Saturday, September 20, 2014

தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் தீர்ப்பு

பெங்களூர் சிறப்புநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் வருமானத்துகு அதிகமாகச் சொத்துச்சேர்த்த வழக்கின் தீர்ப்பு  ஜெயலலிதாவின் தலைவிதியை மட்டுமல்லாது தமிழகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகிறது. ஜெயலலிதா,அவரின் உடன் பிறவாசகோதரி சசிகலா, இளவரசி,ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகர் ஆகியோருக்கு எதிராக  1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி  சுப்பிரமணியன் சுவாமியால் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 18 வருடங்களின் பின்னர் அறிவிக்கப்படப்போகிறது.

ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி தெரிவித்தால் ஜெயலலிதாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் லைமைக்கு போட்டி ஏற்படும். அவர் நிரப‌பாராதிஎவிடுவிக்கப்பட்டால் திராவிடமுன்னேற்றக் த்துக்கு பாரியசிக்கல்நிலை உண்டாகும்.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு எப்படி இருந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனக்குச் சார்பாகப் பிரசாரத்தை ஆரம்பித்துவிடும். குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்டால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் பழிவாங்கல் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும். நிரபராதி என்றால் வெற்றிக்கொண்டாட்டம் விண்ணைத் தொட்டுவிடும்.ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு சுப்பிரமணியன் சுவாமியால் தாக்கல்செய்யப்பட்டதென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொ ண்டர்களுக்குத் தெரியாது.


 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முலமைச்சராக ஜெயலலிதா வீற்றிருந்தபோது வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்ததாக சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்தார் . அந்தமனு விஸ்வரூபமெடுத்து மாநிலம்தாண்டிய வழக்காக மாறியது. முதமைச்சராகஇருந்தஜெயலிதா மாதம் ஒரு ரூபா ம்பம் பெற்றார்.1991 ஆம் ஆண்டு 2 கோடியே  ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபா சொத்து இருந்ததாகதெரிவித்தார். 1996 ஆம் ஆண்டு அவருடையசொத்தின் திப்பு 66 கோடியாகஅதிகரித்தது. இன்று அச்சொத்தின் திப்பு 2847 கோடி ரூபா எனதிப்பிடப்பட்டுள்ளது




உடன்பிறவாச் சகோதரி சசிகலா அவரது உறவினர் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் பலமடங்கு அதிகரித்தனஜெயலலிதாவால் வளர்ப்பு மகனாக சுவீகரிக்கப்பட்ட சுதாகரனுக்கு 100 கோடி ரூபா செலவில் திருமணம் நடைபெற்றது. இவை எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவில் குறிப்பிடப்பட்டன.  18வருடகால இடைவெளியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு ஐந்துதேர்தல்கள் நடைபெற்றுள்ளன.தமிழக சட்டசபை மூன்று தேர்தல்களைச் சந்தித்த‌து. வலுவான‌ ஆதாரங்களுடன் ஜெயலலிதாவுக்கு எதிராக மனுச்செய்த சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது ஜெயலலிதாவின் கொள்கை.

  தமிழகத்திலும் பெங்களூரிலும் நடைபெற்ற இந்த வழக்கை தாமதப்படுத்துவதிலேயே எதிரிகள் முனைப்பாக இருந்தனர். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கடுப்படைந்தனர். நீதிபதிகள்எதிரிகளை டுமையாகஎச்சரித்தர். பெங்களூர் சிறப்புநீதி ன்றத்தில் நான்கு நீதிபதிகள் மாறிவிட்டர். அரப்பு க்கறிஞர் வெறுப்படைந்து வெளியேறிவிட்டார். உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியற்றின் நீதிபதிகள் மாறிவிட்டர்க்கிலே ம்பந்தப்பட்டஅதிகாரிகள் ஓய்வுபெற்றுவிட்டர். க்கின்தீர்ப்பு வெளியாவற்கு  இப்போதுதான் நாள்குறிக்கப்பட்டுவிட்டது.

இந்தநிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் வழக்கில்  அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.1991 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டுவரை வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கில் சமாதானமாகப்போக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது   

ஜெயலலிதாவின் ஆதரவாளர்களும் எதிரிகளும் தீர்ப்பின் நாளை  திகிலுடன் எதிர்பார்த்துள்ளனர். நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் பதவி பறிக்கப்படும் சட்டம் அமுலில் உள்ளது.ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவரது பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டுவிடும். இது ஜெயலலிதாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்துக்கே அவமானமாகும். குற்றவளியாக அறிவிக்கப்பட்டதால் லல்லு பிரசாத் உட்பட பல அரசியல் தலைவர்கள் பதவி இழந்தனர்.2001  ஆம் ஆண்டு பிளசன் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டபோது பன்னீர்ச்செல்வத்தை முதலமைச்சராக்கினார்.மேன் முறையீடு செய்தபின்னர் ஜெயலலிதா முதல்வரானார். இப்போதைய சட்டத்தால் அப்படிச்செய்யமுடியாது. மேன்முறையீடு செய்தாலும்  நிரபராதி என தீர்ப்பு வழங்கப்படும் வரை பதவி ஏற்கமுடியாது. 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா  குற்றவாளியாகதீர்ப்பளிக்கப்பட்டபின்னர் மிழமே ற்றி எரிந்தது.ர்மபுரியில் ஸ்ஸுடன் சேர்த்து மூன்று மாணவிகள் கொளுத்தப்பட்டர்.சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்கு மிக பெரிய அளவில் மக்கள் வந்து செல்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குவாரி முறைகேடு வழக்குக்காக வந்தபோது பத்திரிகையாளர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டதால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டது. 150 பேர் மீது வழக்கு போட்டு சி.பி. விசாரித்து வருகிறது. என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி உள்ளார்

20 ஆம்திகதியும் நீதிமன்றமும் ராசியானது இல்லை என ஜெயலலிதா நினைக்கிறார்.ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக.நீதிமன்றத்தைமாற்ற நீதிபதி ம்மதம் தெரிவித்து 27 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 27 ஜெயலலிதாவுக்கு ராசியான இலக்கம். தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று  எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 தீர்ப்பு வழங்கப்படும் நாள் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களுக்கும் எதிரிகளுக்கும் மிகமுக்கியமான நாளாக அமையப்போகிறது.முதலமைச்சர் கனவில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர்கள் சிலர் மிதக்கின்றனர். ஜெயலலிதா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் விருப்பம்.


6 comments:

Anonymous said...

தீர்ப்பின் வாசகங்களே இந்நேரம் எப்படி எழுத வேண்டுமோ அப்படி எழுத பட்டிருக்கும்.
முன்பு மாதிரி தான் வர வாய்ப்புள்ளது ..
"தவறு செய்தவர்கள் திருத்தி கொள்ள வேண்டும்."!!!

Unknown said...

தீர்ப்பு வரும்முன்னே எழுதிய தீர்ப்பா

உங்களின் திறமைக்கு பாராட்டுககள்

Unknown said...

PATTATHARI ASIRIYARKALIN VAYITRIL ADITHA PAVATHIN PALANAI IPPOTHU ANUBAVIKKIRARKAL.AVARKALIN KANNEERUKKU NEENGAL PATHIL SOLLUM KALAM VEGU THOLAIVIL ILLAI. ARASAN ANDRU KONDRAN (TET VALAKKIL) DEIVAM NINDRU KONDRATHU. (SOTHU KUVIPPU VALAKKIL)

வர்மா said...

Anonymous said...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந‌ன்றி

வர்மா said...




Jaya Kumar


..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந‌ன்றி

வர்மா said...


Chellamani murugan
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந‌ன்றி