![]() |
Add caption |
தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து தமிழ் தேசிய
கூட்டமைப்பை தாக்குவதையே பிரதான குறிக்கோளாகக்கொண்டு சில பத்தி எழுத்தாளர்கள் தமது
விருப்பத்தை மக்கள் மீது திணிக்கத்தொடங்கி விட்டனர்.கூட்டமைப்பு தவறு விடும்போது
சுட்டிக்காட்டுவது வரவேற்கத்தக்கது. கூட்டமைப்பு எடுக்க்கும் முடிவுகள்
நடவடிக்கைகள் அனைத்தும் தவறு என சப்பைக்கட்டு கட்டும் கட்டுரைகள் பல
பத்திரிகைகளிலும் ஃபேஸ்புக்களிலும்
நிரம்பி வழிகின்றன.
சம்பந்தர் புலிக்கொடியை கைவிட்டு
சிங்கக்கொடியை தூக்குகிறார், சுமந்திரன் இரகசியப்பேச்சு வார்த்தை நடத்துகிறார்.சரவணபவன்
இரண்டுபக்கமும் தலை காட்டுகிறார் என்ற சாரப்பட கட்டுரைகளை தமது இஷ்டத்துக்கு
எடுத்து விடுகின்றனர்.இரண்டொரு பந்தி
எழுத்தாளர்கள் தமது மனதில் உள்ள கசப்புணர்வுகளை வெளியிட பத்திரிகைகளை
களமாகப் பயன் படுத்துகின்றனர்.சொந்தப்பெயரில் கட்டுரை எழுதுபவர்கள்
மிகவும் குறைவு. புனைபெயர்களில் மறைந்து
நின்று குதர்க்கமான கருத்துக்களை மக்கள்மீதி திணிப்பதில் இவர்கள் வெற்றி
பெறுகின்றனர்.பலதையும் சிந்தித்து முடிவெடுக்க முடியாத வாக்காளர்கள் இப்படிப்பட்ட எழுத்தாளர்களின் வலையில்
மிகசுலபமாக விழுந்து விடும் ஆபத்தான நிலை உள்ளது.
கூட்டமைப்பின் மீது சுமத்தப்படும்
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் ஊடகம்
அவர்களிடம் இல்லை. ஆகையினால் கூட்டமைப்பு தவறு செய்கிறதோ என்ற சந்தேகம்
மக்கள் மனதில் தோன்றக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.மக்களின் மனதில் மிக
ஆழமாக பதியும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தலைப்புகளை தமது கட்டுரைக்கு
சிலர் இடுகிறார்கள். கூட்டமைப்பை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளின்
முக்கிய புள்ளிகளும் புனை பெயரில் கூட்டமைப்பின் மீதான் தமது எதிர்ப்பை மக்களின்
மனதில் விதைக்கின்றனர். இந்தவிதை காலப்போக்கில் பெரும் விருட்சமாக வளர்துவிடும்
சந்தர்ப்பம் ஏற்படலாம். புங்குடுதீவு சிறுமிமீதான துஷ்பிரயோக சம்பவத்தில்
தமிழரசுக்கட்சியில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு இருக்கிறது என நிரூபிப்பதற்கு
சில இணைய தளங்களும் பேஸ்புக் எழுத்தாளர்களும் வரிந்து கட்டிமுயற்சி செய்தனர்.
சம்பூர் மக்களின் இடத்தை
மீட்டுக்கொடுத்தது, இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த இடங்களை மீட்டு மக்களிடம் கையளித்தது
போன்றவற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்கு இருப்பதை வெளிப்படுத்த சிலர்
விரும்பவில்லை. அப்படி வெளிப்படுத்தினால் அது கூட்டமைப்புக்கு சாதகமாகி
விடும் என்ற பயம் அவர்களிடம் உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தலைமைதாங்கும்
தமிழரசுக்கட்சியை தாக்கு வதில் சில எழுத்தாளர்கள் அதீத அக்கறை கொண்டுள்ளனர்.
தமிழசுக்கட்சியின் மேலாதிக்கம் மற்றைய கட்சிகளை சிறுமைப்படுத்துவதாக இவர்கள்
புலம்புகின்றனர். தமிழரசுக்கட்சிதான் இவ்ர்களது பிரதான குறிக்கோள்.
கூட்டமைப்பு வேண்டும் ஆனால் தமிழரசுக்கட்சி பலமற்றதாக் இருக்க வேண்டும்
என்பது சிலரது விருப்பம்.
வடமாகாண சபைத் தேர்தலின்போதும் ஜனாதிபதித்தேர்தலின் போதும் கூட்டமிப்பின்
மீது சுமத்தப்பட்ட குற்றச்சாடுக்களே
புதிய வடிவில் திரும்பவும் அரங்கேற்றப்படுகின்றன.
No comments:
Post a Comment