Monday, February 29, 2016

இந்திய மாணவர்கள் மத்தியில் முளை விடும் தேசத்துரோகம்.


டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் மாணவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது.     இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவைத் தியாகி என மாணவர்கள் கோஷமிட்டதால்   மாணவர்கள் மீது எதிர்ப்பலைகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன.  சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர் இயக்கத்தலைவர் கன்யா குமார் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் இந்தியாவைக் குறிவைத்து பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலும், மும்பை ஹோட்டல், ரயில் நிலையம் ஆகியவற்றின் மீதானன் தொடர் தாக்குதல்களும் இந்தியர்களின் மனதில்   வடுவை ஏற்படுத்தியுள்ளன. இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் இந்தியர்களின் மனதை அதிகளவில் பாதித்துள்ளது. நாடாளுமன்றத் தாக்குதலின் சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்ட அப்சல் குருவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்திய ஜனநாயகத்தைத் தகர்க்க முற்பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டவரை  மாணவர்கள் தியாகியாக்கியது இந்தியர்களின்மனதைப் புண்படுத்திவிட்டது.

 மாணவர் இயக்கத் தலைவர் கன்யா குமார் கைது செய்யப்படமுன் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கறுப்புச்சட்டை அணிந்த வக்கீல்கள் இத் தாக்குதலை முன்னின்று நடத்தினர்.  வக்கீல் போன்று  வேடமணிந்த தொலைக்கட்சிக்குழு இதனை ஒளிப்பதிவு செய்துள்ளது.  பொலிஸார் நடத்திய விசாரணையின் பின்னர்  பாகிஸ்தானை ஆதரித்து இந்தியாவை எதிர்த்து கன்யா குமார் கோஷமிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. என்றாலும்  கலாசார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததனால் அவர் மீது தேசத்துரோக குற்றச்சாடு சுமத்தப்பட்டுள்ளது.

 டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அப்சல் கரு நினைவுதினம் கொண்டாடுவதற்கு ஆலோசனை வழங்கிய உமர் காலித்,அனிர்பன்,பட்டாச்சாரியா,ராம நாகா,அசுதோஷ் குமார், அனந்த பிரகாஷ் ஆகிய மாணவர்கள் தான் இதன் சூத்திரதாரிகள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில்  இருந்தனர். பல்கலைக் கழகத்தினுள் செல்வதற்கு   பொலிஸுக்கு அனுமதி இல்லை என்பதனால் அவர்களை சரணடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   தலை மறைவனதாக அறிவிக்கப்பட்ட அவர்கள் பின்னர் பல்கலைக்கழக வளாகத்துக்குத்  திரும்பியதாக அறிவிக்கபட்டது..பெப்ரவரி 9 ஆம்  திகதி இச்சம்பவம் நடைபெற்றது.பெப்ரவரி 13   ஆம்  திகதி சம்பந்தப்பட்ட மாணவர்கள் சரணடைந்தனர்.

இந்தியர்களினால்   மறக்க முடியாத நாள் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  13 ஆம் திகதி. அன்றுதான் தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில்   ஆறு பாதுகாப்புப்படை வீரர்கள்,ஒரு பொலிஸ்காரர் உட்பட 13 பேர் தீவிரவாகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல்  நடத்த வந்த ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய  தலைவர்களில் ஒருவரான அத்வானி உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் அன்று நாடாளுமன்றத்தில் இருந்தனர்.  நாடாளு மன்றத்தைதோ நோக்கிச்சென்ற தீவிரவாதிகள் துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்தின் காரை  இடித்துத் தள்ளியபடி பாராளுமன்றத்தினுள் நுழைய முற்பட்டனர்.

இந்திய மக்களின் மனதுடன் மனதுடன் ஒன்றிணைந்த படைவீரர்களைக் கொன்ற தீவிரவாதிகளை   தியாகியாக்குவதை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. பாகிஸ்தானில் இருந்து இயங்கும் திவிரவதிகளினால் இந்தியாவில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இந்திய உளவுத்துறை அறிவிக்கிறது. உளவுத்துறை அதுபற்றிய எச்சரிக்கைளை அவ்வப்போது வெளியிடும். அந்த எச்சரிக்கைகளையும் மீறி நக்குதல் நடை சில வேளைகளில் நடைபெறுகின்றன.

இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கும் அப்சல் குருவுக்கும் தொடர்பு இல்லை என அவரின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.  உறங்கிக் கிடந்த இந்த உணர்வு மேலோங்குவதை இந்திய அரசாங்கம் இலகுவாக விட்டுவிடாது. இதற்குரிய அதிகபட்ச  நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்க மாட்டாது.  அப்சல் குருவை நினைவு கூர்ந்த மாணவர்களுக்கும்  பயங்கரவதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். மாணவர்கள் அதனை மறுத்துள்ளனர்.  அந்தப் பல்கலைக் கழகத்தினுள்  மதுப்போத்தல்களும்  ஆணுறைகளும்  தாராளமாகக்  கிடைப்பதாக அமைச்சர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 அரசியல்வாதிகள் மட்டுமல்லாது சினிமா நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் ஆகியோரும்  படை வீரர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறுவயது முதலே பிள்ளைகளிடம் தேசப்பற்றை வளர்க்க கற்றுக்கொடுக்க வேண்டும் என நடிகர் மோகன் லால் தெரிவித்துள்ளார். பேச்சுரிமை, தேசப்பற்று என்றஜனநாயகத்தில் நேரு பல்கலைக் கழகத்தில்  நடக்கும் போராட்டங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இராணுவ வீரர்கள் எல்லையில் விழித்திருப்பதனால் தான் நாம் நிம்மதியாக தூங்க முடிகிறது.  அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த முடிகிறது என மோகன் லால் தெரிவித்துள்ளார்.

சிறப்புப் படைவீரர்களும் கொமாண்டோக்களும் உங்களையும் என்னையும் போற சாதாரண மனிதர்கள் தான் சுயநலனுக்கு முன்பாக தேசிய நலன்தான் முக்கியம் என அவர்களுககு உணர்த்தப்பட்டுள்ளது என  டோனி தெரிவித்துள்ளார். அப்சல் குரு தியாகி என்றால் சியாச்சின் பணியில் மரணமாகும் வீரர்கள் யார் என குத்துச்சண்டை வீரர்  யோகேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார். ஒருவர் தான் வாழும் நாட்டைப்பற்றி பல்கலைக்கழகத்தில்  தவறாகப் பேசக்கூடாது தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஷிகர் தவன் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.   தேச நலனுக்கு முன்பாக அரசியல் நலனைப்  பார்க்கக்கூடாது. அப்சல் குருவுக்கு அதரவாக முழக்கமிடப்பட்ட வீடியோவைப் பார்த்து அதிச்சியடைந்தேன்  என்கிறார்  கம்பீர்

டில்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் இந்திய மக்களின் உணர்வைத் தூண்டியுள்ளது. ஆகையினால் இச் சம்பவத்தின்  பின்னணியை கண்டு பிடித்து வேரை அடியுடன் பிடுங்குவதற்கு இந்திய் அரசு தயங்காது.
ரமணி.
தமிழ்த்தந்தி
28/02/16







Saturday, February 27, 2016

பதவி இழந்த விஜயகாந்த் பழிவாங்கிய ஜெயலலிதா

தமிழக அரசியலில் நிரந்தர இடம் கிடைக்காது அல்லாடிக்கொண்டிருந்த விஜயகாந்தை  எதிர்க்கட்சித் தலைவராக்கி அழகு பார்த்த ஜெயலலிதா அவரிடம் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறித்து  செல்லாக்காசாக்கினர். தமிழக சட்டசபை வரலாற்றில் ஆளும் கட்சியின் அனுசரணையுடன் விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவரானார். எதிர்க்கட்சிக்குரிய சலுகையை ஆளும்  கட்சி தனதாக்கியது. எதிர்க்கட்சி இல்லாத அரசு என்ற பெருமையை ஜெயலலிதாவின் அரசு பெற்றுள்ளது.  ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றபோது  தனக்குத் தேவையான விஜயகாந்தை எதிர்க்கட்சித் தலைவராக்கினர். ஐந்து வருட ஆட்சி முடியும் காலத்தில் விஜயகாந்திடம்  இருந்த எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பறித்தார்.நடைபெறப் போகும் தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்து இல்லாது வெறும் உறுப்பினர் என்ற ரீதியில் தான் விஜயகாந்த் போட்டியிடுவார்.

யாருடனும் கூட்டணி இல்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்த  விஜயகாந்தை அவரது அரசியல் வழிகாட்டியான பண்டிருட்டி ராமச்சந்திரனும் இடதுசாரிகளும் சேர்ந்து வலுக்கட்டாயமாக ஜெயலலிதாவின் பக்கம் தள்ளினார்கள். வேண்டா வெறுப்பாக ஜெயலலிதாவுடன் இணைந்த விஜயகாந்த் அதிர்ஷ்ட வசத்தால் எதிர்க் கட்சித் தலைவரானார்.  ஜெயலலிதா அள்ளிக் 41 தொகுதிகளில்  போட்டியிட்ட விஜயகாந்தின் கட்சி  29  தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழக சட்ட சபையில் இரண்டாவது பெரிய கட்சியின் தலைவரான விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.  விஜயகாந்தின் போக்கு பிடிக்காததனால் பண்டிருட்டி ராமச்சந்திரன் ரஜினாமாச்   செய்தார். விஜயகாந்தின்  கட்சியைச்சேர்ந்த  எட்டு உறுப்பினர்கள்    அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் பக்கம் சாய்ந்தனர். அவர்கள் தனியாக இயங்க சபாநாயகர் அனுமதித்தார்.    இது வரை காலமும் தனியாக இயங்கிய அவர்கள் கடந்த வாரம் தமது பதவியை இரஜினமாச்செய்தனர். அதனால் விஜயகாந்தின் எதிர்க் கட்சித்தலைவர் பதவி பறிக்கப்பட்டது.


தமிழக சட்டசபையில் 24  உறுப்பினர்கள் உள்ள கட்சியின்  தலைவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்பது விதி. அந்தத் தலைவிதியால்   தமிழக சட்டசபையில் விஜயகாந்தின்  பலம் 20 ஆகக் குறைந்ததனால் அவர் எதிக் கட்சித் தலைவர் பதவியை இழந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவளித்த விஜயகாந்தின் கட்சியைச்சேர்ந்தசுந்தரராஜன்,பாண்டியராஜன்,தமிழழகன்,சாந்தி,சுரேஷ்குமார்,மைக்கல் ராயப்பன்,அருண் சுப்பிரமணியன்,அருண் பாண்டியன் ஆகியோர்  தமது பதவியை   இராஜினாமாச் செய்தனர்.  இவர்களைப் போன்று பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கலைஅரசு,புதிய தமிழக கட்சியின் உறுப்பினர்  ராமசாமி ஆகியோரும் தமது பதவியை இராஜினாமாச் செய்தனர்.


ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையில் இயங்கிய இந்த பத்து உறுப்பினர்களும் சட்ட சபை கலைக்கப்படும் காலம்  நெருங்குகையில் பதவியில் இருந்து விலகினர்.  ஜெயலலிதாவின் கட்டளைக்கு இணங்க தமது பதவியைத் துறந்தனர். இவர்கள்  வேறு கட்சிகளுக்குப் போகும் சாத்தியம் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகி தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. கருணாநிதியை பதவியில் இருந்து தூக்கி எறிவதற்காக ஜெயலலிதாவுடன் விஜயகாந்த்  இணைந்தார்.  அவர்கள் இருவரும் எதிர் பார்த்தது நடந்தது. தமிழக ஆட்சியைப் பிடிக்கும் போது கருணாநிதியை பதவியில் இருந்து இறக்கிய ஜெயலலிதா ஐந்து வருட ஆட்சிக் காலம்  முடியும் போது  விஜயகாந்தை வெறும் காந்த் ஆக்கி ஒரு கல்லில் இரண்டு  மாங்காய்களை வீழத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாநாட்டில் நான் கிங்காக இருக்கப்போகிறேன்  என விஜயகாந்த் கர்ச்சித்தார். அவரது கர்ஜனை ஒலி அடங்க முன்னர் ஜெயலலிதா அவரை அரசியல் ரீதியாக அடக்கி விட்டார். எதிர்க் கட்சித் தலைவர் என்ற பெருமையுடன் காஞ்சிபுரம் மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்த் மாநாடு முடியும் போது எதிக் கட்சித் தலைவர் என்ற முடியைப் பறிகொடுத்தார். காஞ்சிபுரம் மாநாட்டில் முக்கியமான முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என அவரது தொண்டர்கள் எதிர்பார்த்திருக்கையில் எதிர்பாரத விதமாக மிக முக்கியமான  முடிவை ஜெயலலிதா எடுத்தார்.

அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் தலைவர்களை கிங்க்மேக்கர் என்பார்கள். கிங்மேக்கர் என்றால்  கர்ம வீரர் காமராஜர்  என்றே அனைவரும் உச்சரிப்பார்கள் விஜயகாந்த் ஒருபடி மேலேபோய் கிங் ஆக ஆசைப்படுகிறார். அவரின் வாக்கு வங்கியை நம்பி அவரை கிங் என சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள்.  தனக்கு வர வேண்டிய பதவியைத் துறந்து நாட்டையும் கட்சியையும் நேசித்து கிங்மேக்கராக  மிளிர்கிறார் காமராஜர். மனைவிக்கும் மச்சானுக்கும் பதவி சுகம் வேண்டி கிங்காக விரும்புகிறார் விஜயகாந்த்.

காஞ்சிபுரம் மாநாடு ஜெயலலிதாவை திட்டித் தீர்க்கும்  மாநாடாக முடிவடைந்தது. பிரேமலதாவின் அரசியல் அநாகரிகப் பேச்சு முகம் சுளிக்க வைத்துள்ளது. ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவருக்கு பிள்ளை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டிய பிரேமலதாவின் பேச்சை எவரும் ரசிக்கவில்லை.  இது போன்ற மாநாடுகளில் முக்கிய முடிவுகைளை கட்சித் தலைவர்கள்  வெளியிடுவர்கள்  தனது முடிவை கடைசி காலம்வரை இழுத்தடிக்கும் விஜயகாந்த் வழமை போல உறுதியான முடிவை வெளியிடவில்லை.
 திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதா,மக்கள் நலக் கூட்டணி  ஆகியன இன்னமும் விஜயகாந்தின்  வருகைக்காக கந்திருக்கின்றன. பாரதீய ஜனதாவும்,மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்துக்கு  முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளன. தமிழகத்தில் கால்பதிக்க வலுவான கொழுகொம்பைத் தேடுகிறது பாரதீய ஜனதா முதல்வர் பதவி ஒரு பிரச்சினை அல்ல என்பதே பாரதீய ஜனதாவின் கோட்பாடு.  ஆனால் இது வெற்றிக் கூட்டணியா  அல்லது வெற்றுக் கூட்டணியா என்பது தெரியாது தடுமாறுகிறார் விஜயகாந்த்.

விஜயகாந்தை முதல்வராக்குவதில் பிரச்சினை இல்லை என்கிறது மக்கள் நலக் கூட்டணி. பெரிய  கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பதற்கு எத்தனை நாட்கள் தான் தோள் கொடுப்பது. அட்சியில் பங்கு வேண்டும் என்று கோஷமிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறிய திருமாவளவன் ஆட்சியில் பங்கு என்பதை தப்பித் தவறியும் உச்சரிக்கவில்லை. விஜயகாந்த் வந்தால் போதும்    என்பதே அவரது நிலைப்பாடு. இன்றைய அரசியல் கள நிலவரத்தின்படி  தேர்தலில் வெற்றி தோல்வி முக்கியமில்லை. விஜயகாந்த் தம்முடன் இணைந்தாலே போதும் அதுவே தமக்கு பெரிய வெற்றி என கட்சித் தலைவர்கள் நினைக்கின்றனர்.
விஜயகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பித்து 10 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. 2006 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இரண்டு சட்ட சபைத் தேர்தல்களிலும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது. தனித்துப் போட்டியிட்டு தனது  வாக்கு வங்கியை நிரூபித்துள்ளார். 2011  ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டார். 2014 ஆம் ஆண்டு பாரதீய  ஜனதாக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால் முதல்வர் பதவி கிடைக்காது. ஆகையால் விஜயகாந்தின் முதல் தெரிவு திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்காது. பாரதீய ஜனதாவும் மக்கள் நலக்  கூட்டணியும் விஜயகாந்தை கிங் ஆக மாற்றுவதற்கு தயாராக உள்ளன. அவர் கிங்  ஆகுவார அல்லது கீழே விழுவரா என்பது தேர்தலின் பின்னர் தெரிந்துவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
28/02/16 

மக்கள் பிரச்சினைகளைக் கைவிட்ட வட மாகாணசபை


இலங்கைத் தமிழர்களின் இருப்பை வெளிக்காட்டும் முகமாக வட மாகாணசபையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கைகளில் ஒப்படைத்தவர்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குகளை அள்ளி வழங்கினால் தமிழ் மக்களின் வாழ்வில் வசந்தம் வீசும் என்ற   வாக்குறுதி சிதறடிக்கப்பட்டுவிட்டது. முன்னாள் ஜனாதிபது மஹிந்த ராஜபக் ஷவின் முன்னால் முதலமைச்சர் சத்தியப்பிரமானம் செய்ததை தமிழ் மக்கள் சங்கடத்துடன்    ஏற்றுக்கொண்டனர். அமைச்சர் பதவி வேண்டும் என்ற குத்து வெட்டுடன் அட்சி ஆரம்பமானது. ஆளுனர் சந்திரசிறி இருக்கும்வரை வடமாகாண சபை சுயமாக இயங்காது என்ற எண்ணம்  மேலோங்கியதால் அவரின் மீது மக்கள் கோபம் கொண்டனர்.
நல்லெண்ண  ஆட்சியினால்  வடமாகாண ஆளுனர் மாற்றப்பட்டார். அதன் பின்னரும் வடமாகாண சபையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இரண்டரை வருடங்களில் வடமாகாண சபையின் செயற்பாடு எதிர்பார்த்தது போன்று இல்லை.  வடமாகாண சபையின் ஆட்சிபற்றி வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் உண்மையா பொய்யா எனத் தெரியாது மகள்  குழம்பி இருக்கும் போது அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வடமாகாண சபையின் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது முக்கிய திருப்பமாக உள்ளது.

முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமைச்சர் ஐங்கரனேசன் ஆகியோர் ஒருபக்கமாகவும், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சில உறுப்பினர்களும் இன்னொரு பக்கமாகவும் அணிவகுத்து கூட்டமைப்புக்குள் இருக்கும் பனிப்போரை அம்பலமாக்கினர். கூட்டுறவுத்துறையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடமாகாண சபையில் தெரிவித்தபோது அதனை சபையில் தெரிவிப்பது பிழையான செயல் என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினை தொடர்பாக முதலமைச்சருக்கும் அவைத் தலைவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. முதலமைச்சரை அவரது கட்சியைச்சேர்ந்தவர்கள் எதிர்த்துப் பேசும்  சூழல் உருவாகியுள்ளது.
சுன்னாகம்  நிலத்தடிநீர்   மாசடைந்தது  தொடர்பாக அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. அப்போது முதலமைச்சர் தனது அமைச்சரை காப்பாற்றுகிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இவை எல்லாம் கூட்டமைப்புக்கு எதிரான குற்றச்சாட்டு என்ற எண்ணமே மேலோங்கியது.  கூட்டுறவுத்துறையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு அவற்றை எல்லாம் மழுங்கடித்துவிட்டது. அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக  பதினொரு குற்றசாட்டுகளை முன்வைத்து வடமாகாண சபை உறுப்பினர் கே.ரி.லிங்கநாதன் பிரேரணை ஒன்றை முன்வைத்து விசாரணை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். முக்கியமான பிரேரணையை முன் அறிவித்தல் இன்றி சமர்ப்பிக்க முடியாது என முதலமைச்சர் சுட்டிக்காட்டினர். உறுப்பினர்களின் நெருக்குதலினால் முதலமைச்சர் இறங்கிவந்து பிரேரணையை முன்மொழிந்தார்.
சுன்னாகம் கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரை ஆய்வுசெய்து  அறிக்கை சமர்ப்பித்த நிறுவனத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வடமாகாண சபை கேட்டதற்கிணங்கவே இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது.  தேசிய வடிகாலமைப்பு சபையின் ஆய்வு அறிக்கைக்கும் வடமாகாண சபையின் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. இலட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. அவைஈ மாடுகளுக்கு உணவாக மாறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான செயற்பாடு,இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம்,பளையில் நிறுவப்பட்ட காற்றாலை,மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும்திட்டம்,கார்த்திகை மரநடுகை,அனர்த்த நிவாரண விநியோகம்,கார்த்திகை மரநடுகை,உழவர் திருநாள்,மலர் கண்காட்சி,விவசாயிகள் தினம்,மண் தினம் போன்றவற்றை உரிய முறையில் அறிவிக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டுள்ளன.
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடமாகாண சபையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்  செயற்படுவார்கள், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்  பிரேரணை கொண்டுவரப்படும் என்ற செய்தி இறக்கை கட்டிப் பறந்தது. அவை எல்லாம் காற்றில்  காணாமல்  போனபின்னர்  அமைச்சர் ஐங்கரநேசனுக்கு  எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் சகல அரசியல் கட்சிகளும் இரண்டாகின. தமிழ் தேசியக் ஊட்டமைப்பை இரண்டக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் செல்லாக்காசாகின. அந்த வேலையை இன்றைய உறுப்பினர்கள் கச்சிதமாச் செய்கின்றனர்.


அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான பிரேரணையில் உள்ள குற்றச்சாட்டுகள் வெளிவரும்போது உண்மை வெளிவரும்.
வானதி
சுடர் ஒளி

பெப்ரவரி24/மார்ச்02

Thursday, February 25, 2016

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது  சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு  இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. படையினரிடம் சரணடைந்தவர்கள் இப்பொழுது தடுப்புக்காவலில் இல்லை என  அன்றைய அரசு அறிவித்தது. புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் பொத்து மக்களும் படைகளிடம்  சரணடைந்தனர். அவர்கள் பற்றிய விபரம் அதுவும் வெளிவரவில்லை என அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இது தொடர்பாக பல போராட்டங்களை அவர்கள் நடத்தி உள்ளனர்.  எதற்கும் அசைந்து கொடுக்காத அரசு  சரணடைந்தவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர்   விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்கிறது. சரணடைந்தவர்களின் உறவினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

சரணடைந்தவர்கள் பற்றிய விவகாரம் பூதாகரமாக கிளம்பியதால் வெளிநாடுகள் இதில் அதிக அக்கறை காட்டின. ஐநாவும் சரணடைந்தவர்கள் பற்றிய விவகாரத்தை கையில் எடுத்தது. காணமல் போனவர்களை கண்டறிவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்க்ஷ அணைக்குழு ஒன்றை அமைத்தார். அந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சட்சியமளித்தவர்கள் தமது உறவினர்களை படையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தனர். எத்தனையாவது படைப்பிரிவு அதனுடைய பொறுப்பாளர் யார் போன்ற விபரங்களையும் அவர்கள்  அணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்தனர். இரகசிய முகாம்கள் இருப்பதாகத் தெரிவித்தபோது அதனையும் அன்றைய அரசு மறுதலித்தது. பின்னர் இரகசிய முகாம்கள் பற்றிய விபரங்கள் வெளியாகின.

இறுதிக்கட்ட யுத்தம் கொடுரமாக நடந்தபோது சரணடியும் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என அரசாங்கம் உத்தரவாதமளித்தது. அதனை நம்பிய பல புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். படையினரிடம் கையளிக்கப்பட்ட முக்கியமான புலி உறுப்பினர்கள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என படையினர் அறிவிக்கவில்லை என அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன்  என அழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன் உட்பட சிலர் முல்லைதீவில் உள்ள 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்தனர். அவர்களைப்பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என  சரணடைந்தவர்களின்  உறவினர்கள்  வவுனியா மேல் நீதிமன்றத்தில்  ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர். அதனை விசாரணைக்கு எடுத்த வவுனியா மேல்  நீதிமன்றம் அச்சம்பவம் முல்லைத்தீவில்  நடைபெற்றதால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க  உத்தரவிட்டது.

மிக முக்கியமான வழக்கு என்பதனால் பலரது கவனம் இந்த விசாரணையின் பக்கம் திரும்பியது. 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்த்தன இராணுவத்தரப்பில் சாட்சியமளித்தார்.  வழமை போன்றே  ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிடப்பட்டவர்கள் 58ஆவது  படைப்பிரிவில் சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் தம்மிடம் இல்லை என்றார். மனுதாரர் சார்பில்  ஆஜரான  சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் குறுக்கு விசாரணை செய்தபோது 58 ஆவது  படைப்பிரிவில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் முகாமில் இருப்பதாகவும் ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிடப்பட்டவர்களின் பெயர் அதில் இல்லை எனவும் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 58 ஆவதுபடைப்பிரிவில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை  நீதிமன்றத்தில்   சமர்ப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.  சரணடைந்தவர்கள் பற்றிய விபரம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. படையினரிடம் சரணடைடிந்தவர்களும்  கையளிக்கப்பட்டவர்களும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. அவர்களைப்பரரிய விபரம் எதுவும் தெரியவில்லை. சரணடிந்தவர்களைப் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தபட்டு வந்தது. காணமல் போன எவரும் சரணடடையவில்லை என்பதே இராணுவத்தின் பதிலாக உள்ளது.

இறுதிக்கட்ட யத்தத்தின் போது சரணடைந்தவர்களைப் பற்றிய  விபரங்கள் வெளிவருவது சிறந்த ஆரம்பம்.  சரணடிந்தவர்கள் பற்றிய பூரணமான விபரம் எவையும் இதுவரை வெளிவரவில்லை. அரசாங்கம் அப்போது கூரிய எண்ணிக்கை மிகவும் குறைவானது என சரணடைந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

58வது படைத்தளத்தின் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவம் வசம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றில் முன்வைக்கவேண்டும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன  தெரிவிக்கையில்

இறுதி யுத்தத்தில் இராணுவம் வசம் சரணடைந்த பொதுமக்கள் தொடர்பில் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்வது சிறந்த விடயமாகும். உண்மைகளை கண்டறிய இது நல்லதொரு ஆதாரமாகும். குறிப்பாக காணாமல் போனதாகக் கூறப்படும் பொதுமக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆணைக்குழுவின் கால எல்லையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் பொதுமக்கள் தொடர்பில் மேலும் ஆதாரங்களை திரட்ட வாய்ப்புகள் உள்ளன. இராணுவம் வசமுள்ள ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் இந்த செயற்பாடு இன்னும் இலகுவாக்கப்படும்.

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளுக்கென விசேட சட்டமூலம் ஒன்றையும் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளோம். ஆகவே போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவாக தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது என்றார்.

இறுதி யுத்தத்தில் இராணுவம் வசம் சரணடைந்த பொதுமக்கள் தொடர்பில் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்வது சிறந்த விடயமாகும். உண்மைகளை கண்டறிய இது நல்லதொரு ஆதாரமாகும். இவ்வாவணங்கள் விசாரணை செயற்பாடுகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆயுத, பண உதவிகளை வழங்கியவர்கள் தேசத்துரோகிகள் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு பண உதவிகளையும், ஆயுத உதவிகளையும் வழங்கியோர் தொடர்பில் விரைவில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.சரணடைந்தவர்களைப்பறிய விபரங்களை மறைக்காமல் வெளியிட்டால் உண்மை அவர்களைப்பற்றிய உண்மை வெளிவரும். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது  கைது செய்யபட்டவர்களையும் சரணடைந்தவர்களையும் பற்றிய விபரங்கள் படைக்கட்டளைத் தலைமையகங்களில்  இருந்தால் அவற்றின் மூலம் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது
 ஊர்மிளா
 சுடர் ஒளி

பெப்ரவரி 24/மார்ச்02

Sunday, February 21, 2016

மக்களை ஏமாற்றும் தேர்தல்கால கருத்துக்கணிப்புகள்

தேர்தல் நெருங்கும் பொது கூடவே கருத்துக்கணிப்புகளும் வெளிவரத் தொடங்க்கிவிடும். யாருக்கு வாக்களிப்பது என கடைசி நேரத்தில் முடிவெடுப்பவர்கள்கருத்துகணிப்பை மையமாக வைத்து வாக்களிப்பார்கள். நடுநிலைஅயந கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை  வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. சில சமயங்களில் கருத்துக்கணிப்பை வாக்காளர்கள் பொய்யாக்கிய சந்தர்ப்பங்களும் உள்ளன. தமக்குச்சாதகமான கருத்துக்கணிப்புகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் தலைவர்கள் தமக்கு எதிரான கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளிய வரலாறுகளும் உள்ளன.

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கி விட்டது. தேர்தலை மயமாக வைத்து கருத்துக்கணிப்புகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன. திராவிட முன்னேற்றக் கழக‌த்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துடனும் கூட்டணி சேரும் கட்சிகள் அவை என்ற கருத்துக்கணிப்பு அண்மையில் வெளியானது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இப்படியான கருத்துக் கணிப்பு உதவும். என்றாலும்  அதிக தொகுதிகளை ஒதுக்கும் பிரதான கட்சியுடன் தான் கூட்டணி என்பதே கட்சித் தலைவரின் நிலைப்பாடு. தேர்தல் செலவை பிரதான கட்சி ஏற்றுக்கொண்டால் கட்சித்தலைவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்.  தேர்தல் அறிவிப்பு வெளிவரமுன்னமே தமிழகத்தில் கருத்துக்கணிப்புகள் வெளியாகத் தொடங்கிவிட்டன.

விகடனின் கருத்துக்கணிப்பு ஜெயலலிதாவை எரிச்சலடைய  வைத்தது. ஐந்து வருடகால ஆட்சியை விமர்சித்து விகடனில் வெளியான கட்டுரைகள் அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக‌த் தலைவர்களை சங்கடப்படுத்தின. விகடன் பிரசுரங்களை கைப்பற்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்  தலைவர்கள் அவற்றை மக்கள் பார்க்க விடாது தடுத்தனர். ஜெயலலிதா ஒருபடி மேலே போய் விகடனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

குமுதத்தின் கருத்துக்கணிப்பு ஜெயலலிதாவை குளிரவைத்தது. விகடனின் கருத்துக் கணிப்பை மூர்க்கமாக எதிர்த்த அஜெயலளித்த குமுதத்தின் கருத்துகணிப்பை மெளனமாக ஏற்றுக்கொண்டார்.  சென்னை லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு தேர்தல் முடிவுடன் ஓரளவுக்கு ஒத்துப் போகும் தன்மை வாய்ந்தவை.  லயோலா கல்லூரியின் பழைய மாணவர்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு சார்பாக வெளியானது. இக்கருத்துக் கணிப்பு திராவிட முன்னேற்றக் கழக‌ அனுதாபிகளால் திட்டமிட்டு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. பழைய மாணவர்களால் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புக்கும் லயோலா கல்லூரிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்ற அறிக்கை வெளியானதால் இது திட்டமிடப்பட்ட கருத்துக்கணிப்பு என்பது புலனாகியது
 புதிய தலைமுறையின் கருத்துகணிப்பு முற்று முழுதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு சார்பானதாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌கத்தின் கடந்த ஐந்து வருட ஆட்சி மிகவும் சிறப்பானது. அடுத்த முதல்வராக ஜெயலலிதா வருவார்.  அண்ணா  திராவிட முன்னேற்றம் தான் தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கியது. என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக‌ஆட்சியில் மிகவும் சிறப்பாக உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை மக்கள் மறந்து விட்டார்களா அலது புதிய தலைமுறை அதனை இருட்டடிப்பு செய்து விட்டதா எனத்தெரியாது தமிழக மக்கள் குழம்பியுள்ளனர்.

இந்தியாவின் கிங் மேக்கர் என இன்றும் பெருமையாகப் பேசப்படும்  காமராஜருடன்எந்த  ஒரு அரசியல் தலைவரையும் ஒப்பிட முடியாது. தமிழக முதலமைச்சராக  இருந்தபோது அவரது கையில் பணம் இல்லை.  இறக்கும் போதும் அவரது கையில் பணம் இல்லை. இன்றைய  அரசியல் தலைவர்கள்மீது வருமானத்துக்கு மீறிய சொத்துச்சேர்த்த வழக்குகள் உள்ளன. சிலர் தண்டனை பெற்றுள்ளார்கள்.

தமிழகத்தின் அடுத்த முதல்வராகர் ஜெயலலிதா வரவேண்டும் என புதியதலைமுறையின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஜெயலலிதவுக்கு  ஆதரவாக  32.63  சத வீதத்தினர்   கருத்துத் தெரிவித்துள்ளனர்.18.88சத வீதமானோர் ஸ்டாலின்  முதல்வராக வேண்டும் எனவும்   15.21சத வீதமானோர் கருணாநிதி முதல்வராக வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்  ஜெயலலிதாவுக்கான அதரவு வீழ்ச்சிடியடைந்துள்ளது.. இது ஜெயலலிதாவுக்கும் தெரிந்த உண்மை.

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியா  ஸ்டாலினா என்ற விவாதம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கொதிநிலையில் உள்ளது..  அதனை தூண்டிவிடுவது போன்ற கருத்துகணிப்புகள் அடிக்கடி வெளிவந்து சர்ச்சையை கிளப்பும் புதிய தலை முறையின் கருத்துக்கணிப்பும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே  விரிசலை ஏற்படுத்தும்வகையில் அமைந்துள்ளது. தினகரன் நாளிதழ்  கொளுத்திப் போட்ட இந்தக் கருத்துக்கணிப்பு  இன்று வரை தொடர்கிறது.

   ஊழல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம்   தீர்ப்பளித்த போது நடைபெற்ற வன்செயலில் மூன்று மாணவிகள் பஸ்ஸுடன் எரித்துக் கொல்லப்பட்டது புதியதலைமுறைக்குத் தெரியாதா. வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என கடந்த ஆண்டு பெங்களூர் நீதிமன்றம்  தீர்ப்ளித்த   போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களினால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட  வன்செயல்களை மக்கள் மறக்கவில்லை. புதியதலைமுறைக்கு கருத்துக் கூறியவர்கள் வசதியாக மறந்துவிட்டார்கள்.

சில கருத்துக் கணிப்புகள் ஜெயலலிதாவையும் சில கருத்துக் கணிப்புகள் ஸ்டாலினையும் முன்னிலைப்படுத்தி வெளியாவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன. இவர்களுக்குச் சாதகமானவர்கள் திட்டமிட்டி இப்படியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் கருணாநிதியை  விட ஸ்டாலினுக்கு   அதிக செல்வாக்கு இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினுக்கு அதரவனவர்கள் ஈதன் பின்னணியில் இருப்பது ஒன்றும் இரகசியமானதல்ல.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த  வாரிசுபோட்டியில் ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார். ஸ்டாலினுக்குப் போட்டியாக இருந்த சகோதரர் அழகிரி கட்சியில் இருந்து  வெளியற்றப்பட்டதால்  அவர் இளவரசராக ஜொலிக்கிறார். இதனை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஸ்டாலினின் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சமூக  வலைத்தளங்களின் ஊடக ஸ்டாலினின்  செல்வாக்கை உயர்த்துகிறார். 

தேர்தல்கால கருத்துக்கணிப்புகளை மக்கள் நம்பிய  காலம் மாறிவிட்டது. அரசியல் கட்சிக்கும் தலைவர்களுக்கு சார்பான கருத்துக் கணிப்புகளால்  எந்தவிதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
ரமணி
தமிழ்த்தந்தி
21/02/16



Saturday, February 20, 2016

செக் வைத்தார் கருணாநிதி தடுமாறுகிறார் விஜயகாந்த்

திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியை உறுதிசெய்ததானால்  தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. யாரும் வரலாம் உட்கார்ந்து பேசலாம் என காத்திருந்த  திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு காங்கிரஸின் வருகை புதுத் தெம்பை அளித்துள்ளது.

 சுப்பிரமணியன் சுவாமி கடந்த வரம் செய்த அரசியல்  காய் நகர்த்தலின் காரணமாக  திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸும்  அவசர அவசரமாக கூட்டணியை உறுதி செய்தன. திராவிட முன்னேற்றக் கழக‌மும் பாரதீய ஜனதாவும் சேரும் இதனுடன் விஜயகாந்த் இணைவார்.  ஸ்டாலின் முதல்வராவார் என சுப்பிரமணியன் சுவாமி அரசியல் குட்டையைக் குழப்பியதால் இனியும் தாமதித்தால் விபரீதமாகிவிடும்  என்பதை உணர்ந்த கருணாநிதி, காங்கிரஸின் கையை கெட்டியாகப் பிடித்தார். பத்து வருட ஆட்சி சுகத்தை அனுபவித்த  திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸ் கட்சியும்  இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்  தனித் தனியாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தன. திராவிட முன்னேற்றக் கழக‌த்தைப் படுகுழியில் விழுத்த காங்கிரஸ் தலைவர்கள் தோண்டிய குழியில் இரண்டு கட்சிகளும் எழமுடியாத வகையில் விழுந்தன. பழையன எல்லாவற்றையும் மறந்து அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதை இரண்டு கட்சித்ட் தலைவர்களும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக‌தத்க்கு எதிராக பலமான கூட்டணி அமையக்கூடாது என விரும்பிய ஜெயலலிதா அதிர்ச்சியடைந்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக‌ம், காங்கிரஸ்,பாரதீய ஜனதா,மக்கள் நலக் கூட்டணி  ஆகியன தனியாகப் போட்டியிட்டால்  மீண்டும் முதல்வாராகலாம்  என நினைத்த ஜெயலலிதாவின் எதிர் பார்ப்பில்  மண் விழுந்துள்ளது. அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக‌த்தைத் தவிர ஏனைய கட்சித்தலைவர்கள் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடத்தினர்.தகுதிக்கு  மீறி அதிக தொகுதிக்கு ஆசைப்பட்டதனால் பேச்சு வார்த்தைகள் எவையும் முற்றுப் பெறவில்லை.
திராவிட முன்னேற்றக் கழக‌மும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்ததனால் விஜயகாந்த் போக்கிடம் இல்லாது  நிற்கிறார். திராவிட முன்னேற்றக் கழக‌த்ஹ்டிடம் அதிக தொகுத்தியும் துணை முதல்வர் பதவியையும் விஜயகாந்த் எதிர்பார்த்தார். விஜயகாந்த் எதிர்பார்த்த அளவுக்கு மிஞ்சிய தொகுதிகளைக் கொடுக்க  திராவிட முன்னேற்றக் கழக‌ம் சம்மதிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைய விஜயகாந்தின்  மைத்துனர் சதீஷ் ஆர்வமாக இருந்தார். அனல் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் பேச்சு எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. விஜயகாந்த் இல்லைஎன்றால் வெற்றி பெற முடியாது என்ற மாயையில் பிரேமலதாவின் வெட்டித்தனமான பேச்சு கண்ணியத்தை இழந்தது.

  திராவிட முன்னேற்றக் கழக‌ம், பாரதீய ஜனதா, மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்று தெரிவு விஜயகாந்தின் முன்னால் இருந்தது. இப்போளுத்டும் விஜயகாந்த் வந்தால் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கருணாநிதி இருக்கிறார்.  இரண்டு ஊழல் கட்சிகள் எதற்காக இணைந்தன என்று பிரேமலதா கேட்டதனால்  திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் பக்கம் விஜயகாந்த் செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது. பாரதீய ஜனதா மக்கள் நலக் கூட்டணி எனும் இரண்டு தெரிவுகள் விஜயகாந்தின் முன்னால் உள்ளன. தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத பாரதீய ஜனதாவுடன் சேர்வதில்  பிரயோசனம் இருக்காது என்பதை விஜயகாந்த் அறிவார். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள வைகோ,திருமவளவன், இடதுசாரித் தலைவர்கள்  ஆகியோரின் பிரசாரங்கள் மக்களிடம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. 
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக மக்கள் நலக் கூட்டணி ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் செல்வாக்கு  குறைந்துள்ளது. அண்மையில் வெளியான கருத்துக்கணிப்புகளும் இவற்றின்   வீழ்ச்சியை வெளிக்காட்டி  உள்ளன. கூட்டணி சேர்வதா இல்லையா என்ற குழப்பத்தில் வியஜகாந்த் இருக்கிறார். வியகந்தின் வெற்றியின் பின்னால் பன்ருட்டி ராமச்சந்திரனின் பங்களிப்பு அதிகம் இருந்தது. சிக்கலான  நேரத்தில் அவரின் ஆலோசனைகள்    விஜயகாந்த்தை   சரியான பாதைக்கு அழைத்துச்சென்றன. பன்ருட்டியார் விஜயகாந்தை விட்டு விலகிச்சென்றுவிட்டார். விஜயகாந்தை வழிநடத்தும் பக்குவம் உடைய அரசியல் தலைவர் அவரின் பக்கத்தில் இல்லை


விஜயகாந்தும் அவரின் மனைவிவும் மட்டுமே அக்கட்சியின் பிரதம பேச்சாளர்கள். கடந்த சட்ட சபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் புண்ணியத்தால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.தனது வகுப் பலத்தினால்தான் ஜெயலலிதா முதல்வரானார் என விஜயகாந்த்  தவறாக நினைத்து விட்டார்.  திராவிட முன்னேற்றக் கழக‌ம்  அழைத்தபோது சென்றிருந்தால்  மதிப்பு இருந்திருக்கும். காங்கிரஸ் முதலில் போய் ஓட்டிக்கொண்டதனால் விஜகந்த கடுப்பாகி உள்ளார். இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் பேச்சு வார்த்தை நடத்தினால்  பேரம் பேச முடியாது கொடுப்பதை வாங்க வேண்டிய இக்கட்டான நிலையில் விஜயகாந்த் இருக்கிறார். 
கண்ணுக்கு தெரியும் தூரத்தில் எதிரிகள் இல்லை என கர்ச்சித்த ஜெயலலிதா கூட்டணி பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விட்டார். பாரதீய ஜனதாவைத் தவிர வேறு பெரிய கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் கூட்டணி  சேரத் தயாராக இல்லை. விஜயகாந்துடன் சேர்ந்தால் வெற்றி பெறமுடியாது எனத் தெரிந்து கொண்டும் அவரின் வருகைக்காக பாரதீய ஜனதா காத்திருக்கிறது. விஜயகாந்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயமில்லை என்பது பாரதீய  ஜனதாக் கட்சித்தலைவர்களுக்குத் தெரியும். அண்ணா   திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைந்தால் அதிர்ஷ்டக் காற்றில்  உயரே செல்லலாம்   என்பது நிச்சயம். இந்த இடைவெளியில் ஜெயலலிதா அழைப்பு விடுத்தால் பாரதீய ஜனதா சந்தோசத்துடன் சென்றுவிடும் 

விஜயகாந்தின் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஊகிக்க முடியாது. தனது செல்வாக்கை பகிரங்கப் படுத்த வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். சந்தர்ப்பம் பார்த்து முடிவெடுக்த் தவறியதால் விஜயகாந்த் தனித்து விடப்பட்டுள்ளார்.  மக்கள் நலக் கூட்டணியைத்தவிர விஜயகாந்துக்கு வேறு தெரிவு  இல்லை. அவர் கூட்டணி பற்றி பகிரங்கமாக அறிவிப்பாரா அல்லது மீண்டும் தனித்துப் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு அவர் விரைவில் பதில் கூற வேண்டும். விஜயகாந்தின் முடிவிலேதான் அவரது கட்சியின் எதிர்காலம் தங்கி உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடனான  உறவை 2013 ஆம் ஆண்டு  திராவிட முன்னேற்றக் கழக‌ம் முறித்துக் கொண்டது.  இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் நியாயமாக நடக்கவில்லை என நொண்டிச்சாக்கு சொன்னார் கருணாநிதி. 2ஜி  முறைகேட்டை  திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு எதிரான திறன துருப்புச் சீட்டாக காங்கிரஸ் பகிரங்கப்படுத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஊழல் புகார் வலுப்பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தை   வீழ்த்த காங்கிரஸ் விரித்த வலையில் இரண்டு கட்சிகளும் விழுந்தன. நாடாளு மன்றத் தேர்தலில் மரண அடி  வாங்கியதனால்   இணைய வேண்டிய முக்கியத்துவத்தை இரண்டு கட்சித்தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும்  காங்கிரஸும் இணைந்து போட்டியிடப்போவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சு  வார்த்தை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.  ஜெயலலிதாவை பதவியில் இருந்து அகற்றுவதே இரண்டு கட்சிகளினதும் முக்கிய நோக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் கொடுப்பதை வங்கி வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலின் பொது திராவிட முன்னேற்றக் கழகத்தை நோகடித்த காங்கிரஸ் கட்சி இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கி இருக்கிறது. 

ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் பதவி, முக்கிய அமைச்சுக்கள் என வீர வசனம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  மூசுப்  பேச்சில்லாமல் அமைதியாக இருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை வெறுத்த ராகுல் தமிழக அரசியல் நிலைவரத்தை உணர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணிக்கு பச்சைக் கொடி  காட்டினர். தேர்தல் காலத்தில் அதிரடியாக வியூகம் அமைக்கும் ஜெயலலிதா இம்முறை பின்தங்கி விட்டார். கருணாநிதி முந்தி விட்டார். அரசியல் சித்து விளையாட்டு காட்டும் விஜயகாந்துக்கும் தெளிவான சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் குளம் நபி ஆஸாத், முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் இலங்க்கொவர்ன் ஆகியோர் கோபாலபுரத்தில் கருனநிதியைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர்.கருணாநிதியுடன் ஸ்டாலினும் கனிமொழியும் உடனிருந்தனர். இளங்கோவன்,தங்கபாலு, குமரி அனந்தன் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை செய்தபின்னரே பொதுச்செயலாளர்கள்  கருணாநிதியைச் சந்தித்தனர்.   காங்கிரஸுக்கு 50 தொகுதிகள் வேண்டும் என அவர்கள் ஆலோசனை கூறினார். 50தொகுத்திளை விட்டுக்கொடுக்க திராவிட முன்னேற்றக் கழக‌ம்   தயாராக இல்லை.25 தொகுதிகள் தன கிடைக்கும் என சூசகமாக திராவிட முன்னேற்றக் கழக‌ம் தெரிவித்துள்ளது.  30 தொகுதிகளையாவது கேட்டுப்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.  கூட்டணி சேர்ந்தாலே போதும் எனற மன நிலையில் உள்ள ராகுல் இருக்கிறார். ஆகையினால் தொகுதி பற்றிய பேரம் எதனையும் பேசுவதற்கு அவர் விரும்பவில்லை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்டாலினைச் சந்தித்தபோதே கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. சுப்பிரமணியன் சுவாமி தூண்டி விட்டாலும் பாரதீய ஜனதாவுடன் சேர்வதற்கு ஸ்டாலின் விரும்பவில்லை. இஸ்லாமிய கிறிஸ்தவ வாக்குகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக இருக்கும் என்பது வெளிப்படையனது. பாரதீய ஜனதாவின் தலைமையிலான கூட்டனியல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. கூட்டனிக் கட்சிகளும் படு தோல்வியடைந்தன. தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத கட்சியுடன் சேர்வதற்கு திராவிட முன்னேற்றக் கழக‌ம் விரும்பவில்லை.

தேர்தலுக்கு வெற்றி பெறுவதற்கு  பலமான கூட்டணி  மிக முக்கியம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தலைவர் காதர்  மொகிதீன்  கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது தந்து கட்சி கூட்டனியில் தொடரும் என உறதி செய்தார். புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் பேச்சு வார்த்தை  நடைபெறுகிறது. ஆகவே இது வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என கருணாநிதி நம்புகிறார்.
வர்மா
தமிழ்த்தந்தி
21/02/16

Wednesday, February 17, 2016

என்ன செய்யப்போகிறார் மனித உரிமைகளுக்கான செயலர்



 இலங்கை அரசியல் விவகாரம் இன்று சர்வதேசத்தினால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது  இலங்கையின் சகல அரசியல் நகர்வுகளையும் உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. உலக  நாடுகளின் சந்தேகப் பார்வையிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் இணைந்து முயற்சி செய்கிறார்கள். அவர்களின் முயற்சிக்கு இலங்கையின் சில அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இலங்கையில் நடைபெறுவதை அவதானிப்பதற்கு உலகத்தலைவர்கள் பலர்  விஜயம் செய்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்தது வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. ஐ.நா என்று உச்சரித்தாலே சிலர் சீறிச்சினந்து எச்சரிக்கை விடுத்த காலம்  ஒன்று இருந்தது.  ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான செயலாளராக நவநீதம்பிள்ளைஇருந்தபோது முன்னைய அரசாங்கம் கடும் போக்கை  கடைப்பிடித்தது. ஐ.நாவில் இலாங்கைக்கஈ எதிராக நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் அவரின் வழி நடத்துதலிலே தான் நிறைவேற்றப்பட்டன. ஆகையினால் அவரின் மீது கடும் சீற்றத்தில்இருந்தது. இன்று அந்த நிலைமை மாறி விட்டது.

ஐ.நாவைச் சேர்ந்த எவரும் இலங்கையில் காலடி வைக்க அனுமதிக்க மாட்டோம் என கடந்த அரசு சவால் விடுத்தது. உலக நாடுகள்   இலங்கை மீது  கொண்ட தவறான பார்வையை தவிர்க்க நல்லிணக்க அரசாங்கம் பிரயத்தனப்படுகிறது. அதன் ஒரு படியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைனுக்கு விரித்த செங்கம்பளம். கொழும்பு,யாழ்ப்பாணம்,திருகோணமலை,கண்டி .ஆகிய இடங்களுக்குச்சென்ற அவர் அரசியல்  தலைவர்களையும் மதகுருமாரையும்,சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.  உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம் பெயர்ந்து அகதி முகாமில் வசிப்பவர்களைக் கண்டு ஆறுதல் தெரிவித்தார்.

வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் மங்கள சமரவீர, வடமாகாண  ஆளுநர் பளிஹக்கர, வடமாகாண முதலமைச்சர் சிசீ.வி.விக்னேஸ்வரன், கிழக்கு  மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ,  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத், பாதுகாப்பு அமைச்சு செயலர், முப்படைத்தளபதிகள் ஆகியோரை முதலில் சந்தித்தார்.  பின்னர் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோரையும் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

காணமல் போனவர்களின் உறவினர்களை  யாழ்ப்பணத்தில் சந்தித்து அவர்களின் வலியை உணர்வதாகக்  குறிப்பிட்டார். சபபதிப்பிள்ளை  முகாமுக்குச்சென்ற அவர் அடுத்த முறை நான் இங்கு வரும்  போது இம்முகாம் இருக்கக்கூடாது  என்றார். காணமல் போன நாலாயிரம் பேர் பற்றிய விபரங்களை முதலமைச்சர் ஐ,நா மனித உரிமைகளுக்கான  செயலாளரிடம் முதலமைச்சர்  விக்கினேஸ்வரன் கையளித்தார்.
ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான மூன்று தீர்மானங்கள் நிலுவையில் இருக்கும் நிலையில் அதன் மனித  உரிமைகளுக்கான செயலாளரின் இலங்கை விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது. இலங்கையில்நடை பெற்றவைகளை அறிக்கைகள் மூலம் பார்த்துத்  தெரிந்து கொண்ட அவர்  யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில்  சந்தித்து உரையாடியவைகளை அறிக்கைப்படுத்துவார்.

 ஐ.நா  மனித உரிமைகள் செயலாளரின் இலங்கை விஜயத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விசுவாசிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை எல்லாம் புறக்கணித்த அரசாங்கம் அவரை நல்லபடி வரவேற்று அனுப்பி வைத்தது. இலங்கை மீதான் வெளிநாடுகளின் அழுத்தம் வெகுவாகக்  குறைந்துள்ளது. அந்த அழுத்தத்தை இல்லாமல் செய்வதே அரசின் முக்கிய பணியாகும்  இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைனின் அறிக்கை மென்மையாக இருக்கும் என இலங்கை நினைக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் நினைப்பது  போல மிக மென்மையாக அவரது அறிக்கை இருக்காது.

பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இலங்கைக்கு இருக்கிறது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.  கலப்பு வீதி மன்ற விசாரணையை அவர் வலியுறுத்துகிறார். சர்வதேச விசாரணை உள்ளக விசாரணை என்ற இலங்கையின் இழுபறியை அவர் விரும்பவில்லை. இது நல்லிணக்க அரசு இல்லை மனித உரிமைகள் இப்போழுத்தும் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. நல்லிணக்கம் மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைன்  நற் சான்றிதழ் வழங்கி உள்ளார்.

 இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்றதை பற்றிய மனித உரிமைகளை உரிய முறையில் விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை  வழங்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பம் மனித உரிமை மீறல் எதுவும் நடைபெறவில்லை பயங்கரவாதிகளை அழித்தோம் என்பதே அன்றைய இலங்கை அரசின் நிலைப்பாடு நல்லிணக்க அரசு இதற்கொரு முடிவைத் தரும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் உள்ளது.  பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்ட இராணுவ வீரனுக்கு தணடனை வழங்க  முடியாது என்ற கோஷத்தால்  விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது.

இதே வளை சர்வதேச விசாரணைக்கு எதிராக கையெழுத்து வேட்டை தலை நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ  தலைமையில் இதற்கான ஆரம்பவிழா விகாரையில் நடைபெற்றது.  மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தபோத்து வரின் ஆட்சிக்கு எதிராக இதே போன்று கையெழுத்து வேட்டை நடைபெற்றது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைன் ஐ.நாவில் சமர்ப்பிக்கு அறிக்கையிலேதான் இலங்கை அரசியலின் எதிர்காலம் தங்கி உள்ளது. இலங்கை அரசியல் சர்வதேச வலையில் விழுந்துள்ளது. அந்த வலையில் இருந்து மீழ்வது எப்படி என நல்லிணக்க அரசு யோசிக்கிறது. இலங்கை அரசின் மீது நாம எதையும் திணிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான  செயலர் இளவரசர் செயிட் ராட் அல்ஹுசைன் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் அறிக்கையில்  கூறப்பட்டவைகளை நடை முறைப்படுத்தினால் சிக்கல் இல்லை என மறை முகமாக சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளகப் பொறி முறையில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதை சர்வதேசம்  நம்புகிறது. உள்ளகப்பொறிமுறை சில சமயம் குற்றவாளிகளை தப்ப வைத்துவிடும் என்பதை சர்வதேசம் அறியும்.

ஆயுத்தப் போரில் மோசமான மனித உரிமைகள் நடைபெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை நடத்திய அனுபவம் ஐ.நா மனித உரிமைகள்  ஆணையத்துக்கு உண்டு. நீதியான விசாரணையை இலங்கை முன்னெடுத்தால் தலையீடு எதுவும் இருக்காது.

சர்வதேசத்துக்கு மட்டுமல்லாது இலங்கை மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய கடமை லல்லினக்க அரசுக்கு இருக்கிறது.
வானதி
சுடர் ஒளி
பெப்ரவரி 17/பெப்ரவரி 23