Showing posts with label லிபியா. Show all posts
Showing posts with label லிபியா. Show all posts

Wednesday, September 20, 2023

பாலைவன நாடான லிபியாவை மூழ்கடித்த வெள்ளம்

புயல், மழை, வெள்ளம், பூகம்பம், காட்டித்தீ போன்ரவற்றாஇல் நடைபெரும் அழிவுகளும்,   உயிரிழப்புகளும் அண்மையில் முக்கிய செய்தியாக  இடம் பிடிக்கின்றன.மொராக்கோவைத் தாக்கிய புகம்ப அழிவுகள் பற்றிய இழப்புகள்  முழுமையாக வெளிவரமுன்பு  லிபியாவில் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் கவனத்தை ஈர்ந்தது.

பாலைவன நாடான  லிபியாவை  வெள்ளம்  புரட்டிப் போட்ட செய்தி  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  லிபியாவின்  கிழக்கு நகரமான டெர்னாவில் மிகப்பெரிய அளவிலான இறப்பு ,அழிவுக்கு ஏற்பட்டுள்ளது.  நகரின்கால்வாசிப்பகுதி  வெள்ளத்தால் உருக்குலைந்தது.   வாடி டெர்னா நதியே  வெள்ளப் பெருக்குக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மலைகளில் இருந்து நகரத்தின் வழியாக கடலுக்குள் ஓடும் வாடி டெர்னா நதி, மழை பெய்யும் போது  வெள்ளம் வந்தாலும், ஆண்டின் பெரும்பாலும்   வறண்டு இருக்கும். அருகிலுள்ள நகரமான பைடாவில்  இல் சுமார் 414மி.மீ மழை பெய்தது இது மிகப் பெரிய மழை என  பதியப்பட்டுள்ளது.

  இரண்டு நதி பள்ளத்தாக்குகள் சங்கமிக்கும் நகரத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் முதல் அனை  உள்ளது. அது முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக செய்மதிக் காட்சிகள்  வெளிப்படுத்தின.  காட்சிகள் காட்டுகின்றன.  முதல் அணையை உடைத்த பிறகு, வெள்ளம் நகரின் தெற்கு விளிம்பில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பள்ளத்தாக்கு வழியாக கீழ்நோக்கித் தொடர்ந்தது. இரண்டாவது அணையின் கீழ்புறத்தில், நகரின் மையப்பகுதி வழியாக ஒரு பரந்த நீரோடை, இருபுறமும் உள்ள கட்டிடங்களை உடைத்தது.

ஆற்றில் இருந்து வெகு தொலைவில் இருந்த பல மாடி அடுக்குமாடி குடியிருப்புகள் அவற்றின் முகப்புகள் அழிக்கப்பட்டன,கொங்கிரீட்  தளங்கள் இடிந்து விழுந்தன, டெர்னாவில் மட்டும் 2,000 பேர் இறந்திருக்கலாம் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. புயலுக்குப் பிறகு லிபியா சர்வதேச உதவியைக் கோருகிறது.

2011 ஆம் ஆண்டு ல்   எதேச்சதிகாரத் தலைவர் முயம்மர் கடாபியின் ஆட்சி  கவிழ்க்கப்பட்ட பின்னர், பல வருடகால யுத்தம் மற்றும் மத்திய அரசாங்கம் இல்லாததால் லிபியா சிதைந்து கிடக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், லிபியாவின் உமர் அல் முக்தார் பல்கலைக்கழகத்தின் நீர்வியலாளர் அப்தெல்வானீஸ் ஏஆர் ஆஷூர், 1942 முதல் ஐந்து வெள்ளங்களை மேற்கோள் காட்டி, பருவகால ஆற்றுப்படுகை அல்லது வாடி மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு டெர்னாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்தார்.

அணைகளை முறையாக பராமரிப்பதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.   : "ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டால் அதன் விளைவு வாடி மற்றும் நகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்"என்று அவரது கட்டுரை கூறியது  

இந்த வெள்ளம் லிபியாவின் நவீன வரலாற்றில் மிகவும் ஆபத்தான சுற்றுச்சூழல் பேரழிவாகும், இழப்புகளைச் சந்தித்த பைடா நகரம் உட்பட மற்ற பகுதிகளும் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து, பெங்காசி மற்றும் கிழக்கு லிபியாவின் பிற இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற அரசாங்க கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன.

லிபியாவில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளனர், இது ஒரு பெரிய மத்திய தரைக்கடல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் லிபியாவில் அணைகளை உடைத்து, கட்டிடங்களை அடித்துச் சென்றது.சுமார் 125,000 மக்கள் வசிக்கும் நகரமான டெர்னாவில், கட்டடங்கள்  இடிந்து விழுந்துள்ளன.கார்கள்  வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நகரின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றில் 1,700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய மாவட்டத்தில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வாடா மருத்துவமனையின் இயக்குநர் முகமட் அல்-காபிசி தெரிவித்தார்.  போதிய இட வசதி இல்ல்லாமையினா. மருத்துவ மனையின் தாழ்வாரங்களில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசி உட்பட மற்ற கிழக்கு நகரங்களும் புயலால் பாதிக்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செஞ்சிலுவை சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் டேமர் ரமலான் தன் குழுவுடன்  ப்[அனியாற்றுகிறார். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும்,  காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 10,000 த்தைத்  தாண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

லிபியாவை தாக்கிய வெள்ளத்தில் 5,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.டானியல் புயல் நாட்டைத் தாக்கியதால் அணைகள் உடைந்ததால் கிழக்கு நகரமான டெர்னாவின் கால் பகுதி வெள்ளநீரால் அழிக்கப்பட்டது, இதுவரை 1,500க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பேரிடர் மண்டலமாக  டெர்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ முயன்றபோது அதன் லிபியா பிரிவைச் சேர்ந்த மூன்று தன்னார்வத் தொண்டர்கள் செவ்வாயன்று இறந்ததாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தலைமைச் செயலாளருமான ஜெகன் சபாகைன் ,கூறினார்  

லிபியா அரசியல் ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என பிளவுபட்டுள்ளது மற்றும் 2011 நேட்டோ ஆதரவு எழுச்சிக்கு பின்னர் பொது சேவைகள் வீழ்ச்சியடைந்துள்ளன, இது பல ஆண்டுகளாக பிரிவு மோதல்களைத் தூண்டியது.


 சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட திரிப்போலி அரசாங்கம் கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் டெர்னாவுக்கு உதவிகளை அனுப்பியுள்ளது. செவ்வாயன்று மேற்கு நகரமான மிஸ்ரட்டாவிலிருந்து ஒரு நிவாரண விமானம் புறப்பட்டது.

Saturday, October 29, 2011

கடாபியைஅழித்த மக்கள்புரட்சி

மன்னர் ஆட்சியிலிருந்த லிபியா 1969 ஆம் ஆண்டு செப்ரம்பர் முதலாம் திகதி இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் விடுதலையடைந்தது. இளம் இராணுவ அதிகாரி முயாமத் அபு மின்யர் அல் கடாபி தலைமையிலான இராணுவக் குழு லிபியாவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மனனராட்சியிலிருந்து லிபியாவை மீட்ட கடாபியை மக்கள் புகழ்ந்தார்கள். வீதியில் இறங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். கடாபி என்ற மாவீரனைப் பெற்றதால் லிபியா மகிழ்ச்சியடைந்தது. 42 வருடங்களின் பின்னர் லிபியத் தலைநகர் திரிபோலியிலிருந்து சொந்த ஊரான சியாட்டிற்கு துரத்தப்பட்டார் கடாபி.
இரத்தம் சிந்தா புரட்சியின் மூலம் லிபியாவை விடுதலை செய்த கடாபியிடமிருந்து லிபியாவை மீட்க நடந்த போராட்டத்தில் ஏராளமான இரத்தம் சிந்தப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமானார்கள். 42 வருடங்களின் முன்னர் விடுதலை வீரன் கடாபியைப் பார்த்து வியந்த லிபிய மக்களின்று கடாபியின் பிணத்தைப் பார்க்க வரிசையில் நிற்கிறார்கள். மேற்குலகுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய கடாபிக்கு அவரது நடவடிக்கையே எமனாக அமைந்தது. எகிப்தியத் தலைவர் கமால் அப்துல் நாசரால் ஈர்க்கப்பட்ட கடாபி, நாசரைப் போன்றே புரட்சியின் மூலம் லிபியாவைக் கைப்பற்றினார்.
அரபுலகில் அண்மையில் ஏற்பட்ட புரட்சியினால் டியூனிஷிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பி ஒடிவிட்டார். எகிப்து ஜனாதிபதி கொஸ்னி முபாரக் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். லிபியாவில் புரட்சி வெடித்தபோது தனது எதிரிகளை அடக்கி விடலாம் என்றே கடாபி நினைத்தார். கடாபிக்கு எதிரான புரட்சிப் படைகளின் பின்னால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் இருந்தன. வெளிநாடுகள் ஆயுத உதவி செய்தாலும் புரட்சிப் படையை அழிக்கக் கூடிய ஆயுத பலம் கடாபியின் இராணுவத்திடம் உள்ளது. ஐ.நா. வும் சர்வதேச நீதிமன்றமும் கடாபிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததனால் லிபியாவின் களநிலைவரம் மாறியது. கடாபிக்கு எதிரான புரட்சிப் படைக்கு ஆதரவாக நேட்டோ களமிறங்கியது. கடுமையான போராட்டத்தின் பின் லிபியத் தலைநகர் திரிபோலி வீழ்ந்தது. கடாபியின் குடும்பம் தப்பிச் சென்றது.


தாய் நாட்டை விட்டு ஓடமாட்டேன். எலிகளைப் போல் எதிரிகளைத் தேடி அழிப்பேன் என்று சூளுரைத்த கடாபி கானுக்குள் பதுங்கியபோது வெளியே இழுத்து எடுத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கடாபி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காலில் பலத்த காயம் உள்ளது என்று முதலில் செய்தி வெளியானது. அந்தச் செய்தியை உறுதிப்படுத்த முன்பே கடாபி கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி வெளியானது. கைது செய்யப்பட்ட பின் கடாபி கொல்லப்பட்டரா அல்லது சண்டையின்போது கொல்லப்பட்டாரா என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடாபிக்கு இழைக்கப்பட்ட அநீதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காலில் பலத்த காயமடைந்ததாகக் கூறப்பட்ட கடாபி நடந்து சென்ற காட்சி தெளிவாகத் தெரிந்தது. கடாபியைக் கண்டதும் மாத்திரம் மேலிட்ட புரட்சிப் படையினர் அவர்மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இத்தனை காலமாக எங்களை வதைத்த கடாபியைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே அங்கிருந்தவர்களிடம் மேலோங்கியது. கடாபியைக் காப்பாற்ற அங்கு யாருமே இல்லை. கடாபியை உயிருடன் பிடிக்கப்பட்டதும் அவரைக் காண்பதற்காக புரட்சிப் படையினர் பலரும் முண்டியடித்தனர். தன்னைக் கைது செய்த புரட்சிப் படை வீரர்களிடம் என்ன தவறு செய்தேன் எனக் கேட்டார். தன்னைச் சுட வேண்டாம் என்று தெரிவித்தார். அவரின் பேச்சை அங்குள்ள யாருமே கவனத்தில் எடக்கவில்லை. கடாபியின் பேச்சைக் கேட்பதற்காக ஒரு காலத்தில் முண்டியடித்த மக்கள் கூட்டம் இன்று அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
கடாபியின் மகன் முட்டாஸி உயிருடன் கைது செய்யப்பட்டு பின் சிறிது நேரத்தின்பின் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திவெளியாகியுள்ளது. புரட்சிப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தற்போது வெளியாகி உள்ளன. இதுவும்
யுத்தக்குற்றவிசாரணைக்குட்படலாம் எனத்தெரிகிறது.
கடாபி உயிருடன் கைது செய்யப்பட்டால் வெளிநாட்டில் ஒப்படைக்க மாட்டோம் நாம் விசாரணை செய்து தண்டனை வழங்குவோம் என்று புரட்சிப்படைத் தலைவர்கள் கூறியிருந்தனர். ஆனால் கடாபியைக் கைது செய்த புரட்சிப்படை வீரர் ஒருவர் கடாபியைச் சுட்டுக் கொலை செய்துவிட்டார். தலையிலும் கையிலும் சுடப்பட்ட கடாபி அரைமணி நேரத்தின் பின்னரே உயிர் பிரிந்ததாக புரட்சிப்படை வீரர் ஒருவர் கூறியுள்ளார். நிராயுத பாணியாகச் சரணடைந்த கடாபி சுட்டுக் கொலை செய்ததால் புரட்சிப் படை மீது யுத்த மீறல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை அடக்குவதற்காகப் புகுந்த அமெரிக்காவும் நேட்டோ படைகளும் தலிபான்களையும் ஒஸõமாவையும் அங்கிருந்து விரட்டின. பாகிஸ்தானில் ஒஸாமாவை அமெரிக்காவின சிறப்புப் படையணி சுட்டுக் கொலை செய்து சடலத்தையும்கொண்டு சென்றது. ஈராக்கில் சதாமின் ஆட்சியை அகற்றுவதற்காகக் களம் புகுந்த அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் சதாமை கைது செய்து தூக்குத் தண்டனை வழங்கினர்





ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நேரடியாகத் தலையிட்ட அமெரிக்காவும் நேட்டோப் படையும் லிபியாவில் புரட்சிப் படைகளுக்கு உறுதுணையாக இருந்து கடாபியை அழித்துவிட்டமை இறைச்சி பதனிடப் பயன்படும் அறையொன்றில் கடாபியினதும் அவரது மகனினதும் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அச்சடலங்களைப் பார்ப்பதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
உலகெங்கும் உள்ள வங்கிகளிலும் ரியல் எஸ்டேட் முதலீடுகளிலும் கடாபிக்கு 200 பில்லியன் டொலர் சொத்து இருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் 37 பில்லியன் டொலர் சொத்துக்களும் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள கடாபியின் 30 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புரட்சிப் படையும் சில வெளிநாடுகளும் விரும்பியது போல கடாபி அழிக்கப்பட்டு விட்டார். இனி லிபியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும். கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் லிபியா சின்னாபின்னமாகியுள்ளது. கட்டடங்கள் மதகுகள் வீதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. இவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அவற்றுக்கான நிதியை எப்படிப் பெறுவது என்பது லிபியாவின் அடுத்த ஆட்சியாளர்களில் முன்னாள் உள்ள பாரிய சவாலாகும்.








கடாபியை அகற்றுவதற்காகப் போராடிய புரட்சிப் படையிலும் பல பிரிவுகள் உள்ளன.
அந்தப் பிரிவினைகளை இடைக்கால அரசு எப்படிச் சமõளிக்கப் போகிறது. இடைக்கால அரசு எவ்வளவு காலத்துக்கு செயற்படும் நிலையான ஆட்சி எப்படி அமையும் போன்ற கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள பொம்மை அரசு போன்ற ஒரு பொம்மை அரசு லிபியாவில் ஏற்படுமா அல்லது லிபிய மக்கள் விரும்பும் அரசு ஏற்படுமா என்ற சந்தேகம் உள்ளது.
கடாபியின் உடல் ஆறு நாட்களின் பின்னர் பாலைவனத்தில் இரகசியமாகப் புதைக்கப்பட்டுள்ளது. சதாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சதாமின் ஆதரவாளர்கள் கூடி சதாமை நினைவு கூர்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒஸாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்பட்டது. இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு விரோதமாக ஒஸாமாவின் உடல் கடலில வீசப்பட்டது என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அக் குற்றச்சாட்டுக்கு இன்னும் சரியான பதிலை அமெரிக்கா வழங்கவில்லை. கடாபி உடலையும் பகிரங்கமாக புதைக்கப்பட புரட்சிப்படை விரும்பவில்லை. அதன் காரணமம்க இரகசியமாக கடாபியின் உடல் புதைக்கப்பட்டது.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தால் அவரது உடல் 24 மணி நேரத்தினுள் புதைக்கப்பட வேண்டும். கடாபி அவரது மகன் முட்டாஸி அமைச்சர் யுனிஸ் ஆகியேõரின் உடல்கள் ஆறு நாட்களின் பின்னரே அடக்கம் செய்யப்பட்டன. இறைச்சி பாதுகாக்கும் குளிர்சாதன அறையில் மூவரின் சடலமும் நிலத்தில் வைக்கப்பட்டிருந்தன. கடாபியின் உடலைப் பார்த்த பலரும் புகைப்படம் எடுத்ததுடன் கடாபியைத் திட்டித் தீர்த்தனர்.
ஆட்சியைக் கைப்பற்றியபோது லிபியாவை நல்ல வழியில் இட்டுசென்றார் கடாபி. காலம் செல்ல செல்ல பதவி ஆசையும் குடும்பத்தின் சுயநலமும் கடாபியைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்றன. கடாபி இல்லாத லிபியாவை நினைத்துபார்க்க சிரமமாக உள்ளது.
ரமணி

மெட்ரோநியூஸ் 28/10/11


Friday, September 2, 2011

புரட்சிக்குப் பலியான கடாபி

எண்ணெய் வளம் மிகுந்த லிபி யாவை 42 வருட காலம் தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்த கடாபி யின் ஆட்சி கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் முடி வுக்கு வந்தது. 1969ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முத லாம் திகதி இராணுவப் புரட்சி மூலம் லிபியாவை கைப்பற்றிய கடாபி 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நேட் டோவின் ஆதரவில் நடைபெற்ற புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் உள்ள மிகப் பெரிய நாடு லிபியா. லிபியாவின் கிழக்குப் பகுதியில் எகிப்து, தென்பகுதியில் சூடான், ஸ்காட், நைஜீரியா, மேற்குப் பகுதியில் அல்ஜீரியா, முனீஷியா ஆகிய நாடுகள் உள்ளன. வட பகுதியில் மத்திய தரைக் கடல் உள்ளது. நாட்டின் பெரும்பகுதி பாலைவனம். 65 இலட்சம் மக்கள் தொகை கொண்ட லிபியாவில் 82 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். "ன்னி முஸ்லிம்கள் 97 சதவீதமானவர்கள். லிபியாவில் பொருளாதாரத்தில் எண்ணெய் வளம் 95 சதவீதமாக உள்ளது. வேலையில்லாத திண்டாட்டம் 30 சதவீதம் மூன்றில் ஒரு பங்கினர் வறுமைக்÷ காட்டின் கீழ் உள்ளனர்.
இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின் பிடியில் இருந்த லிபியா 1951 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி சுதந்திரம் பெற்றது. முதலாம் இத்ரிஸ் லிபியாவின் மன்னராகப் பதவியேற்றார். இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் பங்குபற்றிய இளைஞர்களில் ஒருவர் முயாமர் அபுமின்யர் அல் கடாபி புரட்சியின் மூலம் லிபியாவில் ஜனாதிபதியாவேன் என்றோ உலகளாவிய புரட்சி லிபியாவை கைப்பற்றும் என்றோ கடாபி நினைக்கவில்லை. 1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி லிபியாவின் கிர்ட் நகர் அருகே உள்ள பாலை வனத்தில் கூடாரத்தில் பிறந்தார் கடாபி. கடாபடா என்ற சிறுபான்மை இனக்குழுவைச் சேர்ந்தவர் கடாபி. லிபிய இராணுவ அக்கடமியில் 1965 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். அரபு உலகம் மதிக்கும் தலைவர் எகிப்தின் அன்றைய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் வழி காட்டலில் ஈர்க்கப்பட்டவர் கடாபி.


லிபிய இராணுவத்தில் பணியாற்றிய கடாபி 1966ஆம் ஆண்டு பெங்காசி இராணுவப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1966ஆம் ஆண்டு பிரிட்டன் ரோயல் மிலிட்டரி அக்கடமியில் பயிற்சி பெற்றார். மீண்டும் நாடு திரும்பி இராணுவத்தில் பணியாற்றினார். லிபியாவில் மன்னராட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஆசை இவரது மனதில் அதிகமானது. லிபிய மன்னர் இத்ரிஸ் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக துருக்கி நாட்டிற்குச் சென்ற போது இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் லிபியாவைக் கைப்பற்றினார்.
லிபியாவின் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடிய கடாபி லிபியாவின் முடி சூடா மன்னராகவே இருந்தார். ஆட்சி அதிகாரம் அனைத்தையும் ஜனநாயகம் என்ற போர்வையில் தன் கையில் எடுத்தார். கடாபியின் குடும்பம் சகல வசதிகளையும் அனுபவித்தது. லிபிய மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. லிபிய அரபுக் குடியரசு என்று புது நாமம் சூட்டப்பட்டது. முப்படைகளின் தளபதியாகவும் ஆளும் கவுன்சில் தலைவராகவும் தன்னை அறிவித்தõர். 1969ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடாபிக்கு எதிராக ஒரு சில இராணுவ வீரர்கள் புரட்சி செய்ய முயற்சி செய்தார்கள். கடாபியின் உளவுப் படை அதனை முறியடித்தது.
1970-72 வரை பிரதமராகவும் இராணுவ அøமச்சராகவும் பதவி வகித்தார். 1979 ஆம் ஆண்டு ஆட்சியாளராகினார். மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை மலரச் செய்யப் போவதாக உறுதியளித்த இவர் தொடர்ந்து சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்தார். ஆட்சியைப் பிடித்ததும் வெளிநõட்டவர்களை விரட்டியடித்தார். மக்களின் ஆட்சியை அமைக்கப் போவதாகக் கூறியவர் பச்சைப் புத்தகம் என்ற பெயரில் தனது கொள்கைகளை லிபியாவில் பரப்பினார். கடாபியின் விருப்பப்படியே லிபியாவின் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. நாட்டின் நிரந்தர சகோதரத் தலைவர் புரட்சி வழிகாட்டி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. சகல வசதிகளையும் செல்வங்களையும் கடாபியின் குடும்பம் அனுபவித்தது. பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்தது. கடாபியைக் காப்பாற்றுவதற்காக விசேட படைகள் உருவாக்கப்பட்டன. இவரது மெய்க்காப்பாளர்கள் அனைவரும் இளம் பெண்களே. கடாபியின் பாலியல் பலவீனம் பற்றி அப்போது சில தகவல்கள் இருந்தன. அதுபற்றி யாரும் அப்போது பெரிதாகக் கணக்கெடுக்கவில்லை. விக்கிலீக்ஸ் இதனை அம்பலப்படுத்தியது. கடாபிக்கு எதிரான குரல்கள் அனைத்தும் அவ்வப்போது அழிக்கப்பட்டன.
எகிப்து, டுனீஷியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சியும் அதன் பின்னராக நடந்த ஆட்சி மாற்றமும் கடாபியின் எதிர்ப்பாளர்களுக்கு உற்சாக மூட்டின. கடாபிக்கு எதிரான போராட்டங்களும் கிளர்ச்சிகளும் பெப்ரவரி 15ஆம் திகதி லிபியாவின் பெங்காசி நகரில் ஆரம்பித்தன. இப்போராட்டம் லிபியாவின் பல நகரங்களுக்கும் பரவியது. பேஸ்புக் இணையத்தளம் என்பன இப்போராட்டங்களுக்கு வலுவூட்டின. கிளர்ச்சியாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்திய லிபியாவின் இராணுவம் தொழில் நுட்பப் போராட்டத்துக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. கடாபியின் காட்டாட்சியை அகற்றுவதற்காக களமிறங்கிய புரட்சிப் படை பெங்காசி மிஸ்ராட்டா ஆகிய நகரங்களை கைப்பற்றியது.
கடாபிக்கு எதிரான போராட்டக்காரர்களை அடக்குவதற்காக மேலதிக இராணுவம் அதி நவீன ஆயுதங்களுடன் அடக்கு முறைகளைக் கையாண்டது. புரட்சிப் படையை ஒடுக்குவதற்காக லிபிய இராணுவம் வன்முறைகளை கையாண்டது. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் ஆகியவை கடும் எதிர்ப்பை வெளியிட்டு லிபியாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தன. புரட்சிப் படையினர் வசமாகிய லிபியாவின் கிழக்குப் பகுதியை நிர்வாகம் செய்ய அமெரிக்காவின் தலைமையில் மார்ச் 5ஆம் திகதி இடைக்காலக் கவுன்சில் அமைக்கப்பட்டது. மார்ச் 7ஆம் திகதி முதல் இங்கிலாந்து பிரிட்டன் ஆகிய நாடுகள் இதில் இணைந்து கொண்டன. புரட்சியாளர்களுக்கு எதிராக லிபிய விமானப்படை தாக்குதல் நடத்தியது. நேட்டோ படைகள் வான் வெளிக்கண்காணிப்பை ஏற்றுக்கொண்டது.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுக ளில் மூக்கை நுழைத்து அமெரிக்கா கையைச் சுட்டுக்கொண் டதால் லிபியாவில் அமெரிக்கா தலைமைவகிப் பதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் கண்காணிப்பு தலை மைப் பதவியிலிருந்து விலகியது அமெரி க்கா. ஐ.நா.வின் அனுமதியுடன் நேட்டோ பொறுப்பேற்றது. ஜூன் 27 ஆம் திகதி சர்வதேச நீதிமன்றம் கடாபி க்கும் அவரது மகன் சயீட் அல் இஸ் லாம் மீதும் பிடி ஆணை பிறப்பித்தது. கடாபியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று விரும் பிய நாடுகள் புரட்சிப் படைக்கு ஆயுத உதவி செய்தன.

லிபியா மீதான கடாபியின் பிடி மெது மெதுவாக விலகத் தொடங்கியது. லிபியாவின் பிரதான நகரங்களை புரட்சிப் படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கடந்த 21ஆம் திகதி புரட்சிப் படையினர் திரிபோலி மீது மும்முறை தாக்குதல் நடத்தினர். வட பகுதியான கடற்பரப்பை நேட்டோ படை முற்றுகையிட்டது. கடந்த ஆறு மாத காலமாக பகிரங்கமாக தோன்றாது கடாபி வானொலியில் நாட்டு மக்களுக்கு உøரயாற்றினார். இறுதிப் போரில் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். கடாபியின் வானொலி உரை நாட்டு மக்களை உற்சாகப்படுத்தவில்லை. எல்லாமே முடிந்து போன நிலையில் அவர் திரிபோலியில் இருப்பதாக மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே அந்த வானொலி உரை ஒலிபரப்பப்பட்டது.
லிபியாவுக்குள் புரட்சிப் படை நுழைந்து கடந்தவாரம் திரிபோலியருகே உள்ள சுபியா என்ற நகரைப் புரட்சிப் படையினர் கைப்பற்றிய போதே திரிபோலி விரைவில் வீழ்ந்து விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கடாபியின் விசுவாசமான படை இறுதி வரை போராடியது. போராட்டம்
முடிந்து விட்டது என்பதை உணர்ந்த சில படையினர் புரட்சிப் படையினரிடம் சரணடைந்தனர். திரிபோலி மக்கள் புரட்சிப் படையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். திரிபோலி நகரில் முக்கிய இடமாக கிரீன் சதுக்கம் புரட்சிப் படை வசமானது. இங்கு தான் கடாபி உரை நிகழ்த்துவார். கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் இச் சதுக்கத்தில் அடிக்கடி நடைபெறும். கிரீன் சதுக்கத்தை தியாகிகள் சதுக்கம் என்று பெயரிட்டது புரட்சிப்படை

லிபியா புரட்சிப்படை வசமானது. கடாபியும் அவரது குடும்பமும் தலைமறைவாகிவிட்டனர். லிபிய நகரின் கீழே உள்ள நவீன சுரங்கங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. சல்லடை போட்டு கடாபியை தேடி வருகிறது புரட்சிப்படை. கடாபி லிபியாவில் பதுங்கி இருக்கிறாரா அல்லது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று விட்டாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடாபி கைது செய்யப்பட்டால் லிபியாவில் விசாரணை செய்யப்படுவாரா அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவாரா என்பதை புதிய அரசாங்கமே முடிவு செய்யும்.
புரட்சிப் படையின் கிளர்ச்சியை முறியடிப்பேன் எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்று பெப்ரவரி மாதம் வானொலியில் உரையாற்றிய கடாபி தலைமறைவாகி விட்டார். தனது ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது விசுவாசமிக்க படையினர் நெடு நாட்களுக்குப் போராடமாட்டார்கள். உலக நாடுகள் புரட்சிப் படைக்கு உதவி செய்கின்றன என்பதை உணர்ந்த கடாபி எகிப்து, துனிஷியா, மொராக்கோ, அல்ஜிரியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு தூது விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. லிபிய பிரதமர் அல்பக்தாதி அரச தொலைக்காட்சித் தலைவர் அப்துல்லா மன்சூர் ஆகியோருக்கு மட்டும் துனீஷியா அடைக்கலம் கொடுத்துள்ளது.
கடாபியின் மனைவி சாடியா மகள் ஆயிஷா மகன்மாரான ஹனீபா,மொஹமட் ஆகியோர் தமது நாட்டில் அடைக்கலமடைந்திருப்பதாக அல் ஜீரியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
42 ஆண்டு லிபியாவை ஆட்டிப் படைத்த தலைவர் நாட்டையும் மக்களையும் கைவிட்டு தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். 27 வயதில் இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த கடாபி 69 ஆவது வயதில் இரத்தப் புரட்சி மூலம் ஆட்சியைப் பறிகொடுத்தார்.
ரமணி
மெட்ரோநியூஸ்
02/09/11







.
ரமணி
மெட்ரோநியூஸ்
02/09/11