Thursday, April 30, 2015

மும்பையும் பஞ்சாப்பும் வெளியேறுகின்றன

இந்தியாவில் நடைபெறும் பெப்ஸி ஐபிஎல்போட்டியில் கடைசி இடம் பிடித்த மும்பையும் பஞ்சாப்பும் முதல் சுற்றுடன் வெளியேறும்  நிலையில் உள்ளன. சென்னை சுப்பர் குங்ஸ்,ராஜஸ்தான் ரோயல்ஸ்,ரோயல் சலஞ் பெங்களூர்,கொல்கத்தா நைற்ரைடர்ஸ்,சன்றைஸ் ஹைதராபாத்,டெல்லி டேர்டெவில்ஸ்,மும்பை இந்தியன்ஸ், கிங்லெவன் பஞ்சாப் ஆகிய  ஆகிய  எட்டு நகர அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ரோயல்ஸ் ஒன்பது போட்டிகளிலும் ஏனையவை ஏழு போட்டிகளிலும்விளையாடிவிட்டன. மும்பையும் பஞ்சாப்பும் இரண்டு  போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டு புள்ளிகளுடன் முறையே எழாம் எட்டாம் இடங்களில் உள்ளன.

ஹைதராபாத்,டில்லி ஆகியன ஏழு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தன  ஆறு புள்ளிகளுடன் முறையே  ஐந்தாம் ஆறாம்  இடங்களில் உள்ளன.

பெங்களூர் கொல்கத்தா ஆகியன ஏழு போட்டிகளில்விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தன.ராஜஸ்தானுக்கு எதிராக இவை இரண்டும் விளையாடிய போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.  ஆகையால் ஏழு புள்ளிகளுடன்  மூன்றாம் நான்காம் இடங்களில் உள்ளன.

ஒன்பது போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தாந்தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில்  வெற்றி  பெற்று அசத்தியது.தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.மழக் காரணமாக இரன்டு போட்டிகள் கைவிடப்ப்ட்டன. 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

துடுப்பாட்டம்,பந்து வீச்சு, களத்தடுப்பு ஆகியவறில் க்லக்கும் சென்னை 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.ஏழு போட்டிகளில் விளையாடிய சென்னை ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றது.குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் சென்னை ஆட்டமிழந்ததனால் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் களம் இறங்கிய எதிரணிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து வெற்றி பெற்றது.

Wednesday, April 29, 2015

விசித்திர வழக்கு


ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு எதிராக கர்நாடகத்தில் நடைபெறும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்த வழக்கு அதிரடியான திருப்பங்க்ளும் விசித்திரங்கள் பல நிறைந்ததுமாக உள்ளது.

குற்றம் சாட்டபட்டு நிதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படுபவர் தான் சுற்றவாளி என நிரூபிப்பதற்காக திறமையான வழக்கறிஞர்களை நியமிப்பார். குற்றம் சாட்டப்பட்ட தனக்கு எதிராக அரச தரப்பில் பவானிசிங் ஆஜராக வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்த விசித்திரமும் விந்தையும் இங்கு அரங்கேறி உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதாசொத்துச் சேர்த்தார் என்ற திரியை முதன் முதலில் கொளுத்திப்போட்டவர் சுப்பிரமணியன்சுவாமி. பின்னர் அரசியல்வாதியாகி அவருடன் கைகோர்த்து தேர்தலைச் ச்ந்தித்தார். ஜெயலலிதாவுடனான அரசியல் பயணம் கசந்ததனால் அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பேன் என சபதமிட்டு வழக்கு ஆவணங்களுடன் கர்நாடக நீதி மன்றத்தில் போய் அமர்ந்தார்


ஜெயலலிதாவின் வழக்கு  நீதிமன்றத்தில்விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  சுப்பிரமணியன்சுவாமி ஆஜரானபோது நீயார்? உன் பெயரென்ன? உனக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? என நீதிபதி கேட்டதால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன்சுவாமி  தன்னை அறிமுகப்படுத்தி இந்தவழக்கின் சூத்திரதாரி  நான் என    விளங்கப்படுத்தினார்


ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு எதிராக கர்நாடகத்தில் நடைபெறும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்த வழக்கு அதிரடியான திருப்பங்க்ளும் விசித்திரங்கள் பல நிறைந்ததுமாக உள்ளது.

குற்றம் சாட்டபட்டு நிதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படுபவர் தான் சுற்றவாளி என நிரூபிப்பதற்காக திறமையான வழக்கறிஞர்களை நியமிப்பார். குற்றம் சாட்டப்பட்ட தனக்கு எதிராக அரச தரப்பில் பவானிசிங் ஆஜராக வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்த விசித்திரமும் விந்தையும் இங்கு அரங்கேறி உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதாசொத்துச் சேர்த்தார் என்ற திரியை முதன் முதலில் கொளுத்திப்போட்டவர் சுப்பிரமணியன்சுவாமி. பின்னர் அரசியல்வாதியாகி அவருடன் கைகோர்த்து தேர்தலைச் ச்ந்தித்தார். ஜெயலலிதாவுடனான அரசியல் பயணம் கசந்ததனால் அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பேன் என சபதமிட்டு வழக்கு ஆவணங்களுடன் கர்நாடக நீதி மன்றத்தில் போய் அமர்ந்தார்

ஜெயலலிதாவின் வழக்கு  நீதிமன்றத்தில்விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  சுப்பிரமணியன்சுவாமி ஆஜரானபோது நீயார்? உன் பெயரென்ன? உனக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? என நீதிபதி கேட்டதால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன்சுவாமி  தன்னை அறிமுகப்படுத்தி இந்தவழக்கின் சூத்திரதாரி  நான் என    விளங்கப்படுத்தினார். 


ஜெயலலிதா குற்றம் செய்தார் என நிரூபிக்க வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்  அவருக்கு சாதகமாக  வாதாடினார்.வழக்கை  இழுத்தடிப்பதிலேயே குறியாக இருந்தார். சட்டம் தெரியாதவர்களே அவரின்  வாதத்தில் சந்தேகப்பட்டனர். நீதிபதி அவரை  எச்சரித்து அபராதம் விதித்தார். அதனை பெரிதாக பவானிசிங் கருதவில்லை. நீதிபதி குன்ஹா கடுமையான தீர்ப்பு வழங்கியும்ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க பவானிசிங் மறுப்பு தெரிவிக்கவில்லை

பவானிசிங்  தொடர்ந்தும் வாதாடினால் ஜெயலலிதா விடுதலையாகி விடுவார் என நினைத்த திராவிட முன்னேற்றக்கழகம் அன்பழகனின் மூலம் மனுதாக்கல் செய்தது.தமிழகத்தில்  நடைபெற்ற ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகர்நாடகத்துக்கு மற்றப் படுவதற்கு வழிஅமைத்தவர் அன்பழகன்.   

அரச தரப்பு வழக்கறிஞராக ஆஜராகும் தகுதி பவானிசிங்குக்கு இல்லை என்ற வழக்கு இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு  வந்தபோது ஒரு நீதிபதி  எதிர்த்தும்  மற்றவர் சரி என்றும் தீர்ப்பு வழங்கினர். ஆகையினால் மூன்று நீதிபதிகள்  பெஞ்சுக்கு  பாரப்படுத்தப்பட்டது. 

மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு ஜெயலதாவுக்கு எதிரான வழக்கின் போக்கை மாற்றியது. பவானிசிங்கின் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிக்ள் அவருடை வாத்த்தை   ஏற்கக்கூடாது என்றனர். எழுத்து பூர்வமான் வாதத்தை  முன்வைக்க அன்பழகனுக்கும் கர்நாடக அரசுக்கும் ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. இப்படிஒரு தருணத்துக்காக காத்திருந்த அன்பழகன் 81 பக்கங்களில் தனதுதரப்பு வாதங்களை சமர்ப்பித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞரைத்தேடிய கர்நாடகவின் கண்களில் ஆச்சரியா தென்பட்டார். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஏழு வருடங்களாக அரச தரப்பு வழக்கறிஞராக வாதாடியவர் ஆச்சாரியா. ஆச்சாரியாவின் வாதங்களும் கேள்விகளும் ஜெயலலிதாவை திக்குமுக்காடச் செய்தன. ஆச்சாரியாவை அகற்றுவதற்கு அரசியல் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. பதவி உயர்வு கொடுக்கப்பட்டு வெளியேற்ற முயற்சி செய்யப்பட்டது. எதற்கும் அசைந்து கொடுக்காத ஆச்சாரியா மனம் வெறுத்து தானாக விலகினார்.

ஆச்சாரியாவின் வெளியேற்றத்தால் ஜெயலலிதாதரப்பு நிம்மதி அடைந்தது.  தன்னை வெளியேற்ற பாரதிய ஜனதாக் கட்சி கொடுத்த நெருக்கடிகளையும் ஜெயலலிதாதரப்பின் மிரட்டல்களையும் தனது சுய சரிதையில் விபரித்தர். ஆசுவாசமாகமூச்சுவிட்ட ஜெயலலிதாவுக்கு  ஆச்சாரியாவின் மீள்வருகை கலகத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு விபரங்களை விரல் நுணியில் வைத்திருந்த ஆச்சாரியா 18 பக்கங்களில்  கார்நாடக அரசதரப்பு வாதத்தை முன்வைத்தார்.

சசிகலா. இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவுக்கு சார்பாக வாதாடியபோது உங்கள்  பிரதிவாதிக்கு  ஆதரவாக வாதாடுங்கள்   என நீதிபத் எச்சரித்தார். காவேரிப்பிரச்சினையின் போது கார்நாடகத்துக்கு ஆதரவாக் ஜெயலலைதாவை எதிர்த்து வாதாடிய பாலிநரிமன் ஜ்ர்யலலிதா நிரபராதி என வாதாடினார்.

 சொத்துக்குவிப்பு வழக்கை 18 வ்ருடங்களாக இழுத்தடித்து சாதனை செய்த ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதும் விரைவாக அதிலிருந்து மீளவேண்டும் என எதிர்பார்க்கிறார்.  இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக  அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

Tuesday, April 28, 2015

விறுவிறு விஜயகாந்த்

  1.  

தமிழதமிழகசட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற மகுடத்துடன் அரசியலை மறந்து இருந்த விஜயகாந்த் கடந்த  ஞாயிற்றுக்கிழமை திடீரென கண்விழித்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்களைச் சந்தித்தார்.விஜயகாந் தின்  சுறுசுறுப்பைக்கண்ட ஊடகங்கள் அவரைப்பின் தொடர்ந்தன.அன்றைய தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் பிரகாசித்தார்..அடுத்தநாள் திங்கட்கிழமை வெளியான பத்திரிகைகளின் பக்கங்கள் விஜயகாந்தின் படங்களால் நிர ப்பினக சட்டசபைத் தேர்தலின் போதும் இந்திய நடாளுமன்றத் தேர்தலின் போதும் விஜகாந்தின் வருகைக்காக துண்டு போட்டு காத்திருந்தார் கருணாநிதி. இரன்டு முறையும்   விஜயகாந்த் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை  சட்டசபைத் தேர்தலின் போது ஜெயலலிதாவுடனும் நாடளுமன்றத்தேர்தலின் போது பாரதீய ஜனதாக்கட்சியுடனும் இணைந்து  கருணாநிதியை குப்புறத்தள்ளிய  விஜயகாந்த். கருணநிதியை தேடிச்சென்று சந்தித்தார்.


கர்நாடக அரசு கட்டமுயற்சிக்கும் மேகதூது அணை,  தமிழக மீனவர் பிரச்சினை,செம்மரக்கடத்தல் நிலம் கையகப்படுத்தல்  முல்லைபெரியாறு ஆகியன பற்றி பிரதமரை சந்திப்பதற்கு  செல்லும் குழுவுக்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் ஆசை ராமதாஸைத்தவிர அனைத்து தமிழகத் தலைவர்களும் விஜயகாந்தின் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை.
செங்கம்பளம் விரித்து காத்திருந்தபோது அவமானப்படுத்திய விஜயகாந்தை மலர்ந்த முகத்துடன் கருணாநிதி வரவேற்றார். 10 வருடங்களின் பின்னர் கருணாநிதியும் விஜயகாந்தும் சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப்பட்டது. 10 வருடங்களுக்கு முன்னர் கட்சியை ஆரம்பித்தபோது  கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்தார். விஜயாந்தின் திருமண மண்டபம் வீதி அபிவிருத்திக்கு இடைஞ்சலாக இருப்பதனால்  திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின்போது கருணாநிதியைச்சந்தித்த விஜயகாந்த இடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.  அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தினத்தந்தி அதிபர் ஆதித்தனாரின் மறைவின் போது எதேச்சையாகச் சந்தித்து வணக்கம் தெரிவித்தனர்.

விஜயகாந்துடன் கூட்டணி வைக்க கருணாநிதி பல முறை முயன்றும் வளைந்து கொடுக்காதவர்  இப்போ கீழே இறங்கிவந்து கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தார். இது விஜயகாந்துக்கு காட்டப்பட்ட சமிக்ஞையாகவும் கருத இடம் உண்டு  திருமாவளவன் .ஜி.கே.வாசன்,இளங்கோவன்,சிதம்பரம்,வைகோ,தமிழிசை செளந்தரராஜன் ஆகியோடையும் அவர் சந்தித்தார். தமிழக எதிர்க்கட்சித்தலைவர்கள் அனைவரயும் சந்தித்து பிரமிப்பை ஏற்படுத்திஉள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸை விஜயகாந்த் சந்திக்கவில்லை. சந்திக்க முயற்சி செய்ததாக அவர் கூறி உள்ளார்.  ராமதாஸ் தரப்பு அதனை மறுத்துள்ளது.

ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் ஏழாம் பொருத்தம்.விஜயகாந்தின் தலைமையை  ராமதாஸ் விரும்பமாட்டார். ஆகையினால் அவர் சந்திப்பை தவிர்த்திருப்பார்.தமிழக மக்களின் பிரச்சினைக்காக தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டதால் அரசியல் நோக்கர்கள் வியப்புடன்  பார்க்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நல்ல பிள்ளையாக இருந்த விஜயகாந்த திங்கட்கிழமை  தனது சுய ரூபத்தைக்காட்டிவிட்டார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,கனிமொழி,திருச்சிசிவா, தமிழிசை உட்பட 20 தமிழக அரசியல்  பிரதமர் மோடியைச்  சந்தித்த விஜயகாந்த் பத்திரிகையாளர் மாநாட்டில் தனது சண்டித்தனத்தைக் காட்டிவிட்டார்.

ஜெயா ரிவி தினமலர் ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியினால்  பாதியிலேயே வெளியேறினார். மைத்துனர் சுதீஷ் திரும்ப அழைத்து வந்தார். பொது இடங்களி;ல் எப்படி நடப்பது  என்று விஜயகாந்துக்கு இன்னமும்தெரியவில்லை. பத்திரிகையாளர் முன்னிலையில் விஜயகாந்த் கோபபடுவது புதிய விசயமல்ல. டில்லி,சென்னை, திநுச்சி என பட்டியல் மலேசியா வரை நிளூகிறது.

தமிழக மக்களுக்கான நல்ல  முயற்சியை இறுதியில் கெடுத்து விட்டார். தமிழகத்தின் ஆட்சியை  பிடிக்க கருணாநிதி வகுக்க உள்ள வியூகத்தில் விஜயகாந்த விழுந்து விட்டார்.

Monday, April 20, 2015

ஒலிம்பிக் முத்திரை வெளியீடு


பிறேஸிலில் 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் ஞபகார்த்தமாக முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.பாஸ்கற் போல்,சைக்கிள் ஓட்டம்,குத்துச்சண்டை மல்யுத்தம்,அம்பு விடுதல் போன்ற 10  விளையாட்டுக்களை முன்னிலைப்படுத்தி 24 மில்லியன் முத்திரைகள்வெளியிடப்பட்டன

இம்முத்திரைகள் ஒவ்வொன்றும் 1.30 பிறேஸில் ரியால் பெறுமதியானவை {.0.41 டொலர்} பிறேஸிலில் உள்ள தபால் நிலையங்களில் ஒலிம்பிக் முத்திரைகள் விற்பனையாகின்றன.

Saturday, April 18, 2015

தாமதமாகும் தீர்ப்பு


வருமானத்துக்கு  அதிகமாக சொத்து குவித்த வழக்கில்     ஜெயலலிதா,சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியோரை     குற்றவாளிகளாக  தீப்பளித்த கர்நாடக  சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு  சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது. அதனை எதிர்த்து நால்வரும் மேன் முறயீடு செய்தார்கள். மேன் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வழங்குவதில் சட்டப் பிரச்சினை எழுந்துள்ளது.

ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு எதிரான வழக்கில் அரசதரப்பு வழகறிஞராக  பவானிசிங் வாதாடியது தவறு எனபேராசிரியர் அன்பழகன்  தொடுத்தவழக்கினால்   மேன் முறையீட்டு மனுமீதானதீர்ப்பு வழங்கப்பட முடியாத நிலை எழுந்துள்ளது.


ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு எதிரான  சொத்துக்குவிப்பு வழக்கு 1996 ஆம் ஆன்டு தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். 2007 ஆம் ஆண்டு அன்பழகனின் முயற்சியினால் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. தமிழக முதல்வராக ஜெயலலிதா தெரிவானதால் தமிழக முதல்வருக்கு எதிரான வழக்கை தமிழக அரசு நடத்துவது தவறென நீதிமன்ற்த்தில் மனு தாக்கல் செய்தார். 2004ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்த வழக்கு கர்நாடகத்தில் நடைபெற்றது.        



  
நீதிபதி குன்ஹாவின் கடுமையான தீர்ப்பு ஜெயலலிதாவின்  அரசியல் எதிர்காலத்தைப்   பாதித்தது.நான்கு பேருக்கும் நான்கு ஆண்டு சிறை ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதம். ஏனைய மூவருக்கும் 10 கோடிரூபா அபராதம். இந்தக் கடுமையான தண்டனைக்கு எதிராக நான்கு பேரும் மேன் முறையீடு செய்தனர்இந்தவழக்கில் அரச வழக்கறிஞராக யார் ஆஜராகுவது என்ற கேள்வி எழுந்தபோது பவானிசிங்கை தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை நியமனம் செய்தது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் பவானிசிங் நீதியாகச்செயற்படவில்லை எனக்குற்றம் சுமத்தி  அன்பழகன் மனுத்தாக்கல் செய்தார்.அந்த மனுவை ஏற்க நீதிபதி குமாரசாமி மறுத்துவிட்டார்கர்நாடக உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில்  மனுத்தாக்கல் செய்தார் அன்பழகன்.அன்பழகனின் மனுவை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்.   மதன்பி லோகூர், பானுமதி ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.பவானிசிங்கின் நியமனம் சரி என லோகூரும்   தவறு என பானுமதியும் தீர்ப்பளித்தனர். இரன்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் ஜெயலலிதாவின் மேன் முறையீட்டுத் தீர்ப்பு தள்ளிப்போனது.  


நீதிபதி குன்ஹாவால்  பலமுறை   எச்சரிக்கப்பட்ட  பவானிசிங் நீதிபதி குமாரசாமியின் கேள்விகளுக்கு    சரியான பதில் கூறவில்லை.ஜெயலலிதா குற்றவாளி என பவானிசிங் வாதிடுகிறாரா?அல்லது அவரின் விடுதலைக்காக வாதிடுகிறாராஎன்ற குழப்பநிலை தோன்றியது குன்ஹாவின் கடுமையான தீர்ப்பின் பின்னர் ஜெயலலிதாவிக்கு பிணை வழங்க பவானிசிங் எதிர்ப்பு காட்டாதபோதே அவரின் மீது சந்தேகம் உண்டானது. அவர் தொடர்ந்து வாதிட்டால் ஜெயலலிதா விடுதலையாகி விடுவார் என்ற கருத்து நிலவியது.அதனி உறுதி ப்படுத்துவது போலவே பவா னி சிங்கின் நடவடிக்கையும் இருந்தது.


சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மூன்றுமாதங்களுக்குள் நீதிபதி குமாரசுவாமி விசாரணையை முடித்துவிட்டார். தீர்ப்பை எழுதுவதற்கு தயாரான போதுஅன்பழகனின் மனு முட்டுக்கட்டையாக வந்தது. பவானிசிங் வாதாடக்கூடாது என அன்பழகன் கூற பவானிசிங்தான் வேண்டும் என ஜெயலலிதா அடம்பிடிக்கிறார். தனக்கு எதிராக வாதாடும் வக்கீல் பலவீனமனவராக இருப்ப தையே ஜெயலலிதா விரும்புகிறார்.

அன்பழகனின் மனுவை விசாரிப்பதற்கு தீபக்மிஸ்ரா,ஆர்.கே.அகர்வால்,பிரபுல் சி.பந்த் ஆகிய மூவரடங்கிய  பெஞ்ச் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு அரச வழக்கறிஞருக்கு எதிராக திரும்பி உள்ளது.பவானிசிங் வாதாடியது சரியா தவறா என்ற என்ற தீர்ப்புக்காக  நீதிபதி குமாரசாமி காத்திருக்கிறார்