Friday, May 3, 2024

ஐபிஎல் இல் கலக்கும் இங்கிலாந்து வீரர்கள்

 

ஐபிஎல் போட்டிகள்  இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   வெளிநாட்டு வீரர்கள் கலக்குகிறார்கள்.  ரி20 உலகக் கோப்பை 2024 வரும் ஜூன் 1 ஆம் திகதி தொடங்க உள்ளது. ரி 20 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து அணியும் தங்கள் அணி வீரர்களை அறிவித்துள்ளது. இதில் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ் ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். ஐபிஎல் போட்டிகளில் எதிரணிகளைத் துவம்சம் செய்யும் இவர்கள் ரி20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் சிம்ம சொப்பனமாகத் திகழ்வார்கள்.


                                                 வில் ஜாக்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஜ்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் வில் ஜாக்ஸ்  அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டினார் ஜாக்ஸ். மோஹித் சர்மா வீசிய 15 வது ஓவரில் இவருடைய  அதிரடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது.   இந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள் , 1 பவுண்டரியை பறக்கவிட்டார்.  31 பந்துகளில் அரைசதம் விளாசிய இவர் அடுத்த 10 பந்துகளில் சதத்தை எட்டினார். அதாவது அடுத்த 10 பந்துகளில் 48 ஓட்டங்களை குவித்தார். கடைசி வரை களத்தில் நின்ற வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசி 100  ஓட்டங்கள் அடித்து அசத்தினார்.

 பிலிப் சால்ட்

  ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற   போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ,பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலில் சால்ட் ,சுனில் நரேன்சுனில் நரைன்  ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி அதிரடியான தொடக்கத்தை பவர்ப்ளேயில் பெற்றுக்கொடுத்தது. இருவரும் தங்களது வெறித்தனமான துடுப்பாட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி திக்கு முக்காடச் செய்தனர்.  இந்த ஜோடி 138  ஓட்டங்களை குவித்தது. ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த  பிலிப் சால்ட் மொத்தம் 37 பந்துகள் களத்தில் நின்று 6 பவுண்டரிகள் ,6 சிக்ஸர்கள் என மொத்தம் 75  ஓட்டங்ள் அடித்தார் .

ஜானி பேர்ஸ்டோவ்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற 42 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களை குவித்தது.

பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் களம் இறங்கினார்கள். இதில் பிரப்சிம்ரன் சிங் வெறும் 20 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசி 54 ரன்கள் குவித்தார். மறுபுறம் கடந்த இரண்டு போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் பேர்ஸ்டோவ் தான் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்.

இவர்களது ஜோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரின் பந்துகளை சிக்ஸரும் கவுண்டர்களாக பறக்க இவர்களது ஜோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரின் பந்துகளை சிக்ஸரும் பௌண்டரிகளையும் பறக்கவிட்டது. இவ்வளவு ரன்களை டி20 போன்ற போட்டிகளில் சேஸ் செய்வது என்பது கடினமான ஒன்று. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேர்ஸ்டோவ் மற்றும் சசாங் சிங் அதிரடி ஆட்டத்தால் சர்வதேச உலக டி20 போட்டி வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தனர். அந்த வகையில் கடைசிவரை களத்தில் நின்ற சசாங் சிங் 28 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி 68 ரன்களை குவித்தார். மறுபுறம் பேர்ஸ்டோவ் கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என மொத்தம் 108 ரன்களை மொத்தம் 108 ரன்களை குவித்தார்.

ஜோஸ் பட்லர்

  ராஜஸ்தான் ராயல்ஸ் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தன்னுடைய 100 வது போட்டியை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார்.

 19 வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 183 ஓட்டங்கள் எடுத்து  தது; ஜோஸ் பட்லர் 94  ஓட்டங்களுடன் களத்தில்  இருந்தார். கடைசி ஓவரில்  ஒரு ஓட்டம் எடுத்தால் வெற்றி 6 ஓட்டங்கள் எடுத்தால் தன்னுடைய .பி.எல் சதம் என்ற நிலையில் கேமரூன் கிரீன் வீசிய 20 ஓவரின் முதல் பந்தை பரபரப்பான நிமிடங்களுக்கு மத்தியில் சிக்ஸருக்கு பறக்க விட்டார் பட்லர். ராஜஸ்தான் அணி ரசிகர்களின் கர ஓசைகளுக்கு மத்தியில் தன்னுடைய 100 வது .பி.எல் போட்டியில் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியுடன் சதத்தை பதிவு செய்தார்.   58 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என மொத்த 100 ஓட்டங்களை குவித்தார் ஜோஸ் பட்லர் அந்த போட்டியில் அசத்தி இருந்தார்.

 .பி.எல் சீசனில் மிரட்டியுள்ள இவர்கள் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் எதிர நி  வீரர்களை மிரட்டக்காத்திருக்கின்றனர்.

வைஷ்ணு

 

No comments: