Showing posts with label உலகக்கிண்ணம் 26. Show all posts
Showing posts with label உலகக்கிண்ணம் 26. Show all posts

Friday, July 17, 2026

உலகக்கிண்ணப் போட்டியில் சாதித்த ஏழாவது பயிற்சியாளர்

 இரண்டு உலகக்கிண்ண  இறுதிப் போட்டிகளுக்கு அணியை வழிநடத்திய ஏழாவது பயிற்சியாளர்  என்ற பெருமையை ஆர்ஜென்ரீனாவின்  தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி,  பெற்றார். 2022-ல் அந்த அணி வெற்றி பெற்றபோதும் அவரே பொறுப்பில் இருந்தார்.   

  உலகக் கிண்ண   இறுதிப் போட்டிகளுக்குத்  இரண்டு முறை தகுதி பெற்ற பயிற்சியாளர்களின் பட்டியல்

லியோனல் ஸ்கலோனி: ஆர்ஜென்ரீனா (2022 & 2026)

விட்டோரியோ போஸோ: இத்தாலி (1934 & 1938)

ஹெல்முட் ஷான்: ஜேர்மனி (1966 & 1974)

மரியோ ஜகாலோ: பிறேஸில் (1970 & 1998)

கார்லோஸ் பிலார்டோ: ஆர்ஜென்ரீனா (1986 & 1990)

ஃபிரான்ஸ் பெக்கன்பவுர்: ஜேர்மனி (1986 & 1990)

டிடியர் டெஷாம்ப்ஸ்: பிரான்ஸ் (2018 & 2022). 

ரூனியின் சாதனையை முறியடித்தார் கேன்


  ஆர்ஜென்ரீனாவுக்கு  எதிராக தனது 121வது சர்வதேசப் போட்டியில் விளையாடியதன் மூலம், இங்கிலாந்தின்  முன்னாள் கப்டன் வெய்ன் ரூனியை முந்தினார் ஹரி கேன். ஒட்டுமொத்த சாதனையை கோல்கீப்பர் பீட்டர் ஷில்டன் (125) தக்கவைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 85 கோல்களுடன் சர்வதேச அளவில் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை கேன் பெற்றுள்ளார். தனது பதவிக்காலத்தில் 53 கோல்கள் அடித்த ரூனியிடமிருந்து அவர் கைப்பற்றிய மற்றொரு சாதனை இதுவாகும்.

பேயர்ன் முனிச் அணியின் முன்கள வீரர், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடரில் 14 கோல்களை அடித்து, கெர்ட் முல்லருடன் இணைந்து எல்லாக் காலத்திற்குமான பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டியில்  ஆங்கிலேயர் ஒருவர்  அடித்த அதிகபட்ச கோல்கள் இதுவே ஆகும்.

அரையிறுதிக்கு இங்கிலாந்து முன்னேறிய பயணத்தில் கேன் ஆறு கோல்களை அடித்துள்ளார்.   நாட்டின் தொடர் சாதனையை (1986-ல் கேரி லினெக்கர் , 2018-ல் கேன் அடித்த 6 கோல்கள்) முறியடிக்க அவர் ஒரு கோல்குறைவாக  உள்ளார்.

  


Thursday, July 9, 2026

மெஸ்ஸியை முந்தினார் முந்தினார் எம்பாப்பே

  உலகக்  கிண்ண  16-வது சுற்றுப் போட்டிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து,  ஆர்ஜென்ரீனாவின் லியோனல் மெஸ்ஸியை முந்தி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பிரான்ஸ் கப்டன் கைலியன் எம்பாப்பே.

புதன்கிழமை  பீபாவால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையின்படி, 8.71 என்ற தாக்குதல் புள்ளிகளுடன் எம்பாப்பே முதலிடத்திலும், 8.45 புள்ளிகளுடன் மெஸ்ஸி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.  

நோர்வே ஸ்டிரைக்கர் எர்லிங் ஹாலண்ட் 8.04 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து கப்டன் ஹரி கேன் 7.41   புள்ளிகளுடன்நான்காவது இடத்திலும் உள்ளனர்.

2026 உலகக் கிண்ணப் போட்டிக்காக அரம்கோவால் வெளியிடப்பட்டு நிர்வகிக்கப்படும்  பீபா  பவர் ரேங்கிங்ஸ், போட்டித் தரவுகளைப் பயன்படுத்தி, தொடர் முழுவதும் வீரர்களின் செயல்திறனை புறநிலையாக மதிப்பிடுகிறது.

கள வீரர்கள் தாக்குதல், ஆக்கத்திறன் , தற்காப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் 0-10 என்ற அளவில் மதிப்பிடப்படுகிறார்கள், அதே நேரத்தில் கோல்கீப்பர்கள் கோலைப் பாதுகாத்தல் மற்றும் பந்து கைவசம் இருக்கும்போது ஆடுதல் ஆகியவற்றுக்காக மதிப்பிடப்படுகிறார்கள்.ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இந்தத் தரவரிசைகள் புதுப்பிக்கப்படுகின்றன.

மூன்று களப் பிரிவுகளில் இரண்டில் பிரான்ஸ் முன்னிலை வகிக்கிறது; மைக்கேல் ஒலிஸ் ஆக்கத்திறன் தரவரிசையில் (8.19) முதலிடத்திலும், டயோட் உபாமெக்கானோ தற்காப்புப் பிரிவில் (7.67) முன்னிலையிலும் உள்ளனர்.

போத்துககல் கோல்கீப்பர் டியோகோ கோஸ்டா, 8.89 புள்ளிகளுடன் கோல்கீப்பிங்கில் முதலிடம் வகிக்கிறார்.

  

Friday, June 26, 2026

மொராக்கோவை எதிர் கொள்கிறது நெதர்லாந்து


 மிசௌரியின் கேன்சஸ் சிட்டியில் துனிசியாவை எதிர்த்து விளையாடிய  நெதர்லாந்து   3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரூப் F-ல் முதலிடம் பிடித்தது

உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு தனது பயிற்சியாளரை நீக்கிய துனிசியா, ஏற்கெனவே போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தது.

இரண்டாவது நிமிடத்தில், கப்டன் எல்லிஸ் ஸ்கிரியின் கவனக்குறைவான கிளியரன்ஸ் பந்து தங்களது சொந்த கோலுக்குள் சென்றது.   ஏழாவது நிமிடத்தில் ப்ராப்பி 2-0 என கோல் கணக்கை உயர்த்தினார். பிரையன் ப்ராப்பி உலகக்  கிண்ணத்தில் தனது மூன்றாவது கோலை அடித்தார் இரண்டாம் பாதியில் ஹஸெம் மஸ்தூரியின் கோல் மூலம் துனிசியா மீண்டு வந்த பிறகு, ஒரு கோனரிலிருந்து வந்த பந்தை ஜான் பால் வான் ஹெக்கே தலையால் முட்டிய பந்து, அனிஸ் ஸ்லிமானின் மீது பட்டு துனிசிய வலைக்குள் செல்ல, கோல் கணக்கு 3-1 ஆனது.

நொக் அவுட் சுற்றில்  30 ஆம் திகதி மொராக்கோவை எதிர்த்து விளையாடுகிறது. நெதர்லாந்து. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி,  காலிறுதியில் தென் ஆபிரிக்கா அல்லது கனடாவை எதிர்கொள்ளும்.