Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Monday, April 11, 2016

பதுக்கிய பணத்தை பகிரங்கப்படுத்திய பனாமாபேப்பர்ஸ்


உலகின் மதிப்புமிக்கவர்களின் மறுபக்கம் எப்பொழுதும் மாறுபட்டதாகவே இருக்கும். அளவுக்கு மிஞ்சிய சொத்தை பாதுகாப்பதற்கு சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்தவர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர். நல்ல பிள்ளைபோல  அரசாங்கத்துக்கு வரிசெலுத்துபவர்கள் தமது கறுப்புப்பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கின்றனர். அவற்றைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. “பனாமா பேப்பர்ஸ்’”’””“ கடந்த  வாரம் கசியவிட்ட இரகசிய ஆவணங்களினால் பணமுதலைகள் திகைத்துப்போயுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்  புட்டின்,  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின், ஆர்ஜென்ரீனா ஜனாதிபதி  மாரிசியோ மாக்ரி, ஐஸ்லாந்து தீவு பிரதமர் சிக்மண்டூர் டேவிட் மற்றும் அவரது மனைவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.   , அபுதாபி மன்னரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான கலீபா பின் ஜயத் அல் நஹாயன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பும் இந்த பட்டியலில் உள்ளார். இவரது மகன்களும், மகள்களும் இணைந்து பிரிட்டிஷ் வர்ஜின் தீவில் நிறுவனங்களைத் தொடங்கினர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த உதைபந்தாட்ட வீரர்  லியானல் மெஸ்ஸியின் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. இவர் மீது ஏற்கனவே அவரது நாட்டில் பல வரி ஏய்ப்புப் புகார்கள் உள்ளன.. ஹொலிவுட் நடிகர் ஜாக்கி சானின் பெயரும் இப்பட்டியலில் உள்ளது. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபி உள்ளிட்ட பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். ஈரான், சிம்பாப்வே மற்றும் வட கொரியாவைச் சேர்ந்த 33 நபர்கள் அமெரிக்காவின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்களுள் ஒருவர் வட கொரியாவின் அணுவாயுத நடவடிக்கையுடன் தொடர்புடையவர் எனவும் அறியப்படுகின்றது 12 நாடுகளின் தலைவர்களும்   120 அரசியல் தலைவர்களும் இப்புகார் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


இந்திய பிரபலங்கள் பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர்  9 பேர், கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோர் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. 'இண்டியாபுல்ஸ்' நிறுவன தலைவர் சமீர் குலாடிழூ'அப்பல்லோ டயர்ஸ்' தலைவர் ஓன்கார் கன்வர்ழூலோக்சத்தா கட்சித் தலைவர் அனுராக் கெஜ்ரிவால்ழூமூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேழூமுன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் மகனும்இ பிரபல டாக்டருமான ஜகாங்கீர் சோலி சொராப்ஜிழூதமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன்   ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.
 சமூகத்தில் மதிப்புமிக்க அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்கள்,  கோடீஸ்வரர்கள்பனாமாவில் பணத்தைப் பதுக்கிவைத்திருப்பதாகத் தெரியவருகிறது. அமிதாப் பச்சன் ,ஐஸ்வர்யாராய்  ஆகியோர் இதனை மறுத்துள்ளனர். கடந்தாண்டு ஜெனிவாவின் ஹச்எஸ்பிசி வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள 1100 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டு சுவிட்சர்லாந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தற்போது இந்த பனாமா பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்து மக்களும் எதிர்க்கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தியதால் பிரதமர் டேவிட் இராஜினாமாச் செய்துள்ளார். தன மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் இராஜினாமா செய்யமுடியாது என தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தீவிரமாக போரட்டத்தை நடத்தியதால் வேறு வழி இன்றி   பிரதமர் பதவியை இராஜினாமாச் செத்தார். கட்சியின் தலைவராக செயற்படுகிறார்.

சுவிட்சர்லாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் வரிச்சலுகை கிடைப்பதால், அந்நாட்டு வங்கிகளில் பலர் முதலீடு செய்து வந்தனர்; குறிப்பாக கறுப்புப் பணம், இவ்வாறு பதுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், போலியான பெயரில் நிறுவனங்களை உருவாக்கி அதில் முதலீடு செய்வது. போன்ற மோசடி நடக்கிறது. மத்திய அமெரிக்க நாடான பனாமாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம், இதுபோன்ற மோசடியை மிகப்பெரிய அளவில் செய்து வருவது தற்போது அம்பலமாகி உள்ளது. இந்த நிறுவனத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி போலியான பெயரில் உள்ள நிறுவனத்தின் இயக்குனராக பதிவு செய்து கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பணத்தை பதுக்கி வைத்துக் கொள்ள இந்த நிறுவனம் உதவி வருகிறது. இதில்  இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


'மோசக் பொன்சிகா'என்ற சட்ட நிறுவனம் சர்வதேச அளவில் இந்த மோசடியை செய்து வருகிறது. பனாமா நாட்டில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து இந்த மோசடி குறித்த ஆவணங்கள் வெளியான தால் பனாமா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.அடையாளம் தெரியாத ஒருவர் அளித்த இந்த ஆவணங்கள் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சர்வதேச புலன் விசாரணை பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து கடந்த எட்டு மாதங்களாக ஆய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.கடந்த 40 ஆண்டுகளாக உலகெங்கும் 2.14 லட்சம் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்குறித்த விவரம்வெளியாகியுள்ளது.

 2013ம் ஆண்டு வெளியான விக்கிலீக்ஸை விட இது பெரிதாக பார்க்கப்படுகிறது. விக்கிலீக்ஸின் அம்பலத்தால் உலகின் பல நாடுகள் ஆட்டம் கண்டன. உலக வல்லரசான அமெரிக்காவை ஆட்டிப்படைத்த  விக்கிலீக்ஸின்  விவகாரம் நீண்டுகொண்டே  இருக்கிறது. கடந்த 1970களிலிருந்து பல ஆவணங்களை கொண்டுள்ளது இந்த பனாமா விவகாரம். இதில்  2.6 டெர்ராபைட் அளவிலான டேட்டாக்கள் உள்ளன. 11.5 மில்லியன் ஆவணங்கள் கசிந்துள்ளன. இதுதான் பெரும்பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. இதை கசிய விட்டவர் யார் என்பது தெரியவில்லை. 

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International Consortium of Investigative Journalism)  ) ஏப்ரல்  3 ஆம் திகதி ஞாயிறன்று  இந்த தகவல்களை பனாமா பேப்பர்ஸ்எனும் பெயரில் வெளியிட்டுள்ளது.

கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்கள் பனாமா நாட்டில் எவ்வாறு பதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களே கசிந்துள்ளன.மொசாக் பொன்சேகா நிதி நிறுவனம் 1977 இல் இருந்து 2015 டிசம்பர் வரையில் தங்கள் சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால்இமொசாக் ஃபொன்சேகா நிறுவனம் தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் இத்தகைய மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் நிதி மோசடிக்காரர்கள் அனைவரின் விபரங்கள்  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிபற்றி விசாரிப்பதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன. அப்போது கனவான்களின் முகத்திரை கிழிக்கப்படும்.
ரமணி
தமிழ்த்தந்தி
10/04/16




Monday, February 29, 2016

இந்திய மாணவர்கள் மத்தியில் முளை விடும் தேசத்துரோகம்.


டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் மாணவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது.     இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவைத் தியாகி என மாணவர்கள் கோஷமிட்டதால்   மாணவர்கள் மீது எதிர்ப்பலைகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன.  சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர் இயக்கத்தலைவர் கன்யா குமார் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் இந்தியாவைக் குறிவைத்து பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலும், மும்பை ஹோட்டல், ரயில் நிலையம் ஆகியவற்றின் மீதானன் தொடர் தாக்குதல்களும் இந்தியர்களின் மனதில்   வடுவை ஏற்படுத்தியுள்ளன. இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் இந்தியர்களின் மனதை அதிகளவில் பாதித்துள்ளது. நாடாளுமன்றத் தாக்குதலின் சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்ட அப்சல் குருவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்திய ஜனநாயகத்தைத் தகர்க்க முற்பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டவரை  மாணவர்கள் தியாகியாக்கியது இந்தியர்களின்மனதைப் புண்படுத்திவிட்டது.

 மாணவர் இயக்கத் தலைவர் கன்யா குமார் கைது செய்யப்படமுன் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கறுப்புச்சட்டை அணிந்த வக்கீல்கள் இத் தாக்குதலை முன்னின்று நடத்தினர்.  வக்கீல் போன்று  வேடமணிந்த தொலைக்கட்சிக்குழு இதனை ஒளிப்பதிவு செய்துள்ளது.  பொலிஸார் நடத்திய விசாரணையின் பின்னர்  பாகிஸ்தானை ஆதரித்து இந்தியாவை எதிர்த்து கன்யா குமார் கோஷமிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. என்றாலும்  கலாசார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததனால் அவர் மீது தேசத்துரோக குற்றச்சாடு சுமத்தப்பட்டுள்ளது.

 டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அப்சல் கரு நினைவுதினம் கொண்டாடுவதற்கு ஆலோசனை வழங்கிய உமர் காலித்,அனிர்பன்,பட்டாச்சாரியா,ராம நாகா,அசுதோஷ் குமார், அனந்த பிரகாஷ் ஆகிய மாணவர்கள் தான் இதன் சூத்திரதாரிகள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில்  இருந்தனர். பல்கலைக் கழகத்தினுள் செல்வதற்கு   பொலிஸுக்கு அனுமதி இல்லை என்பதனால் அவர்களை சரணடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   தலை மறைவனதாக அறிவிக்கப்பட்ட அவர்கள் பின்னர் பல்கலைக்கழக வளாகத்துக்குத்  திரும்பியதாக அறிவிக்கபட்டது..பெப்ரவரி 9 ஆம்  திகதி இச்சம்பவம் நடைபெற்றது.பெப்ரவரி 13   ஆம்  திகதி சம்பந்தப்பட்ட மாணவர்கள் சரணடைந்தனர்.

இந்தியர்களினால்   மறக்க முடியாத நாள் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  13 ஆம் திகதி. அன்றுதான் தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில்   ஆறு பாதுகாப்புப்படை வீரர்கள்,ஒரு பொலிஸ்காரர் உட்பட 13 பேர் தீவிரவாகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல்  நடத்த வந்த ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய  தலைவர்களில் ஒருவரான அத்வானி உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் அன்று நாடாளுமன்றத்தில் இருந்தனர்.  நாடாளு மன்றத்தைதோ நோக்கிச்சென்ற தீவிரவாதிகள் துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்தின் காரை  இடித்துத் தள்ளியபடி பாராளுமன்றத்தினுள் நுழைய முற்பட்டனர்.

இந்திய மக்களின் மனதுடன் மனதுடன் ஒன்றிணைந்த படைவீரர்களைக் கொன்ற தீவிரவாதிகளை   தியாகியாக்குவதை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. பாகிஸ்தானில் இருந்து இயங்கும் திவிரவதிகளினால் இந்தியாவில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இந்திய உளவுத்துறை அறிவிக்கிறது. உளவுத்துறை அதுபற்றிய எச்சரிக்கைளை அவ்வப்போது வெளியிடும். அந்த எச்சரிக்கைகளையும் மீறி நக்குதல் நடை சில வேளைகளில் நடைபெறுகின்றன.

இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கும் அப்சல் குருவுக்கும் தொடர்பு இல்லை என அவரின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.  உறங்கிக் கிடந்த இந்த உணர்வு மேலோங்குவதை இந்திய அரசாங்கம் இலகுவாக விட்டுவிடாது. இதற்குரிய அதிகபட்ச  நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்க மாட்டாது.  அப்சல் குருவை நினைவு கூர்ந்த மாணவர்களுக்கும்  பயங்கரவதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். மாணவர்கள் அதனை மறுத்துள்ளனர்.  அந்தப் பல்கலைக் கழகத்தினுள்  மதுப்போத்தல்களும்  ஆணுறைகளும்  தாராளமாகக்  கிடைப்பதாக அமைச்சர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 அரசியல்வாதிகள் மட்டுமல்லாது சினிமா நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் ஆகியோரும்  படை வீரர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறுவயது முதலே பிள்ளைகளிடம் தேசப்பற்றை வளர்க்க கற்றுக்கொடுக்க வேண்டும் என நடிகர் மோகன் லால் தெரிவித்துள்ளார். பேச்சுரிமை, தேசப்பற்று என்றஜனநாயகத்தில் நேரு பல்கலைக் கழகத்தில்  நடக்கும் போராட்டங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இராணுவ வீரர்கள் எல்லையில் விழித்திருப்பதனால் தான் நாம் நிம்மதியாக தூங்க முடிகிறது.  அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த முடிகிறது என மோகன் லால் தெரிவித்துள்ளார்.

சிறப்புப் படைவீரர்களும் கொமாண்டோக்களும் உங்களையும் என்னையும் போற சாதாரண மனிதர்கள் தான் சுயநலனுக்கு முன்பாக தேசிய நலன்தான் முக்கியம் என அவர்களுககு உணர்த்தப்பட்டுள்ளது என  டோனி தெரிவித்துள்ளார். அப்சல் குரு தியாகி என்றால் சியாச்சின் பணியில் மரணமாகும் வீரர்கள் யார் என குத்துச்சண்டை வீரர்  யோகேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார். ஒருவர் தான் வாழும் நாட்டைப்பற்றி பல்கலைக்கழகத்தில்  தவறாகப் பேசக்கூடாது தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஷிகர் தவன் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.   தேச நலனுக்கு முன்பாக அரசியல் நலனைப்  பார்க்கக்கூடாது. அப்சல் குருவுக்கு அதரவாக முழக்கமிடப்பட்ட வீடியோவைப் பார்த்து அதிச்சியடைந்தேன்  என்கிறார்  கம்பீர்

டில்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் இந்திய மக்களின் உணர்வைத் தூண்டியுள்ளது. ஆகையினால் இச் சம்பவத்தின்  பின்னணியை கண்டு பிடித்து வேரை அடியுடன் பிடுங்குவதற்கு இந்திய் அரசு தயங்காது.
ரமணி.
தமிழ்த்தந்தி
28/02/16







Thursday, February 11, 2016

உயிருடன் விளையாடும் விபத்துகள்


வீட்டைவிட்டு வெளியே  சென்றால் உயிருடன் திரும்பி வருவோமா  என்ற சந்தேகம் உள்ளது.   எப்படித்தான் அவதானமாக நடமாடினாலும்  விபத்து என்ற கோர அசுரன் உயிரைக் காவு கொள்கின்றது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் எப்போதாவது ஒரு நாள் விபத்து நடைபெற்றது. இன்று விபத்துக்கள் இல்லாத நாளே கிடையாது.

வாகனங்கள் அதிகரித்தது விபத்துக்கு ஒரு  காரணம் என்று கூறப்படுகிறது. வாகனப் பெருக்கம் ஒரு காரணமாக இருந்தாலும்  வாகனங்களைச் செலுத்துபவர்களின் அனுபவமின்மையும் பிரதான காரணம். கொஞ்சம் பின்னோக்கிய காலத்தில் உயர் தரம் படிக்கும் மாணவனுக்குத்தான் சைக்கிள் வாங்கிக் கொடுப்பார்கள்.  இன்று நிலைமை மாறிவிட்டது. மோட்டார் சைக்கிள் ஒரு  கெளரவப் பொருளாகி விட்டது.யாழ்ப்பாணத்திலே  முன்னர்  ஒரு வீட்டிலில் இரண்டு மூன்று சைக்கிள்கள்   இருந்தன. இன்று அந்த இடத்தை மோட்டர் சைக்கிள்கள் பிடித்துவிட்டன. உயிரை கவு கொள்வதில் மோட்டர் சைக்கிள் விபத்து  முன்னிலையில் உள்ளது.

திருமணம்,பிறந்த நாள்,விருந்துபசாரம் போன்ற விசேஷமான நாட்களில் அவசர தேவைக்காக மோட்டர் சைக்கிளில் அதி வேகமாகச்செல்லும் இளைஞர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.  கடந்த வாரம் யாழ்ப்பணத்தில் உள்ள பிரபல பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்  வீதியை ஆக்கிரமித்து சாகசம் கட்டியதி  பாரிய விபத்து நடைபெற்றது.பல்கலைக் கழக மாணவன் மோட்டர் சைக்கிளில் விபத்தில் சிக்கியதால் பரீட்சை எழுத முடியாது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.  இது போன்ற விபத்துக்களை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.விபத்தி லிருந்து நாமும் மற்றவர்களும் பாதுகாக்கப்பட வேண்டுன் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தால் இது போன்ற  விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை. 

வீதி ஒழுங்கு சரியான முறையில் கடைப்பிடிக்கப்படாமை  அதிக வேகம் கார்பெட் வீதிகள்  என்பனவும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கான காரணிகள். மஞ்சள் கோட்டிலே வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமான  சாரதிகளுக்கு இல்லை. விதியைக் கடக்க நிற்பவர்களை அற்ப பதர்கள் போல பார்த்துக் கொண்டு செல்வார்கள். தமக்காக மட்டும் அமைக்கப்பட்ட பிரதான வீதி என்ற நினைப்பு சில சாரதிகளிடம் உள்ளது.  முன்னுக்குச்செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் எனற அவா சில சமயம் விபத்தை உண்டாக்கி விடுகிறது.

இ.போ.சவுக்கும் தனியார் பஸ்ஸுக்கும்  இடையேயான போட்டியால் அநியாயமாக பல உயிர்கள் பறிக்கப்படுகின்றன. கடந்த வாரம் பலாலி வீதியில் நடைபெற்ற கோர விபத்து இதற்கு சாட்சி. வாகனத்தை  முந்திச்செல்வது.   நடு வீதியில் பயணிகளை இறக்குவது ஏற்றுவது என்பான பயணிகளுக்கு  அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பின்னால் வரும் வாகனத்தை முந்த விடாது நடு வீதியில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனத்தைச்செலுத்தும் சாரதிகள் பின்னர் அதுபற்றி பெருமையாகப் பேசுவார்கள். இ.போ.சவுக்கும் தனியார் பஸ்ஸுக்கும் இடையேயான  போட்டி சில சமயம் கைகலப்பாகவும் மாறிவிடுவதுண்டு.

மது அருந்தி விட்டு வாகனத்தைச் செலுத்துவது  பாரிய விளைவைத் தோற்றுவிக்கும் என்பதை அறிந்து கொண்டும் மது அருந்திய பின வாகனத்தைச் செலுத்துகிறார்கள்.   விசேஷமான நாட்களின் மது அருந்துவது கட்டாயம் என்ற மனோநிலை  சிலரிடம் ஏற்பட்டுள்ளது.  மது அருந்திய பின் வாகனம் செலுத்தக் கூடாது, ஹெல்மட் இல்லாமல் மோட்டர் சைக்கிள் செலுத்தக்  கூடாது என்பனவற்றைத் தெரிந்து கொண்டும் அப்படியான தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்.

 ரயிலை முந்திச்செல்ல முயலும் புத்திசாலிகளால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. பாதுகாப்பற்ற  புகையிரதக் கடவையில் விபத்து புகையிரதக் கடவைக்கு பாதுகாப்பு போட வேண்டும் எனக்கோரி  மக்கள் போராட்டம் என்ற செய்தி பத்திரிகைகளில் முதலிடம் பிடிக்கின்றன. அதேவேளை பாதுகாப்பான கடவையில் புகையிரதத்தை முந்திச்செல்ல முயன்று நடைபெறும் விபத்துக்களும் இடம் பிடிக்கின்றன. புகையிரதக்  கடவையின் இரண்டு பக்கங்களிலும் துலாவை இறக்கிவிட்டு பீப்  பீப்  என்ற எச்சரிக்கை ஒலி கேட்கும் போது சில அவசரக் குடுக்கைகள்   வீதியைக் கடக்க்கிறார்கள். விதி வலியதாகும் போது அவர்களின் வாழ்வு  அங்கேயே முடிந்து விடுகிறது.

திருமணத்துக்காக வெளிநாட்டில் இருந்து வந்த மணமகன்  பலி என்ற செய்தி பலரையும் கலங்க வைக்கும் செய்தி என்பதில் சந்தேகமில்லை.அப்படியான சந்தர்ப்பங்களில் வாகனத்தைச் செலுத்துபவர்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.இரவு பகல் நித்திரை இல்லாது வாகனம் செலுத்துவதும் விபத்துக்குக் காரணமாகிறது. சில நிறுவனங்கள் சாரதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து செலவை மிச்சம் பிடிக்கிறார்கள். அப்போது மேலதிக வேலையில் கிடைக்கும் அதிக சம்பளத்துக்கு ஆசைப்படுவபர்களால் விபத்தைத் தவிர்க்க முடிவதில்லை.

விபத்து என்பது நம்மையும் மீறி  நடைபெறும் ஒரு சம்பவம். ஆனால், இன்றைய அதிகமான விபத்துகள் அலட்சியத்தால் நடைபெறுகின்றன, வாகனத்தைச் செலுத்தும்போது எனது குடும்பத்தை நான் காப்பற்ற  வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் விபத்தைத் தவிர்க்கலாம்.
ஊர்மிளா
 சுடர் ஒளி
பெப்ரவரி 10,பெப்ரவரி 16/16










Monday, November 9, 2015

தூண்டிலில் சிக்கிய நிழல் உலக தாதா

 இந்தியஅரசுக்கு பெரும் தலையிடியைக்கொடுத்த நிழல் உலக தாதாக்களில் ஒருவரான‌ சோட்டாராஜன் கடந்த மாதம் 25 ஆம் திகதி  இந்தோனேஷியாவின் பாலித்தீவில்  கைது செய்யப்பட்டார்.
தாவூத் இறாஹிம், சோட்டாராஜன் ஆகிய இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோல் மும்பையில் இருந்து இந்தியாவை ஆட்டிப்படைத்தவர்கள்.
போதைவஸ்து,விபச்சாரம்,களியாட்டம் போன்பனவற்றுக்கு பெயர்போன பாலித்தீவுக்கு அடிக்கடி செல்பவர்கள்மீது இந்தோனேஷிய பொலிஸார் ஒருகண் வைத்திருப்பது வழமை. சட்டவிரோத செய்ல்கள் செய்பவர்கள் அவர்களின் கண்ணில் மண்னைத்தூவி தமது காரியங்களை கனகச்சிதமாக செய்வார்கள்.அவுஸ்திரேலியாவில் இருந்து அடிக்கடி பாலித்தீவுக்கு வந்துபோகும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் இந்தோனேஷிய பொலிஸ்கைது செய்தது. தம்மால் கைது செய்யப்பட்டவர் இன்ரபோல் பொலிஸால் தேடப்படும் நிழல் உலகதாதா என்பது இந்தோனேஷியபொலிஸுக்குத் தெரியாது.
 போலிக் கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட  இந்தியரைப்பற்றிய தகவலை இந்தோனேஷியப் பொலிஸார் தேடியபோதுதான் அவர் சோட்டாராஜன் என இந்திய அதிகாரிக‌ளால் அடையாளம் காணப்பட்டது.சோட்டா ராஜனைப்பற்றிய மேலதிக விபரங்களை அறிந்த இந்தோனேஷிய அதிகாரிகள் அவருக்குபலத்த பாதுகாப்பு வழங்கினர்.
ராஜேந்திர நிகல்ஜே என்பதுதான் சோட்டாராஜனின் உணமைப்பெயர்.மும்பைக்கு அருகே உள்ள ச்லோனார் என்ற கிராமத்தில் 1960 ஆம் ஆண்டு பிறந்தார்.சதாஷிவ் என்ற மில் தொழிலாளியின் மகனான இவ‌ர் சிறிவயதிலே படிப்பை கைவிட்டு தியேட்டரில் பிளக் ரிக்கெற் விற்றார். பொலிஸார் இவரைக் கைது செய்யமுற்பட்டபோது ஆறு பொலிஸாரைத்தாக்கினார். இதௌதான் இவரது முதல் குற்றம் இதற்காக சிறைக்குச்சென்றுவந்தபின் சிறைக்குப் போவதை பெருமையாக நினைத்தார். இரண்டு கொலைகள் காரணமாக பொலிஸாரால் தேடப்பட்டார். நீதிமன்றத்தில் பிரபல தாதா ஒருவரை வெட்டிச்சாய்த்ததால் இவரின் பெயர் பிரபலமானது.
திலக் நகரில் பிரபல தாதாவான‌ ராஜன் மகாதேவ்  நாயரின் நட்பு இவரின் கரத்தைப்பலப்படுத்தியது. ராஜன் மகாதேவ்  நாயரை படா ராஜன் எனவும் இவரை சோட்டாராஜன் எனவும்  அழைத்தார்கள். படாராஜன் என்றால் பெரிய ராஜன். சோட்டாராஜன் என்றால் சிறிய ராஜன்.சிறிய ராஜனின் செயல்கள அனைத்தும் கொரூரமானவை. ஈவுஇரக்கம் பார்க்காது எதிரிகளை துவம்சம் செய்வார்.
தாதாக்களின் வாழ்க்கை நிரந்தரமானதல்ல. எதிரிகளின் குறி எந்தநேரமும் அவர்களை நோக்கியே இருக்கும்.அரசியல்வாதிகளும் பொலிஸாரும் கொடுக்கும் பாதுகாப்பு நிரந்தரமானதல்ல.
எதிரிகளால் படா  ராஜன்  பழிவாங்கப்பட்டபின்னர் சோட்டா ராஜன் தலைவரானார். மும்பையின் பிரபல நிழலுலக தாதாவான தாவூத் இப்ராகிமின் தொடர்பு சோட்டா ராஜனின் குழுவுக்கு புதிய தெம்பைக்கொடுத்தது.
தாவூத் இப்ராஇப்ராஹிமின் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரவேன்டிய நிலை மும்பை பொலிஸுக்கு ஏற்பட்டது. இதனை அறிந்த தாவூத் தனது வலதுகரம்போல் செயற்படும் சோட்டாராஜனுடன்  1980 ஆம் ஆன்டு துபாய்க்கு சென்றார்.துபாயில் இருந்தபடி தாவுத் நிழல் உலக வேலைகளைச்செய்தார்.1993 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுஆத்திரமடைந்த தாவூத், இந்திய அரசைப்பழிவாங்குவதற்காக மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தினான்.அரசாங்கத்திப் பழிவாங்குவதற்காக பொதுமக்களைக்கொல்வதை சோட்டாராஜன் விரும்பவில்லை.

சோட்டாராஜனுக்கு எதிரான தாவூத்தின் தளபதிகளான ஷக்கீல்,சரத் ஷெட்டி,செள்த்யா ஆகியோர் இதனைத் தமக்கு சாதகமாக காய்நகர்த்தி  சோட்டா ராஜனை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினார்கள். இதனை அறிந்த சோட்டாராஜன், தாவூத்தைப்பிரிந்து தனிராஜ்ஜியம் அமைத்தார். 1996 இல் சோட்டாராஜனின் சம்ஜாஜ்யம் விரிவடைந்தது.தாய்லாந்து,மலேசியா போன்ற நாடுகளில் டிஸ்கோ இரவு விடுதிகள்  பலவற்றை பினாமிகளின் பெயரில் சோட்டாராஜன் ஆரம்பித்தார். இதனால் தாவூத்தின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது.


தாவூத்தைக் கைது செவதற்காக இந்திய அதிகாரிகள் துபாக்கு சென்றபோது அவர் பாகிஸ்தானுக்குத்தப்பிவிட்டார். சோட்டாராஜன் பாங்கொங்கில் தலை மறைவானார். சோட்டாராஜனைக்கொல்ல  தாவூத் தனது அடியாட்கலை ஏவிவிட்டார். இதனை அறிந்த சோட்டாராஜன் மும்பாய் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஆறுபேரை மும்பாயில் கொலை செய்தான். இதனால் மும்பை மக்கள் சோட்டாராஜனை புகழ்ந்தனர். சோட்டாராஜன் மீது தீராதவெறியை ஏற்படுத்த இச்சம்பவம் காரண‌மானது.
பாங்கொங்கில் சோட்டா ராஜன் தங்கி இருந்த வீட்டை தாவூத்தி ஆட்கள் சுற்ரிவழைத்துத் தாக்குதல் நடத்தினார்கள். 2000 ஆம் ஆன்டு நடைபெற்ற சம்பவத்தில் சோட்ட ராஜனின் தளபதியான ரோஹொத் வர்மா கொல்லபட்டான். சோட்டராஜனின் வயிற்றில் குண்டு பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினான்.
சோட்டா ராஜன் அவுஸ்திரேலியாவில் தங்கி இருப்பதைத் தெரிந்துகொண்ட தாவூத்தின் ஆட்கள் அவரை கொல்ல திட்டமிட்டிருந்தனர். சோட்டா ராஜனுக்கு  சிறுநீரக சத்திர சிகிச்சை செய்யப்பட்டதால் அவரை நெருங்குவது சுலபம் என தாவூத்தின் ஆட்கள் கருதியபோது சோட்டாராஜன் திடீரென கைதுசெய்யப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளியில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்பதால் இந்திய சிறையில் இருப்பது பாதுகாப்பு என்பதால் சரணடைந்ததாக கருதப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பில் இத்தனை காலமும் இருந்த சோட்டா ராஜனை பாதுகாப்பதற்காகவே இந்த சரணடையும் படலம் நடைபெற்றதாகவும் கருதப்படுகிறது.தாவூத் வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவில் எதையும் செய்யக்கூடிய தொடர்பு அவனுக்கு உள்ளது. சிறைச்சாலைகளில் தாவூத்துக்கு வேண்டப்பட்டவர்கள்  இருக்கலாம் அவர்களினால் சோட்டா ராஜனுக்கு ஆபத்து ஏற்படலாம்.
சோட்டாராஜனுக்ல்கு எதிராக 75க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன.நேபாளத்திலும் சோட்டாராஜனுக்கு எதிரான கொலைக்குற்றச்சாட்டு உள்ளது.சோட்டா ராஜனுக்கு சொந்தமான சுமார்  5000 கோடிரூபா சொத்து இருப்பதாக நம்பப்படுகிறது. அதை நாட்டுக்கு கொண்டுவர வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.
நிழலுலக தாதா சோட்டா ராஜன் சுயநலவாதியென்றும், யார் என்ன சொன்னாலும் சந்தேகப்பட்டு கூட இருந்தவர்களையே கொலை செய்தவர் என்றும் நிழலுலக வட்டாரங்கள் கூறுகின்றன. நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிடமிருந்த தொடர்பை துண்டித்து 1995ல் சோட்டா ராஜன் தனி சாம்ராஜ்யம் உருவாக்கினார். இதனால் தாவூத் ஆட்களால் தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடே சோட்டா ராஜன் சுற்றித்திரிந்தார்.
 அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு, காண்போர் மீதெல்லாம் சந்தேகத்தை உருவாக்கியது. இதனால், சோட்டா ராஜன் தனக்கு நெருக்கமாக இருந்த ஓபிசிங், மோகன் கோடியன், பாலா கோடியன், பாரத் நேபாளி மற்றும் சாமுவேல் ஆகியோரை பினிஷ் செய்துள்ளார்.
 இரு வருடங்கள் முன்பு நடைபெற்ற பத்திரிகையாளர் ஜேடே கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு தொடர்புள்ளது. அந்த பத்திரிகையாளரும் சோட்டா ராஜன் பற்றிய தகவல்களை தாவூத் வலதுகரமாக உள்ள சோட்டா ஷகீலுக்கு தெரிவித்த சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்டவர்தான்

 சோட்டா ராஜனிடம் யாராவது ஒருவரை பற்றி புகார் சொன்னால், கோள்மூட்டினால், அதுகுறித்து உண்மையை ஆராயாமலே கொலை செய்துவிடுவது வழக்கமாம். இதனால் அவரை நம்பி தாவூத் குரூப்பில் இருந்து வந்தவர்கள் எல்லோரும் உயிரை கையில் பிடித்தபடி வலம் வந்துள்ளனர்.
 இப்படித்தான் ஒருமுறை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ரியாஸ் பத்கலை கொன்றுவிட்டதாக கூறிய தனது அடியாளுக்கு, பல கோடி பணம் கொடுத்து அனுப்பியுள்ளார் சோட்டா ராஜன். பின்னர், ரியாஸ் பத்கலை தான்தான் ஆட்களை வைத்து கொன்றதாக பகிரங்கப்படுத்தவும் செய்துள்ளார். ஆனால், உண்மையிலேயே ரியாஸ் பத்கல் கொலை செய்யப்படவில்லை என்பது சோட்டா ராஜனுக்கே பிறகுதான் தெரியவந்துள்ளது.
 டான் வரதபாய் என்னும் வ‌ரதராஜ முனுசாமி,ஹாஜி மஸ்தான் ஆகிய இரண்டு தமிழர்கள் மும்பாயில் நிழல் உலக தாதாவாக இருந்தனர். இவர்களின் காலத்திலேதான் ராஜன் மகாதேவ் நாயரும் தாதாவாக வலம் வந்தார். ஒருகாலத்தில் இவர்கள் மூவரும் வைத்ததுதான் சட்டம்.இவர்கள் மூவரும்தான்இன்றைய நிழல் உலக தாதாக்களுக்கு முன்னோடி.சோட்டாராஜன் அகப்பட்டுவிட்டான்.அதுத்த தாதாவன தாவூத்தை கைது செய்வதற்கு இந்திய அரசாங்கம் முயற்சி செய்கிறது பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்காததனால் அவரைநெருங்க முடியவில்லை .
இந்திய தாதாக்களின் வாழ்க்கை சில திரைப்படங்களாக வெளிவந்து சக்கை போடுபோட்டன. வரதராஜ முனுசாமி முதலியாரின் கதைதான் கமல் நடித்த நாயகன் படமாக வெளிவந்தது. அஜய் தேவகான் நடித்த ஒன்ஸ் ரபான் எ டைம் அமிதாப் கதாநாயகனாக நடித்த தீவார் ஆகிய படங்கள்  ஹாஜிமஸ்தானின் கதையை பின்னணியாகக்கொண்டு தயாரிக்கப்பட்டவை.சோட்டா ராஜனின் இந்த வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு ஹிந்தியில் 'கம்பெனி', 'வாஸ்தவ' என்று இரு சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டன. கம்பெனி படத்தில் சோட்டா ராஜன் போன்ற வேடத்தில் விவேக் ஓபராய் நடித்தார். 'வாஸ்தவ' படத்தில் சோட்டா ராஜன் போன்று சஞ்சய் தத் நடித்தார்.
சோட்டா ராஜன் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டாலும் தனது 3 மகள்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார். அவரது மூத்த மகள் இங்கிலாந்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவரது இரண்டாவது மகள் என்ஜினீயராக இருக்கிறார். சோட்டா ராஜனுடன் பிறந்த சகோதரர்கள் தற்போதும் செம்பூரில் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார்கள்.
பாகிஸ்தானின் ஆதரவும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளின் தொடர்பும் தாவூத்துக்கு இருப்பதனால் அவர் சுதந்திரமாக இருக்கின்றார்.
ரமணி
தமிழ்த்தந்தி 08/11/15

Saturday, May 9, 2015

நொறுங்கியது நேபாளம்

உலகின் மிக உயர்ந்த இடத்தில் இடுப்பதால் பெருமைப்பட்ட நேபாளத்தை பூகம்பம் புரட்டிப்போட்டு விட்டது சரித்திரப்பிரசித்தி பெற்ற புராதன கட்டடங்கள் தரைமட்டமாகிவிட்டனஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி  7.6  ரிகட அளவில் ஏற்பட்ட பூகம்பம் நேபாளத்தை  புரட்டிப்போட்டது. இந்த்ப்பூகம்பத்தினால் 7500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.  இடிபாடுகள் அப்புறப்படுத்தப்படும்போது மரணனமானவர்களின் தொகை 10000 ஐ  தாண்டலாம் என அஞ்சப்படுகிறது. 50 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடிந்த நேபாளத்தைக்கட்டி எழுப்ப 25 வருடங்கள் தேவைப்படும்.

சுற்றுலாப்பயணிகளின் எழில்மிகுநாடு நேபாளம்.சாகசம் செய்பவர்களின் இதயபூமி.  10000ஆயிரத்துக்கும் அதிகமான வெளி நாட்டுபயணிகள் நேபாளத்தில் சிக்கினார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான மலை ஏறும் வீரர்கள் அந்தரத்தில் தவித்தனர். பூகம்பத்தில் சிக்கிய 25 மலை ஏறும்வீரர்கள்  மரணமானார்கள் உலக நாடுகள் உதவிபுரிய முன்சென்றன. 

பூமித்தகடுகளின் அசைவே பூகம்பத்துக்குக் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 80 வருடங்களுக்கு ஒரு முறை பூகம்பத்தின் கோரத்தாண்டவம் நேபாளத்தை  புரட்டிப்போடும் என்பது அந்நாட்டின் பூர்வீகக்கதை. 2கோடி 80 இலட்சம் மக்கள் வழும் நேபாளத்தின் தலைவிதியை ஒரு பூகம்பம் மாற்றி எழுதியது.


தலைநகரம் காட்மண்ட் இடம் மாறிவிட்டது இமயமலை சற்று உயர்ந்து விட்டது.கர்ப்பிணிகள்  சிறுவர்கள்  கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்லனர். வதந்தியும் திருட்டும் மக்களை அச்சுறுத்துகின்றன.காட்மண்டுக்கு வடக்கே 80 கி.மீதூரத்தில் உள்ள  லம்ஜாம் கிராமம் உருத்தெரியாமல் அழிந்துள்ளது.

 1832ஆம் ஆண்டு கட்டப்பட்ட  வரலாற்றுச்சின்னமான தாரஹா தரைமட்டமானது . இக்கட்டடத்தி நின்ற சுமார் 200 உல்லாசப்பயணிகளின் உடல்கள் மிட்கப்பட்டன. மீட்புப்பணி துரித கதியில் நடைபெறுகிறது. சுமார் 50 ஆயிரம் கரிப்பிணிகள் பாதிப்படைந்துள்ளனர். பனிப்பாறை சரிந்து 250 பேர் பலியானார்கள். 
புத்ததூபி பெரும்பாதிப்படைந்துள்ளது. பசுபதி நாதர் கோயில் சிறு பாதிப்புடன் தப்பிவிட்டது.

நேபாளத்தைத்தாக்கிய பூகம்பம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. பீகார்,உத்தரப்பிரதேசம்,மேற்குவங்காளம்,ராஜஸ்தான்,அரியானா,டில்லி,பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலுல் சிறிய சேதத்தை  உண்டாக்கியது.




உலகை அச்சுறுத்திய பூகம்பங்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடந்த 80 ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும்.
1906 ஜனவரி 21 :– ஈக்வடார் கடற்கரை பகுதியில் பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டு 500 பேர் பலியானார்கள்.
1922 நவம்பர் 11 :– சிலி–அர்ஜென்டைனா எல்லையையொட்டி 8.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சுனாமியில் சிலி கடற்கரை சேதமானது.
1923 பிப். 3 :– ரஷியாவில் விந்தூரா கிழக்கில் உள்ள சம்சக்தாவில் 8.5 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் மற்றும் சுனாமி.
1934 ஜனவரி 15 :– நேபாளத்திலும், பீகாரிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,700 பேர் உயிரிழந்தனர். பூகம்ப அளவு 8.1 ரிக்டராக பதிவானது.
1938 பிப். 1 :– இந்தோனேசியாவில் யாண்டா கடற்பகுதியில் 8.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டது.
1950 ஆகஸ்டு 15 :– திபெத்தில் 8.6 ரிக்டராக பதிவான நிலநடுக்கத்தால் 750 பேர் பலியானார்கள்.
1952 நவம்பர் 4 :– ரஷியாவில் கம்ஷக்தா பகுதியில் 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிர் இழப்பு இல்லை. ஆனால் ஹவாய் தீவில் 30 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் உருவெடுத்தது.
1957 மார்ச் 9 :– அலாஸ்காவின் ஆன்ட்ரியான் தீவின் 8.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி காரணமாக 52 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தது.
1960 மே 22 :– சிலியில் 9.5 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டு அதை தொடர்ந்து நிகழ்ந்த சுனாமியில் 1716 பேர் பலியானார்கள்.
1964 மார்ச் 28 :– அலாஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.2 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 131 பேர் பலி.
1965 பிப். 4 :– அலாஸ்காவின் ரேட் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 35 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன.
1976 ஜூலை 28 :– சீனாவின் ஹெபோய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2.42 லட்சம் பேர் பலியானார்கள்.
1988 ஆகஸ்டு 20 :– நேபாளத்தின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 721 பேர் இறந்து போனார்கள்.
1991 அக். 20 :– உத்தரபிரதேச மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 768 பேர் உயிரிழந்தனர்.
1993 மார்ச் 30 :– மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7,660 பேர் உயிர் இழந்தனர்.
2001 ஜனவரி 26 :– குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 25 ஆயிரம் பேர் இறந்தனர். 1.6 லட்சம் பேர் காயம் அடைந்தனர்.



2003 டிச. 26 :– ஈரானில் பாம்நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31 ஆயிரத்து 884 பேர் பலியானார்கள்.
2004 டிச. 26 :– இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
2005 மார்ச் 28 :– இந்தோனேசியாவின் நியாஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 900 பேர் இறந்துள்ளனர்.
2005 அக்டோபர் 8 :– பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைபுறத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந் தனர்.
2006 மே 27 :– இந்தோனேசியாவின் யோக்கியகர்த்தா மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் 6 ஆயிரம் பேர் இறந்தனர். 15 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
2008 மே 12 :– சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
2010 ஜனவரி 12 :– ஹதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 2.50 லட்சம் பேர் இறந்தனர்.
2011 மார்ச் 21 :– ஜப்பானின் வடகிழக்கு பகுதியின் கடலோர பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி தாக்கி 18 ஆயிரத்து 900 பேர் பலியாகிவிட்டனர்.
2012 ஆகஸ்டு 11 :– ஈரானின் தாப்ஸ் நகரில் ஏற்பட்ட இரட்டை நில நடுக்கத்தால் 306 பேர் இறந்தனர்.



1960 மே 22 தெற்கு சிலியில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.5 பதிவானது. இதனால் ஏற்பட்ட சுனாமியில் 1,716 பேர்  உயிரிழந்தனர்.


1964 மார்ச் 28: அலாஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்டில் 9.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 131 பேரும், இதை தொடர்ந்து  வந்த சுனாமியில் 128 பேரும் இறந்தனர்.

2004 டிசம்பர் 24: இந்தோனேஷியாவில் 9.1 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி இந்தியா  உட்பட பல நாடுகளையும் புரட்டிப்போட்டது. இதில் 2,30,000 பேர் இறந்தனர்.

2011, மார்ச் 11: ஜப்பானின் வடகிழக்கு கடல் பகுதியில் 9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 18,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

1952, நவம்பர் 4: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா பகுதியில் 9 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும்  உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

2010, பிப்ரவரி 27: சிலியில் 8.8 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 524 பேர் இறந்தனர்.

1906, ஜனவரி 31: ஈக்வடாரில் 8.8 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கமும் அதை தொடர்ந்து உருவான சுனாமியாலும் 500க்கும் மேற்பட்டோர்  பலியாகினர்.

1965, பிப்ரவரி 4: அலாஸ்காவில் உள்ள ராட் தீவில் 8.7 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 35 உயரத்துக்கு அலைகள்  ஆர்பரித்து எழுந்தன.



Add caption

2005, மார்ச் 28: இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் 8.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1,300 பேர் இறந்தனர்.


1950, ஆகஸ்ட் 15: திபெத்தில் 8.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தில் 780 பேர் பலியாகினர்.



2012, ஏப்ரல் 11: வடக்கு சுமத்ராவில் 8.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட சுனாமியில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன.



1957, மார்ச் 9: அலாஸ்காவில் உள்ள ஆண்ட்ரியானாப் தீவில் 8.6 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து 52 அடி உயர சுனாமி அலை  உருவானது.
2007, செப்டம்பர் 12: இந்தோனேஷியா சுமத்ரா அருகே 8.5 ரிக்டருக்கு ஏற்பட் நில நடுக்கத்தில் 25 பேர் இறந்தனர்.



1938, பிப்ரவரி 1: இந்தோனேஷியா பாண்டா கடலில் 8.5 ரிக்டருக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சிறிய சுனாமி ஏற்பட்டது.



1923, பிப்ரவரி 3: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா பகுதியில் 8.5 ரிக்டருக்கு ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி  உருவானது.



1922, நவம்பர் 11: சிலி அர்ஜெட்டினா எல்லையில் ஏற்பட்ட 8.5 ரிக்டர் நில நடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் சிலி கடலோர பகுதிகள் பெரும் சேதம்  அடைந்தன.



1963 அக்டோபர் 13: ரஷ்யாவின் குரில் தீவில்8.5 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.