Friday, April 23, 2021

நான்காவது போட்டியிலும் வென்றது பெங்களூர்

ரோயல் சலஞ் பெங்களூர்  ,ராஜஸ்தான் ரோயல்ஸ், ஆகியவற்ருக்கிடையே மும்பையில் நடந்த  16 ஆவது லீக் போட்டியில் 10 விக்கெட்களால் பெங்க‌ளூர் வெற்றி பெற்றது.

தேவ்தத் படிக்கலின்  சதம், க‌ப்டன் கோலியின் அரைசதம் ஆகியவற்றால்  பெங்களூர் இலகுவாக வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கோஹ்லி கள‌த்தடுப்பைத் தேர்வு செய்தார்.

 முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்கள் அடித்தது. 178 ஓட்டங்கள் எனும் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர்    விக்கெட் இழப்பின்றி 16.3 ஓவர்களில் 181 ஓட்டங்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ராஜஸ்தான் அணி வீரர்களான‌ ஜோஸ் பட்லர் (8), மனன் வோரா (7) . டேவிட் மில்லர் [0] ஆட்டமிழந்தனர்.க‌ப்டன் சஞ்ச சாம்சன் (21)  விரைவாக வெளியேறினார். பொறுப்பாக ஆடிய ரியான் பராக் (25), ஷிவம் துபே (46) ஜோடி நம்பிக்கை தந்தது. அபாரமாக ஆடிய ராகுல் டிவாட்டியா, 23 பந்துகளில் 40 ஓட்டங்கள்(2 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். கிறிஸ் மோரிஸ் (10) சோபிக்கவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது.


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூர் அணிக்கு ப்டன் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ராகுல் டிவாட்டியா பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்த படிக்கல், முஸ்தபிஜுர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ப்டன் கோஹ்லி, அரைசதம் கடந்தார்.

பெங்களூரு அணி 16.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (72 ஓட்டங்கள், 3 சிக்சர், 6 பவுண்டரி), படிக்கல் (101 ஓட்டங்கள், 6 சிக்சர், 11 பவுண்டரி) ஆட்டமிழக்காது  இருந்தனர். படிக்கல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


தேவ்தத் படிக்கல், விராட் கோலி கூட்டணி  பல சாதனைகளையும் படைத்துள்ளனர்ப்டன் விராட் கோஹ்லி, ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 6ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்றும் 40-வது அரைசததத்தை எட்டிய வீரர் எனும் பெருமையையும் பெற்றார். இதுவரை 196 போட்டிகளில் விளையாடிய கோஹ்லி, 6,021 ஓட்டங்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

இதில் 5 சதங்கள், 40 அரைசதங்கள், 204 சிக்ஸர்கள், 518 பவுண்டரிகள் அடங்கும். இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் இந்த சாதனையை எட்டியதில்லை, முதல்முறையாக 4ஆயிரம், 5 ஆயிரம் ஓட்டங்களை எட்டியவரும் கோஹ்லிதான், தற்போது 6ஆயிரத்தை தொட்டவரும்  கோஹ்லிதான்.

ஆர்சிபி அணிக்காக சர்வதேச அறிமுகம் இல்லாத 3 வீரர்கள் இதற்கு முன் சதம் அடித்துள்ளனர். ஷான் மார்ஷ்(2008,ராஜஸ்தான் எதிராக) மணிஷ் பாண்டே(2009, டெக்கான் சார்ஜர்ஸ்) பால் வால்தாட்டி(2011, சிஎஸ்கே) ஆகியோர் சதம் அடித்தனர். தற்போது ேதவ்தத் படிக்கல் சதம்அடித்துள்ளார்.

மிக இளம் வயதில் சதம் அடித்த 3-வது வீரர் எனும் பெருமையை படிக்கல் பெற்றுள்ளார். இதற்கு முன் மணிஷ் பாண்டே 2009ம்ஆண்டு சதம் அடித்தபோது அவருக்கு வயது19, 253 நாட்களாகி இருந்தது. ரிஷப்பந்த் 2018-ல் சதம் அடித்தபோது அவருக்கு வயது 20,218 நாட்களாக இருந்தது. தற்போது படிக்கல்லுக்கு வயது 20, 289வயதாகிறது.

178 ஓட்டங்களை 10 விக்கெட் வித்தியாசத்தில்ல ஆர்சிபி அணி சேஸிங் செய்தது ஐபிஎல் வரலாற்றிலேயே விக்கெட் இழப்பின்றி சேஸ் 3-வது மிகப்பெரிய இலக்காகும். இதற்கு முன், 2017ல் கொல்கத்தா அணி(184,குஜராத்லயன்ஸ்) 2020ல் சிஎஸ்கே(179,கிங்ஸ்பஞ்சாப்) ஆகியவை விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்திருந்தன.

ஆர்சிபி அணி 4-வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்குமுன் ஐபிஎல் வரலாற்றில் 2 முறைக்கு மேல் எந்த அணியும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதில்லை. கடந்த 2010ல் ராஜஸ்தான், 2015ல் டெல்லி டேர்டெவில்ஸ், 2018ல் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 10 விக்கெட்டில் ஆர்சிபி வென்றுள்ளது.

ஆர்சிபி அணி தொடர்ந்து பெறும் 4-வது வெற்றியாகும். இதன் மூலம் 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 3 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.


No comments: