Showing posts with label அபுதாபி. Show all posts
Showing posts with label அபுதாபி. Show all posts

Monday, December 13, 2021

வெர்ஸ்டப்பென்னின் முதலாவது சம்பியன் கிண்ணம்

 அபுதாபியில் நடந்த பர்முலா 1 பந்தயத்தில்மெர்சிடஸ் அணியின் ஹமில்டனை பின்னுக்குத் தள்ளி ரெட்புல் அணியின் வெர்ஸ்டப்பென் சம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் தங்களது மின்னல் வேகத்தை காட்டுகிறார்கள். இதுவரை நடந்துள்ள 21 சுற்று முடிவில் நடப்பு சம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹமில்டன் (மெர்சிடஸ் அணி), நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) தலா 369.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

அபுதாபியில் நடந்த கடைசிப் போட்டியில் டாப்-10 இடத்திற்குள் வருபவர்களுக்கு மட்டுமே புள்ளி வழங்கப்படும். முதலாவது வந்தால் 25 புள்ளி, 2-வது வந்தால் 18 புள்ளி, 3-வது இடத்துக்கு 15 புள்ளி வீதம் வழங்கப்படும்.

இந்த நிலையில் இவர்களில் சம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் 22-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் ஓடுதளத்தில் நடந்தது.

 தகுதி சுற்றில் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்ததால்  ரேசில்  வெர்ஸ்டப்பென் கார் முதல்வரிசையில் இருந்து புறப்பட்டது. ஹமில்டனின் கார் 2-வது வரிசையில் இருந்து சீறியது. போட்டியின் ஆரம்பம் முதலே சீறி பாய்ந்தார் வெர்ஸ்டப்பென்.

இறுதியில் மெர்சிடஸ் அணியின் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி ரெட்புல் அணியின் வெர்ஸ்டப்பென் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இது அவரது முதல் பார்முலா1 சம்பியன் பட்டமாகும்.டச்சுக் கொடியின் கீழ் போட்டியிட்ட ஒரே எஃப்1 வெற்றியாளரான வெர்ஸ்டாப்பனை, பிரதமர் மார்க் ரூட்டே ட்விட்டரில் வாழ்த்தினார். இந்த வெற்றி "டச்சு விளையாட்டுக்கு ஒரு வரலாற்று நாள்" என்று அவர் கூறினார்.

இரண்டு போட்டியாளர்களும் நான்கு கண்டங்களில் 22 பந்தயங்களில் வீல்-டு-வீல் சென்று சம்பியன்ஷிப் தரவரிசையில் அபுதாபியை வந்தடைந்ததைக் கண்ட ஒரு பருவத்திற்கு இது பொருத்தமான முடிவாகும். 1974க்குப் பிறகு சீசன் இறுதிப் போட்டியில் போட்டியாளர்கள் சமமாக இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இருவரும் இணைந்து 18 வெற்றிகளை பெற்றனர், வெர்ஸ்டாப்பன் 10 முறை வென்றார் - F1 இல் அவரது முதல் ஆறு சீசன்களில் பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கையை சமன் செய்தார். வெர்ஸ்டாப்பன் இந்த ஆண்டு 1,211 சுற்றுகளில் F1-உயர்ந்த 652 சுற்றுகளை வழிநடத்தி 18 போடியம் முடித்தார்.

ஆனால் அவர் இந்த ஆண்டு ஹமில்டனுடன் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டியதற்காக வெர்ஸ்டாப்பன் எட்ஜ் ஓவர் என்று கூறி விமர்சிக்கப்பட்டார். இந்த சீசனில் இருவரும் மூன்று முறை விபத்துக்குள்ளானார்கள் மற்றும் சில்வர்ஸ்டோனில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து வெர்ஸ்டாப்பன் மதிப்பாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 

வெர்ஸ்டாப்பன் அனைத்து வார இறுதிகளிலும் பந்தயப் பொறுப்பாளர்களால் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக புகார் செய்தார், அவர் மற்ற ஓட்டுநர்களை விட உயர் தரத்தில் இருப்பதாக அவர் நம்பினார். இறுதிப் போட்டியில் பந்தயக் கட்டுப்பாடு எந்தப் பங்கையும் வகிக்கக் கூடாது என்று அவர் மீண்டும் கூறினார், ஆனால் மாசி செய்தபோது, தலைப்பைத் தீர்மானிக்க பந்தயத்தின் இறுதி ஒரு மடியில் அது வெர்ஸ்டாப்பனுக்குச் சாதகமாகச் சென்றது.

 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியபர்முலா 1 போட்டியில் அறிமுகனான வெர்ஸ்டாப்பன் 2016 ஆம் ஆண்டு ஸ்பெய்னில் நடந்த போட்டியில்  முதல்   ற் வெற்றியைப் பெற்றார். இப்போதுதான் முதலாவது சம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

Saturday, November 6, 2021

கோலியின் கப்டன் பதவிக்கு ஆபத்து


 

உலகக்கிண்ண ரி20 போட்டியின் பின்னர் கோலியிடமிருந்து கப்டன் பதவி பறிக்கப்ப‌டும் நிலை உருவாகியுள்ளது

உலகக்கிண்ண ரி20 போச்சியில் பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா மிக  மோசமாகத் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விகள் அனைத்துக்கும் கோலியின் மீது பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

ரி20 உலகக்  கிண்ணத்தொடருக்குப் பின்னர்  க‌ப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார்.  இந்த தொடர் முடிந்து அவர் அணியின் க‌ப்டன் பதவியை துறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 முதல் விளையாடிய இரண்டு போட்டிக ளிலும்  இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வீரர்களின் துடுப்பாட்ட  வரிசை, வீரர்களின் தேர்வு என அடுத்தடுத்து கோலி செய்த தவறே அதிகளவு சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது பிசிசிஐ அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. ஒருநாள்  அனி க‌ப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

 இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : இப்போது பிசிசிஐ விராட் கோலியின் செயல்பாடு மீது மகிழ்ச்சியாக இல்லை. அவரது கேப்டன்ஷிப் மீது அதிருப்தி நிலவுகிறது. ‍    இந்திய அணி இந்த ரி20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் போனால் நிச்சயம் விராட் கோலியிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான க‌ப்டன் பதவியும் பறிக்கப்படும் என்று தோன்றுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும் ஒருநாள், ரி20, டெஸ்ட் ஆகிய மூன்றுக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Friday, November 5, 2021

அபுதாபியில் விளையாடப்போவதாக நடால் அறிவிப்பு

அபுதாபியில் டிசம்பர் மாதம்  நடக்கும் 13வது முபதாலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடுவதை நடால் உறுதி செய்துள்ளார். அபுதாபியில் ஆராவது பட்டத்தை நடால் வெல்வார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

 ஸ்பானிய வீரர் காஸ்பர் ரூட் , டொமினிக் தீம் , டெனிஸ் ஷபோவலோவ்   ஆகியோருடன்  நடால் இணைகிறார். முபதாலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் ரசிகர் பட்டாளத்துடன் நடால் சிறந்த உறவைக் கொண்டுள்ளார், 2019 ஆம் ஆண்டின் மிகச் சமீபத்திய போட்டி  உட்பட ஐந்து முறை அபுதாபியில்   நடால்   வெற்றி பெற்றுள்ளார்.

அபுதாபி எனக்கு ஒரு சிறப்பு இடம், நான் பல முறை இருந்த இடம் மற்றும் பல முறை எனது சீசன்களை நான் தொடங்கிய இடம்" என்று நடால் கூறினார்,

போட்டியின் உரிமையாளர்களான பிளாஸ் என்ரட்ரைமென்ஸின் நிர்வாக அதிகாரி ஜான் லிக்ரிஷ் கூறுகையில்,

 "ரபேல் நடால் ,   எங்கள் சாம்பியன்ஷிப்பில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் தன்னைத் தொடரத் தகுதியானவர் என்று அறிவித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அபுதாபியில் அவரது குறிப்பிடத்தக்க ஓட்டம்.bnbbbbb

"கடந்த 12 போட்டிகளில் இரண்டை மட்டுமே அவர் தவறவிட்டார் என்பது நிகழ்வின் அன்பான ஈர்ப்புக்கு சான்றாகும், மேலும் அபுதாபி முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பாளராக உள்ளது. நாங்கள் சிறந்ததை வழங்க முயற்சிக்கிறோம் மற்றும் சாம்பியனைப் பாதுகாப்பது அதை உறுதிப்படுத்துகிறது. இப்போது எங்களிடம் ஒரு நட்சத்திர வரிசை உள்ளது, மேலும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த அறிவிப்புகள் வரவுள்ளன, எனவே ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டுகளை இப்போதே வாங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Wednesday, October 20, 2021

ஐபிஎல் சம்பியனானது டோனியின் சென்னை

  துபாய் சர்வதேச கிரிக்கெற் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கட்டாவுக்கு எதிராக விளையாடிய  சென்னை 27 ஓட்டங்களால் வெற்றி பெற்று நான்காவது முறை சம்பியனாகியது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கட்டா அணித் தலைவர் இயன் மோகன் சென்னையைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். கிறிக்கெற்றில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. கொல்கட்டாவின் நாணயச் சுழற்சியின் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

சென்னைஅணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்களை  இழந்து 192 ஓட்டங்கள் எடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்த கொல்கட்டா 165 ஓட்டங்கள்  டுத்தது. 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி 4-வது முறையாக டோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்னைஅணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் - டூ பிளெசிஸ் கூட்டணி இந்த முறையும் சிஎஸ்கேவிற்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். பவர் ப்ளேவில் இந்த ஜோடி விக்கெற்றைப் பறிகொடுக்காமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

கொல்கத்தா பவர் ப்ளேயில் ஷகிப் அல் ஹசன், பெர்குசன், ஷிவம் மவி, வருண் சக்கரவர்த்தி என நான்கு   பந்து வீச்சாளர்களைப்   பயன்படுத்தியது. அதாவது இரண்டு சுழற்பந்து, இரண்டு வேகப்பந்து என மாற்றி மாற்றி பயன்படுத்தியது. ஆனால் எதிலுமே சென்னை வீரர்கள் சிக்கவில்லைப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களை கடந்தது சென்னை.    61 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சென்னையின் முதல் விக்கெற் வீழ்ந்தது.  சென்னை அணி 6வது முறையாக பவர்பிளேயில் 50 ஓட்டங்கள்எடுத்தது.   சென்னை அணி பவர்பிளேயில் 50 ஓட்டங்கள் அடித்த அனைத்து போட்டிகளிலும்  அணி வெற்றி பெற்றுது. இது சென்னை அணி ரசிகர்ககும்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.


 சுனில் நரைன் பந்துவீச்சில்  32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார்.   ரொபின் உத்தப்பா 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 31 ஓட்டங்கள் விளாசிய நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் தேவையில்லாத ரிவர்ஸ்ஷிப் விளையாடி எல்பிடபுள்யு முறையில்   வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் டூ பிளெசிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வந்தார். சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்த டு ப்ளெசிஸ் கொல்கத்தாவை கலங்கடித்தார்.

நான்காவது வீரராக களமிறங்கிய மொயின் அலியும் தன் பங்கிற்கு அதிரடி காட்ட சென்னையின் ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்ததுசென்னைஅணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்களை  இழந்து 192 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர் டூ பிளெசிஸ் 59 பந்துகளில் 86 ஓட்டங்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 37 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை  களத்தில் இருந்தார். ஷிவம் மாவியின் கட்டுக்கோப்பான 20 ஆவது  ஓவரால்  சென்னை 200 ஓட்டங்களை  எட்ட முடியமல் போனது. முதல் 20 ஓவர்கலும் சென்னையின் கட்டுப்பாடிலேயே இருந்தன.

  193 ஓட்டங்ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியதுதொடக்க வீரர்களானசுப்மன் கில்,வெங்கடேஷ் ஐயர்  ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தினார்கள். பவர் ப்ளேவில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா  கொடுத்த நெருக்கடி கொடுத்ததால் போட்டியில் விறுவிறுப்பு அதிகரித்தது.

கொல்கத்தா 91 ஓட்டங்கள் எடுத்த போது  முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து சர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திரும்பினார். அதே ஓவரில் நிதிஷ் ராணா ஏதும் எடுக்காமல் பிடி கொடுத்து வெளியேறினார். அப்போது ஆரம்பித்த சறுக்கல் கொல்கத்தா அணிக்கு இறுதி வரை தொடர்ந்ததுஅடுத்து களம் இறங்கிய  வீரர்கள் அனைஅவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற  வெற்றித் தேவதை  சென்னையின் பக்கம்  போய் கம்பீரமாக உட்கார்ந்து விட்டார்.

கொல்கத்தா அணியின் 4-வது வீரராக சுனில் நரைன் இறக்கப்பட்டார். நரைன் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு ஓடங்களுடன் வெளியேறினார்விக்கெற்கள் வீழ்வதைப் ஒருட்படுத்தாது  நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிய சுப்மன் கில்லும் அரைசதம் அடித்த கையோடு தீபக் சஹர் பந்துவீச்சில் வெளியேறினார். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் சுப்மான் கில் 27 ஓட்டங்களில், ஜடேஜாவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது டீப் மிட்விக்கெட் திசையில் அம்பத்தி ராயுடுவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.. ஆனால் பந்து அந்தரத்தில் பறந்த ஸ்பைடர் கமராவின் வயரில் பட்டு அதன் பிறகே கீழே இறங்கியது தெரியவந்ததால் விதிமுறைப்படி அந்த பந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. சுப்மான்கில் மீண்டு துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்டார்.இந்த முடிவால் டோனி கடும் அதிருப்திக்குள்ளானார். தொடர்ந்து ஆடிய சுப்மான் கில் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.


 

தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார். இதனால் போட்டியில் பரபரப்பு கூடும் என்ற நினைத்த கையோடு 9 ஓட்டங்களுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஷகிப் அல் ஹசன் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ராகுல் திரபாதி 2 ஓட்டங்களிலும் ப்டன் பொறுப்பில் மட்டும் இருந்து வந்த மோர்கன் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

 

இதனால் கொல்கத்தா அணி 20  ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்கல் பரிதாப நிலைக்கு சென்றது.  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்த கொல்கட்டா 165 ஓட்டங்கள்  டுத்தது. 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி 4-வது முறையாக டோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.