Wednesday, September 19, 2012

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புஜெயலலிதாவுக்கு சாதகம், சோனியாவுக்கு பாதகம்


 தமிழகத்தில் எதிரும் புதிருமாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் ஒன்றாகவே குரல் எழுப்பின.
எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான போராட்டங்களினால் இந்திய நாடாளுமன்றச் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று என்.டி.டி.வி. தொலைக்காட்சி  இஸ்ரோ நிறுவனத்துடன் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. மத்தியில் பாரதீய ஜனதாக் கூட்டணியும் தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியும் வெற்றி பெறும் என்று அக்கருத்துக் கணிப்புக் கூறுகிறது. 125 தொகுதிகளில் 30 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இரண்டு சட்டமன்றத் தொகுதியில் 100 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 20 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 18 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் ஒரு தொகுதியில் வேறு கட்சி வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 27 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இக் கருத்துக்கணிப்பின் மூலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சில தொகுதிகளை இழக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்றபோது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை நிறுத்தும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு என்று தமிழ் மக்கள் நம்பினார்கள். இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் மத்தியில் இந்திய நாடாளுமன்ற பொதுத் @தர்தல் நடைபெற்றதனால் காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் தோல்வியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் உள்ள செல்வாக்கை நாடாளுமன்ற தேர்தல் வெளிப்படுத்தியது.
தமிழக முதல்வரான பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கைகளை வைத்துள்ளதாக கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் விரும்புவதை ஜெயலலிதா அதிரடியாகச் செய்து முடிக்கிறார்தப்புச் செய்த அமைச்சரிடம் இருந்து அமைச்சுப் பொறுப்பைப் பறித்து மற்றவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கிறார். தமிழக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதுவதுடன் நின்றுவிடாது தனது அதிகாரத்தின் கீழ் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து முடிக்கின்றார்.
தமிழகத்தில் உதைபந்தாட்டம் விளையாடிய இலங்கை அணியை உடனடியாக வெளியேற்றினார். மைதானத்துக்கு அனுமதி கொடுத்த அதிகாரியைப் பணி நீக்கம் செய்தார். ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஒரு சில தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் இந்திய  இலங்கை ராஜதந்திர உறவுகளில் பாரிய இடைவெளி தோன்றும் சம்பவமாக இது மாறியுள்ளது.
தமிழகத்துக்குச் சென்ற படை வீரர்கள் அமைச்ச‌ர்கள் ஆகியோருக்கு எதிராகப் பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்பு அலை சிங்கள மக்கள் மீதும் விளையாட்டு வீரர்கள் மீதும் திரும்பியுள்ளது. தமிழகத்துக்கு செல்ல வேண்டாம் என சிங்கள மக்களை இலங்கை அரசு எச்சரித்துள்ளது. இராஜதந்திரம் மூலம் இந்திய அரசைத் தன் பாதைக்கு இழுக்க இலங்கை அரசு முயற்சிக்கிறது.
இந்திய மத்திய அரசுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் ஜெயலலிதா செயற்படுவதாலும் தப்புச் செய்யும் அமைச்Œர்களை உடனடியாகப் பதவியிலிருந்து வெளியேற்றுவதாலும் ஜெயலலிதாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டின் சிறந்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பில் ஜெயலலிதா சிறந்த முதல்வர் என 50 சதவீதமானவர்கள் கூறியுள்ளனர். மிகச் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர் கருணாநிதி என 32 சதவீதமானவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடைபெற்றால் பாரதீய ஜனதாக் கட்சியி தலைமையில் ஐக்கிய ஜனநாயகக்கூட்டணி 207 இடங்களில் வெற்றிபெறும். பாரதீய ஜனதாக் கட்சி   164 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 64 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 189 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் எனவும் கருத்துக் கணிப்புத் தெரிவிக்கின்றது.
கருத்துக் கணிப்பு முடிவுகள் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளன. ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரிசொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கினால் ஜெயலலிதாவின் செல்வாக்கு குறையவில்லை, வடமாநிலங்களில் காங்கிரஸின் பிடி தளர்ந்து வருகிறதை கருத்துக் கணிப்புகள் உறுதி செய்துள்ளன.
வர்மா
சூரன்..ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு09/09/12

No comments: