Tuesday, November 3, 2015

அதிரடி ஓய்ந்தது


இந்திய கிரிக்கெற்றின் வெற்றிகள் பலவற்றுக்கு அடித்தளமிட்ட ஷேவக் ஓய்வுபெற்றுவிட்டார். வேகப்பந்து சுழல் பந்து எதுவானாலும் தனது அதிரடியால் எதிரணிவீரர்களை நிலை குலையச்செய்த ஷேவக்கின் விளையாடும் திறன் குறந்து விட்டதென தேர்வாளர்கள் கருதியதால் கடந்த இரண்டரை வருடங்களாக ஷேவக்கை யாரும் கணக்கில் எடுக்கவில்லை. தனக்கான  இடம் கிடைக்கும் எனக்காத்திருந்து ஏமாந்த ஷேவக் தனது பிறந்த நாளான கடந்த ஒக்டோபர் 20 ஆம் திக‌தி தனது ஓய்வை அறிவித்தார். ஷேவக்கை இன்னமும் நேசிப்பவர்களால் இதனை ஜீரணிக்க முடியவில்லை.
 ஆடித்து விளையாடும் ப‌ந்து அடிக்காம‌ல் விடும் ப‌ந்து என்ற‌ வேறுபாடு எதுவும் இல்லாது அக‌ப்ப‌டும் ப‌ந்துக‌ளை எல்லையைத்தாண்டி விர‌ட்டுவ‌துதான் ஷேவ‌க்கின் குறிக்கோள். 90 ஓட்ட‌ங்க‌ள் க‌ட‌ந்தால் ச‌த‌ம் அடிக்க‌வேன்டும் என்ற‌ ப‌த‌ற்ற‌ம் ப‌ல‌ வீர‌ர்க‌ளிட‌ம் உள்ள‌து ஷேவ‌க் இத‌ற்கு விதி வில‌க்கான‌வ‌ர். சிக்ஸ‌ர் ப‌வுண்ட‌ரிக‌ள் மூல‌ம் ச‌தம் கடப்பதில்  அவ‌ருக்கு அலாதிபிரிய‌ம். 150 ஓட்ட‌ங்களை நெருங்கும் வேளையிலும்  அவ‌ரின் அதிர‌டி குறைவ‌தில்லை.
க‌ங்குலியும் ச‌ச்சினும் ஆர‌ம்ப‌த்துடுப்பாட்ட‌ வீர‌ர்களாக‌ விளையா‌டிய‌ போது ஷேவ‌க் ச‌ச்சின் என்று மாறிய‌  இந்த‌ இ ணை ப‌ல‌ சாத‌னைக‌ளை செய்த‌து.

 ஷேவ‌க்கின் அறிமுக‌ப்போட்டி சொல்லும்படியாக‌ இருக்க‌வில்லை. 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் ஷேவக். ஆரம்பமே அபசகுனம்தான். ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.. பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது.. 3 ஓவர்கள் வீசி, 35ஓட்டங்கள்கொடுத்தார். அடுத்த ஒன்றரை ஆண்டுகள், அதாவது 20 மாதங்களுக்கு மீண்டும் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பே அவருக்கு  கிடைக்கவில்லை.

 2001-ஆம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.  நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான  முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக இந்திய அணி இலங்கை சென்றது கங்குலியுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக யாரை களமிறக்குவது என குழப்பம். யுவராஜ் சிங், அபய் குரசியா என யார் யாரையோ எல்லாம் ஓப்பனிங் பேட்ஸ்ஸ்மேனாக இறக்கிவிட்டு கடைசியாக, ஷேவ‌க்குக்கு வாய்ப்பை வழங்குகிறார் கங்குலி. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 260ஓட்டங்கள் குவித்தது.. சுழற்பந்துக்கு சாதகமான, மிகவும் ஸ்லோவான பிட்சில் இந்த ஸ்கோர் என்பது 350 ஓட்டங்க‌ளுக்கு நிகரானது. கங்குலியுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்குகிறார் ஷேவ‌க். 69 பந்துகளில் 100 ஓட்டங்கள் அடித்து அந்த ஆட்டத்தில் மேட்ச்வின்னராக உயர்ந்து நின்றார் ஷேவ க் . அதன்பிறகு இந்தியாவின் நிரந்தர ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷேவ‌க்தான்.
கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்பார்கள். ஆனால், கிரிக்கெட்டை ஜென்டில்மேன்களைத் தாண்டி எல்லோரும் ரசிக்கும் விளையாட்டாக மாற்றியவர்கள் ஒரு சிலரே. அதில் மிக முக்கியமானவர் வீரேந்திர ஷேவ‌க். கிரிக்கெட் டிப்ளமஸி என்று உண்டு. முதல் நாள் கோட் போட்டு டாஸ் போட்டுவிட்டு, வெள்ளை உடையில் ஐந்து நாட்கள் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் ஆடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், 'டெஸ்ட் போட்டியிலும் இவ்வளவு ஆக்ரோஷம் காட்ட முடியும், இப்படி பவுண்டரிகள் அடிக்க முடியும், இப்படி எல்லாம் ஆடி ஒருவரால் 300 ரன்கள் குவிக்க முடியும்' என்று ஆச்சரிப்படுத்தியவர் ஷேவ‌க். ஆமாம். அவருக்கு கிரிக்கெட் டிப்ளமஸி தெரியாது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இரண்டு முச்சதங்களும், மூன்று இரட்டை சதங்களும் விளாசியிருக்கும் அன் டிப்ளோமேட்டிக் பேட்ஸ்மேன் ஷேவ‌க்.
இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அஜ‌ந்தா மென்டிஸ் என்னும் புதிய சுழற்பந்து வீச்சாளரைப் பார்த்து இந்திய வீரர்கள் நடுங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மென்டிஸை துவம்சம் செய்தார் ஷேவ‌க். ''சுழற்பந்து வீச்சாளர்களை நான் பந்துவீச்சாளர்களாகவே கருதுவதில்லை. ஸ்பின்னர் என்பவர் பேட்ஸ்மேனால்தான் உருவாகிறார். பேட்ஸ்மேன் ஒரு பந்தை சுழல்வதற்கு முன்பே அடித்துவிட்டால் அப்புறம் ஏது சுழற்பந்து. பந்து சுழல்வதற்கு முன்பாகவே தூக்கி கிரவுண்டுக்கு வெளியே அடித்தால் ஒருவர் எனக்கு வாழ்நாள் முழுக்க ஸ்பின்னே போடமாட்டார்" என்று சொன்னார் ஷேவ‌க்  
டெஸ்ட் அரங்கில் இரு முறை முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் ஷேவக் தான். சுல்தான் ஆப் முல்தான் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், 2004இல் முல்தானில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 309 ஓட்டங்கள் விளாசினார்.
* பின்  2008இல் சென்னையில் நடந்த டெஸ்டில் அதிவேகமாக முச்சதம்(278 பந்தில்) அடித்து சாதனை படைத்தார். மொத்தம் 319 ஈட்டங்கள்(எதிர், தென் ஆப்ரிக்கா) விளாசினார்.

