Sunday, July 26, 2009


தமிழக சட்டமன்ற‌ இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற ஜெயலலிதாவின் முடிவு கூட்டணித் தலைவர்களையும் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கம்பம், தொண்டாமுத்தூர், பாகூர் இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த திகதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் திருவிழாவுக்காக அரசியல் கட்சிகள் ஆயத்தம் செய்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் முடிவு வாக்காளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
தொண்டாமுத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மு. கண்ணப்பன், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இவர்கள் இருவரும் தமது பதவியைத் துறந்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
இளையான்குடியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தனது பதவியை இராஜிநாமõ செய்து விட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தம்பித்துரை, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனது பதவியை இராஜினாமா செய்தார். ஸ்ரீ வைகுண்ட சட்டமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் மரணமானார்.
ஸ்ரீ வைகுண்டம் தொகுதியைத் தவிர ஏனைய நான்கு தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துஷ்பிரயோகம், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்களிக்கச் செய்வது, மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஆளும் கட்சி முறைகேடு செய்வது ஆகிய காரணங்களினால் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா கூறியதை அப்படியே ஒப்புவித்து இந்த இடைத் தேர்தலை பகிஷ்கரிக்கப் போவதாக வைகோ கூறியுள்ளார். தொண்டா முத்தூர், கம்பம் ஆகிய இரண்டு தொகுதிகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத் தேடித் தரக் கூடிய தொகுதிகள். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த இரண்டு தொகுதிகளிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோல்வியடைந்த ராமதாஸுக்கு ஜெயலலிதாவின் தேர்தல் புறக்கணிப்பு தனது கட்சியைப் பலப்படுத்தும் வரை அவர் தேர்தல் பற்றி சிந்திக்க மாட்டார்.
தமிழக சட்டமன்ற‌ இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து விலகி உள்ளார் ஜெயலலிதா.
இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற முடியாத வெறுப்பை ஜெயலலிதா வெளிக்காட்டி உள்ளார்.
முதல்வர் கருணாநிதி தலைமையிலான கூட்டணிக் கட்சியை தன்னால் வெற்றிகொள்ள முடியாது என்பதை உணர்ந்த ஜெயலலிதா முதல்வர் கருணாநிதியை எதிர்க்கும் துணிவு விஜயகாந்துக்குத் தான் உள்ளது என்று மறை முகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக தனது கட்சியை வளர்ப்பதற்கு விஜயகாந்த் கடுமையாக உழைத்து வருகிறார். பந்தயத்துக்கு முன்பே போட்டியிலிருந்து விலகிய ஜெயலலிதா விஜயகாந்துக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
யாருடனும் கூட்டணி சேராது தனித்து நின்று தனது பலத்தைக் காட்டும் விஜயகாந்தின் வளர்ச்சியால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் பாதிப்படைந்துள்ளது. தமிழக இடைத் தேர்தலிலும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் ஜெயலலிதாவைப் பற்றியுள்ளது.
இடைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறிய ஜெயலலிதா, ஐந்து தொகுதிகளிலும் உள்ள தனது கட்சித் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறவில்லை. இடைத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதியில் உள்ள வாக்காளர்களை ஜெயலலிதா நட்டாற்றில் விட்டுள்ளார். ஜெயலலிதாவின் இந்த முடிவு திராவிட முனனேற்றக் கழகத்துக்கு சாதகமாக உள்ளது.
திருமங்கலம் இடைத் தேர்தலிலும் நாடாளுமன்றப் பொதத் தேர்தலிலும் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. பலமான எதிர்க்கட்சி இல்லையென்றால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை.
இடைத் தேர்தலின் மூலம் முதல்வர் கருணாநிதியும் விஜயகாந்தும் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. முதல்வர் கருணாநிதியா, விஜயகாந்தா என்ற போட்டிக்கு ஜெயலலிதா வழிவகுத்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வெளிப்படையாகக் கூறவில்லை. முதல்வர், தமிழக அரசுக்கு எதிரானவர்கள் அனைவரும் விஜயகாந்தின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றே ஜெயலலிதா விரும்புகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை தட்டிப் பறித்த விஜயகாந்தின் கட்சி வெற்றி பெறுவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் முழு மூச்சாகச் செயற்படுவதும் சந்தேகமானதே.
தமிழக முதல்வர் கருணாநிதியை வீழ்த்துவதற்கு விஜயகாந்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார் ஜெயலலிதா. விஜயகாந்தின் இந்த வளர்ச்சி ஜெயலலிதாவுக்கு தான் ஆபத்தானதாக முடியும்.
தமிழக அரசின் தவறான செயற்பாடுகளை எதிர்க்க திராணியற்ற ஜெயலலிதாவின் முடிவினால் விஜயகாந்தின் செல்வாக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
விஜயகாந்த், ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், இடதுசாரி தலைவர்கள் ஆகியோரை எதிர்த்து களமிறங்க வேண்டிய முதல்வர் கருணாநிதி விஜயகாந்தை மட்டும் எதிர்க்கும் இலகுவான சூழ்நிலையை ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ளார்.
தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள். பாகூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. இளையான்குடி தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியதாயினும் அங்கு வெற்றி பெற்ற ராஜ கண்ணப்பன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகி விட்டார். வெற்றி வாய்ப்பு உள்ள நான்கு தொகுதிகளையும் தாரைவார்த்து விட்டார் ஜெயலலிதா.
மிக நீண்ட காலத்தின் பின்னர் தமிழக அரசியலில் இரு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உண்மையான ராஜதந்திரி யார் என்பதை தமிழக இடைத் தேர்தல் முடிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வர்மா
வீரகேசரி 26/07/09

Friday, July 24, 2009

சரிந்தது இசை இமயம்



கர்நாடக இசை அரங்கிலும் தமிழ்த்திரை உலகிலும் 65 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த டி. கே. பட்டம்மாள் தனது 90 ஆவது வயதில் காலமானார். தோடி ராகத்துக்கு ராஜரத்தினம்பிள்ளை போல் பைரவி ராகத்துக்கு டி. கே. பட்டம்மாள் என்பது இசை உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
10 வயதுப் பாலகியாக இருந்த போது மெட்ராஸ் கோப்பரேசன் ரேடியோ (அகில இந்திய வானொலி) யில் பாடி சங்கீத ரசிகைகளினதும் இசை மேதைகளினதும் பாராட்டைப் பெற்றார். 1932 ஆம் ஆண்டு 13 ஆவது வயதில் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் ரசிகர்கள் முன்னிலையில் பாடி தனது இசைப் பயணத்தை மெருகூட்டினார்.
1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி காஞ்சிபுரத்தில் தாமல் கிருஷ்ண சாமி தீட்சிதருக்கும் காந்திமதிக்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய இயற் பெயர் அலமேலு. தகப்பன் செல்லமாக பட்டு என்று அழைத்ததே காலப் போக்கில் பட்டம்மாளாக மாறியது. சகோதரர்களான டி. கே. ரங்கநாதன், டி. கே. ஜெயராமன் ஆகியோரைப் போன்று சிறு வயதிலேயே இசையில் அதிக ஆர்வம் காட்டினார். இசைத் துறையில் புகழ் பெற்று விளங்கிய டி. கே. பட்டம்மாளை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாபநாசம் சிவன். கல்கி எழுதிய பிரபல நாவலான தியாகபூமி திரைப்படமான போது அப்படத்தில் டி. கே. பட்டம்மாள் பாடுவதற்கு பாபநாசம் சிவன் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் பின் வெளியான நாம் இருவர் உட்பட சில படங்களில் சுமார் 100 பாடல்கள் பாடினார். தேச பக்திப் பாடல்களையும், பாரதியார் பாடல்களையும் இசைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் அதிகளவில் பாடினார். இவர் பாடிய பாரதியார் பாடல்களும் தேசபக்திப் பாடல்களும் அடங்கிய இசைத் தட்டுக்கள் மிக அதிக அளவில் விற்பனையாகி சாதனை புரிந்தன.
டி. கே. பட்டம்மாள், எம். எஸ். சுப்புலக்ஷ்மி, எம். எல். வசந்தகுமாரி ஆகிய மூவரும் கர்நாடக இசை மேடைகளிலும் திரைப்படங்களிலும் கொடிகட்டிப் பறந்த முப்பெரும் தேவியராக விளங்கினர். அந்தக் காலத்து ஆண் பாடகர்களுக்கு இவர்கள் மூவரும் சவாலாக விளங்கினர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது டி. கே. பட்டம்மாள் பாடிய தேச பக்திப் பாடல்களும் பாரதி பாடல்களும் சுதந்திர வேட்கைக்கு உயிரூட்டின. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டன் முடிவு செய்து நாள் குறித்து விட்டது. விடிந்தால் நமது நாடு சுதந்திரமடைந்து விடும் என்ற மகிழ்ச்சியில் இந்திய மக்கள் இருந்த வேளை 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி இரவு அகில இந்திய வானொலியில் டி. கே. பட்டம்மாள் பாடிய ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாரதியாரின் தேச பக்திப் பாடல் நேரடியாக ஒலிபரப்பானது. சுதந்திரக் காற்றை சுவாசிக்க தயாராக இருந்தவர்கள் டி. கே. பட்டம்மாளின் பாடலால் பேருவகை எய்தினர்.
திருநெல்வேலியில் நடைபெற்ற இசைக் கச்சேரி ஒன்றில் பாரதியார் படல்களை டி. கே. பட்டம்மாள் பாடிய போது முன்வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதியாரின் மனைவி செல்லம்மா உணர்ச்சிவசப்பட்டு டி. கே. பட்டம்மாளைக் கட்டிப் பிடித்து கண்ணீர்மல்க பாராட்டினார்.
இசைத் துறையில் டி. கே. பட்டம்மாள் ஆற்றிய சேவைக்காக 60 க்கு மேற்பட்ட விருதுகளும் பட்டங்களும் பெற்றார். பத்மபூஷன், பத்ம விபூஷன், சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி, கான சரஸ்வதி, கலை மாமணி ஆகியன குறிப்பிடத்தக்கன. திருப்பதி தேவஸ்தானம் இவரை தனது அஸ்தானவதி வானாக பெருமைப்படுத்தியது.
பட்டம்மாளின் கணவன் பெயர் ஈஸ்வரன். இவருக்கு 95 வயதாகிறது. இவர்களுக்கு லட்சுமணன், சிவகுமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சிவகுமாரின் மகள்தான் பிரபல இசைப் பாடகி நித்திய ஸ்ரீ மகாதேவன். இவரும் கர்நாடக இசையில் பாண்டித்தியம் பெற்று பின்னர் சினிமாவில் நுழைந்தவர். டி. கே. பட்டம்மாளும் நித்திய ஸ்ரீ மகாதேவனும் பாடிய பாரதிப் பாடல்கள் அடங்கிய அல்பம் பரபரப்பாக விற்பனையாகின.
தேசபக்திப் பாடல்களும் பாரதி பாடல்களும் பட்டம் மாளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
ரமணி
மெட்ரோநியூஸ்
24/07/09

Thursday, July 23, 2009

திரைக்குவராதசங்கதி 13

தமிழ்த் திரை உலகில் மிகச் சிறந்த கதாசிரியர்களில்காரைக்குடி நாராயணனும் ஒருவர். அவர் கதை வசனம் எழுதிய படங்கள் எல்லாம் வெற்றி பெற்ற காலமது. திரைப்படத்துறையில் ஏதாவது சாதித்து முன்னேற வேண்டும் என்ற ஆசை காரைக்குடி நாராயணனின்மனதிலும் உதித்தது. அதன் காரணமாக திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க விரும்பினார்.அச்சாணி என்ற பெயரில் திரைப்படம் ஒன்றைத்தயாரிக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கினார்.காரைக்குடி நாராயணன் இளைய ராஜாவின் இசை
யில் சொக்கிப் போன காரைக்குடி நாராயணன். அவரையே தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்.அச்சானி படப்பூஜையிலன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அச்சாணி படத்தின்பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். பிரசாத்
ஸ்ரூடியோவில் அச்சாணி படத்துக்கான பூஜையும் பாடல்ஒலிப்பதிவும் நடைபெறும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அழைப்பிதழ் கிடைத்தவர்கள் காலை7 மணிக்கு பிரசாத், ஸ்ரூடியோவுக்கு சென்றனர். அங்கே பாடல் ஒலிப்பதிவுக்கான ஆயத்தம் நடைபெற்றதுபிரசாத் ஸ்ரூடியோவுக்கு இளையராஜா சென்றபோது அங்கே இருந்த வாத்தியக் குழுவினர் தனது
குழுவினர் அல்ல என்பதை அறிந்தார். அங்கிருந்தவாத்தியக் குழுவினர் கன்னட இசையமைப்பாளரானஉபேந்திராவின் குழுவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.பிரசாத் ஸ்டூடியோவின்கவுண்ட் எஞ்ஜினியர் எஸ்.பி. இராமநாதன்இரண்டு குழுவின
ருக்கும் காலை 7மணிக்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்தார். தெரியாமல் செய்தாரா அல்லது ஒருகுழுவின் ஒலிப்பதிவு முடிந்ததும் அடுத்த குழுஒலிப்பதிவை செய்யும் என்ற என்னத்தில் இரண்டுகுழுக்களுக்கு நேரத்தை கொடுத்தாரா தெரியவில்லை.
கன்னட இசையமைப்பாளர் உபேந்திரா எதனையும்கண்டுகொள்ளாமல் ஒத்திகையை ஆரம்பித்தார்.இளையராஜாவோ இன்று எப்படியும் ஒலிப்பதிவைமுடித்து விட வேண்டும் என்று நினைத்து கே.ஜே.ஜேசுதாஸின் தரங்கணி ஸ்டூடியோவைக் கேட்கும்படி
கூறினார். அங்கே ஒலிப்பதிவு செய்யலாம் என்றுதெரிந்ததும் இளையராஜாவின் குழு தரங்கணிஸ்ரூடியோவுக்குச் சென்றது.
பிரசாத் ஸ்ரூடியோவில் நடக்க வேண்டிய அச்சாணிபடப் பூஜை தரங்கிணி ஸ்ரூடியோவில் கோலாகலமாக நடந்தது. ஒலிப்பதிவு நடைபெற ஆயத்தமானபோது ஒலிப்பதிவு மெஷின் பழுதாகிவிட்டது. நேரம்ஒரு மணியை நெருங்கிவிட்டது.
ஒலிப்பதிவு மிஷன் திருத்தப்படவில்லை.இதற்கிடையில் உபேந்திராவின் ஒலிப்பதிவு முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர் என்ற தகவல் கிடைத்தது.இளையராஜாவும் அவரது குழுவினரும் இரண்டுமணிபோல் மீண்டும் பிரசாத் ஸ்ரூடியோவுக்குச் சென்றனர்.
இளையராஜாவின் இசைக்குழு தயாராகியதும் ஒருமுறை ஒத்திகை பார்த்தனர். எல்லாம் சரியானபின்னர் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுமாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்என்ற அற்புதமான பாடல் அந்த ஒலிப்பதிவு
கூடத்தை நிரப்பியது. இரண்டு டேக் எடுத்தும்இளையராஜாவுக்கு திருப்தி வரவில்லை. அவ்வப்போது கற்பனையில் வந்த சங்கதிகளைஜானகியிடம் கூறி பாட்டுக்கு மெருகேற்றினார் இளையராஜா. அடுத்த டேக் மிக அற்புதமாக வந்து கொண்டிருந்தது. மூன்றாவதுபின்னணி இசை ஒலிக்க வேண்டிய தருணம்திடீரென எங்கும் நிசப்தமானது யாரும் வாத்தியத்தை இசைக்கவில்லை.மூன்றாவது பின்னணி இசைக்குசைகைகாட்ட வேண்டிய கோவர்த்தன் சைகை காட்டாததனால் தான் யாரும் பின்னணிஇசையைத் தொடரவில்லை என்பதை இளையராஜாஉணர்ந்து கொண்டார். கோவர்த்தன் இளையராஜாவை
விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்.ஜானகி உணர்ச்சிவசப்பட்டு பாடியதால் தன்னைமறந்து விம்மினார். அதனால்தான் அவர் சைகை காட்டவில்லை.
இந்தப் படத்துக்கு நீங்கள் இசையமையக்கவில்லை என்றால் நான் படமெடுக்க மாட்டேன் இந்தப் படத்தைஇப்படியே விட்டுவிடுவேன் என்றுயாராவது கூறினால் இளையராஜாவுக்குகெட்ட கோபம் வந்துவிடும். அப்படி யாராவது கூறினால்
ஒத்துக் கொள்ள மாட்டார்.நீங்கள் இசையமைக்கவில்லையென்றால் படத்தைத் தயாரிக்க மாட்டேன் என்று இசை ஞானியிடம் கூறிஅவர் க‌ண்டு கொள்ளாததால் வேறுஇசையமைப்பாளரை ஒப்பந்தம்செய்து வெளிவந்த படங்களில் கே.பாக்கியராஜின் ஒரு கை ஓசைபார்த்திபனின் புதிய பாதை, கே. பாலச்சந்திரின் உதவியாளரான அனந்தின் சிகரம் என்பன அடக்கம்.தீஸ்ரி மஞ்ஜில் என்ற படத்தை தமிழில் தயாரிப்பதற்கு உரிமை பெற்றசாரு சித்ரா சீனிவாசன் அப்படத்தைஇசைஞானிக்குப் போட்டுக் காட்டினா
ர். ஆர்.டி. பர்மனின் அற்புதமானஇசையில் உருவான பாடல்கள்அனைத்தும் பிரபலமானவை. அப்பாடல்கள் அனைத்தும் இசை
ஞானியின் மனதை விட்டு நீங்காதவை.அந்தப் படத்தின் பாடல்கள்போன்று தனக்கு வேண்டும் எனசாரு சித்ரா சீனிவாசன் கேட்டார்.சில பாடல்களுக்கு ஈடுஇணையில்லை. அதுபோன்று இசை அமைக்கமுயற்சிக்கக் கூடாது என்பதில் உறுதி
யாக இருக்கும் இசைஞானி இசையமைக்க மறுத்துவிட்டார்.இளையராஜாவின் இசையில் பாடுவதற்காக சென்றிருந்த டாக்டர்
கே.ஜே. ஜேசுதாஸுடன் ஒரு பெண்ணும் கூடச் சென்றிருந்தார். அந்தப்பெண்ணின் குரலைக் கேட்கும்படிடாக்டர் கே.ஜே. ஜேசுதாஸ், இசைஞானியிடம் கூறினார். அப்பெண்ணின்குரல் இசைஞானியைக் கவர்ந்தது.அடுத்த நாளே ஜென்சி என்ற அப்
பெண் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமானார். தேவராஜ், மோகன்இயக்கிய பூந்தளிர் என்ற படத்தில்""ஞான் ஞான் பாடணும்
ஊஞ்சல் ஆடணும்'' என்றமலையாளப் பாடலுடன்அறிமுகமான ஜென்சிஅதன் பின்னர் பிஸியானபாடகியாகிவிட்டார்.பாரதிராஜாவின் புதியவார்ப்பு என்ற படத்துக்குபூஜை போடுவதற்கு நாள்குறிக்கப்பட்டது. அன்றுபாடல் ஒன்று ஒலிப்பதிவுசெய்வதற்குரிய சகலஆயத்தங்களையும் இசைஞானி செய்திருந்தார்.அதற்குரிய பாடலையும்கவியரசு கண்ணதாசன் எழுதிக் கொடுத்துவிட்டார்.இரவு திடீரென பாரதிராஜா இளையராஜாவுக்கு போன் பண்ணி நாளைக்குவேறு ஒரு பாடல் ஒலிப்ப
திவு செய்ய வேண்டும் கவிஞரிடம்நான் கூறுகிறேன் எனக் கூறினார்.மறுநாள் காலை ஜேசுதாஸின்தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7மணிக்கு இசைஞானி தனது குழுவுடன்ஒலிப்பதிவுக்குத் தயாராக ஒத்திகைபார்த்தார். 10 மணிபோல் கவிரசு வந்ததும் டூயட் பாட்டுத்தானேஎனக்கேட்டார். அதற்குஆமாண்ணே என இசைஞானி பதிலளித்தார்.டியூனைப் பாடும்படி இசைஞானியிடம் கவியரசு கூறினார். இசைஞானி டியூனைப் பாடினார். இன்னொரு முறை பாடும்படி கூறினார்.இசைஞானி மீண்டும்பாடி க்காட்டினார்.வான் மேகங்களே வாழ்த்துக்கள்!பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்ற வார்த்தை
கள் கவிஞரின் வாயிலிருந்துவெளிப்பட்டன.இசைஞானி அந்த வரிகளைப் பாடிகண்டு கொண்டேன் ராமனை எனமுடித்ததும் கவிஞர் அடுத்த வரியைஅழகாகக் கூறினார். இசையிலிருந்துஇம்மியும் பிசகாது வெளிவந்தவார்த்தைகளைக் கேட்டதும் கூடி இ
ருந்தவர்கள் கை தட்டி மகிழ்ந்தனர்.20 நிமிடங்களில் மிகவும் அருமையான பாடலை கவியரசு கூறினார்.

Sunday, July 19, 2009

எதிர்க்கட்சியை அடக்க பலிக்கடாவானதுரைமுருகன்


தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவேளையில் துரை முருகனிடம் இருந்த பொதுப் பணித் துறையை முதல்வர் கருணாநிதி பறித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளையும் களங்கங்களையும் துடைத்தெறிந்து பிரச்சினைகள் எதுவுமற்ற கட்சியை மகன் ஸ்டாலினின் கையில் ஒப்படைக்க விரும்புகிறார் முதல்வர் கருணாநிதி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரை முருகனிடம் இருந்து அமைச்சுப் பதவியை முதல்வர் பறித்தெடுப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.
மிக முக்கிய அமைச்சான பொதுப்பணித் துறை, சட்டம் ஆகிய இரு அமைச்சுப் பொறுப்புக்களையும் அலங்கரித்த துரைமுருகன் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
தமிழக அரசுக்கும் பெரும் தலைவலியைக் கொடுக்கும் மணல் கொள்ளை, மணல் கடத்தல் பாலத்தின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டுவதற்கு எடுத்து வரும் துரித முயற்சி ஆகியனவே துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறை கைமாறியதற்கு பிரதான காரணமாகும்.
1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது கலைஞர் கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி அறிஞர் அண்ணாவுக்கு பின்னர் தமிழகத்தின் முதல்வரானார்.
பொதுப்பணித் துறையை மகன் ஸ்டாலினுக்குக் கொடுக்க முதல்வர் விரும்பிய போது குறுக்கே நின்று அதனை துரைமுருகன் பெற்றுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட சபைக்குத் தெரிவானார் துரைமுருகன். முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். முதல்வரின் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகுபவர். துரைமுருகன் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போது கண்டும் காணாதது போல் இருந்த முதல்வர் கருணாநிதி எடுத்த இந்த அதிரடி முடிவு கழகத்தினுள் இருக்கும் மூத்த அரசியல்வாதிகளையும் யோசிக்கத் தூண்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆற்றுப்படுக்கைகளில் மணல் அகழ்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. அரசாங்கம் அனுமதி வழங்காத இடங்களில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுகிறது. குறைந்த விலைக்கு வாங்கப்படும் இந்த மணல் கொள்ளை விலையில் அயல் மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இந்த மணல் கொள்ளை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்கள். மணல் திருட்டு பற்றி சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் ஆதாரங்களை அள்ளி வீசினர்.
நிலைமை கட்டுமீறிப் போவதை உணர்ந்த முதல்வர் கருணாநிதி தனது சகாக்களை நம்பாது உளவுத்துறை மூலம் உண்மையான தகவல்களைப் பெற்றுக் கொண்டார்.
பொதுப்பணித் துறையின் கீழ் வரும் அபிவிருத்திப் பணிகளின் ஒப்பந்தங்கள் அனைத்தும் துரைமுருகனின் உறவினர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களைக் கணக்கில் எடுக்காது கர்நாடகத்தில் உள்ள தனது உறவினர்களைக் கவனித்ததனால் அமைச்சுப் பதவியை இழந்துள்ளார் துரைமுருகன்.
துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டதற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு எதுவும் வெளிவரவில்லை. துரைமுருகனின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே அனைவரும் கருதுகின்றனர். துரைமுருகனுக்கு ஏற்பட்ட நிலைமையினால் ஏனைய அமைச்சர்கள் சிலர் கதிகலங்கிப் போயுள்ளனர்.
துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித் துறை அமைச்சைப் பறித்ததனால் எதிர்க்கட்சிகளின் வாய் அடக்கப்பட்டுள்ள அதேவேளை அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
துரைமுருகனிடமிருந்து அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டது முதல்வர் கருணாநிதியின் தனிப்பட்ட முடிவு. தமிழக அரசுக்கு களங்கம் விளைவிப்பவர்களின் மீது முதல்வர் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு ஏகமனதாக அங்கீகரிக்கும். ஆற்காடு வீரõசாமி, துரைமுருகன் ஆகியோர் மீது முதல்வர் கருணாநிதி எடுத்திருக்கும் நடவடிக்கை கட்சியை வலுப்படுத்தவும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரானவர்களை ஓரம்கட்டவும் உதவுகிறது என்ற கருத்து உள்ளது.
துணை முதல்வர் ஸ்டாலின் முதல்வராக அரியணை ஏறும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எதிர்ப்பு எழக் கூடாது என்பதிலும் முதல்வர் கருணாநிதி உறுதியாக உள்ளார்.
இதேபோன்ற அதிரடி நடவடிக்கையை கடந்த ஆட்சிக் காலத்தின் போது முதல்வர் கருணாநிதி எடுத்திருந்தால் சிறுபான்மை அரசு என்ற விமர்சனம் வெளிவந்திருக்காது. துணை முதல்வர் ஸ்டாலினின் வளர்ச்சிக்காக அவருக்கு எதிர்ப்புத்தரக் கூடிய சக்திகள் ஓரங்கட்டப்படுகிறது.
வர்மா
வீரகேசரிவாரவெளீயீடு 19/07/2009

Saturday, July 18, 2009

டெஸ்ட் போட்டியிலிருந்துஓய்வு பெறுகிறார் பிளின்டொப்




இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரரான அன்ரூ பிளின்டொப் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தது இங்கிலாந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணியில் திறமையான பல வீரர்கள் இருந்த போதும் தொடர் வெற்றிகள் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அவ்வப்போது பல வீரர்கள் பங்களிப்புச் செய்தனர். 1998ஆம் ஆண்டு பிளின்டொப் அறிமுகமாகிய போது இயன் பொதம் மீண்டும் வந்து விட்டார் என்று இங்கிலாந்து ரசிகர்கள் குதூகலித்தனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போன்றே பிளின் டொப்பின் விளையாட்டும் மிகவும் சிறப்பாக இருந்தது.
சகலதுறை வீரராக எதிர் அணிகளை கலங்கடித்த பிளின் டொப்புக்கு அவரது உடல் நிலையே எதிரியாக மாறியது. காயம் காரணமாக அடிக்கடி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார் பிளின்டொப். கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் காயத்தினால் அவர் விளையாடவில்லை. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 48 டெஸ்ட் போட்டிகளில் 13 போட்டிகளில் மட்டும் பிளின்டொப் விளையாடினார். காயம் காரணமாக 25 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரை 18 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து கைப்பற்றுவதற்கு பிளின்டொப் பிரதான காரணியாக இருந்தார். பிளின்டொப்பின் சிறந்த ஆட்டத்தின் காரணமாக 2005ஆம் ஆண்டு ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருதை தென்னாபிரிக்க வீரர் கலிஸுடன் பங்கிட்டுக் கொண்டார். அதே ஆண்டு பி.பி.சி. இவரை சிறந்த வீரராகத் தெரிவு செய்து கௌரவித்தது.
சிறந்த விளையாட்டு வீரரான இவர் சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கினார்.
2002 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மும்பையில் வெற்றி பெற்ற பின்னர் சட்டையைக் சுழற்றி சுழற்றி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2002 ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவிடம் தோல்வி அடைந்ததும் சட்டையை கழற்றி பழிக்கு பழிவாங்கினார் கங்குலி. உதைபந்தாட்ட போட்டி முடிந்ததும் வீரர்கள் தமது சட்டையை மாற்றுவது சகஜம். கிரிக்கெட்டில் அப்படி ஒரு நடைமுறை இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் துணைத் தலைவராக பிளின்டொப் நியமிக்கப்பட்டார். அப்போது இங்கிலாந்து வீரர்கள் போதையில் படகுச் சவாரி செய்த போது படகு கவிழ்ந்தது. இதனால் அவரது துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிளின் டொப் ஐந்து சதம், 25 அரைச் சதம் உட்பட 3708 ஓட்டங்களை எடுத்துள்ளார். 219 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 141 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிளின்டொப் 3394 ஓட்டங்கள் அடித்து 169 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1999: தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதத்தில் காயம். இதனால் தொடரின் பாதியில் நாடு திரும்பினார்.
2000: பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் முதுகுப் பகுதியில் காயம்.
2002: குடலிறக்கம் காரணமாக "சத்திரசிகிச்சை'.
2003: தோள்பட்டை காயம் காரணமாக பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்.
2005: இடது கணுக்காலில் முதல் "சத்திரசிகிச்சை'.
2006: இடது கணுக்காலில் "சத்திரசிகிச்சை' செய்த இடத்தில் மீண்டும் பிரச்சினை. இதனால் இரண்டாவது முறையாக அதே இடத்தில் "ஆப்பரேஷன்'.
2007: கணுக்காலில் மீண்டும் வலி. பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகல். அடுத்தடுத்து இரண்டு முறை கணுக்காலில் "சத்திரசிகிச்சை'.
2008: முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு. நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகல்.
2009: இடுப்புப் பகுதியில் காயம். மேற்கிந்திய தீவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து விலகல்.
2009: ஆஷஸ் தொடரில் முழங்கால் காயம்.

