Sunday, September 22, 2024

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல்

  

மாநிலங்களின்  உரிமையைப் பறிக்கும்

ஒரே நாடு ஒரே தேர்தல்

எதிர்க் கட்சிகள் எச்சரிக்கை 

பாரதீய ஜனதாக் கட்சியின் கனவுத்திட்டமான ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு அடித்தளம்  இடப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் கடுமையாக எதிர்க்கின்றன. பாரதீய ஜனதாவின்  கூட்டணிக் கட்சிகள் கண்ணை மூடிக்கொண்டு  கள்ள  மெளனம் காட்டுகின்றன.

லகின்  மிகப்பரிய ஜனநாயக நாடான  இந்தியாவில் அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதனால் செலவு அதிகமாகிறது. பாதுகப்பு பலப்படுத்தப்படுகிறது, ஆளணி  அதிகம் விரயமாஅகிறது போன்ற காரனங்களை  முன்வைத்து  சகல தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தி முடிக்க பாரதீய ஜனதா விரும்புகிறது.

இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலிலும், மாநிலங்களவைத் தேர்தலிலும் மக்கள்  ஒரே மாதிரி வாக்களிப்பதில்லை.தேர்தல் பிரசாரங்கலும்  ஒரே மாதிரி இருப்பதில்லை. இதையெல்லாம் மாற்றி அமைக்க பாரதீய ஜனதா விரும்புகிறது.

நாடாளுமன்றத்தேர்தலை நடத்துவதற்கே  இரண்டு மாதமாகிறது.இந்த நிலையில்  ஒரே நாடு. ஒரே தேர்தல் என எதிர்க் கட்சிகள் நக்கலடிக்கின்றன.

அதிஅயெல்லாம்  பொருட்படுத்தாத மோடியின் அரசு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது. 

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தலைச் செயல்படுத்துவதற்காக 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் தாக்கல் செய்துள்ளது. இதற்கு உடனடியாக மோடி தலைமையிலான அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான சட்ட மசோதா உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

 மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்று என்று காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது. இரண்டு கட்டமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று ராம்நாத் கோவிந்த் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. முதல் கட்டமாகநாடாளுமன்றம்,  சட்டசபைத் தேர்தலை நடத்தலாம் என்றும், 2வது கட்டமாக பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 பொதுத் தேர்தல் நடந்து முடிந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  மேலும் அனைத்துத் தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக  நாடு முழுவதும் விவாதங்கள் விரிவான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், இதுதொடர்பாக ஒரு அமுலாக்க குழுவை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் இக்கமிட்டி தெரிவித்துள்ளது.

இது செயல்வடிவம் பெற்றால் மத்திய அரசு சட்டம் இயற்றினால் மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறத் தேவை இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் 17 மாநிலங்களை ஆட்சி செய்து வரும் கட்சிகள் தங்களின் ஆட்சியை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றன. மாநில அரசை 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி மத்திய அரசு கலைப்பதற்காக உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது. அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையும் கொண்டு வரப்படுகிறது. இதைச் செயல்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. உதாரணமாக 2025இல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வருகிறது என வைத்துக் கொள்வோம். அந்த ஆட்சி 5 ஆண்டு காலம் தொடரும். இடையில் திடீரென்று ஏதோ ஒரு மாநிலத்தில் 356 பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்துவிடுகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலின்படி 5 ஆண்டுகள் கழித்துத்தான் தேர்தல் நடத்தப்படும். அப்படியானால் இடைப்பட்ட காலத்தில் ஆட்சிக் கலைக்கப்பட்ட மாநிலத்தில் மீண்டு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா? இல்லை எனில் ஆட்சிக் கலைக்கப்பட்ட மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுமா? இது பற்றி ஒரு தெளிவு இல்லை.

அதிகாரம் என்பது தனியாக உள்ளது. மத்திய அரசு சட்டம் இயற்றத் தனி அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கலைக்கப்பட்டால் அதன் உரிமையை யார் காப்பாற்றுவது? இடைப்பட்ட காலத்தில் ஆளுநர் ஆட்சி எப்படி மாநில உரிமைக்குச் சட்டம் இயற்ற முடியும்? அடுத்த 5 ஆண்டுகள் தேர்தல் வரும்வரை காத்திருந்தால், அது ஜனநாயக படி சரியாக? இதை மக்கள் நன்மைக்காகக் கொண்டுவருவதாக பாஜக அரசு சொல்கிறது.

ஆனால், மக்கள் இப்படி ஒரு திட்டம் தேவை என கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை. இப்போது நடந்த 2024 மக்களைவைத் தேர்தலை 6 கட்டங்களாக நடத்தினார்கள். ஏன் அதை ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை? ஒரே நேரத்தில் நடத்துவதற்காக உபகரணங்கள் இல்லை என்றும் அதற்கான ஊழியர்கள் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் பதிலளித்தது. அப்படியான சூழலில் இந்தியா முழுமைக்கும் மத்திய, மாநில அரசு தேர்தலை ஒரே நேரத்தில் எப்படி நடத்த முடியும்? அப்போது மட்டும் ஊழியர்கள் எண்ணிக்கை போதும் படியாக உயர்த்த முடியும்? அது எப்படி சாத்தியம்? இதை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? அப்படிச் செய்யும் போது காலாவதியாகாமல் உள்ள மாநில அரசின் ஆட்சிக்காலத்தை எப்படி அகற்றுவார்கள்? இதற்கு எல்லாம் சரியான பதில் வழங்கப்படவில்லை" என்கிறார்.

2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்தேஒரே நாடு ஒரே தேர்தல்முறையை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திவருகிறார். இது சாத்தியம் அல்ல என்று புறந்தள்ளப்பட்டுவந்தாலும், இப்போது இதைச் சாத்தியமாக்க மோடி அரசு தற்போது தயாராகிவருகிறது.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக 49 கட்சிகளுக்கு  மோடியின் அரசு அழைப்பு விடுத்தது. 19 கட்சிகள் மட்டுமே கலந்துகொண்டன.

 இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து1967 வரை மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. அதற்குப் பிறகு சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் மக்களவைக்கும் பல மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.

1983-ம் ஆண்டிலும் , 1999-ம் ஆண்டிலும் மீண்டும் பழைய நடைமுறைக்குத் திரும்புவதற்கான சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டன. 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகளில் ஒன்றாக இது இடம்பெற்றது. 2016-இல் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2018-இல் தேசியச் சட்ட ஆணையம் இது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்கத் தொடங்கியது.

ஆனால், அப்போதும் அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையைப் பெற முடியவில்லை. தேர்தல் செலவு குறையும், ஆளும் கட்சிகள் தேர்தல் நேரப் பணிகளைக் குறைத்து, நலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடியும், வாக்குப்பதிவு அதிகரிக்கும், வேட்பாளர்கள் கறுப்புப் பணத்தையும் ஊழல் பணத்தையும் தேர்தலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியும் என இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் பல வாதங்களில் நியாயமில்லாமல் இல்லை.

ஆனால், இதற்காகச் சில மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக் காலத்தைக் குறைக்கவும் சில மாநிலங்களில் நீட்டிக்கவும் வேண்டியிருக்கும். அதற்கேற்ப அரசமைப்புச் சட்டத்திலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையைப் பெற வேண்டும். அது அத்தனை எளிதல்ல. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் திமுக இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலத்துக்கு முன்பாகவே கலைப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு முரணானதாகக் கருதப்படும். மேலும், ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது தேசியக் கட்சிகளுக்கே சாதகமானது என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுவதும், இத்திட்டம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியிருப்பதும் புறக்கணிக்கத்தக்க கருத்துகள் அல்ல.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படும் அவசரத்தால் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் அதிகரிப்பதையும், பிரிவினைவாத சக்திகள் வலுவடைவதையும் தவிர்க்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே, அனைத்து சாதக பாதகங்களையும் ஆராய்ந்து, அனைத்து அரசியல்கட்சிகளிடம் கருத்தொற்றுமையை உருவாக்கிய பிறகேஒரே நாடு, ஒரே தேர்தல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

பல கலாச்சாரங்கள், பல மொழிகள், பல இனங்கள் இருக்கின்ற இந்தியாவில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதில் பல சிக்கல் இருக்கிறது என்றும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் கூட அதற்கு வழி இல்லை என்று பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அதனை நடைமுறைப்படுத்துவேன் என மோடி கங்கணம் கட்டுகிறார்.

 

ரமணி

22 /.9/.24 

No comments: