அரசுபதவிகளில் விஜய்கு ஆதர்வான படக்குழுவினர் நியமனம் பெரும் விமர்சனத்தை
எதிர்கொண்டுள்ளது.திரிஷாவின் தோழிக்கும் அரச பதவி
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கத்தோலிக்க அமைப்பின் கருக்கலைப்பு எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டதும், நிதியமைச்சர் மரிய வில்சன் தனது தமிழ் உச்சரிப்பு தொடர்பான விமர்சனத்திற்குப் பதிலளிக்கையில் தனது கிறிஸ்தவ நம்பிக்கையை முதன்மைப்படுத்திப் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
தமிழக சட்டசபையின் மதிப்பையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவது சபாநாயகர்,முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களின் கடமையாகும். தவெக அரசபீடம் ஏறிய பின்னர் கண்ணியம், மதிப்பு, மாண்பு அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளன.
எதிர்க் கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து கேலியும், தனிமனிதத் தாக்குதலும் பகிரப்படுகின்றன. ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு பதிலளிக்கும் போர்வையில் எதிர்க் கட்சி உறுப்பினர்களும் தம் பங்குக்கு வார்த்தையை அவிழ்த்து விடுகின்றனர். நடுநிலையாகக் கடமையாற்ற வேண்டிய சபாநாயகர் சில வேளைகளில் பக்கச் சார்பாக நடக்கின்றார் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.
சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது , முதலமைச்சர் அவைக்குள்நுழையும் போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது மரபு. ஆரம்பத்தில் இது சுமுகமாகவே நடைபெற்றது. இப்போது அந்த மரபு தலை கீழாக மாறிவிட்டது. முதல்வர் விஜய் சபைக்குள் நுழையும் போது எதிர்க் கட்சித் தலைவர் எழுந்து மரியாதை செலுத்துவதில்லை. ஒரு நாள் கே.என். நேரு மட்டும் எழுந்தார். ஏனைய திமுக உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.
ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோதும், தவெக ஆட்சியின் தொடக்கத்திலும் இது பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தச் சூழல் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. இதற்கு சட்டமன்றத்தில் நடந்த இரண்டு முக்கிய சம்பவங்கள் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
உதயநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் திமுக தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் சட்டமன்றத்திலும் நேரடியாக எதிரொலித்தது. முதல் நாள் முதலமைச்சர் எதிர்க் கட்சித்தலையவரி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால், எதிர்க் கட்சித்தலைவர் ஸ்டாலின் அடிக்கடி முதல்வர் விஜய் யை நோக்கினார்.
இரண்டாம் நாள் முதலமைச்சர் விஜய் அவைக்குள் நுழைந்த போது, கே.என்.நேருவைத் தவிர வேறு எந்த திமுக உறுப்பினரும் அப்போது எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கவில்லை. முதலமைச்சர் புன்முறுவலுடன் அவையின் மையப்பகுதி வரை சென்று வணங்கியபோதும், உதயநிதி தனது பார்வையைத் தவிர்த்தார்.
அப்பாவைக் காணோம்" என்று முதலமைச்சர் விஜய் " பேசியதும், வேளாண் பட்ஜெட் விவாதத்தின்போது உதயநிதியின் கேள்விகளுக்கு "ஆவணங்களையும் செய்தித்தாள்களையும் சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும்" எனப் பதிலடி கொடுத்ததும் காரணமாக இருக்கலாம் எனக் கருதப் படுமீறது
. முதலமைச்சர் பதவி - அடிப்படை மரியாதை "அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கடுமையான விமர்சனங்களும் இருப்பது இயல்பானதுதான். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குள் தனிப்பட்ட வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்துவது நாகரிகமான அரசியலுக்கு அழகல்ல. முதலமைச்சர் பதவி என்பது ஒரு தனிநபருக்கோ அல்லது குறிப்பிட்ட கட்சிக்கோ சொந்தமானது கிடையாது.. அது தமிழக மக்களின் ஜனநாயகத் தீர்ப்பினால் உருவான அரசியலமைப்பு பொறுப்பாகும். அந்த பதவிக்கு தர வேண்டிய அடிப்படை மரியாதையை தராமல் தவிர்ப்பது சட்டமன்ற மரபுகளைப் பலவீனப்படுத்தும்" என்று சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. அதுமட்டுமல்ல, அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய இடம் அவையின் விவாதங்களே தவிர, அடிப்படை மரியாதையை தவிர்க்கும் செயல்பாடுகள் கிடையாது.. அதுமட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் சபையில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை பொதுமக்களும் உற்று கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவையின் கண்ணியத்தைக் காப்பதே முதிர்ச்சியான அரசியலுக்கு சான்றாகும். என்றும் மூத்த அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறி வருகிறார்கள்.
அரசு பதவிகளில் விஜய் படக்குழுவினர் நியமிக்கப்பட்டதால் இது அரசாங்கமா பட தயாரிப்பு நிறுவனமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர், அரச பதவிகளில் தமக்கு விருப்பமானவர்கள் நியமிக்கப்படுவார்கள். அல்லது புதிய அரச பதவிகள் உருவாக்கப்பட்டு விசுவாசிகளுக்குப் பொறுப்புக் கொடுக்கப்படும். தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்து மூன்ரு மாதங்கள் கடந்த நிலையில் ஏகப்பட்ட்ட குற்றாச் சாட்டுகள், விமர்சனங்கள் எழுந்துக்கன.
அதில் ஒன்று தான் "அரசு பதவிகளில் விஜய் படக்குழுவினர்" நியமனம். தனக்கு நெருங்கிய பட குழுவினரை அரசு பதவியில் விஜய் அமர்த்தி வருகிறார் என விமர்சனம் முன்வைகப்படுகிறது.
'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அரசு பதவி வழங்கப்பட்டது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் என பலரும் முதல்வர் விஜய்யை விமர்சித்தனர். இந்த விமர்சனம் அடங்குவதற்கிடையில் விஜய்யின் 'கோட்' பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு கோவிலுக்கான அறங்காவலர் நியமனக் குழுவில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விஜய்யின் 'லியோ' பட இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதலமைச்சரின் தனிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 'பீஸ்ட்' பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக வெவ்வேறு துறைகளில் தனது படக்குழுவினருக்கு அரசு பதவிகளை முதல்வர் விஜய் வழங்கி வருவது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இவர்கள் யாருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வல். அவர்களால் தமிழ் நாட்டுக்கு என்ன பிரயோசனம் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.
தவெக அரசின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது பாரதீய ஜனதா. மோடி, அமித்ஷா கூட்டணி விரும்பிய திமுக,அதிமுக இல்லாத தமிழகம் இப்போது நடை முறைப் படுத்தப்படுகிறது. ஆனால், அங்கே ஊடுருவியிருக்கும் கத்தோலிக்கத்தை பாரதீய ஜனதா கண்காணிக்கிறது.
கத்தோலிக்க அமைப்பின் கருக்கலைப்பு எதிர்ப்புப் பேரணியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டதும், நிதியமைச்சர் மரிய வில்சன் தனது தமிழ் உச்சரிப்பு தொடர்பான விமர்சனத்திற்குப் பதிலளிக்கையில் தனது கிறிஸ்தவ நம்பிக்கையை முதன்மைப்படுத்திப் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
, "எனக்கு ஒரு மொழியை எனது கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது; அது அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. இது பாதிபேருக்கு, எவ்வளவு தமிழ் படிச்சாலும் தெரியாது. நான் பைபிளை படித்திருக்கிறேன், பிறப்பால் கிறிஸ்தவன்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். இதற்கு முன்னதாக, கத்தோலிக்கக் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட "மார்ச் ஃபார் லைஃப்" பேரணியில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு, "கருவில் உருவாகும் நொடியிலிருந்தே உயிர் தொடங்குகிறது" என்று உரையாற்றினார். நடுநிலை வகிக்க வேண்டிய அரசமைப்புப் பதவிகளில் இருப்பவர்கள், மதச் சார்புடைய கருத்தியல்களுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பது தமிழ்நாட்டு அரசியலின் மரபுகளுக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழுந்தன. பா.ஜ.க.வின் கள வியூகம் மற்றும் கூட்டங்கள் இந்த இரு சம்பவங்களையும் கையில் எடுத்துள்ளது பாஜக.
முதலமைச்சர், சபாநாயகர் உட்பட தமிழகத்தின் முக்கிய பொறுப்புகளில் கத்தோலிக்கர்கள் வீற்றிருக்கிறார்கள்.
சட்டமன்றத்திலேயே மதக் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதன் மூலம் பொது நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. கிறிஸ்துவம் பரப்பப்படுகிறது, என்ற வாதம் வைக்கப்பட உள்ளது. இத்தகைய பிரச்சாரத்தின் மூலம், தவெகவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, சிறுபான்மை ஆதரவு அரசியல் நிலவுவதாகக் கூறி இந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது.
தமிழக அரசியலில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த திராவிட அரசியல், பொது நிர்வாகத்தையும் மத நம்பிக்கையையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் இத்தகைய மத அடையாள மோதல்கள் பொதுவெளியிலும் சட்டமன்றத்திலும் எழாத வண்ணம் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டன. ஆனால், தவெக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே அமைச்சர்களும் சபாநாயகரும் தங்களின் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை அரசமைப்புப் பதவிகளோடு இணைத்துப் பேசியது, பாஜகவிற்கு புதிய ஆயுதத்தைக் கொடுத்துள்ளது. இந்த அரசியல் காய்நகர்த்தல் மூலம், வழக்கமாகப் பிரிந்து கிடக்கும் வாக்குகளைத் தன்பக்கம் ஈர்த்து, தமிழகத்தில் தனக்கான பலமான வாக்கு வங்கியைக் கட்டமைக்க பா.ஜ.க முயல்கிறது. குறிப்பாகக் மேற்கு, தெற்கு மாவட்டங்களில் இந்தக் கூட்டங்களை தீவிரமாக நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இது ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது. மத ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் நடுநிலைமையைக் காப்பாற்றத் தவறினால், அது பாஜகன் தீவிரப் பிரசாரத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்நிகழ்வே சான்றாகும். தவெக தலைவர்களின் இந்த அவசரப் பேச்சுக்கள், பா.ஜ.க.விற்கு இந்து வாக்குகளைத் திரட்டுவதற்கான களத்தை அமைத்துக் கொடுத்துள்ளதுடன், தமிழக அரசியலில் ஒரு புதிய மத அரசியலை உருவாக்கியுள்ளது. வரும் நாட்களில் தவெக அரசு இந்தச் சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதில்தான் கட்சியின் எதிர்கால அரசியல் அடங்கியுள்ளது.
ரமணி
1 6/8/26




No comments:
Post a Comment