ரமணி
மெட்ரோநியூஸ்
17/07/09

Wednesday, July 15, 2009

சுவாரஸ்ய நன்றிகள்



பொழுதுபோக்கிற்காக வலையில் எழுதும் எனக்கு சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது வழங்கிய நண்பர் வந்தியத்தேவனுக்கு நன்றிகள். ஏனைய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

விருது வாங்குவதும் மகிழ்ச்சியான விடயம் விருது கொடுப்பதும் மகிழ்ச்சியான விடயம். இப்போது விருது வாங்கியுள்ளேன். பின்னர் என் அறுசுவை விருதை சிறந்தவர்களுக்கு கொடுக்கின்றேன்.

Monday, July 13, 2009

தி.மு.க.வுக்குள் வெடிக்கிறது பூசல்தொடர்கிறது ஸ்டாலினின் ஆதிக்கம்



திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் எழுந்த பூசல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு வெளிப்படுகையில் அமைச்சர் ஆற்காடு வீரõசாமி பற்றிய செய்தி பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.
பொருளாளர், துணை முதல்வர் என்று ஸ்டாலினின் தலையில் சுமை ஏறிய வேளையில் அமைச்சர் ஆற்காடு வீரõசாமியின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. முதல்வரின் நிழல் போல் செயற்பட்டு வந்த அமைச்சர் ஆற்காடு வீரõசாமி அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக செய்தி பரவியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிய புயல் எழுந்துள்ளது.
முக்கிய பிரச்சினைகள் பற்றிய கேள்வி எழும் போதெல்லாம் ஆற்காட்டாரிடம் கேளுங்கள் எனக் கூறிய ஸ்டாலின், துணை முதல்வரானதும் சகல பிரச்சினைகளுக்கும் தானே முடிவெடுக்கிறார். ஸ்டாலினின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களில் ஆற்காடு வீராசாமியும் ஒருவரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முதல்வர் கருணாநிதி தீர்வு காணும் போது முதல்வருக்கு அருகே அமர்ந்திருப்பவர் ஆற்காடு வீரõசாமி. அப்பேற்பட்ட ஆற்காடு வீரõசாமி மீது தற்போது சந்தேகக் கோடு வீழ்ந்துள்ளது.
தேர்தல் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மின்வெட்டை அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரான ஆற்காடு வீராசாமி உரிய முறையில் தீர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மின்வெட்டுக் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி பாதிக்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளவர்கள் நினைத்தார்கள்.
தேர்தலுக்கு முதல் நாள் மின் தடை ஏற்பட்டது. தமிழக அரசுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது. கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
அழகிரிக்கும் தயாநிதிமாறன் குடும்பத்துக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையில் அமைச்சர் ஆற்காடு வீரõசாமி அழகிரியின் பக்கம் சாய்ந்ததாக தெரிய வருகிறது. இரண்டு குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்பிய வேளையில் ஆற்காடு வீராசாமி தயாநிதி மாறன் குடும்பத்துக்கு எதிராக செயற்பட்டார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தயாநிதி மாறனை ஆதரித்து வாக்கு கேட்பதற்காக ஆற்காடு வீராசாமி முழுமனதுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தயாநிதி மாறனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த குறையில் உடல் நிலையை காரணம் காட்டி இடையில் ஒதுங்கினார். தயாநிதி மாறனை எதிர்த்து எஸ்.எஸ்.சந்திரனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக அறிவித்தது. அப்போது தயாநிதி மாறனின் வெற்றி உறுதி என்று கழகக் கண்மணிகள் உற்சாகத்துடன் இருந்தனர்.
களநிலைவரம் எதிராக இருப்பதை அறிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாநிதி மாறனை எதிர்த்துப் போட்டியிட முஹம்மது அலி ஜின்னாவை களத்தில் நிறுத்தியது.
தயாநிதி மாறன் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய சென்னைத் தொகுதியிலேயே ஆற்காடு வீரõசாமியின் அண்ணா நகர் தொகுதி உள்ளது. அண்ணா நகர் சட்ட மன்றத் தொகுதியில் தயாநிதி மாறனை விட முஹம்மது அலி ஜின்னா 1900 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.
கழகத்தின் தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களை எடுக்கப் போகிறேன் என்று தமிழக முதல்வர் பகிரங்கமாக அறிவித்த பின்னர் ஆற்காடு வீரசாமிக்கு எதிராக திரும்பி இருக்கும் இந்தக் குற்றச்சாட்டு மற்றவர்களையும் கதி கலங்க வைத்துள்ளது.
முதல்வரின் நிழலான ஆற்காடு வீராசாமிக்கே இந்த நிலை என்றால் எமது நிலை எப்படி இருக்கும்? என்று ஏனையோர் கலக்கத்தில் உள்ளனர்.
கழகத்தில் தனக்கு எதிராகக் கிளம்பி இருக்கும் பூசலினால் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிய ஆற்காடு வீரõசாமியை சிலர் சமாதானப்படுத்தி உள்ளனர்.
அரசியலில் உள்ள முதியவர்கள் வழிவிட்டு இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் கருணாநிதியின் மனதில் உள்ளது. அதன் வெளிப்பாடாகவே தனது பொறுப்பை மு.கா. ஸ்டாலினுடன் பகிர்ந்துள்ளார். மற்றவர்களும் இதேபோல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி எதிர்பார்க்கிறார்.
முதல்வர் கருணாநிதியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிய கழகத்தில் உள்ள இளைஞர்கள் ஆவலாக உள்ளனர்
.வர்மா
வீரகேசரிவாரவெளீயீடு 12/07/09

ஜக்சனின் மரணத்தில்தொடரும் சர்ச்சை




பொப் இசையால் மக்களின் மனதைக் கவர்ந்த மைக்கல் ஜக்சன் மரணமாகி இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. அவரது மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியை விட அவரது மரணம் பற்றிய சர்ச்சை பரபரப்பான செய்தியானது மைக்கல் ஜக்சனின் மரணத்தால் துவண்ட ரசிர்களின் கண்ணீர் காய முன்னர் அவரைப்பற்றிய பல அவதூறான செய்திகள் வேகமாக வெளிவந்தன.
மைக்கல் ஜக்சன் கடன் தொல்லையால் கவலைப்பட்டார். போதைதரும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்ககொண்டார். அதுவே அவரது மரணத்துக்கு காரணம். ஊசிகளால் மைக்கல் ஜக்சனின் உடம்பு சல்லடையானது போன்ற செய்திகளால் மைக்கல் ஜக்சனின் ரசிகர்கள் துன்பக்கடலில் வீழ்ந்தனர்.
மூன்று பெண்களைத் திருமணம் செய்த மைக்கல் ஜக்சனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. இரண்டு மனைவியரை விவõகரத்துச் செய்து விட்டார். மூன்றாவது மனைவி குழந்தை பெறுவதற்காக வாடகைத் தாயாக வந்ததும் முன்னாள் மனைவியில் ஒருவரான பெப்ரோ, மைக்கல் ஜக்சனுக்கு ஆண்மை இல்லையென்றும், தனக்கு பிறந்த பிள்ளைகளுக்கு மைக்கல் ஜக்சன் தகப்பன் இல்லையென்றும் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்ல மைக்கல் ஜக்சனின் குடும்ப வைத்தியர்தான் தனது குழந்தைகளின் தகப்பன் என்றும் கூறினார். இதேவேளை தனது பிள்ளைகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மைக்கல் ஜக்சன் உயிரோடு இருக்கும்போது கூறாமல் இப்போது இதை வெளியிடுவதற்கு உள்நோக்கம் இருக்க வேண்டும். மைக்கல் ஜக்சன் தனது பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசம் உடையவர். பிள்ளைகளுக்கு ஏராளமான சொத்தைக் கொடுத்திருப்பார் என்ற நோக்கத்தில்தான் பிள்ளைகளைத் தன்னிடம் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது சொத்துக்களையும் பிள்ளைகளையும் பராமரிக்கும் பொறுப்பை தாயார் கத்தரீனுக்கு வழங்கி உள்ளார் மைக்கல் ஜக்சன். மைக்கல் ஜக்சன் இரண்டு உயில்கள் எழுதி இருப்பதாக öதிரிவிக்கப்படுகிறது. உயில் பற்றிய விவகாரம் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டிருப்பதனால் உண்மையான உயில் எது என்பதை அறிவதற்கு நீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும்.
மைக்கல் ஜக்சன் மரணமான பின்னர் அவரது சொத்துக்களின் மதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கல் ஜக்சனின் பூத உடலைப் பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் குழுமி நிற்கின்றனர். மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைப்பதற்கு தாமதமானது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது சந்தேகம் தெரிவிப்பவர்கள் மக்கள் பார்வைக்கு பூதவுடலை உடனடியாக வைக்காததையும் சந்தேகத்துடன் நோக்குகின்றனர்.
மைக்கல் ஜக்சனின் மரணம் அவரது ரசிகர்களை சோகக்கடலில் வீழ்த்தி உள்ளது. அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் தோன்றியுள்ளன. மருந்துகளும், உற்சாக ஊசிகளும் தான் மைக்கல் ஜக்சனின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மைக்கல் ஜக்சன் வழமையாக பாவிக்கும் ஊசி மருத்துவ ஊசி. இதைவிட விஷ ஊசி போட்டு அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று அவரது தகப்பன் நினைக்கிறார். மைக்கல் ஜக்சனின் மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக இரண்டு முறை பிரேத பரிசோதனை நடைபெற்றது. இரண்டு முறை வைத்திய பரிசோதனை செய்தும் அவரது மரணத்துக்கான உண்மையான காரணத்தை அறிய முடியவில்லை. மைக்கல் ஜக்சனின் மரணத்துக்கான உண்மையான காரணத்தை அறிய இன்னமும் மூன்று வாரங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது இறுதி ஊர்வலம் இப்படித்தான் நடக்க வேண்டும் தனது உடல் எங்கே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று மைக்கல் ஜக்சன் விரும்பியது போன்று நடைபெறவில்லை.
மைக்கல் ஜக்சனைப் பற்றிய சர்ச்சசைகள் நீண்டுகொண்டே இருக்கின்றன. இந்த சர்ச்சைகள் எல்லாம் ஒருசில நாட்களில் மறைந்து விடும். அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
வானதி
மெட்ரோநியூஸ் 10/07/09

Sunday, July 5, 2009

தேர்தல் தோல்விகள் தந்த பாடத்தால்கூட்டணிக்கு தயாராகிறார் விஜயகாந்த்



தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியடைந்த விஜய காந்த் கூட்டணி சேர்வது பற்றி ஆலோசித்து வருகிறார். முன்னர் விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. விஜயகாந்தின் அரசியல் கட்சி பற்றிய பரபரப்பு தேர்தல் முடிவுகளின் பின் காற்றுப்போன பலூன் போல் சோர்ந்து விட்டது.
தமிழகத்தில் அதிகளவு வாக்கு வங்கியை வைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டும் கூட்டணியின் பலத்திலேயே தேர்தல்களில் வெற்றி பெறுகின்றன.
விஜயகாந்த் தனித்து தேர்தலைச் சந்தித்தால் வெற்றி பெற முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றியை விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் ஆட்டம் காண வைத்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும் பான்மை பெறாததற்கு விஜயகாந்தும் ஒரு காரணம். ஆனால், இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் வெற்றியைத் தடுத்து நிறுத்த விஜயகாந்தினால் முடியவில்லை. கருத்துக் கணிப்பு அனைத்தையும் தவிடுபொடியாக்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்பேõது காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சி ஆகியன விஜயகாந்துக்கு தூதுவிட்டதாக தகவல் வெளியானது. தனித்து நின்று தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்று விஜயகாந்த் அடம்பிடித்தார். அதன் பிரதிபலனாக விஜயகாந்தின் கட்சி படுதோல்வி அடைந்தது.
நாடாளுமன்றத் தேர்தலின்போது விஜயகாந்த் யாருடனும் கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் கருணாநிதி உறுதியாக இருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே விஜயகாந்த் யாருடனும் கூட்டணி சேராது தனித்து தேர்தலைச் சந்தித்தார்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆகியவற்றின் வெற்றி விகிதத்தை குறைத்ததே தவிர, விஜயகாந்தின் கட்சியினõல் வெற்றி பெற முடியவில்லை.
இனியும் தனி ஆவர்த்தனம் வேண்டாம் கூட்டுக்கச்சேரிதான் சிறந்தது என்ற கட்சித் தொண்டர்களின் குரல் விஜயகாந்தின் காதில் ஆழமாகப் பாய்ந்துள்ளது. அதன் காரணமாக கூட்டணி சேரலாம் என்ற கருத்து விஜயகாந்தின் மனதை அசைத்துள்ளது.
தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் விஜயகாந்த் கூட்டணி சேரலாம் என்ற தகவல் பரபரப்பாக உலாவ தொடங்கி விட்டது. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் சேரலாம் என்ற கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வளர்ச்சியைத் தடுக்கக் கூடிய சக்தி விஜயகாந்திடம் இருக்கிறது என்று அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் கருதுகின்றனர்.விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைந்தால் ஜெயலலிதாவுக்குத்தான் நன்மை அதிகம். விஜயகாந்தின் வளர்ச்சிக்கு அது எந்த வகையிலும் நன்மை அளிக்கப் போவதில்லை. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இணையும் பட்சத்தில் வைகோவின் மதிப்பு சற்றுக் குறையலாம். முதல்வர் கருணாநிதியை மூர்க்கமாக எதிர்க்கும் வைகோவுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.விஜயகாந்துக்கு ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் வழங்கினால் வைகோவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கட்சியிலிருந்து முக்கியஸ்தர்கள் பலர் வெளியேறிய நிலையில் கட்சியை வளர்ப்பதற்கு பல உத்திகளை வகுத்திருக்கும் வைகோவுக்கு விஜயகாந்த் புதிய தலைவலியை ஏற்படுத்துவார்.
அதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அணியில் கூட்டணி அமைத்த விஜயகாந்தின் பரம வைரியான டாக்டர் ராமதாஸ் தனது முடிவை பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இணைந்து படுதோல்வி அடைந்த ராமதாஸ் அதிலிருந்து வெளியேறுவதற்கு விஜயகாந்த், ஜெயலலிதா இணைப்பு காரணமாக அமையலாம்.
விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற தகவல் ஒருபக்க செய்தியாகவே வெளியாகி உள்ளது. ஜெயலலிதா அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் இது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதற்கு விஜயகாந்தின் உதவியை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார். ஆனால், வெளிப்படையாக இது பற்றி எந்தக் கருத்தையும் அவர் வெளியிடவில்லை.
ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், தா. பாண்டியன், வரதராஜன் ஆகியோர் இணைந்த மிகப் பெரிய கூட்டணியால் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை வீழ்த்த முடியவில்லை. விஜயகாந்தும் ஜெயலலிதாவும் இணைந்தால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான்.விஜயகாந்தின் ரசிகர் பட்டாளம் தான் கட்சித் தொண்டர்களாக உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வாக்கு வங்கியை முறியடிக்கும் சக்தி விஜயகாந்தின் தொண்டர்களிடம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் கொள்கைகளை பிடிக்காதவர்கள் தான் விஜயகாந்துக்கு வாக்களித்தார்கள். இவர்கள் விஜயகாந்தின் கொள்கையினால் கவரப்பட்டு வாக்களிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குமான எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் இணைந்தால் விஜயகாந்தின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும். தமிழக சட்டமன்ற, இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளையே விஜயகாந்த் பிரித்தார். விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சங்கமமானால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளை அவர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலின்போது பலமான கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்று விஜயகாந்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். கட்சியை வளர்ப்பதற்கு கூட்டணி தேவை என்பதை கட்சித் தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். விஜயகாந்தின் கௌரவம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. யாருடனாவது கூட்டணி சேர வேண்டும் என்ற மனநிலை விஜயகாந்திடம் தோன்றி உள்ளது. அது ஜெயலலிதாவா காங்கிரஸா என்று அவர் இன்னமும் முடிவு செய்யவில்லை. இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸை இலகுவில் பிரிக்க முடியாது.
கப்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த் தொடர்ந்தும் கப்டனாக இருப்பாரா அல்லது சிப்பாயாக மாறுவாரா என்பதை தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 05/07/09

Friday, July 3, 2009

அமைதியானது பொப் இசை



பொப் இசைச் சக்கவர்த்தி மைக்கல் ஜக்ஸனின் மரணம் உலகில் உள்ள இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தனது வசீகரக் குரலாலும் வித்தியாசமான நடன அசைவுகளாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த இசை விற்பன்னரின் மரணத்தால் அவரது ரசிகர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நிறவெறி கோலோச்சிய காலத்தில் கறுப்பு இனத்தவரான மைக்கல் ஜக்ஸனின் இசைக்கு இன, மத, மொழி பேதமின்றி ரசிகர்கள் அனைவரும் அடிமையானார்கள். பார்த்து ரசிக்கும் பொப் இசையை உணர்ச்சி மேலீட்டினால் ஆட வைத்தவர் மைக்கல் ஜக்ஸன். ரசிகர்கள் இசையை மட்டும் ரசிக்கக் கூடாது தம்மை மறந்து இசையுடன் ஒன்றிப்போய் ஆட வேண்டும் என்ற புது இலக்கணத்தை பொப் இசையில் புகுத்தி, வெற்றி பெற்றவர் மைக்கல் ஜக்ஸன். புதிய இசை, புதிய நடனம், விறுவிறுப்பு ஆகியவற்றால் உலகில் உள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் மைக்கல் ஜக்ஸனின் பொப் இசைக்கு அடிமையானார்கள். மைக்கல் ஜக்ஸன் மேடையில் தோன்றினால் உணர்ச்சி மேலிட்டு தம்மை மறந்து அழும் ரசிகர்கள் இன்று அவரது மறைவை, தாங்க முடியாது அழுது புலம்புகிறார்கள்.
1958ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி அமெரிக்காவில் உள்ள இந்தியானாவில் உருக்குத் தொழிலாளியான ஜோ.ஜக்ஸனுக்கும், கத்தரினுக்கும் ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர் தான் மைக்கல் ஜக்ஸன் என அழைக்கப்படும் மைக்கல் ஜோஸப் ஜக்ஸன். மைக்கல் ஜக்ஸனின் குடும்பமே இசைக் குடும்பம்தான். அவருடைய சகோதரர்கள் அனைவரும் திறமையாகப் பாடுவார்கள். இவருடைய சகோதரி ஜெனட் ஜக்ஸனுக்கும் உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். மைக்கல் ஜக்ஸன் சர்ச்சைகளில் சிக்கியது போலவே இவரது சகோதரியான ஜெனட் ஜக்ஸனும் பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைகளில் சிக்கினார்.
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தனது இசைக்கு அடிமையாக வைத்திருந்த மைக்கல் ஜக்ஸனின் மனதில் தான் ஒரு கறுப்பானவன் என்னும் குறை பெரிதாக இருந்தது. தனது நிறத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு மேற்கொண்ட சத்திர சிகிச்சைகள் தான் அவரது உயிருக்கு எமனாக மாறியது என்ற கருத்தும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
ஐந்து வயதில் ஆரம்பித்த மைக்கல் ஜக்ஸனின் இசைப் பயணம் 50 வயது வரை மங்காப் புகழுடன் இருந்தது.1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்து வயதான மைக்கல் ஜக்ஸன் தனது சகோதரர்களுடன் இணைந்து மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஐந்து வயதுச் சிறுவனின் பாடல்கள் அன்றைய ரசிகர்களின் மனதைக் கவர்ந்தன. சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வித்தியாசமின்றி மைக்கல் ஜக்ஸனின் ரசிகர்களாயினர். ஐந்து வயதான மைக்கல் ஜக்ஸனின் ரசிகர் கூட்டம் அவரது வயது கூடக் கூட இன்னமும் அதிகமாகியது. 50 ஆவது வயதில் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரது குரலால் வசீகரிக்கப்பட்டனர்.
1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மைக்கல் ஜக்ஸனின் சகோதரர்களின் "தி ஜக்ஸன் 5' என்னும் இசைத் தொகுப்பு வெளியானது. 11 வயதான மைக்கல் ஜக்ஸனின் குரல் அவரது சகோதரர்களின் குரலை விட வித்தியாசமாக இருப்பதை ரசிகர்கள் உணர்ந்தனர். அப்பொழுதே மைக்கல் ஜக்ஸனுக்கென்று ரசிகர்கள் வட்டம் உருவாக ஆரம்பித்தது. ஆயினும் இலட்சம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மைக்கல் ஜக்சனின் இசையால் கவரப்பட்டனர்.
சகோதரர்களுடன் இணைந்து இசைக் கச்சேரி நடத்திய மைக்கல் ஜக்ஸன் 1970 ஆம் ஆண்டு தனியாக இசைக் கச்சேரி நடத்தத் தொடங்கினார். 1972 ஆம் ஆண்டு "பென்' எனும் தனி அல்பத்தை வெளியிட்டார். ரசிகர்களின் மத்தியில் பெரு வரவேற்பைப் பெற்றது. 1978 ஆம் ஆண்டு முதன் முதலாக த வில்ஸ் என்ற படத்தில் நடித்தார். கறுப்பு நிறம் மைக்கல் ஜக்ஸனுக்கு உறுத்தலாக இருந்தது. நிறம் மாறுவதற்காக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்தார். 1990 ஆம் ஆண்டு உருமாற்றத்துடன் மக்கள் முன்பு முதன் முதலாக வெளிப்பட்டார். மைக்கல் ஜக்ஸனின் வித்தியாசமான முகம் ரசிகர்களைக் கவர்ந்தது.
மைக்கல் ஜக்ஸனின் இசைத்தட்டுகளுக்கும் இசை அல்பங்களுக்கும் கிடைத்த வரவேற்பு வேறு எந்த பாடகருக்கும் கிடைக்கவில்லை. இன நிற வெறியில் மூழ்கி இருந்த நாடுகளின் ரசிகர்கள் கறுப்பினத்தவரான மைக்கல் ஜக்ஸனின் இசைக்கு அடிமையானார்கள்.
1979 ஆம் ஆண்டு வெளியான Off the wall எனும் இசை அல்பம் ஒரு கோடியே பத்து இலட்சம் விற்பனையானது. 1979 இல் வெளியான Thriller அல்பம் ஐந்து கோடி விற்பனையானது. இதன் இசைத் தட்டு 14 மில்லியன் விற்பனையாகி கின்னஸில் இடம்பிடித்தது. இத்த அல்பத்துக்கு எட்டு கிராமிய விருதுகள் கிடைத்தன. 1987 இல் வெளியான"Bad' 2 கோடி 60 இலட்சம் விற்பனையானது. 1991 இல் வெளியானDangerous 2 கோடி 20 இலட்சம் விற்பனையானது. 1995 இல் வெளியான HIStory இரண்டு கோடி விற்பனையானது. இதுவரை 75 கோடி அல்பங்கள் விற்பனையாகியுள்ளன. மைக்கல் ஜக்ஸனுக்கு 13 கிராமிய விருதுகள் கிடைத்துள்ளன.
பொப் இசை, டிஸ்கோ இரண்டிலும் ஈடு இணை அற்றவராக விளங்கினார் மைக்கல் ஜக்ஸன். 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இசை உலகின் சக்கரவர்த்தியானார். கிங், ஒவ் பொப் என்ற பட்டப் பெயர் மைக்கல் ஜக்ஸனுடன் இணைந்து கொண்டது.
இசை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட எம்.ரி.வி. மைக்கல் ஜக்ஸனின் இசை நிகழ்ச்சிகளால் பிரபலமடையத் தொடங்கியது.புகழில் உச்சியில் இருந்த மைக்கல் ஜக்ஸனை சர்ச்சைகள் விரட்டின. ரசிகர்களை மகிழ்வித்த மைக்கல் ஜக்ஸன் வாழ்க்கையில் நிம்மதி இழந்து தவித்தார். நிறவெறியாலும் ஏழ்மையாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதற்காக "த வேர்ல்ட்' என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தார்.
நல்ல நோக்கத்துக்காக அவர் ஆரம்பித்த அறக்கட்டளை அவருக்கு கெட்ட பெயரை தேடிக் கொடுத்தது. மைக்கல் ஜக்ஸன் மீது ஜோர்டான் சாண்ட்லர் என்ற சிறுவன் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் சிக்கி சீரழிந்த மைக்கல் ஜக்ஸன் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தார்.
சிறுவர் பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற்ற மைக்கல் ஜக்ஸனின் திருமண வாழ்க்கை சந்தோஷமானதாக இருக்கவில்லை. மூன்று பெண்களை திருமணம் செய்த மைக்கல் ஜக்ஸனின் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
பிரபல பாடகரும் இசை அமைப்பாளருமான எல் விஸ்பிரிஸின் மகளும் பாடகியுமான லிசா மேரியை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமண வாழ்க்கை கசந்ததும் இரண்டு வருடங்களில் விவாகரத்துச் செய்தார். 1996 ஆம் ஆண்டு டெபிரோவ் என்ற தாதியை திருமணம் செய்தார். இந்தத் திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனானார். டெபிரோவை 1999 ஆம் ஆண்டு விவாகரத்துச் செய்தார். அதன் பின் வாடகைத் தாய் மூலம் ஒரு ஆண் குழந்தைக்கு தகப்பனானார். 2002 ஆம் ஆண்டு ஒன்பது மாத தன் மகனை பேர்லினில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜன்னலிலிருந்து வெளியே வீசுவது போல் வேடிக்கை செய்தார். இதனால் மிகப் பெரிய கண்டனத்துக்குள்ளானார்.
விவாகரத்துக் காரணமாக கோடிக்கணக்கான பணத்தை ஜீவனாம்சமாகச் செலுத்தினார். கோடிகளில் புரண்ட மைக்கல் ஜக்ஸன் கடனாளியானார். கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்காக தனது பண்ணை வீட்டை விற்றார். நிம்மதி இழந்து தவித்த மைக்கல் ஜக்ஸன் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவரது முஸ்லிம் பெயர் ரசிகர்களுக்கு தெரியாது. அவர் முஸ்லிமாக மாறி பெயர் மாற்றினாலும் மைக்கல் ஜக்ஸன் என்றே ரசிகர்கள் அவரை அழைத்தனர்.
கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்காக லண்டனில் 50 நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். தனது 50 ஆவது வயதை நிறைவு செய்ய 50 நிகழ்ச்சிகள் மூலம் இருந்த நிம்மதியை மீண்டும் பெற முயற்சித்தார். அதற்காக கடுமையான பயிற்சிகள் செய்தார். அவரின் எதிர்பார்ப்பு நிறைவேற முன்னர் மரணமாகி விட்டார். இவரது மறைவுக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
உலகப் புகழ்பெற்ற மைக்கல் ஜக்ஸனுடன் இணைந்து ஆடும் வாய்ப்பு பிரபுதேவாவுக்கும், ஷோபனாவுக்கும் கிடைத்தது. ஜேர்மனியிலும் கொரியாவிலும் நடந்த நிகழ்ச்சிகளில் பிரபுதேவாவும், ஷோபனாவும் மைக்கல் ஜக்ஸனுடன் இணைந்து ஆடி பாராட்டுப் பெற்றனர். அவரின் நடனத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்தது.
மைக்கல் ஜக்ஸனின் முதல் வீடியோ பில்லி ஜீன். இது தான் எம்.ரீ.வியின் ஒளிபரப்பான கறுப்பு இனத்தவரின் முதலாவது வீடியோ. மனிதாபிமான உதவிகளுக்கான விருதை அமெரிக்க ஜனாதிபதி ரீசன், மைக்கல் ஜக்ஸனுக்கு வழங்கினார். ஜபர் கோஸ்ட்
மக்கள் இவருக்கு மன்னாக முடிசூட்டினர். மெழுகுச் சிலை அரங்கங்களில் மைக்கல் ஜக்ஸனின் சிலைகள் இடம்பெற்றுள்ளன.இராணுவ உடை, மன்னர் உடை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம்.I am bad, I am bad, Rember the time, the don't really care about all us, have the world, Man in the mirror, black or white, I just cant stop loving. Personal favourite, Libernian Girl, Billi jean
போன்ற பாடல்கள் மூலம் மைக்கல் ஜக்ஸன் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பார்.
ரமணி
மெட்ரோநியூஸ் 03/07/09