Monday, May 3, 2021

தமிழக முதல்வராகிறார் ஸ்டாலின்; கருத்துக் கணிப்பில் தகவல்

தமிழக சட்டசபைத்  தேர்தல்  முடிவடைந்த  பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில்   திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனத்  தெரியவருகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் மீது தமிழக  மக்கள்  வெறுப்படைந்துள்ளனர் என தேர்தலுக்கு முன்னைய கருத்துக்  கணிப்புகள்  தெரிவித்தன. தேர்தலுக்குப்  பின்னரான  கருத்துக் கணிப்புகளும்  அதனை  உறுதிப்படுத்தியுள்ளன.

அண்ணா திராவிட  முன்னேற்றக் கூட்டணியின்  முதல்வர்   வேட்பாளராகஎடப்பாடி கே பழனிசாமி முன்னிறுத்தப்பட்டார்.   திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டணியின்  முதல்வர்  வேட்பாளராக   மு..ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார். டி.டி.வி தினகரன், ( அமமுக ) சீமான், ( நாம் தமிழர் கட்சி) கமல்ஹாசன் ( மக்கள் நீதி மய்யம்) ஆகியோரும் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர்.

அண்ணா  திராவிட  முன்னேற்றக் கழக  கூட்டணியில்  பாரதீய  ஜனதாக்  கட்சி,  பாட்டாளி  மக்கள்  கட்சி உட்பட 10 கட்சிகள் இணைந்து தேசிய  ஜனநாயக கூட்டணி  எனும்  பெயரில்   தேர்தலைச்  சந்தித்தன.

 திராவிட  முன்னேற்றக்  கழகத்தின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ்,, மறுமலர்ச்சி  திராவிட  முன்னேற்றக்  கழகம்,  விடுதலைச்  சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள்  உட்பட 9 கட்சிகள் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்தித்தன.

டிடிவி தினகரனின்  தலைமையிலான கூட்டணியில் வியஜகாந்ந், எஸ்டிபிஐ உள்ளிட்ட 8 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில், சரத்துமாரின்  கட்சி, ஐஜேகே என மொத்தமாக 12 கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த்தனர். சீமான் கூட்டணி  இல்லாமல் 234  தொகுதிகளிலும்  வேட்பாளர்களை  நிறுத்தினார்.

தமிழக தேர்தலில்  ஐந்தும்முனைப்  போட்டி  என்றாலும் இரண்டு  பிரதான  கட்சிகளுக்கும் இடையில்தான் போட்டி  என்பதை   கருத்துக்  கணிப்புகள்  உறுதிப்படுத்தியுள்ளன.


எடப்பாடி   பழனிச்சாமி, . பன்னீர்ச்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமையில்  அண்ணா  திராவிட  முன்னேற்றக் கழகம் தேர்தலைச்  சந்தித்தது.  இரட்டைத்  தலைமையில்  அதிகாரம்  மிக்கவர்  யார்  என்பதில்  இருவருக்கும்  இடையில் கருத்து  வேறுபாடு  இருந்தது. அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகம்  தோல்வியடைந்தால், இரட்டைத் தலைமைக்கு  ஆபத்து  உள்ளது.

அண்ணா திராவிட  முன்னேற்றக்க்  கழகத்தின்  குடுமி   பாரதீய  ஜனதாக்  கட்சியின்  கையில்  உள்ளது. தமிழக  முதல்வரை   பாரதீய  ஜனததான் தெரிவு செய்யும்  என  தமிழக  பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்  எல்.  முருகன்    அறிவித்து சலசலப்பை  ஏற்படுத்தினார்.

திராவிட  முன்னேற்றக்  கழகக்  கூட்டணியில்  எதுவித  சலசலப்பும்  இல்லை. அண்ண  திராவிட  முன்னேற்றக்  கழகத்தையும்,  பாரதீய  ஜனதாக்  கட்சியையும்  விமர்சித்து    தேர்தலில்  பிரசாரம்  செய்யப்பட்டது.


தேர்தலுக்கு   முன்னைய   கருத்துக்  கணிப்புகளும்  தேர்தலுக்குப்  பின்னரான  கருத்துக்  கணிப்புகளும் திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டணிக்கு  சாதகமாகவே  உள்ளன. அண்ணா  திராவிட   முன்னேற்றக்  கழக  கூட்டணிக்கு  50  தொகுதிகள்  கிடக்கும்  என  கருத்துக்  கணிப்புகள்  தெரிவிக்கின்றன. அந்த  50  தொகுதிகளிலும்  அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகம் தான்  வெற்ரி  பெறுமா அல்லது  கூட்டணிக்  கட்சிகளுக்கு  ஒன்றிரண்டு தொகுதிகள் கிடைக்குமா என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாரதீய  ஜனதா  போட்டியிட்ட சகல  தொகுதிகளிலும்  தோல்வியடைய  வேண்டும்  எனபதே எதிர்க்  கட்சிகலின்  பிரசாரத்தில்  முக்கிய  வேண்டுகோள். ஒரு  தொகுதியிலாவது  வெற்றி  பெற  வேண்டும்  என  பரதீய  ஜனதா  விரும்புகிறது.

தமிழகத்தில்  உள்ள 234 தொகுதிகளில், 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இதில் 3,585 பேர் ஆண்களும், 411 பேர் பெண்களும் மற்றுமுள்ள 2 பேர் மூன்றாம்பாலினத்தவர்களும் ஆவார்கள். கடந்த ஏப்ரல் 6‍ம் திகதி நடைபெற்ற தேர்தலில்  மொத்தம் 72.78% சதவீதவாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.


கடந்த காலங்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பின்னர் நடைபெறும் முதல் தமிழக தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாக இது இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது

ஏபிபி - சி-வோட்டர் 

ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் ரிசர்ச் நிறுவனத்தோடு இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தி.மு. கூட்டணி முந்தி நிற்கிறது. இந்தக் கூட்டணி அதிகபட்சமாக 172 இடங்கள் வரை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு. கூட்டணிக்கு  46.7 சதவிகித வாக்குகளும், .தி.மு. கூட்டணி 35 சதவிகித வாக்குகளும்  கிடைக்கும்  என்று ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

தி.மு. + : 160-72,.தி.மு. + : 58-70, .நீ.+ : 0-2, ..மு. - 0-2,மற்றவை - 0-3 

ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ்

ரிபப்ளிக் டி.வி., சி.என்.எக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தி.மு. கூட்டணி அதிகபட்சமாக 170 இடங்கள் வரை பெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தி.மு. கூட்டணி 48.9 சதவிகித வாக்குகளையும், .தி.மு. கூட்டணி 35.5% வாக்குகளையும் பெற வாய்ப்பிருப்பதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

தி.மு.+ :160-170, .தி.மு.+ : 58-68, .நீ.+ : 0-2,..மு.+ : 4-6, மற்றவை: 0  

கூட்டணி தவிர்த்து கட்சிவாரியாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது ரிபப்ளிக் ரி.வி

தி.மு.: 137-147,காங்கிரஸ்: 13-17 ,.தி.மு.: 49-59  , பா..: 2-4 ,பா..: 5-7 ,.நீ.: 0-2, ..மு.: 4-6 ,மற்றவை: 6-10                                                   

இந்தியா ருடே - ஆக்ஸிஸ் மை இந்தியா

இந்தியா ருடே யும் Axis My India நிறுவனமும் இணைந்து நடத்தியிருக்கும் கருத்துக்கணிப்பில், தி.மு. கூட்டணி அதிகபட்சமாக 195 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தி.மு. 48 சதவிகித வாக்குகளையும், .தி.மு. 35 சதவிகித வாக்குகளையும் பெற வாய்ப்பிருக்கிறது எனவும் இந்தக் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

தி.மு. கூட்டணி: 175-195, .தி.மு. கூட்டணி - 38-54,   ..மு. கூட்டணி - 1-2 ,.நீ. கூட்டணி - 0-2 ,மற்றவை – 0

.தி.மு.., தி.மு.-வோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எத்தனை இடங்களை வெல்லும் என்பதையும் கணித்திருக்கிறது இந்தியா ருடே 

காங்கிரஸ்: 16-18.வி.சி.: 3-5, இடதுசாரிகள்: 9-11, பா..: 2-4 , பா..: 2-4 ,.யூ.எம்.எல்: 0-1 

Today's Chanakya 

Today's Chanakya கருத்துக்கணிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பிலும் தி.மு. கூட்டணிதான் முந்தி நிற்கிறது. அதிகபட்சமாக 186 இடங்களை வரை தி.மு. கூட்டணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தோராயமாக தி.மு. 51% வாக்குகளையும், .தி.மு. 37% வாக்குகளைப் பெறும் எனவும் ருடேஸ் சாணக்கியா கணித்திருக்கிறது

தி.மு.+ :175-186, .தி.மு.+ : 57-68, .நீ.+ : 2-6,

தந்தி ரிவிவி

தந்தி  ரிவி  நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பிலும் தி.மு. கூட்டணியே முன்னிலைவகிக்கிறது. 133 இடங்களில் தி.மு. கூட்டணி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது

தி.மு.+ : 133, .தி.மு.+ : 68,  கடும் போட்டி: 33

P-MARQ 

கருத்துக்கணிப்புகள் நடத்தும் நிறுவனமான P-MARQ நடத்திய கருத்துக்கணிப்பில், தி.மு. அதிகபட்சமாக 190 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது

தி.மு.+ : 165-190,  அ, தி.மு.+ : 40-65 , ..மு.+ : 1-3,  .நீ.+ : 1-3, மற்றவை: 0-3

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான பிறகு, ``தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் சொன்னதைத்தான் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன.

 சொல்லிவைத்தது  போன்று  அனைத்து கருத்துக்  கணிப்புகளும்  திராவிட  முன்னேற்றக்   கழக  கூட்டணியின்  வெற்றியை  உறுதிப்படுத்தியுள்ளன.

கமலின்  கட்சியும், தினகரனின்  கட்சியும் வெ பெறும் வாய்ப்பிருப்பதாக  அனைத்துக் கருத்துக்  கணிப்புகளும்  தெரிவிக்கின்றன. சீமானின்  கட்சி  வெற்றி  பெறும்  என எந்த  ஒரு  கருத்துக்  கணிப்பும்  தெரிவிக்கவில்லை. திராவிட  முன்னேற்றக்  கழக  கூட்டனிக்கு  50  சத  வீதத்துக்கு  அதிகமான  வாக்குகள்  கிடைக்கும் என கருத்துக்  கணிப்புகள் தெரிவிக்கின்றன

No comments: