Sunday, November 30, 2008

பொருத்தமான பாடல்



கோலம் போடும் இந்தப் பெண்ணுக்குப் பொருததமானபாடல்

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
. வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ
முடித்தேன்.

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் நில
வில் என்றுமில்லை தேய்பிறை...

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர
லாமா குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை
என்ன தரவேண்டும்.

வசந்தகால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்...

சின்னச் சின்ன ஆசை சிறகடிக்க ஆசை முத்து முத்து
ஆசை முடிந்து வைத்த ஆசை. வெண்நிலவை கண்டு
தொட்டுவர ஆசை

அழகா இருக்காங்க பொண்ணுங்க அழகாயிருக்காங்க
எங்களைப் பார்க்கிற பொண்ணுங்க எல்லாம்...

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே.
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய
அழகு...
.
புள்ளி வச்சி கோலம்தான் போட்ட தந்த சாமி கோலங்
களை மீறிதான் ஆடுது இந்த பூமி எல்லாதான் இருக்கும்
உள்ளது பாரு பூவெல்லாம் சாமிதான்
.
இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள இங்கிலீசு
படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டுல இப்படித்தான்
இருக்க வேண்டும்.

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் குலம்
விளங்க விளக்கு வைப்போம்...

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி உந்தன் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா...

ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீதானோ...
ரிஸ்லா ரஜப்டீன், உக்குவெல.
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டு விழி நீர் தெளித்து
ஒரு கோலமிட்டேன்.
.
புதிய வானம் புதிய பூமி எங்கும் பூ மழை பொழிகிறது நீ
வரும் போது பூ மகள் கோல மழை பொழிகிறது..

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

கண் இரண்டில் மை எழுதி கன்னத்தில் பொட்டு
வைத்து...

பெண்ணே எழுந்து புது கோலம் போடு ஆண் என்பதும்
பெண் என்பதும் ஆண்டவன் கோலங்களே! இன்பங்களு
ம் துன்பங்களும் அவன் செய்த வண்ணங்களே...
மெட்ரோநியூஸ் 26 11 2008

பாட்டாளி மக்கள் கட்சிக்குபச்சைக்கொடி காட்டிய முதல்வர்



இலங்கையில் நடைபெறும் யுத்தம்முடிவுக்கு வரவேண்டும்டிவுக்குவர வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில்ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகமக்களின் இந்தக் கோஷம் டில்லியின் காதுகளுக்குஇன்னமும் கேட்கவில்லை.இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டப் பேரணி,
பொதுக் கூட்டம் என்பன தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக நடைபெற்று வருகின்றன.தமிழகத்தின் உணர்வலைகளை மத்தியஅரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.அதன் காரணமாக இலங்கையில் நடைபெறும்யுத்தம் இன்னமும் வீரியம் பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக தமிழகத்தில்இருந்து ஒலிக்கும் குரல்இரண்டுபட்டுள்ளது. தமிழகஅரசின் ஆதரவுடன் ஒருகுரலும் தமிழக அரசுக்குஎதிரான இன்னொரு குரலும் இலங்கைத் தமிழ் மக்களுக்குஆதரவாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தீர்மானங்களுக்குகாங்கிரஸ் கட்சிதுணைபோகின்றதே தவிரஅதன் எண்ணம் எல்லாம்
புலிகள் ஒடுக்கப்படவேண்டும் என்பதிலேயே குறியாகஉள்ளது.
புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகோ, பழ. நெடுமாறன் போன்றோர் தமிழகஅரசுடன் ஒத்துழைக்காதுஇலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ்கட்சி என்பன இலங்கைபிரச்சினைக்கு நல்லதொரு
தீர்வு கிடைக்க வேண்டும்என விரும்பும் அதேவேளை புலிகள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதிலும்கண்ணாக உள்ளனர்.
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து யுத்தத்தைநிறுத்துவதற்கு மத்திய அரசுஇன்னமும் தயாராகஇல்லை. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்
சிகளின் தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளிமக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தமிழகத்தின் சார்பில் பிரதமரைச் சந்திப்பது உறுதியாகியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்,தேசிய முன்னேற்ற திராவிடக் கழகம் ஆகியனதமிழகத்தின் சார்பில் பிரதமøரச் சந்திக்கும்குழுவில் இடம்பெறப் போவதில்லை.கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும்
இது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை.இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாககுரல் கொடுக்கும் கட்சியினர் தமக்குள் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிரச்சினையில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம்மத்திய அரசிடம் உள்ளது. இதற்காக அழுத்தம்
கொடுக்க வேண்டிய தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு பக்கம் நிற்கின்றன.பிரதமர் மன்மோகனைச் சந்தித்த பின்னர்
தமிழக முதல்வர் என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதை அறிவதற்கு தமிழ் பேசும்உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
பிரதமரின் பேச்சில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று வழமைபோன்று முதல்வர் அறிக்கை விடுவாரா அல்லது முடிவு
எடுக்க வேண்டிய அழுத்தத்தை பிரதமருக்குகொடுப்பாரா என்பதை அறிவதற்கு டிசம்பர்4ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் எதிர்காலத் தேர்தல்களின் முடிவுகளை இலங்கைப் பிரச்சினைதீர்மானிக்க உள்ளது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில் சிங்கள அரசுக்குஆதரவாக இந்திய மத்திய அரசு நடந்து கொள்கிறது என்பதை தமிழகம் அறிந்து கொண்டுள்ளது.
ஆகையினால் சிங்கள அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்ற எண்ணம் தமிழக மக்களிடம்
உள்ளது. ஆகையினால் தமிழக அரசும் மத்தியஅரசும் ஆக்கபூர்வமான ஏதாவது ஒருமுடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்
.இதேவேளை தமிழகத்தின் கூட்டணிகள்மாறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அகில இந்ய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் ஜெயலலிதாவை கடந்தவாரம் தமிழகத்தில் சந்தித்த பின்னர் புதிய கூட்டணிஉருவாகும் என சூசகமாக அறிவித்துள்ளா
ர். ஜெயலலிதாவுக்கு இது வரை காலமும் போட்டியாளராக கருணாநிதிதான் இருந்தார். விஜயகாந்தின் வரவு ஜெயலலிதாவுக்குபெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு பலமானகூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் வைகோ மட்டும்தான்கூட்டணி சேர்ந்துள்ளார். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் மத்திய அரசுக்கு ஆதரவு
வழங்குவதற்கும் இது பலமான கூட்டணிஅல்ல என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும்.அதனால்தான் கம்யூனிஸ்ட் கட்சியுடன்
இணைந்து நாடளாவிய ரீதியின் மூன்றாவதுகூட்டணி அமைக்க விரும்புகிறார் ஜெயலலிதா.திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிர
ஸூம் ஒன்றை ஒன்று விட்டுப்பிரியாது என்பது நிரூபணமாகியுள்து. முதல்வர் கருணாநிதியால் வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள்கட்சி மீண்டும் இக்கூட்டணியில் சேரும்வாய்ப்பு உள்ளது. முதல்வரும் ராமதாஸும்சந்தித்துப்பேசிய பின்னர் பாட்டாளி மக்கள்கட்சியின் பிரசாரப் பீரங்கியான காடு வெட்டிகுரு மீதான குற்றங்களின் தாக்கம் குறைவடைந்துள்ளது.
விஜயகாந்தும் மாக்ஸிஸ்டுகளும் நெருங்கிவருகின்றனர். தமிழகத்தில் மூன்று பெரும் கூட்டணிகள் உருவாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.மத்தியில் ஆட்சியை அமைக்கும் வாய்ப்புகாங்கிரஸூக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும்தான் உள்ளது.
ஆகையினால் மூன்றாவது அணியில் போட்டியிட விரும்பும் ஜெயலலிதா கணிசமானவெற்றியை பெற்றால் மத்தியில் ஆட்சிஅமைக்கும் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைஉருவாகும்.இலங்கைப் பிரச்சினையும், புதிய கூட்டணிவியூகங்களும் தமிழக அரசியலை விறுவிறுப்படையவை த்துள்ளன.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 30 11 2008

Saturday, November 29, 2008

மும்பை குண்டுத்தாக்குதலும் கிரிக்கெட்டும்


மும்பையில் கடந்த புதன்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களினால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இந்திய கிரிக்கெட்டை மும்பைத் தாக்குதல் பாதித்துள்ளது. இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடக்க ஏற்பாடாகியிருந்த டெஸ்ட் போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதல்களினால் கிரிக்கெட் வீரர்களும் அதிர்ந்து போயுள்ளனர். 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக மும்பையில் தங்கியிருந்த பாகிஸ்தான் வீரர்களான தன்வீரும், அக்மலும் இச் சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மும்பைச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் பாகிஸ்தானில் உள்ள அவர்களது உறவினர்கள் இருவருடனும் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

ரோயல் சலஞ்சின் தலைவர் ஷேர்ன் வோர்ன் மும்பையில் பயிற்சி பெறுவதற்குத் திட்டமிட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவரது பயிற்சி பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

உதைபந்தாட்ட நட்சத்திரம் மரடோனா இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். மும்பைத் தாக்குதலினால் இந்தியாவின் பாதுகாப்பு பற்றிக் கேட்டுள்ளார்.

பயங்கராதிகளின் தாக்குதலுக்கு இலக்கான தாஜ், ஒபராய் ஆகிய இரண்டும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருப்பமான ஹோட்டல்கள்.

Thursday, November 27, 2008

இலங்கைப் பிரச்சினையில் தீவிரம்காட்டும்தமிழகக் கலைஞர்கள்


இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினால்தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பமும் துயரமும் தமிழகத்தில் பெரும் உணர்வலைகளைஏற்படுத்தியுள்ளது.பழ. நெடுமாறன், வைகோ, திருமாவளவன்,டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் ஆதிக்கத்தில்இருந்த இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரம்இப்போது சினிமா கலைஞர்களின் கரங்களில்சென்றுள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்குஆதரவாக பாரதிராஜா கொடுத்த உணர்ச்சிகரமான குரல் தமிழக அரசியல்வாதிகளையேஅதிர வைத்தது. இதுவரை காலமும் அரசியலாகப் பார்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை
மக்கள் மனதில் உணர்ச்சிகளைத் தூண்டி புது வடிவம் பெற்றுள்ளது.
எம். ஜி. ஆருக்குப் பின்னர் தமிழக அரசியலை ஆட்டிப் படைக்கப் போகும் நடிகர் யார்என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் என்ற பதில் ஒருமித்த குரலாக எழுந்தது.தமிழக அரசியல் சினிமாவுடன் பின்னிப்பிணைந்திருப்பதனால் தமிழகத்தின் அடுத்தமுதல்வர் ரஜினிகாந்த் தான் என்று அவரது ரசிகர்கள் முடிவு கட்டினர். ரஜினியின் நடவடிக்கைஅனைத்தும் அரசியலாகவேபார்க்கப்பட்டன. ரஜினியின் திரைப்பட வசனங்கள்அனைத்தும் இதனை ஊர்ஜிதம் செய்தன.ரஜினியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த வேளையில் அதிரடியாக அரசியலில்நுழைந்து தனது பலத்தை வெளிக்காட்டினார்விஜயகாந்த். கறுப்பு எம். ஜி. ஆர். என்றஅடைமொழியுடன் அரசியல் அரங்கில்நுழைந்த விஜயகாந்த் அரசியல்வாதிகளைஅச்சுறுத்தினார். விஜயகாந்தின் அரசியல் பிர
வேசம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களை ரஜினி சந்திக்கப் போகிறார் என்ற செய்தி தேனாக இனித்தது.ஆனால் ரஜினியின் ரசிகர்களுடனான சந்திப்பு அவரது முடிவில் எந்த மாற்றத்தையும்ஏற்படுத்தவில்லை. நொந்து போயிருந்த ரஜினியின் ரசிகர்களுக்கு விஜயின் உண்ணாவிரதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.விஜயை முதல்வராக்கிப் பார்க்கவேண்டும்என்ற ஆசை அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரிடம் இருக்கிறது. அவருடைய வழிகாட்டலால்தான் விஜய் அதிரடியாக முடிவுகளை
எடுக்கிறார்.
2011ஆம் ஆண்டு நடைபெறும் தமிழகத்தேர்தலில் மிக இலகுவாக வெற்றி பெற்றுமுதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் ஜெயலலிதா உள்ளார். காங்கிரஸ் கட்சி மீதும் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் மீதும் தமிழகமக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஆகையினால் 2011ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் இலகுவாக வெற்றிக் கனியைப் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் ஜெயலலிதா உள்ளார்.ஆனால் மறு பக்கத்தில்,
விஜயகாந்த் அடுத்த முதல்வர் கனவில்மிதக்க, யாரும் எதிர்பாராத வகையில்தமிழக முதல்வர் போட்டியில் விஜய் களம்இறங்க உள்ளார்.
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பவேண்டும்போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்துதமிழகம் முழுவதும் போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த
நிலையில் இலங்கையில் யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்துக்குஅழைப்பு விடுத்தார் விஜய்.ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய்நடத்திய உண்ணாவிரதம் பெரு வெற்றி பெற்றது.அரசியல் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் போராட்டம் நடத்தி வரும்வேளையில்முக்கியமான தமிழ் நடிகர் நடத்திய உண்ணாவிரதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
படும்போது தியேட்டரை அலங்கரித்து நடிகரின் படத்துக்கு கற்பூரம் கொளுத்தி பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் புதுமையானதாக இருந்தது.தனது ரசிகர் மன்றத்தின் மூலம் நற்பணிசெய்து வந்த விஜய் தனது ரசிகர்களை அரசியலை நோக்கித் திருப்பியுள்ளார். விஜயின்
விருப்பத்திற்கேற்ப தமது உணர்வலைகளைரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.சென்னைக்கு வெளியே உள்ள நகரங்களிலும் விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தினர்.விஜயின் விருப்பத்தை அவரது ரசிகர்கள்ஓரளவு பூர்த்தி செய்துள்ளனர். அனைவருடனு
ம் எளிதில் பழகாத விஜய் அரசியலில்வெற்றி பெறுவாரா என்றசந்தேகம் பலரிடம்உள்ளது. விஜயின் அண்மைக்கால நடவடிக்கைகள்
அதற்கு விடை கூறுகிறது.ரசிகர்களுடனும் வசதி குறைந்தவர்களுடனும்நெருங்கிப் பழகும் விஜய்விரைவில் தொண்டர்களுடனும் கலகலப்பாகப் பழ
குவார் என்கின்றனர் அவரை நன்கு தெரிந்தவர்கள்.விஜய் நடத்திய உண்ணாவிரதம் சினிமாவுக்குஅப்பால் அரசியல் கட்சித் தலைவர்களை ஈர்த்துள்ளது.
அரசியல் கட்சித்தலைவர்கள் விஜயுடன்ஒன்றாக அமர்ந்து அவரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீது வெறுப்புள்ள தமிழகமக்கள் சிலர் புதியதொரு அரசியல் மாற்றத்தைஎதிர்பார்த்துள்ளனர். விஜயகாந்தின்அரசியல் பிரவேசம் அவர்களின் எதிர்பார்ப்பை உற்சாகப்படுத்தியது. விஜயகாந்தின்
கட்சியில் இணைந்துள்ள பல அரசியல் பிரமுகர்கள் ஊழல் பேர்வழிகளாக இருப்பதால் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள்
ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாற்றத்தை விரும்புபவர்கள்ரஜினி அல்லது விஜயின் அரசியல் பிரவேசத்தையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழக மக்களின் வேண்டுகோள்களையும்தமிழக அரசின் தீர்மானத்தையும் மத்திய அரசுதொடர்ச்சியாகப் புறக்கணித்துக்கொண்டேவருகிறது. இலங்கையில் நடைபெறும் யுத்தம்நிறுத்தப்படவேண்டும் என்பதே தமிழகத்தின்ஒட்டுமொத்த குரலாக உள்ளது. தமிழகத்தின்
குரலுக்கு மத்திய அரசு உரிய கௌரவம்கொடுக்கவில்லை.
இலங்கையின் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித்தலைவரும் இந்தியாவில் நின்று கொண்டு யுத்தம் நடைபெறும் என்று சூளுரைத்துள்ளனர்.இவர்களின் இந்தக் கோஷம் தமிழகத்தைஉசுப்பி விட்டுள்ளது. தமிழகத்தின் போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை
நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையிலும் மத்திய அரசுஈடுபடவில்லை. தமிழகத்தின் போராட்டங்கள்எதனையும் மத்திய அரசு கவனத்தில் எடுக்கவில்லை. இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையில் தலையிடாமைக்கு இந்திய மத்தியஅரசு பல காரணங்களைக் கூறுகின்றது. அதேவேளை இந்தியத் தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் உரிய நடவடிக்கையை இந்திய மத்திய அரசு இதுவரைஎடுக்கவில்லை.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்று இலங்கை அரசு பலதடவை உறுதியளித்துள்ளது.அந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில்
கலந்து விட்டன. இலங்கைத் தமிழ் மக்கள்படும் அவலங்களைத் துடைப்பதற்கு இந்தியஅரசின் வெளிநாட்டுக் கொள்கை தடை போடுகிறது என்று மத்திய அரசு காரணம் கூறினாலும் இந்திய தமிழக மீனவர்களைக் காப்பாற்றுவதற்கு என்ன தடை உள்ளது என்பதை வெளி
ப்படையாகக் கூறவில்லை.இந்திய மத்தியஅரசினதும் தமிழக அரசினதும் அடுத்தகட்டநடவடிக்கையை தமிழ் பேசும் உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 23 11 2008

Wednesday, November 26, 2008

அமீருக்குவலை வீசும் அரசியல்கட்சிகள்

இலங்கைப் பிரச்சினையால் இந்திய அரசியல் களம் கொதிப்படைந்துள்ளது. இலங்கைத்தமிழ் மக்களின் துயரைத்தீர்ப்பதற்காக தமிழகத்தில் ஒலித்த குரல் டில்லி, பெங்களூர்,மும்பை, அந்தமான்தீவுவரை பரந்துள்ளது.இராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக தமிழகப்பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இயக்குநர்களான அமீரும், சீமானும் ஒரே நாளில் கதாநாயகர்களாகிவிட்டனர்.சினிமாவே கதி என்று இருந்த இவர்களைஅரசியல் பக்கம் இழுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின்தலைவர் டாக்டர் ராமதாஸ் அமீரையும் சீமானையும் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின் போது அவர்களை அரசியலுக்கு வரும்படி. டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டதாகசெய்திகள் வெளியாகின.
ல நாட்களின் பின்னர் அமீரும், சீமானும்வைகோவைச் சந்தித்துப் பேசினார்கள். இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ஆதரவாகப் பேசி தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட வைகோ, அமீர், சீமான்
ஆகியோரின் சந்திப்பு அரசியலில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
அமீரும் சீமானும், மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தில் சேரப்போவதாகசெய்தி வெளியானது. தமிழகத்திரைப் படங்களின்மூலம் புரட்சிகரமான கருத்துக்களைக்கூறும் இயக்குநர்களின் நடவடிக்கைகளும்புரட்சிகரமாகவே உள்ளன. பாட்டாளி மக்கள்
கட்சியா? மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்முன்னர்அமீரும், விஜயகாந்தும் இந்தவாரம்சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது."விஜயகாந்தும் அமீரும் தொலைபேசியில்அடிக்கடி பேசுகின்றனர். விரைவில் இருவரும்சந்திப்பார்கள். அதன் பின்னர் விஜயகாந்தின்கட்சியில் அமீர் இணைந்து விடுவார் என்றுதேசிய முன்னேற்றத் திராவிடக் கட்சியின்உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸை அமீர் சந்தித்த போதுபாட்டாளி மக்கள் கட்சியில் அமீர் சேரப்போகிறார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.
வைகோவைச் சந்தித்து பேசிய பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக சட்டமன்றஉறுப்பினராக வீர. இளவரசனின் இறுதிச் சடங்கில் அமீர் கலந்து கொண்டதால் அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில்இணையப் போவதாக செய்தி பரவியது.
அதேபோல், விஜயகாந்தை அமீர் சந்திக்கப்போவதாக பரபரப்பான செய்தி வெளியானதன்பின்னணியில் அவர் விஜயகாந்தின் கட்சியில் இணையப்போவதாக செய்தி பரவியுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக உணர்வு பூர்வமாகக் குரல் கொடுத்த அமீரும் சீமானும் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டுள்ளனர். ஏதாவதுஒரு அரசியல் கட்சியில் சேர வேண்டுமென்று அமீரின் நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், வேறு சிலரோ தரமான சினிமாவைத்தரும் அமீர் அரசியலில் முழுமூச்சாகஈடுபடக்கூடாது. சினிமா மூலம் புரட்சிகரமானவிழிப்புணர்வுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எளிதாக விதைக்கலாம் என்று கூறுகின்றனர்.
அமீர், சீமான்ஆகியோருக்கு பின் பலமாகஇயக்குநர் பாரதிராஜா இருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பாரதிராஜாவும் விஜயகாந்தும் எதிர் எதிர் முகாமில் உள்ளனர். சீமானையும், அமீரையும்பிணையில் எடுப்பதற்கு முயற்சி செய்த பாரதி
ராஜாவின் விருப்பத்துக்கு மாறாக விஜயகாந்தின் கட்சியில் சீமான் சேருவாரா என்ற சந்தேகமும் உள்ளது. தன்னைப் பழிவாங்கியவர்களைபழிவாங்க வேண்டும் என்ற ஆதங்கம் சீமானிடம் உள்ளது. இது அரசியல் ரீதியாக பழிவாங்கலா அல்லது சினிமா வழியிலான பழிவாங்கலா என்பதை சீமான் இன்னமும் முடிவு செய்யவில்லை.
வைகோ, கண்ணப்பன், அமீர், சீமான் ஆகியோரின் கைதின் பின்னணியில் ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களும்உள்ளனர். அமீரையும், வைகோவையும் கைதுசெய்யவேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் குரலுக்கு காங்கிரஸ் கட்சி, வலுவூட்டியது.திருமாவளவன், கே.வீரமணி என்று கைதுசெய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலைகாங்கிரஸ் கட்சி தினமும் வெளியிட்டு வருகிறது.ஆனால், தமிழக அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.
ஜெயலலிதாவினதும் காங்கிரஸ் கட்சியினதும் நெருக்குதல் காரணமாக அமீர், சீமான்,வைகோ, கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களின் கைது பற்றிக் கேட்டபோது சட்டம் தன் கடமையைச் செய்யும்என்று தமிழக முதல்வர் கூறினார். சீமான்,
அமீர் ஆகியோர் மீது பொலிஸார் தாக்குதல்செய்த குற்றப்பத்திரம் வலுவற்று இருந்ததனால்அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

வைகோவும் கண்ணப்பனும் பிணையில்செல்வதற்கு பொலிஸஸார் ஆட்சேபனை தெரிவிக்காததனால் அவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கைப் பிரச்சினையில் இரு தலைக் கொள்ளி எறும்பாகத்தவிக்கிறார் தமிழகமுதல்வர்கருணாநிதி.தமிழக அரசியல் கூட்டணியில் இருந்து திராவிடமுன்னேற்றக் கழகத்தினால் தூக்கி எறியப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் மீண்டும் இணையும் சாத்தியம் உள்ளது.தமிழக கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள்கட்சி வெளியேற்றப்பட்டதை மத்திய
அரசு விரும்பவில்லை. விமர்சனம் என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது திராவிடமுன்னேற்றக் கழகத்தினர் மோசமான குற்றங்களைச் சுமத்தியதால் பாட்டாளி மக்கள் கட்சியை தமிழக முதல்வர் தூக்கி எறிந்தார்.
முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கைக்குப்பாத்திரமான மத்திய அமைச்சர் ரி. ஆர்.பாலுவும் டாக்டர் ராமதாஸும் கடந்தவாரம் சந்தித்து பல விடயங்களை விவாதித்தனர்.மத்திய அமைச்சர் ரி. ஆர்.பாலுவும், டாக்டர்ராமதாஸும் என்ன பேசினார்கள் என்று எவ
ருக்கும் தெரியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளிமக்கள் கட்சியைச் சேர்ப்பது பற்றி இருவரும் கலந்துரையாடி இருக்கலாம். திராவிடமுன்னேற்றக்கழகத்துடன் பாட்டாளி மக்கள்கட்சி இணைய வேண்டும் என்ற மத்திய அர
சின் விருப்பத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது.திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில்பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் இணையவேண்டும் என்பதில் மத்திய அமைச்சர் டாக்டர் அன்பு மணியும் அதிக அக்கறை காட்டி
வருகிறார்.ரஜினியும், அத்வானியும் சந்தித்ததால் பாரதிய ஜனதாக் கட்சியில் ரஜினி இணையப்போகிறார் என்று பரபரப்பான செய்தியொன்றுவெளியானது. இதனை ரஜினி மறுத்துள்ளார்.விஜயகாந்தும் சரத்குமாரும் தனிக்கட்சிகளைஆரம்பித்துள்ளனர். அமீரும் சீமானும் என்னசெய்வதென சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.ரஜினிக்கு பல இடங்களிலும் இருந்து நெருக்குதல்கொடுக்கின்றனர் அவரது ரசிகர்கள். ரஜினியின் முடிவு மூன்று வருடங்களின் பின்னர் தான் வெளிவரும். அதுவரை ரசிகர்கள் பொறுத்திருப்பார்களா என்பது சந்தேகம்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 16 11 2008

Tuesday, November 25, 2008

என்னபேசி இருப்பார்கள்



கங்குலி மகள்: டாடி, நீங்க இப்பத் தான் நல்ல டாடி.
கங்குலி: வை.மை. சுவீட்டி?
கங்குலி மகள்: என்னையும் மமியையும் தனியே விட்டுட்டு
நீங்க உங்க பாட்டுக்கு கிரிக்கெட் விளையாட ஒவ்வொ
ரு நாடாபோயிடுவீங்க. நாங்க ஒங்கள டிவியிலதான்
பார்த்துகிட்டு இருப்போம். நீங்க ஓய்வு பெறப்போவதாக
அறிவிச்சிட்டீங்க. இப்ப எங்கக்கூடவே இருப்பீங்க தானே.
அதுதான் நீங்க நல்ல டாடி.


மெட்ரோநியூஸ் 24 12 2208

மகள்: என்ன டாடி உங்கள எல்லோரும் கிரிக்கெட்டில்
இருந்து ஓய்வு பெற சொல்கிறார்களே. ஏன் நீங்கள் ஓய்வு
பெறாமல் இருக்கிறீர்கள். அம்மா சொல்லும் வரை இருக்கிறீர்
களா?
கங்குலி: இல்ல மகளே இந்த கங்குலி ஒரு தரம் சொன்னா
நூறு தரம் சொன்னமாதிரி. அதனால் ஓய்வு பெற்றேதான்
ஆக வேண்டும். இல்லை என்றால் எல்லோருமே சேர்ந்து
என்னை தள்ளிவிடுவார்கள்.

சௌரவ் கங்குலி: ஹலோ! என் செல்லம் என்னடா பார்க்கி
ற?
மகள்: அப்பா நீங்க இனி மேல் கிரிக்கெட் விளையாட
மாட்டீங்களா?
சௌரவ் கங்குலி: இல்லடா செல்லம் இனிமேல் உன்னுட
னும் அம்மாவுடனும் தான் இருக்கப்போறது. நான் இப்ப
ஓய்வு பெறப்போறேன் அவ்வளவுதான்.
மகள்: அப்பா நீங்க சினிமாவுக்கு நடிக்கப்போக மாட்டீங்
களா?

கங்குலி: என்ன மகள் கடுமையாக யோசிக்கிறீங்க. அப்பா
ஓய்வு பெறப்போறேன் என்று கவலையா இருக்கா.
மகள்: ஆம், அப்பா.
கங்குலி: கவலைப்படாதீங்க மகள் அப்பா ஓய்வு பெற்றா
லும் டோனி சூப்பராப் பார்த்துப்பாரு.
மகள்: (மனதுக்குள்) அவர மாதிரி நீங்களும் பொறுமை
யானவரா இருந்திருந்தா. உங்களுக்கு இந்த நிலைமை வந்தி
ருக்குமா.

Friday, November 21, 2008

நான் வில்லன் அல்ல


தமிழ் சினிமா ரசிகர்களினால் மிக அதிகமாக வெறுக்கப்பட்ட நடிகர் நம்பியார். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் நம்பியாரை தமது ஜன்ம விரோதியாகவே பார்த்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த போது அவரை வாழ்த்திய வயோதிபப் பெண்மணி ஒருவர் நம்பியாரை உன் பக்கத்திலேயே வெச்சிருக்காதேய்யா என்று ஆலோசனை கூறினார். இவை எல்லாம் நம்பியாருக்குக் கிடைத்த பாராட்டுதல்களேயன்றி இழிசொற்கள் அல்ல.
கதாநாயகனுக்கு தெரிந்த சகல கலை அம்சங்களும் தெரிந்த ஒரு வில்லன் நடிகர் நம்பியார். திரையில் தான் அவர் வில்லனே தவிர நிஜத்தில் கதாநாயனையும் மிஞ்சிய பண்பாளன். வாள்ச் சண்டை, கத்திச்சண்டை, குதிரை யேற்றம், மல்யுத்தம் ஆகிய வற்றில் கதாநாயகனுக்கு இணையாக தனது திறமையைக் காட்டுவார்.
எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதும் காட்சிகளில் சண்டைப் பயிற்சியாளருக்கு அதிக வேலை இருக்காது. இருவரும் கத்திச் சண்டை, வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். தற்காப்புக் கலையில் ஒருவரை ஒருவர் விஞ்சும் வகையில் திறைமை வாய்ந்தவர்கள்.
திரைப்படத்தில் தான் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வில்லனே தவிர நிஜத்தில் இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள். எம்.ஜி.ஆர். முதல்வரானதும் சினிமாக் கலைஞர்கள் பலருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தார். நம்பியாருக்கும் ஒரு பதவி கொடுப்பதற்கு எம்.ஜி.ஆர் விரும்பினார். அதனை நம்பியார் மறுத்துவிட்டார்.
வெளியூரில் படப்பிடிப்பு நடக்கும் போது தனது மனைவியையும் அழைத்துச் செல்வார். மனைவியின் கையால் சமைத்த உணவை உண்பதில் மிகுந்த ஆனந்தமடைபவர் நம்பியார். அந்த வேளையில் மனைவியின் செலவை தயாரிப்பாளரின் தலையில் கட்டாது பிரயாணச் செலவு, சாப்பாட்டுச் செலவு, தங்குமிட வாடகை எல்லாவற்றையும் தனது சொந்தப் பணத்தில் செலுத்துவார்.
எம்.ஜி.ஆருடன் மட்டுமல்ல சிவாஜி கணேசனுடனும் கத்திச்சண்டை வாள் சண்டை ஆகியவற்றில் தூள் கிளப்பினார் நம்பியார். நம்பியõரின் முகமும் கண்ணும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை எடுத்துச் சொல்லிவிடும்.
கேரளத்தில் உள்ள மஞ்சேரியில் 1919 ஆம் ஆண்டு பிறந்த இவரின் முழுப் பெயர் மஞ்சூரி நாராயணன் நம்பியார். 13 ஆவது வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935ஆம் ஆண்டு தமிழிலும் ஹிந்தியிலும் வெளியான பக்தரõமதாஸ் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். சுமார் 70 வருடங்களாக நான்கு தலைமுறைக் கலைஞர்களுடன் நடித்த அனுபவம் உள்ளவர் நம்பியார்.
பேரறிஞர், அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மனைவி வி.என்.ஜானகி, என்.டி.ராமராவ் ஆகிய முதல்வர்களுடன் நடித்த நம்பியார் தன்னை அரசியல்வாதியாக இனங்காட்டவில்லை.
அரசியல் வேறு, சினிமா வேறு என்பதில் உறுதியாக இருந்த நம்பியார் இறுதிவரை சக கலைஞர்களுடனும், அரசியல் வாதிகளுடனும் மிக நெருக்கமாக பழகி வந்தார்.
எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதற்கு நம்பியாரும் ஒரு காரணம்.
எம்.ஜி.ஆருக்கு ஈடிணையாக நடிப்பதற்கு நம்பியாரைத்தான் முதலில் அழைப்பார்கள். நம்பியார் நடித்தால் தான் படத்தின் காட்சிகள் சிறப்பாக அமையும் என்பது எம்.ஜி.ஆருக்கும் தெரியும். ஆகையினால் தனக்கு வில்லனாக நடிக்க நம்பியாரை கேளுங்கள் என்று எம்.ஜி.ஆர். கூறுவார்.
திரைப்படங்களில் கதாநாயகனின் வெற்றியை குழி தோண்டி புதைக்க முயலும் நம்பியார் நிஜவாழ்வில் மிகவும் சாதுவானவர். அவருடைய வில்லத்தனமான நடிப்பு எல்லாம் கமராவின் முன்னாலேயே இருக்கும். கமராவுக்குப் பின்னால் அவர் ஏனையவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தார்.

ஐயப்பனிடம் அதிபக்தி கொண்ட நம்பியாரை திரை உலகில் உள்ளவர்கள் குருசாமி என்று மரியாதையாக அழைப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஹிந்தி திரைப்பட முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் குருசாமி நம்பியாரின் தலைமையில் ஐயப்ப யாத்திரை சென்றனர்.திரை உலகில் உள்ள இளம் நடிகர்களுக்கு அறிவுரை கூறுவதில் நம்பியார் என்றுமே பின் நின்றதில்லை. அவரின் ஆலோசனைப்படி இளம் நடிகர்கள் பலர் ஐயப்ப யாத்திரை செல்கின்றனர்.அண்ணாவின் வேலைக்காரி படத்தில் நடித்த பெருமைக்குரியவர் நம்பியார். முதல்வர் கருணாநிதியின் நாம் என்ற படத்தில் மூன்று பாடல்களைப் பாடி நடித்தார். வில்லன் நடிகராக அறியப்பட்ட நம்பியார் திகம்பர சாமியார், நல்லநங்கை, கல்யாணி ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகன் வேடம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதனால் மீண்டும் வில்லனாக நடித்து தனது நடிப்பாற்றலால் மக்களின் மனதைக் கவர்ந்தார்.

தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடங்களில் நடித்ததை இன்று பரபரப்பாக ஊடகங்கள் பெருமையாகப் பேசுகின்றன. திகம்பர சாமியார் படத்திலும் நம்பியார் 11 வேடங்களில் நடித்து அசத்தினார். அந்தக் காலத்தில் அவர் நடித்த 11 வேடங்கள் பரபரப்பா கப் பேசப்பட்டன.
ஜமீந்தார், இளவரசன், அமைச்சர், படைத்தளபதி, ராஜகுரு ஆகிய பாத்திரங்களில் நம்பியார் நடிக்கும் போது கதா பாத்திரமாகவே மாறிவிடுவார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நம்பியார் திவானாக நடித்தார். சிறப்பாக இருந்தது திவானின் கம்பீரமும் மோகனாம்பாளிடம் கெஞ்சுவதும் அவரது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியது.

நெஞ்சம் மறப்பதில்லை ஸ்ரீதரின் அபூர்வமான படங்களில் ஒன்று. அப் படத்தில் நம்பியார் ஜமிந்தõராக நடித்தார். மறுபிறப்பைக் கூறும் அப்படத்தில் 107 வயதுக் கிழவனாக தன் மகனையும் அவனது ஏழைக்காதலியையும் கொலை செய்ய வெறியுடன் அலையும் அவரது நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்தது. தொழில் நுட்பங்கள் அறிமுகமாகாத அந்தக் காலத்தில் கிழவனாக அவர் போட்ட ஒப்பனை பயத்தை உண்டாக்கியது.ராஜகுமாரியில் நம்பியாரின் ராஜகுரு வேடம் எம்.ஜி.ஆர். ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது.
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அப்பாவியான எம்.ஜி.ஆரை நம்பியார் புரட்டி எடுக்கும் போது எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் துடிதுடித்தார்கள். அப்பாவி என நினைத்து துடிப்பான எம்.ஜி.ஆரை சவுக்கால் அடிக்க நம்பியார் முயலும் போது அந்த சவுக்கால் எம்.ஜி.ஆர். நான் ஆணையிட்டால் என்ற பாடலைப் பாடிய படியே நம்பியாரை அடித்து உதைக்கும் போது திரை அரங்கத்தில் மகிழ்ச்சிஆரவாரம் பொங்கியது.
உத்தமபுத்திரனில் இளவரசனை அழித்து ஆட்சியைக் கைப்பற்றத்துடிக்கும் அமைச்சராக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார் நம்பியார்.1952ஆம் ஆண்டு வெளியான ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தார். தமிழக அரசு நம்பியாருக்கு 1952 ஆம் கலை மாமணி விருது வழங்கி கௌவரப்படுத்தியது. 1990ஆம் ஆண்டு நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்கப்பட்டது.
நான் வில்லன் அல்ல என்று நம்பியார் அடித்துக் கூறினாலும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நம்பமாட்டார்கள்.
ரமணி; மெட்ரோ நியூஸ், 21.11.2008

Thursday, November 20, 2008

நிறபேதத்தை துடைத்தெறிந்த ஒபாமாவின் வெற்றி




அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹிலாரியும் ஒபாமாவும் அறிவிக்கப்பட்டபோதே ஒபாமாவுக்கு சோதனை ஆரம்பமானது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கிளிங்டனின் மனைவியான ஹிலாரி ஒபாமாவை விட கூடுதலான செல்வாக்குமிக்கவராகத் திகழ்ந்தார்.
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரியா, ஒபாமாவா என்ற கேள்வி எழுந்தபோது ஹிலாரி தான் என்று அனைவரும் ஒருமித்து கூறினார்கள். ஹிலாரியின் செல்வாக்குக்கு முன்னே ஒபாமாவின் செல்வாக்கு தவிடு பொடியானது.
ஹிலாரி, ஒபாமா இருவருமே சரித்திரத்தை திருப்பும் தகுதியுடையவர்கள். ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையடைவார். ஒபாமா வெற்றி பெற்றால் அமெரிக்காவை ஆட்சிசெய்யும் முதல் கறுப்பு இனத் தலைவர் என்ற பெருமை உண்டாகும்.
ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் ஹிலாரி முன்னணி வகித்தார். ஹிலாரியின் பிரசாரத்துக்கு அஞ்சாது எதிர்ப்பிரசாரம் செய்த ஒபாமா இறுதி நேரத்தில் ஹிலாரியை தோற்கடித்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஒபாமா அறிவிக்கப்பட்ட உடனேயே உலகம் அவரை நோக்கத் தொடங்கியது. சரிந்திருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மூக்கை நுழைத்து அங்கிருந்து வெளியேற முடியாது தவிக்கும் அமெரிக்க இராணுவம் ஆகிய இரண்டு முக்கியமானவற்றுக்கு அடுத்த ஜனாதிபதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று உலகம் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க மக்கள் ஈராக் போரை விரும்பவில்லை. பின்லேடனை ஒழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்காவின் தலைமையிலான பன்னாட்டு படை ஆப்கானிஸ்தானில் இருந்து பின்லேடனையும் தலிபான்களையும் கலைத்ததுடன் திருப்தியடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்றுவரை அமைதி திரும்பவில்லை.
பேரழிவு ஆயுதங்களை சதாம் பதுக்கி வைத்திருப்பதாக ஈராக்கினில் நுழைந்த அமெரிக்காவும் நேச நாடுகளும் சதாமைக் கொன்றொழித்ததைத் தவிர வேறு பேரழிவு ஆயுதங்களைக் கண்டு பிடிக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் செல்வாக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளது. ஆகையினால் குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜோன் மெக்கெயினின் பிரசாரக் கூட்டங்களில் கூட அமெரிக்க ஜனாதிபதி புஷ் கலந்து கொள்ளவில்லை. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஒபமாவின் வெற்றியை உறுதி செய்தன. அமெரிக்க செனட் சபையில் 538 உறுப்பினர்கள் உள்ளனர்.
அமெரிக்க மக்களின் வாக்கின் மூலம் ஒபாமாவுக்கு 310 உறுப்பினர்களின் ஆதரவும் மக்கெயினுக்கு 130 செனட் சபை உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கருத்து கணிப்பை விட அதிகப்படியான செனட்சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒபாமா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒபாமாவும் மெக்கெயினும் கடந்த ஒருவருடமாக பிரசாரம் செய்து வந்தனர். பிரசõரத்தின் போது ஒபாமாதான் முன்னணி வகித்தார். வெள்ளை இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அமெரிக்காவில் கறுப்பின இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது 21 ஆம் நூற்றாண்டின் புரட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தமது மனதில் இன, மத, மொழி, கலாசார பேதம் இல்லை என அமெரிக்க மக்கள் உலகுக்கு எடுத்தியம்பி உள்ளனர். அமெரிக்கா மிக வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. உலகின் பல நாடுகளில் உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களைத் தனது நாட்டு மக்களாக அங்கீகரித்துள்ளது. வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று குடியேறிய மக்கள் அமெரிக்காவின் எண்ணப்படி வாக்களித்து கறுப்பு இனத் தலைவனை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க மக்களின் நிறம் மட்டும் வெள்ளை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலம் மட்டும் வெள்ளை இல்லை அமெரிக்க மக்களின் மனமும் வெள்ளைதான் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர் அமெரிக்க மக்கள்.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றின் அணுகுமுறையில் அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி உலகளாவியரீதியில் எழுந்துள்ளது. புஷ்ஷின் கொள்கைகளில் இருந்தும் அரசியல் அணுகுமுறைகளில் இருந்தும் பெரியளவில் மாற்றத்தை ஒபாமாவால் ஏற்படுத்த முடியாது.
ஈராக்கில் நிலை கொண்டுள்ள பன்னாட்டுப் படைகள் படிப்படியாக விலத்தப்படும் என்ற ஒபாமாவின் உறுதி மொழி நிறைவேறுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதற்கு இப்போதைக்கு விடை காண முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்ப்பையும் மீறித்தான் ஈராக் மீது புஷ் போர் தொடுத்தார். பன்னாட்டு படைகளால் சின்னாபின்னமாகி உள்ள ஈராக்குக்கு ஒபாமா என்ன செய்யப் போகிறார் என்பதை அறிவதற்கு உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
அமெரிக்காவை மட்டுமல்லாது உலகையே வழி நடத்தும் பொறுப்பு ஒபாமாவின் கைகளில் வழங்கப்பட்டுள்ளது. யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் தமது விடிவுக்கு ஒபாமா எப்படி உதவப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஒபாமாவின் கரங்களை வலுப்படுத்தப் போவதால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோன் மெக்கெயின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வளர்ச்சிக்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுவது என்றும் புதிதல்லவா தோல்வியை ஏற்றுக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்க்கட்சி தயாராகிவிட்டது.
அமெரிக்காவுக்கு இதுவரை ஏற்பட்ட மோசமான விமர்சனங்களைக் களைந்தெறிந்து புதிய அமெரிக்காவை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஆற்றல் ஒபாமாவுக்கு உண்டு என்று அமெரிக்க மக்கள் கருதுகின்றனர்.
ரமணி:
மெட்ரோ நியூஸ், 07.11.2008

Monday, November 17, 2008

தமிழர்களின் உணர்வுகளூக்கு மதிப்பளிக்குமா இந்தியமத்திய அரசு?



இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காகத் தமிழ்நாட்டில் பெரும் போட்டி எழுந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குஉணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்காமல் இலங்கை அரசுஇழுத்தடிக்கிறது. தமிழகத்தின் எழுச்சியையடுத்து இந்திய அரசின் அழைப்பையடுத்து இலங்கை அரசின் உயர் மட்டக்குழு டில்லிக்குச் சென்றதன் பின்னர் வன்னிக்கு உணவுப் பொருட்களும் மருத்துவ பொருட்களும்அனுப்பி வைக்கப்பட்டன.
வன்னியில் யுத்தத்தினால் அல்லலுறும் மக்களுக்குஉதவுவதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்காக தமிழக மக்களின் உதவியை அதுநா டியுள்ளது. தமிழக முதல்வரின்வேண்டுகோளையடுத்து இலங்கையில் அல்லலுறும் மக்களுக்கு உதவுவதற்காக தமிழக மக்கள்போட்டி போட்டு நிதி உதவி செய்து வருகின்றனர்.முதல்வர் கருணாநிதியை மூர்க்கமாக எதிர்க்கும் விஜயகாந்தும் இலங்கைத் தமிழ் மக்களுக்குஉதவத் தயார் என்று அறிவித்துள்ளார்.
தனது கட்சியின் சார்பில் சேகரிக்கப்படும்பொருட்களை மாவட்ட ஆட்சியாளரிடம்கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் குரல் உலக அரங்கில்ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது.தமிழக அரசு சேகரிக்கும் அத்தியாவசியப்பொருட்கள் யாரிடம் ஒப்படைக்கப்படப் போகின்றது என்ற கேள்விக்குரிய பதில் இதுவரைகிடைக்கவில்லை.வன்னியை யுத்த மேகம் சூழ்ந்துள்ளதால்அங்கு தொண்டு செய்த அரசு சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின்நெருக்குதல் காரணமாக வெளியேறி விட்டன.
சுனாமியினால் இலங்கை சீரழிந்த போது உதவிக்கரம் நீட்டி உடனடியாக களத்தில் இறங்கிமக்களின் துயர் துடைத்ததில் அரச சார்பற்றநிறுவனங்களின் பங்கு அளப்பரியது.தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில்இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறது என்ற சந்தேகம்இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம்பல முயற்சிகளை எடுத்தது.இலங்கை அரசாங்கத்தின் நெருக்குதல் காரணமாக சில அரச சார்பற்ற நிறுவனங்கள்இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. வன்னிமீது இலங்கை அரசங்கம் மேற்கொள்ளும்விமானத் தாக்குதல், எறிகணை வீச்சுக் காரணமாக வன்னியில் இயங்கும் தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டது. ஊழியர்களின்நன்மை கருதி அரச சார்பற்ற நிறுவனங்கள்வன்னியில் இருந்து வெளியேறிவிட்டன.
தமிழக அரசு வன்னி மக்களுக்காகச் சேகரிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வன்னி மக்களைச்சென்றடையும் மார்க்கம் எது என்றகேள்விக்குரிய விடை இன்னமும் தெளிவில்லாமல் இருக்கிறது.இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளைஎதிர்க்கும் வேளையில் இந்திய அரசு எமதுநண்பர்கள் என மார் தட்டும்இலங்கையின் சில அரசியல்வாதிகள்வன்னியில் வாடும் தமிழ்மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகளை
எதிரிகளாகக் கருதுகின்றனர்.இலங்கையில் நடைபெறும்யுத்தம் இரண்டு வாரங்களில்நிறுத்தப்படாவிட்டால் தமிழகத்தின்அனைத்து நாடாளுமன்ற
உறுப்பினர்களும் பதவி துறப்பார்கள் என்ற தமிழக அரசின்மிரட்டலை இலங்கை அரசு சமாளித்துவிட்டது.வன்னி மக்களுக்கு தமிழகஅரசு அனுப்பப் போகும் அத்தியாவசியப் பொருட்கள் உரியமுறையில் அங்கு செல்வதற்குரிய ஏற்பாட்டை இலங்கை அரசுசெய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக அரசின் இந்தமுயற்சிகளை இலங்கையில்உள்ள சில அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை இனவாத கண்ணுடன்நோக்கும் சில அரசியல்வாதிகள் அதனைஎதிர்த்து மிகப் பரந்தளவில் பிரசாரம் செய்கின்றனர்.
இலங்கையில் அல்லல்படும் தமிழ் மக்களுக்குஉதவ வேண்டும் என்ற தமிழக அரசின்வேண்டுகோளையடுத்து பலர் ஆர்வத்துடன்உதவி செய்கின்றனர். தமிழக அரசின் இந்தமுயற்சி அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை இலங்கைத் தமிழ் மக்களுக்குஅனுப்புவதற்காக பழ. நெடுமாறன்சேகரித்த ஒரு கோடி ரூபா பெறுமதியானபொருட்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான விளக்கத்தைத் தமிழக அரசு இதுவரைவெளியிடவில்லை.
பழ. நெடுமாறன் சேகரித்த பொருட்களைஇலங்கைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைதமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும். முதல் கட்டமாக அப்பொருட்கள்இங்கு அனுப்பப்பட்டால் தமிழக அரசு இலங்கைத் தமிழ் மக்கள் மீதுவைத்துள்ள கரிசனையை உலக அரங்குக்குஎடுத்தியம்ப ஏதுவாக இருக்கும்.
வன்னி மக்களை இலங்கை அரசு சந்தேகக்கண்ணுடனேயே பார்க்கிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது வன்னி மக்கள் நம்பிக்கைவைக்கவில்லை. இந்த நிலையில் தமிழக அரசுஅனுப்பி வைக்கும் அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக வன்னி மக்களைச் சென்றடையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வன்னியில் அல்லப்படும் தமிழ் மக்களுக்குஅத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைத்தால் போதாது. அங்குள்ள அதிகாரமிக்கஅரசியல்வாதிகள் உணவுப் பொருட்களுடன்வன்னிக்குச் சென்று அங்கு துயரப்படும் மக்களின்கண்ணீரைத் துடைத்தால்தான் தமிழக அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு உலகஅங்கீகாரம் கிடைக்கும்.மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கநாடாளுமன்ற இராஜினாமாவை ஒத்தி வைத்ததமிழக முதல்வர் வன்னி மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை எப்படி அனுப்பிவைக்கப் போகிறார் என்பதை அறிவதற்கு உலகமே ஆவலாக உள்ளது. அதேவேளை வன்னிக்குச்சென்று பொதுமக்களுக்கு மருத்துவசேவையாற்றத் தயார் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்அறிவித்துள்ளது.இவ்விடயத்தை தமிழக அரசு எவ்வாறுகையாளப்போகிறதெனத் தெரியவில்லை.தமிழக அரசின் செயற்பாடுகளுக்கு மத்தியஅரசு துணை போகுமா என்ற கேள்விக்கானவிடையும் இன்னமும் தெளிவாகவில்லை.
வர்மா
02 11 2008

சாதித்தார் சச்சின்



கிரிக்கெட்உலகின்சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரர் சச்சின். சச்சின் என்றால் கிரிக்கட் வீரர் என்பதனை விட சாதனைகளின்சொந்தக்கார் என்றும் கூறலாம். கிரிக்கட் உலகின் பிதா மகன்டொன் பிரட்மன் பாராட்டிய வீரர்களில் சச்சினும் ஒருவர்.உலகின் பிரபலமான பந்து வீச்சாளர்கள் அனைவரும் சச்சினுக்கு பந்து வீசுவது கடினம் என்று ஒரே குரவில் உரத்துக் கூறியுள்ளனர். ரன் குவிக்கும் மிஷின் என்று புகழ்ந்து பேசப்படும் சச்சினின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது சாதனைகளைத்தொடுவது அவருக்கு கைவந்த கலை.
துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் சச்சின் பந்து வீச்சிலும் எதிரணியின் வெற்றியை தட்டிப் பறித்தார். எதிர்பாராத வேளையில் எதிரணி வீரர்களின் முக்கியமான விக்கட்டை சச்சின் வீழ்த்தியதால்வெற்றி பெற வேண்டிய அணிகள் தோல்வியடைந்தனவாய்ச் சவாடல் பேசி தனது வீரத்தை சச்சின் காட்டியதில்லை.தன் மீது வீசப்படும் விமர்சனக் கணைகளை துடுப்பு மூலம்தடுத்து விடுவது அவரது பாணி. டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்
களை குவித்த லாராவின் ஓட்ட எண்ணிக்கையை இலங்கையில் சச்சின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் எவரும்சோபிக்கவில்லை. சச்சினும் அதற்கு விதிவிலக்கல்ல. சச்சினின் உடல் நிலை அவருக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. விளையாடுவதற்குரிய உடல் நிலை இல்லாமையினால் போட்டிகளைத்தவிர்த்து வருகிறார்.எதிரணி வீரரால் அதிகம் குறி வைக்கப்படும் வீரராக சச்சின்
உள்ளார். சச்சினுக்கு எப்படிப் பந்து வீசினால் அவர் அவுட்டாவார்என்று தெரிந்து வைத்திருக்கும் பந்து வீச்சாளர்கள் அவரைக் குறிவைத்து பயிற்சி செய்வார்கள். பந்து வீச்சாளர்களின் எதிர்பார்ப்பைபல சந்தர்ப்பங்களில் சச்சின் தவிடு பொடியாக்கியுள்ளார்.
சச்சினின் விக்கட்டை வீழ்த்தினால் உலக சாதனை செய்ததுபோல் பந்து வீச்சாளர்கள் துள்ளிக் குதிப்பார்கள்.அணியில் அறிமுகமாகும் புதிய பந்து வீச்சாளர்களுக்கு சச்சின்மீது ஒருதலைக் காதல் பிறந்து விடுகிறது. சச்சினின் விக்கெட்டைவீழ்த்த வேண்டும் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளிப்பார்கள்.
அவர்களின் பந்து வீச்சு சச்சின் வீழ்ந்தால் பிறவிப் பயனடைந்ததுபோல் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.லாராவின் சாதனையை முறியடித்து 12 ஆயிரம் ஓட்டங்களைகடந்து விட்டார் சச்சின். அவரது சாதனையை முறியடிக்கும் சந்தர்ப்பம் டிராவிட், பொண்டிங் ஆகிய இரண்டு வீரர்களுக்குஉள்ளது. டிராவிட் தொடர்ந்து விளையாடுவாரார என்ற சந்தேகம்உள்ளது. சச்சினின் சாதனையை முறியடிக்கும் வரை பொண்டிங்விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கவீரர்கள் சிறப்பாக விளையாடும் போது ஓய்வை அறிவித்து விடுவா
ர்கள். அவர்களின் ஆட்டத்திறன் மங்கிவிட்டால் அணியில்இருந்து தூக்கியெறிப்படுவார்கள். 2011 ஆம் ஆண்டுவரை விளையாடப் போவதாக சச்சின் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டுவரை டெஸ்ட் பேட்டிகளிலும் சச்சின் விளையாடினால் அவரின் சாதனையை இப்போதைக்கு யாராலும் முறியடிக்க முடியாது.
வானதி
மெட்ரோநியூஸ் 24 10 2008

கங்குலியின் ஓய்வுவிருப்பமா?நிர்ப்பந்தமா?




இந்திய அணியின் பல வெற்றிகளுக்குகாரணமாக இருந்த சௌரவ்கங்குலி களத்தில் நிற்கும் வரை எதிரணி வீரர்களும், ரசிகர்களும் பதற்றமாக இருப்பார்கள். ஆட்டத்தின்போக்கை மாற்றும் ஒருசில வீரர்களில்கங்குலியும் ஒருவர். மகிழ்ச்சியுடன்விடைபெற வேண்டிய கங்குலி மனமொடிந்து விடை பெறப்போவதாகஅறிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு இந்திய அணிஇங்கிலாந்துக்குச் சென்றபோது கங்குலி அணியில் சேர்க்கப்பட்டார்.டெஸ்ட் போட்டியில் விளையாடிய 11 வீரர்களின் பெயர்ப்பட்டியலில்கங்குலி இடம்பெறவில்லை. இந்தியஅணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நவ்ஜோத் சித்து அணியின் நிர்வாகிகளுடன் பிரச்சினைப்பட்டதன்காரணமாக இங்கிலாந்தில் இருந்துநாடு திரும்பிவிட்டார்.சித்துவின் இடத்தை நிரப்பக்கூடியவீரர் இந்திய அணியில் இல்லை என்றா
லும் தேர்வாளர்கள் கங்குலியைக்களமிறக்கினார்கள். தேர்வாளர்களின்நம்பிக்கையை உறுதிப்படுத்திய கங்குலி 131 ஓட்டங்கள் அடித்து இந்தியஅணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.
சச்சினும், கங்குலியும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிடெஸ்ட்டிலும், ஒருநாள் போட்டியிலும் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். கங்குலியின் திறமை காரணமாக இந்திய அணியின் தலைமைப்பதவி தேடி வந்தது. இந்தியஅணியின் தூண்களில் ஒருவராக
இருந்த கங்குலிக்கு இந்திய அணியின் பயிற்சியாளரான செப்பலின்உருவில் பிரச்சினை ஆரம்பமானது.கங்குலியை அணியிலிருந்து நீக்க
வேண்டும் என்பதில் பயிற்சியாளர்செப்பல் குறியாக இருந்தார். கங்குலியின் திறமையாலும் அவருக்குஇருந்த அரசியல் செல்வாக்காலும்கங்குலியை அசைக்க முடியவில்லை.கங்குலியின் திறமையும் அரசியல்செல்வாக்கும் சரியத் தொடங்கியதும்கங்குலிக்கு சோதனை ஏற்பட்டது.
வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக்குழு ஒருநாள் அணியில் இருந்துகங்குலியை வெளியேற்றியபோதுகங்குலிக்கு அணியில் இனி இட
மில்லை என்று வெளி உலகுக்குத்தெரிந்தது.சற்றும் தளராத விக்கிரமாதித்தன்போன்று உள்ளூர்ப்போட்டிகளில்விளையாடி தனது திறமையை வெளி
ப்படுத்திய கங்குலி தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பினார். ஷேவாக், சுரேஷ்ரெய்னா, கௌதம் கம்பீர் ஆகியோரின் அதிரடியினால் கங்குலியின்இடம் பறிபோனது.
இளம் வீரர்களின் அதிரடி ஆட்டத்தினால் கங்குலியுடன் ட்ராவிட்,லக்ஷ்மன் ஆகியோரும் பாதிக்கப்பட்டனர். ஒரு நாள் அணியில் இருந்துகழற்றி விடப்பட்ட இவர்கள் டெஸ்ட்போட்டிகளில் மட்டும் விளையாடஅனுமதிக்கப்பட்டனர்டெஸ்ட்போட்டிகளிலும் இவர்கள்மூவரும் சோபிக்காததனால் திறமையுள்ள இளம் வீரர்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர் அண்மைக்காலப் போட்டிகளில் அதிகம் சோபிக்கவில்லைல. காயம் ஏற்படுவதாலும்உடல் தகுதி இல்லாததாலும் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறார் சச்சின் டெண்டுல்கர்.புதிய தேர்வுக்குழு பதவி ஏற்றதும்
டெஸ்ட்போட்டியில் விளையாடதனக்கு இடம் கிடைக்கும் என்று கங்குலி உறுதிப்படக்கூறினார். கங்குலி,ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியோருக்குடெஸ்ட்போட்டிகளில் சந்தர்ப்பம்வருமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஒரு பக்கத்தில் நடைபெற்றது.இவர்கள் மூவருக்கும் தேர்வுக்குழு சந்தர்ப்பம் வழங்கும். அதேவேளைகௌரவமான முறையில் அவர்கள்ஓய்வு பெறுவதற்கு வழிவிடப்படும்என்ற கருத்தும் நிலவியது.
எதிர்பார்த்தது போன்றே கங்குலி,ட்ராவிட், லஷ்மன் ஆகியேõருக்குடெஸ்ட் அணியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.டெஸ்ட்போட்டி ஆரம்பமாவதுற்கு
முன்னரே அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருடன் ஓய்வுபெறப்போவதாக கங்குலி அறிவித்துவிட்டார்
.கங்குலியைப்பற்றிய காட்டூன்களும், நகைச்சுவைத் துணுக்குகளும் மிக அதிகமாக வெளிவந்தன. நகைச்சுவை என்ற பெயரில்கங்குலி நோகடிக்கப்பட்டார்.இந்திய அணியின் தேர்வுக்குழுத்தலைவரான ஸ்ரீகாந்தும், அன்றைய தேர்வுக்குழுவால் ஓரங்கட்டப்பட்டவர் தான். இந்திய அணித்தலைவராக நீண்டகாலம் பணியாற்ற வேண்டிய அவர் தேர்வாளர்களின் ஒருதலைப்பட்சத்தால் ஓய்வுபெற்றார். ஆகையினால் வீரர்களின்
ஆதங்கம் அவருக்கு நன்கு புரியும்.கங்குலி தனது ஓய்வை அறிவித்துவிட்டார். அடுத்து ஓய்வு பெறப்போவதுயார்? லக்ஷ்மனா? ட்ராவிட்டா?என்ற கேள்வி ரசிகர்களின் முன்னால்உள்ளது. இதற்கிடையில் கும்ப்ளேஓய்வு பெறப்போவதாக செய்தி வெளியானது. இதனை அவர்
மறுத்துள்ளார். 2011ஆம் ஆண்டுஉலகக் கிண்ணப் போட்டியிலும்விளையாடப்போவதாக டெண்டுல்கர் கூறியுள்ளார்.கங்குலி, ட்ராவிட், லக்ஷ்மன்,குப்ளே ஆகியோர் ஓய்வு பெறும்காலத்தை நெருங்கி உள்ளனர்.
ரமணி
மெட்ரோநியூஸ் 24 10 2008