Wednesday, October 21, 2015

தமிழ்த் திரை உலகின் முடிசூடாராணி

சிவாஜி,எம்.ஜி.ஆர்,எஸ்.எஸ்.ஆர் போன்ற் பிரபல நட்சத்திரங்கள் தமிழ்த் திரை உலகை தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தபோது தனது நகைச்சுவை நடிப்பினால் ரசிகர்களின் மனதில் முடிசூடாராணியாக வீற்றிருந்த நடிகை மனோரமாவின் பிரிவு ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. 12 வயதில் நாடகத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் புகுந்த மனோரமா 65 ஆன்டுகளாக சிம்மாசனம் போட்டு வீற்றிருந்தார்.

மனோரமாவின்வாழ்க்கை சோகம் மிகுந்தது அந்த சோகங்களை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு ரசிகர்களை சிரிக்க  வைப்பதையே  தனது  வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.கைக்குழந்தையுடன் வீதிக்கு விடப்பட்ட மனோரமாவின் தாயார் மிகுந்த கஷ்டங்களின் மத்தியில் அவரை வளர்த்தார். திருமணம் முடித்து நான்கு வருடங்களிலேயே விவாக ரத்து பெற்றுவிட்டார் மனோரமா. . பாடும் ஆற்றலும் நடிப்புத்திறமையும் கொண்ட மனோரமா எதிர்நீச்சல் போட்டு கின்னஸ் புத்தகத்தில் பெயரைப்பொறித்தார்.

தஞ்சையை பூர்வீகமாகக்கொண்ட காசிகிளார்க்குடையார் ராமாமிதம்மாள் தம்பதிகளுக்கு 1923 ஆம் ஆன்டு மேமாதம் 26 ஆம்திகதிகோபி சாந்தா பிறந்தார். வறுமைகாரணமாக் இராமநாதபுரம் காரைக்குடிக்கு பிழைப்புத்தேடி சென்றது இவரது குடும்பம்.காரக்குடிக்கு அருகே உள்ள பள்ளத்தூரில் குடியேறியதால் பள்ளத்தூர் பாப்பா என அழைத்தனர்.ராமாமிர்தம்மாளின் தங்கையை இரண்டாம் தாரமாக மணமுடித்த காசிகிளார்க்குடையார் மூத்த மனைவியையும் குழந்தையையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார்.வறுமை தொடர்ந்ததனால் பண்னையார் வீட்டில் சிறுவயதிலே வேலைக்கு சேர்ந்தார்.

கிராமத்தில் மேடையேற்றப்படும் நாடகங்களை அடிக்கடி பார்ப்பார். நடிக்கும் ஆசை இருந்ததால் வைரம் நாடக சபாவில் சேர்ந்தார். யார்மகன் என்னும் நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். அந்தமான் காதலி  எனும் நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடிக்கும் நடிகரின் குரல் ஒத்து வராததனால் அந்த வேடத்தை மனோரமா ஏற்று நடித்தார்.அன்று அடித்த அதிர்ஷ்டக்காற்று மனோரமாவை புகழின் உச்சிக்கு இழுத்துச் சென்றது. நடன இயக்குனநர்  திருவவேங்கடம் ஆர்மோனியக்கலைஞ்ர் தியாகராஜன் ஆகிய இருவரும் கோபி சாந்தாவுக்கு மனோரமா எனப் பெயர் சூட்டினார்கள்.

இயக்கிநர் கே.எஸ் . பாலசந்தர் மனோரமாவின் நடிப்பைபார்த்து பாராட்டினார்.நடிகர் எஸ்.எஸ்.ஆர் தன‌து நாடக‌ சபாவில் நடிக்க மனோரமாவுக்கு அழைப்பு விடுத்தார். மணிமகுடம்,தென்பாண் டிவீரன்,புது வெள்ளம் ஆகிய நாடகங்களில் மனோரமாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.திரைஉலக  வல்லுநர்களின் பார்வை மனோரமாவின் மீது பட்டதனால் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இன்பவாழ்வு, ஊமையன் கோட்டை ஆகிய படங்கள் இடையில் கைவிடப்பட்டதனால் மன்முடைந்தார்.


கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை என்ற படத்தில் ந‌கைச்சுவை வேடத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். நகைச்சுவைப்பாத்திரத்தில் நடிக்க மனோரமா விரும்பவில்லை.கதாநாயகியாக நடித்தால் நான்கு ஐந்து வருடங்களில் காணாமல் போய்விடுவாய் என கண்ணனதாசன் கூறினார். கண்ணனதாசனின் அறிவுரரையின் படி நகைச்சுவைபாத்திரத்தில் காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஜோடியாக நடித்தார். கண்னதாசனின் தீர்க்கதரிசனம்மிக்க வார்த்தையினால் என்றென்றைக்கும் ரசிகர்களின் மனதி மனோரமா வாழ்வார்.1958 ஆம் ஆன்டு சினிமாவில் அறிமுகமானர்ர் மனோரமா. தனது ஆசைக்காக 1963 ஆம் ஆண்டு கொஞ்சும் குமரி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அனாலும் நகைச்சுவை பாத்திம் தான் அவரை வாழ‌வைத்து.

சிவாஜி,எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்,ஜெய்சங்கர்,முத்துராமன்,ஏவி.எம்.ராஜன்,சிவகுமார்,பிரபு,சத்தியராஜ், கார்த்திக்,கமல்,ரஜினி,அஜித்,விஜய்,சூர்யா என மனோரமா இணைந்து நடித்த நடிகர்களின் பட்டியல் நீளமானது. சிவாஜி,முத்துராமன்,சிவகுமார் ஆகியோருடனும் அவர்களது மகன்களுடனும் நடித்த பெருமை மனோரமாவுக்குரியது.

ஐந்து தலைமுறை நடிகர்களுடன் ந‌டித்த மனோரமா ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே ஒரு நடிகை என்ற பெருமைக்குரியவர். வேலைக்காரி நாடகத்தில் அறிஞ‌ர் அண்ணாவுடனும் உதய‌சூரியன் நாடகத்தில் கலைஞ‌ர் கருணாநிதியுடனும் நடித்தார்.எம்.ஜிஆர்,என்.டி.ராமராவ்,ஜெயலலிதா ஆகியோருடன் சினிமாவில் நடித்தார்.  1000 திரைப்படங்களில் நடித்த நடிகை எனும் கின்னஸ் சாதனையும் மனோரமாவுக்குரியது.


என்.எஸ்.கிருஷ்ணன்,ம‌துரம் ஜோடி நகைச்சுவையில் கலக்கியநேரம் தமிழ் சினிமாவில் நுழைந்த மனோரமா அவர்களுக்கு ஈடாக தனது நடிப்பால் மிளிர்ந்தார்.நாகேஷ்,கருணாநிதி,சுருளிராஜ,சோ,தேங்காய் சீனிவாசன் சந்திரபாபு,கவுண்டமணி,சந்திரபாபு  போன்ற  நடிகர் களுடன் ஜோடியாக நடித்தார். 60 /70களில் நாகேஷ் மனோரமா ஜோடி இல்லாத படம் இல்லை.நாகேஷுடனான மனக்கசப்பின் பின்னர்  பிரிந்து விட்டார்.கைச்சுவை அரசி மனோரமா 'ஆச்சி' என்று திரையுலகில் அன்போடு அழைக்கப்படுபவர். அவருக்கு ஆச்சி என்ற பெயர் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் இது...

'' நான் செட்டிநாட்டில் வளர்ந்தவள். 1962ஆம் ஆண்டு க.கி.சுப்பிரமணியத்தின் ' காப்பு கட்டி சத்திரம் ' என்ற நாடகத்தில் நடித்தேன். இந்த நாடகம் ரேடியோவில் 66 வாரங்கள் ஒளிபரப்பாகியது. அதில் நானும் நாகேசும் சேர்ந்து நடித்தோம். 

அந்த நாடகத்தில் 'பன்னர் பாக்கியம்' என்ற கேரக்டரில் இளநீர் விற்கும் பெண்ணாக நடித்தேன். செட்டிநாட்டு பாஷை பேசி அந்த நாடகத்தில் நான் நடித்ததை பார்த்த ஒரு மேக்அப் மேன் 'ஆச்சி ' என்று அழைத்தார். பின்னர் அனைவரும் ஆச்சி என்று அழைக்க அந்த பெயரே நிலைத்து விட்டது''

இவ்வாறு மனோராமா கூறியுள்ளார். 
 


கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் கலைமாமணி விருது, புதிய பாதை திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, மலேசிய அரசிடம் இருந்து டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது, கேரளா அரசின் கலா சாகர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக அண்ணா விருது, என்.எஸ்.கே விருது, எம்.ஜி.ஆர். விருது, ஜெயலலிதா விருது மற்றும் பல முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள் எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்தவர் ஆச்சி மனோரமா.

மனோரமா பொம்மலாட்டம் என்ற படத்திற்காக பாடிய வா வாத்தியாரே வூட்டாண்ட பாடலால் அவர் ஒரே நாளில் பிரபல மாகிவிட்டார்.  . திரைத்துறையில் அவர் நடிப்பை தவிர தனது குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
 ரத்த திலகம் படத்தில் கண்ணதாசன் எழுதிய போகாதே போகாதே என் கணவா என்ற பாடலை பாடினார் மனோரமா. அது தான் பெரிய திரையில் அவர் பாடிய முதல் பாடல்.

 

 பாண்டியராஜன், ஊர்வசி ஜோடியாக நடித்த படத்தில் ஹீரோவின் பாட்டியாக நடித்திருந்தார் மனோரமா. அந்த படத்தில் அவர் பாடிய டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற பாடல் மிகவும் பிரபலம். 

சூரியகாந்திபடத்தில் பாடிய தெரியாதோநோக்கு பாடலைக்கேட்டதும் மனம் துள்ளத்தொடங்கி விடும்.

 


ரஜினிக்கு எதிராக அரசியலில் குரல்கொடுத்த‌து அவரது வாழ்க்கையில் ஒரு கறுப்பு சம்பவம். 1996 ஆம் ஆன்டு ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி அரசியலில் குரல் கொடுத்தார். அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் மேடையில் ரஜினியை கிழிகிழியென கிழித்தார் மனோரமா. அந்தச்சம்பவத்தி மனதில் வைக்காது மனோரமாவுக்கு தனது அண்ணாமலை படத்தில் நடிக்க சந்தர்ப்பம் வழ‌ங்கினார் ரஜினி.

நகைச்சுவையாலும் குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் என்ன்றென்றைக்கும் வீற்றிருப்பார் மனோரமா.

ரமணி.

தமித்தந்தி 18/10/15

  

No comments: