Showing posts with label எஃப்1.விளையாட்டு. Show all posts
Showing posts with label எஃப்1.விளையாட்டு. Show all posts

Friday, September 17, 2021

கார் பந்தயப் போட்டியில் ஏற்பட்ட கோர விபத்து

இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின்போது நடைபெற்ற விபத்து வீடியோ இணையத்தில் வைரலாகிறது. பார்ப்பவரை பதற வைக்கும் வீடியோ, இரண்டு போட்டியாளர்களையும் பந்தயத்தில் இருந்து வெளியேற்றியது.

இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின்போது, வெர்ஸ்டாப்பனின் ரெட் புல் காற்றில் பறந்து வந்து மெர்சிடிஸ் மீது மோதியதில் நிகழ்ந்த விபத்து வீடியோ அனைவரையும் பதற வைக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவருக்கும் ஓரளவு தான் காயம் என்பது ஆறுதல் தருகிறது.

ஃபார்முலா ஒன், W12இல் நடைபெறவிருந்த மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டது. வெர்ஸ்டாப்பனின் (Verstappen) வலது-பின் டயர் ஹாமில்டனின் ஹெல்மெட்டைத் தாக்கும் படங்களை துல்லியமாக இந்த வீடியோ காட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்க இந்த விபத்து காரணமானது. பிரபல கார் பந்தய வீரர்களான லூயிஸ் ஹாமில்டன்  (Lewis Hamilton) , மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappஎன்) ஆகிய இருவரும்  பந்தயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.