெற்றுக்கு  இது ஒரு மைல்கல் ஆண்டாக விளங்குகிறது. இந்திய ஆண்கள் அணி 12 வருட இடைவெளிக்குப் பிறகு சம்பியன்ஸ் டிராபியை வென்றது.   தென்னாப்பிரிக்கா இறுதியாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் ஐசிசி கோப்பையை 27 ஆண்டுக்கு பிறகு வென்றது. இந்தக் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, இந்திய மகளிர் அணி தங்களின் முதல் உலகக் கிண்ணத்தை வென்றது.

 இந்த வரலாற்று சாதனைகளுடன், கிறிக்கெற்  தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பெறச் செய்த பல சர்ச்சைகளும் இந்த ஆண்டு இடம்பெற்றன. 2025 ஆம் ஆண்டை மறக்க முடியாததாக மாற்றிய ஐந்து முக்கிய சர்ச்சைகளைப் பார்ப்போம். 

1. பாகிஸ்தானில் சம்பியன்ஸ் டிராபி

2025 சம்பியன்ஸ் டிராபி முதலில் முழுக்க முழுக்க பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பிசிசிஐயின் எதிர்ப்பு காரணமாக, போட்டிகள் கலந்து நடத்தப்பட்டன. போட்டிகள் பாகிஸ்தானுக்கும் துபாய்க்கும் இடையில் பிரிக்கப்பட்டன. இந்த முடிவு கடுமையான விவாதத்தைத் தூண்டியது.  ஆண்டின் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியது.


 2. ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி சோகத்தால் பாதிக்கப்பட்டது

18 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து 2025 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. சின்னசாமி மைதானத்தில் வீரர்களும் ரசிகர்களும் கூடியதால் கொண்டாட்டங்கள் களை கட்டின . துரதிர்ஷ்டவசமாக, மைதானத்திற்கு அருகில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததால் மகிழ்ச்சி சோகமாக மாறியது. இந்த சம்பவம் வரலாற்று வெற்றியின் மீது ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியதுடன் கிறிக்கெற் வரலாற்றில் இருண்ட தருணங்களில் ஒன்றாக மாறியது. 

3. ஆசிய க் கிண்ணத்தில்  இந்தியா-பாகிஸ்தான் கைகுலுக்கல் சர்ச்சை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மைதான உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, 2025 ஆசிய க் கிண்ணப் போட்டி   பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க பலமுறை மறுத்துவிட்டனர். டாஸ் போடும் போது, கப்டன் சூர்யகுமார் யாதவ் வழக்கமான சைகையைத் தவிர்த்தார். இது மூன்று போட்டிகளில் நடந்தது. கிறிக்கெறில்  இதுவரை இல்லாதது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஆசிய கிறிக்கெற் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து சம்பியன் கிண்ணத்தை  வாங்க இந்தியா ஏற்க   சர்ச்சையை மேலும் தூண்டியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப்,சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின் கொண்டாட்டங்களும் விமர்சனங்களை ஈர்த்தன. 

4. பென் ஸ்டோக்ஸுடன் கைகுலுக்குவதை ஜடேஜாவும் சுந்தரும் மறுத்தனர்

ஓல்ட் டிராஃபோர்டில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நான்காவது டெஸ்டின்போது, சதத்தை நெருங்கி வந்த ரவீந்திர ஜடேஜா ,வாஷிங்டன் சுந்தர் இருவரும் இங்கிலாந்து கப்டன் பென் ஸ்டோக்ஸுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் பெரும் விவாதத்தைத் தூண்டியது.  ஆங்கில ஊடகங்களால் பெரிதும் ஆராயப்பட்டது. 

5. இந்தியா பற்றிய  தென்னாப்பிரிக்க கோச்சின்  வார்த்தை சர்ச்சையானது

கவுகாத்தியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான தனது அணியின் அணுகுமுறையை விவரிக்க "குரோவல்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக தென்னாப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் சர்ச்சையில் சிக்கினார். இந்தக் கருத்தை அனில் கும்ப்ளே ,புஜாரா உள்ளிட்ட முன்னாள் இந்திய கிறிக்கெற்  வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். அவர்கள் இந்த வார்த்தை எதிர்மறையான அர்த்தங்களைக் கொண்டிருப்பதாக உணர்ந்தனர்.

ரமணி,

 

4/1/16

தமிழன்,விளையாட்டு,இந்தியா,பாகிஸ்தான்,கிறிக்கெற்,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா