Sunday, January 16, 2022

மெல்ல சீன மொழி இனி மேலே ஓங்குமா?


 இலங்கை அரசியலில் பெளத்த மதமும், சிங்கள மொழியும் பின்னிப் பிணைந்துள்ளன. கடும் தீவிரவாத போக்குடைய வாக்கு வங்கியே இலங்கையில் அரசியலைத் தீர்மானிக்கிறது.  பெளத்த மதத்துக்கு முன்னுரிமை, சிங்கள மொழிக்கு முன்னுரிமை. தவிர இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக வணக்கத்துக்குரிய தேரர்கள் இருக்கிறார்கள். இலங்கை அரசியலமைப்பில் தமிழ் அரச மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. எழுத்துப் பிழையுடனும், கருத்துப்பிழையுடனும் காட்சிப்படுத்துவார்கள்.

சீனா, இலங்கையில் முதலீடு செய்து  அபிவிருத்தி செய்யத் தொடங்கியபோது   ஆங்கிலமும் சீன மொழியும் மட்டும்  உள்ள விளம்பரப் பலகைகளும், ஆங்கிலம், சிங்களம், சீன மொழி உள்ள விளம்பரப் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.தமிழுக்கு இடம் வழங்கப்படவில்லை.  அப்போது அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தமிழ் புறக்கணிக்கப்பட்டதால் பொங்கி எழுந்த மனோகணேசன் காரசாரமான கடிதம் அனுப்பினார். சீனத்  தொழிலாளிகள் அதிகளவில் இருப்பதால் சீன மொழி இருப்பதாகவும் எதிர்காலத்தில் தமிழுக்கு உரிய இடம் கொடுப்பதாகவும்  பதிலளிக்கப்பட்டது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்ட பின்னர் உடனடியாக அவரது தாயகத்துக்கு திரும்பிவிட்டார். அவர் கலந்துகொண்ட நிகச்சிகள் அனைத்திலும் சீன மொழி மட்டுமே விளம்பரப் படுத்தப்பட்டது. சிங்களத்துக்கே இடம் இல்லாதபோது தமிழையும், ஆங்கிலத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும். 

  சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி  இலங்கைகு மேர்கொண்ட மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  ,பிரதமர் மகிந்த ராஜபக்ஷ  ஆகிருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் இலங்கையின்  ஆட்சி மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றில் எந்த குறிப்போ விளம்பங்களோ இடம்பெறவில்லை. சீன மொழி மட்டும் என்பதை தீர்மானித்தது யார் என்ற கேள்வி எழுந்துளது.  இதன் மூலம் இலங்கையில் சீன மொழியின் ஆதிக்கம் மேலோங்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரின் சில திட்டங்களையும், உடற்பயிற்சி நடைபாதை மற்றும் சிறு படகு பிரிவு ஆகியனவற்றையும்  சீன வெளிவிவகார அமைச்சர்  வங் யி திறந்து வைத்தார்.இந்த விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்பட பல பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.இந்த உடற்பயிற்சி நடைபாதை மற்றும் சிறு படகு பிரிவு ஆகியன திறந்து வைக்கும் நிகழ்வின் போது, காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை பற்றியே சமூக வலைத்தளங்களில்  தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது.

  சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரின் சில திட்டங்களையும், உடற்பயிற்சி நடைபாதை மற்றும் சிறு படகு பிரிவு ஆகியனவற்றையும்  சீன வெளிவிவகார அமைச்சர்  வங் யி திறந்து வைத்தார்.இந்த விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்பட பல பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.இந்த உடற்பயிற்சி நடைபாதை மற்றும் சிறு படகு பிரிவு ஆகியன திறந்து வைக்கும் நிகழ்வின் போது, காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை பற்றியே சமூக வலைத்தளங்களில்  தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது.

இந்த சர்ச்சை தொடர்பில் முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

''எங்கே எங்கள் இரண்டு ஆட்சி தேசிய மொழிகள்? அல்லது துறைமுக நகர் முழுமையாக சீனாவின் சொத்தா? எமது 65 நட்புறவை இப்படிதான் கொண்டாடுவதா? யாருக்கு பொறுப்பு, அக்கறை..? ஒருவருக்கும் வெட்கமில்லை..! தேசத்திடம் மன்னிப்பு கோருங்கள்..! என மனோ கணேசன் தனது டுவிட்டர் பதிந்துள்ளார்.

கொழும்பிலுள்ள சீன தூதரகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோருக்கும் இதனை பகிர்ந்துள்ளார்.  சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய  மூன்று மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொடுக்க வேன்டும் என்ற கொள்கையில்  பற்றுறுதி கொண்ட   நல்லாட்சிக் அரசாங்கம்  அதற்கென அமைச்சு ஒன்றை உருவாக்கி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது.

சிங்களம் அவமானப்படுத்தப்பட்டால்  சிங்கம் போல் கர்ஜிப்பவர்கள் மெளனமாக இருக்கின்றனர்.த்மிழுக்கு முன்னுரிமை கொடுக்கும்போதும்,தமிழில் தேசிய கீதம் பாடும்போதும் பொங்கி எழுந்தவர்கள் சிங்களம்  புறக்கணிக்கப்படுவதைப் பார்த்தும் பார்க்காததுபோல்  இருக்கிறார்கள்.  பலாலி விமான நிலையத்திலும், மன்னாரிலும் தமிழை முதலில் விளம்பரப் பலகையில் காட்சிப் படுத்தியதற்கு பதறியடித்து  குரல் கொடுத்தவர்கள்  சீன மொழி மட்டும் இருப்பதைப் பார்த்தபின் பம்முகிறார்கள்.

  சீனாவின் உதவியுடன்  இலங்கையில்  முன்னெடுக்கப்படும் திட்டங்களில் தமிழ் மொழி கடந்த காலங்களிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது.சிங்களம், தமிழ் , ஆங்கிலம் ஆகிய மொழிகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ள போதிலும், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்திற்கு சீன மொழி உள்வாங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன. சீனாவினால் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர் மற்றும் சீனாவின் உதவியில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் நிர்மாணிக்கப்பட்ட பெயர் பலகைகளில் சீன மொழி உள்வாங்கப்பட்டு, தமிழ் மொழி கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டிருந்தன. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு உயரிய இடத்திலேயே, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து, எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த பெயர் பலகை   மாற்றப்பட்டது.  தமிழ் மொழிக்கு இலங்கையில்  உரிய அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. சீனாவும் அதையே பின்பற்றுகிறது.

சீன முதலீடுகளும், சீனா  கொடுக்கும் கடன்களும்   அரசியல்வாதிகலின் கண்களை மறைத்துள்ளன. அடுத்து முன்னெடுக்கப்படும் சீனாவின் திட்டங்களில் மும்மொழிக் கொள்கைக்குப் பதிலாக சீன மொழியும் கட்டயமாக  உள் வாங்கப்படும்.

No comments: