Tuesday, April 16, 2024

டோனி ருத்ரதாண்டவம் மும்பையில் கொடி நாட்டிய சென்னை

   மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த  29வது லீக் போட்டியில்  தலா 5 கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாக திகழும்  மும்பை இந்தியன்ஸ், நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 20 ஓட்டங்களால் சென்னை வெற்றி பெற்றது.  20 ஆவது ஓவரின் கடைசி 4 பந்துகளில் ருத்ரதாண்டவம் ஆடிய டோனி 6,6,6,2   என 20 ஓட்டங்கள் அடித்தார். அந்த 20 ஓட்டங்களால் தான் சென்னை வெற்றி பெற்றதாக ரசிகர்கள்  கொண்டாடுகிறார்கள்.

நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற மும்பை பந்துவீச்சைத் தேர்வு செய்ததுமுதலில் துடுப்படுத்தாடிய சென்னை  20 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்த சென்னை 206  ஓட்டங்கள் எடுத்தது.  20 ஓவர்களில் மும்பை  6 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்கள் எடுத்தது.

 ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய அஜிங்க்ய ரஹானே 5 (8) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். உள்ளே புகுந்த ப்டன் ருதுராஜ் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.   அவருடன் சேர்ந்து எதிர்புறம் சற்று தடுமாற்றமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா 2வது விக்கெட்டுக்கு 52 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 21 (16) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.    சிவம் துபே தன்னுடைய வழக்கமான பாணியில் அதிரடி காட்டினார்.    சிவம் துபேயுடன்  3வது விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ்  5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 69 (40) ஆட்டமிழந்தார்.

20 ஆவது ஓவரின் 2 ஆவது பந்துல்  டேரில் மிட்சேல் 17 (14) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் டோனி மைதானத்தினுள் புகுந்தார். பாண்டியா வீசிய கடைசி 4 பந்துகளில்  6, 6, 6, 2 என 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு 20* (4) ஓட்டங்கள் அடித்தார்மறுபுறம் கடைசி வரை ஆட்டமிழகாத   சிவம் துபே 10 பவுண்டர் 2 சிக்சருடன் 66* (38) அடித்தார்.  20 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்த சென்னை 206  ஓட்டங்கள் எடுத்தது.

207 ஓட்ட வெற்றி இலக்கைத் துரத்திய  மும்பைக்கு ரோஹித் சர்மாஇசான் கிசான்  ஜோடி 70  ஓட்டங்கள் அடித்து அச்சுறுத்தியது.இசான் கிசான்  23 ஓட்டங்களுடனும் சூரியகுமார் யாதவ் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா சவால் விடுத்தார்திலக் வர்மா 31 , ப்டன் பாண்டியா 2 (6),  டிம் டேவிட் 13 (5), செபார்ட் 1 (2)  , நபியும் 4* (7) ஓட்டங்கள்  அடித்து ஆட்டமிழந்தனர்.      தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 11 பவுண்டரி 5 சிக்சருடன் ஆட்டமிழக்காமல்  105* (63)  ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மும்பை  6 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்கள் எடுத்தது.

                       ராகுலின் சாதனையை உடைத்தருதுராஜ் 

5 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதமடித்த ருதுராஜ் 69 (40) ஓட்டங்களை 172.50 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மேலும் இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் 57 இன்னிங்ஸில் 2021* ஓட்டங்கள் எடுத்துள்ளார்ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர் என்ற கே.எல் ராகுல் சாதனையை உடைத்துள்ள ருதுராஜ் புதிய சாதனை   1. ருதுராஜ் கைக்வாட் : 57

2. கேஎல் ராகுல் : 60

3. சச்சின் டெண்டுல்கர் : 63

 4. ரிஷப் பண்ட் : 64

5. கௌதம் கம்பீர் : 68

சென்னையின்  முன்னாள் கப்டன் டோனியின் சாதனையும் ருதுராஜ் உடைத்தார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக  ஆட்டமிழக்காமல்   கப்டன் டோனி 63* ஓட்டங்கள் அடித்ததே முந்திய சாதனையாகும்.

                   கடைசி ஓவரில் டோனியின் சாதனைகள்

 ஐபிஎல்  போட்டிகளில் 8 ஆவது வீரராக டோனி விளையாடுகிறார். அதனால், டோனிக்கு துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பம் மிகவும் குறைவு.   ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளை எதிர்கொண்ட டோனி,  6, 6, 6 என அடுத்தடுத்த ஹட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய அவர் கடைசி பந்தில்  2 ஓட்டங்கள் எடுத்தார்.   20* (4) ஓட்டங்களை 500.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் 20 ஓட்டங்கள் அடித்த ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட வீரர் என்ற க்ருனால் பாண்டியாவின்  சாதனையை சமன் செய்தார்.   2020 சீசனில் க்ருனால் பாண்டியா ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இதே போல 4 பந்தில் 20 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதை விட இப்போட்டியில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளில் டோனி 3 அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்தார். அதன் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலும் 3 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் டோனி படைத்துள்ளார்.

   கொல்கத்தாவுக்காக விளையாடும்  மேற்கு இந்திய  வீரர் சுனில் நரேன் 2021 ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் நடந்த போட்டியில் டேன் கிறிஸ்டனுக்கு எதிராக தனது முதல் 3 பந்துகளில் 3 சிக்சர்கள் அடித்தார்.   2023இல் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் லக்னோவுக்காக அபிஷேக் சர்மாவுக்கு எதிராக  மேற்கு இந்திய வீரர் நிக்கோலஸ் பூரான் முதல் 3 பந்துகளில் சிக்ஸர் அடித்தார்

சென்னை அணிக்காக 250வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை  டோனி படைத்தார். அந்த மைல்கல் போட்டியில் அடித்த இந்த 20 ஓட்டங்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சென்னைக்காக  சுரேஷ் ரெய்னாவுக்கு பின் 5000  ஓட்டங்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையும் டோனி படைத்துள்ளார்.

                     ஹிட்மேன் ரோஹித்தின் சாதனைகள்

சென்னைக்கு எதிரான  போட்டியில்  கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதமடித்து போராடினார்  ரோஹித் சர்மாஇந்தப் போட்டியில் அடித்த‌ 5 சிக்சர்களையும் சேர்த்து ரி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். அத்துடன் ரி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

 1. ரோகித் சர்மா : 500*

2. விராட் கோலி : 383

 3. எம்எஸ் டோனி : 331

ரோஹித் சர்மா இதுவரை ரி20 கிரிக்கெட்டில் 1025 பவுண்டரிகளையும் அடித்துள்ளார்.   ரி20 கிரிக்கெட்டில் 1000+ பவுண்டரிகளும், 500+ சிக்ஸர்களும் அடித்த முதல் ஆசிய மற்றும் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். அவரை தவிர்த்து இந்த உலகிலேயே கிறிஸ் கெயில் மட்டுமே 1000+ பவுண்டரிகள் மற்றும் 500 சிக்சர்கள் (1132 பவுண்டரி மற்றும் 1056 சிக்ஸர்கள்) அடித்துள்ளார்.

 சென்னைக்கு எதிராக ரோஹித் சர்மா 777*  ஓட்டங்கள் அடித்துள்ளார்.   ஈஎல் க்ளாஸிக்கோ எனப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையும் உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:

 1. ரோஹித் சர்மா : 777*

2. சுரேஷ் ரெய்னா : 710 3. எம்எஸ் டோனி : 675

4. அம்பாதி ராயுடு : 658

5. கைரன் பொல்லார்ட் : 583

 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக  இரண்டு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் ரோகித் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக வயதில் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் பெற்றுள்ளார்.

1. சச்சின் டெண்டுல்கர் : 37 வருடம் 356 நாட்கள்

 2. ரோஹித் சர்மா : 36 வருடம் 350 நாட்கள்*

3. விரேந்திர சேவாக் : 35 வருடம் 222 நாட்கள் 

  டெக்கான்,மும்பை  ஆகிய அணிக்காக 18 முறை ஆட்டமிழக்காமல் இருந்த  ரோஹித்  வெற்றியை மட்டுமே சந்தித்திருந்தார்முதன் முதலாக அவர் விளையாடிய அணி தோல்வியடைந்தது. அத்துடன் பரம எதிரி மும்பையை கடைசி 5 போட்டிகளில் 4வது முறையாக சென்னை வென்றது

No comments: