Showing posts with label போரட்டம். Show all posts
Showing posts with label போரட்டம். Show all posts

Monday, April 24, 2023

நீதியைத் தேடி 4 ஆவது ஆண்டு

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று நான்கு வருடங்கள் கடந்து விட்டன. உறவுகளை இழந்தவர்களின் துயர்  இன்னமும் தீரவில்லை.முடமானவர்கள்  இன்றும்  அப்படியே  இருக்கின்றன.  காயங்களின் வடு  நடந்த கோரத்தை நினைவூட்டுகிறது.ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. சர்வதேச நீதிமன்றம் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. ஏபர்ல்  21 ஆம் திகதியுடன்  ஈஸ்டர் தாக்குதல் நடந்து  நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், இதுவரை எந்த சந்தேக நபரும்  தண்டிக்கப்படவில்லை.

ஈஸ்டர் தின தாக்குதலை அமைதியான முறையில் நினைவு கூர்வதற்கு  பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித்  ஆண்டகை அழைப்பு விடுத்தார். ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி  21 ஆம் திகதி  நீர்கொழும்பில்நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட  நீர்கொழும்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர்கள் விடுத்த கோரிக்கையை நீர்கொழும்பு பதில் நீதவான் திரு.இந்திக்க சில்வா  (19) நிராகரித்தார். ஈஸ்டர் தின தாக்குதலில் உயிரிழந்தர்களுக்கான நினைவேந்தம் அமைதியான  முறையில் நாடெங்கும் நடைபெற்றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஏற்பாடு செய்யப்பட்ட அமைதியான பேரணிகள் ,  நிகழ்சிகளை தடுக்க முயற்சி செய்த பொலிஸார்  யாரைத் திருப்திப் படுத்த முயற்சிகிறார்கள்.

  இது அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது வன்முறையை ஏற்படுத்தவோ அல்லது மற்றொரு நபருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியோ அல்ல. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மையை அறியவும் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் மற்றொரு படி இது. இது தீவிரவாத செயல் அல்ல. உண்மையையும் நீதியையும் கேட்பது பயங்கரவாதமா? எனக் கேள்வி எழுப்பப்படுகிரது. வடக்கு, கிழக்கில்  நினைவேந்தல்களுக்குத் தடை விதித்தது போல்  மெற்கொண்ட முயற்சி பிசுபிசுத்துப் போனது. 

தியைக் கோரும் மக்களின் உரிமையைப் பயன்படுத்துவதை பயங்கரவாதச் செயலாக சித்தரிக்கும் காவல்துறையின் முயற்சிகளை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஏற்பாடு செய்யப்பட்ட அமைதியான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளை தடுக்கும் முயற்சிகள் குறித்து சிக்னிஸ் அமைப்பின் முன்னாள் தேசிய பணிப்பாளர் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ அரசாங்கம் மற்றும் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அரசும் காவல்துறையும் ஏன் இத்தகைய அணிவகுப்புகளுக்கு பயப்படுகின்றன? நீதி வழங்குவது எந்த ஒரு நபரையும் எதிர்மறையாக பாதிக்குமா? ” என்று கத்தோலிக்க பாதிரியார் கேட்டார். நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா, நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஏனைய அதிகாரிகள் குழு நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி கத்தோலிக்க திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை ஊர்வலத்தை தடுக்குமாறு உத்தரவிடுமாறு நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பெர்னாண்டோ குறிப்பிட்டார். ஏனைய நினைவேந்தல் நிகழ்வுகள் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கட்டுவாப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வத்தளை பொலிஸாராலும் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிரியார் தெரிவித்தார்.

"இதுபோன்ற கோரிக்கையை வைப்பதில் காவல்துறையின் உண்மையான நோக்கம் நம் அனைவருக்கும் தெளிவாக உள்ளது," என்றும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் பின்வருமாறு,

நாட்டின் புலனாய்வுப் பொறுப்பதிகாரியாக இருந்த நிலந்த ஜயவர்தனவை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் நான்கு முறை எச்சரித்த போதும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

நிலந்த ஜயவர்தன தனது கணினியில் உள்ள குறிப்புகளையும் நீக்கியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட கூடவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தன அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.

சஹாரானின் கையடக்கத் தொலைபேசி மதர்போர்டு இலங்கை இரகசியப் பொலிஸாரால் அமெரிக்க FBஈ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு தொடர்பு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் இந்த நாட்டிற்கு அறிக்கை அளித்த போதிலும், ரகசிய போலீசார் அமைதியாக இருந்தனர்.

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய சஹாரானை கைது செய்ய முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது.

தாக்குதல் நடத்தப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட அதிரடிப்படையினருக்கு எச்சரித்திருந்த நிலையில், உயர்ஸ்தானிகராலயத்தில் மாத்திரம் படைத் தலைவர் பாதுகாப்பை நிறுத்தியுள்ளார்.

தேவாலயங்கள் பற்றி பொலிஸ் புலனாய்வுத் தலைவரின் அறியாமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சஹாரானைப் பின்தொடர்ந்த பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்.

சஹாரானை கைது செய்வதை தவிர்க்குமாறு காவல்துறைக்கு அரசு அதிகாரி உத்தரவு.

தேவாலயங்கள் தாக்கப்படும் என எச்சரிக்கும் கொழும்பு பொலிஸ் அதிகாரியின் மாற்றம்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரிட்டனின் பெருநகர காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்புகள் பற்றி சிரியா-துருக்கி மற்றும் ரஷ்ய புலனாய்வு சேவைகளிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கு இலங்கையின் இரகசியப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

கத்தாரில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு நிதியளித்தவர் கைது

பாதுகாப்பு தோல்விகளை வெளிப்படுத்துதல்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி இராணுவ புலனாய்வு சேவையின் அறியாமை.

இராணுவப் புலனாய்வுப் பிரிவில் 4000 பேர் இருந்த போதிலும், தாக்குதல்கள் பற்றி யாருக்கும் தெரியாது.

இதுதவிர, ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது கொழும்பில் விரைவுத் தாக்குதல் படை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது தவிர புத்தளம் வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட தென்னந்தோப்புக்கு பொறுப்பாக இருந்த சந்தேக நபரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, சாரா ஜாஸ்மின் டிஎன்ஏவில் இறந்தார். விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கத்தோலிக்க திருச்சபை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் புகார் அளித்தது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி உட்பட பலருக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனினும் 600க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. சந்தேகநபர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக முஸ்லிம் தீவிரவாதிகளை கைது செய்ய முடியாமல் போனதாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சந்தேக நபர்களை அடையாளம் காண ஜப்பான் வழங்கிய அதிநவீன தொழில்நுட்ப வாகனத்தை கூட ப

யன்படுத்த வேண்டாம் என பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு உத்தரவு கிடைத்துள்ளது.

இது தவிர கட்டுநாயக்கவில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட அதிகாரிகள் இன்றும் பணியில் உள்ளனர். இது மிகவும் சோகமான நிலை. ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலி இன்னும் மறையவில்லை. இயக்கியது யார்? கத்தோலிக்க திருச்சபையைத் தவிர எந்த அரசியல்வாதியும் இதை கேள்வி கேட்கவில்லை. ஈஸ்டர் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை இந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைத்ததா?

Sunday, April 3, 2022

ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்


  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பிரிவத்த வீதிக்கு அருகாமையில் நேற்று இரவு 8 மணியளவில்  முறுகைப் போராட்டம்  நடைபெற்றது.

 பாதுகாப்புத் தடைகளை அகற்றி உள்ளேஎல்ல முயன்றவர்களை அங்கிருந்த பாதுகாப்புப் பிரிவினர் அதடுத்து நிறுத்தினர். போராட்டக்கரர்கலுக்கும் ஆர்ப்பாட்டக் காரர்கLuக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிலமையைக் கட்டுபடுத்துவதற்காக அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.

போராட்டம் காரணமாக மஹரகம - மிரிஹான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தின் போது இராணுவ வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதியதின் இல்லம் முற்றுகையிடப்பட்டு  சற்றுமுன்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கொழும்பு மிரிஹான பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது வீட்டுக்கு செல்லும் வழியை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பொலிஸாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

சமையல் எரிவாயு மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மத்தியியில் அரசாங்கம் தொடர்பாக பெரும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் கொழும்பின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதியின் நுகேகொடை மிரிஹான இல்லத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் இலங்கையில் வராலாற்றில் ஜனாதிபதி  ஒருவரின் வீட்டுக்கு அருகில் நடைபெறாத ஆர்ப்பாட்டமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.  வெளியிட்டுள்ளார்.

முதலில் போராட்டம் நடைபெற்ற நுகேகொடை பொலிஸ் பிரிவில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் இதனையடுத்து கொழும்பு வடக்கு தெற்கு பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேவேளை கொழும்பு - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள களனியிலும் காலி வீதியில் அமைந்துள்ள பிரதான நகரமான கல்கிஸ்சையிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நிலவும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றங்கள் வறிய மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மக்கள் கிளர்ச்சியாக உருவெடுக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார்.அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை காணக் கூடியதாக இருக்கின்றது.

இரண்டு தசாப்தங்ளுக்கு முன்னர் ஜே.வி.பியின் புரட்சி காலம் மற்றும் விடுதலைப் புலிகளின் போராட்டம் காலம் ஆகியவற்றின் போது நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டம் , ஊரடங்குச் சட்டம் என்பன தற்போதைய தலைமுறைக்கு புதியவையாக இருந்தாலும் பொருளாதார நெருக்கடியானது அவர்களுக்கு அந்த அனுபவத்தை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதே உண்மை. நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  

மிரிஹான, பங்கிரிவத்த மாவத்தைக்கு அருகில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்ட பின்னர் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

  பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பஸ் ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் , 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பஸ் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.

சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இரவு போராட்டம் நடந்த பகுதிகளில் தர்போது அமைதி திரும்பியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. , கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.மேலும், கல்கிஸ்ஸ மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் பல குழுக்களால் ஏப்ரல் 3 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட பொதுப் போராட்டங்களில் தாங்கள் பங்கேற்கவில்லை என்று பல அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.பொதுமக்களின் சீற்றம், தற்போதைய அரசாங்கத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல நகரங்களில் வெகுஜனப் போராட்டங்களை நடத்துவதற்கு வழிவகுத்தது.