Monday, January 30, 2023

தொடங்கிய இடத்தில் இருந்து விடைபெற்ற சானியா மிர்சா

சர்வதேச கிராண்ட்ஸ்லாம்  போட்டிகளில் இருந்து கண்னீருடன் விடைபெற்றார் சானியா மிர்சா.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்  போட்டியில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னனி வீராங்கனை சானியா மிர்சா – ரோகன் போபண்ணா இணை கலந்து கொண்டனர். இந்த இணை  கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வெற்றி என்ற கனவில் களமாடிய சானியாவுக்கு மாற்றமே மிஞ்சியது. இதனால், கண்ணீர் மல்க சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார். அவருக்கு அங்கு குவிந்திருந்த ரசிகர்கள் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அப்போது தனது உரையில் பேசிய சானியா, “நான் இன்னும் இரண்டு தொடர்களில் விளையாட இருக்கிறேன். ஆனால் எனது டென்னிஸ் வாழ்க்கையின் பயணம் மெல்போர்னில் தான் தொடங்கியது. இங்கு 2005 ஆம் ஆண்டு 18 வயதில் செரீனா வில்லியம்ஸுடன் மூன்றாவது சுற்றில் விளையாடியபோது தொடங்கியது.இறுதிப்போட்டியில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டனர்.

கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்ற கனவில் போபண்ணாவுடன் இணைந்து களமிறங்கினார் சானியா. இருவரும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், எதிரில் விளையாடிய லூயிசா ஸ்டெபானி மற்றும் ரபேல் மாடோஸ் இணை தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 6-7 (2), 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் லூயிசா ஸ்டெபானி – ரபேல் மாடோஸ் இணை கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர்.

மீண்டும் மீண்டும் இங்கு வந்து சில போட்டிகளில் வெற்றி பெற்று உங்கள் அனைவருக்கும் முன்னிலையிலும் சில சிறந்த இறுதிப் போட்டியில் விளையாடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மேலும் இந்த ‘ராட் லாவர் அரினா எனது வாழ்வில் மிகவும் சிறப்பான மைதானம். மேலும் கிராண்ட்ஸ்லாமில் எனது டென்னிஸ் வாழ்க்கையை முடிக்க இதைவிட சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை. எனவே நான் இங்கே வீட்டில் இருப்பதை உணர்ந்ததற்கு மிக்க நன்றி,” என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.

சானியா மிர்சா, ஆறு கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார். மூன்று முறை பெண் இரட்டையர் பிரிவிலும் மூன்று முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளார். அதில் 2009ல் அவுஸ்திரேலிய ஓபனில் வென்றதும் உள்ளடங்கும்.

No comments: