தவெகவின் தலைமயில் தமிழகத்தில் புதிய கூட்டணி
ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாகிறதா தவெக?
200 பஸ்கள், 500 கார்கள் புடைசூழ அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி , எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோருடன்
1,000 க்கும் அதிகமான அதிமுகவினர்
இணைந்தனர்
ஊழல்
செய்தவர்களைப் புனிதராக்கும் பாரதீய ஜனதா கட்சியின் வோஷிங் மிஷன் தமிழகத்துக்கு வந்துள்ளது என்கிறார் கனிமொழி.
முண்டுகொடுக்கும் கட்சிகளை நம்பாமல் அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்காக 12 தொகுதிகளுக்கு குறி வைக்கும் தவெக.
ஊழல் அற்ற ஆட்சியை அமைப்பேன் என சத்தியப்பிரமாணம் செய்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து முதல்வரானார் விஜய். தூய சக்தி, தீய சக்தி என்ற சொல் தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. விஜய் என்ற ஒற்றைச் சொல் தமிழகத்தில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரம் செய்தபோது இருந்த உற்சாகம் முதல்வர் விஜய் யிடம் இல்லை. இதனை விமர்சகர்கள் ஏற்கெனவே சொன்னார்கள்.
விஜய் யின் கையில் ஆட்சியைக் கொடுத்தால் சட்டம் ஒழுங்,உ பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, பாதுகாப்ப்பு, ஊழல் அற்ற நிர்வாகம், கொமிஷன், போதை பழக்கம் என்பன சீராக இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. தவெக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் விபரம் வெளியன போது பலரும் அதிர்ச்சியடைந்தனர். பெண்களின் மீது தாக்குதல் நடத்தியவர்கள்,பாலியல் குற்றச் சாட்டு சுமத்தப் பட்டவர்கள், போதை வஸ்து பாவித்தவர்கள் சட்ட மன்ற உறுப்பினரானமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்ட சபையில் பதிலளிக்க் முடியாமல் அமைச்சர்கள் தடுமாறினார்கள். அதனை மாற்றியமைக்க வேண்டிய பை முதலமைச்சர் விஜய்யின் தலையில் விழுந்ததது.
தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த அன்றே தமிழக அரசின் மீது விமர்சனம் எழுந்தது. அதிமுகவின் பொதுச் செயலாளஎ எடப்பாடி கொதித்து எழுந்தார். அதிமுகவின் 25 உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அப்போதே குதிரை பேரம் ஆரம்பமானதாக குற்றச் சாட்டு எழுந்தது.
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் ,உட்பட ஆயிரக்கணக்கானோர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரின் முன்னிலையில் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி , எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோருடன் முன்னாள் எம்.எல்.ஏ-க்களான ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ், பாபநாசம் ராம்குமார், சாத்தூர் ராஜவ.பர்மன், பரமக்குடி சதன் பிரபாகர், பேராவூரணி ஞானசம்பந்தம், புதுக்கோட்டை பி.கே.வைரமுத்து மற்றும் பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர்.
இவர்களுடன் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினரும் தவெக-வில் ஐக்கியமாகினர். கொங்கு , டெல்டா ஆகிய மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியாகத் திகழ்ந்த இந்த முக்கியத் தலைவர்களின் ஒட்டுமொத்தத் தாவல், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் விஜய்க்கு பலத்தைக் கொடுப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குச் செல்லும் முக்கிய தலைவர்களை கட்சித்தலமையகத்தில், கட்சித் தலைவர் வரவேற்பதே வழமையானது அந்த வழ்மையை முதல்வர் விஜய் உடைத்து எறிந்துள்ளார். அடிமட்டத் தொண்டனில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் வரை தவெகவை நோக்கிப் படையெடுக்கிறார்கள். ஆனால், விஜய் மட்டும் மெளன விரதம் கடைப்பிடிக்கிறார். ஆதவ், ஆனந்த ஆகியோரே வருபவர்களை வரவேற்கிறார்கள்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் தவெகவில் எந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் இணைந்தாலும், விஜய்யை நேரில் சந்தித்துதான் இணைவார்கள். நாஞ்சில் சம்பத், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் விஜய்யை அவரின் வீட்டில் சந்தித்து தவெகவில் இணைந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அதிமுகவினர் சாரை சாரையாக தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பனையூர் அலுவலகத்தில் இணைந்த போதும் கூட முதல்வர் விஜய் செல்லவில்லை. அவர்கள் கட்சியில் இணைந்து சுமார் ஒரு மாதமாகியும், இதுவரை அவர்கள் யாரும் விஜய்யை சந்திக்கவில்லை.
தற்போது விஜயபாஸ்கர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தவெகவில் இணைந்த போதும் கூட விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தவெகவில் இணையும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் முன்கூட்டியே சென்று விட்டனர். ஆனால் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தாமதமாகவே அங்கு சென்றனர். . இதனால் விஜயபாஸ்கரே ஒவ்வொரு அதிமுக நிர்வாகியையும் தவெகவுக்கு வரவேற்க வேண்டிய நிலை உருவாகியது. பேப்பரில் எழுதி வைத்த ஒவ்வொரு பெயரையும் வாசித்து விஜயபாஸ்கர் அவர்களை தவெகவுக்கு வரவேற்றார். இதனால் தவெகவில் இணையும் அதிமுகவினருக்கு விஜய் உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டசபை உறுப்பினர் பதவியை இரானினாமாச் செய்து விட்டு இன்னொரு கட்சியில் இணைபவர்கள் எதனையும் எதிர் பார்க்காது இணைவார்களா என்ற பொது மக்களின் சந்தேகங்களுக்கு உரிய பதிலை எவரும் கொடுக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே தவெகவில் இணைவது தொடர்பாக விஜயபாஸ்கர் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தார். பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததனால் இணைப்பு விழா நடந்தது.
தவெக அரசுக்கு உதவி செய்யும் கட்சிகளை ஒன்றிணைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கான முன்னேற்பாடாக நன்றி சொல்லும் குட்டத்தை ஏற்பாடு செய்தார். தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகம், புதிதாக கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, சென்னை அடுத்த கோவளத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன. இடதுசாரிகள் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டம் நிறைவுபெற்றது.
"தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைந்துவிட்டது. தவெக அரசில் அங்கம் வகித்துவரும் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றன. தவெக அரசு தொடர வேண்டும் என்று கூட்டத்தில் அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க தவெக திட்டமிட்டுள்ளது. விரைவில் அது குறித்து அறிவிக்கப்படும். கருத்து வேறுபாடு இன்றி இந்த கூட்டணி அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்திருக்கும் கூட்டணி. கூட்டணிக்கான பெயர் குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஆலோசித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. திமுகவின் வெற்றிக்காகப் பாடுபட்ட காங்கிரஸ்,விசிக, ஐயூஎம்எல்மதிமுக ஆகியன தவெக கூட்டணியில் இணைவது உறுதியாகி விட்டது.
சமூக நீதி, மதசார்பற்ற என்ற சொற் தொடர்களை தவெக உச்சரிக்கத் தொடங்கி உள்ளது. இந்த மாயச் சொற்களில் கூட்டணிக் கட்சிகள் சிகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் கூட்டணிகள் என்பது வெறும் தேர்தல் கால ஏற்பாடு மட்டுமல்ல; ஆட்சியின் நிலைத்தன்மையையும், அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கிய கருவியாகும். தவெக கூட்டணிக் கூட்டம் வழக்கமான ஆலோசனைக் கூட்டத்தைத் தாண்டி, தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு புதிய ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் ஆரம்பகால கூட்டங்களில் பொதுவாக இரண்டு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று, தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான முன்னுரிமைகள். மற்றொன்று, கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கிடையேயான அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பு. இன்றைய கூட்டமும் இந்த இரு தளங்களிலும் கவனம் செலுத்தக்கூடும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு உள்ளது.
கூட்டணி அரசியலின் மிகப் பெரிய சவால், தேர்தலுக்கு முன் உருவான ஒற்றுமையை ஆட்சியிலும் தொடர்வதுதான். தேர்தல் காலத்தில் பொதுவான இலக்கு வெற்றியாக இருந்தாலும், ஆட்சியில் ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் தனித்த அரசியல் அடையாளம், பிராந்தியக் கவனம், ஆதரவாளர் எதிர்பார்ப்புகள் ஆகியவை இருக்கும். இவற்றை சமநிலைப்படுத்தும் திறனே கூட்டணியின் நீடித்த வெற்றியை நிர்ணயிக்கும்.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின் அரசியல் அணுகுமுறையும் இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாறக்கூடும். ஆளும் கூட்டணி ஒருங்கிணைந்த தோற்றத்தை வெளிப்படுத்தினால், எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் வியூகங்களை மறுசீரமைக்க வேண்டிய சூழல் உருவாகலாம். மாறாக, கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டால், அதனை அரசியல் வாய்ப்பாக மாற்றும் முயற்சிகளும் அதிகரிக்கலாம். எனினும், இவை அனைத்தும் கூட்டத்திற்குப் பிறகு வெளிவரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அரசியல் முன்னேற்றங்களைப் பொறுத்தே மதிப்பிடப்பட வேண்டும்.
காங்கிரஸ்,விசிக, ஐயூஎம்எல் ஆகியன தவெக அரசில் அமைச்சுப் பதவி பெற்றதனால் மதிமுகவுக்கும் பதவி ஆசை உருவாகி உள்ளது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு மதிமுகவினரையும் இராஜினாமாச் செய்யும்படி வைகோ உத்தரவிட்டார். அவர்கள் இருவரும் அதற்கு உடன்படவில்லை. அதனால் கொதித்தெழுந்த வைகோ குதிரைபேரம் எனக் குரல் கொடுத்துள்ளார். வைகோவின் கோபத்தால் ஒன்பது ஆண்டுகால உறவு முறிந்தது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் மதிமுக மதிமுக உயர்நிலை குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன், அவை தலைவர் ஒடிட்டர் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு, அரசியல் களத்தில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் மதிமுகவும் மாற்றத்திற்கு தயாராகிவிட்டது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே திமுக - மதிமுக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் பிரச்சனை மேலும் அதிகரித்தது. தேர்தலில் திமுக சார்பில் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அதிலும் கூட திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நெருக்கடி கொடுத்தனர். இதை பெரும்பாலான நிர்வாகிகள் விரும்பவில்லை. தலைவர் வைகோவுக்கு இரண்டாவது முறை மாநிலங்களவை எம்பி பதவியும் வழங்கவில்லை. தேமுதிக , காங்கிரஸ் ஆகியனவற்றுக்கு ராஜ்யசபா ஒதுக்கப்பட்டன. மதிமுகவின் மனமாற்றத்துக்கு இவையும் முக்கிய காரணமாகின.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த ஐந்து எம்எல்ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் தவெகவில் உடனடியாக ஐக்கியமாகினர். விஜயபாஸ்கரும் இணைந்து விட்டார். சில எம்எல்ஏ-க்கள் இராஜினாமா செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 12 தொகுதிகளை தவெக முறிவைப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ய விஜய் விரும்புகிறார்.
மதிமுகவின் இரண்டு எம்எல்ஏ-க்களும் இராஜினாமா செய்தால், அவர்களை வெல்ல வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று முதல்வர் விஜய் உத்தரவாதம் அளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தடு பெரும் சர்ச்சையாகிவிட்டது.
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அறிவித்துள்ளது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து வைகோ பேசியுள்ள சம்பவம் முதல்வர் விஜய்யின் இமேஜையும், டேமேஜ் செய்வதாக அமைந்துள்ளது. அதில் வைகோ பேசுகையில், மதிமுகவின் இரண்டு எம்எல்ஏ-க்களும் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் வரும். அப்படி இடைத்தேர்தல் வந்தால் நானே வந்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன் என முதல்வர் விஜய் சொன்னார். அவர்களின் வெற்றிக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்றார். இதனை செந்தில் செல்வனிடம் சொன்ன போது பதிலே சொல்லவில்லை. அவர் திமுகவில் இருக்கப் போகிறேன் என்று போய்விட்டார். ராஜேந்திரன் எம்எல்ஏ-வாக தொடர்வேன் என்று கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு கட்சித் தலைவரிடம் உங்களின் எம்எல்ஏ-க்களை இராஜினாமா செய்துவிட்டு வரச் சொல்லுங்கள்.. அவர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று விஜய் நேரடியாக கூறி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இதன் மூலமாக மற்ற கட்சிகளின் எம்எல்ஏ-க்களிடமும் விஜய் தான் இப்படி பேசினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் , சி விஜயபாஸ்கர் குழுவை தான் முதல்வர் விஜய் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இந்த அணியில் இருந்த விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தான் இராஜினாமா செய்திருக்கின்றனர். இதன் மூலமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் பேசியதை போல், விஜய் தான் நேரடியாக பேசி அவர்களை இராஜினாமா செய்ய வைத்துள்ளாதாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியதால் வைகோ பின்வாங்கினார். முதல்வர் விஜய் அப்படிச் சொல்லவில்லை என வைகோ மறுநாள் தெரிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் குதிரை பேரத்துக்கு எதிராக ஆளுநரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. பொது நலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால் குதிரை பேர விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ரமணி
5/7/26

.webp)

No comments:
Post a Comment