கடந்த 2009இல் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அதிவேகமாக 250 ஓட்டங்கள் (207 பந்து) எட்டி சாதனை படைத்தார். இதில் 293 ஓட்ட‌ங்க‌ள் விளாசினார்.  
ஒரு நாள் அரங்கில் அதிவேகமாக இரட்டை சதம்(140 பந்து) அடித்தார். இந்துாரில் நடந்த இப்போட்டியில் (எதிர்வெஸ்ட் இண்டீஸ், 2011) மொத்தம் 219ஓட்டங்கள் விளாசினார்.
* ஒரு நாள் போட்டி வரலாற்றில், ஒரு இன்னிங்சில் தனிப்பட்ட வீரர் எடுத்த ஓட்டங்கள் (219) அடிப்படையில் ஷேவக் 3வது இடம் வகிக்கிறார். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் ரோகித் (264), நியூசிலாந்தின் கப்டில் (237) உள்ளனர்.

ஒரு நாள் போட்டியில், ஒரே இன்னிங்சில் அதிக பவுண்டரி (25, எதிர்வெ.இண்டீஸ், 2011, இந்துார்) அடித்த வீரர்கள் பட்டியலில் சக வீரர் சச்சினுடன் இரண்டாவது இடத்தை பெற்றார்.
டெஸ்ட், ஒரு நாள், டுவென்டி20 என அனைத்துவிதமான போட்டியிலும் சேர்த்து அதிகஓட்டங்கள் (15,758) எடுத்த இந்திய துவக்க வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் சச்சின் (15,335), கவாஸ்கர் (12,258) உள்ளனர்.  
டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ஓட்டங்கள்(284, எதிர் இலங்கை. 2009) எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் அவுஸ்திரேலியாவின் பிராட்மேன் (309), இங்கிலாந்தின் ஹேமண்ட் (295) உள்ளனர்

டெஸ்ட் அரங்கில் அதிக சிக்சர் (91) விளாசிய இந்திய வீரர் சேவக் தான். அடுத்த இரண்டு இடங்களில் டோனி (78), சச்சின் (69) உள்ளனர்.  
டெஸ்ட் போட்டிகளில் ஷேவக், சச்சின் தான் அதிக தொடர் நாயகன் விருதை(5) வென்ற இந்திய வீரர்கள்.
 அர்ஜூனா (2002), விஸ்டன் கிரிக்கெட் வீரர் (2008,09), ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் வீரர் (2010), பத்ம ஸ்ரீ (2010) உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
 டெஸ்ட்போட்டியை ஒருநாள் போட்டிபோல‌வும் ஒருநால் போட்டியை ரி20  
சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் பயணித்த சேவாக், இந்திய அணிக்காக இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 8,586 ரன்கள் குவித்துள்ளார். அதில் 23 சதங்களும், 32 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டியில் இவரது சராசரி 49.34 ரன்கள்.
ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்த வரையில் 251 ஆட்டங்களில் கலந்துகொண்ட சேவாக், 8,273 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 15 சதங்களும், 38 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டியில் இவரது சராசரி 35.05 ரன்கள்.
இதுதவிர, மொத்தம் 19 டி20 போட்டிகளில் விளையாடிய சேவாக், 2 அரை சதங்களுடன் 394 ரன்கள் எடுத்துள்ளார். தோனி தலைமையில் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2011ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை வென்ற அணியிலும் சேவாக் இடம் பெற்றிருந்தார்


 ஆஃப் ஸ்பின்னரான சேவாக் டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல்: ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்த வரையில் கடந்த 2008 முதல் 2013 வரையில் தில்லி டேர்டெவில்ஸ் அணியிலும், 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமணண் ஆகிய இந்தியா கண்ட மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில், சேவாக் கடைசியாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அதன்பிறகு பெயர் சொல்லும் வகையில் டெஸ்ட்-ஒன்டேக்களில் சிறப்பாக ஆடும் பேட்ஸ்மேனாக இன்னும் யாரும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ர‌ம‌ணி
தமிழ்த்தந்தி 01/11/15

No comments: